Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய அரசிலிருந்து... தி.மு.க. விலகியது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
karunanithiiiiiiiiiiiii.jpg
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் செத்தவீட்டில் .............. கவிதை எழுத வைரமுத்துவிட்குதான். இந்த விலகலால் இலாபம். தமிழ் நாட்டில் இருக்கும் அன்றி தை கடந்து தமிழன் வாழும் இடத்து ஈ காக்காவிற்கு கூட இது உதாவபோவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க மத்திய அரசிலிருந்து இன்றைய கால கட்டத்தில் வெளியேறியது

தமிழ் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மாணவர்களது எழுச்சியை 

முடக்கும் ஒரு நடவடிக்கையே 


இந்தியமத்திய அரசு பலமிழந்த நிலையில் அடுத்த தேர்தல் வரை 

திமுக அவர்களுக்கு வெளியே இருந்து ஆதரவு தரலாம் .


மாணவர்களின் எழுச்சியைக் காட்டியே சட்டம் ஒழுங்கு என தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் மாநில அரசு கலைக்கப்பட்டு 

இரண்டு தேர்தல்களும் விரைவில் வருவதற்கான சாத்தியமும் உண்டு 

இந்தத் தேர்தலில் மாணவர்களுடைய எழுச்சி நசுக்கப்படலாம் .


தி மு க வின் தலைவர் கருணாநிதி தனக்கு அரசியல் லாபம் 

இல்லாத எந்த நடவடிக்கைகளையும் 

ஆராயாமல் செய்வதில்லை . 

Cartoonist Bala


மாணவர்களே.. கொத்துக்கொத்தாக எம் இனம் கொல்லப்பட்ட 2009 காலகட்டத்தில் காங்கிரஸை விட்டு வெளியே வர மறுத்த இந்த நயவஞ்சக நரி.. இன்று வெளியே வரும் சூழல் வந்திருப்பதற்கு முழு முதற்காரணம் நீங்கள் மட்டுமே..

 

காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாது என்பதை உங்கள் போராட்டம் கருணாவுக்கு எச்சரிக்கை செய்திருக்கிறது.. அதனால் தான் அமெரிக்காவின் மொக்க தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி கூட்டணியை விட்டு வெளியே வருகிறார் கருணா.


ஜெயாவுக்கும் நீங்கள் சொல்லும் எச்சரிக்கை இதுவே.. தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் அரசியல் இனி எடுபடாது.

 

உங்கள் போராட்டம் வெற்றியை நோக்கி செல்கிறது..

மாணவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்..
வென்றே ஆகவேண்டும் நாம்.. :)

 

 

-கார்ட்டூனிஸ்ட்.பாலா
19-3-13



முகநூல் கருத்து ஒன்று

 

திமுக வை இன்று திட்டுவதை விட அவர்கள் வெளிவந்ததை பாராட்டி இந்த போராட்டத்தில் அவர்களையும் இணைத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஆனாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அனைத்துக் கட்சியினரும் இந்திய அரசிற்கு எதிராகப் போராடுவது இன்றையக் கட்டாயம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 font_up.gif font_down.gif
செவ்வாய், 19 மார்ச் 2013 14:24
emailButton.pngprintButton.png
 
 

தமிழர் தலைவரின் பாராட்டும், மகிழ்ச்சியும் கலந்த அறிக்கை (Reaction)

29.jpg

ஈழத் தமிழர் படுகொலைப் பிரச்சினையில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. - டெசோ தொடர்ந்து கொடுத்து வந்த அழுத்தங்களை செவி சாய்க்காமல், இலங்கை அரசுக்குச் சாதகமாக நடந்து கொண்டு வரும் மத்திய அரசின் போக்கை ஏற்காமல், அமைச்சரவையிலிருந்தும் கூட்டணியிலிருந்தும் தி.மு.க. விலகியதை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை(Reaction)வருமாறு:

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சீர்தூக்கி ஆய்ந்து எடுத்து அறிவித்த இன்றைய முடிவான  - மத்திய அரசிலிருந்து தி.மு.க., ஈழப் பிரச்சினைக்காக வெளியேறுகிறது என்ற செய்தி கேட்டு, உடனடியாக கலைஞர் அவர்களுக்குக் கழகத் தலைவர் தொலைப்பேசி வாயிலாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் - வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முடிவு என்று பாராட்டி வாழ்த்துக் கூறினார். அதே போல தி.மு.க., பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடமும் இதை வரவேற்று பாராட்டுத் தெரிவித்து வாழ்த்தினார். இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள குறுகிய அறிக்கை (Reaction)இது.

ஈழத் தமிழர் வாழ்வுரிமையைக் காப்பாற்றத் தவறியதோடு, மனித நேயத்தையும் மறந்த இலங்கை ராஜபக்சே அரசின் தமிழர் இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் - ஆகியவற்றிலிருந்து இன்னமும் இலங்கை அரசைக் காப்பாற்ற சர்வதேச அரங்கிலும் முயற்சிக்கும் இந்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறுவது என்ற (கூட்டணியிலிருந்தும்கூட) அதன் முடிவு - மிகவும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த முடிவு ஆகும். காலத்தே எடுக்கப்பட்ட சரியான முடிவு - தேவையான முடிவும் கூட!

ஞாலம் வரவேற்கும் முடிவு!

ஞாலம் வரவேற்கும் என்பது உறுதி. ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமைக்காக முன்பு இரண்டு முறை, தமிழ்நாட்டு ஆட்சியை - அரசைத் தியாகம் செய்த தி.மு.க. -

இப்போது  9 ஆண்டுகளாக பங்கேற்ற மத்திய ஆட்சியிலிருந்து, அக்கூட்டணி அரசிலிருந்து வெளியேறி அதன் தியாக வரலாற்றில் மேலும் ஒரு வைரக் கல்லைப் பதித்து உயர்ந்துள்ளது.

மதச் சார்பின்மைக்கு மாற்று இல்லையே என்பதற்காக எவ்வளவு காலம்தான் - சுமக்கக் கூடாத பாரத்தை - தூக்கி அது சுமப்பது? அந்தப் பாரம் இப்பொழுது நீங்கியுள்ளது.

http://www.viduthalai.in/headline/56862-2013-03-19-09-00-11.html

இதன் மூலம் ஈழத் தமிழர் வாழ்வுரிமை முதல் இங்குள்ள தமிழர் உரிமைகள் வரை மேலும் சுதந்தரத்துடனும், வீரியத்துடனும் செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தாய்க் கழகத்தின் பாராட்டு  - மகிழ்ச்சி!

தமிழினத்துக்கு, திராவிடர் சமுதாயத்துக்கு இனி புதியதோர் பொலிவுடன் புதிய ஏற்பாடு உருவாகட்டும் -  முடிவு எடுத்த அனைவருக்கும் தாய்க் கழகத்தின் பாராட்டுகள் மகிழ்ச்சியுடன்!

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழக

  • கருத்துக்கள உறவுகள்
kkkkkkkkkkkkkkkkn.png
  • கருத்துக்கள உறவுகள்
karnaaaaaaaaaaa.jpg
  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க. எடுத்த முடிவு - காலத்தே எடுக்கப்பட்ட, ஞாலம் வரவேற்கும் வரலாற்றுச் சிறப்பான முடிவு - வீரமணி .
 

 

நீர் அவை புலவர் என்பதை ஒத்துக்கிறன்..! :D


ஒலிவாங்கிக்கும் ஒலி பெருக்கிக்கும் உள்ள ஒற்றுமைதான் கருணாநிதியும் வீரமணியும்...அவர் சொல்லுவாரு இவர் கத்துவாரு ... :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

திமுக - காங்கிரஸ் உறவு முறிவு உண்மை பின்னணி பரபரப்பு தகவல்

 

kanimozhi+cartoon+and+soniya+ganthi+cart

 

 

திமுக-காங்கிரஸ் இடையே நிலவி வந்த 9 வருடக் கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. நேற்று முன்தினம் காலையில் மத்திய அரசுக்கு இலங்கை

விவகாரத்தில் சில புதிய நிபந்தனைகளை திமுக தலைவர்

கருணாநிதி விதிக்க, மாலையில் விமானப் படையின் சிறப்பு விமானத்தில் மத்திய

அமைச்சர்களான ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஏ.கே.ஆண்டனி ஆகியோர்

சென்னைக்கு ஓடி வந்தனர். அப்போதே திமுக-காங்கிரஸ் இடையே உறவு

படுபாதாளத்துக்குப் போய்விட்டதை நிருபர்கள் உணர்ந்தனர். 

 

நாளை காலையில் ஏதாவது முக்கிய மாற்றம் வரும் என்று சொல்லிக் கொண்டே தான்

18ம் தேதி இரவு கருணாநிதியின் சிடிஐ காலனி வீட்டிலிருந்து நிருபர்கள்

கலைந்து சென்றோம்.

நினைத்தது போலே 19ம் தேதி காலை, நேற்று காலை, கருணாநிதி பிரஸ்மீட் என்று

தகவல் வந்தபோது, கூட்டணி பணால் ஆகப் போகிறது என்று பேசிக் கொண்டே தான்

நிருபர்கள் அண்ணா அறிவாலயத்துக்குள் வந்தனர். அதே போல மத்திய அரசுக்கு

ஆதரவு வாபஸ், அமைச்சர்கள் ராஜினாமா செய்வர் என்று கருணாநிதி அறிவித்தார்.

வழக்கம் போலவே மிக ஜாலி மூடிலும் இருந்தார். 

 

அதே நேரத்தில், நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு

வரப்பட்டால் திமுகவின் நிலையில் மாற்றம் இருக்குமா என்ற ஒரு நிருபரின்

கேள்விக்கு, வரட்டும் பார்க்கலாம் என்று பதிலளித்தார் கருணாநிதி. இதையே

தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய பிடியாக நினைத்துக் கொண்ட காங்கிரஸ்,

தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாக ப.சிதம்பரம்

மூலமாக அறிவித்தது.

ஆனால், கூட்டணியை விட்டு வெளியேறுவதிலேயே தீவிரமாக இருந்ததாலும், தீர்மானம்

கொண்டு வந்து இதனால் கூட்டணியில் நீடிக்க வேண்டிய நிலை ஏதும் வந்துவிடக்

கூடாது என்பதாலும், நேற்று மாலையே ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க

அப்பாயிண்ட்மென்ட் வாங்குமாறு டி.ஆர்.பாலுவுக்கு உத்தரவிட்டார். 

 

உடனடியாக அப்பாயிண்ட்மென்ட் வாங்கிய டி.ஆர்.பாலுவிடம், திமுகவின் 18

லோக்சபா எம்பிக்களையும் ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்று ஆதரவு வாபஸ்

கடிதத்தைத் தரச் சொல்லி உத்தரவிட்டார் கருணாநிதி. இரவோடு இரவாக ஆதரவு வாபஸ்

ஆனது. கூட்டணியை விட்டு கருணாநிதியே போய்விட்ட பிறகு இலங்கைக்கு எதிராக

நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரத் தேவையில்லை என்ற முடிவுக்கு

நேற்றிரவே வந்துவிட்டது காங்கிரஸ் தலைமை. இது குறித்து சோனியா, பிரதமர்,

சிதம்பரம், கமல்நாத் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி, அனாவசியமாக

இலங்கையை கண்டிக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தனர். 

 

இதனால் தீர்மானம் வேண்டாம் என்ற முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கான

காரணமாக, எல்லா கட்சிகளிடமும் ஒருமித்த கருத்து இல்லை என்ற நொண்டிச்

சாக்கு கூறப்பட்டுவிட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக

இருப்பதைக் காட்டிக் கொண்டாக வேண்டிய அவசியத்தை சிதம்பரம்

வழியுறுத்தியதால், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு

வந்துள்ள தீர்மானத்தில் மட்டும் சில திருத்தங்களைக் கொண்டு வரச் செய்வது

என்றும், பின்னர் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பது என்றும்

முடிவாகியுள்ளதாகத் தெரிகிறது.

 இந்தத் திருத்தங்கள் வந்தால் கூட இலங்கைக்கு எந்தப் பிரச்சனையும்

இருக்காது என்பதே உண்மை. காரணம், அந்த அளவுக்கு அமெரிக்காவின்

தீர்மானத்தில் ஏற்கனவே இந்தியாவின் முயற்சியால் (குறிப்பாக வெளியுறவு

அமைச்சர் சல்மான் குர்ஷித்) முடிந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டுவிட்டு,

இலங்கைக்கு எதிரான கடுமையான வாசகங்கள் நீக்கப்பட்டுவிட்டன. 

 

இதனால் தீர்மானத்தை இனி இந்தியா ஆதரித்தால் கூட இலங்கை கவலைப்படாது. ஆக,

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தோமே என்று கூறி மத்திய

அரசு தமிழர்களை ஏமாற்ற முயலும். அதே நேரத்தில் ஏதோ இலங்கைத் தமிழர்களுக்காக

ஆட்சி அதிகாரத்தை விட்டுவிட்டு வந்ததாக திமுக தன்னை தியாகியாகக் காட்டிக்

கொள்ள முயலும்.

மொத்தத்தில் திமுகவை கூட்டணியில் நீடிக்கச் செய்யும் காங்கிரஸ் முயற்சிகள்

தோற்றுவிட்டதே உண்மை. இதனால், அடுத்து இரு கட்சிகளும் நேரடித் தாக்குதலில்

இறங்கப் போகின்றன. இனி, சிதம்பரம் மூலமாக கருணாநிதியையும் திமுகவையும்

காங்கிரஸ் தாக்க ஆரம்பிக்கும். பதிலுக்கு கரைவேட்டிகள் களமிறங்குவார்கள்.

இந்தப் பிரச்சனையின் உண்மையான பின்னணி குறித்த காரணம் என்னவோ அந்த

'(2)ஜி'களுக்கு, அதாங்க சோனியாஜி, கருணாநிதிஜி, மட்டுமே தெரியும்! -

Thats tamil

20sircartoon_11.jpg

இதனால் தீர்மானத்தை இனி இந்தியா ஆதரித்தால் கூட இலங்கை கவலைப்படாது. ஆக,
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தோமே என்று கூறி மத்திய
அரசு தமிழர்களை ஏமாற்ற முயலும்.
அதே நேரத்தில் ஏதோ இலங்கைத் தமிழர்களுக்காக
ஆட்சி அதிகாரத்தை விட்டுவிட்டு வந்ததாக திமுக தன்னை தியாகியாகக் காட்டிக்
கொள்ள முயலும்.

 

இதுதான் அரசியலில் பொது பாதை காண்பது என்பது. வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது.

  • கருத்துக்கள உறவுகள்
81584440.jpg
  • கருத்துக்கள உறவுகள்
59708469.jpg
  • கருத்துக்கள உறவுகள்
oddukuddammmmmmmm.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.