Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களர்கள் இந்தியர்கள்தான்: வடநாட்டுத் தலைவர்களிடம் இலங்கைத் தூதர் கரியவாஸம் பொய் பிரசாரம்.

Featured Replies

சிங்களர்கள் இந்தியர்கள்தான்: வடநாட்டுத் தலைவர்களிடம் இலங்கைத் தூதர் கரியவாஸம் பொய் பிரசாரம். பிரிவு: தமிழ் நாடு

prasad_kariyawasam.jpg-2.jpg"வட இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட சிங்களர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலை கொள்ள வேண்டும்'' என்று தில்லியில் உள்ள அந்நாட்டுத் தூதர் பிரசாத் கரியவாஸம் இந்திய ஊடகங்கள், வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ரகசிய பிரசாரம் செய்து வருகிறார்.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21-ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக, இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் பிரசாத் கரியவாஸம் ஈடுபட்டார்.

இதையொட்டி கரியவாஸம் "சிங்களர்கள் வட இந்திய பூர்விகவாசிகள்' எனக் குறிப்பிட்டு அனுப்பிய மின்னஞ்சல் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதில் ""12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால், இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்'' என்று அவர் கருத்து கூறியுள்ளார்.

பிரசாத் கரியவாஸத்தின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து இலங்கையைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு கடந்த 19-ம் தேதி இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மூலம் இலங்கைத் தூதரின் மின்னஞ்சல் தற்போது தில்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலின் விவரம் வருமாறு: ""அசோக சக்ரவர்த்தி ஆட்சி நடைபெற்ற கிறிஸ்து பிறப்பதற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்பே (கி.மு. 300) கலிங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பதிவாகியுள்ளன. புத்த மதத்தால் ஈர்க்கப்பட்ட அசோகர், தனது மகன் அர்ஹத் மஹிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் இலங்கைக்கு புத்த மத செய்தியைப் பரப்ப அனுப்பி வைத்தார். இலங்கையில் புத்த நிலையங்களை அவர்கள் நிறுவினர்.

இந்தியாவில் புத்த கயையில் போதி மரத்தடியில் புத்தர் ஞானோதயம் பெற்ற மரத்தின் கன்றை இலங்கையின் அனுராதபுரத்தில் சங்கமித்ரா நட்டார். புனிதம் மிக்க அந்த மரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு உலகின் மிகப் பெரிய மரமாகத் திகழ்கிறது.

2500 ஆண்டுகளுக்கு முன்பு கலிங்கத்தில் இருந்து எட்டு குடும்பங்களாக அரிஹத் மஹிந்தாவும் சங்கமித்ராவும் வந்த நிகழ்வை இப்போதும் இலங்கை கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் தற்போது இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தின் பூர்விகம் கலிங்கத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்தும் உருவானதாக நம்பப்படுகிறது. இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் ஒடிசா, வங்கம் ஆகியவற்றை பூர்விகமாகக் கொண்டவர்கள்.

மொகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்தியாவின் வட மாநிலத்தை குறிப்பாக கலிங்கத்தை சிங்கள மக்கள் தற்போது இணைத்து வருகின்றனர். ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் இன ரீதியாக தொடர்பில் உள்ள 12 சதவீத இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஒடிசா, வட இந்தியாவுடன் வரலாற்றுத் தொடர்பைக் கொண்டவர்கள் சிங்களர்கள். ஹிந்தி, ஒரியா, வங்காளி ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்தோ ஆரிய மொழியான சம்ஸ்கிருதத்தை சிங்களர்களால் பேசவும் எழுதவும் முடியும்.

இந்தியா அவர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் கவலைப்பட வேண்டும். இலங்கையில் பிரிவினைவாத சக்திகளை ஒடுக்கி, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமாக இருந்த விடுதலைப் புலிகளை அழித்த அதிபர் மகிந்த ராஜபட்ச பாராட்டுக்குரியவர்'' என்று பிரசாத் கரியவாஸம் மின்னஞ்சலில் கூறியுள்ளார்.

இந்தியாவில் பணியாற்றும் வெளிநாடுகளின் தூதர்கள் உள்நாட்டு அரசியல் நடவடிக்கையில் கலகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந்த நிலையில், தில்லி ஊடகங்கள் வட்டாரத்தில் பிரசாத் கரியவாஸத்தின் மேற்கண்ட மின்னஞ்சல் தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இலங்கை விவகாரம் தொடர்பாகத் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமாகி வரும் நிலையில், பிரசாத் கரியவாஸத்தின் மின்னஞ்சல் தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்: வைகோ

""நஞ்சைப் பரப்பும் இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸத்தை இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும்'' என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

இலங்கைத் தூதரின் மின்னஞ்சல் தொடர்பாக வைகோ கூறியதாவது: ""இலங்கையின் நாகரிகத்தைக் காத்து வருபவர்கள் இலங்கைத் தமிழர்கள்; இலங்கை மண் தமிழர்களுக்கான உரிமை; கரியவாஸத்தின் கூற்றுக்கு வரலாற்று ஆதாரம் கிடையாது. இந்தக் கருத்தை வெளியிட்டதற்காக அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தையும் மூட வேண்டும். இலங்கைக்கு இனியும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்தால், இந்திய ஒருமைப்பாட்டை ஒருபோதும் காப்பாற்ற முடியாது'' என்று வைகோ கூறினார்.

விளக்கம் கேட்க வேண்டும்: டி. ராஜா

 தில்லியில் செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறியதாவது: தூதர் என்பதை மறந்துவிட்டு அந்த நாட்டு அதிபரின் அரசியல் உதவியாளர் போல் பேசுவதை பிரசாத் கரியவாஸம் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது அவருக்கு இது முதல் முறையல்ல. சிங்களரின் பூர்விகம் பற்றி கருத்து வெளியிட்டு மறைமுகமாக, அந்த சமூகத்தினருக்கு இந்தியா ஆதரவாக இல்லை என்ற கருத்தை பிரசாத் கரியவாஸம் திணிக்க முற்பட்டுள்ளார். அவரது பேச்சும், செயலும் உள்நோக்கம் கொண்டது என்று சந்தேகிக்கிறோம். அவரை நேரில் அழைத்து மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும் என்று ராஜா கூறினார்.

 

இதென்ன இந்தியாவுக்கு வந்த சோதனை..தமிழர்களும் தொப்புள்கொடி உறவு
..சிங்களவனும் தொப்புள்கொடி உறவு...ஆனால் தமிழனுக்கு சிங்களவன் எமன்....

இலங்கையின் பூர்வீகக்குடி சிங்களம் என்ற சொற்பதம் இப்போ எப்படி வட இந்தியர் என ஒத்துக்கொள்ளப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திரா.. ஒரீசா.. எல்லாம் தமிழ் முப்பெரும் மன்னர்கள் பரம்பரை பரம்பரையாக ஆண்ட பிரதேசங்கள். அதேபோல்.. குஜராத்.. பஞ்சாப்.. இன்றைய பாகிஸ்தானில் உள்ள.. சிந்து.. ஹரப்பா.. ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி வரை தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். அந்த வகையில்.. பார்த்தால்.. சிங்களவர்கள் உண்மையில் தனி இனக் குழும மக்களே அல்ல.

 

வட இந்தியர்கள் என்று இன்று கூறப்படுவோர்.. சிந்துவெளி ஆக்கிரமிப்பாளர்கள். அவர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே பெரிய இனக்கலப்பே நடக்கல்ல.

 

சிங்களவர்களில்  டி என் ஏ பரிசோதனை மேற்கொண்டால் அவர்கள்.. தமிழர்களுக்கு நெருங்கிய உறவைக் காட்டுவார்கள். அந்த வகையில்..  இலங்கை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதே யதார்த்த பூர்வ உண்மை. சிங்களவர்கள் தமிழர்களுக்குள் உள்வாங்கப்பட்டு.. முழு இலங்கையும் தமிழீழம் என்று அழைப்படுவதே வரலாற்றியல் உண்மையாக இருக்கும்.

 

சோழர்

 

Chola+Empire+Map.png

 

பாண்டியர்

 

Pandya_territories.png

 

சேரன்.

 

800px-Map_of_Chera_Kingdom.jpg

 

பிரித்தானிய காலனித்துவம் சிதைத்த தமிழரின் வரலாற்றிற்குப் பின்.. இந்திய தேசிய உருவாக்கத்தின் பின்  இன்றைய தமிழ்நாடும்.. தமிழர்களின் நிலையும்..

 

543px-India_Tamil_Nadu_locator_map.svg.p

 

படங்கள் விக்கிபீடியா.

 

http://en.wikipedia.org/wiki/History_of_Tamil_Nadu

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வரலாற்று நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தின்படி சிங்கள இனத்தின் ஆரம்பம், கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவனும் அவனது தோழர்கள் எழுநூறு பேரும் இலங்கையை வந்தடைந்ததுடன் ஆரம்பமாகின்றது. இதற்கு முன்னரே இலங்கையில் வாழ்ந்துவந்த இயக்கர், நாகர் ஆகிய இரண்டு இனத்திலுள்ள பெண்களை இவர்கள் மணந்து இலங்கையில் வாழ்ந்தது பற்றியும், அவர்கள் இலங்கையில் அரசமைத்து ஆண்டது பற்றியதுமான குறிப்புக்களும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன.தொடக்கத்தில் இந்துகளாக இருந்த இவர்களிடையே மகிந்த தேரரால் கிமு 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டது.இவர்களே இன்று சிங்களவர் என அழைக்கப்படுகின்றனர் - ஆதாரம் தமிழ் விக்கிப்பீடியா

 

ஒரு குடும்பம் இரு மனையில் பிரிந்து வாழ்ந்தாலும் அங்கு தோன்றும் தலைமுறை தொப்புள்கொடி உறவுடன் தொடரும். ஒரு குடும்பம் வேறொரு குடும்பத்துடன் கலந்து வாழும்போது தோன்றும் தலைமுறை இரு வேறுபட்ட குடும்பத் தலைமுறையாகிறது அங்கு தொப்புள்கொடி உறவு கேள்விக்குள்ளாகிறது. இன்றைய தமிழ்நாடும் இலங்கையும் ஒரே நிலப்பரப்பாக இருந்து பிரிந்துள்ளதாக கடல்கொண்ட குமரிக்கண்டம் சான்றுபகர்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய பேச்சை வைத்து wiki போன்றவற்றில் எமக்கு ஏற்றவாற குழப்பங்களை ஏற்படுத்தி விடவேண்யதுதான்

அப்புறம் என்ன மயிருக்கு சார் இந்த தேவையே இல்லாத இலங்கை ஈழம் அது இது எல்லாம் . பேசாம இந்தியாவோட சேர்த்து விட்டிருங்கோ .தன்னால மாநிலங்கள் வந்துரும் . நாங்க எதோ தமிழ்நாட்டு காரனுக இருக்கிறத வச்சு வடக்கையும் கிழக்கையும் பார்த்துக்கிறோம் . நீங்களும் சிங்களமும் வட இந்தியரிடம் என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோங்க . பிரச்சினை முடிஞ்சுது . ஐநா, புலி, சிங்களம், காங்கிரஸ், தீவிரவாதம், துரோகம், போராட்டம், திமுக, அதிமுக, அமெரிக்கா, சைனா, ரஷ்யா, ராசா, 2ஜி, 3ஜி, கச்சதீவு, மீனவர், மன்னார், அகதி, ராஜீவ், சோனியா, இங்கிலாந்து , தூதர் , மலையாளி, பார்ப்பனம் எல்லா பிரச்சினையும் ஒரே மூச்சில் முடிந்து விடும் . உங்களுக்கும் ஒரு நோபல் பரிசு வாங்கி கொடுத்திடலாம் . அறிவை திறந்து விட்ட பிரசாத் காரியவம்சம் வாழ்க ( மவனே எங்க ஊரு பக்கம் வா உன்ன வச்சிக்கிறேன் . தூ உன்ன வச்சு நான் என்ன பண்ண . பேசாம ஒன்னு ரெண்டு சிங்களத்திய வச்சிகிட்டாலாவது கருணா போல நல்லா நேரம் போகும் )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.