Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் தீர்மானம்

Featured Replies

தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக, தமிழக சட்டப் பேரவையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்தன. இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.


தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.

 

இலங்கையில் தமிழினத்தை அழித்த இலங்கை அரசுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தது திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு என்று அவர் குற்றம்சாட்டினார். இலங்கையில் உச்சக்கட்டப் போர் முடிவுக்கு வந்த பிறகு மூணரை லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் எவ்வித அடிப்படை வசதியுமின்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகின்றனர் என்றும் ஜெயலலிதா  தெரிவித்தார். இலங்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.


முதல்வர் வேண்டுகோள்: இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தும் வகையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

 

http://puthiyathalaimurai.tv/resolution-for-referendum-in-srilanka-tamils-moved-in-tn-assembly

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

  • தொடங்கியவர்

தீர்மானம்
 
“தமிழன் யாருக்கும் தாழாமல் – யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் – எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எசமானனாக இல்லாமல் – உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை” என்றார் பேரறிஞர் அண்ணா.
 
பேரறிஞர் அண்ணா பொன்மொழிக்கேற்ப, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு,


இலங்கை நாட்டை “நட்பு நாடு” என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்;


இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும்;

 

இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும்;

 

தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும்;

 

ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு “தனி ஈழம்” குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்;

 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.”

 

என்னால் முன்மொழியப்பட்ட இந்தத் தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு,

 

 

இலங்கைத் தமிழர்களின் பால் எனது தலைமையிலான தமிழக அரசு எடுத்து வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டும், நமது கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும் நாள் விரைவில் மலர இருக்கிறது என்பதை மனதில் வைத்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகிய மாணவ-மாணவியர் தங்களுடைய அறப் போராட்டத்தைக் கைவிட்டு, கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்தி, பெற்றோருக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இந்த மாமன்றத்தின் மூலமாக கேட்டுக் கொண்டு, எனது இந்த வேண்டுகோளிற்கு அனைத்துக் கட்சிகளைச் சார்ந்தவர்களும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டு அமர்கிறேன்.

 

 

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டங்களால் எவளவு நன்மைகள் என்று பாத்திங்களா....

  • கருத்துக்கள உறவுகள்

கேளுங்கள், தரப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும்!

 

என்ற ஏசுநாதரின் வார்த்தைகள் தான், நினைவுக்கு வருகின்றன!

 

மாணவர்களுக்கும், முதலமைச்சருக்கும் நன்றிகள்!

 

தொடர்ந்தும் கரங்கள் கோர்த்தபடி பயணிப்போம்! :D

  • தொடங்கியவர்

ஒரு காலத்தில் "அரசியல் கோமாளிகள்" என சிங்கள தலைமைகளால் வர்ணிக்கப்பட்டவர்கள் தமிழக அரசியல் வாதிகள்.

 

இன்று அவர்களை  பயத்துடன் பார்க்க வைத்துள்ளார்கள் - மாணவர்கள் !

 

எல்லா புகழும் மாணவர்களையே சாரும் !!

 

 

காந்திக்குப்பின் இந்தியாவில் ஓர் சமூக அதிசயம் நிகழ்கிறது.
 
அதுவும் தமிழ்நாட்டில் ஆரம்பித்திருக்கிறது.
 
இந்த அதிசயத்தின் தோற்றுவாய் --  ஆயிரக்கணக்கில் எம்மக்கள் சிந்திய இரத்தம்.

தனித் 'தமிழீழம்' நாடு அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக சட்டசபையில் தொடரும் மாணவர்கள் போராட்டம் பற்றி சிறப்பு விவாதம் நடைபெற்றது. பின்னர் சட்டசபையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

அவர் முன்மொழிந்த தீர்மானத்தில், தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இல்லாமல், உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை என்றார் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணா பொன்மொழிக்கேற்ப, இலங்கை வாழ் தமிழர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இலங்கை நாட்டை "நட்பு நாடு" என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும், இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க் குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு "தனி ஈழம்" குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று அத்தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=z6HeQx-C2J8

இந்தத் தீர்மானத்தினை சட்டசபை ஒரு மனதாக நிறைவேற்றித் தரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

முதல்வர் வேண்டுகோள்: இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும், கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்தும் வகையில் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

 

நன்றி ஜெயலலிதா அம்மையாருக்கும் தமிழ் நாட்டு சட்டசபை பிரதி நிதிகளுக்கும். இது சுப்பிரமணியஆசாமிக்கு வயிற்று வலியைக்கொடுக்கப் போகிறது.

தமிழக முதல்வருக்கு நன்றிகள்!
உருப்படியான ஒரு முயற்சி!!!

தமிழக மாணவர்களின் எழுச்சி என்பது  ஓர் அற்புதம்; ஓர் அறத்தின் வெளிப்பாடு. அதனாலேயே தமிழக 'அரசியல் கோமாளிகள்'

அதன் பின்னால் போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மாணவர்போராட்டத்திற்கு மதிப்பளித்த தமிழகமுதல்வருக்குப்

பாராட்டுகள். எனவே தமிழர் வாழ்வில் புத்தெழுச்சி மிக்க புதிய அத்தியாயம் தொடக்கப்பட்டுள்ளது. அதில் பங்குகொண்ட

எல்லோருக்கும் வணக்கங்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  • தொடங்கியவர்

நலிவுற்று தலைமையற்று ஒரு தீவை இந்தியா இல்லை அமேரிக்கா தராதா? என எண்ணி இருந்த மக்களுக்கு ;
 
தமது உறவுகளை தொலைத்து நாளாந்தம் இரும்பு பிடிக்குள் அழிந்து கொண்டிருந்த தாயக உறவுகளுக்கு ;

நம்பிக்கை தரும் தேவர்களாக தூதுவர்களாக வந்துதித்துள்ளார்கள் இந்த தமிழக மாணவர்கள்.
 
இவர்கள் போராட்டம் வெல்லவேண்டும், தொடரவேண்டும். இலக்கை அடையவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களின் எழுச்சி பற்றி சண் தொலைக்காட்சியில் நடந்த விவாதம்.  நீங்களும் பாருங்கள்......

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தமிழக உறவுகளுக்கு

  • தொடங்கியவர்

மாணவர் போராட்டம் பற்றியும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தீர்மானம் பற்றியும் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சிறிலங்கா பாராளமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரனுடனான நேர்காணல் - (27-மார்ச் 2013)

 

 

  • தொடங்கியவர்

தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக, தமிழக சட்டப் பேரவையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்தன. இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.


தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை இந்தியா கைவிட வேண்டும் என்றும் கூறினார். இலங்கைத் தமிழர்களுக்கு சமநீதி கிடைக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது என தெரிவித்தார்.

 

  • தொடங்கியவர்

முதல்வருக்கு எம் நன்றி!

 

தமிழீழம் கனவாகிப் போனதாக மகிந்த தெரிவித்தார். ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா நனவுலகப் பதிவில் அதனை பதிப்பித்துள்ளார். இது ஒரு சாதாரண விடயமல்ல.

 

தமிழீழ விடுதலை வரலாற்றில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லை அது தொட்டுச் செல்கிறது. தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோடி மாணவர்களின் போராட்டம் உலகில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டும் வருகின்றது. அதன் ஒரு தாக்கமாக முதல்வரின் தீர்மானத்தை தமிழ்நாடு தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு முன்நிறுத்தி நிற்கின்றது.

 

தமது கோரிக்கைகளையே தீர்மானமாக தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியதற்காக அந்த அமைப்பு முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது. நலிவடைந்த கையறு நிலையில் விடுபட்டுள்ள தாயகத் தமிழர்களிடையே ஒரு சிலிர்ப்பை அது ஏற்படுத்தியுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் முன்நகர்த்திச் செல்லும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு முதுகெலும்பு பலத்தை அது கொடுத்துள்ளது. தனித் தமிழீழமே தமிழர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்பதை முன்வைத்து ஐ.நா. கருத்தறியும் வாக்கெடுப்பை நடாத்த வேண்டும் என்ற தீர்மானத்தை மிக உற்சாகமாக தமிழ்நாடு சட்டசபையில் முன்மொழிந்து நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம் நன்றிகள்.

 

தாயகத் தமிழர்களுடன் உலகமெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களும் அவருக்கு தம் இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றார்கள். முதல்வரின் இந்த நடவடிக்கையை ஒரு அரசியல் சுயலாப பரப்புரையாக எம்மால் பார்க்க முடியவில்லை. நடைபெற்று முடிந்த ஒரு இனப்படுகொலை அவலங்களை மிக நன்கு அறிந்து தெளிந்து பின் ஒரு முடிவுக்கு முதல்வர் வந்துள்ளார் என்றே நாம் விளங்கிக் கொள்கிறோம். ‘எமது அரசியல் வாழ்வை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமை எமக்குண்டு. இந்த உரிமையின் அடிப்படையில் நாமே எம்மை ஆளும் வகையில் ஒரு ஆட்சி முறையை அமைத்து வாழவே நாம் விரும்புகிறோம் என எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் குறிப்பிட்டதற்கமைய முதல்வரின் தீர்மானம் தமிழர்களின் விருப்பிற்கு வழிகோலி நிற்கின்றது.


ஐக்கிய இலங்கைக்குள் தீர்வொன்றை எதிர்பார்த்து கடந்த நான்கு ஆண்டு காலமாக தாயகத் தமிழர்கள் காத்திருந்தனர். ஆனால் அது மகிந்த அரசின் பாராமுகம் காரணமாக கனவாகிப் போய்விட்ட நிலையிலேயே உள்ளது. இப்போது அரசியல் தீர்வு எதற்கு? எல்லோரும் சமமாக மதிக்கப்படுகின்றனரே என கோதபாய கேட்கும் நிலையில், தனித்தமிழீழம் நோக்கிய தமது பயணத்தை தொடர்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை என்பதே தற்போதைய உண்மை நிலைப்பாடாகும். இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானம் மிகத் தெளிவாக உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.

 

தமிழர்கள் நிம்மதியாக கௌரவமாக சுதந்திரமாக வாழவேண்டும் என இந்திய மத்திய அரசு அடிக்கடி கூறுவது உண்மையானால், தமிழக முதல்வர் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென உலகத் தமிழர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். ஜனநாயக ரீதியாக இந்தியா ஐ.நா. சபையுடன் இணைந்து தமிழர்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடாத்துவது உலகப்பொது விதிகளுக்கு உட்பட்டதே என்பதையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 

http://www.worldtamils.com/?p=66762

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.