Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெற்ற பிள்ளைகளை கணவனுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அக்கரைப்பற்று, சின்ன முகத்துவார பிரதேசத்தில் தனது முதல் கணவனுக்கு பிறந்த இரு சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த பெண்ணின் இரண்டாது கணவன் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துள்ளாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன், மனைவி மற்றும் விபச்சார முகவர்களாக செயற்பட்வர்கள் உட்பட 4 பேரே நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர் என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு பிரதேச மக்கள் கொடுத்த முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சின்னமுகத்து வாரத்தில் உள்ள குறித்த இரு சிறுமிகளின் தாய் மற்றும் தந்தைக்கிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இருவரும் பிரிந்த பின்னர் தாயார் வேறு ஒருவரை திருமணம் முடித்து வாழ்ந்துவந்த நிலையில் இவரது 14 மற்றும் 18 வயது சிறுமிகளை இரண்டாவது கணவன் நீண்ட நாட்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்ததுடன் அச்சிறுமிகளை விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று பொலிசார் கூலிவேலை செய்துவரும் 47 வயதுடைய குறித்த சிறிய தந்தையாரையும் தாயாரையும் மற்றும் விபச்சார முகவர்களாக செயற்பட்டுவந்த அக்கரைப்பற்று முதலாம்பிரிவு வடிகான்வீதி, கடற்கரை வீதிகளைச் சேர்ந்த 55 மற்றும் 48 வயதுடைய மீன் வியாபாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை 18 வயதுடைய யுவதி திருமணம் முடித்து இரண்டு மாதங்கள் எனவும் அப்பெண்ணை அவரின் கணவருடன் சேர்ந்து வாழவிடாது அவரை வீட்டில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

14 வயது சிறுமி இரண்டு தரம் கர்ப்பம் தரித்த நிலையில் ஊறணி, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் உள்ள சட்டவிரோத கருகலைப்பு நிலையங்களில் கருக்கலைப்பு செய்துள்ளதாக அச்சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

தங்களை இந்த நரகத்தில் இருந்து விடுவிக்குமாறு பொலிசார் மற்றும் பலரிடம் முறைப்பாடு தெரிவித்தும் அது இடம்பெறவில்லை, எனவும் தாங்களுக்கு இப்போதுதான் விடுதலை கிடைத்துள்ளதாக சிறுமிகள் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

http://www.virakesari.lk/article/local.php?vid=3821

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில் நடந்திருந்தால் இந்தக் கயவனை மேலே அனுப்பியிருப்பார்கள்..! ஆனால் அது ஜனநாயக விரோதம் ஆகி மனித உரிமைவாதிகளின் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும்..! அந்த வீட்டுக்கு அருகில் இரண்டு துரோகிகளும், நாலு மாற்றுக்கருத்தாளர்களும் உருவாகியிருப்பார்கள்..! :(

இசை புலிகள் இப்படி பட்டவர்களையும் போட்டார்கள், "சந்தேகத்திற்கிடமான"
வர்களையும் போட்டார்கள் ..எனக்கு தெரிந்து நிறைய பேரை புலிகள்
சந்தேகபட்டதால் கொன்றார்கள் ஏனென்றால் அவர்கள் புலிகளின் "கட்டளைகளை"
மதிக்காத படியால் ...புலிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது "யாரையும்  எப்போது வேண்டும் என்றாலும் " போடுவதற்கு? 
அதனால்
தான் என்னை போன்றவர்களுக்கு "புலியும், டக்கியும், சிங்கள இராணுவமும்"
ஒன்று தான்..ஏனென்றால் இவர்களில் யாரையும் கட்டுபடுத்தும் வழி எனக்கு
இல்லை...ஆகவே இவர்களில் யார் எப்படி செத்தாலும் சந்தோசம் தான்

சந்தேகத்திற்கு இடமானவர்கள் என்று போடப்பட்டவர்கள் பற்றி தாங்கள் அறிந்திருப்பதாகச் சொல்லும் விடயங்களில் ஒன்றிரண்டை இங்கு சொல்லுங்கள் பார்க்கலாம். அது சந்தேகத்திற்கு இடமானதா போட வேண்டிய ஒன்று தானா என்று மக்கள் சொல்லுவார்கள்.

புலிகள்.. டங்கி.. சிங்கள இராணுவம் எல்லாம் ஒன்று... இதில் எவர் செத்தாலும் உங்களுக்கு சந்தோசம்...??! ஏன்னா நீங்க இந்த உலகில் அமைதிப் பூங்காவில் மக்களை வைச்சு தனியாட்சி.. சொல்வழி கேட்கிற ஆட்சி நடத்திக்கிட்டு இருக்கீங்க இல்ல. அங்க மக்கள் ரெம்ப ஒழுக்கமா வேற இருக்காங்கல்ல. கொஞ்சக் கூட்டம் இப்படியும் கிளம்பி இருக்குது..

அ = ஆ

ஆ= இ

சோ.. அ = இ

என்று சொல்லிக்கிட்டு தங்கட செயல்களின் கொடூரங்களை மறைக்கிறதுக்கு என்று ஒரு கூட்டம் அலையுது.

நீங்களும் அதையே செய்கிறீர்கள்.

புலிகளை.. டக்கி... சிங்களப் படைகளோடு ஒப்பிட முடியாது. காரணம் புலிகளிடம் சமூக விரோத செயற்பாடுகள் இருக்கவில்லை. மாறாக சமூக விரோதிகளை தேச விரோதிகளை தண்டிக்கும் செயற்பாடுகளே இருந்துள்ளன. டக்கி அவராகவே ஒரு தேச விரோதியானார். அவருக்கு மக்களைத் தண்டிக்க உரிமை கிடையாது. சிங்களம் ஒரு ஆக்கிரமிப்பு பேரினவாதமாக தன்னை இனப்படுகொலைக்குள் வைத்துக் கொண்டது. அதற்கு இனப்படுகொலை தவிர வேற ஒன்றும் இலக்கல்ல.

புலிகள் அப்படியல்ல. அவர்கள் ஒரு தேசத்தை மீட்டு நிர்வகித்தவர்கள். பலதரப்பட்ட இடர்களை சந்தித்தவர்கள். மக்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டிருந்தவர்கள். சமூகத்தை சீராக்க வேண்டிய தேவையில் இருந்தவர்கள்..!

உலகில் யாருக்கும் யாரும் சக மனிதனைக் கொல்ல அனுமதி அளிக்கவில்லை. அப்படி இருந்தும்.. அதிகாரம் படைத்தோர் வகைதொகையின்றிக் கொன்று கொன்றிருக்கின்றனர்.

உலகின் பெரிய வல்லரசு என்று சொல்லும் அமெரிக்கா அணு குண்டுகள் வீசி அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. பல போர்களை திணித்து கொன்று குவித்தது. இந்த உலகில் எவர் கையும் சுத்தமில்லை. எவர் கை அதிகம் அசிங்கப்படவில்லை என்று தான் பார்க்க முடியுமே தவிர.. மற்றும் படி நியாயங்களை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது.

சாதாரண மக்களை யார் அதிகம் வதைக்கிறார்களோ சீரழிக்கிறார்களோ.. சமூகங்களை அவற்றின் நாகரிகங்களை.. யார் அழிக்கிறார்களோ அவர்களே அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இயன்றவரை அமைதியாக ஒழுக்கமாக உள்ள மனிதர்களைக் காப்பாற்ற.

ஓர் மாணவன்.. கேட்கலாம்.. எனக்கு வாய் இருக்கு கூச்சல் போடுறன். அதைக் கேட்க ஆசிரியர் நீ யார் என்று.. உங்களைப் பார்க்கிறப்போ அந்த மாணவனின் நினைவு தான் வருகிறது.

அந்த மாணவனுக்கு அறிவுறுத்தும் ஒரு பிரம்பால சின்ன..அடியோடு.. விடும்.. ஆசிரியர் புலிகள் என்றால்... அவனின் நாக்கை வெட்டும் ஆசிரியர் தான்...டக்கி..! அவனின் தலையை வெட்டுவதுதான் சிறீலங்கா.. அவனையே பஸ்பமாக்கி விடுவதுதான் இந்தியா.. இவன் பிறந்தால் தானே பிரச்சனை.. கருவிலையே அழிச்சு விடுவதுதான் அமெரிக்கா. இதுதான் இன்றைய ஒட்டுமொத்த உலகம்.

இதில் நீங்கள் எவரைப் பற்றி அதிகம்.. மகிழ்ச்சிப்படுவீங்க என்பது.. நீங்க எந்த ஆசிரியரின் வாலைப் பிடிச்சுக்கிட்டு நிக்கிறீங்க என்பதில் தங்கி இருக்குது. ஏன்னா.. உங்க கருத்து நியாயத்தை தேடவில்லை. சமன்பாட்டை தேடுகிறது..! இது கூட நம்மவர் மத்தியில் உள்ள ஒரு வகை மனப்பிராந்தி தான். :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

இசை புலிகள் இப்படி பட்டவர்களையும் போட்டார்கள், "சந்தேகத்திற்கிடமான"

வர்களையும் போட்டார்கள் ..எனக்கு தெரிந்து நிறைய பேரை புலிகள்

சந்தேகபட்டதால் கொன்றார்கள் ஏனென்றால் அவர்கள் புலிகளின் "கட்டளைகளை"

மதிக்காத படியால் ...புலிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது "யாரையும்  எப்போது வேண்டும் என்றாலும் " போடுவதற்கு? 

அதனால்

தான் என்னை போன்றவர்களுக்கு "புலியும், டக்கியும், சிங்கள இராணுவமும்"

ஒன்று தான்..ஏனென்றால் இவர்களில் யாரையும் கட்டுபடுத்தும் வழி எனக்கு

இல்லை...ஆகவே இவர்களில் யார் எப்படி செத்தாலும் சந்தோசம் தான்

நான்தான்.தனக்கு தனக்கு என்று வராதவரை இப்படிதான் வறட்டு வேதாந்தம் கதைப்பீர்கள்.இது நீங்கள்தான் எழுதியது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120444&p=884306

  • கருத்துக்கள உறவுகள்

நான்தான்.தனக்கு தனக்கு என்று வராதவரை இப்படிதான் வறட்டு வேதாந்தம் கதைப்பீர்கள்.இது நீங்கள்தான் எழுதியது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120444&p=884306

ஏன் ராசா  இந்த வேலை???

அது அவர் சம்பந்தப்படாததற்கு எழுதியது

இது அவர் சம்பந்தப்பட்டது

அவர் என்ன  செய்தாலும் தட்டிக்கேட்கக்கூடாது

கேட்டால் ஒழிக என்ற  கோசம்

ஒரியினலை  தேடிப்பிடியுங்கள்

எல்லாம் புரியும் :(

முகங்கள் தெரியும் காலமிது

புலிகள் காலத்தில் நடந்திருந்தால் இந்தக் கயவனை மேலே அனுப்பியிருப்பார்கள்..! ஆனால் அது ஜனநாயக விரோதம் ஆகி மனித உரிமைவாதிகளின் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும்..! அந்த வீட்டுக்கு அருகில் இரண்டு துரோகிகளும், நாலு மாற்றுக்கருத்தாளர்களும் உருவாகியிருப்பார்கள்..! :(

உண்மை தான் கலாச்சார  சீரழிவை துப்பாக்கிகளால்  இடை நிறுத்தி வைத்து இருக்க தான் செய்ய முடியும் ஆனால் அதை முற்றாக அழிக்க முடியாது.

என் வீட்டு உங்கள் வீட்டு பிள்ளைகள் செய்தால்   சீர்த்திருத்தி வாழவைப்போம் ஊரவன் பிள்ளை எனில் துப்பாக்கிகளால் அப்புறபடுத்துவோம்.

அதுசரி.. உங்கள் வீட்டில் இப்பிடி ஒராள் செய்தால் பாதுகாப்பீர்கள் போலை..  :huh:  உங்கட வீட்டுக்குப் பக்கத்திலை அயலவர்கள் என்ன நம்பிக்கையில் வாழ்கிறார்களோ??!! :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் கலாச்சார  சீரழிவை துப்பாக்கிகளால்  இடை நிறுத்தி வைத்து இருக்க தான் செய்ய முடியும் ஆனால் அதை முற்றாக அழிக்க முடியாது.

வளர்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் கூட சிறைகளின் எண்ணிக்கையை தான் அதிகரிக்க முடிந்தது. சமூக விரோதங்களில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதில் நாங்கள் எம்மாத்திரம்??

என் வீட்டு உங்கள் வீட்டு பிள்ளைகள் செய்தால்   சீர்த்திருத்தி வாழவைப்போம் ஊரவன் பிள்ளை எனில் துப்பாக்கிகளால் அப்புறபடுத்துவோம்.

சமூகத்தை திருத்த வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். :D அதாவது  ஒவ்வொருவரும் தனது வீட்டில் சமூக விரோதி உருவாவதை தடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் கலாச்சார  சீரழிவை துப்பாக்கிகளால்  இடை நிறுத்தி வைத்து இருக்க தான் செய்ய முடியும் ஆனால் அதை முற்றாக அழிக்க முடியாது.

என் வீட்டு உங்கள் வீட்டு பிள்ளைகள் செய்தால்   சீர்த்திருத்தி வாழவைப்போம் ஊரவன் பிள்ளை எனில் துப்பாக்கிகளால் அப்புறபடுத்துவோம்.

அப்புறம்

உலகத்தில்

இராணுவம்

காவல்துறை

மரணதண்டனை இது எல்லாம் எதுக்கு ராசா???

அதுசரி.. உங்கள் வீட்டில் இப்பிடி ஒராள் செய்தால் பாதுகாப்பீர்கள் போலை..  :huh:  உங்கட வீட்டுக்குப் பக்கத்திலை அயலவர்கள் என்ன நம்பிக்கையில் வாழ்கிறார்களோ??!! :unsure::D

எனக்கு என்னமோ   நான் எழுதியதை சரியாக புரிந்து   என்னை நீங்கள் தாக்கவில்லை என்று தோனுகிறது.

:icon_mrgreen:

அப்புறம்

உலகத்தில்

இராணுவம்

காவல்துறை

மரணதண்டனை இது எல்லாம் எதுக்கு ராசா???

விளங்கவில்லை அண்ணை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெற்ற பிள்ளைகளை கணவனுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தாய் கைது

அதாவது இந்த செய்தி சொல்ல வந்த சாரம்சம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

புல்லானாலும் புருஷன்......கல்லானாலும் கணவன்...... இது தான் அந்த செய்தி சொல்ல வார சாராம்சம் சார்.....

சந்தேகத்திற்கு இடமானவர்கள் என்று போடப்பட்டவர்கள் பற்றி தாங்கள் அறிந்திருப்பதாகச் சொல்லும் விடயங்களில் ஒன்றிரண்டை இங்கு சொல்லுங்கள் பார்க்கலாம். அது சந்தேகத்திற்கு இடமானதா போட வேண்டிய ஒன்று தானா என்று மக்கள் சொல்லுவார்கள்.

Nedukku: Vijitharan, Rajani, Rajiv Gandhi  இதுகெல்லாம் சாட்சியும் கேட்பீங்களே... இப்படி 1000...1000 இருக்கு

முள்ளீவாய்காலில் செத்ததில் பாதிபேருக்கும் என்னை பொறுத்தவரை புலிகள் தான் காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

விஜிதரன் கொலை மர்மம் இன்று வரை நீடிக்கிறது. அன்றை காலத்தில் மன்னார் மாவட்ட ஈபி தலைவர் (சிறி) சொல்லிக் கொண்டு திரிந்தாராம்.. அது உள் வீட்டு வேலை என்று..! இது குறித்து அப்போது ஈபியில் போடும் குழுத் தலைவராக இருந்த டக்கிளஸிடம் தான் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதைவிட்டிட்டு கற்பனைகளை அவிழ்த்துக் கொண்டே காலம் கழிக்கக் கூடாது.

ராஜீவ் கொலை என்பதும் சந்தேகத்திற்கிடமான ஒன்று. அதனை காங்கிரஸ் அடிவருடியான சுப்பிரமணியம் சுவாமி உட்பட.. ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் உட்பட பலரும் கூறியுள்ளனர். ராஜீவ் கொலை.. திட்டமிட்ட சதி. அது குறித்தும் பல தரப்பட்ட விசாரணைகள் அவசியம். அங்கும் கற்பனைகளோடு காலம் கழிக்க முடியாது.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு புலிகள் தான் காரணம் என்றால்.. புலிகள் மற்றும் தமிழீழப் போராட்டம்.. உருவாகக் காரணமான எல்லோரும்.. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அழிவிற்கும் காரணமாவர். அதில் இந்தியா... சிங்களம்.. தமிழ் வலதுசாரி சுயநல அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் கோஸ்டி.. இடதுசாரிக் கோஸ்டி.. ஒட்டுக்குழு கோஸ்டிகள்.. கருணா.. பிள்ளையான் குழுக்கள்.. என்று பல காரணமாகும்..!

உண்மைகளை அடியில் இருந்து தேடினால்.. உங்கள் தலை தான் கிறுகிறுக்கும். உங்களின் புலிகள் மீதான அநேக குற்றச்சாட்டுக்கள்... அர்த்தமற்றவை. காலாவதியான பொய்கள்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Nedukku: Vijitharan, Rajani, Rajiv Gandhi இதுகெல்லாம் சாட்சியும் கேட்பீங்களே... இப்படி 1000...1000 இருக்கு

முள்ளீவாய்காலில் செத்ததில் பாதிபேருக்கும் என்னை பொறுத்தவரை புலிகள் தான் காரணம்

அண்ணே இந்த subject எல்லாம் பழசு இத பற்றி எல்லாம் பேசி முடிச்சாச்சு.....

சும்மா போர் அடிக்காதிங்க அண்ணே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.