Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளுக்கு பின்னரான காலமும் – செங்கலடி சம்பவமும்- இரா.துரைரத்தினம்

Featured Replies

இங்கு சிலபேர் பெற்றோர் மீது பழிகூறுகின்றனர் இது ஏற்ககூடியதாக இல்லை. நல்ல பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் வழிமாறிப்போவதும் பிழையான பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகள் நன்றாக வளர்வதையும் பார்த்திருக்கின்றோம். பதினாறு வயது என்பது ஒரு மனிதனால் ஓரளவு சிந்திக்ககூடிய வயது. தனது நன்மைக்காகத்தனே எனது பெற்றோர் இவ்வாறு கடினப்பட்டு உழைக்கிறார்கள் என்பதை அச்சிறுமி அறிந்திருக்கவில்லையா அல்லது உணரக்கூடிய வயதில்லையா?

பிள்ளைகளை ஓரளவு பெற்றோர் கண்கானிக்கமுடியும் ஆனாலும் ஓர் நாளில் பிள்ளைகள் குறைந்தது ஆறு மணித்தியாலம் பாடசாலையிலும் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் தனியார் வகுப்பறைகளிலும் மேலும் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் பிரயாணத்திலும் அல்லது வேறு விடயங்களிலும் செலவிடுகின்றனர். இவற்றை எல்லாம் முடித்துவிட்டு வீடுவந்து மூன்று மணிநேரத்தில் உணவு உண்டு உறங்குகின்றனர் இதில் பெற்றோர் கண்காணிக்க சொற்ப நேரமே கிடைக்கின்றது.

ஆறு மணிநேரங்களை பாடசாலையில் செலவிடும் பிள்ளை பாடசாலையில் என்ன செய்கின்றது என்று பெற்றோரால் எப்படி கண்கானிக்கமுடியும்?

மூன்று மணி நேரத்தை தனியார் வகுப்பறையில் செலவிடும் பிள்ளை அங்கு என்ன செய்கின்றது என்று பெற்றோரால் எப்படி கண்கானிக்கமுடியும்?

மூன்று மணிநேரத்தை வீதியில் போக்குவரத்திலும் வெளி இடங்களிலும் செலவிடும் பிள்ளையை பெற்றோரால் எப்படி கண்கானிக்கமுடியும்?

பெற்றோர் பிள்ளைகளை மட்டும் கண்காணிக்க வேண்டும் என்றால் வேறு எந்த வேலையும் செய்யமுடியாது. பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே புரிந்துணர்வு அவசியமாகின்றது. நடந்தவற்றுக்கு பெற்றோர் மட்டுமே காரணமாகமுடியாது.

  • Replies 51
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோரை குறை கூறுபவர்களை பார்க்க சிப்பு சிப்பா வருது..... எத்தனை பிள்ளைகள் பெற்றோர்களின் கஷ்டத்தையும் கடின உழைப்பையும் நினைத்து ஒழுக்கமாகவும் கட்டுப்பாட்டோடும் இருக்கின்றர்கள்..... ஒரு o / l படிக்கிற பொண்ணுக்கு யோசித்து நடக்க தெரியவில்லை அதற்க்கு காரணம் பெற்றோராம்.....செம காமடி தான்.....

பெற்றோர் வேலைக்கு போனால் நண்பர்களை எல்லாம் கூட்டிட்டு வந்து கசமுசா பண்ணு என்று இருக்கா?

பள்ளிக் கூடத்தில் கண்காணிப்பது ஆசிரியர் அதிபர் வேலை. பெற்றோரின் வேலையல்ல. மேலும் இந்தப் பிள்ளை பள்ளிகூடத்தில் தான் கருத்தரிப்பதற்குரிய அந்த மதிப்பிற்குரிய வேலையைச் செய்திருக்குமா ?
 
இன்று உலகமும் மனித வாழ்க்கையும் மிக மிகச் சிக்கலானது. ஊரில யுத்தம் காரணமாக அசாதாரண நிலமை. இங்கு வெளிநாட்டில் நவீனமயமாதல் காரணமாக அசாதாரண நிலமை. எப்படிப்பார்த்தலும் மனித வாழ்வு சிக்கலாகிக் கொண்டு போகிறது. இதனால் பிள்ளைகளுக்கு நீண்டகால வழிகாட்டல் அவசியம். இல்லையென்றால் அவர்கள் வழி தவறுவார்கள்.
 
சில பிள்ளைகள் இயல்பாகவே நேர்பாதையில் செல்வார்கள். எல்லோரும் அப்படியல்ல.
 
யாழ்ப்பாணத்தில் சிறுமிகள் தெரிந்தவர்களாலேயே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகின்றார்கள். இங்கும் பெற்றோரின் பிழையே.
 
பெற்றோருக்கு பணம் தான் முக்கியம் என்றால்.. பிள்ளைகள் எக்கேடு கெட்டாலும் பரவயில்லை என்ற முடிவிற்கு அவர்கள் வரவேண்டும்.
 
இல்லை பிள்ளைகள் முக்கியம் என்றால் சில வசதிகளை அவர்கள் தியாகம் செய்யத்தான் வேண்டும்.
 
இந்த பெண் பற்றிய துர்நடத்தை விவரங்கள் கொலை நடந்த படியால் தான் வெளியே வந்தது. இல்லையென்றால் அப்பெண் 10+ காதல‌ர்களை கண்டும் இருப்பாள். பெற்றோரும் "கம்" என்று அமுக்கமாக இருந்திருப்பார்கள்.
இந்தப் பெற்றோர்கள் எப்படியானவர்கள் ?

பெற்றோரை குறை கூறுபவர்களை பார்க்க சிப்பு சிப்பா வருது..... எத்தனை பிள்ளைகள் பெற்றோர்களின் கஷ்டத்தையும் கடின உழைப்பையும் நினைத்து ஒழுக்கமாகவும் கட்டுப்பாட்டோடும் இருக்கின்றர்கள்..... ஒரு o / l படிக்கிற பொண்ணுக்கு யோசித்து நடக்க தெரியவில்லை அதற்க்கு காரணம் பெற்றோராம்.....செம காமடி தான்.....

பெற்றோர் வேலைக்கு போனால் நண்பர்களை எல்லாம் கூட்டிட்டு வந்து கசமுசா பண்ணு என்று இருக்கா?

தலக்ஷனா 13வயதிலும் 15வயதிலும் இருமுறை கருத்தரித்து கருக்கலைப்பு செய்துள்ளார்

13 வயசிலேயே சுண்டல் ஞானியா?

  • கருத்துக்கள உறவுகள்

13 வயசு எல்லாம் nothing அண்ணே Sydney இல் சில தமிழ் பொண்ணுங்க இத விட குறைஞ்ச வயசிலயும் கருத்தரித்து கருக்கலைப்பு செஞ்சு இருக்கு..... பெற்றோர் இருக்கும் போதே சென்னால் பாஞ்சு போய் விஷயத்த முடிச்சிட்டு வார மாட்டேர் எல்லாம் நடக்குதுன்னே..... தனி ரூம் ஒதுக்கி கொடுத்தா அதுக்குள்ளே என்ன நடக்குது எண்டு அடிக்கடி பெற்றோர் எட்டி பாத்திட்டு இருக்க முடியுமா? எல்லாம் நம்பிக்கை தானே அண்ணே....

சுண்டல் நீங்க கை பை (Hi Fi) சொசைடீல இருக்கிறீங்க அல்லது ரொம்ப மட்டக‌ரமான கூட்டத்தில கடல போடிறீங்க.  :D
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொசைட்டி என்றால் சமுகம்.... சோ அது மட்டமோ என்னவோ இதெல்லாம் இருக்கு தானே அண்ணே... சோ வெறும் பெற்றோர்களை மட்டும் குறை கூறாமல்....இதற்க்கு இடம் கொடுக்கும் பிள்ளைகளே முக்கிய காரணம்.... விபரம் தெரியாது என்று மட்டும் சொல்லாதீர்கள்..... Bf எப்பிடி கள்ளமா வீட்டுக்கு வரணும் என்று மட்டும் சொல்ல விபரம் தெரிது.... மீன் குழம்பு எங்க இருக்கு என்று சொல்ல மட்டும் விபரம் தெரிது எல்லாம் அந்த ஒரு கொஞ்ச நேர சுகத்துக்காக அண்ணே..... பெற்றோர் இடைஞ்சல் அதனால போட்டு தள்ளிட்டா....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த துரைரத்தினத்திற்கு வேறு வேலையில்லையா ? 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவர் ஒரு கிழக்கு மண்ணை சேர்ந்த ஊடகவியலாளர் என்ற ரீதியில் தனது மண்ணில் நடைபெற்ற அவலத்தை ஒரு துயரத்தை கட்டுரை மூலம் வெளிக்கொண்டு வந்திருக்கின்றார்..... இதற்க்கு எதற்கு அண்ணா அவருக்கு வேற வேலை இல்லையா என்ற கேள்வி எல்லாம்.....?

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு அவர் பிறந்த மண் மீதே பெரிதாக அக்கறை இல்லை அப்படி இருக்கையில் எப்படி குடியேறிய மண்மீது அக்கறை இருக்கும் ?  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த மண்ணை விட வாழ்வளித்த மண் மீது கூடிய அக்கறை வருவது ஒன்றும் உலக அதிசியம் இல்லையே....

  • கருத்துக்கள உறவுகள்
ஐயோ .... சாமி என்னை விட்டுவிடுங்கோ, 
தேவையில்லாமல் ஏற்க்கனவே இந்த திரி நீண்டு நெடுத்து இருக்கின்றது இதில வேற நானும் நீட்ட விரும்பவில்லை ......,   :D
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கண பேர் பிழை செய்த சிறுமியையோ,அதற்கு என்ன காரணம் என்றும்,அதை எப்படி தடுக்கலாம் என்றும் எழுதாமல் கட்டுரை ஆசிரியரைப் போட்டு தாக்கினம்.தங்களுக்கு எது நடந்தாலும் வெளியில் வராமல் மறைத்து விடோனும்.இதே சம்பவம் வேற்று இனத்தவனோக்கோ,நாட்டவனுக்கோ நடந்தால் கண்,வாய்,மூக்கு வைத்து எழுதுவோம் <_<

*************

**************

நியானி: தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்து தணிக்கை

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே இந்தியாவில் நடந்திருந்தால்..நாக்க தொங்க போட்டு கொண்டு வாசிச்சிருப்பினம் ....

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கண பேர் பிழை செய்த சிறுமியையோ,அதற்கு என்ன காரணம் என்றும்,அதை எப்படி தடுக்கலாம் என்றும் எழுதாமல் கட்டுரை ஆசிரியரைப் போட்டு தாக்கினம்.தங்களுக்கு எது நடந்தாலும் வெளியில் வராமல் மறைத்து விடோனும்.இதே சம்பவம் வேற்று இனத்தவனோக்கோ,நாட்டவனுக்கோ நடந்தால் கண்,வாய்,மூக்கு வைத்து எழுதுவோம் <_<

சகோதரி ரதி

நான் என்றுமே தமிழர் நன்மை கருதியும் அவை மாவட்ட பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் தமிழர் என்ற நிலையிலிருந்தே தொடர்ந்து எழுதிவருகின்றேன்.

எதை எதிர்க்கணும்

எதை நாமே முன்னின்று செய்யணும் அல்லது தடுக்கணும்  என்ற தமிழரது பொது நலன் சார்ந்தே கருத்துக்களை  முன் வைத்துவருகின்றேன்.

ஆனால் நீங்கள் இங்கு அப்படி கருத்துக்களை  பதிவது கிடையாது.

ஏன்? 

எதற்கு? 

என்ற  கேள்விகளைத்தொடுப்பீர்களே தவிர இது எமது இனம்

இது எமது இயக்கம்

இது எமது சமுதாயம் என்ற  பொதுப்பார்வை உங்களிடமிருந்ததில்லை.

அதனாலேயே இந்தக்கேள்வியைக்கேட்டேன்.

எனது கேள்வி  தப்பு  என்று எழதும்போதே எனக்குத்தெரியும்

ஆனால் உங்களுக்கு  புரியவைப்பதற்கு வேறு வழி தெரியவில்லை.

நியானி:  தணிக்கை செய்யப்பட்ட மேற்கோள்

Edited by நியானி

நீங்கள் ஒரு கடவுள் என்று அவருக்கு தெரியாது போலும் .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு கடவுள் என்று அவருக்கு தெரியாது போலும் .

மனிதராக இருக்க முயற்ச்சிக்கின்றேன்

ஆனால் விடமாட்டீர்கள் போலுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் கருணா அம்மான் செய்த பிழை ....

போனதோட கிழக்கும் போச்சு .....

கலாச்சாரமும் அழிஞ்சு போச்சு.... :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி ரதி

நான் என்றுமே தமிழர் நன்மை கருதியும் அவை மாவட்ட பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் தமிழர் என்ற நிலையிலிருந்தே தொடர்ந்து எழுதிவருகின்றேன்.

எதை எதிர்க்கணும்

எதை நாமே முன்னின்று செய்யணும் அல்லது தடுக்கணும்  என்ற தமிழரது பொது நலன் சார்ந்தே கருத்துக்களை  முன் வைத்துவருகின்றேன்.

ஆனால் நீங்கள் இங்கு அப்படி கருத்துக்களை  பதிவது கிடையாது.

ஏன்? 

எதற்கு? 

என்ற  கேள்விகளைத்தொடுப்பீர்களே தவிர இது எமது இனம்

இது எமது இயக்கம்

இது எமது சமுதாயம் என்ற  பொதுப்பார்வை உங்களிடமிருந்ததில்லை.

அதனாலேயே இந்தக்கேள்வியைக்கேட்டேன்.

எனது கேள்வி  தப்பு  என்று எழதும்போதே எனக்குத்தெரியும்

ஆனால் உங்களுக்கு  புரியவைப்பதற்கு வேறு வழி தெரியவில்லை.

நியானி:  தணிக்கை செய்யப்பட்ட மேற்கோள்

நீங்கள் சொல்ற எல்லாத்துக்கும் ஏன்,எதற்கு என கேள்வி கேட்காமல்,ஆமாம் போட்டு இதில் எழுதித் தான் நான் தேசியத்தில் அக்கறை உள்ளவர் என நிரூபிக்க வேண்டுமோ :unsure:
 
இந்தப் பிரச்சனையோ தொடர்பாகவே நீங்கள் இன்னும் ஒழுங்கான தீர்வு இன்னும் வைக்கேல்ல அதுக்குள்ள எங்கட தேசியப் பிரச்சனைக்குள்ள போயிட்டிங்கள் :(

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்ற எல்லாத்துக்கும் ஏன்,எதற்கு என கேள்வி கேட்காமல்,ஆமாம் போட்டு இதில் எழுதித் தான் நான் தேசியத்தில் அக்கறை உள்ளவர் என நிரூபிக்க வேண்டுமோ :unsure:
 
கேள்வி  கேட்பது தப்பல்ல.

ஆனால் நீங்கள் கேள்வி  கேட்பது என்பதையே இங்கு களவிதியாகக்கொண்டுள்ளீர்கள்

இப்பொழுது கூட நான் எழுதியது தங்களுக்கு புரியாதது போல் மீண்டும் கேள்வி.....

இந்தப் பிரச்சனையோ தொடர்பாகவே நீங்கள் இன்னும் ஒழுங்கான தீர்வு இன்னும் வைக்கேல்ல அதுக்குள்ள எங்கட தேசியப் பிரச்சனைக்குள்ள போயிட்டிங்கள் :(

இதற்கு முதல் பல இடங்களில் நடந்த மது பாவனை

பொது இடங்களில் ஆட்டங்கள்

வீடியோ பாவனை

தொலைபேசி  பாவனை

வாகன பாவனை......................

.................................

இப்படி பல பற்றியும் நான் கண்டித்து எழுதியபோது

நீங்கள் செய்வதில்லையா?

அவர்கள் என்ன அடிமைகளா?

சுதந்திரமில்லையா?...........

நீங்களும் உங்கள் தேசியப்பார்வையும் என எழுதியவர் தாங்கள்.

இப்பொழுது அது முற்றி 

ஆளமாக வேரூன்றி

பெரும் ரணமாக வளர்ந்தபின்னர்..............

அது பற்றியும் நாமே தீர்வு சொல்லணும் என்ற  கேள்வி................??? :(

கொஞ்சம் முன்னாகவே நமது இனம்

நமது மக்கள்

நமக்கு எது தேவை

எது தேவையற்றது என்பது பற்றியும் சிந்தியுங்கள்

எழுதுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

ஆமாப்போடுங்கள் என்பது இதன் அர்த்தமல்ல...... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரமாயிரம் தமிழச்சிகள் தம் இனத்திற்காக உயிரை அற்பணித்தவர்கள்.

இருப்பத்தியோராம் நூற்றாண்டிலே உலகிலேயே கூட உயிர் தியாகம் செய்த பெண்கள் தமிழச்சிகள் தான்.

அந்த உன்னதமான ஈழ தமிழர் கலாச்சாரத்தை ஒருத்தி செய்த கொலைக்கு ஆராய்ச்சிக்கு இழுப்பது நகைச்சுவையானது.

இப்ப ஒருத்தி தான்.ஒருத்தியாக இருக்கும் போதோ நிப்பாட்ட முயற்சி செய்யுங்கள்.இல்லா விட்டால் இந்த ஒருத்தி போன்ற சம்பவங்கள் பல்கிப் பெருகும்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்படி எழுதினதாக உண்மையிலேயே எனக்கு ஞாபகம் இல்லை அண்ணா.
 
இப்படி இதில் எழுதும் நீங்கள் தான் ஒருத்தி செய்த கொலை தானே என்று அலட்சியமாக எழுதி இருக்கும் விவசாயவீக்கு உங்கள் ஆதரவை தெரிவித்து இருக்கிறீர்கள்

நன்றி  ரதி

அந்த விருப்பு வாக்கு 

அந்த மண்ணின் தியாகத்தையும் வீரத்தையும் பெருமையையும்   அறிந்ததால் தரப்பட்டது.

(முதல் இரு வரிகளுக்கும்)

ஆனால் இந்த கொடுமையான விளைவுகளைத்தடுக்க எம்மாலான சகலதையும் செய்யணும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆயிரமாயிரம் தமிழச்சிகள் தம் இனத்திற்காக உயிரை அற்பணித்தவர்கள்.

இருப்பத்தியோராம் நூற்றாண்டிலே உலகிலேயே கூட உயிர் தியாகம் செய்த பெண்கள் தமிழச்சிகள் தான்.

அந்த உன்னதமான ஈழ தமிழர் கலாச்சாரத்தை ஒருத்தி செய்த கொலைக்கு ஆராய்ச்சிக்கு இழுப்பது நகைச்சுவையானது.

யதார்த்தமான எழுத்து. ஊடுருவிகளின் சொல்ல இல்லாததால் திசை திருப்புவதை சாமனிய வசங்களில் சொல்லிவைக்கிறது. அவலைபடும் அப்பாவிகள் மீது கிஞ்சித்தும் அக்கைஅரை இல்லதாத திசை திருப்பும் முயற்சிகள். 

நேர்மையாக மனத்தில் பட்டதை அப்பாவித்தனத்துடன் விவரிக்கும் ஒவ்வொரு வசனமும் திரு குறலின் ஒரு பாலுக்கு சமம்.

நான் பச்சை குத்தி பொழுது போக்குவதில்லையானாலும், இதன் தரத்திற்கு அது தவிர்க்க முடியாதது.

திசை திருப்பிகள் திரியில் துப்பிய அழுக்கை போய் திண்ணயில் துடைப்பத்தாக நடிக்கும் நாடகங்களையும் இனி யாரும் முற்றாக நம்ப மாட்டார்கள். அது சுத்த கேவலத்தனம். 

ஆயிரமாயிரம் தமிழச்சிகள் தம் இனத்திற்காக உயிரை அற்பணித்தவர்கள்.

இருப்பத்தியோராம் நூற்றாண்டிலே உலகிலேயே கூட உயிர் தியாகம் செய்த பெண்கள் தமிழச்சிகள் தான்.

அந்த உன்னதமான ஈழ தமிழர் கலாச்சாரத்தை ஒருத்தி செய்த கொலைக்கு ஆராய்ச்சிக்கு இழுப்பது நகைச்சுவையானது.

அண்ணை மிளகாய் கன்றுக்கை கத்தரியை நடாதையுங்கோ .தலைப்பிற்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் என்ன சம்பந்தம் .உங்கட வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் ஆயிரம் தமிழச்சிகள் உயிர்தியாகத்துடன் ஒப்பிடும் போது இது ஒரு உயிர் தானே  என்று விட்டுவிடிவீர்களா ?.இதுக்கு பச்சை வேறு குத்தியிருக்கின்றார்கள்.விளங்கின மாதிரித்தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.