Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்காலுக்கு முன்பிருந்த கொள்கைகளுக்கு கூட்டமைப்பு வரட்டும்! - பின்னர் இணைவது பற்றி யோசிக்கமுடியுமென்கிறார் கஜேந்திரகுமார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
GajendrakumaPonnampalam_150.jpg

தேசியக்கூட்டமைப்பு 19 மே 2009 இற்கு முன்னதாக எவ்வாறான கொள்கைகளின் அடிப்படையினில் செயற்பட்டதோ இனியும் அவ்வாறு செயற்படுவோமென கூறட்டும் நாங்கள் எமது கட்சியை கலைத்து விட்டு கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இன்று மாலை வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியினில் நடைபெற்ற கட்சியின் மேதினக்கூட்டத்தினில் கலந்து கொண்டு பேசுகையினில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  

தற்போது கூட்டமைப்புக்குள் நிலவி வரும் முரண்பாடுகளின் மத்தியினில் ஒவ்வொரு தரப்பும் தம்மோடு பேச்சு நடத்த அழைப்பு விடுத்துவருகின்றனர் . எம்மை பொறுத்த வரையினில் கட்சியோ பதவியோ முக்கியமில்லை. தேவையானால் கட்சியினை கலைத்துவிடவும் தயார். ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு முன்னதாக எந்த கொள்கையினை முன்வைத்து கூட்டமைப்பு செயற்பட்டதோ அந்த நிலைக்கு முதலினில் திரும்பவேண்டும்.

 

தமதுயிர்களை அர்ப்பணித்த மக்களுக்கு நாம் மரியாதை செலுத்தவேண்டும்.ஒன்றுமே இல்லாத மாகாணசபையை கைப்பற்ற கூட்டமைப்பு பெரும்பாடுபடுகின்றது.தேர்தலினில் போட்டியிட்டு மாகாணசபையினில் ஒன்றுமில்லையென காட்டப்போவதாகவும் சிலர் கூறுகின்றனர்.அவ்வாறாயின் ஏன் தேவையற்று தேர்தலினில் போட்டியிடவேண்டுமெனவும் கேள்வி எழுப்பினார் அவர்.

ஏட்டிக்கு போட்டியாக போராட்டங்களை நடத்தி அம்மக்களை நட்டாற்றினில் விடுவது தான் கூட்டமைப்பின் வேலையே.அவர்களது ஏட்டிக்கு போட்டியான அறிவிப்புக்களையடுத்து ஒரு ஜந்து மாதம் எமது கட்சி போராட்டங்கிளினிலிருந்து விலகி அமைதி காத்துவந்திருந்தது.ஆனால் கூட்டமைப்பு அக்காலப்பகுதியினுள் எதனையும் செய்திருக்கவில்லை.

 

இப்போது வலிவடக்கு மக்களது காணி சுவீகரிப்பு தொடர்பாக கூட்டமைப்பு எதனையும் கண்டுகொள்ளாதிருந்ததையடுத்து பாதிக்கப்பட்ட மக்களே எம்மை கோரியிருந்தார்கள்.அதனையடுத்து மாவட்ட செயலகம் முன்பதாக எமது போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.அதற்கும் போட்டியாக தெல்லிப்பளையினில் கூட்டமைப்பு போராட்டத்தை நடத்துவதாக அறிவிப்பு விடுத்திருந்தது.சாகும் வரையுண்ணாவிரதமென அறிவித்து விட்டு மதியவுணவுடன் அவர்கள் வீடுகளுக்கு போய்விட்டனர்.இப்போது புதிதாக வழக்குப்போடப்போவதாக கூறுகின்றனர்.ஏற்கனவே போடப்பட்ட வழக்குகளுக்கு என்ன நடந்ததென்பதை கூட்டமைப்பு தலைமையே சொல்லவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

 

மேதினத்தினில் கடந்த ஆண்டையதை விட இம்முறை கூடியளவினில் மக்கள் திரண்டிருந்ததை காணக்கூடியதாகவிருந்தது.குறிப்பாக இளம் தலைமுறையினரை சேர்ந்தவர்களே கூடிய அளவினில் காணப்பட்டனர். மேதினம் இடம்பெற்ற மைதானப்பகுதியை சூழ பெருமளவிலான பொலிஸார் இம்முறை குவிக்கப்பட்டிருந்தனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=81758&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடாளுமன்றத்திலும் போய் பேசிப் பேசி எதனைச் சாதிக்க முடிந்தது. அப்படியாயின் நீங்கள் ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டீர்கள்?

 

யாவற்றையும் புறக்கணித்துக் கொண்டிருப்பீர்களே ஆனால், சிங்கள ஏகாதிபத்தியம் உள்ளுராட்சி சபை, மாநகர சபை மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சபையினைக் கைப்பற்றிவிடும்.

 

அவர்கள் கைப்பற்றினால் அவர்கள் மக்களுக்கான சலுகைகளை அறிவித்து அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களை மயக்கினால் பின்னர் ஒரு காலத்தில் நீங்கள் போட்டியிட விரும்பி போட்டியிட்டாலும் வெல்வதற்கான சாத்தியமே வராது.

 

மாறாக, நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக போட்டியிட்டு அரசிடம் இருந்து நிதியுதவியினை கேட்டுப் பாருங்கள். எப்படியும் அவர்கள் தரப் போவது இல்லைத்தான். அவ்வாறான நிலையில் அனைத்துலக சமூகத்திடம் சிறிலங்கா அரசு எமக்கு எதுவும் தராது என்பதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.

 

அனைத்துலக சமூகம் புலிகளின் உப அமைப்பு என்றும் அவர்களைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது என்றும் கருதி வருகின்றது. இதனையே சிறிலங்கா அரசும் கூறி வருகின்றது. சிறிலங்கா அரசின் வாதத்தினை நாமே நியாயப்படுத்துகின்றது போலவே தென்படுகின்றது.

 

அனைவரும் முதலில் ஒரு அணியின் கீழ் நின்று தமிழரின் ஒற்றுமையினை வலியுறுத்தினால் சிங்கள ஏகாதிபத்திய வல்லூறுகளை விரட்டி அடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்கா அரசு வடக்கையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வடக்கு மக்கள் தமக்குத் தான் வாக்களித்துள்ளார்கள் என  மேற்கு நாடுகளுக்கு நிறுவ முற்படுகிறது. அத்துடன் மேற்கு நாடுகள் மகிந்த அரசை வடக்கில் ஒரு நேர்மையான தேர்த்தலை நடாத்தும் படி கேட்கும் நிலையில் கூட்டமைப்பு ஓரணியில் தேர்த்தலில் வென்று காட்ட வேண்டும்.
 
தேர்த்தலில் அரசு, ஒட்டுக்குழுக்கள் வெல்லுமிடத்து தாம் செய்வதெல்லாவற்றையும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று மிக இலகுவாக நிறுவி விடுவார்கள்.

முள்ளிவாய்காலுக்கு முன்பு இருந்த கொள்கைகளை? நான் பயந்திட்டன் ஆட்களை ஆக்கும் என்று .

முள்ளிவாய்காலுக்கு முன்பு இருந்த கொள்கைகளை? நான் பயந்திட்டன் ஆட்களை ஆக்கும் என்று .

 

மறைச்சு மறைச்சு, பயப்பட வேண்டிய அளவில், இன்னமும் ஏதோ இணக்குப் படுகிறது போலிருக்கு. :huh:

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொம்மை வாழ்க்கை திரும்ப வராதுப்பா ....

தலையாட்ட ஆக்களே இல்ல ....

2009 க்கு போ எண்டால் எப்பிடியாம் ?????? :)

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்க ஓடினாலும் சம்பந்தனும் கூட்டமைப்பும் புலம்பெயர் மக்களை தேடி வர வேண்டி தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. தாயக மக்களை ஏய்க்கலாம்.. ஆனால் புலம்பெயர்ந்த மக்களிடம் சம்பந்தனின் வங்குரோத்து சிங்கக் கொடி அரசியல் எடுபடாது..! :):icon_idea:

சில செயல் பாடுகளை ஆரம்பிக்க முதல் அதன் பலனை நாம் சிந்திக்க முயலவேண்டும். முதலில்  நாம் நமக்கென்று சில நிலைப்பாடுகள் எடுக்க வேண்டும். முதலில் அதை பற்றி பேசிவிட்டு தொடருவதுதான் நல்லது. உ+ம் அரசு எமக்கு ஒரு தீங்கு செய்வதையும் நாம் பொறுத்துக்கொள்ள முயலக்கூடாது. ஆனல் நமக்காக போராடும் இயக்கம் அல்லது அமைப்பு தவறு விடும் போது கண்டிக்க தயாராக இருந்தாலும் பொறுத்துக்கொள்ள தயாரில்லாமல் அந்த அமைப்பை அழிக்க முயலக்கூடாது. அரசியல் என்பது மெஞ்ஞான சாத்திரமில்லை. "நீங்கள் பிழை விடும் போது மற்றவர்கள் விடும் பிழையை எப்படி கேட்கிறீர்கள்" என்று அதில் வாதாடக்கூடாது. மெஞ்ஞான சாத்திரத்தில் குரு 100% சரியாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம். அரசியல் அப்படி இல்லை. அண்மையில் அமெரிக்க சரித்திரத்தை எடுத்தோமாயின் மக்றே, ஸ்பிடசர், கிளின்ரன், கென்னடி, கெரி காட் மாதிரி எல்லாத்தலைவர்களும் தவறு விட்டவர்கள். ஆனால் இவர்களின் ஒவ்வொருவரினதும் அரசியல் திறமை தனியானது. ஆனால் நித்தியானந்தா எவ்வளவு திறமையாக மடங்களை நடத்தினாலும் அவர் விட்ட பிழைகளை நாம் மன்னிக்கக்கூடாது.  எனவே நாம் எதில் எங்கே பிழை பிடிக்கலாம் என்ற நிலைப்பாட்டை கவனமாக கையாள வேண்டும். நம்மில் சிலருக்கு சுதந்திரம் இனி தேவை இல்லை. எமது ஊர்களில் 5 சதத்து உடமை இல்லை. தொடர்பில்லை. சுதந்திரம் கிடைத்தால் ஊர் பார்க்கத்தன்னும் திரும்பிப் போவோமாமா தெரியாது.  ஆனால் எம்மில் பலர் செய்வதெல்லாம் நாம் பிறந்து வளர்ந்த் இனத்துக்காகவே. எனவே இதில், என்வே, அவர்களுக்கு நன்மை என்று படாதவற்றை நாம் அவர்களுக்கு செய்யக் கூடாது.

 

அந்த நிலையில் நம்மிடம் தாயகம், புலம் பெயர் இடம் என்று இரண்டை பிரித்து பார்க்க கூடாது. தாயக மக்களால் தெரியப்படும்  கட்சி அறிவு குறைந்த மக்களால் தெரியப்படுவது என்று அவசரமான முடிவுக்கு வரக்கூடாது. இங்கே வரட்டுத்தனமாக ஜனநாயத்தை மதிக்க பழகவேண்டும் என்றதல்ல வாதம். நம்மில் பலரும் நமது இனத்தை மொக்குக்கூட்டங்கள் என்று லேபல் போட முயல்வது கிடையாது. 

 

கூட்டமைப்பு புலம்பெயர் நிலத்துக்கு வரட்டும் பார்ப்பம் என்ற சவால் சரியானதல்ல. கூட்டமைப்புக்கு தாயகம் அரசியல் செய்ய சிறந்த தளம் அல்ல. புலம் பெயர் நாடுகள் முழுவதாக திறந்திருக்க வேண்டும். புலத்தில் 6ம் திருத்தம் இருக்கும் வரை  கூட்டமைப்பு புலிகள் காலத்து கொள்கைகளுக்கு திரும்புவது எனபது சிந்தித்து செயல்ப்படவேண்டிய விடையம். 6ம் திருத்ததால் கஜேந்திரகுமார் பாதிக்கப்பட மாட்டார். கூட்டமைப்பு மட்டும்தான் பாதிக்கப்படும். எனவே கஜேந்திரகுமார் சொல்வதை கூட்டமைப்பின் கொளகையாக ஏற்பது எவ்வளவு உசிதமானது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

 

கஜேந்திர குமார் இருக்கிற இடைவெளியெல்லாவற்றையும் நிரப்பி போராட தயாராக கூட்டமைப்பில் வந்து இணைய வேண்டும்.   தமிழ் தேசிய முன்னணியின் கொள்கைக்கு கீழ் கூட்டமைப்பு வந்து தங்க வேண்டும் என்று நிபந்தனை போடக்கூடாது. அதாவது கூட்டமைப்பின் பெயரை வைத்துக்கொண்டு தேசிய முன்னணியாக இயங்கலாம் என்று நம்பக்கூடாது. தேசிய முன்னணி ஒரு வெறும் ஓடுகாலியாக இருக்கும் வரை மகிந்தா சும்மா பார்த்துக்கொண்டிருப்பார். பல்லு முளைப்பது கண்டால் உடனே வெட்டிக்கறி சமைத்து ஒரு முழுங்காக முழுங்கிவிடுவார். எனவே தேசிய முன்னணி தலைமை ஒன்றுக்கு பின்னால் தன்னை நிறுத்தி எதிரியிடம் பிடிபடாத ஒப்பு விளையாடப் பழக வேண்டும். தலைமையை ஏற்க பழக வேண்டும்.

 

இனி நாம் இன்றைய யதார்த்தங்களை பார்த்தோமானல், அரசிடம் பேசி தீர்ப்போம் என்பதெல்லாம் ஏமாற்றுக்கதைகள். மேலும் ராஜதந்திர விளையாட்டுக்கள் எல்லாம் கூட ஏமாற்றுக்கதைகள். அரசுடன் திரும்ப ஆயுத போராட்டம் நடத்த வழி இருந்தால் அது மட்டும் தான் உண்மையாக இருக்கலாம் என்பது போல்த்தான் நாட்டு நிலைமை. இதை சொல்லவது நான் அல்ல. மேற்கு நாடுகள். அது எப்படி என்றால் இப்படித்தான். அவர்கள் தான் இன்று சொல்கிறார்கள் தமிழருக்கு உரிமைகளை கொடுத்து முடிக்காவிட்டால் போராட்டம் திரும்பவேண்டி வரும் என்று. நமக்கு தெரியும் அரசு எதுவும் தராது என்பதும். எனவே இவர்கள் தாம் ராஜதந்திரங்களை பாவித்து எதுவும் செய்ய முயலாமல் நீங்கள் திரும்ப போய் போராடுங்கள் என்று கூறுகிறார்கள் என்றுதான் எடுத்துகொள்ள வேண்டும். (மகிந்தரோ தான் சுடலைக்குள்தான் வீடு கட்டியிருப்பதாக மார்தட்டுகிறார். அவர் இந்த ராஜதந்திர செப்படி வித்தைகளுக்கு கிறுங்க போவத்தில்லை என்று வெளிப்படையாக சொல்லி விட்டார்)  ஆனால் ஆயுத போராட்டம் ஒன்றைத் திரும்ப ஆரம்பித்தால் அவர்கள் நமக்கு உதவுவார்களா அல்லது திரும்பவும் அரசுக்குத்தான் ஆயுதம் கொடுப்பார்களா என்பது ஒன்றும் இப்போது சொல்ல முடியாது. ஆனல் இப்போது நமக்கு தெளிவாக விளங்குகிறது எமக்கு இன்றைய நிலையில், உள்நாட்டில் மகிந்தாவுடனான இணக்க அரசியலோ, அல்லது வெளிநாடுகளுடனான இராஜதந்திரமோ இன்று நாளை ஒரு பலனும் தராது என்பது. அந்த நிலையில்த்தான் கூட்டமைப்பு நமக்கு உரிமை பெற்றுத்தரவேண்டிய கடமையை கையேற்கிறது. இதில், மலடி என்று தெரிந்த பின்னர் நாம் கூட்டமைபை பிள்ளையை பெறு என்று கேட்டால் நமக்கு பிள்ளை கிடைக்க மாட்டாது. நாம் கூட்டமைப்பிடம் கேட்பவற்றில் எமது படைப்புதன்மைகளை, சிந்தனை திறன்களை பாவித்து அதன் மூலம் கூட்டமைப்பை வழி நடத்த முயல வேண்டும்.

 

இவ்வளவும் பொதுவாக  பேசத்தக்கவை. இனி நாம் பார்க்க இருப்பது தனிப்பட கூட்டமைப்புக்கானது. அதை கூட்டமைப்புடன் தொடர்புடைய ஒரு யாழ்க் கள உறவு திருப்பி எழுதுமானல் அதுதான் உத்தமம். 

 

கூட்டமைப்பின் பிரச்சனைகள் பலதுறைகளிலிருந்து வருபவை. தமிழருக்கு தீர்வாகத்தக்கதொன்றை அரசின்முன்னால் வைக்க கூட்டமைப்புக்கு சட்டமோ, அரசின் சண்டித்தன முறைகளோ இடம் அளிக்கது என்பதைத்தான் இதுவரை பார்த்தோம்.

 

ஆனால் கூட்டமைப்பு அடிப்படையில் தன்னைத்தான் தாயக மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக வைத்திருக்க வேண்டும். எளிதில் விளங்கத்தக்க, சிக்கல் இல்லாத கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். புலம் பெயர் சமுதாயத்திடம் உதவிகளை எதிர்பார்க்க வேண்டும் என்பதால், அவர்களுக்கும் ஏற்றததாக இருக்க வேண்டும். ராஜதந்திர முறையானது  புதிய போராட்ட  உத்தியாக இருக்கப் போகிறதாயின் மேற்கு நாடுகளுடன் ஒத்துப்போக வேண்டும். அரசின் சட்டதிட்டங்களுடனும், சண்டித்தனத்துடனும் தொடர்ந்து ஒப்பு விளையாடித் தப்பித்துகொள்ளாவிட்டால், ஈழ்வேந்தன், காசியானந்தன், கணகரத்தினம் மாதிரியே  நதியோடு சேர்ந்து ஓடமுடியாமல் தேங்கி போய்சிதம்பிப் போகும் ஏரியின் ஊற்றாக தம்மை மாற்றவேண்டி வந்துவிடும்.  எனவே கூட்டமைப்பு என்ற பம்பரத்தின் வீச்சு இந்த நாலு சுவர்களும் என்றதை அறிவுத்திறமையை பாவித்து நாம் விளங்க்கிக்கொண்டு அதற்கேற்ற அழுத்தங்களை திட்டமிட்டு கூட்டமைப்பு மீது பிரயோக்கிக்க வேண்டும்.

 

கூட்டமைப்பால்  நினைத்தவுடன் ஒன்றும் செய்து முடித்துவிட முடியாது. ஒரு ஜநாயகட்சி என்ற முறையில் குறைந்த படசம் ஒரு தேர்தலில் நிற்க விரும்பினால் கூட அந்த தேர்தலையே அரசுதான் நடத்த வேண்டும். இதனால் கூட்டமைப்பு கொள்கைத்தேக்கத்தை சந்திக்கும். நாம் அதை அந்த தேக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும். நமது பிரச்சாரங்கள் அதை சமாளிக்க வேண்டும்.  தலைவர், இயக்கம் அழிய முதல், கூட்டமைப்பை இணைத்து வைத்ததால் இன்று இயக்கம் அழிந்தாலும் போராட்டம் அழியவில்லை. கூட்டமைப்பு என்றதும் இயக்கத்தின் தோல்வியின் பின்னால் விடப்பட்ட எஞ்சிய பாகம்தான். நாம் வலோற்காரமாக புலம் பெயர் அமைப்புக்கள்தான் போராட்ட பிரதிநிதிகள் என்று நாண்டுகொண்டு நிற்க முடியாது. எப்படி கூட்டமைப்பு தனக்குள் ஐக்கியத்தை பேணவேண்டுமோ, அதை தரத்துடன் புலம்பெயர் அமைப்புக்கள் தலைவர் தொடக்கிவைத்த கூட்டமைப்புடன் ஐக்கியத்தை பேண வேண்டும். கஜேந்திரகுமார் மாதிரி "கொள்கையில் நீ விட்டுக்கொடு, நான் பதவியில் விட்டுக்கொடுக்கிறேன்" என்பதெல்லாம் கேட்க நீதியானது மாதிரி தோற்றமளிக்கும். ஆனால் அரசியலில் யதார்த்தமான இணக்கப்பாடு அல்ல.

 

கூட்டமைப்புக்கு கொள்கை மட்டும் அல்ல பிரச்சனை. இன்றைய நிலையில் தலைமையும்தான். தலைமையில் அறிவுத்திறமை இருக்க வேண்டும். தனிப்பட்டவர்களில் தங்கியிருக்காமல் தனித்து நின்று தொழிலாற்ற தெரிந்திருந்திருக்க வேண்டும். மக்கள் தலைமையை நம்ப வேண்டும். வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவு சொன்னாலும், இந்த நேரத்தில் சம்பந்தரை பிரதியிட கூட்டமைப்பில் இளந் தலைமுறை இல்லை. இது இயற்கையாக "நான் திறம், நீ திறம்" என்ற தலைவர் போட்டியை உள்ளூர வளர்த்துக்கொண்டு வருக்கிறது. இந்த போட்டி மனநிலை, சம்பந்தர் இருக்கும் போதே தலைமையை மீறி தங்களை நிரூபித்துக்குகாட்ட துடிக்க வைக்கிறது. இதுவும்  பிரிவினைக்கு ஒரு காரணமாகிறது.சம்பந்தர் விட்டுக்கொடுக்க எதுவும் இல்லை. எல்லாக் கம்பனிகளிலும் தலைவரின் கீழ்த்தான் எல்லோரும். ஜனநாயக்கட்சியில் ஒருவேளை தலைவர் தெரிவில் வாக்களிப்பு நிகழலாம். அதன் பின்னர் எல்லோரும் கட்டுப்பட்டு கடமையாற்ற முன்வரவேண்டும். மேற்குநாடுகளில் உள்கட்சி வேடபாளர் பதவிக்கு  போட்டி நடக்கும். ஆனால் போட்டியில் தோற்றவர்கள் மேடையில் வந்து வேட்பாளராக தெரிவு செய்யபட்டவருக்கு தாம் முழு ஆதரவும் கொடுக்கத்தயாராக இருப்பத்தாக என்று வாக்குறுதி கொடுத்து, தமது தோல்வியை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுவிட்டுத்தான் போவார்கள். இதனால் கட்சிக்குள் ஜனநாயகமும், கட்டுக்கோப்பும் பேணப்படுகிறது. இதை கூட்டமைப்பு அங்கத்தவர்கள் உணரவேண்டும். சம்பந்தர் இருக்கும் வரை அவர்தான் தலைவராக இருக்க வேண்டும் எனபதை மற்றவர்கள் விளங்க்கிக்கொள்ள வேண்டும். 

 

கடைசியாக வடமாகாணசபை தேர்தல். இதை வைத்து கூட்டமைப்போ அதன் தனிப்பட்ட அங்கதவர்களோ அல்லது மனச்சாட்சியான வேறு எந்த தமிழ் கட்சியோ செப்படி வித்தை காட்ட முயலக்கூடாது. இதற்காக சிங்கள் அரசிடம் கூட்டமைப்பை பதிய வேண்டியதேவை இல்லை. 13ம் திருத்தம்,  மாகணசபையை, ஆளுனரின் ஆலோகர்கள் என்ற மாதிரித்தான் விவரிக்கிறது. இதில் சந்திரசிறியிற்கு, மாவை ஆலோசனை கொடுத்தால் என்ன, சிவாஜிலிங்கம் கொடுத்தால் என்ன, சுரேஸ் கொடுத்தால் என்ன, விக்கினேஸ்வரன் கொடுத்தால் என்ன. அல்லது சப்பைச் செயலாளர் நாயகம் கொடுத்தால்த்தான் என்ன. நிலைமை. தேர்தல் நடந்தாலும், தமிழ் மக்களின் நிலை இன்றிலிருந்து எதுவும் வித்தியாசமாக இருக்க போவதில்லை. 13ம் திருத்ததின் படி சந்திரசிறி - ஆளுநர் நேரடியாக ஜனாதிபதியின் கீழ வருப்பவர். எனவே மகிந்தா சொல்வது மட்டும்தான் அங்கே நடக்கலாம். அரசுக்கு இது ஒரு தேர்தல் எனபதால் மக்களின் ஆதரவை நிரூபிக்க ஒரு சவால். ஆனல் தமிழ் மக்களுக்கு 13ம் திருத்தம் என்பது எருத்து மாடு அதில் கறப்பதற்கு பால் ஒன்றும் இல்லை. இதில் ஏன் நாம் ஒருமைப்பாடு என்ற பெயரால்ச் சணடை போட்டுப் பிரிகிறோம்?

 

 

 

 

 

 

Edited by மல்லையூரான்

எங்க ஓடினாலும் சம்பந்தனும் கூட்டமைப்பும் புலம்பெயர் மக்களை தேடி வர வேண்டி தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. தாயக மக்களை ஏய்க்கலாம்.. ஆனால் புலம்பெயர்ந்த மக்களிடம் சம்பந்தனின் வங்குரோத்து சிங்கக் கொடி அரசியல் எடுபடாது..! :):icon_idea:

சிங்கக்கொடி  பிடித்ததன் பின் வந்த கிழக்கு மாகாணசபை தேர்தலுக்காக 

புலம்பெயர்மக்களிடம் சம்பந்தன் உதவிகேட்டபோது செய்துள்ளார்கள் .

கனடா ,அமெரிக்கா ,பிரித்தானியா வாழ் யாழ்ப்பாணத்தவர்கள் 

கொடுத்துள்ளார்கள் .சுரேசும் செல்வமும் இணையத்தில் விளம்பரப்படுத்தி 

சேர்த்ததை விட ஐந்து மடங்கு .

 

இதில் கனடா மக்கள் அவையும் பங்கேற்றவர்கள் .

 

புலம்பெயர் மொக்குகூட்டம் சொல் கேட்டுத்தானே குதிரைகள் ஆடி என்ன நடந்தது .

சும்மா பிலா விடாமல் எழுதி எழுதி 50000 பதிவுகள் தொட வாழ்த்துக்கள் .

கஜேந்திரகுமார் அவர்களின் வேண்டுகோள் நியாயமானது வரவேற்க் கப்படவேண்டியது  

 

கட்சியை கலைத்துவிட்டு கூட்டமைப்புடன் இணையத்தயார்' என்று கூறவில்லை - செ.கஜேந்திரன்
02 மே 2013
lg-share-en.gif
 

இணைப்பு 2

TNPF1_CI.jpg

 மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கட்கு

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மே தின உரையில் 'கட்சியை கலைத்து கூட்டமைப்புடன் இணையத்தயார்' என்று கூறியதாக வெளியான செய்தி தொடர்பில்.

நேற்றய தினம் இடம்பெற்ற மே தின நிகழ்வில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தனது உரையில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக கருத்துக் கூறும்போது 'கட்சியை கலைத்துவிட்டு கூட்டமைப்புடன் இணையத்தயார்'  என்று கூறியுள்ளதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் எந்தவொரு இடத்திலும் அவர் 'கட்சியை கலைத்து விட்டு' என்று குறிப்பிடவில்லை. 

அவர் தனது உரையில் 'எங்களுடன் கூட்டமைப்பின் பல்வேறு அமைப்புக்கள் தனித்தனியாக  பேசுகின்றனர். அவர்கள் தனித்தனியாக வந்து கதைத்தால் என்ன, கூட்டாக வந்து கதைத்தால் என்ன அவர்களிடம் கூறுவதற்கு எமக்கு ஒரு செய்திதான் உள்ளது. அது எங்களுக்கு எந்த கட்சியினுடைய பெயருக்கு கீழ் இயங்கப் போகின்றோம் என்பது முக்கியமல்ல, எந்த சின்னத்திற்கு கீழ் போட்டியிடப் போகின்றோம் என்பது முக்கியமல்ல. கட்சியில் என்ன பதவியில் இருக்கப்போகின்றோம் என்பது முக்கியமல்ல. தலைமைப் பதவிகளும் முக்கியமல்ல. எமது ஒரே ஒரு நிபந்தனை கொள்கை மட்டுமே. அந்தக் கொள்கை தனித்துவமான தேசம், தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை இது 2009 ற்கு முன்னர் கூட்டமைப்பினது நிலைப்பாடுதான். நாம் புதிய கொள்கை வியாக்கியானங்களை கொடுக்கவில்லை. இந்த ஆரம்ப நிலைப்பாட்டுக்கு கூட்டமைப்புக் கட்சிகளில் யார் திரும்ப தயாராக இருந்தாலும் நாங்கள் அவர்களுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம்' என்றே குறிப்பிட்டிருந்தார். 

 

மேற்படி திருத்தத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

நன்றி

 

செ.கஜேந்திரன்

பொதுச் செயலாளர்

 

http://www.globaltamilnews.net/

 

 

Edited by Gari

GajendrakumaPonnampalam_150.jpg

தேசியக்கூட்டமைப்பு 19 மே 2009 இற்கு முன்னதாக எவ்வாறான கொள்கைகளின் அடிப்படையினில் செயற்பட்டதோ இனியும் அவ்வாறு செயற்படுவோமென கூறட்டும் நாங்கள் எமது கட்சியை கலைத்து விட்டு கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.இன்று மாலை வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியினில் நடைபெற்ற கட்சியின் மேதினக்கூட்டத்தினில் கலந்து கொண்டு பேசுகையினில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  

தற்போது கூட்டமைப்புக்குள் நிலவி வரும் முரண்பாடுகளின் மத்தியினில் ஒவ்வொரு தரப்பும் தம்மோடு பேச்சு நடத்த அழைப்பு விடுத்துவருகின்றனர் . எம்மை பொறுத்த வரையினில் கட்சியோ பதவியோ முக்கியமில்லை. தேவையானால் கட்சியினை கலைத்துவிடவும் தயார். ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு முன்னதாக எந்த கொள்கையினை முன்வைத்து கூட்டமைப்பு செயற்பட்டதோ அந்த நிலைக்கு முதலினில் திரும்பவேண்டும்.

 

காலத்திற்கு ஏற்ற வகையில் எமது நோக்கத்தை அடைய புதிய கொள்கைகளை உபாயங்களை வகுத்து செயற்படுவதே  நல்லது. ஆகவே கஜேந்திரகுமாரின் மேற்படி நிபந்தனை நியாயமானதல்ல. அதற்காக கூட்டமைப்பின் தற்போதய செயற்பாடு சரியானது என்பதல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.