Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு இனத்தின் அடையாளமே

Featured Replies

968994_161946730641403_1314001710_n.jpg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
ஆரியன் வந்தான்

சாத்திரத்தையும் சாதியையும்

விதைத்தான்..!

மொகலாயன் வந்தான்

மதத்தையும் மதத்தால்

அழிவையும் விதைத்தான்..!

ஆங்கிலயன் வந்தான்

சுரண்டலையும் அதனால்

பசியையும் வறுமையும்

விதைத்தான்..!

ஏமார்ந்த தமிழன்

எல்லாவற்றையும்

ஏற்று கொண்டான்..!

தன்னை தானே

இழித்து கொள்ளும்

தரங்கெட்ட நிலைக்கு

தாழ்ந்தும் போனான்..!

கூத்தாடிகளை தலைவனாகவும் கொள்ளையர்களை தொண்டனாகவும் கொள்கையற்றும் போனான்..!

ஈழம் சென்று

கங்கை கொண்டு

கடாரம் வென்று

இமயத்தில்

கொடி நாட்டியவன்..!

இன்று

இனம் பிரிந்து

மொழி மறந்து

அகதிகளாய்

முகம் தொலைத்து

முகவரியற்று அலைகிறான்..!

இன்று

அங்கவையும் சங்கவையும்

கேலிபொருள்கள்

கோப்பெருந்தேவியும்

குழல்வாய்மொழியும்

விலைமாதர்கள்..!

தமிழ்

பேசினால் பாவம்

தமிழ்

படித்தால் சாபம்..!

தம்

இனம் மறந்து

மொழி தொலைந்து

திரியும் இவன்

அடுத்த நுற்றாண்டில்

அழிந்து போவான் ..!

ஒரு இனத்தின்

அடையாளமே

அதன் மொழியே;

மொழி அழிந்தால்

நிச்சயம் அந்த இனம் அழியும்..!

 
 

Thankx Facebook

Madurai Tamilan 
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி. மொழியை காப்பாற்ற அடுத்த சந்ததியினர் தமிழை கற்க வேண்டும். பேச வேண்டும். இல்லையேல் அழியும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி. மொழியை காப்பாற்ற அடுத்த சந்ததியினர் தமிழை கற்க வேண்டும். பேச வேண்டும். இல்லையேல் அழியும்.

 

 இப்பவெல்லாம் சோறு சாப்பிட்டாலே மரியாதை கெட்டவேலை.......தமிழ் கதைச்சால் சொல்லவே வேணும்....தீயா இருக்காங்கப்பா.....லண்டனிலை இருக்கிற என்ரை மண்டைகனத்த சொந்தங்களின்ரை பங்சனுக்குப்போய் தமிழிலை கதைச்சு மரியாதையிழந்தவன் எண்ட முறையிலை சொல்லுறன்....முதலிலை உதுகளை திருத்தியெடுக்கோணும்.
 

இணைப்பிற்கு நன்றி அன்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இணைப்புக்கு, நன்றிகள் அன்பு!

 

ஆனால், பிரச்சனை என்னவென்றால், தமிழ் மொழி, ஆரிய மொழியிலும் குறைந்தது என்ற ஒரு மனப்பான்மை, வெகு ஆழமாக விதைக்கப் பட்டுள்ளது.

 

சமஸ்கிரிதம் - தேவ பாஷா,

தமிழ்- நீச பாஷா.

 

இதே போலவே, தமிழனை ஒவ்வொரு விதத்திலும், மேலே எழும்பமுடியாமல் அடித்து அமத்துவதே, மற்றவர்கள் தெரிந்தெடுத்த முறை.

 

தமிழனின் நிறம் கறுப்பு- இது நிறத்தை வைத்து மட்டம் தட்டுவது,

 

தமிழன் ஒரு கூலி- இது அவன் செய்யும் தொழிலை வைத்து மட்டம் தட்டுவது.

 

தமிழன் ஒரு சூத்திரன்- இது அவன் பிறப்பை வைத்து மட்டம் தட்டுவது.

 

இதில பெரிய பரிதாபம் என்னவென்றால், ஒரு முறை இப்படியான ஒன்றைத் தொடங்கி விட்டால், மிச்சத்தைத் தமிழனே காவிக்கொண்டு திரிவான்! :o

 

 

கவிதை இணைப்புக்கு, நன்றிகள் அன்பு!

 

ஆனால், பிரச்சனை என்னவென்றால், தமிழ் மொழி, ஆரிய மொழியிலும் குறைந்தது என்ற ஒரு மனப்பான்மை, வெகு ஆழமாக விதைக்கப் பட்டுள்ளது.

 

சமஸ்கிரிதம் - தேவ பாஷா,

தமிழ்- நீச பாஷா.

 

இதே போலவே, தமிழனை ஒவ்வொரு விதத்திலும், மேலே எழும்பமுடியாமல் அடித்து அமத்துவதே, மற்றவர்கள் தெரிந்தெடுத்த முறை.

 

தமிழனின் நிறம் கறுப்பு- இது நிறத்தை வைத்து மட்டம் தட்டுவது,

 

தமிழன் ஒரு கூலி- இது அவன் செய்யும் தொழிலை வைத்து மட்டம் தட்டுவது.

 

தமிழன் ஒரு சூத்திரன்- இது அவன் பிறப்பை வைத்து மட்டம் தட்டுவது.

 

இதில பெரிய பரிதாபம் என்னவென்றால், ஒரு முறை இப்படியான ஒன்றைத் தொடங்கி விட்டால், மிச்சத்தைத் தமிழனே காவிக்கொண்டு திரிவான்! :o

 

 

 

இவை தான் தமிழை அழித்ததென்றால் கடந்த 3000 ஆண்டுகள் இவையும் இருந்தன.
 
அப்படி இருந்தும் இந்த 3000 ஆண்டுகளில் தமிழ் ஏன் செழித்து வளர்ந்தது ? 
 
அப்படி இருக்க ஏன் கடந்த 300 ஆண்டுகளில் இருந்து தான் தமிழ் மங்கி அழிகின்றது ?
  • கருத்துக்கள உறவுகள்

 

இவை தான் தமிழை அழித்ததென்றால் கடந்த 3000 ஆண்டுகள் இவையும் இருந்தன.
 
அப்படி இருந்தும் இந்த 3000 ஆண்டுகளில் தமிழ் ஏன் செழித்து வளர்ந்தது ? 
 
அப்படி இருக்க ஏன் கடந்த 300 ஆண்டுகளில் இருந்து தான் தமிழ் மங்கி அழிகின்றது ?

 

இராஜ ராஜ சோழனின் காலம், பத்தாம் நூற்றாண்டில் இருந்து, பதினோராம் நூற்றாண்டு வரையில் ஆகும்.

 

இவரது ஆட்சிக்காலம் வரைக்கும், சமஸ்கிரிதம் தமிழகத்தில் ஊடுருவியதாயினும், தமிழில் இருந்து சொற்களைப் பெற்றுத் தன்னை வளப்படுத்திய காலமாகும்.

 

ராஜராஜ சோழன் ஒரு சிறிய தவறு செய்தான். தனது தாயாரின் இறந்த திதியன்று, வேட்டைக்குப் போனான். அன்று தாயாரின் இறந்த திதி, என்று மன்னனின் முதலமைச்சராகிய ஆரிய மந்திரிக்குத் தெரிந்திருந்தும், அவர் சொல்லவில்லை. வேட்டை முடிந்து, மன்னன் மாமிசமருந்துகையின் போதே, மந்திரி விசயத்தைப் போட்டுடைத்தார்.தாயின் மீது மிகவும் அன்பு வைத்திருந்த மன்னன், பிராயச்சித்தம் செய்ய விரும்பினான். அப்போது, அந்த மந்திரி கேட்டவை, அன்றைய தமிழ் நாட்டில், 'மங்கலம்' என பெயர் கொண்ட கிராமங்கள் அனைத்தையும் பிராமணருக்குத் (ஆரியர்) தானமாக அழிக்க வேண்டும் என்பதாகும். அப்போது, படித்த ஆரியர்கள் தமிழ் நாட்டில் அதிகம் இருக்கவில்லை. அதனால், வடக்கிலிருந்து பெரும் தொகையான ஆரியர்கள் ஒரேயடியாகத் தமிழ் நாட்டிற்கு வந்தார்கள். இவர்கள், வந்திறங்கிய இடம் கூட, ஆரிய குடி, என்று இன்றும் அழைக்கப் படுகின்றது.

மன்னனின் அனுசரணையுடன், ஆளும் வர்க்கமொன்று முதன் முறையாகத் தமிழ் நாட்டில் உருவாகியது.

இதன் பின்னர் தான், அதுவரை தமிழ் நாட்டில் வேரூன்றி இருக்காத, 'வருணாச்சிரம தர்மம்' வேதங்களின் நல்லாசியுடன், அனுசரிக்கப்பட்டது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இன்றும் கூட, சனத்தொகையில் ஐந்து விகிதம் கூட இல்லாத, ஆரியர்கள், எவ்வாறு தமிழகத்தின், நிர்வாக அலகுகள் முழுவதிலும் ஊடுருவினார்கள் என்பதே.

 

இன்றும் கூட,  தொலைக்காட்சி நிலையங்கள், பத்திரிகைகள், சினிமா நடிகர்கள், வானொலிகள், அரச நிர்வாக இயந்திரங்கள் அனைத்திலும் இவர்கள் ஆட்சியே நடக்கின்றது,

இவர்கள் சொல்வதே வேதம், இவர்கள் சொல்வதே சட்டம். என்ற நிலையில், தமிழுக்குத் தலை குனிவதைத் தவிர வேறு வழி இல்லை.

 

ஆரியத்தின் அழகே, அது எதையும் எதிர்த்துப் போராடுவதில்லை. எதிர்க்கப் பட வேண்டியவைகளை, ஏற்றுக்கொள்வது போலப் பாசாங்கு செய்து அதை இல்லாமல் செய்வது தான் அவர்களின் தந்திரமாகும்.

 

இப்போது நடைபெறுவது, தமிழுடன் ஆங்கிலத்தைக் கலந்து 'தமிங்கிலம்' என்று ஒரு மொழியை உருவாக்குவது.  இந்த விதத்தில், தமிழ் அழிகின்றது, என்று தெரியாமலே தமிழ் அழிந்து போகும். பொதுசன ஊடகங்களான, சினிமா, தொலைக்காட்சி, வானொலி என்பன மூலம், இது அரங்கேற்றப் படுகின்றது. இது வரை காலமும், இலங்கையில் மட்டுமே, தமிழ் இந்த முறையில், இது வரை அழியாமல் இருந்தது. இன்று புலத்தில், இந்த ஊடகங்களின் ஊடுருவலினால், இளைய தலைமுறை, தமிழ் பேசாது, 'தமிங்கிலம்' தான் பேசப்போகின்றது.

 

இதே போல, எமது கடவுள்களும், ஆரியத்தினால் உள்வாங்கப் பட்டு, தனித்துவமான சைவமதம், தனது அடையாளத்தையும், தொலைத்து, இந்துமதமாகி நிற்கின்றது.

 

இன்னுமொரு மிகவும் முக்கியமான காரணம், ஆங்கிலேயர்களின் ஆட்சி. இவர்களது காலத்தில் வேதங்களைப் பிழையாக விளங்கிய 'மார்க்ஸ் முல்லர்' , ஆரியர்களிடமிருந்தே, வேதங்கள் வந்தன என்று நிரூபிக்க முயன்றதால், அது வட இந்தியர்களை, தங்களின் வாரிசுகள் என்று கூற வேண்டி வந்தது. வேதங்கள் போன்ற அறிவு நூல்கள், 'நாகரீகத்தின் தொட்டிலான' ஐரோப்பாவில் இருந்தே வந்திருக்க வேண்டுமென்று, ஐரோப்பிய மூலமொன்றை, வேதங்களுக்குக் கொடுக்க வேண்டிய தேவையும் அவருக்கு இருந்தது. இதுவும், தமிழை அழிப்பதற்கு, தமிழரை அழிப்பதற்குத் துணை போனது. அத்துடன், ஆங்கிலேயர்களுக்கு, உண்மையான எதிர்ப்பு, தமிழ் நாட்டுக் குறுநில மன்னர்களாலேயே ஏற்படுத்தப் பட்டது.

 

பதிவு நீண்டு கொண்டே செல்வதால், இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடருவோம், ஈசன்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்
இதே போல, எமது கடவுள்களும், ஆரியத்தினால் உள்வாங்கப் பட்டு, தனித்துவமான சைவமதம், தனது அடையாளத்தையும், தொலைத்து, இந்துமதமாகி நிற்கின்றது
இன்று இலங்கை பூராவும் இது நடைபெறுகிறது சைவர்கள் விரும்பி இந்துவாக மாறுகிறார்கள் தங்களையும் அறியாமல்...

Edited by putthan

பூங்கை,
 
2000 ம் வருடத்திற்குமேற்பட்ட திருக்குறளில் முதலாவது குறள்.
 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
 
இதில் உள்ள,
 
1. ஆதி
2. பகவன்
 
என்னும் இரு சொற்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?  :D
 
 
 
என் கேள்வி ஆரியம் தமிழை அழித்ததென்றால் கடந்த 3000 ம் ஆண்டுகளில் தமிழ் ஏன் செளித்தது ?
 
மாணிக்கவாசகர் திருவாசக‌ங்கள் தமிழுக்குக் கேடா ?
 
உங்கள் பதில் ஆரியரினால் ஏற்பட்ட எதிர்மறை சமூக மாற்றங்களைச் சொல்கிறது. ஆனால் ஆரியர் வருகை நடந்த காலங்களில் அழியாது வளர்ந்த தமிழ் இன்று தாழ்கிறதே ஆகவே தமிழ் அழிவிற்கு அவர்கள் காரணம் அல்ல என்ற என் கேள்விக்கு பதில் தர தவறிவிட்டது.
 
கடந்த 300 ஆன்டுகளில் நிகழ்ந்த ஐரோப்பியர் வருகை தான் தமிழை அழித்தது என்ற கருத்திலேயே கேள்வியை வைத்தேன்.
 
நீங்கள் ஆரியரை விடுவதாய் இல்லை.  :D
 
நான் இங்கு மொழியை மாத்திரமே கேட்கிறேன்.

கருணாநிதி செம்மொழி மகாநாடு வைத்து ஏமாற்றி தமிழை அழித்தது போலவா பிராமணர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள்?

 

ஆங்கிலம் பேசாத கருணாநிதியின் புத்திர பாக்கியமல்லா "டெசொ".  நமது நடத்தை சட்டி பானையை பார்த்து கரி என்றது போலத்தான்.

 

மக்ஸ் முல்லரை அன்றைய சாதரண ஒரு ஆங்கிலேயராகவே நான் பார்க்கிறேன். முறைப்படியான ஆரியத்தனம் அதன் பின்னர்தான் மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட்டது என்றேதான் நான் நினைக்கிறேன். சாதி என்ற கருத்து ஆங்கிலேயருக்கு இந்தியாவைப் பிடித்து ஆண்ட பின்னர்தான் தெரிய வந்தது. அதில் வேதங்களை படித்த பின்னர்தான்  உயர்வு, தாழ்வு பற்றி அறிந்தார்கள். உண்மையான உயர்வு தாழ்வு, வேதங்களுக்கு பின்னாலான நீதி நூலான மனுதர்ம சாத்திரத்தில் தான் மிகைப்படுத்தப் படுகிறது. அது புத்த மதம் போன்ற  சாதியில் தங்காத மதம் தனது போதனைகளை ஆரம்பித்த பின்னர் எழுத்தப்பட்டது. இருக்கு வேதம், தோல்வி வெற்றி பற்றித்தான் பிரஸ்தாபிப்பதாக அறிகிறேன்.  எப்படி சிந்து வெளியில் வெற்றி பெற்ற ஆரியர் தம்மை பிராமணருடன் இணைத்தார்களோ அதே மாதிரியே பிற்கால ஆங்கிலேயரும் தங்களை ஆரியருடன் இணைத்தார்கள். ஆரியர் சரியாக இந்தியாவை இடைகாலத்தில் வென்ற கிரேக்கர், அல்பீனியர், பார்சியர்களில் ஒருவராக இருக்க வேண்டியதில்லை. குறைந்த பட்டசம் பாரதப்போரில் காட்டப்படும் ஆப்கானிஸ்த்தியர்களாக கூட இருக்கத்தேவை இல்லை.

 

நாம் ஆரியர்கள் என்று நினப்பவர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து வெளிக்குள் பிரவேசித்து, வென்று, அந்த நாகரீகத்தை தம்மால் பின்பற்ற முடியாமல், அதனால் தாம் பலன் அடையத்தக்க வழிகளை அறியாமல், வெறுமனே அழித்தவர்கள்.  இருக்கு வேதத்தில் கிருஸ்ணனோ, இந்திரனோ சரியான தலைவர்களாக இல்லை. பாரதப்போர் எழுதும் போது இந்திரன் தலைவனாக வந்து அதை கிருஸ்ணனுக்கு இழந்தும் விட்டான். 

 

ஆரியர் சிந்து வெளியை அழித்து 1000 வருடத்தின் பின்னர் தான் பாரதம் எழுதப்பட்டது. அந்தக்காலம் காண்டகாரிகள் தான் மேலாதிக்கத்தை வைத்திருந்தார்கள். கடந்த 1000 ஆண்டு இந்தியாவை பார்த்தோமானால் பார்சிகள் ஆண்டு, முகலாயர்கள் ஆண்டு,  மேற்கு நாடுகள் ஆண்டு( இதற்குள் கூடத் தம்முள் சிறிய பேதம் உள்ள போத்துக்கீசர், ஒல்லந்தார், பிரெஞ்சுக்கரர், ஆங்கிலேயர் என்பது உண்டு) அதன் பின்னர் சுதந்திரம் அடைந்து இன்று சிங்களர்வர்களால் ஆளப்படுகிறது.  (இதனால் இன்று இந்தியர் தம்மை தாம் சிங்களவரின் உறவினர்கள் என்று கூறுவதில் பெருமை அடைகிறார்கள்.). ஆனால் இருக்கு வேதம் கண்ட காரிகள் பற்றி பேசவில்லை.(ரூசியர்களுக்கு அல்லது அவர்களுக்கு கீழே இருந்த சோம பாணம் குடிப்பவர்களை பற்றி பேசுகிறது- இது பாரத கண்டகாரிகளிடம் காணபபடவில்லை)  இதில், உண்மையில், சிந்து வெளியை அழித்த இருக்கு வேதத்தில் சொல்லப்படும் ஆரியர் யார் என்றதை சொல்வது கஸ்ட்டம். சிந்து வெளி அழிந்து 1000 ஆண்டுகளின் பின்னர் இந்தியாவில் வந்து இறங்கிய பாரதத்து கண்டகாரிகள் ஆரியராக இருக்க வேண்டியதில்லை.

 

வேதங்களை ஆரியத் தத்துவங்களாக தவறாக நினைத்தது 1). சமஸ்கிருதத்திற்கும், ஆங்கிலத்திற்கும் ஒற்றுமையை கண்டு பிடித்தது, 2) வேதங்கள் சமஸ்கிருதத்தில் இருந்தது. அந்த தவறில் அறியாமை கூட இருந்ததே யல்லாமல் இன்றையது போல் வேர் ஊன்றியிருந்த துவேசம் இருக்கவில்லை. துவேசம் மெல்ல மெல்ல வளர்க்கப்பட்டது. இதில் மேற்கு நாட்டவர் தம்மை ஆரியர் என நினைத்தார்கள்.  ஆரியரும் வெள்ளை, மேற்கு நாட்டவரும் வெள்ளை என்பதால் ஆங்கிலேயர் வெள்ளையர்களாகி சிந்து வெளியை வென்றவர்களாகாது.  இதில் திராவிடரும் இந்தியாவுக்கு வந்த வெள்ளையர்கள் தான் என்பதும் உண்மை.

 

அன்றைய ஆங்கிலேயர் இந்தியன் என்றால் முட்டாள்கள் என்றுதான் நினத்துக்கொள்வார்கள் என்று ஒரு கதை உண்டு.

ஒருதடவை ஆங்கிலேயன் ஒருவன் இன்னோருவருடன் விவாதித்துகொண்டிருந்த போது இந்தியன் என்றால் முட்டாள்கள் என்றானாம். அதற்கு மற்றவர் அதை எப்படி நீ கூறமுடியும் என்ற போது வெளியே அழைத்து சென்று முதல் கண்ட ஒரு குடியானவனிடம் எனக்கு எத்தனை வயது என்று சொல்லு பார்க்கலாம் என்றனாம். குடியாவன் 50 என்று கூற அது சரியாக இருந்துவிட்டது. கொஞ்சம் ஆடிபோய்விட்ட ஆங்கிலேயன் மற்றவர் முன்னால் சுதாகரித்துக்கொண்டு தொடர்ந்து நிறுவ முயன்று அதை எப்படி நீ சொன்னாய் என்று கேட்டானாம். அதற்கு குடியானவன் என் மகளின் வயது 25 தானே என்றானாம். இப்போது குடியானவன் தன்னிடம் வகையாக மாட்டிவிட்டதாக நினைத்து ஆங்கிலேயன் மற்றவருக்கு ஒரு கண்சாடை காட்டிவிட்டு, அது சரி அதனால் எப்படி என் வயது ஐம்பாதிறது என்று கேட்க குடியாவன் துரையானவருக்கு இரண்டால் பெருக்கத்தனும் தெரியாத? என்று கேலி செய்துவிட்டு என்மகள் இப்போது அரை பைத்தியம் தானே என்றானாம். அதை கேட்ட மற்றவர் ஆங்கிலேயனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாராம். இது ஆரிய திராவிட துவேசம் அல்ல. அமெரிக்காவில் காணப்பட்ட கறுப்பு வெள்ளை துவேசம்.

 

ஆரியம் திராவிட போருக்குளால் நாம் வெளிக்கிடாவிட்டால்,  சட்டிக்குளால் தப்பி அடுப்புகுள்தான் விழவேண்டிவரும்.  முள்ளி வாய்க்கால் முடிய முதல் நாம் நடத்திய செம்மொழி மகாநாடு இதனைத்தான் காட்டுகிறது. வேதம் நமது என்று காட்ட வேண்டுமாயின் சிந்து வெளி மொழி வாசிக்கப்பட வேண்டும். அப்போது அதில் இருப்பவை இருக்கு வேதத்துடன் இயைவதை காட்ட முடியும். அது நம்முடன் இயைவதையும் காட்ட முடியும். அந்த நேரம் நாம் தான் இருக்கு வேத தத்துவாசிரியர்கள் என்பது முடிவாகும்.

 

மேலும் தமிழ் நாட்டு பிராமணர் திராவிடரே. சரியான DNA பரி சோதனை செய்தால் இவர்களுக்கும் மற்றய குடி மக்களுக்கும் அதிகம் பேதம் காட்டாது. (மற்றைய இடங்களில் பிராமணர்கள், பொது மக்களை விட கூடிய வீதம் ஆரியர்கள்). தென்மாநிலங்களில் எல்லாப்பிராமணரிடமும் 50% திராவிடமாவது இருக்கிறது. தமிழ் நாட்டில் பிராமணம் என்பது குடியேற்றம் செய்யப்பட்டது அல்ல. இறக்குமதி செய்யபட்டது. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 

பூங்கை,
 
2000 ம் வருடத்திற்குமேற்பட்ட திருக்குறளில் முதலாவது குறள்.
 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
 
இதில் உள்ள,
 
1. ஆதி
2. பகவன்
 
என்னும் இரு சொற்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?  :D
 
 
 
என் கேள்வி ஆரியம் தமிழை அழித்ததென்றால் கடந்த 3000 ம் ஆண்டுகளில் தமிழ் ஏன் செளித்தது ?
 
மாணிக்கவாசகர் திருவாசக‌ங்கள் தமிழுக்குக் கேடா ?
 
உங்கள் பதில் ஆரியரினால் ஏற்பட்ட எதிர்மறை சமூக மாற்றங்களைச் சொல்கிறது. ஆனால் ஆரியர் வருகை நடந்த காலங்களில் அழியாது வளர்ந்த தமிழ் இன்று தாழ்கிறதே ஆகவே தமிழ் அழிவிற்கு அவர்கள் காரணம் அல்ல என்ற என் கேள்விக்கு பதில் தர தவறிவிட்டது.
 
கடந்த 300 ஆன்டுகளில் நிகழ்ந்த ஐரோப்பியர் வருகை தான் தமிழை அழித்தது என்ற கருத்திலேயே கேள்வியை வைத்தேன்.
 
நீங்கள் ஆரியரை விடுவதாய் இல்லை.  :D
 
நான் இங்கு மொழியை மாத்திரமே கேட்கிறேன்.

 

ஈசன், திருக்குறளுக்குப் பலர் உரை எழுதி உள்ளனர். அவர்கள் தங்களுக்கு, ஏற்ற மாதிரித தங்கள் கருத்துக்களை, எழுதி வைத்துள்ளனர்.

 

என்னைப் பொறுத்த வரையில், இரண்டு விடயங்களைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என எண்ணுகின்றேன்.

 

முதலாவது, திருவள்ளுவர் எழுதிய உண்மையான திருக்குறள் தான் இப்போது இருக்கின்றதா என்பது! 

 

சமஸ்கிரித ஊடுருவல் ( இது அகத்தியர் காலத்திலேயே ஆரம்பித்திருக்க வேண்டும் என எண்ணுகின்றேன்), பல தமிழ் நூல்களில் ஊடுருவி, அதன் மூலங்கள் பலவற்றைத் தங்களுக்கு ஏற்றதாக மாற்றிவிட்டது. இன்று மூலம் எது, ஊடுருவல் எது என்று தெரியாத நிலையிலேயே நாம் உள்ளோம். அத்துடன், திருக்குறள், வள்ளுவரால் மட்டுமன்றி, ஒரு குழுவால் எழுதப் பட்டிருக்கலாம் என்ற கருதுகோழும் உள்ளது.

 

எனது தனிப்பட்ட கருத்தானது, வள்ளுவர் ஒரு சமணராக இருந்த படியால், 'ஆதி பகவன்' என்பதன் பொருள் பின்வருமாறு இருக்கலாம் என்று கருதுகின்றேன்.

 

ஆதி என்பது தொன்மையானது. பகவன் என்பது, பகுத்தல், எனவும் பொருள் படும். அதாவது,தன்னை வெளிப்படுத்தாது, சிறு சிறு துணிக்கைகளாக எதிலும் கலந்திருப்பது எனப் பொருள் கொள்ளலாம். சமணர்கள், அதிகமாகத் தியானங்களில் ஈடுபடுவது உண்டு. அந்த நிலையில், பிரபஞ்சத்தின் அதிர்வலைகள், அவர்களது கபாலத்தினுள் அதிர்வதாகவும், அதனை அவர்கள் உணர்ந்து கொள்வதாகவும் கூறப் படுகின்றது.

 

இந்த அதிர்விலிருந்தே, அகரம் முதலான எழுத்துக்கள் தோன்றியதாகவும், இறை என்பது, எல்லா உயிர்களிலும், சடங்களிலும், மறை பொருளாகக் கலந்திருக்கின்றது எனப் பொருள் படும் என எண்ணுகின்றேன். இவரது காலத்துக்கு, முற்பட்ட புத்தமதத்தில், 'தர்மா; என்பது, உயிர்களிலும், சடப்பொருள்களிலும் உள்ள ஒரு குணாதிசயம் என்று கூறப்படுகின்றது. இதிலுருந்து கூட, வள்ளுவர் தனது கருத்தை, எடுத்திருக்கவும் கூடும்.

 

மூவாயிரம் வருடங்களுக்குத் தமிழ் வாழ்ந்ததன் காரணம், தமிழர்கள் மன்னர்களாக இருந்தார்கள். இந்தியாவில், தமிழகம் மட்டுமே, அதிகமாக, வேற்றுமொழி மன்னர்களால், ஆளப்படாமல் இருந்தது என எண்ணுகின்றேன். அசோகச் சக்கரவர்த்தி கூட, இந்தியா முழுவதையும் தனது ஆழுமைக்குக் கீழ்க் கொண்டுவந்த போதும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, தமிழ் மன்னர்களுடன் ஒப்பந்தங்கள் மட்டுமே செய்துகொண்டான். நேரடியாக ஆட்சி செய்யவில்லை. அந்தக்காலத்தில், தமிழனுக்குப் படைபலம், இருந்தது. சிறந்த துறைமுகங்கள் இருந்தன. அதனால், தமிழ் செழித்தது. நீங்கள் கூறும் கடந்து முன்னூறு ஆண்டுகாலத்தில், தமிழனிடம் உண்மையான அதிகாரம் இருக்கவில்லை. 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

 

பகவன் என்ற சொல்லு பகவானிலிருந்து வந்தது என்று கொள்ள வேண்டியத்தில்லை. 

 

 

அம்மா- (அ)ம்மாத - மதர்

அப்பா- (அ)ப்பிதா- பாதர்

ஒன்று -(வட மொழி தவறவிட்டது) - வன்

இரண்டு - த்ரு - ரூ

மூன்று -திரி - த்திறி

அஞ்சு - பஞ்ச - ஃப்வ்

....

எட்டு - அட்ட- எயிட்

ஊர்- புர- ரைவுன்

 

 

நம்மிடமிருக்கு சில சொல்லக்ளை திரும்ப திரும்ப யாழில் பார்த்திருக்கிறோம்.

 

சுத்த தமிழ் சொற்கள் வடமொழி மூலம் வெளியேபோய் இருப்பது தெரிகிறது. 

 

கடற்கரையில் இருந்த தமிழரிடம் தான் சங்கு என்ற சொல் இருந்திருக்க முடியும். வடமொழியில் இது எந்த பிறழ்வும் இல்லாமல் சங்காத்தான் இருக்கிறது. 

 

ஆற்றலுடன் மொழி ஆராய்பவன் ஒருவன் எத்தனை சொற்கள் வடமொழிக்கு தமிழிலிருந்து(சிந்து வெளியிலிருந்து) போனது என்றதை  நிறுவ அரை மணித்தியாலம் எடுக்காது. எனவே "பகவான்" வட சொல்த்தான் என்பது நிறுவப்பட வேண்டியதே அல்லாமல் வடமொழியில் இருப்பதால் வட மொழி சொல் ஆகாது. 

 

ஆனால் திருவள்ளுவர் சமணராக இல்லாவிட்டாலும், சமஸ்கிருதம், பாளி இரண்டையும் தெரிந்து வைத்திருந்தார் என்பது எற்றுக்கொள்ளப்பட வேண்டும். 

 

மேலும் அகத்தியருக்கு ஆயுள் 5000 என்பதால் நான் எடுத்துக்கொள்வது (நிறுவியது அல்ல) சிந்து வெளியில் இருந்து தமிழ் நாடு வந்த பண்டிதர்கள் தான் அகத்தியர்கள்.  இப்படியான  எடுப்பு இலகுவில் எப்படி ஔவை ஆயிரம் வருடம் ஆயுளுடன் இருந்தார் எனபதை சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் தமிழ் நாட்டில் நிறுவியது.  மேலும் வடக்கில் கொண்டாட்டங்களால் வெறுப்படந்து (அல்லது இரவு பகல் பெண்களுடன் கூடி சோமபாணம் அருந்தி கும்மாளம் போட்டுக்கொண்டிருந்த உருத்திரன் போன்றவர்களால் துரத்தப்பட்டு) வெளியேறி வந்த ஆரியரை விட உருவத்தில் சிறியராக இருந்த பண்டிதர்கள்   பிற்காலம் 5000 ஆண்டு வாழ்ந்த அகஸ்தியர்கள் ஆனார்கள். இது சரியாகும் பட்சத்தில் தமிழ் நாட்டில் சிந்து வெளிக்கு சமனான கல்வி முன்னேற்றம் இருந்திருக்க நியாயம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்பார்கள். ஆனால் அந்த தங்கத்தமிழ் அடுத்த நூற்றாண்டில் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. மொரிஷியஸ் நாட்டில் வாழ்பவர்களில் பலர் தமிழர், தமிழ்ப் பெயர்களில்தான் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. அந்த நிலை தமிழ் நாட்டுக்கும் வந்து விடும் என்கிறார், தமிழ் இணையப் பல்கலைக் கழக இயக்குனர் மு. பொன்னவைக்கோ.

தற்போது உலகம் முழுவதும் 6000 மொழிகள் உள்ளன. ஆனால் வருகிற 22-ம் நூற்றாண்டில் அதாவது அடுத்த நூற்றாண்டில் 80 சதவீத மொழிகள் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவலை யுனஸ்கோ அறிவித்துள்ளது.

மற்றொரு ஆய்வு உலகில் அடுத்த நூற்றாண்டில் 12 மொழிகள் மட்டும்தான் வளமையுடனும், செழிப்பாகவும் இருக்கும் என்கிறது. இந்த இரண்டு ஆய்வறிக்கைகளிலும், கூறப்படும் எஞ்சியுள்ள மொழிகளில் தமிழ் இல்லை. இந்தியாவில் தற்போதுள்ள 18 மொழிகளில் இரண்டே இரண்டு மட்டும் தான்

எஞ்சி நிற்கப் போகின்றன. அவை இந்தி, வங்காளி மட்டுமே.

தமிழ் கூறும் நல்லுலகம் என்ன பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யப் போகின்றன?

ஒவ்வொரு ஆண்டும் பல மொழிகள் சிதைந்து மறைந்து வருகின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்த மாற்றங்களால் பல மொழிகள் மறைந்தன. மறைந்து வருகின்றன.

இன்னும் நூறு ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்று இருக்கிறது.

மொழிகள் ஏன் மறைகின்றன என்ற வினாவுக்கு விடைகள் பல உள்ளன. மொழி பேசுவோரை அடியோடு அழித்துவிட்டால், அவர்களை உலகெங்கும் சிதறடித்து விட்டால் மொழி அடியோடு மறைந்து போகலாம்.

அமெரிக்கப் பழங்குடிகள், யூதர்கள், ஆர்மினியர்கள், ஈழத்தமிழர்கள் போன்றோர் இந்த இடரை நோக்கிச் செயல்பட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் தம் மொழியைக்

காப்பாற்ற அரும்பாடுபட்டு வெற்றியும் கண்டிருக்கின்றனர். இருப்பினும், பெரும்பாலும் மொழிகள் அழிவது அந்தந்த மொழி பேசும் குடிகள் தாமாகவே தம் மொழியை உதறுவதால் தான் என்பது அறிஞர்கள் கருத்து. ஏன்? தாய் மொழியை உதறி வேறு மொழியை ஏற்கிறார்கள் என்பதை அறிஞர்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

பிஷ்மன் என்ற அறிஞரின் கருத்துப்படி

அவ்வகைக் காரணங்களில் சில.. புலம் பெயர்தல், இடம் விட்டு இடம் பெயரும் மக்கள் பிழைப்புக்காக வேறு மொழியைக் கற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். குழந்தைகள் வேற்று மொழி மக்களை மணமுடித்துக் கொண்டால், மொழியை உதற வேண்டிய இக்கட்டுக்கு ஆளாகலாம்.

பொருளாதார சிக்கல்கள்.. வேலைவாய்ப்புக்காகவும், வணிகத்துக்காகவும் ஆதிக்க மொழியைக் கற்க வேண்டி வரும். நாட்டுப்பறங்களில் வேளாண்மையை நம்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும்போது தாய் மொழியை விட்டு விடத் தேவையில்லை. ஆனால், மற்ற குடிகளோடு வணிகம் செய்யும் போது ஆதிக்க மொழிகளை எதிர்ப்பது கடினமே. உங்கள் வாடிக்கையாளர்களின் மொழியே உங்கள் மொழியாக வேண்டிய நிலையில் தாய் மொழியைத் தக்க வைத்துக் கொள்வது எளிதல்ல.

ஊடகங்கள்.. தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாட்கள், இணையம் போன்ற ஊடகங்கள் ஆதிக்க மொழியின் வீச்சுக்கு அடிமையாகின்றன. எம்.டிவி. மற்றும் அமெரிக்கத் தொலைக்காட்சிகளின் வல்லமையை அளவிட முடியாது. கணினி

விளையாட்டுகள் போன்றவையும் மனமகிழ்ப் போர்வையில் ஊடுருவுகின்றன.

மேட்டுக்குடி குறியீடுகள்.. மக்கள் பெரும்பாலும் தாம் மதிப்பவர்களைப் போல் மேட்டுக்குடியினரைப் போல் வாழ நினைப்பார்கள். ஆளும் வர்க்கத்தின் பழக்க வழக்கங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பது பல முறை நடந்திருக்கிறது.

ஆதிக்க மொழியின் மோகத்தில் தாய் மொழியைத் தவிர்ப்பதும் அடிக்கடி நடப்பதுதான். தாய் மொழியையும், தம் பண்பாட்டையும் தாழ்வாக நினைத்து அவற்றைத் துறப்பதைப் பல நாடுகளில் காணலாம். அதில் குறிப்பாக இளைஞர்களிடம் காணலாம். நாம் இதுவரை குறிப்பிட்ட அறிகுறிகள் தமிழ்

பேசும் மக்களிடம் இல்லையென்று மறுக்க இயலாது. கூடிய மட்டிலும் தமிழில் எழுதத் தெரிந்தவர்கள், அதிலும் தமிழ் நூல்களைக்கற்றுக் கொள்ளத் தெரிந்தவர்கள் தமிழ் மடற்குழுக்களில் எழுதும் பொழுது தமிழிலேயே எழுத வேண்டும். அவர்களும் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தமிழுக்கு வரும் இன்னொரு இடர்ப்பாடு என்று கருத வேண்டியிருக்கிறது. வடமொழிக் கலப்பால், தெலுங்கு, கன்னடம், பிறகு மலையாளம் ஏற்பட்டது போல் இப்பொழுது தமிங்கிலர் என்ற புதிய மொழி

பேசுபவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எப்படிச் சிங்களர்கள், கலிங்கர்கள் தமிழர் கலப்பால் தோன்றிப் பின் தமிழரையே புறந்தள்ளினரோ, அது போல இந்தத் தமிங்கிலர்கள் தமிழரைப் புறந்தள்ளத் தயங்க மாட்டார்கள். இதற்குத்

தமிழ்நாட்டின் சில அரசியலாளர்களும், முன்னிலையில் இருக்கும் அறிஞர்களும் உடந்தை. தமிழ்நாட்டில் உள்ள அதிகார வர்க்கமும் இதற்கு உறுதுணையாக உள்ளனர். இனியும் இருப்பார்கள். இவர்களுக்கு இன்னொறு உறுதுணையாக இருப்பது சர்ச் கான்வென்ட், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் கல்வி வணிகர்கள். இந்த பாழாயப்போன தமிழாசிரியர்கள் ஒருகாலத்தில் நாட்டுப்புறங்களில் தலைமையாசிரியரைக் காட்டிலும், தமிழாசிரியருக்கு ஊரிலும் மாணவரிடத்திலும் கூடவே மதிப்பு இருந்தது. பட்டி மன்றம், வழக்காடு மன்றம்

என்று அலைந்து தங்கள் பொருளாதார நலம் பேணுவதிலேயே குறியாய் இருந்து தங்களுக்கென்று இருந்த தலைமைப் பண்பை இழந்து தறுதலையாய்ப் போனார்கள். மக்கள் வழி பிறழ்ந்தார்கள். இது புண்படுத்துவதாய் இருக்கலாம்.

ஆனால் உண்மை நிலைமை மிகவும் பாடாவதியாக இருக்கிறது.

தேர்வடம் பிடிக்க எத்தனை பேர் வருவீர்கள் என்பதுதான் கணக்கே தவிர, வடம் பிடிக்கலாமா என்பதல்ல. இப்படியே இருந்தால், என்றைக்கு வடம் பிடிப்பது? என்றைக்குத்தேர் நிலை கொள்வது?

நன்றி:

கதிரேசன்

வசந்தம் இணைப்பிதழ்

தினகரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.