Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடலூரில் நாம் தமிழர் கட்சிக்கு தடை: போலீஸ் குவிப்பு.

Featured Replies

நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இலங்கை முள்ளிவாய்க்கால் நினைவு தின கருத்தரங்கு, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கடலூரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பேரணியின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்று கருதிய கடலூர் புதுநகர் போலீசார் இந்த பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பேரணிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகள் கடலூர் நகரின் முக்கிய இடங்களில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் மறைந்த பிரபாகரன் மற்றும் சீமான் ஆகியோர் படத்தை அச்சிட்டு 20 இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைத்தனர். இதை அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையிலான போலீசார், இரவு 12 மணிக்கு அந்த பகுதிக்கு சென்றனர். தடை செய்யப்பட்ட இயக்க தலைவர் பிரபாகரன் படத்தை டிஜிட்டல் பேனரில் போடக்கூடாது. அந்த பேனர்களை அகற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர்கள் நாங்களே அகற்றிக் கொள்கிறோம் என்று கூறினர். பின்னர் பேனர்களை அகற்றுவது பற்றி சிறிது நேரம் கட்சி தலைமை நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் மஞ்சக்குப்பம் பஸ் நிலையத்தில் பிரபாகரன் படம் இருந்த டிஜிட்டல் பேனரை அகற்றினர். உடனே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தலைவர் பேனரை நாங்களே அகற்றிக்கொள்கிறோம் என்று கூறி, அனைத்து பேனர்களையும் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தையொட்டி பிரச்சினை ஏதும் நடக்காமல் தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு இன்று மாலை நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்த போவதாகவும், அந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சீமான் பேசுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஏற்கனவே பேரணிக்கு கோர்ட்டு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொதுக்கூட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு ராதிகா பிறப்பித்துள்ளார். இதையடுத்து இந்த தடை உத்தரவு ஆணையை நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் கடல் தீபனிடம் ஒப்படைக்க போலீசார் சென்றனர். ஆனால் வீட்டில் கடல்தீபன் இல்லாததால் தடை உத்தரவு ஆணையை கடல்தீபனின் வீட்டின் கதவில் ஒட்டிவிட்டு சென்றனர். சீமானின் பொதுக் கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடலூரில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்களை தடுக்க கடலூரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14771:in-cuddalore,-tamil-party-ban-police-focus&catid=36:tamilnadu&Itemid=102

இது கருணாநிதியின் திட்டமிட்ட சதி!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.. சீமானும்.. வைகோவும் சேரினம் இல்லையே என்று ஓலமிட்டவர்களுக்கு தெரியனும்.. இந்தியாவின் சன நாயகம் என்னென்று. இன்று வைகோ சீமானுடன் இணைந்து இதனை நடத்த முட்பட்டிருந்தால்.. தடைவிதிப்போருக்கு வேலை இன்னும் சுலபமா முடிஞ்சிருக்கும்.

 

ஒரு அஞ்சலி நிகழ்வை அராஜமாகத் தடுக்கும் சன நாய் அகம்.. சிறீலங்காவிலும் இந்தியாவிலும் தான் இருக்க முடியும்..!

 

இத்தடைகள் நிச்சயம் நாம் தமிழரைப் பலப்படுத்துமே தவிர ஒரு போதும் பலவீனப்படுத்தாது.

 

சீமான் ஜெயலலிதாவின் காவடி என்று வசைபாடியோர்.. கவனிக்க வேண்டிய விடயம்.. சீமான்.. ஒரு மக்கள் செல்வாக்குள்ள தலைவராக உள்ளார் என்பதை கருணாநிதி மட்டுமல்ல.. ஜெயலலிதாவும் வரவேற்கவில்லை. ஏனெனில் அவர் ஒரு தமிழராக உள்ளதால்..!

 

நிச்சயம் இந்த நிலையை சீமான் ஒருவரால் தான் தமிழகத்தில் மாற்றி அமைக்கவும் முடியும்..!

 

தடைகளைத் தாண்டி.. நாம் தமிழர் நிமிர்வோம்.. எழுவோம்... வெல்வோம்..! :icon_idea:

சீமான் அஞ்சலி செலுத்தட்டும், விடட்டும். அது தமிழ் நாட்டின் அரசியல் வசதிகளைப் பொறுத்தது. அதை விவாத்தித்து நாம் மேலும் பிரிவடையத் தேவை இல்லை.  எம்மீது அக்கறை உள்ளவர்கள் தயவு செய்து (தயவு செய்து)இந்த திரிக்கு சென்று வணக்கம் செலுத்துங்கள். இப்படியான திரிகள் தான் அரசுக்கு நாம் எப்படிக் கவலைப் படுகிறோம் என்பதைக் காட்டும்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122922&page=2

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கடலூர் புதுச்சேரியில் உள்ளது.. ரங்கசாமி முதல்வர் என நினைக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

போலீசார் தடை விதித்ததையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்திய சீமான்!

 

நாம் தமிழர் கட்சியின் சார்பில், கடலூரில் இன்று மே 17 முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்து அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்திருந்தனர். 

 

இந்நிலையில், இந்தப் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதிக்கக் கோரி கடலூர் போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அதில் பேரணிக்கு நீதிமன்றம் தடை விதித்தது.  இதனால் பொதுக்கூட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஆனால்  பொதுக்கூட்டத்துக்கும் போலீசார் தடை விதித்து, நாம் தமிழர் மாவட்டச் செயலர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.

 

இதையடுத்து தனியார் திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தினர். இதில் சீமான் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=99602

 



கடலூர் புதுச்சேரியில் உள்ளது.. ரங்கசாமி முதல்வர் என நினைக்கிறேன்..

 

ஆம்.. நீங்கள் குறிப்பிட்டது சரியே. இன்றைய நிலையிலும் கூட... அன்று போல்.. கருணாநிதி... ரங்கசாமி.. ஜெயலலிதா எல்லாரும் மெளனமாகவே உள்ளனர். எவருமே வீழ்ந்த மக்களுக்காக ஒரு அஞ்சலி நிகழ்வு கூட நடத்தவில்லை. ஆனால் டெசோ என்ற பெயரில் அந்த மக்களின் துயரை வைச்சு அரசியல் மட்டும் செய்கின்றனர்.

 

தமிழினத் துரோகிகளுக்குத் தான் மனிதாபிமானமே இல்லை என்று சொல்லத்தக்க இயங்கும்... டன் ரீவி போல..... கலைஞரின் ரீவிலும்.. குத்துப்பாட்டுத்தான் போகிறது..???! :icon_idea:

இவ்வளவு நாளாக இனத்திற்க்கு எதிரான துரோகத்திற்க்கு பதிலளிக்காமல் விழி பிதுங்கி நின்ற திமுக உ.பா.க்கள் இன்று இனத்திற்காக எடுக்கும் முன்முயர்ச்சிக்கு ஆளும் வர்க்கம் தடை விதித்தவுடன் மகிழ்ச்சியின் உச்சத்திற்க்கே சென்றுவிட்டனர். அவர்கள் நினைப்பெல்லாம் ஒன்றுதான். இதனைத் தொடர்ந்த்து மக்கள்  அதிமுக’வை வீழ்த்துவார்கள், அதன் மூலம் அரசியல் இலாபமடையலாம் என்று மிகவும் ஆர்வமாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

லட்ச்சக்கணக்கில் உறவுகளைப் பறிகொடுத்துவிட்டு ஒரு இனமே இழவு வீட்டில் நின்றுகொண்டிருக்கும் காலகட்டத்தில், “திமுக தலைவர் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்” என்று பேராசிரியர் அன்பழகன் அறிவிக்கிறார் என்றால் எம் தமிழ் இனத்தின் மீது உங்களுக்கு உள்ள பற்றை புரிந்து கொள்ள முடிகிறது. இது போல 2009’ஆம் ஆண்டு மே 18’க்கு பிறகும் சிறிதும் கூச்சமில்லாமல் இதே அறிவிப்பை வெளியிட்டவர்கள் தானே நீங்கள்?

ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் வீழ்ந்து, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நீங்கள் எங்கள் மீது கட்டவிழ்த்து விட்ட அடக்குமுறையை விட பல மடங்கு அதிகமான அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறையையும் சந்தித்தாக வேண்டும் என்று அறிந்தே, உங்களுக்கு மாற்றாக அவர்கள் என்று நாங்கள் அருதவில்லை. உங்களை வீழ்த்த ஒரு கருவியாகவே அவர்களை நினைத்தோம். அது போலவே, அவர்களுக்கு மாற்றாக உங்களை கருதுவோம் என்று கனவிலும் எண்ணவேண்டாம்.

 

திமுக  & அதிமுக இருவரின் வீழ்ச்சியில் தான் எம் இனத்திற்க்கன அரசியல் உள்ளது. எமக்கென்று ஒரு வலிமையான அரசியலைக் கட்டி எழுப்பாது எங்கள் விடுதலை நாங்கள் வென்றெடுக்க இயலாது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறோம்.

 

உங்கள் கல்லறையில் தமிழருக்கான தேசிய அரசியல் கட்டி எழுப்பபடும்.

 

 

கடலூர் புதுச்சேரியில் உள்ளது.. ரங்கசாமி முதல்வர் என நினைக்கிறேன்..

 

தமிழ்நாட்டில்  தான்  உள்ளது இசை....

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா தன்னுடைய வக்கிரத்தை காட்ட தொடங்கி விட்டார்....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில்  தான்  உள்ளது இசை....

 

ஓ.. தவறான தகவல் தந்ததற்கு வருந்துகிறேன்.. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி வேந்தன்..

காஷ்மீர் விடுதலை போராளி - யாசின் மாலிக். மே 18 நினைவு நாளில் பங்க்கேற்ப்பு!

பொலிஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி நடைபெறும்: சீமான்

பொலிஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியினர் கடலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தினை இன்று நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இதற்கு தடை விதிக்க கடலூர் பொலிசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அதில் பேரணி நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

 

காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே: யாசின் மாலிக்
http://bit.ly/19K03lx

 

எனக்கு தெரிந்து தமிழ்நாட்டில் உள்ள உணவகம் முதல் பல ஊர்களில் ஓடும் தானிகள் வரை தமிழீழ தேசியத் தலைவரின் படத்தை தங்கள் அடையாளமாக பயன்படுத்தி வருகின்றனர். பல கோடி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார் தேசியத் தலைவர். இது தமிழக அரசுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் கூட்டத்தை தடை செய்ய இது ஒரு காரணம் இல்லை என்றே உளவுத் துறை மூலமாக வந்த செய்திகள் சொல்கிறது.

 

காஷ்மீர் விடுதலைப் போராளி யாசின் மாலிக் இங்கு தமிழ்நாட்டில் உள்ள கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்ற செய்தி எட்டியதும் அரண்டது இந்திய அரசு. இரண்டு ஒடுக்கப்பட தேசிய இனங்கள் கைகோர்ப்பது இந்திய அரசுக்கு பிடிக்குமா என்ன ? யாசின் மாலிக் கூட்டத்தில் பேசுவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற உத்தரவை மாநில அரசுக்கு நள்ளிரவில் பிறப்பித்தது இந்திய அரசு. மாநில அரசு உடனடியாக தன் கங்காணி வேலையை பார்த்தது. அதனால் தனது ஏவல் படையை வைத்து நெருக்கடி கொடுத்து பொதுக் கூட்டத்தை தடை செய்தது. இதற்கு புலிக் கொடி, பிரபாகரன் படம் என்ற காரணம் தேவைப்பட்டது மாநில அரசு இயந்திரங்களுக்கு. இதனால் தான் நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது, மாநிலங்கள் தன்னாட்சி அதிகாரம் பெறாமல் இந்தியாவில் எந்த தேசிய இனங்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. இந்தியாவின் ஒற்றை ஆட்சியை வீழ்த்துவதே ஒடுக்கப்பட்ட இனங்களின் அடுத்தகட்ட நகர்வாக இருக்க வேண்டும்.

 

(FACEBOOK )

 

 

  • கருத்துக்கள உறவுகள்

may18-srilanka-18.jpg

 

 

அதிமுக எம் எல் ஏ பாலச்சந்திரனுக்கு அஞ்சலி...

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=99626

 

 

thirumavalavan-00001.jpg

 

திருமா அஞ்சலி நிகழ்வில் தேசிய தலைவர்..

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=99632

 

srilanka-chennai-0001.jpg

 

மெரினாவில் அஞ்சலி நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடி..

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=99624

 

 

சீமானைத் தடுத்திட்டால்...................................................................மட்டும்...............

 

இவை தொடர்பான படங்களை ஏற்கனவே யாழில் இணைத்துள்ளேன். இங்கு சென்று பாருங்கள். :rolleyes:

 

கடலூர் நாம் தமிழர் கட்சியினரின் பேனர் அனைத்தையும் நீக்க கூறிய காவல்துறை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&p=899255

 

கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்த நாம் தமிழர் கட்சியினரின் வாகனங்களை மறித்து அவர்களை இரவு 9 மணிவரை தமது காவலில் வைத்த காவல்துறை..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&p=899636

 

காவல்துறைக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே நடந்த வாக்குவாதம். (வீடியோ)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&p=899635

 

பல தடைகளை மீறி சீமான் சீமான் அண்ணாவின் கருத்தரங்கம் தலைவர் படத்துடன் நடந்தது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119014&p=899636

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.