Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் பசு மாடு தன்சல்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
பசு மாடு தன்சல்....  

வெசாக் தினத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் எட்டு குடும்பங்களுக்கு படையினரால் பசு மாடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வெசாக் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் 511ஆவது படையணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில்;, 511 ஆவது படையணின் கட்டளைத் தளபதி ஜெனரல் சமரசிங்க மற்றும் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் மாடுகளை வழங்கி வைத்தனர்.

 

Cow-Dansal.jpg

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4774

 

  • கருத்துக்கள உறவுகள்

மருதடியானே ...........

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டு உரிமையாளரும் நிண்டவரரோ

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி ஊரில கள்ள மாடு பிடிக்கிறவங்க.. அடுத்தவங்க மாட்டை பிடிச்சு கட்டி வைச்சிட்டு.. விடியுறத்துக்குள்ள கசாப்புக் கடைக்காரன் லொறில ஏத்தி அனுப்பிடுவாங்களாம்.

 

இப்ப சனம் அவிட்டு விட்டிட்டுப் போன மாடுகளை ஆமிக்காரன் பிடிச்சுக் கட்டிட்டு.. வெசாக் பெளர்ணமிக்கு..நன்கொடையா கொடுக்கிறான். அங்க எத்தினை சனம் மாட்டைக் காணேல்லை என்று தேடி அலையுதோ..???!

 

எனி மாட்டைத் திருடிறான் ஆமிக்காரன் என்று வழக்குப் போடு போராட்டம் நடத்த வேண்டி  வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

உந்த ஹத்துரு சிங்க.. மாதன முத்தா பரம்பரை போல..! :lol::D

மாட்டு உரிமையாளரும் நிண்டவரரோ

 

மாடு ஒன்று களவு போனால், களவே குடுத்திராதவையல் மாதிரி கவலைப்படுகிறியல்.

 

"ராக்றரரில் கொண்டுவந்து இறக்கிவிட்டு போ" என்று கூறியிருந்தால் வண்டிக்கு வாடகை கூலியும் சேர்த்துதானே குடுத்திருப்பியள்.

 

ஆமி கூடா சில வேளைகளில் கருணையாகத்தான் நடக்கிறான் ஐயா.

:D

 

don't rob Peter to pay Paul

 

இது ஆங்கிலத்தில் மட்டும் தானே.

 

சிங்களத்து பழமொழி.

 

"பேயளுக்கு பயந்தவன் களவெடுத்த பசுமாட்டை தானம் கொடுக்க போகமாட்டான்" :D

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்தான்  என்றாலும் இதில் நம்ம எட்டு குடும்பங்கள் வாழுதே.

நல்லது தான்

Edited by விசுகு

ஒற்றுமையின் மூலமே பெற்றுக்கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் - ஹத்துருசிங்க!

[Friday, 2013-05-24 16:54:42]
Hathurusinghe-120213-seithy-150.jpg

2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றுக்கொண்ட சாமாதானத்தை ஒற்றுமையின் மூலமே பாதுகாக்க முடியும் என்று யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை வெசாக் தினத்தையொட்டி பாதுகாப்பு படைகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற பசுமாடுகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...

  

இன்றைய நாள் ஒரு புனிதமான நாள். இந்த நாளில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இந்த பசுக்களை வழங்குவதில் நான் மகிழ்சி அடைகிறேன். இந்தியாவில் இந்த நாள் ஒரு சிறந்த நாளாக கருதப்படுகின்றது. அதேபோன்று இலங்கையிலும் இந்த நாள் ஒரு புனித நாளாக மாற்றம் அடைந்துள்ளது. சாதி, மதம், இன பேதங்கள் இன்றி வாழவேண்டும் என்று புத்தபெருமான் போதித்திருக்கின்றார். அந்த போதனைகளுக்கு ஏற்ப நாம் எல்லோரும் தமிழ், சிங்கள இன வேறுபாடுகள் இன்றி ஒற்றுமையாக வாழவேண்டும் என்றார். இந்த நாட்டில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறந்த ஒரு சமாதானம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த சமாதானத்தை பாதுகாப்பதற்கு நாங்கள் ஒற்றுமையை உருவாக்கவேண்டும். அந்த ஒற்றுமையின் ஊடாகவே வெற்றிகொள்ளப்பட்ட சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த விடயத்தில் ஊடகங்களும் தேவையற்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்காமல் செயற்படவேண்டும். இன்று உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பசுக்கள் மூலம் உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பிள்ளைகளின் போசாக்கான வாழ்க்கையை நீங்கள் மேம்படுத்திக்கொள்ளவேண்டும் சிலர் பரப்பி வரும் பொய்யான பரப்புரைகளுக்கு மக்கள் ஒருபோதும் அஞ்சாமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் முரளிதரன் உரையாற்றும் போது, யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் அளப்பெரிய சேவைகளை மக்களுக்கு ஆற்றி வருகின்றனர். குறிப்பாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி அவர்கள் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மீள்குடியேற்றம் போன்ற விடயங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று குறிப்பிட்டார்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள்தான் எங்களுக்கு தெரிந்த சிங்களம் மாறக்காமல் இருக்க அப்படி இப்படி ஒன்று இரண்டு சிங்கள சொற்கள் எழுதினால்- தெரிந்ததே ஒரு 30/40 சொல்தான் என்பது வேற கதை- என்ன தேவைக்கு பசு மாடு தன்சல் என்று எழுதுகிறார்கள்? ஒரு மூத்த பத்திரிகைக்கு  இது அழகல்ல

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.