Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கச்சதீவு அருகே போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ள இலங்கை இராணுவம்!

Featured Replies

   

    கச்சதீவு அருகே போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ள இலங்கை இராணுவம்!

[Thursday, 2013-05-30 19:20:39]
ship-seithy-20121028-150.jpg

கச்சத்தீவு அருகே இலங்கைப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய நாட்டுப் படகு மீனவர்கள் கூறியுள்ளனர். கடந்த 45 நாட்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம் நேற்று மே.29ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், ராமேஸ்வரத்தைத் தவிர்த்த மற்ற பகுதி மீனவர்கள் இன்றே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். ஆனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வரும் சனிக்கிழமைதான் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இந்த நிலையில், இன்று மீன்பிடிக்க நாட்டுப் படகில் கடலுக்குச் சென்ற தங்கச்சி மடம் மீனவர்கள் சிலர் கரை திரும்பிய பின்னர் கூறுகையில், இலங்கை ராணுவம் கச்சத்தீவு அருகே 4 போர்க் கப்பல்களை நிறுத்தியுள்ளது. மேலும், 5 சிறிய ரோந்துக் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கச்சத்தீவு பகுதியைச் சுற்றி மிதவை பலூன்கள் அதிகம் வைக்கப்பட்டுள்ளன.

  

பொதுவாக விசைப்படகு மீனவர்கள் இரட்டை மடி வலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவர் என்பதால் அதிகம் கண்காணிப்பார்கள், அவர்களை இலங்கை ராணுவத்தினர் அடித்து விரட்டுவார்கள். ஆனால், நாட்டுப் படகு மீனவர்களை பெரிதும் தடை செய்வதில்லை. ஆனால், இந்த முறை நாட்டுப் படகு மீனவர்களையும் இனிமேல் இங்கே மீன் பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்கள் என்றனர். இந்தத் தகவல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 நாட்கள் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் செல்லும் இந்த நேரத்தில், கச்சத்தீவு பகுதியில் இலங்கை ராணுவம் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ள செயல் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

 

 

 

http://www.seithy.com/listAllNews.php?newsID=83917&category=TamilNews&language=tamil

 

 

  • கருத்துக்கள உறவுகள்

   

    கச்சதீவு அருகே போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ள இலங்கை இராணுவம்!

[Thursday, 2013-05-30 19:20:39]
ship-seithy-20121028-150.jpg

, கச்சத்தீவு பகுதியில் இலங்கை ராணுவம் போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ள செயல் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

 

 

 

http://www.seithy.com/listAllNews.php?newsID=83917&category=TamilNews&language=tamil

 

 

அச்சமில்லை அச்சமில்லை ,இந்தியாவின் உச்சி மீது சிறிலங்கா இராணுவம் தளம் அமைப்பினும் அச்சமில்லை அச்சமில்லை....என பாரதி பாடலை பாடி கொண்டு மீன்பிடிக்க செல்லவும்......
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசு ஒன்றுமே செய்யாது. தமிழ் நாட்டு மீனவர்கள் உங்கள் வழியை நீங்கள் தான் பார்க்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ராணுவம் கச்சதீவில் போர்கப்பல்களை  நிறுத்தி வைத்திருப்பதான செய்தி உண்மையல்ல..- ஏ.கே சாம்பிராணி.

 

Biryani.jpg

 

 


இலங்கை ராணுவம் கச்சதீவில் போர்கப்பல்களை நிறுத்தி வைத்திருப்பதாக  கூற படும் குற்றசாட்டில் சிறதளவும் உண்மையில்லை அவை சாதாரண மீன் பிடி படகுகளாகும். எனினும் தமிழநாட்டில் எழும் எதிர்ப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச(சொறி சாப்பிட ) ஒரு புரியாணி குழுவை நியமித்து உள்ளது. அவர்கள் இது குறித்து ஆய்வு செய்து(சொறி இலங்கை சென்று புரியாணி சாப்பிட்டு .. அஜால் குஜால் வேலைகளை ) முடித்து அறிக்கை வெளியிட்ட உடன்  அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கபடும் என மத்திய மந்திரி ஏ.கே சாம்பிராணி  இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்..

செய்தி மூலம்..   டக்ளக்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவே கப்பலும் கொடுக்குது. இந்தியாவே பயிற்சியும் கொடுக்குது. இந்தியாவே அடியும் வாங்குது..! இப்படி இருக்கு இந்தியாவின் இறையாண்மையும்.. நட்பின் தார்ப்பரியமும்..! :lol::D

இந்தியா பயத்தில் தனது போர்க்கப்பல்களை பாகிஸ்தானிடம் கொடுத்தாலும் கொடுத்துவிடும்! :D

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.