Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூவால் குருவி - மறு வாசிப்புக்காக - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1996ல் சரிநிகரில் வெளிவந்தபோது பெண்போராளிகளதும் சமூக ஆர்வலர்களதும் பாரட்டைப் பெற்ற இக் கவிதை மறு வாசிப்புக்காக

 

 

 

பூவால் குருவி

 

 

 

நெஞ்சுக்குள் தொலையாதிருந்து
ஒரு சிற்றாறாய் ஊருகின்ற
என் முதல் காதல் பெட்டை
 
ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி.
பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில்
வன்னிக் கிராமத் தெருவொன்றில்

வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும்
பொன் சருகை கலையா முகமும்
இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய்
போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு
போட்டிச் சிறு நடையில்.
அது என்ன போட்டி.

காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய்.
அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய்.
என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில்
இன்று நீ அன்னை.

நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும்.
ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான்.
இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும்
குளக்கரையின் மான் குட்டி.

நானுமுன் நெஞ்சத்தில் சிற்றாறா.
இன்னும் காலில் விழுந்து கையேந்தி இரக்கின்ற
திருட்டுச் சிறு பயலா.
அஞ்சி அஞ்சி நாங்கள் அன்று
உடற் கடலில் கை நனைத்து கால் நனைத்து
நீந்த முயன்றதெல்லாம் எண்ணில்
மேனி இன்பத் துணுக்குறுதே.

எறிகுண்டாய் வானத்தியமன்
கூரை பிரித்துன் பின்வீட்டில் இறங்கிய நாள்
உன் முன்வீட்டுப் பிள்ளை தொலைந்தாளாம்.
பின் ஒருநாள் ஊர் காண
காக்கி உடையோடு வந்து காட்டோரம் பூப்பறித்து
கூந்தலிலே சூடி நடந்தாளாம்.
தெருவெல்லாம்
நீ உனது பூப்படைந்த பெண்ணின் காவலிலே
நிழலாய் திரிகிறியாம்.
இது பெருங்காவல்.
எல்லாம் அறிந்தேன்.

எங்கிருந்தோ வந்து
நம் தெருவோர மரக்கிளையில் குந்தி
தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த
 
அந்தக் குருவியைப் போல்
காணாமல் போனதடி காலங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பல நினைவுகளை மீட்டி உண்மைகள் சொல்லும் கவிதை அருமை அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை அருமை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 மொசபதோமியா சுமேரியருக்கும், லியோவுக்கும், இணையவனுக்கும் நன்றிகள்..

 

கவிதைகள் பல அன்றாட/ சமகாலத் தேவைகளுக்காக எழுதப்படுபவை வேருசில  காலத்தின் சாட்ச்சியாக நிலைக்கவும் நூறு நூறாண்டுகள் மீழ பிரசுரிக்கப் படுவதற்காக எழுதப்படுபவை. கால மாற்றங்களோடு அனைந்துவிடாமல் புதிய காலங்கலின்மீது ஒளியைப் பாச்சுகிறவையாக மேம்பட வேண்டும்.. 

 

என்னுடைய பல கவிதைகள் 2வது வகை நோக்கங்களோடு எழுதப்பட்டவை. மறு வாசிப்பில் இன்னும் அவை இளமையுடனும் இசைவுடனும்  இன்றைய புதிய காலக்கட்டத்திலும் அர்த்தப் படுகிறதா என்பதை நீங்களும்தான் சொல்லவேண்டும்.கலை இலக்கிய உலகில்  மறுவாசிப்பு முக்கியமான இலக்கிய செயல்பாடாக மாறிவருகிறது. இனையவனும் இதனை கவனிக்க வேண்டும் என கோருகிறேன்.

 

பாலியாறு நகர்கிறது, நெடுந்தீவு ஆச்சிக்கு இரண்டுகவிதைகளும் ஆயிரம் வருடங்களுக்குப்பின்னும் நமது சந்ததிகளோடு பேசும் அல்லவா?. இந்த பின்னணியில் பூவால் குருவி எப்படி அமைந்துள்ளது.

Edited by poet

ஜெயபாலனுக்கு ஒரு மடல்!

ஜெயபாலனுக்கு

காலம் சிறிது, கட்டுரைக்கு நேரமில்லை, ஆதலால் உன்னை விளித்து இந்தக் கடிதம் வரைகிறேன்,

1968 இல் என் கிராமத்தில், என் பட்டினத்தில் உன்னை நானே கண்டுபிடித்தேன்.

ஆலமரங்கள் அயலில் குழும் என் கோயில் வெளியின் வெள்ளை மணலில் அமர்ந்து அன்புஜவர்ஷா வெளியிட்ட பல கவிஞர்களின் தொகுப்பைப் படிக்கையில் நீ பிடிப்பட்டாய்.

நம்பிக்கை என்னும் கவிதையின் ‘மாரிதனைப் பாடுகிற வன்னிச் சிறுவன்’ என் மனதுக்குள் புதைந்தே விட்டான், நான்தான் உன்னை – உன் கவிதையை – என் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். பின்னர் 74, 75 இல் நான் கொழும்பில் வசித்தபோது, உன்னை வெள்ளவத்தையில் கலாநிதி கைலாசபதியின் வீட்டில் சந்தித்தேன். பல்கலைக்கழகப் பிரவேசம் கிடைக்குமா என அங்கலாய்த்துக் கொண்டிருந்தாய். ரொம்ப பனித்தனமாக பேசுகிறாயே என நான் வினோதப் பட்டது நினைவிருக்கிறது.

பின்னர் அலையில், உன் ‘இளவேனிலும் உழவனும்’ பார்த்தேன். மிகவும் ரசித்தேன். பனியன் என்றாலும் நீ நல்ல கவிஞன் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். பின்னர் உன் வியட்நாம் கவிதை ஒன்றைப் பார்த்தேன். புல்வெளிப் பூக்கள் என்று நினைக்கிறேன். வியட்நாம் கிராம்ம் ஒன்றை விபத்திருந்தாய். அது எப்படி முடிந்தது உன்னால் என்று ஆச்சரியப்பட்டேன். கவிதையில் சொந்த அனுபவத்தை சுடச்சுட, மிகையதார்த்த எல்லை வரையில், தர வேணும் என்று நான் துடித்துக் கொண்டிருந்த காலம் அது. சுய அனுபவம் இல்லாமல், வியட்நாம் கிராம்ம் என்ற விளம்பரத்துடன் போலி பண்ணியிருக்றாயே எனப் புகைந்தேன். பின் நீ அமெரிக்காவையும், பிராங்போர்ட்டையும் கண்டவன் மாதிரி கவிதைகள் எழுதியபோது நீ அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் போகவில்லை என்பதும், யாழ். பல்கலைக்கழகதில் படித்துக் கொண்டோ அல்லது படித்து முடிந்த பின் NGO ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாய் என்பதும் எனக்குத் தெரியும். நேரடிய அனுபவம் இல்லாமலே சோடிக்கக் கூடியவன் என்பதை நான் விசனத்துடன் புரிந்து கொண்டேன். நீ அந்த யப்பானியப் பெண்ணைஇ ஆரிமக்சி மோட்டோவை முத்தமிட்டேன் என்று சொல்வதும், புணர்ந்தேன் என்று சொல்வதும் கூட சோடிப்புத்தானே என்றும் பின் யோசித்தேன். உனது நேரடி அனுபவங்களுக்கும், அனுபவச் சோடிப்புக்களுக்கும் இடையில் எப்படி வேறுபாடு காண்பதென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. எனினும் உன் நேரடி அனுபவத் தளத்தை இப்போதும் மறுக்கவில்லை. உண்மையும, போலியும், அசலும் நகலும் பேதமறக்கலந்த ஒரு Personality நீ என்னும் ஒரு கருக்கோளில் – கருகோள்தான் – இயங்கிக் கொண்டிருக்கிறேன். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லக் கூடியவன் நீ.

பின்னர் நான் உன்னை கண்டது 2000 ஆண்டளவில் என்று நினைக்கிறேன். உமாவின் வீட்டில் சந்தித்தேன். பின் என் வீட்டுக்கும் வந்தாய். எமது பட்டினத்தில் எல்லா எழுத்தாளர் வீட்டுக்கும் போனாய். குறுந்தாடியும், குர்தா பிஜாமாவுமாய் ஒரு சோணிப் பையுடன் காட்சி தந்தாய். நாடோடி அகதிக்கு அது நல்ல வேஷமாகவே பட்டது. உன்னைப் பற்றி ஏற்கனவே கதைகள் புறப்பட்டிருந்தன. உனக்கு இயக்கப் பிரச்னை உண்டென்றும் மருதூர்க்கனியின் அறிக்கைகள் போல் கவிதை எழுத்த் தொடங்கிவிட்டாய் என்றும், வடக்கிலிருந்து முஸ்லீம் மக்கள் வெறியேற்றப்பட்டதில் மனம் குழம்பி, காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி கதறித் திரிகிறாய் என்றும் கேள்விப்பட்டிருந்தேன். நீ எல்லா இன மக்களுடனும் எறவாடுபவன் என்பதைக் குறிக்கும் உனது கவிதைகள் எனக்குத் தெரியும். ஆரிமக்சி மோட்டோவுடன் மாத்திரமல்லாது, வேறு சர்வதேசப் பெண்களுடனும் கலந்து கொள்பவன் என்பதைக் காட்டும் உன் கவிதைகளும் உண்டு. கடைசியாக உன்னுடைய அந்தக் கவிதையைப் பார்த்தேன். ‘’உங்கள் தொழுகை பாயில் புணர்ந்தோம், மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம், எச்சில கையை துடைப்பதற்காக உங்கள் புனித நூல்களைக் கிழித்தோம்….’’ என வரும் வரிகளையும் படித்து மிகவும் நொந்து போயிருந்தேன். அந்தச் சமயத்தில்தான் நீ வந்தாய், என் மகத்தான ஊருக்கு, மரியாதைக்காக மட்டும் உன்னுடன் பேச வேண்டியதாயிற்று.

வடக்கிலிருந்து முஸ்லீம் மக்கள், தங்கள் பெறுமதியான சில உடைமைகளைக்கூட எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் வழி அனுப்ப்ப் பட்டார்கள் என்பது மிகவும் துரதிஷ்டமான, பெரும் அதிர்ச்சி தந்த, நம்ப முடியாதிருந்த ஒரு சம்பவம். ஒரு சமூக மக்கள் நிர்க்கதியாக, காலவரையறையற்று குனித்துள் தள்ளப்படுவது எவ்வளவு அனர்த்தம் என்பதை கடந்த பல ஆண்டுகளாக கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் இது போரின் ஒரு விளைவு. இதில் எந்தவிதமான போரியல் தந்திரோபாயம் இருந்த்து என்று நான் சொல்வதற்கில்லை. இதிலுள்ள மூலோபாய் முடிச்சு தவறவிடப் படுகிறது. அந்த முடிச்சு தெரிந்தாலும் சிலர் அதை காண மறுக்கிறார்கள். அவர்களுள் நீயும் ஒருவன். ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டி விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான சர்வதேசப் பிரச்சாரத்தின் பின்னல் வலையின் கண்ணியாக நீ உன் பங்கைச் செலுத்துகிறாய். அல்லாவிட்டால், உங்கள் தொழுகைப் பாயில் புணர்ந்தோம், மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம் என்று தூஷனமாக எழுதியிருக்க மாட்டாய். உருவகம் என்ற போர்வைக்குள், இலக்கிய உத்தி என்ற போர்வைக்குள் உன் கபடத்தனத்தை கவனியாமல் விட நான் தூய இலக்கியவாதியும் அல்ல, நுனிப்புல் மேயும் விமர்சகனும் அல்ல. தொழுகைப் பாயிலும், மீசான் கட்டையிலும், திருக்குர்ஆனிலும் எனக்குள்ள புனித உணர்வின் காரணமாகவே, உன் வரிகள் அசிங்கமானவையாகவும் அசூசையானவையாகவும் எனக்குப்படுகின்றன.

உனது முதல் தொகுதியான ‘’சூரியனோடு பேசுதல்’’ செல்லரித்துப் போயிற்று. ஒற்றைகள் தோறும் இதயத்தின் அளவான ஓட்டைகள், சூரியனோடு பேசுதல் ஐ மீண்டும் ஒருமுறை வாசித்தல் அவசியமில்லை போலும் தெரிகிறது. ஏனெனில் காலக் கணக்கின்படி சூரியனோடு பேசுதல் முதலாவதாக அல்ல, இரண்டாவதாக வந்திருக்க்க் கூடியது. மூத்தபெண் இருக்க இளைய பெண்ணை ஏன் அரங்கேற்றினாயோ தெரியவில்லை. மாப்பிள்ளைக்கேற்ற பெண் என்று அவளையே தெரிவு செய்தாயா? மாப்பிள்ளைதான் உனக்கு முக்கியமாகப் போயிற்றோ? அதுபோக, ஈழத்தில், வன்னியில், வாழாவெட்டியாக இருந்த உனது மூத்த மகளை – ‘நமக்கென்று ஒரு புல்வெளி’ என்னும் அழகிய ஈழத்தில் கைப்பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். சூரியனோடு பேசுதலைவிட நமக்கென்றோரு புல்வெளியே உனது முத்திரையையும் மூர்த்தத்தையும் கூடுதலாக்க் கொண்டதாக கொண்டாடுகிறேன், உனது முத்திரை என்ன? உனது மூர்த்தம் என்ன?

கணிசமான கருப்பொருட்களை உனது கவிதைக்குள் கொண்ர்கிறாய். கருப் பொருட்களின் பகைப் புலத்தில் உன் கவிதை விரிகிறது. கருப்பொருட்களின் ஊடுபாவலில் உன் இருப்பு கவிதையாகிறது. நீயே ஓரிடத்தில் சொல்வது போல், மனிதர்களுடன் மட்டும் வாழ்வதென்றால், நீ எப்போதோ சலிப்புற்றிருப்பாய். உன்னையும் நீ காண்கின்ற எல்லா மனிதர்களையும் சூழ நீ காண்கின்ற பயிர் பச்சை, கடல், மலை, வானம், நட்சத்திரம் எல்லாம் உன் வாழ்வுலகத்தினதும், உணர்வுலகத்தினதும் படைப்புலகத்தினதும் பங்கும் பாதியுமாய் இருக்கின்றன. இதன் தோற்றுவாய் உன் வன்னிக் களமாக இருக்கலாம். வன்னியின் இயற்கை மூர்த்தத்தில் உன்னுள் புகுந்த சங்க்கால படைப்புகளாக இருக்கலாம் எப்படி இருந்தாலும் விண்ணோடும் மண்ணோடும் சேர்ந்து இயல்கின்ற சிருஷ்டித்துவம் உன் முத்திரை. இந்த முத்திரைதான் உன்னைப் பிறருக்கும் இணங்காட்டியது. இதிலிருந்தே உனது பறப்புகள் உருவாயின. உனது பறப்புகளில் சில பாலை வனங்களில் போய் முடிந்திருக்கின்றன.

பாலைகளில் நீ இடைக்கிடை வீழ்ந்து கொள்வதை உனது ‘உயிர்த்தெழுகின்ற கவிதையில்’ காண்கிறேன். உனது உயிர்த்தெழுந்த கவிதை தொகுதியில் நீ நிச்சயமாய் உன் வேர்களை இழந்து விட்டிருக்கிறாய். இயற்கையின் செல்வக் குழந்தையாய் வளர்ந்த நீ, அதே இயற்கைச் சூழலில் துப்பாக்கி தூக்கி விடுதலை உணர்வுடன் மிளிர்ந்த நீ, பின்னர் கொங்கிறீட் காடுகளிடை வாழநேர்ந்த துயரக்கதை அது. வன்னி உனக்களித்த கருப்பொருட்களை வர்த்தகமயமான கோவையோ, சென்னையோ, துருவப் பனி உறையும் நோர்வேயோ உனக்களிக்க முடியவில்லை. அதனால் நீ செயற்கை படிமங்களையும் உருவகங்களையும் தேடுகிறாய். ‘உயிர்த்தெழும் கவிதை’ இல் இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

யானை என்னும் கவிதையில் நீ கவிதைக்குச் சிறகுகட்டி நீ உன்னை மலைக்கழுகாக உருவகம் செய்கிறாய். அப்போதுதான் நீ உன் உப்பு நீர்க்கரைகளை விமானக்கண் கொள்டு பார்க்கலாம். மாயாவாத யதார்த்த உருவகத்தில் ஆனந்தனை மரமாகக் காண்கின்றாய். முருகன் வேங்கை மரமானதெல்லாம் பழைய கதை அல்லவா? மரியம் வேம்புவில் ஐதிக முறையை அரவணைக்கிறாய். ‘’பூவால் குருவி’’ இலும், ‘’பொன்னியை தேடி’’ இலும் படிமச் சோடனைக் கொண்டு பலப்படுத்துகிறாய். ‘’உயில்’’ வரும் தலையாரிகள், கோயில் மடாதிபதிகள் போன்ற உப்புச் சப்பற்ற பழைய உருவகங்களும் குறியீடுகளுமே உனக்கு கை தரத் தொடங்ஙகியுள்ளன. இந்திய குறியீடான கோவை உன் ஆருயிர் காதலி ஆகும் உறவை காண்கிறேன். இந்தியாவிலேயே ஆருயிர் காதலாய் இருக்கிறாய் என்று இதன் அர்த்தம். ‘நீயே பளிச்சென சீவி பொன்பூண் பொருத்தி அழகு பார்த்த கூரிய எனது கொம்பை அசைத்துன் மார்பில் பாய்ந்தேனே’ என்ற உன் உருவகம் ‘வளர்ந்த கடா மார்பிலே பாய்தல்’ என்பதன் அடியானதல்லவா? பூடகமாக நீ யாரைச் சாடுகிறாய், யாரைப் போற்றுகிறாய் இந்த உருவகங்கள் மூலம் என்பதை யாருக்கு நீ தெரியப்படுத்த முனைகிறாய்? வன்னியில் நேர் தரிசனத்தின் வண்ணாத்துப் பூச்சியாக, இயக்க செயற்பாடுகளில் சொகுசு வாழ்க்கையைப் புறக்கணித்த உனது ஆரம்பம் எங்கே? – தலைமறைவான தேசாந்திரியாய் உருவகங்களிலும் குறியீடுகளிலும் ஒளிந்து கொள்ளும் உனது முடிவு எங்கே?

என் பார்வையில் புது அனுபவங்களைப் பெற்றுக் கொண்ட உனது தனித்துவ வெளிப்பாடு உனது ‘’எமக்கென்றொரு புல்வெளி’’ உடன் போய் விட்டது, மற்றதெல்லாம் ஊரார் சோற்றுக்குள் மாங்காய் பிசையும் கழிவிரக்கங்களே. உனது அகதிப் பாடல்களில் நீ எதைச் சொல்கிறாய்? புலம் பெயர்ந்த தவிப்புக்ளையும், தலைமறைவான அச்சங்களையும், பலூன் ஊதிக் காட்டினால் போதுமா? சிறிலங்கா ராணுவத்தின் அட்டூழியங்களை அள்ளிக்கொட்டும் நீ, இந்தியப் படையின் அட்டூழியங்களைப் பற்றிய ஒரு அட்சரத்தை பதிக்கவும் உன் பேனாவை நகர்த்தியதுண்டா?

உள்ளும் புறமும் உன்னைப் பற்றி அறியவும் சொல்லவும் காலம் இன்னும் காத்திருக்கிறது.

 

http://aboutshanmugam-sivalingam.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-2/

 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
அமரரான கவிஞர் சண்முகம் சிவலிங்கம் அவர்களுக்கு எனது அஞ்சலிகள்.
 
காட்டில் புலிகளும் அவைக் களத்தில் சில புலவர்களும் ஆழ்புலத்துக்காக (Teritory) முரண்பட்டு மோதிய கதைகள் உலகம் முழுவதிலும் உள்ளன. ஒட்டக்கூத்தர் புகழேந்தி கம்பன் பற்றி கர்ணபரம்பரைக் கதைகள் உலாவுகிறது நீங்கள் அறிந்ததுதானே.
 
2010ல் ஆடுகளம் வெளிவந்தபின்னர் எனக்குக் கிடைத்த விளம்பரம் எனக்கும் இத்தகைய புதிய சிக்கல்களை உருவாக்கியது.. 
பனியன் போன்ற பதங்களையே கவிஞர் சசி  பயன்படுதியிருப்பது அவர் மனநிலையைக் காட்டுகிறது.
 
அதுசரி ஆழ்புல (Teritory) சிக்கலில் புலியைப் பார்த்து இன்னொருபுலி கர்சிக்கிறது.  ஆனால் ஏன் ஒரு குள்ள பூனை நானும் கூட என்பதுபோல  எட்டி நின்று வாலை நிமித்துது?
 
யாழ்கள தோழ தோழியர்கள் யாருக்காவது புரிந்தால் சொல்லுங்கள்

Edited by poet

சரியான பதம் தான் பாவிக்கபட்டிருகிறது. ஒருவரின் இனமே அழிய வேண்டும் என்று வெறித்தனமாக திட்டுபவர்கள் அங்கொடையில் மட்டும்தான் இருக்க வேண்டும்.  இது வரையில் எந்த ஒரு பந்திலும் கருதாளர்களை சரியாக விளிக்கத் தெரியாதவர் அவர்களை சந்திக்கும் போது நடந்து கொள்ளும் வெறித்தனதை சரியாக அளவிட்டு சொல்லியிருக்கிறார்.

 

அவர் காலமாகிவிட்டத்தால் பொய்யட்டு நல்ல சந்தர்ப்பம். அதனால் அவரின் வாக்கை மறுக்க பார்க்கிறார்.

 

ஆனால் அதில் அதுமட்டுமால்ல சொல்லியிருப்பது.

 

சுய அனுபவம் இல்லாமல், வியட்நாம் கிராம்ம் என்ற விளம்பரத்துடன் போலி பண்ணியிருக்றாயே எனப் புகைந்தேன்

நீ அந்த யப்பானியப் பெண்ணைஇ ஆரிமக்சி மோட்டோவை முத்தமிட்டேன் என்று சொல்வதும், புணர்ந்தேன் என்று சொல்வதும் கூட சோடிப்புத்தானே

குர்தா பிஜாமாவுமாய் ஒரு சோணிப் பையுடன் காட்சி தந்தாய். நாடோடி அகதிக்கு அது நல்ல வேஷமாகவே பட்டது. உன்னைப் பற்றி ஏற்கனவே கதைகள் புறப்பட்டிருந்தன.

 

கடைசியாக உன்னுடைய அந்தக் கவிதையைப் பார்த்தேன். ‘’உங்கள் தொழுகை பாயில் புணர்ந்தோம், மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம், எச்சில கையை துடைப்பதற்காக உங்கள் புனித நூல்களைக் கிழித்தோம்….’’ என வரும் வரிகளையும் படித்து மிகவும் நொந்து போயிருந்தேன்.

 

இந்த முத்திரைதான் உன்னைப் பிறருக்கும் இணங்காட்டியது. இதிலிருந்தே உனது பறப்புகள் உருவாயின. உனது பறப்புகளில் சில பாலை வனங்களில் போய் முடிந்திருக்கின்றன.

 

உனது உயிர்த்தெழுந்த கவிதை தொகுதியில் நீ நிச்சயமாய் உன் வேர்களை இழந்து விட்டிருக்கிறாய். இயற்கையின் செல்வக் குழந்தையாய் வளர்ந்த நீ, அதே இயற்கைச் சூழலில் துப்பாக்கி தூக்கி விடுதலை உணர்வுடன் மிளிர்ந்த நீ, பின்னர் கொங்கிறீட் காடுகளிடை வாழநேர்ந்த துயரக்கதை அது.

 

என் பார்வையில் புது அனுபவங்களைப் பெற்றுக் கொண்ட உனது தனித்துவ வெளிப்பாடு உனது ‘’எமக்கென்றொரு புல்வெளி’’ உடன் போய் விட்டது, மற்றதெல்லாம் ஊரார் சோற்றுக்குள் மாங்காய் பிசையும் கழிவிரக்கங்களே.

 

சிறிலங்கா ராணுவத்தின் அட்டூழியங்களை அள்ளிக்கொட்டும் நீ, இந்தியப் படையின் அட்டூழியங்களைப் பற்றிய ஒரு அட்சரத்தை பதிக்கவும் உன் பேனாவை நகர்த்தியதுண்டா?

 

உள்ளும் புறமும் உன்னைப் பற்றி அறியவும் சொல்லவும் காலம் இன்னும் காத்திருக்கிறது.

 

 

இந்த கடைசி வசனம் மிகவும் வருத்தம் தருவது.  பொய்யட்டை பற்றி தெரிந்தவன் ஒருவன் சரியா சொல்லிவைக்க வேண்டும் என்று விரும்பிய போது அந்த கண்ணியமான ஒளி நட்சத்திரத்தையும் கடவுள் பறித்துவிட்டார்.  இந்த கோமாளிகள், அவரால் பனியன் என்று அழைக்கபட்டவர்கள், தன்னை அவருக்கு சமமாக காட்டப் பார்த்து அவரையும் பனியர் ஆக்க பார்க்கிறார்கள்.

 

குர்ரானை பற்றி எழுதியிருப்பது சரியான கைகளில் பட்டால் அந்த சுதி பைத்தியதை பாக்குவெட்டி கொண்டுவந்துதான் மாற்றுவார்கள்.  அவர்கள், தமிழர்களை போல, இலகுவாக திட்டிவிட்டு ஒட விடமாட்டர்கள். அப்படியான வசனங்களை அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள்மாட்டார்கள்.

உள்ளும் புறமும் உன்னைப் பற்றி அறியவும் சொல்லவும் காலம் இன்னும் காத்திருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சூரியன். தர்மத்தின் தோணியில்தான் காலச் சுனாமிகளை நான் கடந்து வந்திருக்கிறேன். இனி எனக்கு சாவில்லை.

 

1996ல் இருந்து 2006 வரை ஒரு வருடம் தப்பாமல் என் பெரும்பாலான காலங்கள் வன்னியிலும் ஈழத்திலும்தான் கழிந்திருக்கிறது. 2006ல் தாரக்கி கொலையுண்டபின்னர் புலிகளும் முஸ்லிம் தலைவர்களும் தொடர்ந்து வற்புறுதிய அடிப்படையிலேயே நான் என் ஈழப் பயணத்தை கைவிட்டேன். புலிகள் ஆவனங்களை அழிக்காமல் இராணுவத்திடம் பறி கொடுத்ததால் பாதிக்கப் பட்டவர்களுள் நானும் ஒருவன். அதனால்தான்  இன்றுவரை ஈழத்துக்கு போககக்கூடிய சூழல் இல்லை. 

 

புலிகள் தொடர்பாக வன்னியில் வைக்காத விமர்சனத்தை வேறு எங்கும் வைத்ததில்லை. நான் முகமூடிபோட்டு விமர்சிக்கும் கோழையாக ஒருபோதும் இருந்ததில்லை. என் துணிச்சலும்  என் இரானுவ புவியியல் அரசியல் ஆய்வுகளும்தான் என்னை மாவீரர்கள் வீரார்கள் மதிக்கும் சூழலை ஏற்படுதியது.

 

ஜெயசுக்குறு வெற்ரியின்பின்னர் நான் பாராட்டப்பட்டதை இன்று உயிரோடிருக்கும் முக்கியமானவர்கள் அறிவார்கள். இவைபற்றியெல்லாம் என் புத்தகத்தில் விரிவாக எழுதுவேன். நான் ஒருபோதும் கோழையாக இருந்ததில்லை.

 

கருணா பிரிந்தபோது கிழக்குமாகான உறுப்பினர்களைச் சுட பிரபாகரனுக்கு மக்கள் ஆணை இல்லை. கிழக்குமாகான உறுப்பினர்களை வீட்டுக்கு போக ஆணையிடவேண்டும்  என்ற என் அறிக்கையை தற்போது லண்டனில் இயங்கும் குளோபல் நியூஸ் குருபரன் சூரியன் fm ல் வெளியிட்டார் (லண்டனில் இருக்கிறார் விசாரிக்கலாம்) வீரகேசரியும் வெளியிட்டது. என் நண்பர்கள் உறவுகள் யாவருமே எனக்கு ஆபத்து ஏற்படுமென்று அஞ்சினார்கள். பலர் தடுத்தும் நான் கேட்க்கவில்லை. உடனடியாக வன்னிக்கு சென்றேன்.என் உயிரல்ல  கிழக்கு மாகாணத்தில் ஒரு இரத்தக்களரி ஏற்படுவதைத் தடுப்பதுமட்டுமே என் கவனத்தில் இருந்தது.  வன்னியில் வளமைபோலவே என்னை வரவேற்றார்கள் புலிகளுக்கு இராணுவ இழப்பு ஏற்படாதவகையில் இரத்தக்களரியை தடுப்பது பற்றி மட்டுமே நாம் பேசினோம். இந்த அறிக்கையை வானொலியில் கேட்ட பேராசிரியர் மவுனகுரு யாழ்பாணத்தைச் சேர்ந்த மனிதன் என என்னை வாழ்த்தியதாக பின்னர் அறிந்தேன். . 

 

இதுபோலவே பொட்டம்மான் பற்றிய என் பேட்டி ஒன்றுக்குப்பின்னர் வன்னி சென்றபோது நிலாந்தனும் திருமாஸ்ட்டரும் எனக்கு ஆபத்து நேரலாம் என அஞ்சினார்கள். ஆனால் புலிகள் என்னுடைய பேட்டியில் அழுத்திய விடயங்கள் பற்றி மேலும் ஆலோசனை செய்தார்கள். (திருமாஸ்ட்டர் நிலாந்தனையும் கேட்க்கலாம்). இந்த மட்டத்தில் இருந்து சாக்கடைகளின் மட்டத்துக்கு இறங்கிவந்து பதில் சொல்வதை இனி ஒருபோதும் கைக்கொள்ள மாட்டேன்.

என் கவிதைகளில் நான் வைத்த  விமர்சனங்கள் பற்றி அவர்கள் கேழ்வி கேட்டதில்லை. பதில்மட்டும்தான் கூறி இருக்கிறார்கள். என் தொடர்பான புலிகலின் நிலைபாடு இப்படி இருக்க அவர்கள் பெயரால் என்னை கேழ்வி கேட்க்க இந்த முகமூடிப் பூனைகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? 

 

சங்க புலவர்கள்போல எனக்கும் தர்மம்தான் எனது பலம். 

 

 

நான் சங்க கால புலவர்களின் அசாத்திய துணிச்சலுடன் எங்கள் மண்ணின் வீரமைந்தர்களோடு பணியாற்றியவன். இந்த அருவருக்கத்தக்க முகமூடிக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் கோழை  பூனைக்கு நான் பதிலெழுத என் தமிழை என் நேரத்தை இனி ஒருபோதும் விரயமக்கமாட்டேன்.

Edited by poet

நான் முகமூடி இல்லாமல் நேருக்கு நேர் நிற்கிறேன் புலவரே ,,,,,,,தாங்கள் என்னை அப்படி குறிப்பிடுவது  பொருத்தமற்றது புலவரே ............... :lol: 

1996ல் இருந்து 2006 வரை ஒரு வருடம் தப்பாமல் என் பெரும்பாலான காலங்கள் வன்னியிலும் ஈழத்திலும்தான் கழிந்திருக்கிறது. புலிகள் தொடர்பாக வன்னியில் வைக்காத விமர்சனத்தை வேறு எங்கும் வைத்ததில்லை. நான் முகமூடிபோட்டு விமர்சிக்கும் கோழையாக ஒருபோதும் இருந்ததில்லை. என் துணிச்சலும்  என் இரானுவ புவியியல் அரசியல் ஆய்வுகளும்தான் என்னை மாவீரர்கள் வீரார்கள் மதிக்கும் சூழலை ஏற்படுதியது.

 

ஜெயசுக்குறு வெற்ரியின்பின்னர் நான் பாராட்டப்பட்டதை இன்று உயிரோடிருக்கும் முக்கியமானவர்கள் அறிவார்கள். இவைபற்றியெல்லாம் என் புத்தகத்தில் விரிவாக எழுதுவேன். நான் ஒருபோதும் கோழையாக இருந்ததில்லை.

 

கருணா பிரிந்தபோது கிழக்குமாகான உறுப்பினர்களைச் சுட பிரபாகரனுக்கு மக்கள் ஆணை இல்லை. கிழக்குமாகான உறுப்பினர்களை வீட்டுக்கு போக ஆணையிடவேண்டும்  என்ற என் அறிக்கையை தற்போது லண்டனில் இயங்கும் குளோபல் நியூஸ் குருபரன் சூரியன் fm ல் வெளியிட்டார் (லண்டனில் இருக்கிறார் விசாரிக்கலாம்) வீரகேசரியும் வெளியிட்டது. என் நண்பர்கள் உறவுகள் யாவருமே எனக்கு ஆபத்து ஏற்படுமென்று அஞ்சினார்கள். பலர் தடுத்தும் நான் கேட்க்கவில்லை. உடனடியாக வன்னிக்கு சென்றேன்.என் உயிரல்ல  கிழக்கு மாகாணத்தில் ஒரு இரத்தக்களரி ஏற்படுவதைத் தடுப்பதுமட்டுமே என் கவனத்தில் இருந்தது.  வன்னியில் வளமைபோலவே என்னை வரவேற்றார்கள் புலிகளுக்கு இராணுவ இழப்பு ஏற்படாதவகையில் இரத்தக்களரியை தடுப்பது பற்றி மட்டுமே நாம் பேசினோம். இந்த அறிக்கையை வானொலியில் கேட்ட பேராசிரியர் மவுனகுரு யாழ்பாணத்தைச் சேர்ந்த மனிதன் என என்னை வாழ்த்தியதாக பின்னர் அறிந்தேன். . 

 

இதுபோலவே பொட்டம்மான் பற்றிய என் பேட்டி ஒன்றுக்குப்பின்னர் வன்னி சென்றபோது நிலாந்தனும் திருமாஸ்ட்டரும் எனக்கு ஆபத்து நேரலாம் என அஞ்சினார்கள். ஆனால் புலிகள் என்னுடைய பேட்டியில் அழுத்திய விடயங்கள் பற்றி மேலும் ஆலோசனை செய்தார்கள். (திருமாஸ்ட்டர் நிலாந்தனையும் கேட்க்கலாம்). இந்த மட்டத்தில் இருந்து சாக்கடைகளின் மட்டத்துக்கு இறங்கிவந்து பதில் சொல்வதை இனி ஒருபோதும் கைக்கொள்ள மாட்டேன்.

என் கவிதைகளில் நான் வைத்த  விமர்சனங்கள் பற்றி அவர்கள் கேழ்வி கேட்டதில்லை. பதில்மட்டும்தான் கூறி இருக்கிறார்கள். என் தொடர்பான புலிகலின் நிலைபாடு இப்படி இருக்க அவர்கள் பெயரால் என்னை கேழ்வி கேட்க்க இந்த முகமூடிப் பூனைகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? 

 

சங்க புலவர்கள்போல எனக்கும் தர்மம்தான் எனது பலம். 

 

 

நான் சங்க கால புலவர்களின் அசாத்திய துணிச்சலுடன் எங்கள் மண்ணின் வீரமைந்தர்களோடு பணியாற்றியவன். இந்த அருவருக்கத்தக்க முகமூடிக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் கோழை  பூனைக்கு நான் பதிலெழுத என் தமிழை என் நேரத்தை இனி ஒருபோதும் விரயமக்கமாட்டேன்.

 

உந்த புழுகெல்லாம் முன்னர் ஒருதடவையும் யாழில் விடப்பட்டு படித்திருக்கிறேன். நிச்சயமாக புலிகள் கணக்கெடுக்கவில்லை என்பது தெளிவு. 

அவர் சொல்லியிருப்பது பிற்காலம் தான் மாறியதாக.

 

ஆனால் அவர் கருணாவுக்கும் பிரபாகரனுக்கும் சமாதனம் பிடித்துவைத்த பொய்யட்டுக்கு நோபல் பரிசு கொடுக்க சொல்லி ஒரு பரிந்துரையும் கொடுத்திருக்கிறார் கேள்விப்பட்டீர்களா? தேவையில்லாத அப்பாவிப் போராளிகளை கருணா தன் பக்கம் இழுத்தால் இந்த பொய்யட் சொல்லாமல் அவர்களை கொல்லக் கூடாது என்பது பிரபாகரன் என்பவருக்கு எப்போதாவது தெரிந்திருக்குமா? ஆனால் பொய்யட்டுக்கு துரோகி பக்கம் நிற்காமல் தவிர்க்கவும் முடியாது.

 

புத்தகத்தில் எழுதுபவற்றை பற்றி புலிகளின் அதிகார பூர்வ வெளீயீடு வந்தால் படித்துவிட்டு சொல்கிறேன். இதுவரையில் யாழில் எழுதிய ஒன்றின் அடிப்படை உண்மைகளையும் தெரியவில்லை. இது ஒரு புதிய புழுகுமூட்டை வெளிவர இருக்கா?. நான் தான் பார்த்தேனே தீராதநதியில் காட்டியிருந்த வீரத்தை. எனக்கு தெரியாது, தாராகிதான் எனக்கு சொன்னார் என்று சொல்லித் தப்பிய விடயத்தை.

 

நாங்கள் அந்த மாதிரி தோசைப் பிரட்டல் பிரட்டுவதில்லை என்பதால்தான் நாங்கள் பூனை என்ற பெயருடன் சந்தோசமாக இருக்கிறோம்.

 

உந்த புலி சின்னக் குருவிக்கும் பயப்படுகிறது என்று தெரியும்.  அதானால்தான் மற்ற திரியில் கேட்ட கேள்விகள் ஒன்றும் பதில் இல்லாமல் தடுமாறி ஆயிரம் பொய் சொல்லி ஏமாற்றுகிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி மிகவும் சுவாரசியமாக உள்ளது..! :D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசைகலைஞன் இனி இந்த திரிக்கு நான் வரபோவதிலை.  எப்போதாவது நேரம் கிடைக்கும்போதுதான் வருகிறேன்.. இனி தொடற்சியாக பணிகள் உள்ளது. நேரம் கிடைக்கிறபோது வேறொரு திரியில் சந்திப்போம்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=53373

Edited by poet

 

 

இந்த விடீயோ frame frame ஆக ஆராய்ந்ததில்  புலியின் முக பாவனையில் இருந்து எனது முடிவு இது தான். :D
 
 புலியின் உடனடி  reaction பயமாக இருந்தாலும் , இந்த சின்ன raptor என்  territory இல் பயமில்லாமல் என் உடம்பை தொடும் வரை வந்து விட்டதே என்று ஒரு விசனம் முகத்தில் தெரிகிறது.இப்படி கூட்டமாக வந்தால் தன்  territory பறி  போய் விடும் என நினைத்து விசனம் கோபமாக மாறி  காலால் உதைகிறது. :lol:  :D  :D 
 
தவிர கவிதை நன்றாக உள்ளது. :) 
  • கருத்துக்கள உறவுகள்

 

.

என் கவிதைகளில் நான் வைத்த  விமர்சனங்கள் பற்றி அவர்கள் கேழ்வி கேட்டதில்லை. பதில்மட்டும்தான் கூறி இருக்கிறார்கள். என் தொடர்பான புலிகலின் நிலைபாடு இப்படி இருக்க அவர்கள் பெயரால் என்னை கேழ்வி கேட்க்க இந்த முகமூடிப் பூனைகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? 

 

சங்க புலவர்கள்போல எனக்கும் தர்மம்தான் எனது பலம். 

 

 

கவிஞர் அவர்களே  நீங்கள் எங்கேயோ தடுமாற்றம் அடைவது தெரிகின்றது .

அதாவது புலிகளை விமர்சித்தபோது அவர்களே உங்களைக் கேள்வி கேட்கவில்லை 

இவர்கள் யார் என்னைக் கேள்வி கேட்பது என்றால் உங்கள் கவிதைகளை 

இங்கே எதற்காக மீள்பிரசுரம் செய்கின்றீர்கள்.

 

கருத்துக்களத்தில் வரும் பதிவுகளுக்குப் பதில் கருத்து எழுதுவதற்கு அல்லது விமர்சனம் செய்வதற்கு கள உறுப்பினர்களுக்கு உரிமையுண்டு. யாழ் களம் அவர்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றது.

 

நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே கவிஞரே .

விமர்சனங்களுக்கு உரிய முறையில் கருத்திடுவதே சங்க காலப் புலவர்களது வழமை

கடைசியாக உன்னுடைய அந்தக் கவிதையைப் பார்த்தேன். ‘’உங்கள் தொழுகை பாயில் புணர்ந்தோம், மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம், எச்சில கையை துடைப்பதற்காக உங்கள் புனித நூல்களைக் கிழித்தோம்….’’ என வரும் வரிகளையும் படித்து மிகவும் நொந்து போயிருந்தேன்.

 

என்று கவிதை எழுதுவது ஒன்றும் குரங்கு பிடிக்க போக பிள்ளையாராக வந்த வசனங்கள் அல்ல. இது குரங்கு பிடிக்க முயன்ற வசனங்கள் என்றுதான் அதிபர் சண்முகம் சிவலிங்கம் சொல்ல வருகிறார். அவர் ஒரு வரியை அல்லது ஒரு கவிதையை, வைத்தல்ல சொல்கிறார். பூவால் குருவி உள்ளடங்களாக எல்லாக் கவிதை தொகுப்பையும் வைத்துத்தான் சொல்லவருகிறார். பிள்ளையார் பிடிக்க எடுத்த ஆரம்பம்தான் குரங்காக முடிந்திருக்கு என்கிறார். இதை போய் "நான் பிடித்த பிள்ளையார் சிவலிங்கமாக வந்திருக்கு" என்றால் மட்டும் பொய்யட்  திரு.சிவலிங்கமாவாரா?

 

திரு சிவலிங்கம் சொல்வதை வைத்துப்பார்த்தால் பொய்யட்டின் கவிதைகள் பிள்ளையாருமல்ல, பொய்யட் சொல்வது போல அவர் சிவலிங்கம் அளவு உசத்தியான மனிதரும் அல்ல. 

 

மேலே உள்ள வசனங்கள் தன்னை பெரிய கவிஞ்ஞானாக காட்ட எழுதப்பட்ட அழுக்கு வசனங்கள். இது மதங்கள் மீது மதிப்பு காட்டதெரியாமால் மதங்களை தாழ்வாக தூற்றுவது. எந்த உயர்வான பொருளையும் அதன் மதிப்பை அறியாமல் கேவலப்படுத்தும் செயல். 

 

ஆனால் திரு சிவலிங்கம் அத்துடன் நிறுத்த வில்லை. அவர் பொய்யாடின் முழுவதையும் பற்றிதான் அந்த சிறு கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.  அதனால் முஸ்லீம் மதத்தை பழித்து எழுதிய பொய்யட் சில சமையங்களில் நடிப்பு வேடங்கள் போடுவதாவும் எழுத்துகிறார். இதோ அவரின் வசனம். 

குறுந்தாடியும், குர்தா பிஜாமாவுமாய் ஒரு சோணிப் பையுடன் காட்சி தந்தாய். நாடோடி அகதிக்கு அது நல்ல வேஷமாகவே பட்டது. உன்னைப் பற்றி ஏற்கனவே கதைகள் புறப்பட்டிருந்தன.

 

 

 

பொய்யாட்டின் உண்மையயும் பொய்யையும் கலந்து படிப்போரை மயங்க வைக்கும் குணத்தை இப்படிக்காடுகிறார். 

உண்மையும, போலியும், அசலும் நகலும் பேதமறக்கலந்த ஒரு Personality நீ என்னும் ஒரு கருக்கோளில் – கருகோள்தான் – இயங்கிக் கொண்டிருக்கிறேன். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லக் கூடியவன் நீ.

 

 

 

இப்பட்டி பொய்களையும் மெய்களையும் கலந்து எழுதி, தமிழ் முஸ்லீம் ஒற்றுமை என்று கூறி சில போலி விபரங்கள் அடங்கியுள்ள ஒரு கட்டுரை தொரையும் வெளிவிட்ட போது, அவரும் பொய்யட்டின் உண்மை நோக்கத்தை சந்தேகிக்கிறார். திரும்பவும் இது அவரின் வசனம்.

 

வடக்கிலிருந்து முஸ்லீம் மக்கள், தங்கள் பெறுமதியான சில உடைமைகளைக்கூட எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் வழி அனுப்ப்ப் பட்டார்கள் என்பது மிகவும் துரதிஷ்டமான, பெரும் அதிர்ச்சி தந்த, நம்ப முடியாதிருந்த ஒரு சம்பவம். ஒரு சமூக மக்கள் நிர்க்கதியாக, காலவரையறையற்று குனித்துள் தள்ளப்படுவது எவ்வளவு அனர்த்தம் என்பதை கடந்த பல ஆண்டுகளாக கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். ஆனால் இது போரின் ஒரு விளைவு. இதில் எந்தவிதமான போரியல் தந்திரோபாயம் இருந்த்து என்று நான் சொல்வதற்கில்லை. இதிலுள்ள மூலோபாய் முடிச்சு தவறவிடப் படுகிறது. அந்த முடிச்சு தெரிந்தாலும் சிலர் அதை காண மறுக்கிறார்கள். அவர்களுள் நீயும் ஒருவன். ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டி விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான சர்வதேசப் பிரச்சாரத்தின் பின்னல் வலையின் கண்ணியாக நீ உன் பங்கைச் செலுத்துகிறாய். அல்லாவிட்டால், உங்கள் தொழுகைப் பாயில் புணர்ந்தோம், மீசான் கட்டையில் அடுப்பு மூட்டினோம் என்று தூஷனமாக எழுதியிருக்க மாட்டாய். உருவகம் என்ற போர்வைக்குள், இலக்கிய உத்தி என்ற போர்வைக்குள் உன் கபடத்தனத்தை கவனியாமல் விட நான் தூய இலக்கியவாதியும் அல்ல, நுனிப்புல் மேயும் விமர்சகனும் அல்ல. தொழுகைப் பாயிலும், மீசான் கட்டையிலும், திருக்குர்ஆனிலும் எனக்குள்ள புனித உணர்வின் காரணமாகவே, உன் வரிகள் அசிங்கமானவையாகவும் அசூசையானவையாகவும் எனக்குப்படுகின்றன.

 

 

திரு சிவலிங்கம் பொய்யட் மாதிரி முஸ்லீம் மதம் மீது அழுக்கேற்றவிலையே! இதனால் மதத்தை மதமாக, உயர்வாக நடத்தாமல்  இப்படி அழுக்கேற்றிய பொய்யட் தானும் திரு சிவலிங்கத்திற்கு சமன் என்றால் அது அப்படி? 

 

 

அப்போது அவசரமாக இருந்ததால் மிச்சம் பதியவில்லை. 

 

பூனை, புலியைவிட எவ்வளவு வீரமானது என்பது இங்கேதான் நிரூபணமாகியது.

 

 

:lol:

 

:)

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இக்கவிதையில் கவிஞரின் கவிச்சுவை நன்றே மிளிர்கிறது.. ::rolleyes:

அதாவது "பூவால் குருவி".. இதை பூப்போன்ற வாலைக் கொண்ட குருவி என்றும் கொள்ளலாம்.. அல்லது பூவாலே செய்யப்பட்ட குருவி என்றும் கொள்ளலாம்.. :D

முதலாவது மல்லைக்காக அன்றே எழுதியதாக வைத்துக்கொள்ளலாம்.. மல்லைக்கு எதன் வாலையாவது பிடித்துக்கொண்டு தொங்குவது வழக்கம்தானே..:D அதன்படி இங்கு குருவியின் வாலில் தொங்குகிறார்.. :wub:

இரண்டாவது கருத்து நெடுக்குக்கு.. நேரடியாக பெண்ணை இரசிக்காமல் பூக்களை இரசிப்பவர் அவர்.. :D அதேபோல உண்மையான குருவியை ரசிக்காமல் பூவாலான குருவியை இரசிப்பவர் என இனங்காட்டியுள்ளார் கவிஞர்.. :icon_idea:

பல வருடங்களின் முன்பே யாழ்களத்தின் இரண்டு கிரகங்களைக் கண்டுபிடித்துவிட்டார் கவிஞர்.. :icon_idea:

இக்கவிதையில் கவிஞரின் கவிச்சுவை நன்றே மிளிர்கிறது.. : :rolleyes:

அதாவது "பூவால் குருவி".. இதை பூப்போன்ற வாலைக் கொண்ட குருவி என்றும் கொள்ளலாம்.. அல்லது பூவாலே செய்யப்பட்ட குருவி என்றும் கொள்ளலாம்.. :D

முதலாவது மல்லைக்காக அன்றே எழுதியதாக வைத்துக்கொள்ளலாம்.. மல்லைக்கு எதன் வாலையாவது பிடித்துக்கொண்டு தொங்குவது வழக்கம்தானே.. :D அதன்படி இங்கு குருவியின் வாலில் தொங்குகிறார்.. :wub:

இரண்டாவது கருத்து நெடுக்குக்கு.. நேரடியாக பெண்ணை இரசிக்காமல் பூக்களை இரசிப்பவர் அவர்.. :D அதேபோல உண்மையான குருவியை ரசிக்காமல் பூவாலான குருவியை இரசிப்பவர் என இனங்காட்டியுள்ளார் கவிஞர்.. :icon_idea:

பல வருடங்களின் முன்பே யாழ்களத்தின் இரண்டு கிரகங்களைக் கண்டுபிடித்துவிட்டார் கவிஞர்.. :icon_idea:

:D சுத்துது :D ,,,,,,,,,,,,,,but சூப்பர் கண்டு பிடிப்பு  :lol: 

Edited by தமிழ்சூரியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.