Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1983 ஆடி 25 உம் ஆமர் வீதிச்சந்தியும் (விசுகு )

Featured Replies

6.3.jpg3.6.jpg4.3.jpg3.jpgBlackjuly.jpg

1983 ஆடி 25
ஆமர்வீதிச்சந்திப்பில் மொட்டைமாடியில் நானும் இன்னும் சிலரும் நின்றிருந்தோம்
தெமட்டக்கொட பக்கமாக இருந்து 150க்கு மேற்பட்ட காடையர்கள்-சிங்களவரும் முசுலிமுமாக-
தமிழரைத்தாக்கியபடியும்
தமிழ்க்கடைகளை எரித்தபடியும் வந்துகொண்டிருந்தனர்
ஆமர்வீதியின் இருவீதிகளுக்கும் நடுவில் கிட்டத்தட்ட
50 பொலிசார் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர்
இதனால் நாங்கள் பயப்படாமல் பதட்டப்படாமல் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தோம்
ஒரு 100 மீற்றர் தூரத்தில் அவர்கள் வந்ததும் 
50 பொலிசாரும் மறுபக்கமாக திரும்பிச்செல்ல ஆரம்பித்தனர்
குளவிக்கூட்டம் போல அவர்கள் எம்மேல் பாய்ந்ததும்.....
என் கண்ணால் கண்ட காட்சிகள்......
வெட்டடிப்போடப்பட்ட தமிழர்கள்......
ரயர் போட்டுக்கொளுத்தப்பட்ட தமிழர்கள்......
உயிரோடு எரியும் கடைக்குள்ளே வீசப்பட்ட என் உறவுகள்......
இன்று வரை உயிரோடு இருக்கின்றாரா......இல்லையா என்று தெரியாது...
அவர்களுக்கான எந்த திதியும் செய்யாது ஏங்கும் என் சொந்தங்கள்......
ஏன் இப்பொழுது கூட உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கும் நான்
எப்படி உயிரோடு தப்பிவந்தேன்??????
இது நியமா???
கனவா???
அன்று இந்தக்காவலர்கள்?????
தங்கள் கடைமையைச்செய்யக்கூட வேண்டாம்
சும்மா அதில் நின்றிருந்தாலே.............
எத்தனை உயிர்கள் தப்பியிருக்கும்....
எத்தனை ஆயிரம் பேர் அனாதையாகாமல் இருந்திருக்கும்......
எத்தனை ஆயிரம் கோடிச்சொத்துக்கள் நாசமாகாமல் இருந்திருக்கும்.....
என்னைப்போல் எத்தனை ஆயிரம் பேர் அகதியாகாமல் இருந்திருக்கும்...... 

 

நன்றி விசுகு 

பகுதி 1 

 

பகுதி 2

 

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

யூலைக்கலவரம்  சம்பந்தமான  நினைவலைகள்  எம்மை  வாட்டிவரும் இந்த  மாதத்தில்

நான் அனுபவித்தவற்றையும்  இங்கு தொடரலாம் என்றிருக்கின்றேன்.

30  ஆண்டுகள் கடந்துவிட்ட  போதிலும்

ஒரு பெரும் அகன்று தொடரும் இடைவெளியாக

எந்தவித நல்ல  மாற்றங்களுமின்றி சிங்கள தமிழ் மக்களுக்கிடையே  ஆன  விரிசலின்  சாட்சியாக இந்த 1983  ஆடி  இன்றும் உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்தபோது துப்பாக்கியுடன் நின்ற காவலர் போகவில்லை.. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.. :D பல ஆண்டுகளாக இது என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.. போரின் பிற்பாடு வெ ளிவந்த "நல்லிணக்க" ஆணைக்குழு அறிக்கையும் அதை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் வற்புறுத்திய விதமும் என் எண்ணங்களை மாற்றிவிட்டது.. :D இனிமேல் அடிவாங்கினாலும் நல்லிணக்கத்துடன் அடிவாங்கவேண்டும் என்கிற எண்ணம் வேரூன்றிவிட்டது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எமது  கடைக்கும் காவல்துறைக்கும் இருந்த கொடுப்பனவுகள்  காரணமாக  இருந்த  நம்பிக்கை  சிதறுண்ட  நிலையில் 

கடையில் நுளை வாசலில் போடப்பட்டிருந்த இரும்பு கேற்றை  எவரும் உடைக்கமுடியாது என்ற  நம்பிக்கை  இருந்தது

அதனால் சிறிது அமைதி  இருந்தது

கதவை  உடைத்து பார்த்து தோற்ற வெறியர்கள்

சிங்கள வெறியர்கள்

எமது  முதலாம் மாடிக்கும் இரண்டாம் மாடிக்கும் பெற்றோல் குண்டுகளை  எறிந்தனர்

அவை  கண்ணாடிகளை  உடைத்து வந்து விழுந்து எரியத்தொடங்கியதும  எமது நெஞ்சுகள் படபடக்கத்தொடங்கின.

 

எல்லோரும் ஒன்றாக  போனால் ஆபத்து

பிரிந்து செல்வோம் என  முடிவெடுத்து

ஒவ்வொருவராக  கிடைத்த  தெரிந்த வழிகளில் ஓடத்தொடங்கினோம்.

நான் சிறிய  வயதினன்.  அத்துடன் நெஞ்சு நிமிர்த்தி.

அதனால் எனது மைத்துணர் தன்னுடன் வரும்படி கையிலே பிடித்து சென்றார்.

 

எமது முதலாவது மாடியும்  அதன் பின்புறமுள்ள சேரி  வீடுகளின் கூரையும  ஒட்டியபடி இருக்கும்.  முன்னால் செல்லமுடியாது என  முடிவெடுத்து அந்த கூரைகளினூடக  நடக்கத்தொடங்கினோம். கொஞ்ச  தூரம் போனதும்  கீழே  இறங்கக்கூடிய ஒருவழி  தெரிந்தது.  இறங்க  ஆயித்தமானோம். இறங்கினால் வெட்டுவன்  என  குரல் கேட்டது  தமிழில். மீண்டும் மேலே ஏறினோம்.

 

பார்த்தேன்.  அடப்பாவி.  என்  அண்ணனின் தோழில் கை போட்டு நண்பனாக இருந்தவன் நேற்றுவரை.   என்னைக்கண்டால் கை  கொடுத்து நெஞ்சைத்தொடும்  இசுலாமியத்தமிழன்.  அவரது மனைவி  சொல்கிறார்.  பாவங்கள்.  இறங்கி  ஓடட்டும் விடுங்க  என.  இறங்கினால் வெட்டுவன் அவன் மீண்டும். தொடர்ந்து நடக்கத்தொடங்குகின்றோம்  கூரையின் கரை தேடி. சிங்கங்களின் இரைக்கு பயந்தபடி..........

 

 

 


இன்னொரு  உறவு சார்ந்த இனமும் என்னைவிட்டு தள்ளிப்போகிறது................... :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எனது அனுபவத்தை ஒத்ததாக உள்ளது (இஸ்லாமிய தமிழர், ஆமர் வீதி தவிர்த்து..) இல்லாவிட்டால் ஒரே கூரையில் நின்றிருப்போம்.. :icon_idea:

  • தொடங்கியவர்

எமது  கடைக்கும் காவல்துறைக்கும் இருந்த கொடுப்பனவுகள்  காரணமாக  இருந்த  நம்பிக்கை  சிதறுண்ட  நிலையில் 

கடையில் நுளை வாசலில் போடப்பட்டிருந்த இரும்பு கேற்றை  எவரும் உடைக்கமுடியாது என்ற  நம்பிக்கை  இருந்தது

அதனால் சிறிது அமைதி  இருந்தது

கதவை  உடைத்து பார்த்து தோற்ற வெறியர்கள்

சிங்கள வெறியர்கள்

எமது  முதலாம் மாடிக்கும் இரண்டாம் மாடிக்கும் பெற்றோல் குண்டுகளை  எறிந்தனர்

அவை  கண்ணாடிகளை  உடைத்து வந்து விழுந்து எரியத்தொடங்கியதும  எமது நெஞ்சுகள் படபடக்கத்தொடங்கின.

 

எல்லோரும் ஒன்றாக  போனால் ஆபத்து

பிரிந்து செல்வோம் என  முடிவெடுத்து

ஒவ்வொருவராக  கிடைத்த  தெரிந்த வழிகளில் ஓடத்தொடங்கினோம்.

நான் சிறிய  வயதினன்.  அத்துடன் நெஞ்சு நிமிர்த்தி.

அதனால் எனது மைத்துணர் தன்னுடன் வரும்படி கையிலே பிடித்து சென்றார்.

 

எமது முதலாவது மாடியும்  அதன் பின்புறமுள்ள சேரி  வீடுகளின் கூரையும  ஒட்டியபடி இருக்கும்.  முன்னால் செல்லமுடியாது என  முடிவெடுத்து அந்த கூரைகளினூடக  நடக்கத்தொடங்கினோம். கொஞ்ச  தூரம் போனதும்  கீழே  இறங்கக்கூடிய ஒருவழி  தெரிந்தது.  இறங்க  ஆயித்தமானோம். இறங்கினால் வெட்டுவன்  என  குரல் கேட்டது  தமிழில். மீண்டும் மேலே ஏறினோம்.

 

பார்த்தேன்.  அடப்பாவி.  என்  அண்ணனின் தோழில் கை போட்டு நண்பனாக இருந்தவன் நேற்றுவரை.   என்னைக்கண்டால் கை  கொடுத்து நெஞ்சைத்தொடும்  இசுலாமியத்தமிழன்.  அவரது மனைவி  சொல்கிறார்.  பாவங்கள்.  இறங்கி  ஓடட்டும் விடுங்க  என.  இறங்கினால் வெட்டுவன் அவன் மீண்டும். தொடர்ந்து நடக்கத்தொடங்குகின்றோம்  கூரையின் கரை தேடி. சிங்கங்களின் இரைக்கு பயந்தபடி..........

 

 

 

இன்னொரு  உறவு சார்ந்த இனமும் என்னைவிட்டு தள்ளிப்போகிறது................... :(  :(  :(

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

கூரையில் தடக்கி  விழுந்ததாலும்

பதட்டத்தாலும் இருவரும் தள்ளித்தள்ளி  பிரிந்து விடுகின்றோம்.

தமிழில் கதைக்கமுடியாத சூழல்.

அவர் என்னைத்தன்னுடன் வரும்படி  சைகை  செய்கிறார்.  அவர் எனது அண்ணரின் வீடு  இருக்கும் ஆமர்வீதி  பிளட்  பக்கம் போக எத்தனிக்கின்றார்.

 

அந்த ஏரியாவில்  கொஞ்சம் வசதியாக  எடுப்பாக முக்கியமாக பெண்கள் மனதில் கதாநாயகனாக வாழ்ந்தவன் என்ற ரீதியில் என் மனம் இப்படி அங்கு போக கூசுகிறது.   உயிர்ப்பயத்திலும் வயசு    வென்று விடுகிறது.  அப்படியே  சென்று சிங்கள  மகாவித்தியசாலையின் மதில்  மேல்  வந்து விடுகின்றேன்.  நோட்டம் பார்க்கின்றேன்.  உள்ளே  ஒருவரும் இல்லை (எல்லோரும் வெளியில் வீதியில் வேட்டைக்கு நிற்கிறார்கள்). பாய்ந்து விடுகின்றேன்.

 

சறம்  மற்றும்  சேட்டும் போட்டிருந்தேன்.

அவை  சிங்களவன் அணிவது   போலவே  இருக்கும்.  நிறமும் அவ்வாறு தான்.

சிங்களக்கட்டு போல் சறத்தை கட்டிக்கொண்டு   சேட்டையும் அதற்கேற்றாப்போல்  கையை மடித்து  விட்டு விட்டு ஒழிந்திருந்து பார்க்கின்றேன்.   கூட்டம்   ஓடுவதும் உடைப்பதும் ஐயோ  சத்தங்களும் கேட்கின்றன.  இதற்குள் இருந்தால் என்னை  தெரிந்தவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என சனம்  கொஞ்சம் குறைந்த நேரம் பார்த்து அவர்களுக்குள்  கலக்கின்றேன்..........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்தபோது துப்பாக்கியுடன் நின்ற காவலர் போகவில்லை.. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.. :D பல ஆண்டுகளாக இது என் மனதை அரித்துக்கொண்டிருந்தது.. போரின் பிற்பாடு வெ ளிவந்த "நல்லிணக்க" ஆணைக்குழு அறிக்கையும் அதை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் வற்புறுத்திய விதமும் என் எண்ணங்களை மாற்றிவிட்டது.. :D இனிமேல் அடிவாங்கினாலும் நல்லிணக்கத்துடன் அடிவாங்கவேண்டும் என்கிற எண்ணம் வேரூன்றிவிட்டது.. :lol:

 

நன்றி  இசை

உங்கள்  அனுபவத்தையும் எழுதுங்கள்

 

சிங்களம் மாறியுள்ளதா?

ஏதாவது தருமா? என்பதற்கு இவை  ஆதாரமாகவும்

தமிழன் தொடர்ந்து எத்தனை  வருடங்களாக  துன்பப்படுகின்றான்  என்பதற்கு  அத்தாட்சியாகவும  அமையும்

எனது அனுபவத்தை ஒத்ததாக உள்ளது (இஸ்லாமிய தமிழர், ஆமர் வீதி தவிர்த்து..) இல்லாவிட்டால் ஒரே கூரையில் நின்றிருப்போம்.. :icon_idea:

 

அண்ணனும  தம்பியும் கூரையில்

அநியாயக்காறர்கள் தரையில்................

தப்பினோம  என்பது நிஐமா?

எப்படி????

எழுதுங்கள்

நான் இருந்த இடத்துக்கு அருகிலேயே பெரிய வத்தை ( வத்தை எண்டால் சேரி எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன்) சிங்களவர் முஸ்லீம் காடையள் தான் அதிகம் ... அதிலை அனேக முகம்கள் எனக்கு பரீட்சமானவை... அதே வத்தையிலை இருந்த பத்மநாதன் எண்ட ஒரு இந்திய வம்சாவளி தமிழ் ( அவருக்கும் பழக்கமானவங்கள் தான்) தியட்டர் ஒண்டை சூறை ஆடும் போது அதில் வேலை செய்த அவரை குடிவெறியிலை அவங்கள் அடிக்க கீழை விழுதவரை போட்டு நாலைஞ்சு பேர் விடாமல் அவர் கத்த கத்த அடிச்சது இன்னும் நினைவிலை இருக்கு...

இதை பார்க்க முதல் பம்பலப்பிட்டியில் மஜிஸ்ரிக்கு முன்னாலை ஒரு பஸ்ஸை கொழுத்தி எரியிறபஸ்ஸுக்கை அடிச்சு இழுத்து கொண்டு போய் எறியிறதையும் பார்த்து நீண்டகாலம் நித்திரை கூட வந்ததில்லை...

Edited by தயா

 நன்றி அண்ணா. உங்கள் பதிவுக்கு 

 
எங்கள் குடும்பம் யாரையும் இழக்கவில்லையாயினும் , அப்பா1977 , 1983  கலவரங்களைப் நிறைய சொல்ல கேட்டிருக்கிறோம் .எனது அப்பா 1977 கலவரத்தின் போது அனுராதபுரத்திலும் 1983 கலவரத்தின் கொழும்பிலும் வேலை செய்தார்.  1977 இல் ஒரு சிங்கள நண்பராலும் 1983 இல் கொழும்பில் காவல்துறை இலாகாவில்  வேலை  செய்த எமது உறவினர் ஒருவராலும் காப்பாற்றப்பட்டார் 1983 ஆண்டிற்கு பின் வேலைக்கு திரும்பி போகாத காரணத்தால் வேலை இழந்தார்.
 
சிங்கள அரசியல்வாதிகளின்  இப்படியான செயல்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு இல்லை.சிங்கள மக்கள் இப்படியான இனவாத அரசியலுக்கு பலிபோகதவர்களாக இருக்கவேண்டும் 

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களிற்கு வணக்கம்

 

இந்த காலத்திற்கு தேவையான ஒரு முயற்சியை விசுகு அண்ணா அவர்களும் ஏனைய சில உறவுகள் செய்கிறீர்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

 

கறுப்பு யூலை கலவரத்தை நான் பார்த்ததில்லை. வாசித்து தெரிந்துகொண்டதே அதிகம். இப்படியான சொந்த அனுபவங்களை கேட்டது இல்லவே இல்லை. இந்த வாரம் பலரின் அனுபவங்களை வாசித்தேன். நினைத்துப்பார்க்கமுடியாத துயரங்கள் அவை.

 

இப்படியான அனுபவங்கள் புத்தக வடிவில் வெளிவந்தால் பயனுள்ளதாக அமையும். இவையெல்லாம் உங்களுடன் புதைந்து போகாமல் பாதுகாக்க வேண்டிய விடயங்கள். இன்னும் ஒரு 10 வருடங்களில் எமது அடுத்த சந்ததிக்கு இந்த கறுப்பு யூலை என்பது என்னவென்றே தெரியாமல் போகலாம். நீங்கள் அனுபவித்ததை சொல்வதற்கு இங்கு யாரும் இருப்பார்களா என்பதே சந்தேகம். கறுப்பு யூலை என்பது வெறுமனே ஒரு "சம்பவம்" என்று ஆகிவிடாமல் இருக்க வேண்டும்.

உங்களுடைய சொந்த அனுபவங்களை ஆவணப்படுத்தும் போது அது தலைமுறை கடந்து பயன்தரும். உங்கள் கதை உங்களுடன் முடிந்து போக வேண்டாம் என்பதே எனது விருப்பம். அதை தொடர்ந்து கையளிப்போம். உங்களிற்கும் எமது இனத்திற்கும் நியாயம் கிடைக்கும் வரை.

மேலும் எழுதுங்கள் விசுகு அண்ணா மற்றும் யாழ்கள உறவுகளே.

புகை மண்டலம்.. கூக்குரல்கள்..
 
பின்னேரம் 2.30 அளவில் ஒரு 50 பேர் மட்டில் சங்கிலிகள் இரும்புக் கம்பிகளோடு எங்கள் வீட்டுக்கு வந்தார்கள்.
 
கராஜிற்குப் பக்கத்தில் இருந்த ஸ்டோர் ரூமில் போய் ஒளிந்தோம். ஸ்டோர் ரூமைச் சுற்றி உயரமாக குரோட்டன் வள்ர்ந்திருந்ததால் அவர்களுக்குத் தெரியவில்லை. ஜன்னல் கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டது. ரி.வி. உடையும் சத்தம் பெரிதாகக் கேட்டது. கராஜில் இருந்த வான் கண்ணாடிகளை அடித்து நொறுக்கும் சத்தம் கேட்டது.
 
வீட்டுக்கு நெருப்பு வைத்தார்கள். அஸ்பெஸ்டஸ் கூரை வெடித்து வெடித்து எரிந்தது. கராஜில் இருந்த வானுக்கும் நெருப்பு வைத்தார்கள். நாங்கள் ஒளிந்திருந்தது கராஜ் அருகே என்பதால் எரியும் வான் நெருப்பு எப்ப எங்களையும் எரிக்கப் போகிறது என்று பயந்து கொண்டிருந்தோம். 
 
ஒரு அரை மணித்தியாளம் மினக்கட்டிருப்பார்கள். பின் அடுத்த வீடுகளை எரிக்கப் போய் விட்டார்கள். அதன் பின் என்னோடு விளையாடும் அயலில் இருந்த பேகர் கலப்பினப் பெடியனின் தாயர் எங்களை தன் வீட்டுக்கு கூட்டிச் சென்றா.
 
கலவரம் வரப் போகிறது என்று காலையே தெரிந்த படியால் பாடசாலை போகவில்லை. போயிருந்தால் அதோகதி தான். அப்போது றோயல் கல்லுரியில்  படித்துக் கொண்டிருந்தேன். இத்தனைக்கும் றோயல் கல்லூரி இலங்கையின் முதல் தரப் பாடசாலை. ஆனால் அங்கும் தமிழ் மாணவருக்கு கல்லால் எறிந்தார்கள் என்று சொன்னார்கள்.
 
அடைக்கலம் புகுந்த வீட்டின் மாடி ஜன்னலூடாக ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்தோம். எரிகின்ற வீடுகளில் இருந்து சிங்களக் கூட்டம் அகப்பட்ட சாமன்களையெல்லாம் எடுத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தது.
 
ஒரு நடக்க முடியாத சிங்களக் கிழவி மூட்டை ஒன்றை இழுத்துக் கொண்டு போய்க்கொண்டிருந்தாள்.
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

தயா

காளான்

செங்கொடி

 மற்றும் ஈசன்

 

 


நீங்களும்  தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில்

வீதியில்  வந்தவுடன் ஒரே ஒரு தெரிவுதான்  உள்ளது.  யிந்துப்பிட்டி  மேடு நோக்கி  செல்வதைத்தவிர  வேறு வழியில்லை. சிங்கள மகாவித்தியாலயத்திலிருந்து ஆமர்வீதி  வரை காடையர்களும் ஆட்களும்   நெருக்கமாகவும் இருக்கிறது.   எனவே  அந்தப்பக்கம் போவது ஆபத்தானது என்பதால்  யிந்துப்பிட்டி  மணிக்கூட்டு கோபுரம் நோக்கி  நடக்க  ஆரம்பிக்கின்றேன்.  பதட்டத்தை  காட்டாது சிங்கள  நடை  உடை   முகத்தில்  எந்தவித  சலனமும் இல்லாது மலையில் ஏற  ஆரம்பிக்கின்றேன்.  எரிந்த கார்கள்  கடைகள் சைக்கிள்கள் வீடுகள்  என அலோங்கோலநிலை. இருந்தாலும் இள ரத்தம் பயம்  வரவில்லை.   தெரிந்தவர்கள்  எவரும்  கண்டுவிடக்கூடாது என்றநிலை. 

 

நான் ஏறிக்கொண்டிருந்தபோது

ஒரு கார்  வருகிறது.

எனது கண்ணில் சாரதியைவிட முன் சீற்றில் இருந்த பெண்ணின்  பெரிய  குங்குமப்பொட்டே தெரிகிறது. அவர்கள் மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து கீழ் நோக்கி  வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது சொல்ல துடிக்கிறது எனது மனம்.  ஆனால் என்னைக்கடந்து பொய்  விடுகிறார்கள். சற்று திரும்பி  பார்க்கின்றேன்.  குறுக்கே ஆட்கள் வந்து காரை  மறிக்கிறார்கள்.  அந்த   பெண்ணின்  பக்கமே முதலில் ஓடி வந்து  கதவைத்திறக்கிறார்கள்.  நடக்கப்போகும் பயங்கரம் எனக்குள் மேலும் பதட்டத்தை தர நடையை  வேகமாக்குகின்றேன்.  ஐயோ ஐயோ என ஓலம் கேட்கிறது.  திரும்பிப்பார்த்தபோது கார் எரிகிறது.   காருக்குள் வைத்தே எரித்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கண்கள்  கலங்க  தொடங்குகின்றன. இல்லை  நான் தப்பணும். ஏதோ ஒன்று என்னை  உந்த மணிக்கூட்டு கோபுரத்தடிக்கு வந்து விடுகின்றேன்.

 

எங்கு போவது??

எமது ஊரைச்சேர்ந்த  பலரும் கோட்டை 4ம் 5ம்  சந்திகளில்  கடை  வைத்துள்ளனர்.  அவர்களிடம் போகலாம் என  நினைத்தாலும் அங்கும் கடைகள் நேற்றே  எரிக்கப்பட்டதாக அறிந்திருந்தேன். அதனால் கொட்டகேன  பக்கமுள்ள அக்காவீடு நோக்கி   நடக்கத்தொடங்கினேன்.

அந்த பாதையில் அசம்பாவிதம் ஏதுமில்லை. அமைதியாக இருந்தது. நான் அவர்களது வீதிக்குள் போகும் போது சிலர் என்னைத்தடுத்தார்கள்.  தமிழில் பேசினார்கள்.  நான் என்னை  அறிமுகப்படுத்தியதும் துணைக்கு வந்து வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள்.  மீண்டும் காவலுக்கு போய் விட்டார்கள்.

 

அக்காவுக்கு   என்னைக்கண்டதும்   அளவற்ற சந்தோசம்.

ஒரு இடத்தில் அமர்கின்றேன்.

வெலிக்கடைச்சிறையில் தங்கத்துரை குட்டிமணி  உட்பட  பலர்   கொல்லப்பட்டனர். 

முழுமையாக பலியானவர்களின் தொகை  தெரியவில்லை என இலங்கை  வானொலி  அலறுகிறது.

பயம் மீண்டும்

சிறைக்கே பாதுகாப்பில்லை

எனக்கு.................???

  • கருத்துக்கள உறவுகள்

 கொச்சிக்கடையைச்சேர்ந்த  தமிழர்கள்  எம்மை   பாதுகாக்கிறார்கள்.

அன்றிரவு  இவர்களையும் அழிக்கும் நோக்கில் சிங்கள  காவல்துறை கதையொன்றை  பரப்புகிறது.  புலிகள் கோட்டை புகையிரத நிலையத்தால்  வந்து  கொழும்புக்குள் புகுந்து விட்டார்கள்  என்று.  சிங்களவர்கள்  பலமுறை   நாங்கள் இருந்த பகுதிக்குள்  உள்  நுளைய  முயன்றும் தோற்றநிலையில்  காவல்த்துறை  வந்து துப்பாக்கிச்சூடு  நடத்துகின்றது.  

 

 

அதில் எமக்காக மதில் மீது காவலிருந்த ஒருத்தர் மரணிக்கின்றார்.  நான்   பார்த்த ஒருவருக்காக எமக்காக மரணித்த முதலாமவர் அவர்தான்.   எங்களை  வேறு இடங்களுக்கு மாற்றுகிறார்கள்.  தம்மையும் கொடுத்து எம்மைக்காத்த  காப்போம் என்றுரைத்த அந்த  தமிழர்களை  என்றும் மறவேன். 

 

இரண்டு நாட்களாக  எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் தொடர்பில்லை.  நான்  வெளியே  போக பலமுறை  முயற்சித்தும் அவர்கள்  அனுமதிக்கவில்லை.  அவர்களே  கடைசியாக எனது குடும்பத்துக்கு நான்  பாதுகாப்பாக இருப்பதை   அறிவித்தார்கள்........

 

கொழும்பில் இனி  இருக்கமுடியாது

இங்கிருந்து புறப்படணும்

அதற்கான ஏற்பாடுகளைச்செய்து வருவதாக அண்ணர்  தகவல்இ அனுப்புகிறார்.

எனக்கு  எனது நண்பர்களை

பாடசாலையைப்பார்க்கணும்   என ஆவலாக  இருக்கிறது.

 

மெல்ல  புறப்பட்டு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்கு செல்கின்றேன்.

எனது பாடசாலை  முழுமையாக அகதி  முகாமாக ஆக்கப்பட்டு பரபரப்பாக  இருக்கிறது

 

ஆசிரியர்கள்

பெரும்  பெரும்  பணக்காற மாணவர்கள் எல்லோரும் உடுத்த துணியுடன்  கஞ்சிக்கு வரிசையில்.

எனது நண்பர்கள்  ஒரு சிலரையே  காணமுடிந்தது.

அவர்களும் எல்லாவற்றையும்  இழந்தநிலையில்.

ஆனால் அடுத்த மாதம் உயர்தரப்பரீட்சை 

படிக்கணும்

பரீட்சையில் தோற்றணும் என  அவர்கள்  சொல்ல

நான்  இங்கு இருக்கமாட்டேன்

யாழ் போகின்றேன்.

இனி  இங்கு வரமாட்டேன்

யாழ்  வந்தால்  சந்தியுங்கள் எனச்சொல்லி  விடைபெறுகின்றேன்.

வீட்டுக்கு  வந்ததும்  நல்ல  ஏச்சு.

இனி  எங்கும் போகக்கூடாது என்று சிறை...

 

நான்கு நாட்களின் பின்  MINIBUS ஒன்றை எடுத்து அதற்கு  சிங்கள சாரதியைப்போட்டு

அனுராதபுர  என போட் வைத்து புறப்படுகின்றோம்..........

  • கருத்துக்கள உறவுகள்

காலை நேரம் அன்று சூரியன் உதிக்காமல் விட்டிருக்கலாம் . அல்லது அன்று விடியாமலே இருந்திருக்கலாம். தமிழரின் வாழ்க்கை சீரழிந்த நாள் அது .கறுப்பு யூலை என்ற கரி  நாட்களின் ஆரம்பநாள். யூலை 24. ஞாயிறு வழமைபோல ஞாயிறும் வந்தது.

 

மக்கள் அன்றாட வேலைகளுக்கும்  மாணவர்கள்  விடுமுறை நாட்களில் நடக்கும் பிரத்தியேக வகுப்புக்களுக்கும் வியாபாரிகள் தங்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் என அண்டை ஊர்களுக்கும் யாழ் நகரத்திற்கும் என நகர ஆரம்பிக்கின்றனர்.

நானும் எனது அண்ணனும் எனது சகோதரியும் வழமையாக யாழ் நகரில்

பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்வது வழக்கம்.முதல் நாள் சனிக்கிழமையிலிருந்து

எனக்கு மிகுந்த காய்ச்சல் என்பதால்    அன்றும் எனது அண்ணன் வழமைபோல ஏழு மணியளவில்

தன்னைத் தயார் செய்து கொண்டு  என்னை மட்டும் அழைக்காமல் தன்  வகுப்பிற்க்காகச் சென்றுவிட்டான். அவரைப் பின்தொடர்ந்து எனது சகோதரியும் சென்று விட்டார்.

 

ஒன்பது மணியளவில் எனது சகோதரி வீடு திரும்பி பேரூந்துகள் தடைப்பட்டதையும்

திருநெல்வேலியில் இராணுவம் முதல் நாள் இரவில் கொல்லப்பட்டதையும்

கூறுகின்றார்.இர்ரணுவத்தினர் கண்மூடித்தனமாகத் தாக்குவதாகவும் பல பொதுமக்கள்

ராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் பேரூந்துகள் எல்லாம் திரும்பி வருவதாகவும் கூறுகின்றார்.

 

எனது அண்ணன் சென்ற பேரூந்து ஓட்டுனருக்கு எந்தத் தகவலும் கிடைக்காததால்

அவர் மானிப்பாய் வரை சென்றுவிட்டார்.மானிப்பாய் தேவாலயத்திற்கும் வைத்திய சாலைக்கும் இடையில் நவாலி செல்லும் பாதைக்கு முன்பாக அவர்களது பேரூந்து இராணுவத்தினரால் மறிக்கப்படுகின்றது.

பேரூந்தில் இருந்த வயோதிபர்களும் பெண்களும் விரட்டப்படுகின்றனர்.

மாணவர்களும் நடுத்தர வயதினரும் பேருந்தால் இறக்கப்பட்டு அருகில் இருந்த கடை வாசலின் முன் வரிசையில் நிறுத்தப்படுகின்றனர்.

 

வரிசையில் எனது அண்ணனும் எங்கள்ஊரைச் சேர்ந்த இன்னும் இரண்டு மாணவர்களுமாக

பதிமூன்று பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்

கடையைத் திறக்க ஆயத்தமான கடை முதலாளி கடையின் ஒரு பலகைக் கதவைத் திறந்த பின்னர் இந்தக் காட்சியைக் கண்டதும் கடையை அப்படியே விட்டு விட்டு

ஓடி விடுகின்றார்.வரிசையில் நிறுத்தப்பட்ட மக்களும் மாணவர்களும்

பதட்டமடைந்தவர்களாக ஏதும் செய்ய முடியாத நிலையில் அசைவற்று நிற்க

இராணுவத்தினர்  கண்மூடித்தனமாக அவர்கள் மீது தங்கள் இயந்திரத்துப்பாக்கியால் சுடுகின்றனர்.

 

ஒருவர் மட்டும் திறந்திருந்த ஒருபலகைக் கதவினூடாக எப்படியோ தப்பி விடுகின்றார்.

இன்னொருவர் இராணுவத்தின் துப்பாக்கி இயங்க முன்னரே தரையில் வீழ்ந்து விடுகின்றார்.

எனது அண்ணன் உட்பட பதினொருவர் இரத்த வெள்ளத்தில் அதே இடத்தில்

உயிரற்றவர்களாக வீழ்கின்றனர். இராணுவம் தங்கள் அடுத்த வேட்டைக்காக செல்கின்றனர்.

 

 

அக்காவின் தகவலை அடுத்து நாங்கள் வீட்டார் அனைவரும் பிரதான வீதியில் சென்று

திரும்பிவரும் வாகனங்களையும் மக்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்

எப்படியும் எங்கள் சகோதரன் தப்பி வருவான் என ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டு காத்திருக்கின்றோம்.அப்படியே எனது சகோதரன் சென்ற பேரூந்தில் சென்ற மற்றைய இரு மாணவர்களின் பெற்றோரும் அவர்களின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.

அன்றைய மன நிலையை இன்று வார்த்தைகளால் எழுத முடியாது .

 

சம்பவம் நடந்த போது கடைக் கதவினூடாகத் தப்பிய மாணவர்எமது

ஊரைச் சேர்ந்த  ஒரு கத்தோலிக்கர்.

மானிப்பாய் தேவாலயக் குருவின் உதவியுடன் அவர் பலத்த இராணுவக்

கெடுபிடிகளுக்கும் மத்தியில் ஊரை வந்தடைகின்றார்

அவரின் மூலம் எனது அண்ணனும் மற்றைய மாணவனும் இராணுவத்தால் கொல்லப்பட்டதை அறிந்து கொண்டோம்.

அண்ணனுடைய சடலத்தை எடுத்து வருவது எப்படி என்பது அடுத்த பிரச்சனை

எதுவித போக்குவரத்துக்களும் இல்லை யாரும் நகரைவிட்டு வெளியே செல்லத்

தயாராக இல்லை. அப்படிச் சொல்வதை விட யாரும் போக முடியாத சூழ்நிலை

எனக் கூறலாம்.

 

அப்போது கடற்படைக்கு உணவு எடுத்துச் செல்லும் ஒரு வாகனம் அந்த வழியால் வந்தது  

உரிமையாளர் எங்கள் தந்தையிடம் கல்வி பயின்றதால் அவர் உதவி செய்தார்

அவர் உதவியுடன் தனியாகத் தான் மட்டுமே  மானிப்பாய் சென்ற எங்கள் தாயார் இரத்த வெள்ளத்தில்  கிடந்த எனது அண்ணனையும் மற்றைய மாணவனையும் அந்த டிராக்கில்

மண் அள்ளி நிரப்பி அதன் மேல் படுக்க வைத்து ஊர் கொண்டுவந்து சேர்த்தார்

 

முப்பது வருடங்கள் சென்றாலும் கண்முன் வந்து நிற்கும் எனது அண்ணனும்  மற்றைய மாணவனும் தங்கள் இழப்பை  ஆயிரம் ஆயிரம் மாணவர்களை விடுதலைப் பாதையில் இணைப்பதற்கு ஏதுவாக்கினார்கள் என்பது மட்டுமே எமக்குத் தரும் ஆறுதல்  

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.. உங்களது அனுபவப்பகிர்வு நெஞ்சைப் பதைபதைக்கச் செய்தது.. :( என்ன எழுதுவது என்று தெரியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்.... ஒவ்வொரு தமிழர் குடுப்பத்திலும், ஒவ்வொரு சோகக் கதை.
இதன் பின்பு, அருமையாகக் கட்டியெழுப்பப் பட்ட எமது போராட்டத்தை... சிங்களவனுக்கு காட்டிக் கொடுத்த... ஒட்டுக்குழுக்களின் செய‌லை நினைக்க வெறுப்பு ஏற்படுகின்றது.

நல்லதொரு பதிவு எழுதும் எல்லோருக்கும் நன்றீகள்.ஜூலை கலவர மூட்டம் எங்கட அம்மம்மா குடும்பமும் கொழும்பில தான் இருந்ததாம்.கூட பழகின சிங்களவனே மாமாமாரை வெட்டிறதைக் கண்ட என்ட பெரியம்மாவுக்கு பைத்தியமாக்கி போட்டது கடைசி வரைக்கும் அப்படியே இருந்து செத்துப் போனார்.மாமாமார் வெட்டுக் காயத்தோட ஒரு மாதிரி தப்பி விட்டார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.