Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்த சங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட உள்ளார்

Featured Replies

அமிரையும்,யோகேஸ்வரனையும்,சிவசிதம்பரத்தை அழித்து தாங்களே தமிழர்களின் ஏகப்பிரநிதிகள் ஆக புலிகள் எடுத்த முயற்சி கடைசிவரையும் வெற்றி அழிக்கவில்லை .

இயக்கம் தொடங்கிய நாளில் இருந்து பிரபாகரனின் கனவு இதுதான் -வன்னி இராச்சியமும் அதன் மன்னர் கரிகாலனும் .சாண்டில்யன் கதைகள் வாசித்ததன் விளைவு அது .எதிர் கட்சியே இல்லாமல் தான் ஆட்சி புரியவேண்டும் .அதற்க்ககத்தான் அதனை சகோதர கொலைகளும் புரிந்தார் உலகம் எப்படி இருக்கு எங்கே நோக்கி போகின்றது என்பதை பற்றி அவருக்கு அக்கறையே இல்லை .

இவ்வளவு உயிரிழப்புகளும் அழிவுகளும் தனி ஒருவரின் அறியாமையாலும் பேராசையாலும்   தான் வந்தது.

 

 

அப்படியாக இருந்தால் நீங்கள் சொல்லும் கூட்டமைப்பு வடக்கில் போய் பிரபாகரனை பற்றி மிக கேவலமாக உங்களை போல வியாக்கியானம் செய்து பிரச்சாரம் செய்யட்டும் பார்க்கலாம்... 

 

ஏன் கூட்டமைப்பை,  மகிந்தவின் கட்சிக்காறர் தன்னும் புலிகளை பற்றி தரக்குறைவாக பேசி வாக்கு கேட்கட்டும்...   

 

வெற்றி பெற தேவை இல்லை பிரச்சாரம் தன்னும் செய்யட்டும் பார்க்கலாம்...    

 

உங்களின் சகட்டு மேனி முட்டாள் தனத்துக்கு நான் பதில் சொல்வதை விட்டு உங்களின் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன்...  ( வடக்கு தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் முன்னால் என்பது விளங்கும் எண்று நினைக்கிறேன்... ) 

 

சவாலுக்கு தயாரா....??  

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் பேரழிவை வரவேற்ற சங்கரி போன்ற நாதாரிகளுக்கு அரசியல் மறுவாழ்வளிக்கும் சம்பந்தனின் கேடுகெட்ட அரசியலை குள்ள நரித்தனத்தை விட ஆனந்த சங்கரி.. சித்தார்த்தன் போன்ற மனித சமூக.. இன விரோதிகள் இந்தத் தேர்தலில் பங்கெடுப்பது மகிந்த அரசுக்கு சார்ப்பாக வாக்குகளை விழுத்தவே வழி வகுக்கும். இது அரசியல் முள்ளிவாய்க்காலையே தமிழ் மக்களுக்குப் பரிசளிக்கும்.

 

இதைவிட தமிழ் மக்களுக்கு ஒரு விமோசனமும் வரப்போவதில்லை. இந்த நிலையில் தாயகத்தில் ஒரு வலுவான தமிழ் தேசிய அரசியலுக்கான பின்புலத்தை கட்டி வளர்க்க வேண்டிய புதிய பணி அங்குள்ள புத்திசீவிகள்.. சமூக ஆர்வலர்கள்.. வர்த்தகர்கள்.. முன்னாள் போராளிகள்.. மற்றும் தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது..!

 

சம்பந்தனும் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் இதயங்களை விட்டு மிக வேகமாக அகன்று கொண்டிருக்கிறார்கள் என்பதையே இவ்வாறான தெரிவுகள் கட்டியம் கூறி நிற்கின்றன..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடத்தில் இந்த ஆக்கத்தையும் மக்கள் கொஞ்சம் படிப்பது நல்லம்.... சிலவற்றை அசைபோட உதவும்..!

 

ஒப்பற்ற தலைவர் ஆனந்தசங்கரிக்கு அகவை 80ம்: வாழ் விலாங்கு வாழ வாழ்த்துக்கள்

 

anandasangari.01.jpg

அகவை 80 இலும்  வாழ் விலாங்கு வாழும்.. ஒப்பற்ற தலைவர் ஆனந்தசங்கரியுடன் கேள்வியின் ஒரு செவ்வி..

கேள்வி: வணக்கம் தலைவரே...

சங்கரி: வணக்கம். தலைவர் என்ற இந்த வார்த்தையை உங்களிடம் இருந்து வாங்க கடந்த சில தசாப்தங்களாக.. எத்தினை கடிதம் எழுத வேண்டியதாப் போச்சுது..! இருந்தாலும் அதனை மே 2009 இனை உருவாக்கி.. சாதித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சி... தொண்டையை அடைக்கிறது.

கேள்வி: தொண்டையை அடைத்தால்.. நன்றாகச் செருமிக் கொள்ளுங்கள்.  இன்றேல் மூச்சு நின்றுவிடும் சாத்தியம் உண்டு. மேலும்.. அதற்காக நீங்களே பெருமைப்பட்டும் கொள்ளுங்கள். அதுசரி தலைவரே உங்களின் 80 வது அகவை தினத்தில் மலை போல்..மாலைகளும் பொன்னாடைகளும் குவிந்தனவே.. அதைப் பற்றி..

சங்கரி: அது வடக்கில் மீண்டும் ஜனநாயகம் மலர்ந்துள்ளது என்பதை காட்டுகிறது. இவை சயனைட் குப்பி மாலைகளோ.. எல் எம் ஜி துவக்குகளுக்குப் போடும்.. தோட்டா மாலைகளோ அல்ல. மக்கள் மனதில் நான் குடியிருப்பதன் விளைவாக தோன்றிய அன்பின்பால் பெறப்பட்ட ஜனநாயக மாலைகள்.

கேள்வி: ஜனநாயகம் மலர்ந்துவிட்டது என்று கூறுகிறீர்கள். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி இன்னும் சேடம் இழுத்தபடி.. இன்றோ நாளைக்கோ என்று கிடக்கிறதே.. உங்களோடு அதுவும் செத்துவிடும் என்ற பயம் உங்களுக்கு இல்லையா..??!

சங்கரி: என்ன நான் விரைவில் செத்துவிடுவேன் என்று கேள்வி தம்பி நீர் எதிர்பார்க்கிறீரோ..??! எனது இனத்துக்கு ஒரு முடிவு கட்டாமல் நான் சாகமாட்டேன். தமிழர் விடுதலைக் கூட்டணியும் சாகாது.

கேள்வி: எமது இனத்திற்கு ஒரு முடிவு கட்ட இப்போது பலர் புறப்பட்டிருக்கிறார்கள். பொதுபல சேன.. அதுஇதென்று சிங்கள ஆக்களும் சரி.. கடும்போக்கு முஸ்லீம் அரசியல்வாதிகளும் குண்டர்களும் சரி.. உங்களுக்கு இன்று மாலைபோட்ட சித்தார்த்தன் போன்றவர்களும் சரி.. உங்களுக்கு 80 அகவை என்று டன் தொலைக்காட்சியில் பறையடிச்ச டக்கிளசும் சரி....! இவர்களோடு எல்லாம்.. நீங்கள் எப்படி போட்டிபோட்டு எமது இனத்திற்கு ஒரு முடிவு கட்டப்போகிறீர்கள்..?!

சங்கரி: ஆயுதம் தூக்காமல்.. சண்டைபிடிக்காமல்.. பிரபாகரனோடவே பகிரங்கமாகப் போட்டி போட்டு வென்றவன் நான். அப்படிப்பட்ட என்னை.. குறைச்சு மதிப்பிடுகிறீர் தம்பி கேள்வி.

கேள்வி: பிரபாகரன் உங்களை எந்த வகையிலும் ஒரு அச்சுறுத்தல் என்று கருதியதில்லையே. ஆனால் நீங்களாக அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு கொழும்பிடம் தஞ்ச அரசியல் செய்ததாகவே மக்கள் நினைக்கினம்..! இப்போ இந்தியா உட்பட்ட வெளிநாடுகளின் உதவியோடு கொழும்பு கண்ட வெற்றியை உங்களின் வெற்றியாக நீங்கள் காட்டுவது மக்களின் நினைப்பை உண்மை என்று எல்லோ ஆக்கிடும்..??!

சங்கரி: புலிகள் தொடர்பில்.. கொழும்புக்கு என்ன ஐநாவுக்கே அறிவுரை சொன்னவன் நான். புலிகளை அழிக்காமல் ஜனநாயகம் மலராது என்று துணிந்து சொன்னவன் நான். அதனை ஆதரித்தும் சிறுவர் போராளிகள் விடயத்தை புட்டு வைச்சு புலிகளுக்கு கொடுத்த சாட்டை அடி உங்களுக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால்..  யுனஸ்கோவே அதற்காக எனக்கு விருதும் தந்துள்ளது. அப்படி இருக்க நான் கொழும்பின் வெற்றியில் குளிர் காய்கிறேன் என்பது சுத்த பித்தலாட்டக் கதை. உமது காழ்ப்புணர்ச்சி இது.

கேள்வி: சிறுவர் போராளிகள் தொடர்பில் நீங்கள் காட்டிய கரிசணை என்பதனை ஏன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட.. ஊனமடைந்த.. பெற்றோரை இழந்த எமது ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மீது நீங்கள் காட்டவில்லை..??!

சங்கரி: யுத்தம் தான் முடிந்து விட்டதே. அந்தச் சிறுவர்களை.. கெளரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்.. கெளரவ பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் தத்தெடுத்துவிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களின் மனித நேயம் பற்றி நான் நன்கு அறிந்தவன்.

கேள்வி: நீங்கள் ஜனாதிபதி மனித நேயம் மிக்கவர் என்கிறீர்கள்.. ஆனால் புலம்பெயர் தமிழ் மக்களோ.. அவரை மனிதப் படுகொலையாளன் என்றெல்லோ சொல்கிறார்கள்.

சங்கரி: எனது குடும்பத்தினர் உறவினர்கள் என்று பலர் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் யாரும் அப்படிச் சொல்லவில்லையே. அது ஒரு சில புலம்பெயர் படிக்காத மொக்குகளின் தொலைநோக்கற்ற கருத்து.

கேள்வி: சரி அதைவிடுங்கள். இன்று உங்களுக்கு மாலைபோட்ட ஒருவர் பேசும் போது சொன்னார் நீங்களே இன்றைய நிலையில் தமிழினத்தின் "ஒப்பற்ற தலைவர்" என்று. உங்களை எந்தத் தலைவரோடு ஒப்பிட்டு அவர் அதனைச் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறீர்கள்..??!

சங்கரி: வேறு யார். தமிழரசுக் கட்சித் தலைவர் சம்பந்தனோடு ஒப்பிட்டுத்தான்.

கேள்வி: 2000 ஆண்டுகளின் முற்பகுதியில்.. புலிகள் உங்களை அழைத்த போது தமிழர் விடுதலைக் கூட்டணிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெறாமல் கழன்று கொண்ட நீங்கள்.. இப்போது அதனோடு எப்படி இணைந்து பணியாற்ற முன்வந்தீர்கள்..??!

சங்கரி: முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் விட்ட தவறுகளைத் திருத்த ஒரு வாய்ப்பை அளிக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து பணியாற்ற வந்தேன். அதுமட்டுமல்ல.. அன்றிருந்த கூட்டமைப்பு வேறு இன்றிருக்கும் கூட்டமைப்பு வேறு. ஆனாலும் வந்த இடத்தில் எனக்குரிய மரியாதை இன்னும் கிடைக்கவில்லை. இப்படியே போனால் பிரபாகரனுக்குக் காட்டியது போல.. அவர்களுக்கும் சங்கரி என்றால் யார் என்று காட்டுவேன்..!

கேள்வி: புலிகள் இருந்த போது கிளிநொச்சிக்கு போக முடியவில்லை. தேர்தலை சந்திக்க முடியவில்லை... ஜனநாயகத்திற்கு புலிகள் பெரும் தடையாக உள்ளனர் என்று பலவாறு கூப்பாடு போட்டிருக்கிறீர்கள். இன்று நீங்கள் தஞ்சம் அடைந்த கொழும்பின் கைகளில் எல்லா அதிகாரமும் உள்ளது. இந்த நிலையில் ஏன் நீங்கள் வடக்கு முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடவில்லை..??!

சங்கரி: நான் புலிகள் இருந்த போது அப்பப்ப விட்ட சவுண்டை நீர் இன்னும் மறக்கவில்லை. ஆனால் நான் முள்ளிவாய்க்காலோடு அவற்றை மறந்துவிட்டேன் மன்னித்தும்விட்டேன். சுருங்கச் சொன்னால் இப்போது எனக்குப் பதவி ஆசை இல்லை.

கேள்வி: பழம்பெரும் அரசியல்வாதியான நீங்கள் "ஈழத்துக் கருணாநிதி" என்று சொல்லக் கூடிய அளவுக்கு உள்ள நீங்கள்.. உங்களின் அடுத்த வாரிசாக யாரை தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் இழுத்துக்கொண்டு வர நினைத்திருக்கிறீர்கள்...?!

சங்கரி: என்ர மருமக்கள்.. பேரப்பிள்ளைகள் வெளிநாடுகளில் இருக்கினம். அவர்களோடு கலந்தாலோசித்து ஒரு முடிவு எடுப்பேன். இன்னும் அதற்கான காலம் கனியவில்லை.

கேள்வி: சித்தார்த்தன்.. டக்கிளஸ் இவர்களோடு உங்கள் உறவு எப்படி உள்ளது..??!

சங்கரி: என் தம்பிகள் அவர்கள். தங்கக் கம்பிகள்.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பற்றி.. ஓரிரு வரிகள்..

சங்கரி: தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது.. குண்டூசிகள் மத்தியில் உருளும் காற்றடித்த பலூன்.

கேள்வி: இந்தத் தள்ளாடும் வயதிலும் ஓய்வின்றி தமிழர் விடுதலைக் கூட்டணிக்காக உழைக்கும் நீங்கள்.. உங்கள் கட்சியின் முன்னைய தலைவர்கள் பற்றி ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா..??!

சங்கரி: அவர்களின் சொத்தையே நான் அனுபவிக்கிறேன் என்று நன்றி உணர்வோடு.. கூறி வைக்க விரும்புகிறேன்.

கேள்வி: சரி தலைவரே. உங்களோடு உங்களின் 80வது அகவையில் பேசியதை இட்டு மிக்க மகிழ்ச்சி. இது குறித்து..

சங்கரி: இந்த வேளையில் மக்களுக்கு ஒன்றைக் கூறி வைக்க விரும்புகிறேன். நானும் சுப்பிரமணியம் சுவாமியும் ஒன்று. அவரும் சட்டம் படித்தவர்.. நானும் சட்டம் தெரிந்தவன். அவரும் மெத்தப்படித்தவர். நானும் அப்படியே. சுவாமிக்கு கறுப்புச் சட்டைக்காரர்களைப் பிடிக்காது. எனக்குப் புலிப் பினாமிகளைப் பிடிக்காது. கேள்வி நீர் புலிப் பினாமி மாதிரி இருந்து கேள்வி கேட்டிருந்தாலும்.. என் திறமையை முழுமையாகக் கையாண்டு உமக்கு தக்க பதிலடி தந்திருக்கிறேன். இதுவே எனக்கு நானே வழங்கிய.. நல்ல பிறந்த நாள் வைன் ஆகும்..!!

கேள்வி: அந்த வைனை நன்கு சுவைத்தபடி மப்பில் மமதையில்.. மிதக்க .. வாழ் விலாங்கு வாழ வாழ்த்துகிறேன். நன்றி தலைவரே. :)

சங்கரி: கடைசியில் முதுகில் குத்திவிட்டுப் போகிறீர். போம் போம். எனக்கு இது ஒன்றும் புதிதல்ல. நான் பலமுறை செய்ததை நீர் எனக்கே செய்து காட்டுறீர். குட் பாய். :lol:

 

http://kundumani.blogspot.co.uk/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் பற்றியும் விடுதலைப்புலிகள் பற்றியும் வசைபாடித் திரியும் சிலருக்கு யாழ் களம் எந்த வித தடங்கலும் இல்லாமல் பொய்களை அவிழ்த்துவிட உதவுவது வருத்தமளிக்கிறது.

 

தேசிய தலைவர் தானே மக்களை ஆளனும் என்ற எந்த விருப்பத்தையும் கொண்டிருக்கவில்லை. இதனை அவர் 1990களில் பிலிப்பைன்ஸ் தமிழ் மொழி மூல...வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெட்டத் தெளிவாகக் கூறி விட்டிருந்தார்.

 

ஏக பிரதிநிதித்துவம் என்பது தனிக்கட்சி ஜனநாயகம் என்ற அர்த்தப்படுத்தலை சிலர் இங்கு தங்கள் இஸ்டத்திற்குச் செய்கின்றனர். ஏக பிரநிதித்துவம் என்பது தமிழ் மக்களின் அபிலாசைகளை இட்டு எதிர்தரப்போடு பேச பெறப்பட்ட பிரதிநிதித்துவம் ஆகும். மக்கள் சார்பில் ஒத்த குரலை பலமாக ஒலிக்க பெறப்பட்ட ஒன்றாகும். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கடந்த தேர்தல்கள் இரண்டில் தெளிவாக மக்களிடம் சொல்லிச் சென்றிருந்தது. மக்களும் ஏற்று அதற்கு பெருமளவில்.. வாக்களித்திருந்தனர்.

 

இவை எதனையும் விரும்பாமல்.. காட்டிக்கொடுப்பு துரோக அரசியல் செய்தவர்கள்.. இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற தோறணையில் அதே தேசிய தலைவரின் சிந்தனையில் உதித்த செல்வராசா கஜேந்திரன் போன்ற பல்கலைக்கழக மாணவர்களால் மக்கள் முன்னால் கொண்டு வரப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற எண்ணக்கருவின் பின்னால் பதுங்கிக் கொண்டு மக்களிடம் செல்லும் நாதாரி அரசியல்வாதிகள் பற்றி மக்கள் நன்கே அறிந்திருக்கிறார்கள்..!

 

சங்கரி.. சித்தார்த்தன் போன்றவர்கள் கடந்த பல தேர்தல்களில் படுமோசமான தோல்விகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னால் போட்டிக்கு நின்று கண்டவர்கள். மக்களால் மோசமாக வெறுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் தேசியப் போர்வைக்குள் வைத்து மீண்டும் உயிர்ப்பளிக்கும் சம்பந்தனின் இச்செயல் ஒரு இனத்துரோகச் செயல் என்றால் மிகையல்ல..!

 

தமிழ் தேசியம் என்பதையே ஏற்றுக் கொள்ளாத சங்கரியும்.. சித்தார்த்தனும்.. கூட்டமைப்பு வேட்பாளர்களாக எந்தத் தேர்தலிலும் மக்கள் முன் வரத்தகுதியற்றவர்களாவர். இந்த விடயத்தில் மக்கள் அவ்வளவு முட்டாள்களாக இருக்கமாட்டார்கள்..! :icon_idea:

 

உண்மைகள் இப்படி இருக்க சிலர் தேனீ.. நெருப்பு.. தேசத்தில் எடுக்கப்படும் அதே வாந்திகளை யாழிலும் எடுக்க யாழின் நிர்வாகிகள் இடமளிப்பது உண்மையில் தேசிய தலைவரின் போராளிகளின் மக்களின் தியாகங்களை இவர்கள் மதிக்கின்றனரா என்ற கேள்வியையே எழுப்பச் செய்கிறது..!

Edited by nedukkalapoovan

அரசியல் - கொள்கை முரன்பாடுடைய சகல தரப்பினரையும் உள்வாங்கி ஒற்றுமையை வலியுறுத்தும் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள் வரவேற்கத் தக்கது.

 

இருந்தாலும் மனதளவிலும் உடல் நிலையிலும் பலவீனமான 80 வயதைத் தாண்டியவர்கள் எமது மக்களை ஆள வேண்டுமென்ற நிலையிலா நாங்கள் உள்ளோம் ? பொருளாதார அரசியல் இராஜதந்திர நோக்கில் தமிழர்களை வழிநடத்தக் கூடிய நவீன சிந்தனை உடையவர்கள் இல்லையென்பது அல்லது அப்படியானவர்கள் தெரிவு செய்யப்படாமை ஒட்டுமொத்த ஈழத் தமிழ் சமூகத்தின் பலவீனத்தையே குறிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியல் அமைப்பு தெரிந்தவர்கள் கூறுங்கள் மாகான சபை தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் கட்சி தாவ முடியுமா?

அப்பிடி தாவினால் அவர்களின் பதவியை பறிக்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் சாணக்கியம் என்பது இணக்க அரசியல் அதனால் அவருடைய தெரிவுகளும்

அப்படி இருக்கின்றது. இப்போது தமிழ் மக்களை  சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் 

தமிழ் அரசியல்வாதிகளும் ஏமாற்ற முயற்சிக்கின்றனர்.

 

எத்தனை முறைதான் இவர்கள் மக்களை ஏமாற்றலாம் என்பதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இது.

 

வட மாகாண சபையை மகிந்த கைப்பற்றுவதற்கு சம்பந்தர் உதவி செய்பவராக இருந்தால்

அடுத்த தேர்தலில் சம்பந்தரை மகிந்தவாலும் காப்பாற்ற முடியாது.

அர்யுன் போன்ற நண்பர்களுக்கு  தமிழீழ விடுதலை போராட்டம் எந்த தமிழர்களிற்கும் அந்நியமானது அல்ல. கருவிலுள்ள சிசுக்கள் கூட மிகக் கொடூரமாக எம் மண்ணில் கொல்லப்பட்டார்கள் அவர்கள் தமிழர்கள் என்ற ஒற்றை காரணத்துக்காக. எம் மக்களுக்காகவே எம் இளையவர்கள் போராடினார்கள்..எம் மக்களும் தம் உயிர் அள்ளிக் கொடுத்தார்கள். எம் இனத்தின் தலை நிமிர்வுக்காக ஆகுதியான மான மாவீரர்கள் மக்கள் எல்லோரையும் எம் நெஞ்சில் அல்ல உயிரில் சுமந்த படி தமிழனாய் பிறந்த பிஞ்சு முதல் மூத்தோர் வரை உணர்வோடு களமிறங்கி போராட முன் வருவோம்! வர வேண்டும். இது ஒட்டு மொத்த தமிழர்களதும் போராட்டம்! போராளிகள் பார்ப்பார்கள் என எம் மக்கள் எம் கடனை புறமொதுக்க மாட்டோம்! கூடவே நிற்போம்! அறம் வெல்லும்! நீதி வெல்லும்! எம் மக்களுக்கு விடுதலை கிடைத்தே தீரும்! அது வரை எம் போராட்ட வடிவங்கள் மாறினாலும் எம் போராட்டம் ஓயாது!,
179753_522944534426400_598207137_n.jpg
 

 

இலங்கை அரசியல் அமைப்பு தெரிந்தவர்கள் கூறுங்கள் மாகான சபை தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் கட்சி தாவ முடியுமா?

அப்பிடி தாவினால் அவர்களின் பதவியை பறிக்க முடியுமா?

இது உங்களுக்கே தெரிந்த விசயம் தான்...

மகிந்தவின் கூட்டணியில் இருந்து முஸ்லீம் காங்கிரசோ, மலையக மக்கள் முன்னணியோ, EPDP யோ எப்போது வேண்டுமானாலும் வரலாம் போகலாம்...

அதே போல தான் கூட்டமைப்பு.... அது பதிவு செய்யப்பட்ட கட்சி கிடையாது... அங்கம் வகிக்கும் கட்சிகள் விரும்பினால் தமிழரசு கட்ச்சியின் வீட்டு சின்னத்தின் போட்டி இடலாம்... கட்டாயம் கிடையாது ஏற்படுத்தப்படும் ஒப்பந்தங்களை பொறுத்தது அது...

அதில் உதாரணமாக கூட்டணி தனது உதயசூரியன் சின்னத்தை கைவிடப்போவதில்லை... தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டி இடாமல் தனி சின்னத்தில் போட்டி இடுவதின் மூலம் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் விலக முடியும்...

அதே போல தமிழரசு கட்சி சின்னத்தில் போட்டி இட்டு வெல்பவர்களில் மூண்றில் ஒரு பங்கு விகிதமானோர் ஒண்றாக சேர்ந்து வெளியேற இடம் உண்டு...

77 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களுமே ஜனநாயக பண்பு அற்றவை .வெற்றிபெற்ற EROS,ENDLF, EPDP எல்லாம் இதில் அடங்கும் .

 

கனவில் வாழ்பவர்களுக்கும், முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுபவர்களுக்கும் பதில் எழுதி நேரத்தை வீணடிக்கவிரும்பவில்லை .

 

காலத்தின் தேவைக்கேற்ப தமிழ் தேசியம் கூட்டணியாகவும் கூட்டமைப்பாகவும் உருவெடுத்தது .

சம்பந்தரும் சுரேசும் செல்வமும் புலிகளின்  ஆதரவாகத்தான் கூட்டமைப்பில் இணைந்தவர்களில்லை .உயிருடன் அத்துடன் அரசியலிலும் இருக்க வேண்டிய தேவை அவர்களை அப்படி தள்ளியது .அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்கள் .இதை புரியாத பிரபாகரன் தான் தோல்வியுற்றார் .இந்தியாவிற்கு கூட்டமைப்பு விஜயம் செய்யும் போது புலிகள் சார்பாக கதைத்தார்களா அல்லது புலிகளை அழிக்க சொல்லி கதைத்தார்களா என்று நான் சொல்லி நீங்கள் அறிய தேவையில்லை .

புலிகளின் அழிவிற்கு பின் தமிழனின் விடிவிற்கான வெளிச்சம் தெரிகின்றது .அதில் புலிகளின் பங்கும் அடங்கும் .

பிரபாகரனை மட்டும் அல்ல அமிரை ,யோகேஸ்வரனை ,உமாவை ,பத்மநாபாவை ,சிறி சபாரத்தினத்தை எவரை கேவல படுத்தியும் வடக்கில் வாக்கு கேட்க மாட்டார்கள் காரணம் எல்லோருமே தமிழனின் விடிவிற்காகவே உழைத்தவர்கள் என்று அனைத்து மக்களும் அறிவார்கள் .

புலிகள் மட்டுமே தம்மை தவிர மற்றவனை துரோகியாக பார்த்த இயக்கம் .

அருச்சுனுக்கு நடப்பது விளங்கவில்லை. அதனால் வடமகாண தேர்தலை பற்றி நிறைய குழப்பமாக புரிந்துவைத்திருக்கிறார்.  மாவை மட்டுமல்ல தமிழரசுக்கட்சி நிறைய விட்டுக்கொடுப்புகளை செய்கிறது. இந்த சிக்கல் ஏற்படுவது தமிழரசுக்கட்சி முகம் காட்ட வேண்டிய நிலையை ஆனந்த சங்கரி ஏற்படுத்தியதனாலாகும். ஆனந்த சங்கரி கூட்டணியை பிரிக்க முயலாவிட்டால் கூட்டமைப்பை பதிவதில் சில சிக்கல்களை தவிர்த்திருக்கலாம். செல்வா காலம் மாதிரியே மலையகத் தமிழரையும் உள்ளடக்கியிருக்கலாம். 

 

இனி கூட்டமைப்பை பதிவதில்மேற்கு நாடுகளின் வாழ்த்து கிடையாமல்  புதிய சிக்கல்கள் வரும். அரசு, பதிவது தனக்கு நன்மையானால் பதியவிடும், இல்லையேல் தடுக்கும்.  இந்த சிக்கலை  கிரகிக்கும் சின்ன கட்சிகள், தீர்வின் முன் தாம் ஒத்துழைக்க தயாரானாலும் தீர்வின் பின் தமது நிலை என்ன என்று பயப்படுகிறார்கள். எனவே வீட்டு சின்னத்தில் போட்டியிட அவர்கள் தமிழரசுக்கட்சியிடமிருந்து இரத்தமும் தசையும் கேட்க வேண்டும் என்று அவசரப்படுகிறார்கள்.  இந்த நிலையில் தன் உயர் நிலையைப் பாதுகாக்க தமிழரசுக்கட்சி தன் பழைய புகழில் தங்கப் பார்க்கிறது. இதனால் இங்கே ஒரு விசஸ் வட்டம் உருவாகிறது.  

 

உயிருக்குப் பயந்து ஒதுங்கியவர்களை வென்றவர்கள் என்று அழைப்பதில்லை. தப்பி ஒட்டி உயிர் வாழ்கிறார்கள் என்றுதான் அழைப்பது. ஒரு இனத்துக்காக போராடிய கூட்டத்தில் ஒருவன் இறந்தால் அது தோல்வியும் அல்ல.

 

சம்பந்தர் போராட்டம் இராஜதந்திர வடிவம் எடுத்திருக்கு என்று எத்தனையோ மேடைகளில் சொல்லிவிட்டார். அருச்சுன் செய்தி வாசித்து கருத்து எழுதுவதில்லை.  தமிழர் தோற்கவுமில்லை; பிரபாகரன் தோற்கவுமில்லை.

 

கனவு கண்டவர்கள், சோனியாவின் பழிவாங்கல் நடத்தைகளை இந்திய புவிசார் பாதுகாப்பு கொள்கைகளாக படம் காட்டியவர்கள் மட்டுமே.  சிவசங்கர் மேனன், மகிந்தாவை, இந்திய தேர்தல் முடியும் வரையும் 13ம் திருத்தத்தை அகற்ற வேண்டாம் என்றும், இதனால் காங்கிரஸ் தோற்கும் நிலைவந்தால் இந்தியா தலையிடும் என்று கூறியதாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளிவிடுகின்றன.  ஏனவே மத்திய அரசின் தேர்தலின் பின்னர் கூட்டமைப்பு தனது கொள்கைகளில் பாரிய மீளாய்வு செய்ய வேண்டி வரும். வடக்கு மாகாண சபையை அரசுக்கு கொடுக்க வேண்டியும் வரும். அப்போது திரும்ப இன்னொரு வரதர் கலம் வரலாம் கூட. அது எப்படி இருக்கப்போகிறது என்று அருச்சுன் எழுதினால் அவருக்கு அரசியல் புரிகிறது என்று அர்த்தம். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் மட்டுமே தம்மை தவிர மற்றவனை துரோகியாக பார்த்த இயக்கம் .

 

 

நானறிய எல்லா இயக்கமும் புலிகளையும் புலிகளின் ஆதரவாளர்களையும் அழித்தன அல்லது இலங்கை இந்திய படையிடம் காட்டிக்கொடுத்தன.இது 100% உண்மை. இல்லை எனில் நிரூபியுங்கள்  நீங்கள் உத்தமர் என. 

விகிதாசார தேர்தலில் ஒரு வாக்கைகூட இழக்கமுடியாது .இதில் ஆனந்தசங்கரி ,சித்தார்த்தன் போன்றவர்களை உள்வாங்காமல் விட்டால் இவர்கள் தனியநின்று வாக்குகளை பிரிப்பார்கள் யாழ்.இணையத்தில் வீரவசனம் பேசுகின்றவர்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது .செயலில் காட்டுங்கள் பார்ப்பம் .அதாவது கிளிநொச்சியில் கேட்கும் ஆனந்தசங்கரிக்கெதிராக பிரச்சாரம் செய்து தோற்கடியுங்கள் .ஸ்ரீதரன் MP முலமாக இதை செய்யமுடியும் .

 

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி

நாட்டத்திற் கொள்ளா ரடீ! – கிளியே!
நாளும் மறந்தா ரடீ!

Edited by Gari

77 ஆம் ஆண்டிற்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களுமே ஜனநாயக பண்பு அற்றவை .வெற்றிபெற்ற EROS,ENDLF, EPDP எல்லாம் இதில் அடங்கும் .

ஒரு அரை குறை தனமான வியாக்கியானம் இது... சரியான கொள்கை இல்லாதவர்கள் இப்படி தான் தொப்பியை மாத்தி மாத்தி போடுவார்கள்...

1989 ம் ஆண்டு தேர்தல் வட கிழக்கில் இந்திய படையினரின் கண்காணிப்பில் நடந்தவை... அதாவது உலகின் பெரிய ஜனநாயக நாடு எண்று சொல்லும் இதியாவின் கண்காணிப்பில்...

புலிகளை மக்கள் ஆதரிப்பதில்லை தமிழரசு கட்ச்சியின் மீதான ஆதரவு எண்ற உமது பழைய வாதம் உமது மேலிருக்கும் வாதத்தின் மூலம் அடிபட்டு போகிறது...

நடந்த 1977 லும் கூட அமீரி, மாவை போண்றவரின் ( அதேகால திமுக வகை) வீரவசனங்களுக்கு வாக்குக்கள் விழுந்ததே அண்றி அவர்களை நம்பி அல்ல...

இங்கை நேரத்துக்கு ஒரு மாதிரி தண்ணியை போட்டு பினாத்தும் குடிகாறனின் நிலைதான் இது...

 

புலிகள் மட்டுமே தம்மை தவிர மற்றவனை துரோகியாக பார்த்த இயக்கம் .

அப்போ PLOTE தனது உறுப்பினர்களையே ஏன் போட்டு தள்ளியது....??

 

கனவில் வாழ்பவர்களுக்கும், முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுபவர்களுக்கும் பதில் எழுதி நேரத்தை வீணடிக்கவிரும்பவில்லை .

சொந்தமாக கருத்து கிடைக்காமல் நேரத்துக்கு ஒருதரம் கருத்தை திரிவு செய்யும் பழய PLOTE பித்தலாட்டமும் இயலாமையின் வெளிப்பாடு... இலவசமாக சோத்து பாசல் வாங்க கப்பலில் ஆயுதம் வருகுது எண்டு சனத்திட்ட சொன்ன அதே பொய் பித்தலாட்டதின் தரம் இதிலும்...

PLOT எண்றாலே சதிதானே...??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

விகிதாசார தேர்தலில் ஒரு வாக்கைகூட இழக்கமுடியாது .இதில் ஆனந்தசங்கரி ,சித்தார்த்தன் போன்றவர்களை உள்வாங்காமல் விட்டால் இவர்கள் தனியநின்று வாக்குகளை பிரிப்பார்கள் யாழ்.இணையத்தில் வீரவசனம் பேசுகின்றவர்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது .செயலில் காட்டுங்கள் பார்ப்பம் .அதாவது கிளிநொச்சியில் கேட்கும் ஆனந்தசங்கரிக்கெதிராக பிரச்சாரம் செய்து தோற்கடியுங்கள் .ஸ்ரீதரன் MP முலமாக இதை செய்யமுடியும் .

 

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி

நாட்டத்திற் கொள்ளா ரடீ! – கிளியே!

நாளும் மறந்தா ரடீ!

 

அதே நேரம் ஆனந்த சங்கரியை தனிய கேட்கவிட்டு அவருக்குப் பதிலாக சிறீதரன் கூட்டமைப்பின் மூலம் நிறுத்தும் வேட்ப்பாளரை நீங்கள் தோற்கடித்துக் காட்டுங்கள்...!

 

சங்கரி தனிய நின்றால்.. விழும் 100 வாக்குகளால்.. எதுவும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. சங்கரிக்கு பெரிய வாக்கு வங்கி உள்ளது போன்ற மாயத் தோற்றம் இங்கு காட்டப்படுகிறது. அப்படி இருந்தால் சங்கரி புலிச்சாயம் பூசப்பட்டுள்ள.. கூட்டமைப்பில் நிற்கமாட்டார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தனிய நின்று டெப்பாசிட் இழந்த ஒருவர் அவர்..!

 

மேலும் சங்கரி.. சித்தார்த்தன் போன்றோர் இந்தத் தேர்தலில் வென்றாலும்.. கூட்டமைப்பில் நிலைப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மக்களுக்காக என்று சொல்லி மகிந்த பக்கம் சாய்ந்து  சுயநல அரசியல் ஆதாயம் தேடுவார்களே அன்றி.. நிச்சயம் மக்களுக்காக ஒற்றுமையாக நிற்கக் கூடியவர்கள் அல்ல. ஏனெனில் அதற்கான வாய்ப்பை கடந்த காலங்களில் பலமுறை தவறவிட்டவர்கள் இவர்கள்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

அதே நேரம் ஆனந்த சங்கரியை தனிய கேட்கவிட்டு அவருக்குப் பதிலாக சிறீதரன் கூட்டமைப்பின் மூலம் நிறுத்தும் வேட்ப்பாளரை நீங்கள் தோற்கடித்துக் காட்டுங்கள்...!

ஸ்ரீதரன் MP க்கு எதிராக நான் ஏன் இதை செய்யவேண்டுமநான் எங்கேயும் இப்படியான கருத்தை சொல்லவில்லை 

தங்கள் பிரதிநிதிகள் யாரென்பதை அந்தந்தப் பகுதி மக்கள் தீர்மானிக்கட்டும்.

 

எதிலும் குற்றம் பிடிப்பவர்கள் சந்தர்ப்பம் வரும் பொழுது அதை சரியாக பயன்படுத்த தெரியாமல் குதர்க்க ஞாயம் கதைக்கத்தான் லாயக்கு .

வென்றால் அடுத்த நாள் சித்தார்த்தன் மீது அரசு வழக்கு பதியும். அத்தோடு அவரின் கதை உதயன் மாதிரித்தான்.  ஆனந்த சங்கரிக்கு அவ்வளவத்துக்கு அரசு மினக்கெடத்தேவை இல்லை. ஒரு பிளா பனங்கள்ளுக்குக் காணும்.

 

ஆனால் கூட்டமைப்பு என்ற தேரை தமிழ் மக்கள் தொடர்ந்து இழுப்பதால் மட்டும்தான் மேற்குநாடுகளுக்கு தமிழரின் அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்க முடியும். (அவர்களின் ஜனநாயகம் போட்டிப்பந்தயத்தில் ஆவது - Power Balance. நமது ஜன்நாயகம்   நமது சைவ மதம் மதம் மாதிரியே மான்சீகமானது). தமிழர்சுக்கட்சி என்ற சொல்ல காணாது. எவ்வளவுக்கு அது விஸ்தாரணமாக இருந்தாலும் அது முழு தமிழ் மக்களையும் கூட்டமைப்பு மாதிரி பிரதி பலிக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.