Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம் சமூகத்திற்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய கடமை

Featured Replies

சர்வதேசத்தினால் உற்று நோக்கப்படும் வடமாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் பழுத்த பழங்களுக்கே முன்னுரிமை அளிப்பதை விடுத்து மாறாத கொள்கையும் உறுதியான வெற்றிவாய்ப்பும் படைத்த பல்கலைக்கழகத்தின் இளம் சமூகத்திற்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய கடமை என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூன்று தசாப்த காலமாக இலங்கைத் தீவை ஆக்கிரமித்திருந்த போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சர்வதேசத்திடமிருந்து விஸ்வரூபம் எடுத்துள்ள அழுத்தங்களினால் இலங்கை அரசாங்கமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களினை நடத்துவதற்கு முன்வந்ததன் தொடர்ச்சியாக இழுபறி நிலையிலிருந்த வடமாகாண சபைக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், தமிழ் மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்றதும் மிக நம்பிக்கைக்கிரியதுமான ஒரு பெரும் கட்சியானது தனது வேட்பாளர் தெரிவு தொடர்பாக தொடர்ந்து இழுபறி நிலையிலேயே சென்று கொண்டிருக்கின்றது.

இதன் தொடக்கமாக பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பின் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் வேட்பாளர் தொடங்கி யாழ். மாவட்டத்திற்கான வேட்பாளர் தெரிவு வரை இந்நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது.

தமிழ்த் தேசியத்திற்கான குரலாக மக்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பெரும் கட்சியானது தனது கொள்கை நிலைபாடு என்ன? என்பதையும் கடந்து செயல்படுகின்றதா? என ஐயுறவைக்கின்றது இம்முறை வேட்பாளர் தெரிவு.

கடந்த காலங்களில் தமிழ் தேசியத்தை தூற்றித் திரிந்தவர்களுக்கு இடமளித்தும் தொடர்ந்தம் தமிழ் தேசியத்திற்காய் குரல் கொடுபோரை பாராமுகப்படுத்துவதும் இக் கட்சியின் தற்போதைய பாரம்பரியமாக மாறியுள்ள மையானது வருத்தப்பட வைக்கின்றது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமானது தமிழ் தேசிய நீராட்டப் பாதையில் தனது பங்களிப்பினை எவ்வாறெல்லாம் ஆற்றியிருந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை

தேசியப் பிரச்சினையில் மாறாத கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஸ்திரத்தன்மையினை இன்றுவரை மாறாப் பண்போடு காணலாம். தமிழ் பேசும் மக்களது தீர்வுத் திட்டங்களோடு யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பினை யாரும் இலகுவில் மறந்து விட முடியாது.

போரிற்குப் பின்னரான இன்றைய சூழ்நிலையில் இக்கட்சியானது சகல தமிழ்க் காட்சிகளினையும் இனைத்துக் கொண்டமையானது ஒரு பக்கம் பாராட்டுக்குரிய விடயமாகும். அதே நேரம் இந்த ஒற்றுமையானது தொடர்வதோடு இக்கட்சிக்கென உண்டான கொள்கை நிலைப்பாடுகளை தொடர்ந்தும் தக்கவைத்தக் கொள்வது இந்த ஒன்றினைவின் வெற்றியும் எமது எதிர்பார்ப்புமாகும்.

தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகமானது அன்றிலிருந்து இன்று வரை மாறாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கையில் தமிழ் மக்களால் நேசிக்கப்படும் ஒரு பெரிய கட்சியானது யார் தேசியத்திற்குரியவர்கள் என்ற தெரிவு பல இன்னல்களிற்கு மத்தியிலும் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் யாழ். பல்கலைக்கழக கல்விச் சமூகத்தின் இளையோர்களை தனது தெரிவிற்கு உள்ளடக்க வேண்டியது அக் கட்சியின் தலையாய கடமையாகும்.

ஏனெனில் தமிழ் மக்களின் பிரதான குரல்களாக இருக்கும் ஒரு பெரும் அமைப்புகளில் இக்கட்சியும் யாழ் பல்கலைக்கழக சமூகமுமேயாகும்.

இந்த வகையில் சர்வதேசத்தினாலேயே உற்று நோக்கப்படும் வடமாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் பழுத்த பழங்களுக்கே முன்னுரிமை அளிப்பதை விடுத்து மாறாத கொள்கையும் உறுதியான வெற்றிவாய்ப்பும் படைத்த பல்கலைக்கழகத்தின் இளம் சமூகத்திற்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க வேண்டியது இக்கட்சியினருக்கு நாம் விடுக்கும் அவசர வேண்டுகோளாகும்.

இதை கருத்திலெடுக்காத பட்சத்தில் வடமாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் கொண்டுள்ள அக்கறை தொடர்பில் மக்களும் யாழ்.பல்கலைக்கழ்க சமூகமும் மீள்பரிசீலனை செய்யவேண்டிய ஒரு துர்பாக்கிய நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.sankathi24.com/news/31783/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாம் சம்பந்தனைப் பொறுத்தவரை செவிடன் காதில் ஊதிய சங்கு.

எம் அரசியல்வாதிகளோடு வார்த்தைகளால் பேசி பயனில்லை. ஒரு பிஸ்ரலால் பேசினால் நின்று நிதானிச்சுக் கேட்பார்கள். அந்தளவுக்கு தான் அவர்களின் மக்கள் மீதான ஜனநாயக அக்கறை என்பது உள்ளது..! :icon_idea:

இதனால் தான் அன்றும் இளைஞர்கள் எதிரிக்கு எதிராக தூக்கிய துப்பாக்கிகளை இவர்களை நோக்கி நீட்ட வேண்டி வந்தது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தெரிபவர்களில் புலி ஆதரவாளர்கள், பல்கலைகளக மாணவர்கள், சமூக சேவகர்கள்,  துடிப்பான தேசப்பற்றுள்ள இளைஞர்கள், பெண்கள் பெரும்பாலும் இடம்பெற மாட்டார்கள்.  அவரின் தெரிவு வயோதிபர்கள்,ஒட்டுக்குழுக்கள், வடக்கு கிழக்கில் பிறக்காதவர்கள்,சட்டத்தரணிகள் தான் இடம்பெறுவார்கள். 

எடுத்ததுக்கெல்லாம் குறை சொல்லி பழக்கப்பட்டுவிட்டது .இதை வடமாகாண தேர்தல் வரப்போகுது என்று அறிவிப்பு வந்தவுடன் உண்மையிலே அக்கறை யுள்ளவர்கள் தமிழ்தேசிய கூட்டமைபினருடன் தங்கள் கோரிக்கையை முன்வைத்து அழுத்தங்களை பிரயோகித்து எப்படி முதலமைச்சரை பொது வேட்பாளராக தெரிவு செய்தார்களோ அதேபோல பல்கலைக்கழக மாணவரையும் இணைத்திருக்கமுடியும் .

 திருகோணமலையில் தகுதியானவரை தலைமை வேட்பாளராக களமிறக்க நான் அழுத்தத்தை பிரயோகித்து நானே அவரை தலைமைக்கு முன்மொழிந்தேன் .இதேபோல திருமலை பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு தங்களுக்கு இடம் தரவேண்டுமென கேட்டுபெற்று அவரையும் வெல்லவைத்தனர் .
 
திருமலையில் வென்ற முவரும் தமிழரசு கட்சியை சேர்த்தவர்கள் .

Edited by Gari

எம் அரசியல்வாதிகளோடு வார்த்தைகளால் பேசி பயனில்லை. ஒரு பிஸ்ரலால் பேசினால் நின்று நிதானிச்சுக் கேட்பார்கள். அந்தளவுக்கு தான் அவர்களின் மக்கள் மீதான ஜனநாயக அக்கறை என்பது உள்ளது..!  :icon_idea:

உங்கள் சிந்தனையை செயல் படுத்தினால் அதில் ஒரு கிக் இருக்கும்  :icon_idea: 

மூன்று தசாப்த காலமாக இலங்கைத் தீவை ஆக்கிரமித்திருந்த போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சர்வதேசத்திடமிருந்து விஸ்வரூபம் எடுத்துள்ள அழுத்தங்களினால் இலங்கை அரசாங்கமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்களினை நடத்துவதற்கு முன்வந்ததன் தொடர்ச்சியாக இழுபறி நிலையிலிருந்த வடமாகாண சபைக்கான தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எழுத்தில் வாசிக்க...http://tamilworldtoday.com/?p=24478

jaffna_uni_repoter_001.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இது இறுதித் தருணம். யாழ்பல்கலைக் களக சமூகத்தைச் சேர்ந்த மேற்படி கட்ச்சி உறுப்பினர்கள்/ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து மட்டுமே யாராவது இத்தகைய ஒரு தெரிவுக்கு முன்மொழியப்படலாம்.

இந்த வகையில் முன்னைநாள் யாழ்பல்கலைக் களக மாணவர் சங்க தலைமைச் செயல்பாட்டாளரும். தமிழ் தேசிய அமைப்பின்  நீண்ட கால ஆதரவாளரும் உலகறிந்த தமிழ் தேசிய செயல்பாட்டளரும் கவிஞர் தீபச் செல்வனை மாகாண சபைத் தேர்தல் வேட்பாளராக்கும் வண்ணம் முன்மொழிகிறேன்

- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்.

இது இறுதித் தருணம். யாழ்பல்கலைக் களக சமூகத்தைச் சேர்ந்த மேற்படி கட்ச்சி உறுப்பினர்கள்/ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து மட்டுமே யாராவது இத்தகைய ஒரு தெரிவுக்கு முன்மொழியப்படலாம். [/size]

இந்த வகையில் முன்னைநாள் யாழ்பல்கலைக் களக மாணவர் சங்க தலைமைச் செயல்பாட்டாளரும். தமிழ் தேசிய அமைப்பின்  நீண்ட கால ஆதரவாளரும் உலகறிந்த தமிழ் தேசிய செயல்பாட்டளரும் கவிஞர் தீபச் செல்வனை மாகாண சபைத் தேர்தல் வேட்பாளராக்கும் வண்ணம் முன்மொழிகிறேன் [/size]

- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்.[/size]

இதை முன்பு செய்திருக்க வேண்டும் .முதலில் சம்பந்தபட்டவர்களின் விருப்பு பெறப்படவேண்டும் .அந்தந்த பிரதேசத்தை சாந்தவர்கள்  யாராவது அக்கறை எடுத்து செயல்பட்டிருந்தால் கூட்டமைப்பின் தலைமையின் கவனத்திற்கு அல்லது மாவையின்கவனத்திற்குதெரியப்படுத்தியிருக்கலாம் .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரிதான் கிரி, தீபசெல்வன் பல்வேறு பரிமானங்களைக் கொண்டவர் துணிச்சலான தமிழகம் உலகம் அறிந்த  ஈழ தேசியவாதி.  மானவர் தலைவனும் கலைஞனுமான தீபச் செல்வனை வேட்ப்பாலர் ஆக்குவது தொடர்பாக தொடர்பாக சம்பந்தர், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமசந்திரன் , அடைக்கலநாதன் போன்றவர்களிடம் யாழ்பல்கலைக் களக மானவர் பேரவை பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென்று பணிவுடன் வேண்டுகிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன்

  • கருத்துக்கள உறவுகள்
தீபச்செல்வன் இந்தியாவில் உள்ளார். மகிந்த அரசை கடுமையாக  விமர்சிப்பவர். இவரின் பாதுகாப்பு சிறிலங்காவில் கேள்விக்குறியாக உள்ளது.
 
குறை சொல்கிறோம் என்பதை விட ஒரு ஆதங்கம், அக்கறை என குறிப்பிடலாம். 
 
கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதால்  பல்வேறு வகைப்பட்ட சமுக அமைப்பில் உள்ளவர்களை வேட்பாளர்களாக இணைப்பது மிக கடினம்.நடைமுறை சாத்தியமற்றது. சங்கரி, சித்தார்த்தன் போன்றோர் தனித்து வெல்ல முடியாததால் தான் கூட்டமைப்பின் மீது சவாரி செய்ய  புறப்பட்டுள்ளார்கள்.முதலில் இவர்களை கட்சியில் இணைத்த பின் இவர்களின் செயற்பாட்டின் பின் கட்சியில் ஆசனம் கொடுக்க வேண்டும். இது கட்சியில் சேர்ந்து வென்றவுடன் அரசுடன் போய்ச்சேரக்கூடிய கூட்டம் தான் இவர்கள்.சங்கரியின் கடந்த கால அறிக்கைகளை வாசித்தால் தெரியும்.கோத்தபாய கூட தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வளவு அறிக்கை வெளியிட்டதில்லை. 

இந்த செய்தியை சம்பந்தர் ஐயா ,மாவை அண்ணனின் கவனத்திற்கு கொண்டுபோக முயற்சி செய்கின்றேன் .எந்தளவுக்கு செயல் இருக்கும் என்று சொல்ல முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

அவன் நேசிக்கும் வன்னியில் குடியிருக்க ஒரு துண்டு நிலம் வாங்க 7 லட்ச்சம் ரூபா கடன்பெற அவன் ஓடித்திரிந்தபோது உதவமுடியாத துயரம் இப்பவும் என் நெஞ்சை கருக்குது.நான் நிலமற்றவனாகவே வாழ்ந்துவிடுகிறேன் என்று அவன் முடிவெடுத்தபோது கண்கலங்கினேன். வன்னி ஏழைகளதும் பாட்டாளிகளதும் வாழ்வைப் பகிர்ந்துகொண்ட கலைஞன். தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்துக்கும் தேசியத்துக்கும் உழைக்கக்கூடியவன் நமக்காக குரல்கொடுக்க பொருத்தமானவன் என்பதினாலேயே அவனது பெயரை முன்மொழிந்தேன்

Edited by poet

தீபச்செல்வன் இந்தியாவில் உள்ளார். மகிந்த அரசை கடுமையாக  விமர்சிப்பவர். இவரின் பாதுகாப்பு சிறிலங்காவில் கேள்விக்குறியாக உள்ளது.

குறை சொல்கிறோம் என்பதை விட ஒரு ஆதங்கம், அக்கறை என குறிப்பிடலாம். 

கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதால்  பல்வேறு வகைப்பட்ட சமுக அமைப்பில் உள்ளவர்களை வேட்பாளர்களாக இணைப்பது மிக கடினம்.நடைமுறை சாத்தியமற்றது. சங்கரி, சித்தார்த்தன் போன்றோர் தனித்து வெல்ல முடியாததால் தான் கூட்டமைப்பின் மீது சவாரி செய்ய  புறப்பட்டுள்ளார்கள்.முதலில் இவர்களை கட்சியில் இணைத்த பின் இவர்களின் செயற்பாட்டின் பின் கட்சியில் ஆசனம் கொடுக்க வேண்டும். இது கட்சியில் சேர்ந்து வென்றவுடன் அரசுடன் போய்ச்சேரக்கூடிய கூட்டம் தான் இவர்கள்.சங்கரியின் கடந்த கால அறிக்கைகளை வாசித்தால் தெரியும்.கோத்தபாய கூட தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வளவு அறிக்கை வெளியிட்டதில்லை.

உங்களின் ஆதங்கம் புரிகின்றது .இவர்களை உள்வாங்கி அழிக்கவேண்டும் .அதனாலதான் வேறொரு திரியில் சிலகருத்தை முன்வைத்தேன் .சிலவிடயங்களை பணத்தால் தான் செய்யமுடியும் .ஒவ்வொருமுறை தேர்தல்களில் நான் முன்னால் செல்லும் போது தேசியத்தை நேசிக்கும் என் நண்பர்கள் கைகொடுப்ப்பதால் என்னால் சாதிக்கமுடிகிறது .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125966&hl=

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வன் இந்தியாவில் உள்ளார். மகிந்த அரசை கடுமையாக  விமர்சிப்பவர். இவரின் பாதுகாப்பு சிறிலங்காவில் கேள்விக்குறியாக உள்ளது.
 
குறை சொல்கிறோம் என்பதை விட ஒரு ஆதங்கம், அக்கறை என குறிப்பிடலாம். 
 
கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவதால்  பல்வேறு வகைப்பட்ட சமுக அமைப்பில் உள்ளவர்களை வேட்பாளர்களாக இணைப்பது மிக கடினம்.நடைமுறை சாத்தியமற்றது. சங்கரி, சித்தார்த்தன் போன்றோர் தனித்து வெல்ல முடியாததால் தான் கூட்டமைப்பின் மீது சவாரி செய்ய  புறப்பட்டுள்ளார்கள்.முதலில் இவர்களை கட்சியில் இணைத்த பின் இவர்களின் செயற்பாட்டின் பின் கட்சியில் ஆசனம் கொடுக்க வேண்டும். இது கட்சியில் சேர்ந்து வென்றவுடன் அரசுடன் போய்ச்சேரக்கூடிய கூட்டம் தான் இவர்கள்.சங்கரியின் கடந்த கால அறிக்கைகளை வாசித்தால் தெரியும்.கோத்தபாய கூட தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வளவு அறிக்கை வெளியிட்டதில்லை. 

தீப செல்வன் நாட்டில் வாழ்கிறார். தீப செல்வன் ஊடகவியலில் MA கல்விக்காகவே இந்தியா வந்திருந்தால். அது முடிந்து அவர் வன்னிக்கு திரும்பிச் சென்று பல மாதங்களாகிறது. Phd வாய்ப்புகள் இருந்தாலும் அவர் வன்னியை விட்டு வர விருப்பமில்லையென்று எழுதினார். அச்சமில்லாதவர். அவரை ஆதரிக்குமாறு நிர்வாகத்தையும் நெடுக்ஸ் மல்லையூரான் உட்பட அனைத்து யாழ்சமூகத்தையும்  பணிவுடன் வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இது இறுதித் தருணம். யாழ்பல்கலைக் களக சமூகத்தைச் சேர்ந்த மேற்படி கட்ச்சி உறுப்பினர்கள்/ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து மட்டுமே யாராவது இத்தகைய ஒரு தெரிவுக்கு முன்மொழியப்படலாம்.

இந்த வகையில் முன்னைநாள் யாழ்பல்கலைக் களக மாணவர் சங்க தலைமைச் செயல்பாட்டாளரும். தமிழ் தேசிய அமைப்பின்  நீண்ட கால ஆதரவாளரும் உலகறிந்த தமிழ் தேசிய செயல்பாட்டளரும் கவிஞர் தீபச் செல்வனை மாகாண சபைத் தேர்தல் வேட்பாளராக்கும் வண்ணம் முன்மொழிகிறேன்

- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்.

பொய‌ற்றின் க‌ருத்தை, நான் வ‌ழி மொழிகின்றேன்.

தீபச்செல்வன் இதற்கு சம்மதித்தால்... எமக்கும் மகிழ்ச்சி. :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் சிறி நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து நம் இளய தேசிய கவிஞனை ஆதரிக்கவேண்டும் 

கவிஞனின் மின்னஞ்சல் Deebachelvan@gmail.com

Edited by poet

தீபச்செல்வன் சில வருடங்களுக்கு முன்னர் யாழில் அங்கத்தவராக இணைந்து ஆக்கங்களைப் பதிந்திருக்கிறார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் பட்டியலிலிருந்து தீபச்செல்வன் நீக்கப்பட்டிருந்தார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69493&p=570792

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தீபச்செல்வன் சில வருடங்களுக்கு முன்னர் யாழில் அங்கத்தவராக இணைந்து ஆக்கங்களைப் பதிந்திருக்கிறார்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=69493&p=570792

அவரது ஆக்கங்களுக்கு, இது வரை... ஒரு பச்சைப் புள்ளியும், கிடைக்காதது... ஆச்சரியம்.

nunavilan,இணையவன்,poetஆகியோருக்கு வணக்கம் 
தனி மடல் இட்டுள்ளேன் .பாருங்கள் .தற்போது என்னால் செய்யமுடிந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

வனங்குகிறேன் கிரி,

உடனடிப் பணிகள் ஆற்றவேண்டியவர்களோடு நாளை தொடர்ந்து செல்லக்கூடியவர்களையும் இணைப்பது வரலாற்று பணியாகும். உங்கள் முயற்சிகளுக்கு என் ஆதரவு. யாழ்குடும்பம் கிரியின் முயற்சிகளை ஆதரிக்க் வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் இதை வாசித்த சம்மந்தன் அவர்கள் கவிஞரின் இந்த கருத்தை வாசித்து உடனடியாக தீபன் க்கு போட்டியிட வாய்ப்பளித்து இருக்கின்றாராம்..,,,

நீங்கள் வேற சம்மந்தன் ஒரு நரி....,, தேசியம் சுயநிர்ணயம் என்று யார் பேசினாலும் அவர்களை தட்டி கழிப்பது தான் அவர் வேலை.......

கேட்டால் ராஜதந்திரம் என்று சப்பைக்கட்டு வேறு.....

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சிந்தனையை செயல் படுத்தினால் அதில் ஒரு கிக் இருக்கும்  :icon_idea: 

மக்கள் விரும்பாத அரசியலை யார் முன்னெடுத்தாலும் காலம் அவர்களை கிக் அவுட் பண்ணும் போது தெரியும்.. தாங்கள் செய்த தவறுகள். அது வரை காந்தியும் அரசியல்வாதி தான்... கோட்சேயும்.. மக்கள் தான்..!

சும்மா பெயரே தெரியாமல் கிடந்த நாட்டில் ஜனநாயக மறுமலர்ச்சி என்று.. உசுப்பிவிட்டு... இன்று இந்த நிலை.. அதேபோல்.. ஜனநாயக மறுமலர்ச்சி கண்ட எகிப்தில் ஆண்டுக்கு 100 சாவுகள்... இவை எல்லாம்.. மக்கள் விரும்பாத அரசியலை முன்னெடுக்கப் போய் வரும் "ஜனநாயக" விளைவுகள் என்பதை அதிபுத்திசாலிகள் விளங்கிக் கொண்டு அரசியல் செய்வதே சிறந்தது..!

ஜனநாயகத் தலைவர்கள் என்போர் ஏதேச்சதிகாரமாகச் செயற்பட முடியாது. மக்கள் விருப்பறிந்து செயற்படுபவர்களே ஜனநாயகத் தலைவர்கள்..!

Mr Brahmi, who led the Movement of the People party, is the second politician shot dead in Tunisia this year.

http://www.bbc.co.uk/news/world-africa-23453265

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் இதை வாசித்த சம்மந்தன் அவர்கள் கவிஞரின் இந்த கருத்தை வாசித்து உடனடியாக தீபன் க்கு போட்டியிட வாய்ப்பளித்து இருக்கின்றாராம்..,,,

நீங்கள் வேற சம்மந்தன் ஒரு நரி....,, தேசியம் சுயநிர்ணயம் என்று யார் பேசினாலும் அவர்களை தட்டி கழிப்பது தான் அவர் வேலை.......

கேட்டால் ராஜதந்திரம் என்று சப்பைக்கட்டு வேறு.....

சுண்டு யதார்த்தமான உண்மையை அப்படியே சொல்லி இருக்கிறீர்கள்.

1997/98 இல் சந்திரிக்கா - நீலனின் பொதியோடு இவர் போட்ட ஆட்டம் சொல்லில் அடங்காது. அன்றே மக்களின் வெறுப்பை சந்தித்திருந்தவர்.

அதனை தான் இப்போ புலிகள் தனக்கு எதிராக துப்பாக்கிகளை நீட்டினர்.. இருந்தும்.. நான் தப்பி விட்டேன் என்று கதை அளந்து திரிகிறார். பாவம் இவரின் கூட்டாளி தங்கத்துரைக்கு ஏனாம் வெடி விழுந்தது.. என்பது தெரியவில்லைப் போலும்..! அப்புறம் இவரே புலிகளிடம் வந்த போது உள்ள தூக்கி வைக்க புலிகளுக்குத் தெரியாதாக்கும்..!

முடிந்தால் சம்பந்தனும் சரி.. அவரின் கூட்டாளிகளும் சரி தனித்து நின்று மக்கள் முன் வாக்குக் கேட்டு வென்று பார்க்கட்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை அரசியலுக்காக தன் வெற்றிக்காக உச்சரிக்கும் சம்பந்தன் போன்றவர்கள்... அதனைப் பதிவு செய்யக் கூடாத  மனமில்லாதவர்கள்.. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய வடக்குக் கிழக்கு இணைந்த தீர்வுக்கு உழைப்பார்கள் என்பது கேலிக்கூத்தான விடயம்.

இதனை இப்போது முன்னெடுக்கக் கூடியவர்கள் கூட்டமைப்பில் இல்லை. மேலும் இளைய தலைமுறையால் தான் அதனை முன்னெடுக்கவும் முடியும் சாதித்துக்காட்டவும் முடியும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் கும்பலின் ஓட்டு வங்கியே இன்னும் திண்ணையில் இருந்தும் டீ கடையில் இருந்தும் அரசியல் பேசும் அந்தர் பழசுகள்..... இன்னும் 5 வருஷம் போனால் அந்த தலைமுறையே போய்டும்..... அப்போ பாக்கலாம் இந்த சம்மந்தன் கும்பல் என்ன செய்ய போகுது என்று....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.