இதை உங்கள் குடும்பம், உள் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள், இனவாதிகள், மதவாதிகள் ஏற்று நடந்திருந்திருந்தால் நாட்டில் இவ்வளவு அழிவு, பிரிவினை, இன்று தங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காதே. இன்னும் ஒன்றும் பிந்திப்போகவில்லை, உள்நாட்டில் செய்ய வேண்டியவையை விட்டு வெளிநாட்டில் போய் பேசி என்ன பயன்? முதலில் உள்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை கேட்டு தீர்த்து வையுங்கள் பின்னர் வெளிநாட்டில் பிரச்சாரம் செய்யலாம் உங்கள் குடும்பத்திற்கு அநேக சந்தர்ப்பங்கள் அளிக்கப்பட்டாயிற்று இனி சந்தர்ப்பமேயில்லை திருத்துவதற்கு, திருந்துவதற்கு. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்ய துடிக்கிறார் இவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் தான் கற்றதாக ஏமாற்றியதாக இவர்மீது குற்றச்சாட்டு உள்ளது, அவ்வாறிருக்கும்போது இவரை ஏன் விவாதத்திற்கு அழைக்கிறார்கள்? அந்த விவாதம் ஆரோக்கியமாக இருக்குமா? ஒரு இனத்தை அழித்த, போர் முடிந்து இத்தனை வருடங்கள் கழிந்தும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாத, விரும்பாத, தோற்றுபோன சாத்தான்கள் நல்லிணக்க பாடம் எடுக்குதாம்.
By
satan ·