Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதம்பர இரகசியம் !

Featured Replies

1005990_484282221665747_1178149907_n.jpg

சிதம்பர இரகசியம் !

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்."

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்."

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்

மானுடராக்கை வடிவு சிதம்பரம்

மானுடராக்கை வடிவு சதாசிவம்

மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. —

நன்றி முகனூல் 

12068_348949831904743_1166973414_n.jpg

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

nataraja_eq40.jpg

சைவ சமயத்தவர்களுக்கு முக்கியமான கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில்.
இக்கோவிலைப் பற்றி நான்கு சமய குரவர்களும் பாடியமை குறிப்பிடத் தக்கது.
மற்றைய சிவன் கோவிலில், சிவன் லிங்க வடிமாக இருக்கும் போது, இங்கு... நடனமாடும் நிலையில் காட்சி தருகின்றார்.
இணைப்பிற்கு நன்றி யாழன்பு.

ஒன்றாக இருந்தால் அர்தநாரீஸ்வரர். இரண்டாக இருந்தால் சிவமும் சக்தியும், மூன்றாக இருந்தால் மும் மூத்திகள், நான்காயின் வேதங்கள், ஐந்ததாயின் பஞ்சாட்சரம்.................... :(

தப்பிக்க வழியே இல்லை.

ஒன்றாக இருந்தால் அர்தநாரீஸ்வரர். இரண்டாக இருந்தால் சிவமும் சக்தியும், மூன்றாக இருந்தால் மும் மூத்திகள், நான்காயின் வேதங்கள், ஐந்ததாயின் பஞ்சாட்சரம்.................... :(

தப்பிக்க வழியே இல்லை.

ஆறாயின் சுவை,(அறுசுவை) ஏழாயின் சுரம்(ஏழுஸ்வரம்),எட்டாயின் திசை(எட்டுதிசை),ஒன்பதாயின் ரத்தினம்(நவரத்தினம்)

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றாயின் ஏகன், பலவாயின் அனேகன்.  முடிவிலியாயின் அந்தமிலான். இப்படிச் சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.

சிவசிவா ............. :) 

  • கருத்துக்கள உறவுகள்

நானசைந்தால், அசையும் அகிலமெல்லாமே,

அறிவாய் மனிதா, உன் ஆணவம் பெரிதா?

பிரபஞ்சத்தின் தத்துவங்கள் அனைத்தையும் பிரதி பலிக்கும் கோவில் இது!

உண்மையில் கோவில் என்பது, சிதம்பரத்தை மட்டுமே குறிக்கும் என்பது எம்மில், எத்தனை பேருக்குத் தெரியும்?  :o

நன்றிகள், யாழ் அன்பு !

நானசைந்தால், அசையும் அகிலமெல்லாமே,

அறிவாய் மனிதா, உன் ஆணவம் பெரிதா?

பிரபஞ்சத்தின் தத்துவங்கள் அனைத்தையும் பிரதி பலிக்கும் கோவில் இது!

இன்னொரு புது வித ஆரிய மாயை.

குழப்பத்தால் வரும் அடக்கம் உண்மையானதா? அல்லது தடுமாற்றமா?  கண்ணதாசனின் பிச்சையில் இவர் ஆடுகிறாரா அல்லது நாகராஜான் போட்ட பிச்சையில் ஆடுகிறாரா?

இன்னொரு பிச்சை 

தெய்வம் இருப்பது எங்கே

தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே

தெளிந்த நினைவும் திறந்த நெஞ்சும் நிறைந்ததுண்டோ அங்கே

சிந்து வெளியில் துறவியாக வாழ்ந்த சிவன் உருதிரனாகி தண்டவம் ஆடி. தமிழில் தேவாரம் பாட முடியாமல். சிதம்பரத்தில் பூட்டி வைக்கப்பட்டிருகிறார். இவரை இப்படி ஆட்டி வைப்பதே ஆரிய மந்திரங்கள். எங்குமே ஆடாத சிவன் ஏன் சிதம்பரத்தில் ஆடத்தொடங்கினான்? 3000 பேர் ஆட்டுவித்தால் ஆடாதார் ஆரோ?
 
3000 பிராமணரை ராஜராஜன் கொண்டு வந்து தமிழ் மதத்தை மாற்றினான் என்பது அல்லவா நமது யாழ் தத்துவங்கள். எப்படி அவ்வளவு இலகுவில் மறக்கிறது? அவ்வளவற்றுக்கும் பூட்டி வைக்கபட்டரிருந்த தமிழ் தேவாரங்களை எடுத்து வகுப்பித்தவன் ராஜராயன்.
 
எனக்கு எதற்கு இந்த குழப்பங்கள் எல்லாம்.  ஆரியக்கூத்தாடியான வடமொழி "நடராஜனுக்கும்" உருத்திர தாண்டவம் ஆடும் "றுத்திர" ஆரிய வெறியர்களுக்கும் அது போதும். நான் சிந்து வெளி துறவியான தமிழ் சிவனின் பக்தன் மட்டுமே.  "மழித்தலும் நீட்டலும் வேண்டா" என்று போலித்தத்துவங்களை களைந்துவிட்டு வாழ்பவன். 

Edited by மல்லையூரான்

மல்லை, உங்கள் ஆதங்கம் புரிகின்றது! :D

பல விதமான தேடல்களின் மூலமும், நேரடியான சில அனுபவங்களின் மூலமும்,சில அனுமானங்களின் மூலமும், சில கருதுகோள்களை நாம் ஒரு அளவிற்கு ஏற்றுக்கொள்கின்றோம்!

அதில் இந்த 'Cosmic Dance' உம் ஒன்றாகும்! 

உருத்திரன் என்பவன் சிவன் இல்லைத் தான்! ஆனாலும், 'ஓம்' என்ற நாதம், பிரபஞ்ச வெடிப்பின் (Big Bang)  ஓசை என்பதை, விஞ்ஞானம் ஓரளவுக்கு இன்று ஏற்றுக்கொண்டுள்ளது!

எமது பிரபஞ்சம் ஒரு விதமான ஒழுங்கில் தான் இயங்குகின்றது! அத்துடன் பிரபஞ்சம், ' சிந்திக்கும் அறிவு' கொண்டது!  ஏனெனில், அதனிடம் இல்லாவிட்டால், அதிலிருந்து உருவாகிய எமக்கும், சிந்திக்கும் அறிவு வந்திருக்காது! :D

எனது பிரச்சனை, இந்தப் பிரபஞ்ச ஒழுங்கை, அல்லது 'விதியை' யார் உருவாக்கினார்கள் என்பது அல்ல! :o

ஆனால் அந்த விதி, சிதம்பரம் கோவிலின் அமைப்பில் பிரதி பலிக்கின்றது!

இது ஆரியரிடம் இருந்து வந்ததா அல்லது சிந்து வெளியில் இருந்து வந்ததா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை!

'எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும்,

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு! :D  :lol:  :D  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

TN_120512113748000000.jpgThirugnanasambandhar%2BNayanar.jpg86856784.jpg

திருஞானசம்பந்தர், உமாதேவியாரிடம்... ஞானப்பால் குடித்து விட்டு, "தோடுடைய செவியன்" என்னும் தேவாரத்தை பாடியதும் இந்தக் கோவிலில் தான்... என்று நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

மல்லை, உங்கள் ஆதங்கம் புரிகின்றது! :D

எனக்கு ஆதங்கம் என்று ஆதங்கப்படுவதற்கு நன்றி. 

பல விதமான தேடல்களின் மூலமும், நேரடியான சில அனுபவங்களின் மூலமும்,சில அனுமானங்களின் மூலமும், சில கருதுகோள்களை நாம் ஒரு அளவிற்கு ஏற்றுக்கொள்கின்றோம்!

அதில் இந்த 'Cosmic Dance' உம் ஒன்றாகும்! 

உருத்திரன் என்பவன் சிவன் இல்லைத் தான்! ஆனாலும், 'ஓம்' என்ற நாதம், பிரபஞ்ச வெடிப்பின் (Big Bang)  ஓசை என்பதை, விஞ்ஞானம் ஓரளவுக்கு இன்று ஏற்றுக்கொண்டுள்ளது!

Big Bang பற்றிய குழப்பத்தை கமலா சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கும் ஸ்ரீமத் பாகவத்தை படித்தால் புரியும். அதை எழுதியவர் ஒரு தமிழன்.   ஆனால் அதிர்வென்ற பேக்கதை இந்திய ஆரிய சமையத்திற்கு  சயின்ரோலோயி மாதிரியானவை கொடுக்கும் மேற்கு நாட்டு விளக்கம். இது மக்ஸ் மில்லர் வேதங்களை பிழையாக விளங்கிக்கொண்டதற்கு இன்னும் மேலே ஒரு படி முன்னேறாமல் இருக்கும் நிலை.   அவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி பூச்சியம் பிரபஞ்சமாக விரிகிறதென்றும், எப்படி பிரபஞ்சம் பூச்சியமாக ஒடுங்குகின்றதென்றும், இதானால் காலமென்ற யுகங்கள் எப்படி இருப்புக்கு வந்து உண்மைபோன்ற மாயை தருகின்றன என்பது பற்றி எல்லாம் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதனால் அவருக்கு Big Bang யுக சுழற்க்சி முடிய வருவதாகிறது. Big Bang இன் எதிர் நிலையை பற்றி விக்ஞானம் இன்னமும் பெரிதாக எதும் சொல்லவில்லை. Black Holes அதன் அடிப்படை.  எனவே எனக்கு அதிர்வு பற்றி சொல்பவர்களை பற்றி அக்கறை இல்லை. 

எமது பிரபஞ்சம் ஒரு விதமான ஒழுங்கில் தான் இயங்குகின்றது! அத்துடன் பிரபஞ்சம், ' சிந்திக்கும் அறிவு' கொண்டது!  ஏனெனில், அதனிடம் இல்லாவிட்டால், அதிலிருந்து உருவாகிய எமக்கும், சிந்திக்கும் அறிவு வந்திருக்காது! :D

பிரபஞ்சம் சிந்திக்கிறதென்பது மனிதன் பரpபிரமத்தை தவறாக விளங்கிக்கொள்வதால் வரும் குழப்பம்.  மாயை மட்டும் தான் பிரபஞ்சம்.  அது பூச்சியமாகும் போது அது உண்மையான இல்லாமை தெரிய வருகிறது. மற்றய நேரத்தில் அதற்கு ஒரு உரு இருப்பதாக மனம் குழம்புகிறது. அப்படி ஒரு உரு பிரபஞ்சத்திற்கு  இருபதாக அழகான கற்பனை செய்து முடிய அந்த ஒரு சிந்திக்கிறது என்றும் சொல்லும் போது கிளைமாக்ஸ்த்தான். ஆதாவது சிந்து வெளிச்சமயம் பிரபஞ்சம் வெறும் மாயை, இல்லாதது ஒன்று என்னும் போது ஆரிய சமயம் ஆடுகிறதென்கிறது. மொடேன் மேற்கு நாட்டு இந்து சமயம் இல்லை இல்லை அது ஆடவில்லை அதிர்கிறதென்றது. 

இதையெல்லாம் வாயால் கேட்காமால் அறிவால் தெளிவது, அவுஸ்திரேலியாவில் ஆஸ்பத்திரிகள் குறைவாக இருப்பத்தால் ஆக்கும். 

எனது பிரச்சனை, இந்தப் பிரபஞ்ச ஒழுங்கை, அல்லது 'விதியை' யார் உருவாக்கினார்கள் என்பது அல்ல! :o

இல்லாத பிரபஞ்சத்தைபற்றி சிந்து வெளி சிவன் சமயத்தவர்கள் கவலைப்படுவதில்லை. அது வெறுமனே அதிர்கிறதா, இல்ல பூகம்பம் அடிக்கிறதா, அல்லது Big Bang ஆக வெடிக்கிறதா எல்லாமே ஒன்றுதான். அவர்கள் பிரபஞ்சம் எவ்வளவு ஒழுங்கானது, ஒழுங்கில்லாதது என்பதை பற்றிக்கவலைப்படுவதில்லை. 

ஆனால் அந்த விதி, சிதம்பரம் கோவிலின் அமைப்பில் பிரதி பலிக்கின்றது!

அங்கே பிரதிபலிப்பது சுந்தராம்பாளின் "ஒன்றானவன் உருவில்" பாடல்போல எனற பேபிகளுக்கான தாலாட்டு மட்டுமே. அதில் தத்துவம் சமயம் எதுவுமே தோன்றாது. ( மனிதன் ஒரு வினாடிக்கு சுவாசிப்பது 72 தடவை, விஞ்ஞானத்தை அறியாவிட்டால் அந்த ஆரிய ஞானிகள் தம்மைத்தான் 60 என்று கணக்கு போட்டு ஏமாற்றட்டும். நாம் அதற்கு தோதானவர்கள் அல்ல. பின்னர் ஏன் ஒரு வருடம் மட்டும் கணக்கும் பார்க்கிறார்கள்.) 

இது ஆரியரிடம் இருந்து வந்ததா அல்லது சிந்து வெளியில் இருந்து வந்ததா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை!

இதைத்தான் ஆணவம் என்கிறது. அதாவது குருக்கள் குசுவினால் குற்றம் இல்லை என்னும் நடத்தை. அது எப்படி தான்  நம்புவதில் மட்டும் ஆரியம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?, ஆனால் பாமரன் நம்பினால் மட்டும் அவன் மனம் நோக அதை ஆரியம் என்று குத்திக்காட்டுவது?  நீங்கள் கவலைப்படாவிட்டாலும் உங்கள் எழுத்து ஆரிய சமயத்தை பற்றி யாழ்களம் எங்கும் கவலைப்பட்டு கண்ணிர் விட்டிருக்கிறது.   

'எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும்,

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு! :D  :lol:  :D  :lol:  :D

இதில்த்தான் மற்றக் குழப்பம் வருகிறது. இதை திருவள்ளுவர் எந்த அதிகாரத்தில் சொன்னர் என்பது தெரிந்தால், ஞானம் என்பதும், அறிவு என்பதும் ஒன்றல்ல என்பது தெரியும்.  

ஒரு தடவை ஒரு கண் மங்கல் பார்வை உள்ள கிழவானர் ஒருவர் வீட்டில் தனித்து விடப்பட்டு உறவினர் பன்றித் தலைச்சி அம்மன் கோவிலுக்கு பொங்கப் போய்விட்டர்கள். அவர்கள் வர மறு நாள் ஆகும்.  கிழவனாருக்கு காலைக் காப்பி கொடுக்கப்பட்டிருந்தது.  அவரின் முதல் ஆகாரம் எப்போதுமே மத்தியானம்தான்.  ஒரு கறியும் வைத்து சோறும் செய்ய தயாரரானார். சமையல் முடிய களைத்துப்போனார். ஒரு கோப்பி போட்டு குடிப்பம்;சற்று பொறுத்து சாப்பிடலாம் என்று  தண்னீரை சூடாக்கி கோப்பி தயார் செய்து கொண்டு வந்து இருந்து குடிக்க கோப்பியை முகத்துக்கு கிட்ட எடுத்தார். பிரக்கடித்தது. சமையல் புகை இன்னமும் போக வில்லை என்று நினத்துக்கொண்டு காப்பியில் அரைவாசியை மடக்கென்று குடித்தார்.  அவரின் வயதுக்கு வயறு பற்றி எரிவதும், கோப்பி பயங்கர உறைப்பாக இருப்பதும் கண்டு பிடிக்க சில நிமிடங்கள் எடுத்தது. எதற்கும் மருமகள் வர காட்டலாம் என்று நினத்து காப்பியை தள்ளி வைத்து விட்டு களையாறிய பின்னர் சாப்பிட வென்று கறியை சோற்றுக்குள் போட்டார். கறியை அவர் நேரத்திற்கே இறக்கியிருந்தும் கருகியிருப்பது போலப் பட்டது. சாப்பிட்டால் அது ஓரே கச்சல். அவர் அது நிச்சயமாக கருகிப் போவிட்டது என்று அதையும் தள்ளிவைத்துவிட்டு மடியில் இருந்த காசுடன் சந்தைக்கு போய் எதையோ வாங்கி சாப்பிட்டுவிட்டு வந்து படுத்து விட்டார்.  மறுநாள் வீட்டுக்கு வந்த பேரனுக்கு கோவில் புக்கை பிடிக்க வில்லை என்பதால் வீட்டில் இருக்கும் கறியுடன் சோறு சாப்பிட என்று முயன்ற போது கறிக்குள் யாரோ கோப்பித்தூளை தட்டிக்கொட்டிவிட்டார்களே என்று கோபித்துக்கொண்டு அதை வெளியே எடுத்துவந்து வீசினான். சற்று பொறுத்து நித்திரையால் எழுந்த கிழவனார் மருமகளிடம் கோப்பி கேட்கும் போது தனக்கு நேற்றைய தினம் கோப்பி உறைத்தது என்று குறைப்பட்டார். அதன் பின்னர்தான் கிழவனாரின் வாயால் வந்ததை விட அறிவால் என்ன நடந்தது என்று கண்டு பிடித்தார்கள்.

விஞ்ஞானம் பிரபஞ்சத்தின் பௌதிக தன்மைகளை ஆராய்வது.   அது அறிவின் பால்ப்பட்டது. சமயம் ஒட்டு மொத்த உண்மையைத் தேட முயல்வது அது பிரபஞ்சம் இருப்பதையே மறுப்பது. அது ஞானத்தின் பால் பட்டது. கண்மங்கலாக இருந்தால் கோப்பித்துளை கறிக்கும், மிள்காய் துளை கோப்பிக்கும் போடுவது சகஜம்.  அது பழைய மோட்டர்மா போத்தல்களில் அடைத்து வைக்கும் போது வேற்றுமை தெரியாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அந்த விதி, சிதம்பரம் கோவிலின் அமைப்பில் பிரதி பலிக்கின்றது!

அங்கே பிரதிபலிப்பது சுந்தராம்பாளின் "ஒன்றானவன் உருவில்" பாடல்போல எனற பேபிகளுக்கான தாலாட்டு மட்டுமே. அதில் தத்துவம் சமயம் எதுவுமே தோன்றாது. ( மனிதன் ஒரு வினாடிக்கு சுவாசிப்பது 72 தடவை, விஞ்ஞானத்தை அறியாவிட்டால் அந்த ஆரிய ஞானிகள் தம்மைத்தான் 60 என்று கணக்கு போட்டு ஏமாற்றட்டும். நாம் அதற்கு தோதானவர்கள் அல்ல. பின்னர் ஏன் ஒரு வருடம் மட்டும் கணக்கும் பார்க்கிறார்கள்.) 

இது ஆரியரிடம் இருந்து வந்ததா அல்லது சிந்து வெளியில் இருந்து வந்ததா என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை!

இதைத்தான் ஆணவம் என்கிறது. அதாவது குருக்கள் குசுவினால் குற்றம் இல்லை என்னும் நடத்தை. அது எப்படி தான்  நம்புவதில் மட்டும் ஆரியம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?, ஆனால் பாமரன் நம்பினால் மட்டும் அவன் மனம் நோக அதை ஆரியம் என்று குத்திக்காட்டுவது?  நீங்கள் கவலைப்படாவிட்டாலும் உங்கள் எழுத்து ஆரிய சமயத்தை பற்றி யாழ்களம் எங்கும் கவலைப்பட்டு கண்ணிர் விட்டிருக்கிறது.   

நெத்தியடி! :icon_idea:  :icon_idea:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

TN_120512113748000000.jpgThirugnanasambandhar%2BNayanar.jpg86856784.jpg

திருஞானசம்பந்தர், உமாதேவியாரிடம்... ஞானப்பால் குடித்து விட்டு, "தோடுடைய செவியன்" என்னும் தேவாரத்தை பாடியதும் இந்தக் கோவிலில் தான்... என்று நினைக்கின்றேன்.

படத்துக்கு நன்றி.

இந்த சீர்காழி கோவிலுக்கு, குளத்துக்கு பக்கத்தில் ஒருவர், ஒரு மலேசிய தமிழர் கூட்டத்துக்கு சம்பந்தர் பால் குடித்த கதையினை தப்பும் தவறுமாக சொல்லிக் கொண்டே வந்தவர், தள்ளி இருந்த சுவரில் இருந்த (தன்னால் போடப் பட்டிருந்த) ஒரு குறியீட்டினைக் காட்டி, பயலோட (சம்பந்தர்) அப்பா, கையில் பால் கின்னத்தினைப் பார்த்து, யாரு கொடுத்த கருமண்டா என்று சொல்லி, அதைப் பறித்து வீசினார் பாருங்க, இன்னும் அந்த இடம் அழியாமல் இருக்குது என்று சொல்லி எல்லோரையும் அழைத்து சென்று காட்டினார்.

அவர்களிடம் நல்ல துட்டு பார்த்து விட்டு எம்மிடம் வந்து, நீங்க எந்த ஊருங்க, என்றார்.

இலங்கை என்றதும், நகன்றார். ஏனப்பா நமக்கு சொல்ல மாட்டீங்களா என்று கேட்க, உங்க ஊர் காரங்க இதை தப்புத் தப்பா, ஸ்கூல்ல படிச்சிட்டு வந்திரீங்க.  உங்ககூட அல்லாடிறதுக்கு சும்மா இருக்கலாம் என்று போட்டாரே ஒரு போடு.

உண்மையில் கோவில் என்பது, சிதம்பரத்தை மட்டுமே குறிக்கும் என்பது எம்மில், எத்தனை பேருக்குத் தெரியும்?  :o

"கோவில் "என்று சிதம்பரத்தை அழைப்பது உண்மையாயினும், நான் படித்த கட்டுரை (1970 களில் கொழும்புவில்) ஒன்று கிட்டத்தட்ட 10 சொற்களை காட்டி அவைகள் சிந்து வெளியில் இருந்து வந்தவை என்றும், தமிழின் காலம் குறைந்தது 5000 ஆண்டுகளாவது வரும் என்று வாதாடியிருந்தது.  அதில் ஒரு சொல் "கோவில்".

இன்று நமக்கு தெரியும் ஒன்று( one, une) இரண்டு (Two) என்று இலகுவில் 200,300 சொற்களை உலகம் எங்கும் பரவி இருப்பதை காட்டலாம் என்பது. 

அதில் மற்றயது  கோவில் என்பது இயற் சொல் அல்ல என்பது. அது சொல் புணர்ச்சி மூலம் வருவது (கோ+இல். ) எனவே இது சைவ சமயத்திற்கு மட்டுமானதல்லாத சொல் ஆக ஆக்கப்பட்டிருப்பது கவனிக்க படவேண்டும். சிதமபரம் தென்னிந்தியாவின் பழைய கோவில்களில் ஒன்றல்லாத படியால் அதற்கு கோவில் என்று பெயர் வந்தது அது இடைக்காலத்தில் அடைந்திருத உயர்ச்சி அல்லாமல் கோவில் சொல்லுக்கும் சிதம்பரத்துக்கும் தத்துவ ஒற்றுமை கண்டு பிடிப்பது தவறு. 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

படத்துக்கு நன்றி.

இந்த சீர்காழி கோவிலுக்கு, குளத்துக்கு பக்கத்தில் ஒருவர், ஒரு மலேசிய தமிழர் கூட்டத்துக்கு சம்பந்தர் பால் குடித்த கதையினை தப்பும் தவறுமாக சொல்லிக் கொண்டே வந்தவர், தள்ளி இருந்த சுவரில் இருந்த (தன்னால் போடப் பட்டிருந்த) ஒரு குறியீட்டினைக் காட்டி, பயலோட (சம்பந்தர்) அப்பா,

நீங்கள் ஒன்றும் அரசியல் கதைக்கேல்லதானே, நாதமுனி? :D

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

படத்துக்கு நன்றி.

இந்த சீர்காழி கோவிலுக்கு, குளத்துக்கு பக்கத்தில் ஒருவர், ஒரு மலேசிய தமிழர் கூட்டத்துக்கு சம்பந்தர் பால் குடித்த கதையினை தப்பும் தவறுமாக சொல்லிக் கொண்டே வந்தவர், தள்ளி இருந்த சுவரில் இருந்த (தன்னால் போடப் பட்டிருந்த) ஒரு குறியீட்டினைக் காட்டி, பயலோட (சம்பந்தர்) அப்பா, கையில் பால் கின்னத்தினைப் பார்த்து, யாரு கொடுத்த கருமண்டா என்று சொல்லி, அதைப் பறித்து வீசினார் பாருங்க, இன்னும் அந்த இடம் அழியாமல் இருக்குது என்று சொல்லி எல்லோரையும் அழைத்து சென்று காட்டினார்.

அவர்களிடம் நல்ல துட்டு பார்த்து விட்டு எம்மிடம் வந்து, நீங்க எந்த ஊருங்க, என்றார்.

இலங்கை என்றதும், நகன்றார். ஏனப்பா நமக்கு சொல்ல மாட்டீங்களா என்று கேட்க, உங்க ஊர் காரங்க இதை தப்புத் தப்பா, ஸ்கூல்ல படிச்சிட்டு வந்திரீங்க.  உங்ககூட அல்லாடிறதுக்கு சும்மா இருக்கலாம் என்று போட்டாரே ஒரு போடு.

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும், நாதமுனி!

உமாதேவியார், சம்பந்தருக்கு மூன்று வயதில் 'முலைப்பால்' கொடுத்திருந்தால், உமாதேவியாருக்கு, சம்பந்தரை விடவும் மூன்று வயது இளமையான ஒரு குழந்தை இருக்க வேண்டுமே? :o

எங்கே அந்தக் குழந்தை? :icon_idea:

ஞானப்பால் கொடுத்தார் என்றுதான் இருக்கு.. அது ஆவின்பாலாகவும் இருக்கலாம் இல்லையா?! :D

புங்கை அண்ணா.. நீங்கள் தெளிவாக குழப்புகிறீர்கள்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஞானப்பால் கொடுத்தார் என்றுதான் இருக்கு.. அது ஆவின்பாலாகவும் இருக்கலாம் இல்லையா?! :D

எம்பெருமான் உமாதேவியாரிடம், தேவி ! நமது தொண்டனுக்குச் சிவஞானத்தை குழைத்த பாலைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி ஊட்டுவாயாக என்று அருளினார். அன்னை பராசக்தி குழந்தையின் அருகே வந்தாள். வாரி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மடி மீது அமர்த்திக் கொண்டாள். தமது திருமுலைப் பாலினைப் பொற்கிண்ணத்தில் ஏந்தினாள். அவரது கண் மலரிலே வழியும் நீரைத் துடைத்தாள். சிவஞான அமுதத்தைக் கலந்த பொற்கிண்ணத்தை அவரது கைகளிலே அளித்து பாலமுதத்தினை உண்பாயாக என மொழிந்தாள்.குழந்தையின் கையைப் பிடித்தவாறு பார்வதி தேவியார் பாலைப் பருகச் செய்தார்கள். குழந்தை அழுவதை நிறுத்தி ஆனந்தக் கண்ணீர் பூண்டது. திருத்தோணியப்பராலும் உமாதேவியாராலும் ஆட்கொள்ளப்பெற்ற குழந்தை ஆளுடைப் பிள்ளையார் என்னும் திருநாமம் பெற்றது.அமரர்க்கும் அருந்தவசியர்க்கும் அறிவதற்கு அரிய பொருளாகிய ஒப்பற்றச் சிவஞானச் செல்வத்தைச் சம்பந்தம் செய்ததனாலே  சிவஞான சம்பந்தர் என்னும் திருநாமமும் பெற்றார்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=1361

ஆப்படியானால், ஆவுக்கு ஞானம் இருந்திருக்க வேண்டும்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

படத்துக்கு நன்றி.

இந்த சீர்காழி கோவிலுக்கு, குளத்துக்கு பக்கத்தில் ஒருவர், ஒரு மலேசிய தமிழர் கூட்டத்துக்கு சம்பந்தர் பால் குடித்த கதையினை தப்பும் தவறுமாக சொல்லிக் கொண்டே வந்தவர், தள்ளி இருந்த சுவரில் இருந்த (தன்னால் போடப் பட்டிருந்த) ஒரு குறியீட்டினைக் காட்டி, பயலோட (சம்பந்தர்) அப்பா, கையில் பால் கின்னத்தினைப் பார்த்து, யாரு கொடுத்த கருமண்டா என்று சொல்லி, அதைப் பறித்து வீசினார் பாருங்க, இன்னும் அந்த இடம் அழியாமல் இருக்குது என்று சொல்லி எல்லோரையும் அழைத்து சென்று காட்டினார்.

அவர்களிடம் நல்ல துட்டு பார்த்து விட்டு எம்மிடம் வந்து, நீங்க எந்த ஊருங்க, என்றார்.

இலங்கை என்றதும், நகன்றார். ஏனப்பா நமக்கு சொல்ல மாட்டீங்களா என்று கேட்க, உங்க ஊர் காரங்க இதை தப்புத் தப்பா, ஸ்கூல்ல படிச்சிட்டு வந்திரீங்க.  உங்ககூட அல்லாடிறதுக்கு சும்மா இருக்கலாம் என்று போட்டாரே ஒரு போடு.

ஹிஹீஹி... தமிழ் நாட்டு பிரபல கோவில்கள் முன் திடீரெனத் தோன்றும்... "Guide" மாரின் தொல்லை, பெரிய தொல்லை. :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை,

கைவசம் பதில் இருக்கே!

அது தான், நம்ம குட்டிப் பய முருகன்!

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை,

கைவசம் பதில் இருக்கே!

அது தான், நம்ம குட்டிப் பய முருகன்!

நானும் உங்களை மாதிரித்தான் நினைச்சன்! (படிச்சது ஒரே பள்ளிக்கூடம் தானே! :D )

இந்தச் சுந்தராம்பாள் தான் குழப்பிப்போட்டா போல கிடக்கு! :o

'கார்த்திகைப் பெண் பாலுண்டாய்......" :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அப்புகளா....! இந்த ரகசியத்திற்கும் (தலைப்பிற்கு சம்மந்தமில்லையாகினும்) விடை சொல்லுங்களப்பு... :lol:

தமிழக தமிழர்கள்/ஈழத் தமிழர்கள்....

பேசுவது தமிழ்..
சுவாசிப்பது தமிழ்..
பருகுவதும் தமிழ்..

அவை செய்தியானாலும், மதமானாலும், கலாச்சாரமானாலும், நேசமானாலும் அனைத்திற்கும் தாய்த் தமிழகத்தை நோக்கியே இருக்கையில், இரு நாட்டுத் தமிழர்களும் சந்திக்கையில், பழகுகையில் ஒரு மெல்லிய தயக்கம்/தவிர்ப்பு இருக்கிறதே? (இல்லையென யாரும் மறுக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்...)

இச்'சம்சயம்' இந்தக் களத்திற்கு வந்தபோதும் எனக்குத் தோன்றியது!

இல்லை, இது போலி பிரமையா......??

ஏன்..................??????????? :o

'சிதம்பர ரகசியம்' போல் இது 'தமிழ் ரகசியமோ'? :lol:

உண்மை தான், ராஜவன்னியன்!

ஆனால், இது தனியே 'பிரதேசம்' சம்பந்தப்பட்டது என்பதே எனது கருத்து!

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழரும், வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழரும்,முதன் முதலில் சந்திக்கும் போது கூட இது இருக்கும்! ஆனால், பழகத் துவங்கும் போது மறைந்து விடும்!

அதே போல, ஈழத்தமிழர்கள், (முன்பின் அறியாதவராயின்), புலத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போதும், இது இருக்கின்றது! என்னோடு துப்பரவாகக் கதைக்காத ஈழத் தமிழர்கள் கூட இருக்கின்றார்கள்!

அதே தான், தமிழகத் தமிழருக்கும், ஈழத் தமிழருக்கும் இடையில் உள்ளதும் என நினைக்கின்றேன்!

அர்ஜுன், இசை, சுண்டல், தப்பிலி போன்றவர்கள், இந்த வித்தியாசத்தை விளக்கக் கூடும்!

நீங்கள் முதன் முதலாக, ஒரு மொரிசியஸ் தமிழரைச் சந்திக்கும் போது, எவ்வாறு உணர்வீர்கள்?

Quote:"இல்லையென யாரும் மறுக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்"

இல்லை. கண்டவுடன் தமிழில் கதைக்க ஒரு ஆள் கிடைத்துவிட்டாரென கடிக்கதான் ஆசைவரும்

நம்ம அதிவீர பிரதாபங்களை வேறு யாரிடம் கொட்ட முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.