Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவுகள் வேறு தளங்களில் எழுதுவது தவறா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மைக் காலமாக வேறு தளங்களில் எழுதும் என்னையும், வேறு சிலரையும் தனிமனிதத் தாக்குதல் செய்வது அதிகரித்துள்ளது. யாழில் இணைந்துள்ள உறுப்பினர்கள் வேறு எந்தத் தளங்களிலும் எழுதக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை, அதே வேளை யாழின் எந்தவொரு கருத்துக்களும் என்னால் திருடப்படவும் இல்லை எனது சொந்தக்கருத்துக்களை எழுதுவது எவ்வாறு தவறாகும்?

எனது கருத்துக்கள் குறித்து எழும் முரண்பாடுகளை அந்தந்தக் களங்களில் விமர்சிப்பதும்,கேள்வியெழுப்புவதும் நியாயமானதே அதை விடுத்து வேறொரு தளத்தில் எழுதியதை பிரதி பண்ணி யாழில் போட்டு அநாகரீகமாகவும், தனி மனிதத் தாக்குதலில் ஈடுபடுவதையும் யாழ் எவ்வாறு அனுமதிக்கிறது?

இதில் யாழின் நிலைப்பாடு என்ன?

இது குறித்து ஏதும் விதிமுறைகள் கொண்டுவரப்படுமா?

யாழ் உறவுகளிடமிருந்தும், முக்கியமாக நிர்வாகத்திடம் இருந்து இது குறித்த சாத்தியமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

நன்றி

********

  • கருத்துக்கள உறவுகள்

இந்த  எழுத்தில்   உங்கள்  பெயரும்  உண்டு

இருவரும  சேர்ந்து  செய்வதாக  அதில் குறிப்பிடப்பிட்டிருக்கு.

அதற்கு அந்த தளத்திலோ

அல்லது இது பற்றி  இங்கு எழுதப்பட்ட திரியிலோ  நீங்கள்  மறுப்பேதும் சொல்லாதபடியால்  நீங்களும் அதை ஆமோதிக்கின்றீர்கள்  என்பது  தெரிகிறது.

வணக்கம் கள உறவுகளே ,

நான் உங்களுடன் இணைந்து ஏறத்தாள இரண்டு மாதங்களாகின்றன என நினைக்கின்றேன் .  நான் இந்த கருத்துக் களத்தில் அவதானித்தில் எழுந்த சில எண்ணங்களை உங்களுடன் பகிரலாம் என நினைக்கின்றேன் .

நானும் , நண்பன் ஜீவாவும் இந்தக் கருத்துக் களத்திற்கு வந்த பொழுது நிலாமுற்றம் ஓர் கடும்பாலைவனம் போன்று வறட்சியாகவும் , ஒருவித அசாதாரண அமைதி இருந்ததை அவதானித்து கவலை அடைந்தோம் . அதே வேளையில் ஒர் நல்ல வெளிவாரி வாசகர் கொண்ட  கருத்துக்களம் ஏன் இப்படி உறை நிலையில் இருக்கின்றது என்று யோசித்தோம் . உடனடியாகவே இருவரும் அங்கத்தவர்களாக இணைந்து செயலில் இறங்கினோம் . ஒவ்வொரு நாளும் பஞ்சியைப் பாராது எமது சுய படைப்புகளை பதிவிட்டோம் . இப்பொழுது எமது முற்சிக்கு ஓரளவு பலன் கிடைத்துள்ளது . ஆனால் எனக்கு இதில் திருப்தி இல்லை . எழுதக்கூடிய அனைத்துக் கள உறவுகளும் மீண்டும் வந்து உங்கள் பதிவுகளை போடுங்கள் . உங்கள் ஆக்கங்களுக்கான விமர்சனங்களை நாங்கள் தருகின்றோம் . பல புதியவர்கள் இணைகின்றார்கள் . அவர்களும் பயப்பிடாது தங்களது ஆக்கத்தைத் தரவேண்டும் . 

இப்பொழுது பழைய உறவுகள் மீண்டும் வருவதைப் பார்க சந்தோசமாக இருக்கின்றது . உங்களுக்குள் என்ன பிரச்சனைகள் என்பது எனக்குத் தெரியாது . நடந்தவைகளை மறந்து எல்லோரும் மீண்டும் வந்து " தமிழை நேசிப்பவர்கள் "  என்ற நேர்கோட்டில் இணையவேண்டும் என்பது எனது ஆசை . 

கருத்துக்களம் என்றால் சூடான விவாதங்கள் இருக்க வேண்டும் . கருத்துக்குக் கருத்தே ஒழிய ஆளுக்கு ஆள் அல்ல . இந்த மனத்தெளிவு இருந்தால் கருத்துக்களத்தில் மனஸ்தாபம் வர வாய்ப்பே இல்லை . மேலும் உங்களுக்கு பின்வரும் ஆலோசனைகளை சொல்கின்றேன் ,

01 உங்களால் குறுகிய காலத்திற்கு கருத்துக்களத்திற்கு வரமுடியாது போனால் " காணாமல் போகின்றோம் " என்ற பதிவில் அறிவியுங்கள் . அப்பொழுது உங்களைபற்றிய தெளிவை மற்றயவர்கள் அறிய முடியும் .

02 ஒருமாதத்திற்கு மேலே யாராவது கருத்துக்களத்துக்கு வராது விட்டால் " காணவில்லை " பகுதியில் நோட்டிஸ் அடித்து ஒட்டுங்கள் . 

03 கள உறவுகளது பிறந்தநாள் , திருமணநாள் , விருப்பு வாக்குகள் , பதிவுகள் போன்றவற்றிற்கு " வாழிய வாழியவே " பகுதியில் மனதார வாழ்த்துங்கள் . அப்பொழுது ஒவ்வொரு கள உறவும் உற்சாகம் பெறுவார்கள் .

04 இறுதியாக மிகமுக்கியமானது . நிர்வாகம் கள உறவுகளுக்கு ஒரு நாளிற்கு 5 விருப்பு வாக்குகளை தந்துள்ளது . அதை மறக்காது சுய படைப்புகளிற்கும் , தரமான கருத்துக்களுக்கும் போடுங்கள் . இந்த விருப்பு வாக்குகளே கருத்து எழுதுகின்றவர்களையும் , சுயமாக ஆக்கங்களை தருபவர்களுக்கும்  தொடர்ந்து எழுதவேண்டும் என்ற ஊக்கத்தைத் தரும் . எனவே விருப்பு வாக்கை போட மறக்காதீர்கள் .

நாங்கள் எல்லோரும் சேர்ந்து இன்னும் ஒருவருடத்தில் இந்தக் கருத்துகளத்தின் வாசகர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் .  இந்த எனது எண்ணத்துடன் ஒத்துப்போகின்றவர்கள் இந்தப் பதிவுக்கு விருப்பு வாக்குகளை போடுங்கள் . மாறுபட்ட கருத்துக்கள் உள்ளவர்கள் மறக்காது உங்கள் கருத்துக்களைத் தாருங்கள் . இதில் நான் ஏதாவது பிழையாக உங்கள் மனம்புண்படும்படி எழுதியிருந்தால் , நிர்வாகமும் கள உறவுகளும் மன்னிச்சுக்கொள்ளுங்கோ emot-eek.gif.gif emot-eek.gif.gif emot-eek.gif.gif .

நேசமுடன் கோமகன் 

இதுவே இங்கு ஏற்கனவே கேட்கப்பட்டது

அதற்கு பச்சை  குத்தாமல்  தங்கள் விளக்கமும் கேட்கப்பட்டது

தரப்படவில்லை

மீண்டும்  எதற்கு திரி???

இதில்  சிவப்பில்  எழுதப்பட்டவை

இங்கிருந்து திருடப்பட்ட ஒழுங்குகளே. :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் எவரும் எழுதலாம்.....அதுதான் ஜனநாயக்ம் என்று சொல்லுறாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயகாந்தன், சுஜாதா,போன்றவர்களின் கதைகள், கல்கியிலோ, குமுதத்திலோ, அல்லது ஆனந்த விகடனிலோ வருவது போல, யாரும் எங்கும் எழுதலாம் என நினைக்கிறேன்!

ஆனால், கல்கியைப்பற்றி ஆனந்தவிகடனில் விமர்சிப்பதோ, ஆனந்த விகடனைப்பற்றி குமுதத்தில் விமர்சிப்பதோ தவறு என்பது எனது கருத்தாகும்!

நோக்கங்கள் உன்னதமானவையாக இருக்கும் வரைக்கும், யாரும் எங்கும் எழுதுவதில் தவறில்லை! :D

வணக்கம்,

யாழ் கள உறுப்பினர்கள் யாழில் மட்டும்தான் பதிவுகளை இடவேண்டும் என்று எந்த விதிகளும் இல்லை, எனவே கள உறுப்பினர்கள் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய இணையத் தளங்களில் ஆக்கங்களைப் பதிவு செய்யும் உரிமை உள்ளது. ஆயினும் யாழ் களத்தில் கள உறுப்பினர்களால் வைக்கப்படும் கருத்துக்களை இன்னோர் தளத்தில் இணைப்புக் கொடுத்து அங்கு கருத்தாடலை ஊக்குவிக்க முயலும்போது, அதற்கான எதிர்வினைகளை யாழ் கள உறுப்பினர்கள் வைக்கும்போது எதிர்கொள்ளவேண்டும்.

ஆயினும் யாழ் களவிதிகளின்படி தனிமனிதத் தாக்குதல்கள் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டியவை என்பதால் நிர்வாகம் தனிமனித தாக்குதல் கருத்துக்களை அனுமதிக்காது. எனினும் நிர்வாகத்தில் உள்ளவர்கள் பதியப்படும் எல்லாக் கருத்துக்களையும் உடனுக்குடன் வாசித்து மட்டுறுத்த முடிவதில்லை என்பதால் சில வேளைகளில் கள உறவுகளின் ஒரு சில கருத்துக்கள் எல்லை தாண்டலாம். அவற்றினை சக கள உறவுகள் சுட்டிக்காட்டும்போது வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம்.

சொந்த ஆக்கங்கள் பற்றிய களவிதிகள் (இது யாழ்கள உறுப்பினர் ஒருவரின் ஆக்கத்தை வேறு ஒருவர் வேறு தளங்களில் இணைக்கும்போது கவனிக்கவேண்டியது):

  • கருத்துக்களத்தில் இணைக்கப்படும் உறுப்பினர்களின் சொந்த ஆக்கங்களை வேறெங்கும் (வேறு ஊடகங்களில்) பயன்படுத்தும் போது:
    • மூலம்: யாழ் இணையம் என்று குறிப்பிடப்பட வேண்டும்.
    • அந்த ஆக்கத்தை எழுதிய கருத்தக்கள உறுப்பினரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.
    • ஆக்கத்துக்கான நேரடி இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.

நன்றி
நியானி

Edited by நியானி

ஆனால், கல்கியைப்பற்றி ஆனந்தவிகடனில் விமர்சிப்பதோ, ஆனந்த விகடனைப்பற்றி குமுதத்தில் விமர்சிப்பதோ தவறு என்பது எனது கருத்தாகும்!
 
நோக்கங்கள் உன்னதமானவையாக இருக்கும் வரைக்கும், யாரும் எங்கும் எழுதுவதில் தவறில்லை!
 
சோட் அன்ட் சுவீற் றிப்ளை.
 
நன்றி நியாணி தெளிவு படுத்தலுக்கு. :)
  • கருத்துக்கள உறவுகள்

தெளிவு படுத்தலுக்கு நன்றி நியானி

யாழ் களத்தின் அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) பற்றிய அறிவுறுத்தல்

யாழ் வடிவமைப்பு, கருத்துக்கள பிரிவுகள்/உப பிரிவுகளின் வகைப்படுத்தல்கள், கள உறுப்பினர்களுக்கேயான தனித்துவமான திரிகள் எல்லாம் யாழ் களத்தின் காப்புரிமைக்குள் அடக்கப்படும்.

எனவே யாழ் களத்தின் தனித்துவப் பண்புகளையும், கூறுகளையும் வேறு தளங்களில் பாவிப்பதும் அல்லது பாவிக்குமாறு பிரேரிப்பதும் அறிவுசார் சொத்துரிமை திருட்டு/மீறல்களுக்குள் (intellectual property theft / Infringement) அடக்கப்படலாம் என்பதைக் கள உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆகவே யாழ் களத்திற்கேயான தனித்துவ வடிவமைப்புக்களையும், வகைப்படுத்தல்களையும் வேறு தளங்களில் பாவிக்குமாறு பிரேரிப்பதைக் கள உறுப்பினர்கள் தவிர்கவேண்டும்.

எனது கருத்துக்கள் குறித்து எழும் முரண்பாடுகளை அந்தந்தக் களங்களில் விமர்சிப்பதும்,கேள்வியெழுப்புவதும் நியாயமானதே அதை விடுத்து வேறொரு தளத்தில் எழுதியதை பிரதி பண்ணி யாழில் போட்டு அநாகரீகமாகவும், தனி மனிதத் தாக்குதலில் ஈடுபடுவதையும் யாழ் எவ்வாறு அனுமதிக்கிறது?

யாழில் உள்ள பின்னூட்டங்களை வேறு தளத்தில் பதிந்தது நீங்கள், அது கூடத்தெரியாமல் இப்படி ஒரு கேள்வி?

உங்களுக்கே விளங்கவில்லையா உங்கள் நிலை என்ன செய்கின்றீர்களென்று?

யாழ் என்றுமே இதை அனுமதித்ததில்லை, தூக்கிவிடுவார்கள்.

யாழைப்பார்த்து இப்படியொரு கேள்வி கேட்கலாமா?

யாழிற்கு வருவது நீங்க குறைவு போலுள்ளது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நியானி அண்ணாவுக்கும்,புங்கை அண்ணாவிற்கும் மற்றும் கருத்திட்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி. :)

நியானி அண்ணா சொன்னது போன்ற  எதுவும் இனி ஒருபோதும் என்னால் நடக்காது பார்த்துக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப... தான், ஜீவா அச்சாப் பிள்ளை.
வேறு யாரிடமும் விட, ஜீவாவின் எழுத்துக்களில் எமக்கு நல்ல நம்ம்பிக்கை இருந்தது.
திடீரென்று... ஜீவாவின், மனமாற்றம், எழுதுத்தோட்டம் போன்றவை என்னை மிக கவலை கொள்ளச் செய்தது.
இது, ஏன்... எப்படி, யாரால்... நடந்தது... என்ற, ஆராய்ச்சிக்குள் இறங்கி... எனது, நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
நன்றி ஜீவா.

ம்ம்ம்

நன்றி ஜீவா.

உங்கள்  பெயரை  மற்றவர்கள்  பாவிப்பதையும்  நீங்கள்   தவிர்க்கணும் ஜீவா.

  • 1 month later...

வணக்கம்,

யாழ் கள உறுப்பினர்கள் யாழில் மட்டும்தான் பதிவுகளை இடவேண்டும் என்று எந்த விதிகளும் இல்லை, எனவே கள உறுப்பினர்கள் எல்லோருக்கும் அவர்கள் விரும்பிய இணையத் தளங்களில் ஆக்கங்களைப் பதிவு செய்யும் உரிமை உள்ளது. ஆயினும் யாழ் களத்தில் கள உறுப்பினர்களால் வைக்கப்படும் கருத்துக்களை இன்னோர் தளத்தில் இணைப்புக் கொடுத்து அங்கு கருத்தாடலை ஊக்குவிக்க முயலும்போது, அதற்கான எதிர்வினைகளை யாழ் கள உறுப்பினர்கள் வைக்கும்போது எதிர்கொள்ளவேண்டும்.

ஆயினும் யாழ் களவிதிகளின்படி தனிமனிதத் தாக்குதல்கள் முற்றாகத் தவிர்க்கப்படவேண்டியவை என்பதால் நிர்வாகம் தனிமனித தாக்குதல் கருத்துக்களை அனுமதிக்காது. எனினும் நிர்வாகத்தில் உள்ளவர்கள் பதியப்படும் எல்லாக் கருத்துக்களையும் உடனுக்குடன் வாசித்து மட்டுறுத்த முடிவதில்லை என்பதால் சில வேளைகளில் கள உறவுகளின் ஒரு சில கருத்துக்கள் எல்லை தாண்டலாம். அவற்றினை சக கள உறவுகள் சுட்டிக்காட்டும்போது வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம்.

சொந்த ஆக்கங்கள் பற்றிய களவிதிகள் (இது யாழ்கள உறுப்பினர் ஒருவரின் ஆக்கத்தை வேறு ஒருவர் வேறு தளங்களில் இணைக்கும்போது கவனிக்கவேண்டியது):

  • கருத்துக்களத்தில் இணைக்கப்படும் உறுப்பினர்களின் சொந்த ஆக்கங்களை வேறெங்கும் (வேறு ஊடகங்களில்) பயன்படுத்தும் போது:
    • மூலம்: யாழ் இணையம் என்று குறிப்பிடப்பட வேண்டும்.
    • அந்த ஆக்கத்தை எழுதிய கருத்தக்கள உறுப்பினரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும்.
    • ஆக்கத்துக்கான நேரடி இணைப்பு கொடுக்கப்படல் வேண்டும்.

நன்றி

நியானி

இங்கு தனிமனித தாக்குதல் தாரளமா நடக்கு ஒரு குறுப்பா தங்களை அதி உச்ச தமிழ் தேசிய விசுவாசிகளா காட்டி கொள்போர் செய்துகொண்டுதான் இருக்கினம் தங்கள் எழுதாவிட்டாலும் அப்படி எழுதுபவர்களுக்கு லைக் போட்டு ஊக்கம் கொடுக்கினம் அதைவிட அவர்களே தங்கள் கருத்தை முன் வைக்கலாம் அதுக்கு அவர்களிடம் தகுதி இல்லையா என்ன ?

அதேபோல தமிழ்தேசிய விரோத கூட்டமைப்பும் உண்டு அவர்களும் குழுவாக தாக்குவதும் லைக் பண்ணுவதும் நடை பெறுகிறது..... இவற்றை எல்லாம் அனுமதிப்பது யாழ்களம் மட்டுமே.....ஜனநாயக களம்....வாழ்க....

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் புத்தண்ணா :D

அதேபோல தமிழ்தேசிய விரோத கூட்டமைப்பும் உண்டு அவர்களும் குழுவாக தாக்குவதும் லைக் பண்ணுவதும் நடை பெறுகிறது..... இவற்றை எல்லாம் அனுமதிப்பது யாழ்களம் மட்டுமே.....ஜனநாயக களம்....வாழ்க....

தமிழ் தேசிய விரோத கூட்டமைப்பு என்று எதுகும் இல்லை அவைகள் நாங்களா உருவாக்கியது கருத்து முரணுக்கு நாங்கள் இட்டம் பெயர் அன்றி வேறு இல்லை எல்லோருக்கும் கொள்கை இருக்கு அவைகள் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் நீ இப்படி இரு என திணிக்கும் உரிமை எமக்கு இல்லை புத்தன் நான் சரியாக இருக்கிறேன் என்பதுதான் முக்கியம் ஒருவன் எதிர் கருத்து வைத்தால் அவருக்கு நிங்க மினக்கட்டு பதில் அளிப்பதுதான் அவனை பெரியவன் ஆகும் கடந்து போங்க என்றுதாம் சொல்கிறோம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.