Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் நியமனம் குறித்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் தாயக மக்களின் நம்பிக்கைகள்

Featured Replies

விக்னேஸ்வரன் நியமனம் குறித்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் தாயக மக்களின் நம்பிக்கைகள்

ஆக 5, 2013
 
1
 

thalaivar%201.jpg“புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டி வருவதையும் சிங்கள தேசத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி எம்மக்கள் அழிந்து வருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தால் சகிக்கமுடியவில்லை.

எனவேதான் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன”

கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் ஆற்றிய மாவீரர் தின உரையில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

புலம்பெயர் தமிழ் மக்கள் என்றுமே சிங்கள அரசாங்கங்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே தென்பட்டார்கள். தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கண்டு சிங்களம் எவ்வாறு பயந்ததோ அவ்வாறே புலம்பெயர் தமிழர்களைக் கண்டும் சிங்கள அரசாங்கங்கள் அச்சமடைந்தன. அந்த அச்சம் யுத்தம் நடந்துகொண்டிருந்த காலத்தை விட தற்போது சிங்கள அரசாங்கங்களுக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் தலைவரின் சிந்தனைகளை நெஞ்சில் சுமந்து, புலிகளின் செயல்களை கையில் சுமந்து தமது வேலைகளையும் மறந்து தாயகத்திலுள்ள தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் இன்றுவரை குரல்கொடுத்துக் கொண்டிருப்பது சிங்களத்தை கடும் சினமடைய வைத்திருக்கின்றது. இதனால் தமிழீழத் தேசியத் தலைவர் 2007 இல் கூறியதைப் போன்று புலம்பெயர் தமிழ் மக்களையும் தாயக மக்களையும் பிரித்துவிட்டால் எல்லாமே முடிந்துவிடும் என்று மகிந்த கனவு காண்கின்றார். அவரின் கனவிற்கு வடிவம் கொடுப்பதற்கு இன்று ஒரு நல்ல துரோகக் கும்பல் கிடைத்திருக்கிறது. அந்தக் கும்பலை வைத்து காரியம் சாதிக்க மகிந்த கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த கூட்டம்தான் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் தற்போதைய வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர்.

05082013%20002.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது தமிழ் மக்களின் எந்தவொரு பிரதிநிதிகளோ இதுவரை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் கூறாத கருத்தை நேற்றுப் பெய்த அரசியல் மழையில் இன்று முளைத்த அரசியல் காளான் போன்று இருக்கின்ற விக்னேஸ்வரன் கூறிவருகின்றமை தமிழ் மக்களைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது.

இந்த விக்னேஸ்வரன் எதிர்காலத்தில் மீண்டும் ஒரு வரதராஜப்பெருமாளாக மாறமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று இப்போதே தமிழ் மக்கள் கேள்வியெழுப்பத் தொடங்கிவிட்டனர். மகிந்த இதுவரை செய்ய நினைத்து முடியாதவற்றை விக்னேஸ்வரன் ஊடாகச் செய்வதற்கு முயற்சியெடுக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை அடக்கி வாசித்த விக்னேஸ்வரன் இப்போது முதலமைச்சர் வேட்பாளர் என்ற கிரீடத்தை தலையில் சுமந்தபடி

புலம்பெயர் தமிழ் மக்களைத் தவிர்த்துவிட்டு தமிழ் மக்களின் வரலாற்றை எழுத முடியும் என்று விக்னேஸ்வரன் கனவு காண்பது அவரின் முட்டாள்தனமே அன்றி வேறில்லை. அவர்களை அடங்கியிருக்கச் சொல்வதற்கு விக்னேஸ்வரனுக்கு என்ன உரிமை இருக்கின்றது என்று யாழ்.குடாநாட்டு மக்கள் மற்றவர்களின் காதுகளுக்கு கேட்கவே கதைக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

காலத்திற்குப் பொருத்தமானது என்பதால் குடாநாட்டு மக்களில் சிலருடன் உரையாடிய விடயங்களை இங்கு பதிவு செய்வது அவசியமானதென்று கருதுகின்றேன்.

கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடக இல்லத்தின் சில செய்தியாளர்களுடன் வடமராட்சிப் பகுதிக்குச் சென்றோம். அங்கு பருத்தித்துறை நகரில் சில நிமிடங்களைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்போது அங்கிருந்த நடுத்தர வயதுடைய ஒருவர் யாழ்.குடாநாட்டிலிருந்து வெளிவருகின்ற தினக்குரல் பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தார். ஏதுமறியாதவர்கள் போன்று அவருக்கு அருகில் சென்று ஐயா, என்ன புதினம் என்று கேட்டோம். அதற்கு அவர் தினக்குரல் பத்திரிகையின் முதற்பக்கத் தலைப்புச் செய்தியைக் காட்டினார்.

‘வெளிநாடுகளிலிருந்து ஆதரவுக் குரல் கொடுப்போருக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் விடுக்கும் வேண்டுகோள்’ என்றிருந்தது. அவர் உள்ளே முழுவதும் வாசித்திருந்தார். ‘புலம்பெயர் தமிழ் மக்களைப் பற்றிக் கதைப்பதற்கு இவருக்கு என்ன அருகதையுள்ளது. அவங்கள் அங்க கத்துறதாலைதான் நாங்கள் இஞ்சை வாழுறம். இல்லாட்டி சிங்களவன் எங்கட வீட்டு முற்றத்தில வந்து காம்ப் அடிப்பான். எங்கட எத்தினை பிள்ளைகளைக் கடத்திக்கொண்ட கற்பழித்துவிட்டு தாட்டுப்போட்டாங்கள். எத்தனையோ பேரைக் கொண்டுட்டாங்கள். இதையெல்லாம் சர்வதேசத்தின்ர காதுகளுக்கு கொண்டுவர அதுகள் அங்க இருந்து அன்னந்தண்ணி இல்லாமல் போராடுதுகள்.

ஆனால், இஞ்சை இவர் என்னெண்டால் அவையளை அமைதியா இருக்கச் சொல்லுறார். தன்ரை ஒரு பெட்டையை சிங்களவன் கற்பழித்தால் அல்லது ஒரு பெடியனை சிங்களவன் சித்திரவதை செய்தால் தானே அவருக்கு நிலமை புரியும். கொழும்பில இருந்தோண்டு இப்பிடி புலம்பெயர் தமிழ் மக்களை அமைதியாக இருக்கச் சொல்லுறார்’ என்று அந்த நகரில் நின்றவாறு அந்தப் பெரியவர் கூறியது எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஏனென்றால் நகரில் நின்றவாறு எங்களை யாரென்று தெரியாத நிலையிலும் அவர் தனது மன உணர்வை எங்களிடம் வெளிப்படுத்தினார். நல்ல வேளை விக்னேஸ்வரனின் பிள்ளைகள் சிங்களவர்களைத் திருமணம் செய்த விடயம் அவருக்கு தெரியாமல் போய்விட்டது. பின்னர் நாங்கள் விசாரித்தபோது தனது பெயர் தர்மலிங்கம் என்றும் வரணியைச் சேர்ந்தவர் என்றும் கூறினார்.

பின்னர் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சில தெரிந்த முகங்களுடன் உரையாடினோம். வேலணையைச் சேர்ந்த சா.தில்லைநாதன் என்பவர் விக்னேஸ்வரனைக் கண்டபடி திட்டினார். தங்கள் சகோதரி இத்தாலியில் இருப்பதாகவும் அவர் ஒரு தமிழ்த் தேசியவாதியென்றும் வெளிப்படையாகவே கூறிய தில்லைநாதன், மகிந்தவின் திட்டத்தை விக்னேஸ்வரனூடாக நிறைவேற்ற திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன என்று தனது சகோதரி கூறியதாக தெரிவித்தார். எந்தவொரு தேர்தலிலும் தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர வேறு யாருக்கும் புள்ளடி போடுவதில்லை என்று கூறிய அவர், இந்த வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு புள்ளடி போட முடியாது என்று திட்டவட்டமாகவே தெரிவித்தார்.

அப்படியாயின் வேறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இல்லையே, நீங்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறீர்கள் என்று கேட்டபோது எனது வாக்குச் சீட்டைக் கிழித்து எறிய முடியும் தானே என்று பதிலளித்தார். இதேபோன்று கிளிநொச்சி பன்னங்கண்டியைச் சேர்ந்த எஸ்.தியாகராஜா என்ற குடும்பஸ்தருடன் உரையாடியபோது அவர் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவராக இருந்தார். தனது குடும்பத்தில் இருவர் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் பலியாகிவிட்டனர் என்று கூறிய அவர், இதுவரை அரசாங்கம் எந்தவித நட்டஈடும் தரவில்லை என்றும் தற்போது தனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் கூறினார்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அமைதியாக இருந்தால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லையென்றே சர்வதேசம் கருதும் என்று அவர் கூறினார். வன்னியில் கடுமையான யுத்தம் நடைபெற்ற போது தாங்கள் முள்ளிவாய்க்கால் வரை சென்று திரும்பியதாக கூறிய அவர், அங்கு நடந்தது பேரழிவு என்று வர்ணித்தார். இந்தப் பேரழிவை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றவர்கள் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் என்று அவர் கூறியதுடன், புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பில் உரையாடும் போது உரிமையுடனேயே விழித்துக் கதைத்தார்.

அவர்கள் இல்லாவிட்டால் இன்று தங்களை மகிந்த அரசாங்கம் மீள்குடியேற்றம் செய்திருக்க மாட்டாது என்பதை அவர் மனம்விட்டுக் கூறினார். மேலும், ஒரு வயதானவர் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார், விக்னேஸ்வரன் புலம்பெயர் தமிழ் மக்களைப் பற்றிக் கதைப்பதற்கு அருகதையற்றவர். இனிமேல் அவர் இவ்வாறு கதைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார். வழமையாக கூட்டமைப்பு தவறுகளைச் செய்யும். ஆனால், முக்கியமான ஒரு தேர்தலுக்காக கூட்டமைப்பு தரமற்ற ஒரு வேட்பாளரைத் தெரிவுசெய்துவிட்டது என்றார். கூட்டமைப்பில் தனது உறவினர் ஒருவர் அங்கம் வகிப்பதால் அவர் தனது பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு பல பேருடன் உரையாடியபோது அவர்கள் அனைவரின் கருத்தும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பால் அக்கறையும் நம்பிக்கையும் வைத்திருந்ததை உணர முடிந்தது. இதிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மட்டும் தான் தாயக மக்களில் அக்கறை வைத்திருக்கிறார்கள், தாயக மக்கள் அவர்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை என்ற கருத்து உடைத்தெறியப்பட்டிருக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் தாயகத்திலுள்ள மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுமுழுதாக ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.

ஆனால், சந்தித்து உரையாடிய அனைவரும் விக்னேஸ்வரனுக்குக் கடும் கண்டன மழை பொழிந்ததையும் நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்த விடயங்களிலிருந்து விக்னேஸ்வரன் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியத் தமிழ் உறவுகளிலிருந்தும் புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளிலிருந்தும் தாயகத் தமிழ் மக்களை ஒருபோதும் பிரிக்க முடியாது. மகிந்த ராஜபக்சவை தமிழ் மக்கள் மாமன்னராக பார்க்கவில்லை. சிறீலங்காவை ஆட்சி செய்த அத்தனை ஜனாதிபதிகளுக்குள்ளும் படு கேவலமான அசுரனாகவே தமிழ் மக்கள் மகிந்தவைப் பார்க்கின்றனர்.

எனவே, தாயக மக்களையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களையும் பிரித்துப் பார்க்கின்ற செயற்பாட்டை விக்னேஸ்வரன் இனிமேலாவது கைவிட வேண்டும். இதுவரை இருக்கின்ற மரியாதையைப் பாதுகாப்பதற்கு இதுவே சிறந்த வழி. இந்த விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் ஒரு விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் பங்களிப்பு இல்லாமல் தமிழர் தாயகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. இனப்பிரச்சினைக்கான தீர்வாக இருந்தாலும் அது உங்களைத் தவிர்த்து எடுக்க முடியாது. விக்னேஸ்வரன் நினைப்பது போன்று உங்கள் சக்தி சாதாரணமானதல்ல. உங்களை அமைதியாக இருக்குமாறு விக்னேஸ்வரன் கூறி வருகின்றமை தொடர்பில் தாயகத்திலுள்ள மக்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர் என்பதை நாம் எமது கண்கூடாக பார்த்து வருகின்றோம். காதுகளால் கேட்டுவருகின்றோம்.

எனவே, உங்களிடம் தமிழீழத் தேசியத் தலைவர் ஒப்படைத்த பணியை நீங்கள் செவ்வனே செய்யுங்கள். மகிந்தவும் அதன் படைகளும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய அழிவையும் செய்த துரோகத்தையும் நீங்கள் தொடர்ந்து வெளியுலகத்திற்கு பறை சாற்றுங்கள். மகிந்தவையும் அந்த அரக்கனின் உறவுகள், சுற்றத்தாரையும் போர்க்குற்றவாளியாக்கி கூண்டில் நிறுத்த தொடர்ந்து பாடுபடுங்கள். தமிழ் மக்கள் இழந்தவைகளுக்கு நிகரான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வரை உங்கள் குரல் ஓய்ந்துவிடக்கூடாது. இலட்சிய வீரர்கள் வீழ்வதுமில்லை. புலம்பெயர் தமிழர்கள் ஓய்வதுமில்லை.

- தாயகத்தில் இருந்து வீரமணி

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32080/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்திகள் மக்களின் உண்மை மனநிலையாக இருந்தால் சுலபமான வெற்றி கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை..!

அவர் போன இடமெல்லாம் கதைத்த அரசியல் புலம் பெயர்ந்த மக்களை பற்றி. அது, இது ஒரு இட்டுக்கட்டு கதை என்பதை காட்டுகிறது. மேலும் புலம் பெயர்ந்த மக்கள் ஒருதொகை அரசியல் ஈடுபாடுகொண்டவர்கள். இலண்டன் கீரிகெட் விளையாட்டு ஒரு உதாரணம். ஆனால் இந்த வசனங்கள் கட்டுரையின் நம்பத்தக்க தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.  

 

அவங்கள் அங்க கத்துறதாலைதான் நாங்கள் இஞ்சை வாழுறம். இல்லாட்டி சிங்களவன் எங்கட வீட்டு முற்றத்தில வந்து காம்ப் அடிப்பான். எங்கட எத்தினை பிள்ளைகளைக் கடத்திக்கொண்ட கற்பழித்துவிட்டு தாட்டுப்போட்டாங்கள். எத்தனையோ பேரைக் கொண்டுட்டாங்கள். இதையெல்லாம் சர்வதேசத்தின்ர காதுகளுக்கு கொண்டுவர அதுகள் அங்க இருந்து அன்னந்தண்ணி இல்லாமல் போராடுதுகள்.

 

you are little bit too much machchaan.

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய வானொலி ஒன்றுக்கு விக்னேஸ்வரன் அவர்கள் செவ்வி வழங்கி இருந்தார்.அதில் இப்படி ஏதும் சொன்னதாக கேள்விப்படவில்லை. எனவே செய்தியில் சந்தேகம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல ஒரு செவ்வியை திரு விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கி இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கூத்தமைப்புக்கு, புலம்பெயர் தமிழர் என்றால் நிறையவே வெறுப்புத்தான். அதற்குக்காரணம், எழுபதுகளில் அமிர்தலிங்கத்தார் வண்ணை ஆனந்தன், ஈழவேந்தன் போன்றோரது மேடைப்பேச்சுக்களில் மயங்கி விசிலடிச்சு, ரத்தத்திலமிட்டு ஏழேழுபிறவிப்பயனடைந்ததாய்க், கள்ளுண்டு கிடந்தவர்கள் இப்போ புலம்பெயர்தேசங்களில் கோப்பை கழுவி, கக்கூஸ்கழுவி, ஆசுப்பத்திரிகள் வயோதிபர் மடங்கள் இவைகளில் மூத்திரம் கழுவிக் கொஞ்சம் காசைக்கண்டுவிட்டதும் இங்கிலீசு கதைக்கும் எங்களுக்கு ஓடர் போடவந்திட்டினம் என்பதே அவர்களது மனப்பாண்மை.மாறாக அந்தக்காலத்தில உங்கட மேடைப்பேச்சுக்கு விசிலச்சிட்டு நாங்கள் விமானம் ஏறிட்டம், அதாவது தப்பிபிழைச்சிட்டம், மாறாக இந்தத் தப்பிப்பிழைச்சு வாழ்வதற்கு, இப்போ நாங்கள் வாழும் நாடுகள்மட்டும் இல்லையேல் அன்றேல் அகதிகள் தொடர்பான ஜெனீவாத்தீர்மானம் இல்லையேல் உங்கட கதை நாறியிருக்கும் ஆம் நீங்கள் எவரும் இப்போது இலங்கைத்தீவில் அரசியல் செய்யமுடியாது, காரணம் நாம் சொந்தநாட்டிலேயே தப்பிப்பிழைக்க அரசியலைக் கையிலெடுத்திருப்போம். அப்போது எங்களுக்கும் நாக்கில் இங்கிலீசு வந்திருக்கும். வாழ்வில் கேள்விப்படாத மொழிகளையெல்லாம் நாம் பேசும்போது மூன்றாம் வகுப்பிலிருந்தே பாடசாலைகளில் அடிப்படை அறிவுடன் இரண்டாம் மொழியாகக் கற்றுத்தந்த ஆங்கிலம் எமக்கு நன்றாகவே வரும் தேவையேற்படுமிடத்து.

 

கூத்தமைப்பினது இந்தத் திருகுதாளங்களையிட்டு நாம் மிரளத்தேவையில்லை, புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிக்கப்பட முடியாதவர்கள் என்றவர்கள் உணரும்வண்ணம் எம்மை நாம் பலமாக வைத்திருத்தல்வேண்டும். தவிர அவர்களது நிகழ்சிநிரல்கள் எமதுடையதாக இருக்கக்கூடிய காய்நகர்த்தல்களைச் செய்திடல் வேண்டும் அவர்களுடன் ஒட்டியிருந்து, கட்டளையிடும் வண்ணம் எம்மை நாம் வளர்த்துக்கொள்ளல் வேண்டும். அரசியலில் குனிந்துபோவது ஒன்றும் தோல்விநிலைக்கான அறிகுறியல்ல, குனியும் உன் முதுகில் எவனும் ஏறமுயலாதவரைக்கும். புலம்பெயர்தேசத்தில் மட்டுமல்ல புலத்திலும் நாம் எழும் காலம் விரைவில்வரும் காத்திரு தமிழா.

  • கருத்துக்கள உறவுகள்

யாரங்கே 

உங்களுக்கு  என்னா  தைரியம் ...?
மல்லையூரான் இருக்கும் போது தமிழ் தேசிய கூத்தமைப்பை பற்றி கதைக்க 
அன்ன மல்லை  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ...?
வடக்கத்தியர் ,மலையாளி எண்டு மாஞ்ச்சி ,மாஞ்ச்சி  கத்துற உங்களுக்கு
அவங்களோட ஏதும் கொடுக்கல் வாங்கல் இருக்கோ எண்டு ஒரு சின்ன சந்தேகம்....? :icon_idea:
  :D  :D 

 

யாரங்கே 

உங்களுக்கு  என்னா  தைரியம் ...?
மல்லையூரான் இருக்கும் போது தமிழ் தேசிய கூத்தமைப்பை பற்றி கதைக்க 
அன்ன மல்லை  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ...?

வடக்கத்தியர் ,மலையாளி எண்டு மாஞ்ச்சி ,மாஞ்ச்சி  கத்துற உங்களுக்கு

அவங்களோட ஏதும் கொடுக்கல் வாங்கல் இருக்கோ எண்டு ஒரு சின்ன சந்தேகம்....? :icon_idea:  :D  :D 

 

 

உண்மைதான். நான் சின்னப்பொடியனாக இருந்த போது அப்படி ஒரு கதை அடிபட்டது. பாட்டனோ, பூட்டனோ, கொப்பாட்டனோ, கோந்துறுவோ, மாந்துறுவோ.... :D  :D

 

அதற்கும் மேலே போனால் கேரளர் சேரராகிப் போய்விடுவார்கள், வித்தியாசம் காண்பது கடினம் என்பதால் அவ்வளவும் போதும்.  :D

கூத்தமைப்பினது இந்தத் திருகுதாளங்களையிட்டு நாம் மிரளத்தேவையில்லை, புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிக்கப்பட முடியாதவர்கள் என்றவர்கள் உணரும்வண்ணம் எம்மை நாம் பலமாக வைத்திருத்தல்வேண்டும். தவிர அவர்களது நிகழ்சிநிரல்கள் எமதுடையதாக இருக்கக்கூடிய காய்நகர்த்தல்களைச் செய்திடல் வேண்டும் அவர்களுடன் ஒட்டியிருந்து, கட்டளையிடும் வண்ணம் எம்மை நாம் வளர்த்துக்கொள்ளல் வேண்டும். அரசியலில் குனிந்துபோவது ஒன்றும் தோல்விநிலைக்கான அறிகுறியல்ல, குனியும் உன் முதுகில் எவனும் ஏறமுயலாதவரைக்கும். புலம்பெயர்தேசத்தில் மட்டுமல்ல புலத்திலும் நாம் எழும் காலம் விரைவில்வரும் காத்திரு தமிழா.

 

இதற்கு அரச்சுன் வந்து பதில் எழுதும் வரைக்கும், இந்த நிகழ்சி நிரலை தள்ளிப்போட்டுவிட்டு அந்த சனத்து உதவ ஏதாவது நிரல் கொண்டுவந்தால் எப்படி? :D

விக்னேஸ்வரன் நியமனம் குறித்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் தாயக மக்களின் நம்பிக்கைகள்

ஆக 5, 2013
 

thalaivar%201.jpg

05082013%20002.jpg

 

கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஊடக இல்லத்தின் சில செய்தியாளர்களுடன் வடமராட்சிப் பகுதிக்குச் சென்றோம். அங்கு பருத்தித்துறை நகரில் சில நிமிடங்களைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்போது அங்கிருந்த நடுத்தர வயதுடைய ஒருவர் யாழ்.குடாநாட்டிலிருந்து வெளிவருகின்ற தினக்குரல் பத்திரிகையை வாசித்துக்கொண்டிருந்தார். ஏதுமறியாதவர்கள் போன்று அவருக்கு அருகில் சென்று ஐயா, என்ன புதினம் என்று கேட்டோம். அதற்கு அவர் தினக்குரல் பத்திரிகையின் முதற்பக்கத் தலைப்புச் செய்தியைக் காட்டினார்.

‘வெளிநாடுகளிலிருந்து ஆதரவுக் குரல் கொடுப்போருக்கு நீதியரசர் விக்னேஸ்வரன் விடுக்கும் வேண்டுகோள்’ என்றிருந்தது. அவர் உள்ளே முழுவதும் வாசித்திருந்தார். ‘புலம்பெயர் தமிழ் மக்களைப் பற்றிக் கதைப்பதற்கு இவருக்கு என்ன அருகதையுள்ளது. அவங்கள் அங்க கத்துறதாலைதான் நாங்கள் இஞ்சை வாழுறம். இல்லாட்டி சிங்களவன் எங்கட வீட்டு முற்றத்தில வந்து காம்ப் அடிப்பான். எங்கட எத்தினை பிள்ளைகளைக் கடத்திக்கொண்ட கற்பழித்துவிட்டு தாட்டுப்போட்டாங்கள். எத்தனையோ பேரைக் கொண்டுட்டாங்கள். இதையெல்லாம் சர்வதேசத்தின்ர காதுகளுக்கு கொண்டுவர அதுகள் அங்க இருந்து அன்னந்தண்ணி இல்லாமல் போராடுதுகள்.

 

 

யாழில் தினமுரசு பத்திரிகையினை கட்டாயப்படுத்தி விற்பனைசெய்யும் ஈ.பி.டி.பி!

 

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வடக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலகங்களிலும் மாவட்டச் செயலகங்களிலும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமனம் வழங்கப்பட்டது. இதில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனும் ஈ.பி.டி.பி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமக்குள் போட்டி போட்டுக்கொண்டு தத்தமது ஆதரவாளர்களுக்கு இந்த நியமனங்களை வழங்கியிருந்தனர்.

யாழ்.குடாநாட்டில் திறமையான நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் எந்தவித வேலை வாய்ப்பும் இன்றி கஸ்டப்படுகின்ற நிலையில் மேற்படி ஒட்டுக்குழுக்களின் அரசியல்வாதிகள் க.பொ.த சாதாரண தரம் வரை கற்று உயர்தரத்திற்கே தகைமை பெறாத பலருக்கு இந்த சமுர்த்தி நியமனங்களை வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் ஈ.பி.டி.பி யால் நியமனம் வழங்கப்பட்டவர்கள் தற்போது அந்தக் கட்சியின் பிரச்சாரப் பத்திரிகையான தினமுரசு பத்திரிகையை விற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். தினமும் அவர்கள் பிரதேச செயலகங்களிலுள்ள சமுர்த்தி அலுவலகங்களுக்கு செல்லும் போது ஒரு தொகை பத்திரிகைகளையும் தங்களுடன் எடுத்துச் சென்று பிரதேச செயலக மற்றும் சமுர்த்திச் சங்கம் போன்றவற்றில் பணியாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் வெளியில் சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு ஈ.பி.டி.பி அவர்களைக் கட்டாயப்படுத்தி இந்த தனது பிரச்சாரப் பத்திரிகைகளை விற்பனை செய்து வருகின்றனர். 

 

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=126914

தேர்தல் நேர்மையாக நடந்தால் கூட்டமைப்பு 75% க்கு மேல் வாக்குகளைப் பெறும்.

  • 1 year later...

பழையபதிவு  :)

பழையபதிவு  :)

முடிந்தால் வெறும் பல தேடி எடுத்து போடுங்கோ .காலம் செய்த கோலங்களையும் குத்து கரணங்களையும் பார்த்து ரசிக்கலாம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.