Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தலைவர் பற்றி.........!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாணன்
ஒரு உண்மையான தலைவனின் தளபதியின் திறமை என்பது அவரது வீரர்களின் மனதில் போரின் உண்மைதன்மையை வெளிப்படுத்தி அவர்களைப் போருக்கு அனுப்பவதே.
பதிவிற்கு நன்றிகள் 

  • Replies 65
  • Views 16.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே காணமல் போயிடுவீங்களோ என நினைச்சேன்.மீண்டும் பகிர்வோடு வந்தமைக்கு நன்றிகள் வாணன்.

 

ஆனையிறவு மீட்புச்சமரில் பங்கெடுத்த ஒவ்வொரு படையணியின் பங்களிப்பும் அளப்பரியது. அதிலும் பால்ராஜ் அண்ணனின் பங்கெடுப்பு பலவகையிலான முன்னேற்றத்தைத் தந்தது. ஆனையிறவுக்கு எல்லோராலும் போய்வரக்கூடிய காலத்தில் அங்கே சமரிட்ட பலர் தங்கள் அனுபவங்களை கதைகதையாகச் சொன்னார்கள். அந்த வரலாறு முழுமையும் அச்சமரோடு தொடர்புபட்ட போராளிகளால் எழுதப்பட வேண்டும்.

தலைவரின் ஆழுமையென்பது எந்த விஞ்ஞானத்தாலும் அளவெடுத்து வரையறுக்க முடியாதது. அந்த மாபெரும் இமயத்தின் காலத்தில் வாழ்ந்தமைக்காக ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட வேண்டும்.

தொடர்ந்து எழுதுங்கோ.விமர்சனங்கள் மனவேதனைகள் கடந்து உங்கள் எழுத்து எங்கள் இனத்துக்குத் தேவை. வாணன் போல மேலும் பலர் இக்களத்தில் பார்வையாளர்களாகவும் வாசகர்களாகவும் இருக்கிறீங்கள். உங்கள் மௌனத்தை விலத்தி எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தை எழுதாவிட்டாலும் தொடர்ந்து வாசிக்கிறேன் வாணன்.



 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வாணன். தொடர்ந்து எழுதுங்கள். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

op1a.jpg

தொடர்ந்து எழுதுங்கள் வாணன்..!

  • தொடங்கியவர்

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=JcV_OOz1Pik

Edited by வாணன்

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்களமே வாழ்வாயான எங்கள் பால்ராஜ் அண்ணவே
நீங்கள் போர்முடியும் முன்னேயெம்மை பிரிந்து போவதோ ?
காத்திருக்கும் வெற்றிகள் எல்லாம் கையில் சேருமுன் எம்மை

கண்கலங்க வைத்தே நீங்கள் காலமாவதோ ?

http://youtu.be/pYZm7POnRNI

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடையே மட்டுமல்ல, முழு மனித இனத்திலயும் கூட அரிதாகப் பிறந்து குறுகின வாழ்நாட்களுக்குள்ளேயே சட் சட்டென்று பல நல்ல காரியங்களையும் செய்து முடித்து விட்டுப் போகும் அரிய மனித ஆளுமைகளுள் ஒருவர் தான் தலைவர். அவர் தன் அரிய வாழ்வைத் தமிழர்களுக்காக மட்டும் பயன் படுத்தினார் என்பது தான் உண்மை. இப்படிப் பட்ட ஒருவர் காலத்தில் ஒற்றுமையாக நின்று அவரையும் பாதுகாத்து எங்கள் இனத்தையும் முன்னேற்றாமல் சீரழிஞ்சு போனமே என்று நினைக்கும் போது தான் வாழ்க்கை வெறுக்குது!

தொடருங்கள் ஒரு அளவிற்கு உங்களை அடையாளம் தெரிகிறது தொழில் நுட்ப பிரிவில் இருந்தவர்கள் பற்றியும் எழுதுங்கள்

இவ்வளவு நாட்களாக கவனிக்காமல் விட்டிட்டனே.. :rolleyes:

 

அருமையான பதிவு அண்ணா. தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்க ஆவலாக உள்ளேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு தொடருங்கள் வாணன்...... பல பேருக்கு இப் பதிவு முகத்தில் சாட்டையடி கொடுக்கும்...!!!

  • தொடங்கியவர்

தமிழர்களிடையே மட்டுமல்ல, முழு மனித இனத்திலயும் கூட அரிதாகப் பிறந்து குறுகின வாழ்நாட்களுக்குள்ளேயே சட் சட்டென்று பல நல்ல காரியங்களையும் செய்து முடித்து விட்டுப் போகும் அரிய மனித ஆளுமைகளுள் ஒருவர் தான் தலைவர். அவர் தன் அரிய வாழ்வைத் தமிழர்களுக்காக மட்டும் பயன் படுத்தினார் என்பது தான் உண்மை. இப்படிப் பட்ட ஒருவர் காலத்தில் ஒற்றுமையாக நின்று அவரையும் பாதுகாத்து எங்கள் இனத்தையும் முன்னேற்றாமல் சீரழிஞ்சு போனமே என்று நினைக்கும் போது தான் வாழ்க்கை வெறுக்குது!

 
ஜஸ்ரின் நீங்கள் கூறிய மனேநிலை தான்  இன்றை மக்களின் பொதுவான நிலைப்பாடு
ஆனால் ............
 
சிலநேரங்களில் வாழ்க்கை வெறுமை நிலைக்குள் போவது தவிர்க்க முடியாதது.  விடுதலைப்போராட்ட வரலாற்றில் இழப்புகள் ஏற்பட்டபோதெல்லாம் வெறுமைகள்  ஏற்பட்டன. ஏதோ ஒரு முட்டுச்சந்தியில் நிற்பது போன்றதொரு நிலை ஏற்படும். சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றபோது  நம்பிக்கையான தளபதிகள், பொறுப்பாளர்கள்  காயமடைந்தோ அன்றி வீரச்சாவடைந்தோ விடும்போது ஒரு தளர்வு ஏற்படும். ஆனால் அதைத்தாண்டி செல்லவேண்டும் என்ற கட்டாய நிலை உடனடியாக  ஏற்படும். அப்போது பொருத்தமான தெரிவினூடாகவோ  மாற்றுத்திட்டத்தினூடாகவோ பெறப்பட்ட பல வெற்றிகள், அடைவுகள் விடுதலை வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.
 
தற்போது ஏற்பட்டிருக்கும் போராட்டப் பயணத்தின் வெறுமையை நிரப்புவதற்கான வழிவகைகள், கடந்து வந்த பாதையில்  அனுபவங்களாகப் பதியப்பட்டிருக்கின்றன.
 
தலைவர் போராட்டத்தை ஆரம்பித்தபோது, அதில் பயணித்த பலர் நம்பிக்கையற்று வெளியேறினர். இந்திய இராணுவத்துடன் சண்டைபிடிக்க தலைவர் முடிவெடுத்தபோது பல மூத்தபோராளிகள் இயலாமை மற்றும் துணிவின்மையால் வெளியேறினார்கள். நம்பிக்கையுடனும் துணிவுடனும் நின்ற போராளிகளை மட்டும் வைத்துக் கொண்டு இந்திய இராணுவத்திற்கெதிரான போரை முன்னெடுத்து அதில் வெற்றியுமடைந்தார்.
 
போராட்டப்பயணத்தில் பல முக்கிய தளபதிகள், திருப்புமுனையில் இருந்தவர்கள் எனப்பலர் வீரச்சாவடைந்த போதும் இல்லாமல்போகும்போதும் ஏற்பட்ட வெறுமைகள் நிரப்பப்பட்டு போராட்டம் முன் நகர்ந்திருக்கின்றது.
முப்பது வருடப் போராட்டப்பயணத்தில் தலைவரின் ஆளுமையும் செயற்பாடும் நம்பிக்கையான தீர்மானங்களும் அதை முன்னெடுத்த வழிமுறைகளையும் கொண்டு தற்போதைய வெறுமையை நிரப்பி முன்நகரவேண்டும் என்பதே தற்போதிருக்கும் வழி.
 
எம்மிடம் இருப்பது நிகழ்காலமும் எதிர்காலமும் மட்டுமே.  எனவே கடந்த காலத்து அனுபவங்களை உள்வாங்கி நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் வலுப்படுத்தி, வெறுமையை அகற்றவேண்டும் என்பது ஈழத் தமிழ்மக்களின்  சிந்தனையில் இருக்கவேண்டிய முதன்மையான விடயம்.
 
தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவமானது நடைமுறைப்படுத்தும் தலைமைத்துவப்பண்பைச் சார்ந்தது அன்று. மாற்றமேற்படுத்தும் தலைமைத்துவப்பண்பைச் சார்ந்தது.
 
அந்த ஆளுமையின் செயற்திறன் வெளிப்பாடுகளை, தீர்மானங்களை, தற்துணிவான  முடிவுகளை சிந்தனையில் நிரப்பும்போது வெறுமை நிலை அகலும்.  இனி என்னசெய்ய முடியும் என்ற சோர்வும் அகலும். அதுதான் தற்போதைய நிலையில் இருந்து மீள்வதற்கும் விடுதலை அரசியலுக்கும் தேவையானது.
 
இலக்குத் தெளிவாக இருக்கும் போது அதற்கான அடைவுப்பாதைகளை  வாழும் காலத்தின் தன்மைக்கேற்றவாறு வகுத்து முன்நோக்கிச் சென்று கொண்டிருக்கவேண்டும்.
 
தலைவர் சொல்லியிருக்கின்றார் ‘இது தலைமுறைக்கான போராட்டம்’. எனவே முயற்சித்துக்கொண்டிருப்போம். முடியாவிட்டால்  குறைந்தது விடுதலைப்போராட்டத்தின் அதே கனதியுடன், பண்புமாறாமல், மிகைப்படுத்தாமல் அடுத்த சந்ததியிடம் கையளிப்போம்.
 
மாவீரர்களின் கனவுகளைச் சுமந்த விடுதலைவேட்கை உள்ள இளைஞர்கள் நிச்சயம் முன்நகர்த்துவார்கள் என்ற நம்பிக்கையில்  இங்கே பதிவுகளையும் விதைக்கின்றோம். ஒரு விதையாவது அந்த போராட்டத்தின் சிந்தனைகளை, தலைவரின் எண்ணங்களைத்தாங்கி பன்மடங்கு வீரியத்துடன் முளைக்கும் என்ற நம்பிக்கையில்.
 
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4YQ6acPufvc

Edited by வாணன்

  • தொடங்கியவர்

இங்கு கருத்துக்களைக் பகிர்ந்து கொண்ட

 

SUNDHAL,லியோ அண்ணை,வாத்தியார்,சாந்தி அக்கா,மெசொபொத்தேமியா சுமேரியர்,செங்கொடி, இசைக்கலைஞன்,Justin,ஆதிபகவான்,துளசி,புலிக்குரல் ஆகியோருக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

 

 
தலைவர் சொல்லியிருக்கின்றார் ‘இது தலைமுறைக்கான போராட்டம்’. எனவே முயற்சித்துக்கொண்டிருப்போம். முடியாவிட்டால்  குறைந்தது விடுதலைப்போராட்டத்தின் அதே கனதியுடன், பண்புமாறாமல், மிகைப்படுத்தாமல் அடுத்த சந்ததியிடம் கையளிப்போம்.
 
மாவீரர்களின் கனவுகளைச் சுமந்த விடுதலைவேட்கை உள்ள இளைஞர்கள் நிச்சயம் முன்நகர்த்துவார்கள் என்ற நம்பிக்கையில்  இங்கே பதிவுகளையும் விதைக்கின்றோம். ஒரு விதையாவது அந்த போராட்டத்தின் சிந்தனைகளை, தலைவரின் எண்ணங்களைத்தாங்கி பன்மடங்கு வீரியத்துடன் முளைக்கும் என்ற நம்பிக்கையில்.
 

 

உங்கள் நம்பிக்கை வீணாகாது. நாங்கள் கொடுத்த விலைக்கான பெறுமதி ஒருநாள் வெற்றியடையும். அதுவரையில் எங்களை நம்பி தங்கள் வாழ்வையும் வசந்தங்களையும் தந்தவர்களுக்காக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். இதுவே அவர்களுக்குச் செய்கிற கைமாறு.

 

வாணன்  அண்ணா  அருமையான வரலாற்று பதிவு சில சம்பவங்கள் பலருக்கு தெரிந்தாலும்  உங்களைப்  போன்று எழுத்து வடிவில் கொண்டு வருவது எல்லோராலும் முடியாது தலைவரின் பல் துறை சார்ந்த ஆளுமையை எமது இனத்துக்கு வரலாற்றுப் பதிவாக கொண்டு வருவதற்கு எனது வாழ்த்துக்கள்.
(அண்மையில் வன்னியில் தலைவர் இருந்த இல்லத்தை சிங்கள  தேசம் தகர்த்து அதற்கு விளக்கம் கூறியுள்ளது இந்த இல்லம் இருந்தால் விடுதலைப் புலிகளின் வரலாறு தமிழ் மக்களிடமிருந்து அழித்திட முடியாது என்று. ஆனால் சிங்கள தேசத்துக்கு தெரியாது ஒவ்வொரு தமிழனினதும்  இதயத்தில் தலைவர் இருக்கிறார் என்று.)

  • கருத்துக்கள உறவுகள்

. ஆனால் சிங்கள தேசத்துக்கு தெரியாது ஒவ்வொரு தமிழனினதும்  இதயத்தில் தலைவர் இருக்கிறார் என்று.)

கடவுளை ஒவ்வொரு மனதிலிருந்தும் அழித்துவிடவோ தொலைத்துவிடவோ முடியாது. தலைவர் பிரபாகரன் காலம் தந்த கொடை. இப்போது எங்களை அழித்தவர்களே அந்த ஆழுமையின் வெற்றிடத்தை உணரும் காலம் வந்துவிட்டது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.