Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூங்கிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை கடித்துக் குதறிய மலைப்பாம்பு! - கனடாவில் பரபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

canadianchildren-6813-150.jpg

வளர்ப்பு கடையில் இருந்து தப்பிச் சென்ற மலைபாம்பு, தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை கடித்துக் கொன்ற சம்பவம் கனடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு கனடாவில் உள்ள சிறிய நகரமான கேம்ப்பெல்டன் என்ற இடத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வளர்ப்பு பிராணிகள், பறவைகள், மீன் வகைகள் விற்பனை செய்யும் பெட் ஷாப் உள்ளது. இந்த கடையின் கண்ணாடி தொட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த ஒரு மலைபாம்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொட்டியை விட்டு தப்பி வெளியே வந்தது.

  

கடையின் ஜன்னல் வழியாக வெளியேறி முதல் மாடிக்கு ஊர்ந்து சென்ற பாம்பு, அங்குள்ள ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை ஆக்ரோஷமாக கடித்துக் குதறி கொன்றது.பலியான சிறுவர்களின் பிரேதங்களை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வீட்டினுள் சுருண்டு கிடந்த பாம்பை வனவிலங்கு காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக உயிரியல் நிபுணர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

 

தனக்கு ஆபத்து நேரும் போது தான் பாம்புகள் எதிராளியை தாக்கும். தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களை ஆக்ரோஷமாக கடித்துக் கொன்றது என்பதை ஏற்பதற்கில்லை என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். பாம்புக்கு இருக்கும் பசியை பொறுத்தும் இரையின் மேல் இருந்து வரும் வாசனையை பொறுத்தும் சில பாம்புகள் இதைப்போன்ற தாக்குதலில் ஈடுபடலாம் என இன்னொரு தரப்பினர் வாதிடுகின்றனர். எனினும், பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னரே எதையும் உறுதிபடுத்த முடியும் என போலீசார் தெரிவித்தனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89407&category=WorldNews&language=tamil


01(833).jpg
கனடாவின் கேம்ப் பெல்டன் மிருகக் காட்சிசாலையிலிருந்து தப்பிச் சென்ற மலைப்பாம்மொன்று, வீடொன்றுக்குள் புகுந்து அங்கு உறங்கிக்கொண்டிருந்த இரு குழந்தைகளை விழுங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

ஐந்து மற்றும் 7 வயதுடைய இரு குழந்தைகளே இந்த மலைப்பாம்புக்கு இரையாகியுள்ளனர். 

தொடர்மாடி வீடொன்றின் காற்றாடி கோபுரத்தினூடாக ஊர்ந்து சென்றுள்ள இந்த மழைப்பாம்பு, உறக்கத்திலிருந்த இரு குழந்தைகளையும் விழுங்கியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
nb_python720.jpg

campbellton-python_3.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

என்ன  அநியாயம்   இது...........

பார்க்க  முடியவில்லை :(  :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்த பெரிய மலைப்பாம்பை எப்படி கூட்டுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள் ?  :o  :rolleyes:
 
பாம்பு பயம் ஊரோட போச்சு என்று நினைச்சன் இந்த செய்தியை பார்த்ததும் பயமாக இருக்கின்றது பாவம் இரு சிறுவர்களும் இப்படி ஒரு சாவ ..  :(  :(

மிகவும் வேதனையான செய்தி,

 

செய்தியில் தவறுள்ளதாக எண்ணுகின்றேன். இரு பிள்ளைகளையும் அது விழுங்கவில்லை. தன் உடலால் இறுக்கி கொன்றுள்ளது. ஆங்கிலத்தில்  strangled to death by a python in northern New Brunswick. The boys’ bodies were discovered Monday in an apartment above an exotic pet store in Campbellton.என்று தான் எல்லா இடங்களிலும் உள்ளது.


அத்துடன் பாம்பின் படமும் வெளிவரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் வேதனையான செய்தி,

 

செய்தியில் தவறுள்ளதாக எண்ணுகின்றேன். இரு பிள்ளைகளையும் அது விழுங்கவில்லை. தன் உடலால் இறுக்கி கொன்றுள்ளது. ஆங்கிலத்தில்  strangled to death by a python in northern New Brunswick. The boys’ bodies were discovered Monday in an apartment above an exotic pet store in Campbellton.என்று தான் எல்லா இடங்களிலும் உள்ளது.

அத்துடன் பாம்பின் படமும் வெளிவரவில்லை.

 

 

எப்படி  நிழலி

ஒருவர்  என்றாலும் பரவாயில்லை

இருவர்

சத்தம்  கூடவா  போடவில்லை............???

பெற்றோர் எங்கே  போனார்கள்

இருவரையும் தனியே  விட்டுவிட்டு.............??? :(

 மலைப்பாம்பு constriction மூலம்தான் தனது இரையை கொல்லும். சுற்றினால் கத்துவது மூச்சு விடுவது கஸ்டம். ஆனால் இருவரை எப்படி கொலை செய்தது என்பது கேள்வி . இவைக்கு ஒரு இரை சமிபாடு அடைய நாட்கணக்கு எடுக்கும் . 

 

மலைப்பாம்பை சிலவெள்ளைகள் pet ஆக வளர்க்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைகள் வளர்ப்புப் பிராணியாக ஒப்புக்கொண்டிருப்பதால் இந்த விடயத்திற்கு இரண்டு விவாதத்தை நடத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.. கப்பலில் அகதிகள் வந்தால் அல்கைடாவே வந்தமாதிரி குத்தி முறிவார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

நியூப்ருன்ஸ்விக்கில் துயர சம்பவம் – நண்பன் வீட்டில் பாம்பு கடித்து இரு சிறுவர்கள் பலி !!

August 6, 2013 -

reptile-zoo.jpg

 

 

செல்லப் பிராணிகள் கடையிலிருந்து தப்பித்த பாம்பொன்று அக்கடை அமைந்துள்ள வளாக குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவரை கடித்துள்ளது. Campbellton பகுதியில் பாம்புக்கு இரையான சிறுவர்களுக்கு 5 முதல் 7 வயது இருக்கக்கூடும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Campbellton பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றின் கீழ்பகுதியில் இயங்கி வருகிறது Reptile Ocean exotic pet store எனப்படும் வளர்ப்பு பிராணிகள் மற்றும் அவற்றிற்கு தேவையானவற்றை விற்கும் கடை.

 

நேற்று அதிகாலை இப்பகுதியிலிருந்த வீடு ஒன்றிலிருந்து இரவில் தூங்கிய இரு சிறுவர்கள் காலையில் எழவில்லை என்றும் அவர்கள் இறந்து கிடப்பதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினருக்கு அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ தளத்தில் வளர்ப்பு பிராணிகள் கடை இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது.

 

பலியான இரு சிறுவர்களும் அண்ணன், தம்பிகள், என்பதும் நண்பன் வீட்டில் வந்து விளையாடி விட்டு அங்கேயே இரவுப் பொழுதில் தங்கியுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இரு சிறுவர்களின் உடலையும் கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள் அதனை சடலாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதின் பாம்பின் விஷமே இரு சிறுவர்களும் பலியாகக் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் கடை உரிமையாளரிடம் நடைபெற்ற விசாரணையில் 2001ஆம் ஆண்டிலிருந்தே Reptile Ocean கடையில் பல அரிய வகை பாம்பினங்கள் வளர்க்கபப்ட்டு வந்த விடயம் அம்பலமாகியுள்ளது. நேற்றிரவு கூண்டுக்குள் இருந்து வெளியேறிய பாம்பு சாளரங்களின் வழியே அருகில் உள்ள வீட்டினுள் புகுந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

 

இரு பாம்புகள் தப்பித்துள்ளதாகவும் , இரண்டுமே கொடிய விஷம் கொண்ட அரிய வகைப் பாம்புகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் கடை உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

http://ekuruvi.com/escaped-snake-strangles-two-canadian-children/

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு அவ்வளவு  உயரத்திற்கு ஏறிச் செல்லுமா? நான் இவ்வளவு நாளும் பாம்பு உயரமெல்லாம் ஏறாது என்றும் வெளி நாட்டில் பாம்பு இல்லை என்றும் நினைச்சிட்டு இருந்தேன் :(

மலைப்பாம்புக்கு விஷம் இல்லை. இரண்டு செய்தியும் ஒன்றுகொன்று முரணானது 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு இணையப் பக்கங்களில் ஒவ்வொரு விதமாக செய்திகளை போடுகிறார்கள்.உண்மை நிலவரம் அவ்விடத்தில் நிற்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

ஆசியாவில்   உள்ள   king cobra க்குதான் பாம்புகளில் விஷம் கூட . வெளிநாடுகளில் rattle snake , copperhead போன்றவற்றிக்கு விசம் உண்டு என நினைக்கிறேன்  .  குளிர் தேசத்தில் வாழும்  பாம்புகள் குளிர் காலத்தில் உறங்குநிலைக்கு போய்விடும் .green anaconda (Amazon)  தான் மிகவும் பாரமான பாம்பு ~500 இறாத்தல் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.