Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி புலம்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பழையமாணவ சங்கங்கள்,பல்கலைக்கழக சங்கங்கள் பல உள்ளன அவர்களின் நிகழச்சிகள் பல நடை பெறுகின்றன, அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றது அது பிழையாகவும் இருக்கலாம் ,இருந்தாலும் கிறுக்க வேண்டியதும்,புலம்பவேண்டியதும் என் பொறுப்பு.பழைய மாணவசங்கத்தில் நானும் உறுப்பினன் என்பதையும் முதலே தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஊரில் கோவில் திருவிழா காலங்களில் ஒவ்வொரு உபயகாரர்களும் தங்களது திருவிழா மற்றவர்களினுடய திருவிழாவை விட நன்றாகவும் ,பலராலும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஆடம்பரமாக ஏட்டிக்கு போட்டியாக செய்து முடிப்பார்கள்.ஒரு கூட்ட மேளமா?ஐந்து கூட்ட மேளமா?,ஒரு சப்பரமா? ஐந்து சப்பரமா?,என்ற பாகுபாட்டில் தராதரம் பார்க்கபடும்...தென்னிந்திய கலைஞர்களையும் சில திருவிழா உபயகாரர் அழைத்து தங்களது தராதரத்தை எனையோர் தொடமுடியாத படி உயர்த்தி மக்களிடையே பிரபலமாகிவிடுவார்கள்.

பழைய மாணவ சங்கங்கள் ,பல்கலைகழக சங்கங்கங்கள் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்வதற்காவே உருவாக்கப்பட்டது.

மாணவசங்கங்கள் புலத்தில் இந்திய திரைப்பட இசையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றால் மிகையாகாது.இந்த மாணவசங்கங்களின் கடந்த காலவரலாறுகளை எடுத்து பார்க்கும் பொழுது வெள்ளிடைமழை.திரைஇசை மட்டுமல்ல போலிவூட் இடுப்பாட்டத்தை வளர்ப்பதில் ஆற்றியுள்ளது இனிமேலும் ஆற்றும்.பழைய மாணவர்களாகிய நாம் இந்த இடுப்பாட்டத்தை அன்றுதிரையில்தான் பார்த்தோம்.அந்தகாலத்தில் இதை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஒர் ஆசைஇருந்தது.

அதை இன்று நரை விழுந்து ,மொட்டை தட்டிய பிறகு பார்க்க கூடியசந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இதுவும் என்போன்றோர்களுக்கு மகிழ்ச்சியே.

பழையமாணவ சங்க நிகழ்ச்சிகளுக்கு $50முதல்$100வரை நுழைவுச்சீட்டு அறவிடுகிறார்கள்.ஒருவர் $100 ரூபா செலவு செய்கிறார் என வைத்துகொள்வோம் அதில் $5 மட்டுமே தாயகத்தில் உள்ள ஒரு மாணவனுக்கு சென்றடையும்.

மிகுதி $95 கால்வாசி அவுஸ்ரேலியா அரசுக்கும் ,மிகுதி முக்கால்வாசி பணமும் இந்திய கலைஞர்களுக்கும் இந்திய அரசுக்கும் செல்கின்றது.

நுழைவுச்சீட்டில் தாயகமக்களின் துயர் துடைக்க என விளம்பரம் போடுகிறார்கள் ஆனால் அந்த பணத்தில் கால்வாசி கூட தாயக மக்களை சென்றடையவில்லை எனபது ,எனது கருத்துகணிப்பு மட்டுமே....எது எப்படியாயினும் மிக மிக சிறுதொகை தாயக மக்களை சென்றடைகிறது என்று

மகிழ்சியடைய வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம்.

இன்று எமக்கு ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி தேவைப்படுகிறது அதற்காக ஒழுங்கு செய்கின்றோம்.இன்னும் பத்து வருடங்களின் பின் பழைய மாணவர்களின் நிகழ்ச்சிகள் சிட்னியில் நடை பெறுமா என்பது கேள்விக்குறியே.புலத்தில் தமிழ்சினிமாஇசையை வளர்ப்பதிலும்,பொலிவூட் இடுப்பாட்டத்தை வளர்ப்பதில் உண்மையிலயே பாடுபடுகின்றார்கள்.இவர்களின் இந்த முயற்சிக்கு புலம்பெயர் தமிழர்களின் பங்கும் அளப்பறியது. திரைப்படங்களில் ஒரு பாடல் பாடியவர்கள்,சின்னத்திரையில் பாடல்கள் பாடிய சிறுவர்கள்,மற்றும் பிரபலங்கள் ,பிரபலமடையாத நபர்கள் என யார் யாரை எல்லாம் அழைக்க முடியுமோ அழைக்கின்றோம்.இந்தியாவில் பிரபலமாகாத இசைகலைஞர்களை சிட்னியில் பிரபலமாக்கின்றோம்... இசைக்கலைஞர்களைமட்டுமல்ல இன்று தொலைகாட்சி அறிவிப்பாளர்களும் எமக்கு ஒரு கதாநாயகன் போல தோன்றுகின்றார் அவரையும் விட்டு வைக்கவில்லை .ஒரு பழைய மாணவச்ங்கம் ஜெயா தொலைகாட்சி பிரபலத்தை அழைத்தால் மற்றவர் சண்தொலைக்காட்சி கலைஞரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகின்றார்.

இந்த செயல்களை பார்க்கும் பொழுது எனக்கு ஊர் உபயகாரர்களின் போட்டி மனப்பான்மையில் திருவிழா செய்த்ததும் இன்று நாம் இங்கு பழையமாணவர்கள் என்ற போர்வையில் ஏட்டிக்கு போட்டியாக செயல் படுவதும் ஒன்று போல தெரிகின்றது....

அன்று கடவுளை மையப்படுத்தி உபயகாரர் பிரபலமடைந்தனர்...இன்று தாயக மக்களை மையப்படுத்தி பழையமாணவர்கள் நாம் பிரபலமடைய முயற்சி செய்கின்றோம்..... :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் புத்தன். நாம் எம்மினத்தின் மேம்படுத்தலை நினைவில் கொள்ளாது, சினிமாவில் மோகம் கொண்டு கேட்பதற்கு யாருமில்லை என்னும் நிலையில் என்ன எல்லாமோ செய்கிறோம். அதற்க்கு இன்னுமொரு முக்கிய காரணம் தமிழர்கள் வாழ்வில் நடனங்களும் பாட்டுக்களும் இன்றியமையாததாக இருந்தது ஒரு காலத்தில். ஆரியர்கள் எம்மொழியை மட்டும் அழிக்கவில்லை எம் இயல்பு வாழ்வையும் அழித்து எம்மை அது செய்யாதே இது செய்யாதே என்று அடிமைகள் ஆகியதால் எம் ஆழ்மனதில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ஆசைகளைத் தீர்க்கமுடியாது நாம் மற்றவர் செய்வதைப் பார்த்து ஆறுதலும் திருப்தியும் அடையும் ஒரு நிலைக்கு வந்துவிட்டோம். அதன் பிரதிபலிப்புக்கல்தான்  இவை எல்லாம். இதை மாற்ற தமிழ் சமூகத்திலுள்ள இளம் சமூகத்துக்கு எதையாவது நாம் செய்யவேண்டி உள்ளது. ஆனால் அது என்ன என்பதும் யார் செய்வது என்பதும் தான் தெரியவில்லை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

பெறப்படும் கல்வியும் கல்வி தரும் நிறுவனங்களும் சமூக முன்னேற்றத்திற்காக பாவிக்கப்பட தரப்படுவனவே தவிர வெட்டிப் பெருமைகள் அளக்க அல்ல.

 

எம்மவரிடம் மற்றும் சில சமூகங்களிடம் எங்களுக்குப் பிடிக்காத விடயமே கல்வியை சமூக அந்தஸ்துக்காக பாவிப்பது. பட்டங்களை சமூக அந்தஸ்துக்காகப் போட்டுக் கொள்வது.

 

அந்த வகையில்.. இங்கு இங்கிலாந்திலும் ஆளுக்கொரு சங்கம் வைச்சு நடத்துகிறார்கள். அவை எவற்றிலும் நாங்க உறுப்பினராக இணையவில்லை. அதற்கான விருப்பத்தையும் கொண்டிருக்கவில்லை. காரணம் அவர்களின் நோக்கம் முற்றுமுழுதாக சமூக நோக்கமல்ல. பள்ளிகளின் பாடசாலைகளின் பெயரால்.. கேளிக்கையும்..வெட்டி பெருமை அளப்பதும் ஆகும். நம்மவர்களோடு அது ஊறிவிட்டது. அதுவும் படித்த கிறுக்குகள் இப்படிச் செய்வது பார்க்கவே அசிங்கமாக இருக்கும்.

 

பொலிஸ் பண்ணின சூவுக்கு.. அயன் பண்ணின கோட் சூட்டுக்கும்.. அலங்கரித்த மண்டபங்களில் அட்டனக்கால் போடலுக்கும்.. அப்படியே வைனைக் கையில் வைச்சுக் கொண்டு சுற்றி உள்ள காஞ்சிபுரம் கட்டின அல்லது அரைக்கால் சட்டை போட்ட பொட்டுகளை.. சைட்டா ஒரு லுக்குவிடவும் தான்.. இங்கு சங்கங்கள் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்கின்றன.

 

இந்த வேடிக்கைகளுக்கு பணம் கொடுக்க நாங்க தயார் இல்லை. உண்மையில் ஒரு சங்கத்தினூடு.. ஒன்றைச் சாதிக்கனுன்னா.. சங்கத்துக்கான செலவைக் குறைத்து அதில் மீதமாகும் பணத்தையும் வருவாயோடு சேர்த்து செய்ய வேண்டிய செயற்திட்டத்தில் போடலாம். வேர்ச்சுவல் மீடியா உலகில் எத்தனையோ விடயங்களைச் சாதிக்கலாம்... செலவைக் கட்டுப்படுத்தலாம்.

 

ஆனால் நடப்பதோ.. பாடசாலையின் பெயரால்.. பல்கலைக்கழகத்தின் பெயரால்.. பள்ளிகளின் பெயரால்.. வேடிக்கைகளுக்கும்.. வெட்டிப் பெருமைகளுக்கும்.. கேளிக்கைகளுக்கும் பணம் செலவழிச்சது போக மிச்சம் அதுவும் சங்கத்தை கொண்டு நடத்தனம் என்றதிற்காக ஊருக்குக் கொடுக்கினம். இந்தப் பித்தலாட்டங்களுக்கு எடுபவர்கள் தான் இங்கு குற்றவாளிகள்.

 

நல்ல பதிவு.. புத்தன். மேற்குநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள நம்மவர்கள்.. சிந்திக்க திருந்த நிறைய இருக்குது. :icon_idea:

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், யாழ் பிரபல ஆண் பாடசாலைகளில் ஒன்றின் பழைய மாணவர் சிட்னி சங்கமொன்று தங்களுடை கூட்டத்தை மே 18, முள்ளிக்கால்வாய் நினைவு தினத்தன்று வைத்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் எதிலும் உறுப்பினர் இல்லை.. ஆனால் அண்மையில் இரு நிகழ்வுகளுக்குப் போனேன்.. வாழ்க்கை வெறுத்தது என்று சொன்னால் அது understatement.. :D ஆனால் இந்த அமைப்புகள் கலாச்சாரத்தைப் பேணுகின்றன என்று சொல்லப்படுவதால் வாயைத் திறப்பதில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வால்த்துக்கள் புத்தன்..(எலுத்து பிலைகளை பொறுத்து கொள்ளவும். என்னுடைய வளமையான கூக்லே கூக்லே பண்ணிப்பதேன் வேலை செய்யவில்லை.)
 
நீங்கள் ஒரு முக்கியமான கருத்தை வளமைபோல சொல்லீருக்கிறீர்கள். இன்னுமொரு இடத்தில் வேம்படி பெண்களின் நடனம் போட்டிருந்தார்கள், மிக நன்றாக இருக்கிறது நன்றாக செய்துள்ளார்கள், ஆனால் அதை ஆவார்கள் செய்த மண்டபத்தை பார்த்தீர்களா? எனக்கு தெரிய இப்படியான ஒரு மண்டபத்தில் இங்கே கலியாணம் வீடு நடத்த 30 - 40  ஆயிரம் டொலர் போகும். (சகோதரம் ஒன்று காலியான கட்டப்போக்குது, மண்டப செலவு ஞாயிறு என்றால் 30 ஆம், ஆனால் அன்பர்கள் நண்பர்கள் குடித்து போட்டு திங்கள் கிளமை வேலைக்கு போக முடியாது என்று சனி செய்கிறார்கள் அதற்க்கு 10 ஆயிரம் கூட.)  இந்த வேம்படி பெண்களின் கூட்டதிர்ர்கும் இப்படித்தான் நடந்திருக்கும்..
(சுத்திக்கொண்டு வாறதில்லை எனக்கு மறை கலந்திட்டுதோ என்று- கேலியில் சாமத்திய வீடு செக்கிரதிர்ர்க்கு மாஞ்சு மாஞ்சு எலுதியது என்று..அதை இப்போதைக்கு விடுவம்...)
இந்த மாதிரி கூத்துக்கலை ஓசியாக கிடைக்கிற பாக்குகளில் செயலாம்..வார காசை ஏதேனும் பிரயோசனமாய் செயலாம். -யல்பானத்துக்கு காசு அனுப்புகிறது என்பது இப்ப துன்பத்திலும் துன்பம்..அதைப்பற்றி இங்கே எலுத விரும்பவில்லை/இன்னுமொரு திரியில்..

நானும் இந்த இடுப்புக் குலுக்கல்ளைப் பார்த்து வெறுத்துப் போய்விட்டேன். இதைச் சொன்னால் பலர் என்னை ஒரு பிற்போக்குவாதியாகப் பார்க்கிறர்கள். போலிவூட் நடனம் என்ற பெயரில் எம்மவரின் குழந்தைகளும் இடுப்பை அசிங்கமாக அசைத்து ஆடுவது மனசைப் பிசைகிறது. ஆனால் பெற்றவர்களோ புளகாங்கிதம் அடைகிறார்கள். பிள்ளைகளைச் சுதந்திரம் குடுத்து அடக்கு முறைகளைப் பிரயோகிக்காமல் வளார்ப்பது வேறு, இதுமாதிரி நச்சுக் கலைகளைப் பழக்குவது வேறு. 

 

போதாக்குறைக்கு இரண்டாம்தர இந்திய சினிமாக் கலைஞர்களை அழைத்து அவர்களுக்கு ஒரு மைக்'கைக் கொடுத்து அவர்கள் எடுக்கும் வாந்திக்குக் கைதட்டி,... சகிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்மைப்போல ஆக்களும் இருக்கிறாங்கள் என்பதை நினையக்க மிகவும் ஆறுதலாக இருக்குது!

 

புத்து இசை கறுவல், யாழ்கவி, நெடுக்கர், சுமே, எரிமலை என்று பலரின் ஆதங்கங்களைக் காண, நம்ம 'தலையில' ஒரு பிரச்சனையுமில்ல எண்டு தெரியுது! :D

ஆஹா !! புங்கை ,

 

உங்களையே மாதிரியே நானும்  சிந்தித்து,  ஆனால் சத்தம் போடாமல் இருந்திடுவேன்-  "காலத்துக்குப்

 

பொருந்தாதது" , "லூசு"  என்ற பட்டங்களிற்குப் பயந்து. 

 

இதுவும் அரசியல்  போலத்தான் -   சிந்திப்போர்  ஒதுங்கினால் , மந்திகள்  புகுந்துவிடும்...

 

ஆகவே இவ்வகையான " விசர் கூத்துகளில்", "மறைமுகமான சுய-விளம்பரக் கூத்துகளில்"  இருந்து

 

ஒதுங்கிப் போவதால், நாம்  எதிர்பார்க்கும் மாற்றங்களை உருவாக்க முடியாதல்லவா.......

 

 சிறிய அளவில்....விளம்பரம் இன்றி .....தாயக  உறவுகளிற்கு உதவுவோர் பலர் உள்ளனர்....

 

இவர்களின் சிறிய அளவு  பல "சங்கங்களின்"  பெரிய அளவை விட  அதிகம் என்பதே உண்மை......

 

 

 

 

 

Edited by kayshan

நான் எதிலும் உறுப்பினர் இல்லை.. ஆனால் அண்மையில் இரு நிகழ்வுகளுக்குப் போனேன்.. வாழ்க்கை வெறுத்தது என்று சொன்னால் அது understatement.. :D ஆனால் இந்த அமைப்புகள் கலாச்சாரத்தைப் பேணுகின்றன என்று சொல்லப்படுவதால் வாயைத் திறப்பதில்லை..

 

இசை அண்மையில்  எங்கள் கல்லூரியின் மெல்பேர்ண்(Victoria Branch) பழையமாணவர் சங்க ஒன்றுகூடலில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அங்கு இப்படியான ஆடம்பரம் எதுவுமே இருக்கவில்லை.

 

வடமராட்சி மற்றும் வன்னியிலுள்ள வசதியற்ற பாடசாலைகளுக்கு உதவவேண்டும் என்பது தொடர்பில் ஒரு விவாதம் நடைபெற்றதும் அதுக்கான வழிவகைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டதும் அதன் சிறப்பம்சமாக இருந்தது. சாப்பிட்ட சாப்பாட்டைவிட அதில் கொஞ்சம் திருப்தியாய் இருந்தது.

நான் தமிழ் தட்டச்சுக்காக e-Kalappai என்றொரு மென்பொருளைப் (Software App) பாவிக்கிறேன். e-Kalappai 3.0 என கூகிள் தேடலில் இதைக் கண்டு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Google Transliteration ஐ விட இது மிக இலவுவானதும் கூட. ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி தட்டச்சு செய்ய  "Esc"  key ஐ  "toggle key " ஆக பாவிக்கலாம். யாழ் இல் பலர் இதைப் பாவிப்பார்கள் என  நினைகிறேன்,ஆயினும் தெரியாத சிலருக்காக இந்த் பதிவு.......

 

நன்றி............. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த புலம்பலில் நல்ல கருத்துக்களை எழுதிய ...சுமேரியர்....நெடுகஸ்.....யாழ்கவி.....இசை....வொல்கனோ....கறுவல்....கவிதை... kayshan ஆகியோருக்கு நன்றிகள் மீண்டும் ஒர் புலம்பலில் சந்திப்போம்....என கூறி விடைபெறுவது புலம்பல் புத்தன்...... :D

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.