Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்த்துகளுடன் செந்தமிழன் சீமானின் திருமணம்! முதல் பத்திரிகை தலைவரிற்கு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தளவில் சீமான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தமிழ்நாட்டு அரசியல்வாதி.. ஒருசில மணித்துளிகள் தேசியத் தலைவரைச் சந்தித்தவர்.. அவரைப்போல ஒருவர் தமிழகத்துக்கு தேவைப்படலாம்.. அதனால் எங்களுக்கும் ஏதாவது அனுசரணைகள் கிடைத்தால் நன்மையே.. ஆனால் அதற்காக எங்கள் மறவர்களது மக்களது தியாகங்களில் தோன்றியவைகளை அவர் தன்னிச்சையாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியுமா? அதுமட்டுமல்ல... கனடாவில் மூன்றாவது அணியாக முள்ளிவாய்க்கால் நினைவை முன்னெடுத்தது நாம் தமிழர்.. இந்தக் கூறுபோடல் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா?

இன்றைய அதிமுக ஆட்சியின் வெற்றிக்கு சீமானது பிரச்சாரமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.. அப்படியான சீமான் அந்தத் தகுதியை முன்னிறுத்தி தமிழ் நாட்டில் ஒரு சிறப்பு முகாமையாவது விடுதலை முகாமாக மாற்ற முயற்சித்தாரா? தமிழ்நாட்டிலேயே ஈழத்தமிழருக்காக எதையும் செய்யும் தகுதியை வெளிக்காட்டாத சீமான்.. கனடாவில் எதற்காக 3வது அணியை உருவாக்குகிறார்? இது ஈழத் தமிழர்களை மேலும் கூறுபோடும் அநீதி அல்லவா?

புலிகளின் பணத்தை சுருட்டியவர்களை விட புலிகளையும் மக்களையும் காட்டிக்கொடுத்த கயவர்களை விட சீமான் எவ்வளவோ மேல். கடைசி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு ஈழ மக்களுக்காகவும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை சாடியும் ஒரு திரச்செயலை வைகோ, சீமான் போன்றோரே செய்து கொண்டிருக்கின்றனர்.ஈழத்தவர்களின் பணத்தில் சீமான் எவ்வளவு பணத்தை சுருட்டி விட்டார் என உங்களால் கூற முடியுமா?  புலம் பெயர்ந்தவர்கள் குடியும் கும்மாலமும் அடிக்க சீமான் நாலு படத்தை எடுத்து தானுண்டு தன் வேலை உண்டு என இருக்காமல் ஈழமக்களுக்கு குரல் கொடுப்பது மட்டுமில்லாமல் பயங்கரவாதி என பட்டப்பெயரையும் காங்கிரஸ்காரர் போன்றோரால் அழைக்க வேண்டியதும் ஏன்?
 
அவரின் பேச்சில் ஈழத்தமிழர்களின் கொலைக்கு துணைபோன காங்கிரசையும், தி.மு.க வையும் ஓரம் கட்டியது சீமானுக்கு கிடைத்த வெற்றி.(சீமானால் காங்கிரஸ் தோற்கவில்லை என்று இங்கு கச்சை கட்டிக்கொண்டு வாதிட்டவர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது). தமிழ் நாட்டில் உள்ள குழந்தைப்பிள்ளைக்கே தெரியும்  தி.மு.க வராவிட்டால் அ.தி.மு.க ஆட்சிக்கு வரும் என. இதில் சீமான் கொம்பு  சீவப்பட்டார் என ஒரு பெயரை குறிப்பிடுவதன் நோக்கம் என்ன?. அவரே ஜெயலலிதா, விஜயகாந் போன்றோரையும் சாடிக்கொண்டு தான் இருக்கிறார். மாணவர் போராட்டத்தில் இவரின் பங்கை யாவரும் அறிந்ததே.
 
கனடாவில் 3 அணீயல்ல. நாலாவது அணியும் உள்ளது.அதாவது மாவீரர் தினத்துக்கு போகாதவர்கள். இவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

முகப்புத்தகத்தில் உள்ள ஒருவரின் பெயருடன் கொண்டுவந்து இணைப்பை போடுவதைப்பற்றி களவிதிகளில் தெளிவாக எதுவும் வரையறுக்கப்படவில்லை. ஆனால் அவர்தான் இன்ன யாழ்கள உறவு என்று இனங்காட்டுவதை கருத்துக்களவிதிமுறைகள் தெளிவாக தடுக்கும்வகையில் எழுதப்பட்டிருக்கின்றன.(இதை பெயர் எழுதப்பட்ட குறிப்பிட்ட உறவுக்காக மட்டும் எழுதவில்லை எம்போன்ற எல்லா உறவுகளுக்காகவும் எழுதுகிறேன்.)கருத்துக்களவிதிமுறைகள் என்பவை தளம்பல்களுக்கோ சமரசங்களுக்கோ அப்பாற்பட்ட எல்லோருக்கும் சமமாக பாவிக்கப்படுபவை...குறிப்பிட்ட பெயர் எழுதப்பட்ட கள உறவு இங்கே கேள்விகேக்காவிட்டாலும் நாளை இன்னொரு இடத்தில் இன்னொரு கள உறவு இங்கு நடந்தவற்றை உதாரணம் காட்டி இன்னொரு உறவை இனங்காட்டலாம்.. ஒரேமாதிரியான கேஸ்களில் எடுக்கப்பட்ட முடிவை நீதிமன்றம்களில் வக்கீல்கள் உதாரணம்காட்டுவதுபோல் :D
 
(கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0 3. 
 
.கருத்தாடல்
 
 எக்காரணம் கொண்டும் எழுதும் சக கருத்தாளரின் சொந்த அடையாளங்களை கோருவதும், பிரசுரிப்பதும் கூடாது)

ஏற்கனவே சோழியான் அவர்கள் தன்னை யாழ்கள உறுப்பினர்களுக்கு தனது சொந்தப்பெயரை கூறி உள்ளார்.

  • Replies 80
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விளம்பரம் என்று சொல்லுறீங்கள்.......சீமானுக்கும் பொருந்துமா?....

நல்ல காரியங்களுக்கு தமது விருப்பத்துக்கு உரியவர்களின் நல்லாசியுடன் என்று போடுவது சாதாரணமானதே.. இது அவரவர் விருப்பங்களைப் பொறுத்தது.. என் பெயரைப் போடாதே என்று சம்பந்தப்பட்டவர் வந்து சொல்லாதவரையில் எல்லாம் சரியே..

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில் இருந்து வருமானத்‌திர்க்காக இருக்கும்... :) around the world tickets ம் couple க்கு கிடைக்கும்

உண்மைதான்.. 2005 இல் சீமான் படம் எடுத்துக் கொண்டிருந்தார்.. ஆனால் உலகமெல்லாம் சுத்திப் பார்க்க அவருக்கு ஆசை வந்தது.. இதை டூயட் பாடல்களை எடுப்பதாக சொல்லி தயாரிப்பாளரின் காசிலேயே அவர் செய்திருக்கலாம்.. ஆனால் அவரோ வேறு ஒரு திட்டம் போட்டார்.. :huh:

அதாவது, தலைவரைப் போய் சந்திப்பது... இதன்மூலம் புலம்பெயர் தமிழர் மனங்களில் ஊடுருவுவது.. :( அவர்கள் மூலமாக டிக்கட் போட்டு ஊரை சுற்றிப் பார்ப்பது.. இதுதான் அந்த பலே திட்டம்.. ஆனால் புலம்பெயர் தமிழரில் பலர் 50 யூரோ வித்தியாசத்துக்காகவே சிறீலங்கனில் பிரயாணம் பண்னுபவர்கள் என்று சீமானுக்கு தெரிந்திருக்கவில்லை..

இது இவ்வாறாக இருக்க, அவர் ஈழத்துக்கு செல்கிறார்.. உயிராபத்து இருக்கிறது.. ஆனால் அதையெல்லாம் பார்க்க முடியுமா? ஓசி டிக்கட் வேணுமென்றால் உயிராபத்தைப் பார்க்க முடியாது என்று நினைத்துக் கொள்கிறார்.

பிற்பாடு தமிழகத்துக்கு வந்தவுடன், ஈழப்போர் சம்பந்தமான அரசியலை கையில் எடுக்கிறார்.. ஆனால் கலைஞர் அடிக்கடி பிடித்து ஜெயிலில் போடுகிறார்.. அதையெல்லாம் சமாளித்து டிக்கட் வாங்கும் முடிவில் தீர்க்கமாக உள்ளார்.

இதனால் சினிமாவில் படம் செய்யும் சந்தர்ப்பங்களும் போய்விடுகின்றன.. ஓரிரு ஓசி டிக்கட்டுகள் கிடைத்து கனடா, அமெரிக்கா போனாலும் திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.. :(

என்ன செய்வது, இறுதியாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடருக்காக சுவிஸ் போனதுதான் ஒரே ஆறுதல்.. :blink:

இனிமேல் கயல் விழிக்கும் சேர்த்து யாராவது டிக்கட் போடவேண்டும்.. :D

கயல்விழிக்கு யாரும் டிக்கெட் போட தேவையிருக்காது அவரே இனி சீமானுக்கும் சேர்த்து டிக்கெட் போடுவார் .தி.மு க, அ தி மு க இரண்டிலும் இருந்து பணம் பார்த்த பரம்பரை .

சீமான் அடுத்த கட்டத்திற்கு தாவிவிட்டார் .இனி அவர் ஈழப்பார்வை டெசோ லெவலுக்கு போய்விடும் .

19/08/2013.

எப்போ சொன்னீர்கள் என்று பலர் கேட்பார்கள் அதுதான் திகதி போட்டு பதிந்திருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் ஆளும் அரசுகளின் ஆதரவு இல்லாமல் யாரும் எதுவும் சாதித்து விட முடியாது, அன்றைய நிலையில் திமுக,காங்கிரஸ் கூட்டணியை விழுத்த கிடைத்த துருப்புச் சீட்டாகத்தான் ஜெயலலிதாவுக்கு சீமான் கிடைத்தார், அதற்கு ஈழப்போரின் இறுதிக் கட்டமும் , தேசியத்தலைவருடன் சேர்ந்தெடுத்த சீமானது புகைப்படமும் மக்கள் முன் அவரை ஒரு ஈழவிரும்பியாக அடையாளம் காட்டியதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ஜெயலலிதா சீமானைக் கொம்புசீவிவிட்ட காளையாக்கியதனால் இருவரும் லாபம் அடைந்துகொண்டார்கள். அன்றைய நிலையில் ஈழத்தமிழர் அவலம் தமிழக்கத் தேர்தலில் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருந்ததே இருவருக்கும் வாய்ப்பாகிப் போனது, அதுவே இன்று சீமானின் பிழைப்புக்கும் முக்கியமே தவிர. ஈழத்தமிழர் நலன் அல்ல.

அன்று தானைத்தலைவர் கருணாநிதிதான் ஆண்டு கொண்டிருந்தார்.. ஜெயா எதிர்க்கட்சி..

ஆளுங்கட்சி ஆதரவில்லாமல் யாரும் எதையும் சாதித்துவிட முடியாது என்கிறீர்கள்..! இப்ப என்ன சொல்ல வாறீங்கள்? கருணா ஆதரவுடன் தான் சீமான் முன்னுக்கு வந்தார் என்கிறீர்களா? அல்லது சீமான் முன்னுக்கே வரவில்லை என்கிறீர்களா?

அவர் முன்னுக்கு வரவில்லை என்றால் ஏன் இவ்வளவு சத்தம்? :D

மாமா காளிமுத்து மாதிரி பின்னர் இன்னொரு ஈழபெண்ணை கை பிடித்தாலும் பிடிப்பார் (காளிமுத்து வேதத்தில் ஒன்று சைவத்தில் ஒன்று வைத்திருக்கின்றார் )

  • கருத்துக்கள உறவுகள்

கயல்விழிக்கு யாரும் டிக்கெட் போட தேவையிருக்காது அவரே இனி சீமானுக்கும் சேர்த்து டிக்கெட் போடுவார் .தி.மு க, அ தி மு க இரண்டிலும் இருந்து பணம் பார்த்த பரம்பரை .

சீமான் அடுத்த கட்டத்திற்கு தாவிவிட்டார் .இனி அவர் ஈழப்பார்வை டெசோ லெவலுக்கு போய்விடும் .

19/08/2013.

எப்போ சொன்னீர்கள் என்று பலர் கேட்பார்கள் அதுதான் திகதி போட்டு பதிந்திருக்கு .

இதுக்கு "நான்தான்" வந்து பதில் சொல்ல வேண்டும்.. டிக்கட் போட அரசியல் செய்வதாக சொன்னது அவர்தான்..  :D 

  • கருத்துக்கள உறவுகள்

மாமா காளிமுத்து மாதிரி பின்னர் இன்னொரு ஈழபெண்ணை கை பிடித்தாலும் பிடிப்பார் (காளிமுத்து வேதத்தில் ஒன்று சைவத்தில் ஒன்று வைத்திருக்கின்றார் )

இதற்கும் ஒரு திகதியை போட்டிருக்கலாமே??
 
அல்லது நாங்கள் 
வா. இ  (வாந்தி இலக்கம்) 10334 என்று இலக்கமிட்டு வாசிக்க வேண்டுமா ??

கயல்விழிக்கு யாரும் டிக்கெட் போட தேவையிருக்காது அவரே இனி சீமானுக்கும் சேர்த்து டிக்கெட் போடுவார் .தி.மு க, அ தி மு க இரண்டிலும் இருந்து பணம் பார்த்த பரம்பரை .

சீமான் அடுத்த கட்டத்திற்கு தாவிவிட்டார் .இனி அவர் ஈழப்பார்வை டெசோ லெவலுக்கு போய்விடும் .

19/08/2013.

எப்போ சொன்னீர்கள் என்று பலர் கேட்பார்கள் அதுதான் திகதி போட்டு பதிந்திருக்கு .

சொந்த நாட்டில்  கண்ட காவலிக்கும் கதிரை கொடுப்பது 
அரசியல் ஞானம்!
 
சீமான் மற்றைய அரசியல்  கட்சிகளுடன் கூட்டு வைத்தால் ..............???
ஒரு வேளை  முன்னேரிவிடுவாரோ என்று வருந்துகிறார்களோ என்னமோ.

சீமான் முன்னேறிவிடுவார் என்று எனக்கு எப்போதும் பயம் வந்ததில்லை ,அவர் அந்தளவு அறிவு உள்ளவர் இல்லை வெறும் வெற்றுவேட்டு .

விஜெயிற்கு இருக்கும் சந்தர்ப்பம் கூட சீமானுக்கு இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் முன்னேறிவிடுவார் என்று எனக்கு எப்போதும் பயம் வந்ததில்லை ,அவர் அந்தளவு அறிவு உள்ளவர் இல்லை வெறும் வெற்றுவேட்டு .

விஜெயிற்கு இருக்கும் சந்தர்ப்பம் கூட சீமானுக்கு இல்லை .

விஜய் ஒரு நடிகர். நிறைய விசிறிகளை வைத்துள்ளார். இதே போல தான் குறுக்கு வழி மூலம் விஜய காந்தும் அரசியலுக்குள் புகுந்து அரசியல் பழம் கருணாநிதியை ஒரேயடியாக ஓரம் கட்டியவர். போட்டி என வரும் போது விஜய் விஜயகாந்  அளவுக்கு ஆசனங்கள் எடுப்பார் என  நான் நினைக்கவில்லை.
 
சீமான் ஈழத்தமிழர்களுக்கு, தமிழ் நாட்டு தமிழர்களுக்கு  மாறி மாறி வரும் தமிழ் நாட்டு அரசுகள், மத்திய அரசு செய்யும் அநியாயங்களை சுட்டிக்காட்டுகிறார். விஜயால் முடியுமா? செய்வாரா? 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று தானைத்தலைவர் கருணாநிதிதான் ஆண்டு கொண்டிருந்தார்.. ஜெயா எதிர்க்கட்சி..

ஆளுங்கட்சி ஆதரவில்லாமல் யாரும் எதையும் சாதித்துவிட முடியாது என்கிறீர்கள்..! இப்ப என்ன சொல்ல வாறீங்கள்? கருணா ஆதரவுடன் தான் சீமான் முன்னுக்கு வந்தார் என்கிறீர்களா? அல்லது சீமான் முன்னுக்கே வரவில்லை என்கிறீர்களா?

அவர் முன்னுக்கு வரவில்லை என்றால் ஏன் இவ்வளவு சத்தம்? :D

அன்று கருணாநிதி ஆளுங்கட்சியாக இருந்த போதும், இறுதிக்கட்ட யுத்தம் நடந்த போது 3 மணிநேர உண்ணாவிரதம் இருந்து உலக சாதனை படைத்ததும், யுத்த நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று அறிக்கை விட்டு, தமிழகத்தில் எழுந்த ஈழத்தமிழர் ஆதரவை நீர்த்துப்போகச் செய்ததும், முத்துக்குமாரனின் தீக்குளிப்பும் அந்த தேர்தலில் திமுக மண்கவ்வும் என்பது முடிந்த முடிவாகவே இருந்தது. அந்த வகையிலேயே சிமான் - ஜெயலலிதா ஆதரவும் இருந்தது. அதையே தான் இங்கு குறிப்பிட்டேன். அன்று தேர்தலில் ஜெயிக்கும் வரை சீமானின் ஆதரவு ஜெ க்குத் தேவைப்பட்டது. சீமானும் புகழ முடிந்தளவுக்குப் புகழ்ந்து ஜெயலலிதாவுக்கு விழாவெடுத்து  தன்னையும் நிலை நிறுத்தினார்,  இன்று சாதிகள் இல்லை நாம் தமிழர் என்று சொல்லிக்கொண்ட்டே முத்துராமலிங்க்த்தேவரின் சிலைக்கு மாலையிடுவதன் மூலம் திமுக,அதிமுக போலவே தனது சாதீய அரசியலையும் முன்னெடுக்கிறார்.

மற்றும் படிக்கு நீங்கள் சொல்வது போல முன்னோக்கி வந்துள்ளார் தான் ஒரு அரசியல்வாதியாக.

அதற்குத்தான் பெரியாரின் பேரன், பிரபகரினின் தம்பி என்ற அடையாளம் தேவைப்படுகிறது. :icon_idea:

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவில்லாமல் எதையும் சாதிக்க முடியாது - இதைச் சொன்னது ஜீவா.. :D இதுக்குத்தான் விளக்கம் தேவை.

கேள்வி: 2009 இல் கருணாநிதி சீமானை ஆதரித்தாரா?

1) ஆம்

2) இல்லை

3) பதிலளிக்க விரும்பவில்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

சசி பெருமாளின் கோரிக்கையை ஏற்று

 அவருடைய உயிரை அரசு காப்பாற்ற வேண்டும்: சீமான்

காந்தியவாதி சசி பெருமாளின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  ’’தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை நடை முறைக்கு கொண்டு வந்து இளைய சமூகத்தினரை காத்திட வேண்டும் என்று கோரி இன்றுடன் 33 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்திவரும் காந்தியவாதி சசி பெருமாளின் கோரிக்கைகளை தமிழ்நாட்டு மக்களின் நலனை கருத்தி்ல் கொண்டு தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏதோ தூண்டுதலின் பேரில் சசி பெருமாள் அவர்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. 

இன்று நேற்றல்ல, பல ஆண்டுக் காலமாக மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராடி வருகிறார் காந்தியவாதி சசி பெருமாள். அவருடைய கோரிக்கைகளை படிக்கும் எவரும், அதனை தமிழக அரசு ஏற்றுக்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என்பதை உணர்வர். உடனடியாக மதுக் கடைகள் அனைத்தையும் அரசு மூடிட வேண்டும் என்று சசி பெருமாள் அவர்கள் கேட்கவில்லை. முழுமையான மதுவிலக்குதான் தமிழ்நாட்டின் மக்களை, குறிப்பாக இளைய சமூகத்தினரை காப்பாற்ற ஒரே வழி என்று கூறினாலும், பல கட்டங்களாக மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமிழக அரசுக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையாகும்.

உதாரணமாக, 21 வயதிற்கு குறைந்த எவருக்கும் மது விற்கக் கூடாது என்று டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவிட வேண்டும்.  பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, மக்கள் எதிர்க்கும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும், டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்க வேண்டும்.

 5வது வகுப்பு முதல் மேநிலை பள்ளி வரை மது பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைக்கும் பாடங்களை சேர்க்க வேண்டும்.  குடியால் நாசமான குடும்பங்களுக்கு மறுவாழ்வு தரப்பட வேண்டும் என்பதுதான் சசி பெருமாளின் கோரிக்கைகளாகும். இவை யாவும் உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடியவையே. தமிழக அரசிற்கு மக்கள் நலனில் உண்மையான அக்கறையிருக்குமானால், இதனை உடனடியாக செய்து, சசி பெருமாளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரலாம்.

மகாத்மா காந்தியை தேசத் தந்தை என்று போற்றும் இந்திய நாடு, அவருடைய கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்தி மக்களைக் காக்க ஏன் தயங்க வேண்டும்? தமிழ்நாட்டில் மதுவிலக்கை தளர்த்தியதன் மூலம் இரண்டு தலைமுறை இளைஞர்கள் வாழ்க்கை நாசமாகியுள்ளதை மறுக்க முடியுமா? குடிப் பழக்கம் இன்று பள்ளி மாணவர்களிடையே கூட பரவி வருவதை நாம் அறியவில்லையா?

 இந்த நிலை நீடித்தால், மதுவை விட மோசமான போதை பழக்கங்களுக்கு நமது இளைஞர் சமூகம் ஆட்பட்டுவிடும் அபாயத்தை அரசு உணரவில்லையா? ஆசிட் வீச்சு உள்ளிட்ட கொடுமையான குற்றச்செயல்களில் ஈடுபட்ட பலரும் மதுவை அருந்திவிட்டுத்தான் அக்குற்றச் செயல்களை செய்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்கின்றோமே, இதற்கு மேலும் மதுக் கடைகளுக்கு மூடு விழா நடத்தத் தயங்குவது ஏன்? மது தயாரிப்பு, விற்பனை மூலம் கிடைக்கும் ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை காப்பதை விட பெரிதா? தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சத்தியாகிரகி சசி பெருமாளின் போராட்டத்திற்கு உள்நோக்கம் கற்பிப்பதை தவிர்த்துவிட்டு, அமைச்சரே சசி பெருமாளை சந்தித்து, அவருடைய கோரிக்கைகள் மீது அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கி, போராட்டத்தை முடித்து, அவருடைய உயிரைக் காப்பாற்றிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது’’ என்று கோரியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=93295

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் முன்னேறிவிடுவார் என்று எனக்கு எப்போதும் பயம் வந்ததில்லை ,அவர் அந்தளவு அறிவு உள்ளவர் இல்லை வெறும் வெற்றுவேட்டு .

விஜெயிற்கு இருக்கும் சந்தர்ப்பம் கூட சீமானுக்கு இல்லை .

சீமான் இப்போ ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்கிறார் ....
அவர்களுக்கு திருமணமாம்!
உலகில் எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் நடக்கும் சாதாரண விடயம்.
 
இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை என்று விளக்கமாக (எனக்கு அந்த எதிர்பார்ப்பு இல்லை. விவாதம் என்று வந்தால் ஒரு நாகரீகம் வேண்டும் அல்லவா?) எழுத முடியுமா?
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவில்லாமல் எதையும் சாதிக்க முடியாது - இதைச் சொன்னது ஜீவா.. :D இதுக்குத்தான் விளக்கம் தேவை.

கேள்வி: 2009 இல் கருணாநிதி சீமானை ஆதரித்தாரா?

1) ஆம்

2) இல்லை

3) பதிலளிக்க விரும்பவில்லை :D

விளக்கம் உங்களுக்குப் புரியவில்லையாயின் பதில் 2. இல்லை ... :D

அவருக்குள்ள  பிரச்சினை

யாழ்  களத்திலுள்ள ஈழ  ஆதரவாளர்கள்

சீமானை  ஆதரிக்கின்றனர்

இது போதாதா  அவருக்கு??? :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆதரவில்லாமல் எதையும் சாதிக்க முடியாது - இதைச் சொன்னது ஜீவா.. :D இதுக்குத்தான் விளக்கம் தேவை.

கேள்வி: 2009 இல் கருணாநிதி சீமானை ஆதரித்தாரா?

1) ஆம்

2) இல்லை

3) பதிலளிக்க விரும்பவில்லை :D

இப்படி நேரடியான கேள்விகளை தவிர்க்க பழகி கொள்ளுங்கள்.
 
திரும்ப திரும்ப சொல்கிறோம் இனியாவது கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.
சீமான் அன்று ஜெ யை புகழ்ந்து தள்ளினார்...
ஆட்சிக்கு வர ஜெ  க்கு அது பெரிதும் உதவியது... ஜெ யும் ஏற்று கொண்டார்.
இருவருக்கும் நல்ல லாபம்.(ஜெ முதல்வரானார். சீமானுக்கு என்ன லாபம் என்று குறுக்கு விசாரணை செய்யாதீர்கள்)
இப்போ சீமானுக்கு திருமணமாம்..............
இது இப்படி தகும்??
இதை ஈழ மக்களின் நலன் வேண்டும் ஒருவரால் எப்படி ஏற்று கொள்ள முடியும்??
 
என்னும் எத்தனை நாளுக்குத்தான் இப்படி ஏமாற்றுவார்கள்??

விளக்கம் உங்களுக்குப் புரியவில்லையாயின் பதில் 2. இல்லை ... :D

அப்போ ஆளும் கட்சியின் ஆதரவு இல்லாமல் சீமான் தான் நினைத்தை சாதித்தார்.....?
அப்படி என்று நான் சத்தியமா கேட்கவில்லை. எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை 
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நேரடியான கேள்விகளை தவிர்க்க பழகி கொள்ளுங்கள்.
 
திரும்ப திரும்ப சொல்கிறோம் இனியாவது கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.
சீமான் அன்று ஜெ யை புகழ்ந்து தள்ளினார்...
ஆட்சிக்கு வர ஜெ  க்கு அது பெரிதும் உதவியது... ஜெ யும் ஏற்று கொண்டார்.
இருவருக்கும் நல்ல லாபம்.(ஜெ முதல்வரானார். சீமானுக்கு என்ன லாபம் என்று குறுக்கு விசாரணை செய்யாதீர்கள்)
இப்போ சீமானுக்கு திருமணமாம்..............
இது இப்படி தகும்??
இதை ஈழ மக்களின் நலன் வேண்டும் ஒருவரால் எப்படி ஏற்று கொள்ள முடியும்??
 
என்னும் எத்தனை நாளுக்குத்தான் இப்படி ஏமாற்றுவார்கள்??

ஐயா

உங்களிடம்  ஒரு கேள்வி

(தமிழர்   பண்பாடு பற்றி  அறிந்தவர்  என்றவகையில்)

திருமணம்  செய்யப்போகும்  ஒருவரை இவ்வாறு திட்டுதல் தமிழருக்கு அழகோ??? :(

(அவர்   எவராகவும்  இருக்கட்டும்)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இருக்கும் கருத்துக்களை வாசித்தால் இரண்டு குரூப்களும்(சீமான் ஆதரவு, சீமான் எதிர்ப்பு) தங்களின் கடைசி எல்லையில்(Extreme end) தொட்டுக்கொண்டு நிற்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களும் ஈழப்பிரச்சனையை தங்களின் அரசியல் வாழ்வு அஸ்தமிக்காமல் இருக்கவே நிச்சயம் பயன்படுத்துகிறார்கள். அதில் எந்தளவு பயன்படுத்துகிறார்கள் என்பதில் வேண்டுமானால் கட்சிகளுக்குள் வித்தியாசம் இருக்கலாம்.(இதில் சீமானும், வைக்கோவும் உள்ளடக்கம்)..

இங்கிருக்கும் தலைவர்களை (காங்கிரஸ் நீங்கலாக) தங்கள் வசம் அரவணைத்து திருப்பி, ஈழ ஆதரவு தளத்தை புத்திசாதுர்யமாக பயன்படுத்தி இலக்கை அடையும் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள முதலில் ஈழத்தின் தலைகளிடையே ஒருங்கிணப்பை கொணர்ந்து ஒற்றுமையுடன் தமிழக தலைகளை தட்டுங்கள், அன்றே வெற்றிபடிகளின் கதவுகள் திறக்கப்படும்...

அதுவரை தமிழக தலைகள் ஈழப் பிரச்சனையை ஊறுகாய்போல்தான் அப்பப்போ தொட்டுக்கொள்வார்கள், பெரிய பயன் ஒன்றும் கிட்டாது.

ஒருங்கிணைந்த செயல் முயற்சி, ஈழத்தமிழர்களிடமிருந்தே பிறந்து,தொய்வில்லாமல் தொடரவேண்டும்.

தமிழகம் தானாக ஈழம் பெற்றுத் தராது.

ஒருவருக்கொருவர் சேறுபூசி சண்டையிடாமல், நல்ல ஈழத் தலைகளை தேடுங்களப்பு. :)

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் உங்களுக்குப் புரியவில்லையாயின் பதில் 2. இல்லை ... :D

உங்கள் மாறுபாடான சிந்தனைகளை சுட்டிக்காட்டவே அதை தெளிவாக கேட்க வேண்டிய நிர்ப்பந்த ஏற்பட்டது.. :D

அதாவது ஆளுங்கட்சியின் ஆதரவில்லாமல் எதையும் சாதிக்க முடியாது. மேலும் கருணா சீமானை ஆதரிக்கவில்லை..

ஆனால் 2011 தேர்தலில் கருணாநிதியின் கட்சி எதிர்க்கட்சியாகக்கூட வர முடியவில்லை.. மூன்றாம் இடத்துக்குப் போய்விட்டது.. (அவரது வரலாற்றில் முதல்முறை).

இதற்கு ஜெயா சீமானை கொம்பு சீவியதுதான் காரணமா? (இதுவும் உங்கள் கூற்றுத்தான்)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=127721&page=2#entry927209

ஆனால் உங்களது இன்னொரு கூற்றுப்படி ஆளுங்கட்சி ஆதரவில்லாமல் எதையும் சாதிக்க முடியாது.. ஆகவே, கருணாநிதி தோற்பதற்கு சீமான் காரணமில்லை.. ஆகவே அவர் தூக்கிப்பிடித்த ஈழ அரசியலும் காரணமில்லை..

ஆனால் ஈழ அரசியலால் அவர் இலாபம் அடைந்ததாக சொல்கிறீர்கள்.. என்ன வகை இலாபம்..? அரசியல் இலாபமாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவரால் கருணாநிதியின் தோல்விக்கு பங்காற்ற முடியவில்லை.. :D ஆகவே என்ன இலாபம் அடைந்தார்? அரசியல்வாதியாக அவர் முன்னேறியது எவ்வாறு? :D

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது ஆளுங்கட்சியின் ஆதரவில்லாமல் எதையும் சாதிக்க முடியாது. மேலும் கருணா சீமானை ஆதரிக்கவில்லை..

தேர்தல் நேரம்  ஒரு வார்த்தை  கருணாநிதிக்காக பேசியிருந்தால்

சீமான் இன்று உலக பணக்காறர்   வரிசையில்..

ஐ.நா

போர்க்குற்றம்

இன  அழிப்பு..........  எதுவுமற்று  எல்லாமே ஒழிக்கப்பட்டிருக்கும   கருணாநிதியால்.

நன்றி  கெட்ட இனம்  எனது...... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
இன்று சாதிகள் இல்லை நாம் தமிழர் என்று சொல்லிக்கொண்ட்டே முத்துராமலிங்க்த்தேவரின் சிலைக்கு மாலையிடுவதன் மூலம் திமுக,அதிமுக போலவே தனது சாதீய அரசியலையும் முன்னெடுக்கிறார்.

எல்லோரும் ஒவ்வொரு சாதியாக இருப்பதால் சீமான் யாரின் சிலைக்கும் மாலை போட முடியாது. சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இருக்கும் கருத்துக்களை வாசித்தால் இரண்டு குரூப்களும்(சீமான் ஆதரவு, சீமான் எதிர்ப்பு) தங்களின் கடைசி எல்லையில்(Extreme end) தொட்டுக்கொண்டு நிற்பதாக தெரிகிறது. தமிழ்நாட்டின் அனைத்து தலைவர்களும் ஈழப்பிரச்சனையை தங்களின் அரசியல் வாழ்வு அஸ்தமிக்காமல் இருக்கவே நிச்சயம் பயன்படுத்துகிறார்கள். அதில் எந்தளவு பயன்படுத்துகிறார்கள் என்பதில் வேண்டுமானால் கட்சிகளுக்குள் வித்தியாசம் இருக்கலாம்.(இதில் சீமானும், வைக்கோவும் உள்ளடக்கம்)..

இங்கிருக்கும் தலைவர்களை (காங்கிரஸ் நீங்கலாக) தங்கள் வசம் அரவணைத்து திருப்பி, ஈழ ஆதரவு தளத்தை புத்திசாதுர்யமாக பயன்படுத்தி இலக்கை அடையும் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள முதலில் ஈழத்தின் தலைகளிடையே ஒருங்கிணப்பை கொணர்ந்து ஒற்றுமையுடன் தமிழக தலைகளை தட்டுங்கள், அன்றே வெற்றிபடிகளின் கதவுகள் திறக்கப்படும்...

அதுவரை தமிழக தலைகள் ஈழப் பிரச்சனையை ஊறுகாய்போல்தான் அப்பப்போ தொட்டுக்கொள்வார்கள், பெரிய பயன் ஒன்றும் கிட்டாது.

ஒருங்கிணைந்த செயல் முயற்சி, ஈழத்தமிழர்களிடமிருந்தே பிறந்து,தொய்வில்லாமல் தொடரவேண்டும்.

தமிழகம் தானாக ஈழம் பெற்றுத் தராது.

ஒருவருக்கொருவர் சேறுபூசி சண்டையிடாமல், நல்ல ஈழத் தலைகளை தேடுங்களப்பு. :)

அப்படியானவர்கள் மேல் சேறு பூசுவதில் பிசியாக இருப்பதால் .........
உங்களுடைய வேண்டுகோளை இப்போதைக்கு ஏற்க முடியாது.
ஒரு 25 30 வருடங்கள் கழித்து .....
தட்டச்சு செய்ய வசதியும் உடலில் செயற்பாடும் இருந்தால் இதை  யோசிக்கிறோம்.
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கொருவர் சேறுபூசி சண்டையிடாமல், நல்ல ஈழத் தலைகளை தேடுங்களப்பு. :)

அவரை   நிறுத்தச்சொல்லுங்கள்

நான்   நிறுத்துகின்றேன்..... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுக - காங்கிரஸின் தோல்விக்குக் காரணம் அவர்களின் செயற்பாடுகளே தானே தவிர சீமான் அல்ல, காகம் இருக்க பனம்பழவிழுந்த கதையாக சீமான் தான் என்பது மிகப்பெரிய காமடி. ஏனென்றால் அதற்குப் பின்னர் ஹைதராபாத்தில் நடந்த தேர்தலிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கூட காங்கிரஸுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த சீமானால் அங்கு நடந்த தேர்தலில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் கூட ஒரு உறுப்பினரைக்கூட தேர்ந்தெடுக்க முடியாத கடை நிலைக்கு மற்றக்கட்சிகள் போக காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அடுத்து தமிழகத்தில் புலிகள் குறித்து பேசச் செய்த பெருமை சீமானைச் சேரும் என்பதற்கு எப்படி என்று  யாரும் விளக்கம் சொல்லவில்லை. 2009 தேர்தல் வெற்றியின் பின் ஜெ. தலைமையிலான அதிமுக அரசே ஈழத்தமிழர் நலன் சார்ந்த பல வரபுகளை சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியதன் மூலம் ஈழத்தமிழர் ஆதரவை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டது அப்படி இருக்க சீமான் மட்டுமல்ல, குப்பன், சுப்பனும் ஈழத்தமிழர் நிலைபற்றி பேசும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னரும் கூட பல அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் ஈழத்தமிழர்,புலிகள் பற்றிப் பேசி பலமுறை சிறை சென்ற வைகோ,நெடுமாறன் போன்றவர்களை விட்டு சீமான் தான் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

அடுத்து சீமானால்  ஈழ்த்தமிழருக்கு என்ன பிரச்சனை?

* தேசியத்தலைவரால் சுதுமலையில் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழீழ சாசனம் தான் ஈழத்தமிழரின் ஒரே யாப்பு,

அதிலும் தன்னுடைய இஸ்டத்துக்கு ஏற்ப தமிழீழப்பிரகடனம் வெளியிட்டது. இவரிற்கு இந்த உரிமையை யார் வழங்கியது?

ஈழத்தமிழருக்கு ஆதரவாக இருக்கலாம் வரவேற்கலாம் ஆனால் ஈழத்தமிழர்களுக்கு என்ன தீர்வு என்பதை அங்கிருக்கும் மக்களும், அவர்களைப் பிரதிநிதித்துவம் பண்ணும் அரசியல்வாதிகளுமே தவிர இவர்கள் அல்ல.

*நாடுகடந்த அரசின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை, குளப்பம் விளைவித்தல்.

*ஏற்கனவே குழுவாதமாகப் பிரிந்திருக்கும் ஈழத்தமிழரிடையே இன்னும் பிரிவுகளை உருவாக்குதல்

*விடுதலைப் புலிகளின்  தலைவ்ர் 200 போராளிகளுடன் பெற்றோல் கானுடனேயெ எப்போதும் இருப்பார். போன்ற கேனைத்தனமான அறிக்கைகள்,  மூலம் ஒரு மாவீரனைக் கோழை போலச் சித்தரித்தல்.

*etc .....

இறுதியாக சீமான் கல்யாணம் செய்வதும் விடுவதும், இல்லை இன்னாரைச் செய்வதும் விடுவதும் அவரது தனிப்பட்ட விடையம் ஆனால் பிரபாகரனது பெயர் சொல்ல தகுதியற்ற ஒருவர் அவரின் பெயரை தன்னுடைய பிரபலத்திற்காகப் போடும் போது தேசியத்தலைவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் என்ற வகையில் இவர்களைப் போன்ற பூச்சுத்தல்காரர்களை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.