Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(உடனடி செய்திகள்). தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

 

மல்லையூரான் உங்களுக்கு பைத்தியமா பிடித்துவிட்டது.. நான் ஏன் அந்த குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்.. நீங்கள்தானே இராணுவம் அப்படி சொல்ல சொன்னதா என எழுதினீர்கள்.. அதற்குத்தான் யேர்மன் அரசும் ஏன் சொல்லச் சொல்லக்கூடாது என கேட்டிருந்தேன்.. காரணம் யேர்மன் பிரசை அவர்.. அதனால் நடந்தது கொலை ஆனால் யேர்மன் அரசு சிறிலங்கா அரசை கேட்கணும்.. அதைத் தவிர்க்க யேர்மன் அரசு இப்படியும் சொல்ல சொல்லலாம்.. இந்த யேர்மன் அரசு சாதாரணப்பட்டதல்ல.. நீதிக்குப் புறம்பாக வெளிநாட்டினருக்கு எத்தனையோ பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்காங்க.. அதை குமாரசாமி போன்ற ஏனைய யேர்மன் உறவுகள் ஒப்புக் கொள்ளுவாங்க என நினைக்கிறேன்.

உண்மையில் எனக்கு பைத்தியம் இல்லை. நான் ஏன் நீங்கள் அந்த குடும்பந்தை காப்பற்ற முயல்வீரகள் என்று நினக்கிறேன்? அவர்கள் தானே பொட்டம்மானின் சொந்தங்களாயிற்றே. நீங்கள் அந்த குடும்பத்தை காப்பற்ற அது ஆமி செய்த கொலை என்ற சந்தேகம் பத்திரிகைகளில் வருவதை சொல்ல வேண்டும். நீங்கள் எல்லோரும் ஒரு நாள் அந்த குடும்பதுடன் போய் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சில் கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், சுற்றுல்லா பயணிக்கு போதிய பாதுகாப்பில்லாமல் சுற்றுலா பயணிகளை கவரும் இலங்கை நட்ட ஈடும் தர வேண்டும் என்றும் கேட்க வேண்டும். உங்கள் எழுத்துகள் அவற்றை செய்வதற்கு எதிர்மறையா சிந்திக்கிறது என்பதால் எனது ஏமாற்ற்தை காட்டவே குடும்பம் பொய் சொல்வதாகவும் நீங்கள் அந்த பொய்யை காப்பாற்ற முயல்வதாகவும் எழுதினேன். எனக்கு நன்றாக விளங்குகிறது நீங்கள் அந்த குடும்பத்தை காப்பாற்ற முயல மாட்டீர்கள் என்பது. 

 

நீங்கள் அந்த குடும்பத்திடம் எதைவாது கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. நீங்கள் தான் அந்த குடும்பம் பேசுவது வினோதமாக இருக்கிறது என்பது போல் எழுதினீர்கள். அதாவது அவர்கள் பொட்டம்மானின் அண்ணார் இருதய நோயால் இறந்தார் என்று சொல்கிறார்கள் என்றும், அதை சந்தேகிக்க தேவை இல்லை என்பது போலவும் எழுதினீர்கள். அதனால் பத்திரிகைச் செய்திகளை பற்றி அவர்களிடம் பிரஸ்தாபித்து ஆலோசனை வழங்கும் படி சொன்னேன். பின்னர் நீங்கள் குடும்பத்தை இன்னமும் பார்க்கவில்லை என்றும் உங்களின் நண்பன் சொல்கிறார் என்றும் சொன்னீர்கள். அப்படியானால் நீங்கள் செய்யத்தக்கது நண்பனுக்கு பத்திகை செய்திகளை சொல்லி அவரை அவர்களின் குடும்பத்துக்கு ஆலோசனை வழங்கும்படி கேட்கலாம். 

 

உங்களுக்கு உண்மையில் அந்த குடும்பத்தை தெரியும் என்பதால் படத்தில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டிருக்கும் உடல் பொட்டமானின் தமையனார் என்பதை கிரகித்திருக்க கூடியவர்களில் ஒருவர். கொலை இடத்தில் பொலிஸ் இல்லை. ஆமி நிற்கிறது.  இது ஜேர்மனியில் நடக்கத்தக்க நடை முறைகளுக்கு மாறானது. இந்த நிலையில் நீங்கள் உங்கள் நண்பருடன் பேசும் போது இது ஆமியால் நடத்தப்பட்ட கொலையாக சந்தேகப்பட கூடியாதாக இருக்கிற்து என்றும் இது ஜேர்மன் தூதுவராலயம் மூலம்தான் கையாள வேண்டுமென்பதையும் நீங்கள் அவருக்கு ஆலோசனை கூறவேண்டும். 

 

இலங்கை ராணுவத்திடம் இருந்து தப்பியோடி வந்த போது உங்களுக்கு ஆதரவுகொடுத்தது ஜேர்மன் அரசாங்கம் என்பதால் நீங்கள் அதன் மீது பழி காண்பது நன்றிக்கடன் இல்லாது போன்றது. ஜேர்மன் அரசாங்கம் இலங்கையை இந்த விடையத்தில் நெருக்க வைக்க, நீங்கள் ஜேர்மன் அரசு மீது நன்றி உணர்வுடன் இருந்தால்தான் அது முடியும். 

மல்லையை பொறுத்த மட்டில்...இலங்கையில் யார் இறந்தாலும் (எது நடந்தாலும்) இந்திய/சிங்களவனின்/ஒட்‌டுண்ணிகளின் சதி உள்ளது.... :)

 

தனக்கு பிரச்னை வரும் என்றால் இந்த ஆள் ஏன் இலங்கை போனார்?

ஒரு German பிரஜயை கொல்லுமளவுக்கு சிங்களவன் அவ்வளவு முட்டாளாக இருக்கமுடியாது..(ஆனானப்பட்ட **********க்கெ ஆப்பு வைச்சவன்)

புல்லுக்குள் இருப்பது உண்மையிலேயே இங்கு கதைக்கப்படுபவரா?

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். :(

 

வெளிநாட்டுப் பிரஜைகளை கொல்வது ஒன்றும் சிறீலங்காவிற்குப் புதிதல்ல. அதனால் தான் பிரிட்டன்.. அமெரிக்கா பகிரங்க பயண எச்சரிக்கைகளைத் தந்துள்ளன.

 

இந்த நிலையில்.. முள்ளிவாய்க்காய் படுகொலைகளைக் கண்ட பின்னும்.. முக்கிய தலைவர்களின் குடும்பத்தினர் அங்கு செல்வது எவ்வளவு மோசமான ஒரு நடவடிக்கை. இவர்களை அங்கு அழைத்தவர்கள் யார்...  என்ற பின்னணியை ஆராய்ந்தால்.. இந்தக் கொலைகளுக்கான (கொலையாக இருந்தால்) ஆட்களைக் கண்டறியலாம்..!

 

ஒரு புலனாய்வுத்துறை தலைவரின் சகோதரத்திற்கு தன் எதிரி நாட்டில் உள்ள ஆபத்து தெரியாமல் போனது.. மோசம்..!!! தற்கொலைக்குச் சமனானது. இந்த  மரணத்திற்கான உடற்கூற்றியல் ஆய்வு அறிக்கை கிடைத்த பிந்தான் இது கொலையா.. இயற்கை மரணமா என்றும் உறுதியாகச் சொல்ல முடியும். ஜேர்மன் அரசு இந்த ஆய்வறிக்கையை பெற்றுக் கொண்டுக்கக் கடமைப்பட்டுள்ளது..! :icon_idea:

மல்லையை பொறுத்த மட்டில்...இலங்கையில் யார் இறந்தாலும் (எது நடந்தாலும்) இந்திய/சிங்களவனின்/ஒட்‌டுண்ணிகளின் சதி உள்ளது.... :)

 

நானும் அவர்களும் இப்படி எத்தனை இறப்புக்களில் சந்தித்தோமோ எனக்கு தெரியாது. ஆனால் அரசை சோழியன் ஒருவர் மட்டும்தான் காப்பாறுகிறார் என்பதல்ல இங்கே நடக்கிறது. உதவிகள் வந்து குவிய ஆரம்பித்திருக்கிறது.

 

கதைகட்டுவது இப்படியானவ்ர்களின் வழக்கம். இது விடயத்தின் திசையை திருப்ப முயலும் நடவடிக்கை. திருப்ப உதவிக்கு இங்கே இந்தியாவும் இழுக்கப்படுகிறது. இது நாதனுக்கும் சோழியனுக்கும் என்ன உறவு என்ற எழுப்ப வைக்கிறது.

 

எனது கேள்வி சோழியன் எப்படி இந்த இறப்பை இருதய நோய் என்று இங்கே பதிந்தார் என்பது. அதற்கு சோழியன் தொடர்ந்து வேறு வேறான பதில்களை அளித்தால் தொடர்பில்லாத விடங்கள் இங்கே வந்தன.

 

ஆனால் சோழியன் ஆண்டாண்டுக்கலம் அங்கத்துவம் வைத்திருந்தும் யாழில் எழுதுவதை தவிர்த்து வந்தார். அது மட்டுமல்ல இங்கே எழுதாமல் வேறு இடங்களில் எழுதினார். வேறு ஒரு உறவு முக நூலில் இருந்து கொண்டு வந்த ஒரு விடயம் சம்பந்தமாக இங்கே வருவது போல் வந்தார்  இவர் எத்தனையோ ஆண்டுகள் எழுதாமல், நேற்றும் முதல் நாளும் ஒரே ஒரு விடயம் பிரதானமாக விவாதித்திதார். அது பொட்டம்மான்  துரோகியாக மாறி காட்டிகொடுத்ததுவிட்டார் என்பது போல் இருந்தது. பின்னர் தானாகவே போட்டமானின் இறப்பை வெளிவிட்டு அது இருதயநோய் என்று முடிவும் கட்டினார்.  

 

நான் அல்ல, அவரேதான் தன்னிடம் விபரம் இருப்பத்தாக தன்னை நேரே கேட்கும் படி சொன்னவர். அவர் இது வரையில் அவசரமாக அந்த ஆள் இருதய நோயால் இறந்தாக வெளிவிட்ட கருத்துக்கு மன்னிப்பு கோரவில்லை. அது மட்டுமல்ல அதை நிறுவும் முயற்சிகள் தான் முன்னெடுக்கின்றார்கள். இது நிச்சயமாக பொட்டம்மானின் எஞ்சியிருக்கும் அங்கத்தவர்களை பழைவாங்குவது மூலம் ந்டத்தப்படும் சந்தர்ப்பம்தான் கூட. இது அரச பணத்தை வைத்து கணவனை இழந்த பெண்ணை ஜேர்மனியில் வைத்து மிரட்டுவதால் அடையலாம் என்று எதிர்பார்க்கிறார்களாக என்ற கேள்வியை எழச்செய்யும்.  

 

ஊடகங்கள் பொய் செய்தி எழுதினால் அதன் பொறுப்பு அரசு. ஊடகங்கள் சரியாக இயங்க ஜனநாயகம் தேவை. ஒன்று பொய்யை எழுதினால் போட்டியாக சரியை வெளிவிடும் ஊடகம் பின்நாளில் முன்னேறும். அது இலங்கையில் முடியாமல் இருபது இலங்கை அரசு ஊடகங்களின் கழுத்தை நெரித்துவிட்டு தனது ஸ்பின் டோக்ரேசுகளுக்கு என்ன சொல்ல வேண்டும் என்ற செய்தியை முதலில் அனுப்பி வைக்கிறது என்பதால். 

 
இது ஊடகங்களில் வந்த செய்தி, அதன் மறுப்பு வரும் வரை, உண்மை. செய்திவரும் முன்னர் தான் பிழையான செய்தியை வெளிவிட்டுவிட்டாராயின் சோழியன் மன்னிப்புக் கேட்கலாம். (நாம் அதை ஏற்போம்-பண்புக்காக- ஆனல் நம்ப வேண்டுமென்பதில்லை)

(கோத்தா மற்றய எந்த அரசை கண்டும் பயப்படாமல்தான் 150,000 மக்களைக் கொலை செய்த்து புலிகளை அழித்தார் என்பதுதான் மாற்றுக்கருத்துகளின் வாதம் -நேற்றும் கூட அப்படி ஒரு வாதம் வைக்கப்படிருக்கிறது . அவர் இன்னொரு தமிழனை கொலை செய்யப் பயந்தார் என்பதை இங்கே வைப்பவர்கள் அந்த திரிகளுக்கும் சென்று கோத்தா பயப்படாமல் நடக்க முடியாது என்ற கருத்தையும் வைக்க வேண்டும்)

  • தொடங்கியவர்

பொட்டுஅம்மான் பற்றிய சந்தேக செய்திய சோழியன்  முதலில் இணைக்கும் போதே இதில் எதோ வில்லங்கம் என்று என் உள்மனது சொல்லியது  என்னவோ நடக்கட்டும்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் பிறவிக் குனம் தெரிஞ்சும் ஏன் இவர் அந்த சொறிலங்காவுக்கு போனார் :( ஆழ்ந்த இரங்கல்கள்

ஆழ்ந்த இரங்கல்கள் ................
 
செத்தவீட்டில் நின்று உங்கட ------- காட்டாம .விட்டுடுங்க .

 

பொட்டு அம்மானின் சகோதரர் சிறீலங்கா இராணுவத்தால் அடித்துப் படுகொலை!!

ஜேர்மனி பிரேமனில் வசித்து வந்த ஜேர்மன் பிரஜையான சண்முகலிங்கம் சிவஞானம் என்பவர் கடந்த வாரம் சிறீலங்கா சென்றிருந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மானின் சகோதரர் ஆவார்.

யாழ்ப்பாணம் சென்றிருந்த இவர் சிறீலங்காப் புலனாய்வத்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணைக்குக் கொண்டு சென்ற வேளை அவர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்துச் சென்றதே இவரைப் படுகொலை செய்யும் நோக்கிலேயே இவர் புலனாய்வுத் துறையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 
(இன்று 23.8.2013 யேர்மன் நேரம் மாலை 17.28 வரை அவரது மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ அவர் புலனாய்வுத்துறையால் கொண்டு செல்லப்பட்டதும் படுகொலை செய்யப்பட்டதும் தெரியாது.. அதை அவர்களும் நேற்று சில தமிழ் இணையங்களைப் பார்த்தே அறிந்ததாகவும் கூறினார்கள். மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தியும் லங்காசிறியில் இருந்ததே என்றார்கள்.. சரி.. அதுக்கு பிறகு வருவம்.. அவர்களுக்கு முதன் முதல் ஞானத்தின் உடன் பிறவா சகோதரி ஒருவர் ஊரில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடைக்கு போவிட்டு வரும்போது மாரடைப்பால் இறந்ததாக கூறியதாக கூறினார்கள்.)

இவர் ஜேர்மன் பிரஜையாகையால் அவரது உடலத்தைக் குடும்பத்தினர் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளபோதும் சிறீலங்கா அரசாங்கத்தால் அது மறுக்கப்பட்டுள்ளது. அவரது உடலம் எரிக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்ட போதும் பின்னர் உடலம் தரப்பட மாட்டாது என சிறீலங்கா அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான சர்வதேச இராஜதந்திர அழுத்தங்களிற்கும் பணியாது அராஜகம் செய்யும் சிறீலங்கா அரசு இந்த விடயத்திலும் அராஜகத்தையே காட்டுகின்றது.

 
(நன்னா கதைவிடுறாங்கன்னா.. கயிறுவிடுறாங்கன்னா.. றோஹண விஜவீரவின் சமகால நண்பர்.. JVP கிளர்ச்சிகளில் அவருடன் இணைந்து பங்குபற்றி சிறையும் அனுபவித்த மிராஜ் மெண்டிசும் பிறேமனில்தான் விசிக்கிறார்.. ஆனால் பல வருடங்களாக அவர் புலிகளுக்கு ஆதரவாகவும் பிறேமன் தமிழர்களுக்காகவும்தான் செயற்படுகிறார்.. யாராவது ஒரு தமிழர் பிறேமனில் திருப்பி அனுப்பப்படப் போகிறார் எனில் அவர்தான் முதல் எதிர்ப்பாளராக சுலோகத்துடன் நிற்பார்.. முந்தி பிறேமன் வரும் புலி பெரிசுகள் என்போர்கள் அவரை சந்திக்காமல் சென்றதில்லை.. தற்போது அவரது முயற்சியால் பிரேதம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஒரு துக்கரமான விடயம் என்னவெனில்.. அந்தப் பிரேதத்துடன் கொழும்பு வந்த வயோதிக மாது ஒருவர் விசாரணை என்ற பெயரில் கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.. (சிலவேளை சோழியான் சொல்லித்தான் கைது செய்தார்கள் எனவும் மனம் வியாதிக்கலாம்.) எனினும் நாளை பிறேமனில் பிரேதம் இருக்கும் எனவும்.. Bremen - Walle என்ற இடத்திலுள்ள சுடலையில் தகனம் செய்ய முயற்சிப்பதாகவும் கூறினார்கள். தகன விபரம் நிச்சயம் தருவேன்.. அஞ்சலிக்கு சிலர் வருவார்கள் என நம்புகிறேன்.. டேய் சோழியான்.. சிறீலங்கா அரசை காப்பாத்தத்தான் நிக்குறாய்.. துரோகி.. நக்கி நாயே.. ஏசுபவர்களுக்கு முதல் நானே என்னை ஏசிக் கொள்ளுகிறேன்.. அப்பதான் பிறகு வாற ஏச்சுகள் சுணைக்காது.. பிறசரும் சமநிலையில இருக்கும்..)

மேலும் சிறீலங்கா சென்றிருந்த ஒரு ஜேர்மன் தமிழ்ப்பிரஜை நேற்று சிறிலங்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு விசாணைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவரின் நிலைமை பற்றிய மேலதிகத் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. சிறீலங்கா இனவெறி அரசின் பொய்ப் பிரச்சாரங்களை நம்பி சிறீலங்கா செல்லும் எம்மக்கள் இப்படியாக அடித்துக் கொல்லப்படுவதும் கடத்தப்படுவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

அதுவும் முக்கியமாக ஜேர்மனியில் உள்ள சிறீலங்காத் தூதரகம் தமிழ் மக்கள் மீதான உளவு ஸ்தாபனமாகவே இயங்குகின்றது. இதுவே ஜேர்மனியில் இருந்து சிறீலங்கா நோக்கிச் செல்லும் எமது தமிழ் மக்களின் விபரங்களைத் தொகுத்து வழங்குவதுடன் அவர்களின் உயிர்களிற்கு அச்சுறுத்தல் விளைவித்துக் கொண்டும் உள்ளது. இதனை எமது மக்கள் புரிந்து மிகவும் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.

 
 

https://www.facebook.com/thamilmaran.kri?hc_location=stream

 

 

 

Edited by sOliyAn

ஆழ்ந்த இரங்கல்கள்!

 

பொட்டமானின் சகோதரன் ஏன் தான் இலங்கைப் போனார்??  (ஆபத்து என்று தெரியும் தானே) 


  :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்.. :(  :(  

மன்னிக்கவும் சோழியன்.

 

அரசியல் கருத்துகளுக்கு பலரும் விளக்கம் கேட்பார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லையோ?

பொட்டுஅம்மான் பற்றிய சந்தேக செய்திய சோழியன்  முதலில் இணைக்கும் போதே இதில் எதோ வில்லங்கம் என்று என் உள்மனது சொல்லியது  என்னவோ நடக்கட்டும்  :icon_idea:

 

 

ஆழ்ந்த இரங்கல்கள்.. :(  :(  

 

எனக்கும் இரங்கல் சொல்லுங்க!! :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.