Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமாவளவன் மீது கோவை பெண் பகீர் புகார்! போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் பரபரப்பு பேட்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

thirumavalavan25.jpg

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கந்தசாமி மகளும், காந்திபுரம் பகுதியில் உள்ள கமலா திரையரங்கத்தின் உரிமையாளர்களில் ஒருவருமானவர் கவிதா (35). சனிக்கிழமை காலை கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற கவிதா, புகார் மனு ஒன்றை கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நான் எஸ்.டி.கே.எஸ். என்ற நர்சரி பள்ளியை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன். எனக்கு லதா மகேஷ்வரி என்பவர் உதவியாளராக இருக்கிறார். அவருடைய கணவர் மூலமாக கார்த்தி என்பவர் பழக்கமானார். கார்த்தி மூலம் சிலர் நண்பர்களானார்கள்.

 

என்னுடைய நர்சரி பள்ளியை லீசுக்கு கேட்டார்கள். பின்னர் திடீரென்று பவர் எழுதி கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்கள். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. எனக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. ஆகையால் ஈஷா என்ற இரண்டு வயது குழந்தையை நான் தத்தெடுத்திருந்தேன். பவர் எழுதி கொடுக்கவில்லை என்றால், அந்த குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள். மிரட்டி என்னிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டார்கள்.

 

இவர்கள் எல்லோருமே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பின்பலம் கொண்டவர்கள். ஏனென்றால் திருமாவளவனுக்கும் எனக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பார்த்தபோது அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் வேறமாதிரி பழக ஆரம்பித்துவிட்டோம். அதனால் திருமாவளவன் சொல்லியதற்காக எனது கணவரான செந்தில்குமாரை கடந்த சில மாதங்களுக்கு முன் விவாகரத்து செய்துவிட்டேன்.

 

இப்போது, என்னுடைய சொத்துக்கள் கைவிட்டுபோனதால் திருமாவளவன் என்னை சந்திக்க மறுக்கிறார். ஈஷாவின் பிறந்தநாள் அன்று குழந்தையை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார். நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் என்று சிலவற்றை காண்பித்தார். என்னை யார் என்று சொல்லுவதற்கு இந்த படங்களே சாட்சி. உன்னை யார் என்று தெரியவில்லை என்று சொல்கிறார். என் மீது ஆசையில்லாமல் என் சொத்தின் மீதுதான் அவர் ஆசைப்பட்டுள்ளார்.

 

இப்போதும்கூட திருமாவளவனின் உதவியாளரான முத்துப்பாண்டி, ஏன் புகார் கொடுக்க சென்றீர்கள். பேசி தீர்த்தித்துக்கொள்ளலாம் வாருங்கள் என்று அழைத்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் என்னை கொலை செய்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். இவ்வாறு கூறினார்.

 

கோவை பெண்ணின் புகார் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=106278

  • கருத்துக்கள உறவுகள்

//நாளடைவில் வேறமாதிரி பழக ஆரம்பித்துவிட்டோம். //

 

இதற்கு சரியான விளக்கம் கொடுத்த பின்னர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சொல்லுறது காலாகாலத்தில் கலியாணம் கட்டச்சொல்லி ,எங்கள் கட்டிளங்காளைகள் இதை கவனத்தில் எடுப்பது நல்லது :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கோவை: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, கவிதா என்ற பெண் கோவை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சுந்தரத்தின் மகள் கவிதா. இவர், திருமணமாகி விவாகரத்து பெற்று தனியாக கணபதி பகுதியில் வசித்து வருகிறார். மேலும், எஸ்.டி.கே.எஸ் என்ற பெயரில் நர்சரி பள்ளி ஓன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கவிதா, இன்று கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் ஒன்றை அளித்தார்.

இது குறித்து கவிதா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் திருமாவளவனை சந்தித்தபோது எங்களுக்கு நட்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, என்னை திருமணம் செய்து கொளவதாக திருமாவளவன் கூறி ஏமாற்றி விட்டார்.

மேலும், திருமாவளவன் ஆதரவாளார்கள் விஜயகுமார், சவுந்தர்ராஜன், கார்த்திக், ஜெயந்தி, சந்துரு உள்ளிட்டோர் மூலம் எனது பள்ளியை அபகரித்து விட்டனர். அதேபோல், எனது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க முயல்கின்றனர். திருமாவளவனை திருமணம் செய்து கொள்வதற்காகவே எனது கணவரை விவகாரத்து செய்தேன். ஆனால், திருமாவளவன் எனது சொத்துகளுக்காக காதல் நாடகமாடி அபரிக்க முயல்கிறார்.

அதேபோல், எனக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. என்னை ஏமாற்றி வாங்கப்பட்ட சொத்துகளை மீட்டு தருவதுடன் எனக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். நான் தத்தெடுத்து வளர்த்து வரும் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கூட திருமாவளவன் கலந்து கொண்டிருக்கிறார்.

 

 

காதல் நாடகமாடி, தனது ஆதரவாளர்கள் கார்த்திக் உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் என்னை ஏமாற்றிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

கவிதாவின் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

 

பிரபல அரசியல் கட்சித்தலைவர் மீது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ச.ஜெ.ரவி

http://news.vikatan.com/article.php?module=news&aid=18585

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுதான் சொல்லுறது காலாகாலத்தில் கலியாணம் கட்டச்சொல்லி ,எங்கள் கட்டிளங்காளைகள் இதை கவனத்தில் எடுப்பது நல்லது :D:icon_idea:

அப்ப வயதுபோகப்போகத்தான் இளமையிலை விட்ட சேட்டையள் வெளியிலை வருமெண்டுறியள்?  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களில் கன்னி.. கலியாணம் ஆனவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் இப்போ தவறு செய்கிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம்.. உடல்.. கற்பு.. என்ற அந்தப் பெண் இயல்பை அது சார்ந்த சமூக வெருட்டல்களை வைச்சு.. வருமானம் தேடிக்கொள்வது..??!

 

ஆண்களைப் பொறுத்த வரை.. இப்படியான குற்றச்சாட்டுக்களை ஒரு காதால் கேட்டு மறுகாதால் விட்டுவிட்டு தங்கள் அலுவலைப் பார்த்துக் கொள்வதே இந்த திட்டமிட்ட நாசகாரிகளின் நோக்கங்களை சமூகத்தில் முறியடிக்க வசதியாக இருக்கும்.

 

சட்டங்களும்.. உடலும்.. சமூகமும்.. பெண்களுக்கு சாதகமாக உள்ளவரை.. பெண்களின் மீது ஆணாதிக்கம் என்பது உள்ளதாக சித்தரிக்கப்படும் வரை.. பெண் குற்றவாளிகள்.. தப்புச் செய்யவும் தப்பிக்கவும் ஆயிரம் வழிகள் அவர்களுக்கு அமையும்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அவவுக்கு என்னதான் வேணும் , திருமாவளவனா ,  ஊரரிய   திருமாங்கல்யமா ! :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் மீதும் அபாண்டமான அவதூறு! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!

 

thirumavalavan25.jpgவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவையைச் சார்ந்த கவிதா என்பவர் இன்று (24-08-2013) கோவை மாநகரக் காவல் ஆணையர் அவர்களைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மீதும் அவதூறான செய்திகளைக் கூறியிருக்கிறார்.

காவல்துறையினரிடம் கொடுத்த புகாரில், கோவையைச் சார்ந்த கார்த்திக், அவரது மனைவி ஜெயந்தி, வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் அவரது உதவியாளரான லதா, லதாவின் கணவர் சந்துரு ஆகியோர், கவிதாவுக்குச் சொந்தமான எஸ்.டி.கே.எஸ். நர்சரிப் பள்ளியை குத்தகைக்குக் கேட்டதாகவும், பின்னர் மிரட்டி 'பவர்' எழுதி வாங்கிக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.  புகாரில் எந்த இடத்திலும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் பெயரைக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப் பிரிவிலும்,  பாண்டிச்சேரி காவல் நிலையத்தில் ஒருமுறையும், பின்னர் சென்னையில் காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இரண்டு முறையும் இதே புகாரை கவிதா அளித்திருக்கிறார். மேற்கண்ட ஐந்து புகார்களிலும் எமது கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களைப் பற்றி அவதூறாக எதையும் குறிப்பிடவில்லை. ஆனால், அதற்கு நேர்மாறாக, கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியைப் பற்றியும், தலைவரைப் பற்றியும் அபாண்டமான அவதூறு செய்திகளைக் கூறியிருக்கிறார். 
 
தான் எடுத்து வளர்க்கும் குழந்தையின் பிறந்த நாளுக்கு கவிதா அழைத்ததன் அடிப்படையில், ஒரு கட்சியின் தலைவர் என்கிற முறையிலும், தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி தன் குழந்தையின் விழாவுக்கு வரும்படி விடுத்த வேண்டுகோளை மதிக்க வேண்டும் என்கிற அடிப்படையிலும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழந்தையை வாழ்த்தினார்.  இது சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. 

 

அதன் பின்னர் கட்சிக்குத் தொலைக்காட்சி தொடங்குவதற்கு தாம் நிதி உதவி அளிக்க விரும்புவதாகச் சொல்லி சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவரைச் சந்தித்திருக்கிறார். ஆனால், அவ்வாறு நிதி உதவி எதுவும் தேவையில்லை என்று எமது கட்சியின் தலைவர் மறுத்து விட்டார். அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை. 

 

ஆனால், கட்சியின் கொடியை தனது காரில் கட்டிக்கொண்டு தன்னுடன் வியாபாரத் தொடர்பில் உள்ளவர்களை மிரட்டியிருக்கிறார். கட்சியின் பெயரையும், கட்சித் தலைவரின் பெயரையும், கட்சியின் கொடியையும் தொடர்ந்து அவர் தவறாகப் பயன்படுத்தி வந்தது மிகவும் காலதாமதமாகவே தெரிய வந்தது.  ஒரு முறை கட்சிக் கொடி கட்டிய காரில், கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு, தலைவர் இல்லாத நேரத்தில் வந்தார். அங்கிருந்த பொறுப்பாளர்கள் விசாரித்தபோது அவர் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை என்பதும், கட்சியின் பெயரையும் கட்சியின் தலைவரின் பெயரையும் தவறாகப் பயன்படுத்துவது அவர்தான் என்பதும் தெரிய வந்தது.  கட்சியில் இல்லாத ஒருவர் கட்சியின் பெயரையும், கொடியையும் பயன்படுத்துவது தவறு என்று மிகுந்த கனிவோடு அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  இனி அவ்வாறு பயன்படுத்த மாட்டேன் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

 

இந்நிலையில், கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நர்சரி பள்ளியை வாங்கிய கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களுக்குத் தெரிந்ததால்தான், தரவேண்டிய பணத்தைத் தராமல் இழுத்தடிக்கிறார்கள், ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று கவிதா கருதியிருக்கிறார்.

அதனால் தலைவரின் ஓட்டுநர் முத்துப்பாண்டியைத் தொடர்புகொண்டு, "உங்கள் தலைவரிடம் சொல்லி கார்த்திக்கை மிரட்டிப் பணம் வாங்கித் தாருங்கள்" என்று கேட்டிருக்கிறார்.  "இதுபோன்ற விஷயங்களில் கட்சியோ, கட்சித் தலைவரோ தலையிட மாட்டார்கள்" என்று சொல்லி முத்துப்பாண்டி மறுத்திருக்கிறார். அதற்கு, "அப்படியா உங்களைத் தலையிட வைக்கிறேன் பார். உங்களை அசிங்கப்படுத்துகிறேன் பார்" என்றெல்லாம் முத்துப்பாண்டியிடம் ஆவேசமாகப் பேசியிருக்கிறார். அதன் பின்னரே இவ்வாறு புகார் கொடுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிய வருகிறது.

 

அவர் கூறியுள்ளபடி, கார்த்திக் மற்றும் அவர்களது நண்பர்கள் யாரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் இல்லை;  கட்சிக்குத் தொடர்புடையவர்களுமில்லை.  அத்துடன் இந்த விவகாரத்தில் கட்சியோ, கட்சியின் தலைவரோ, தலைவரின் ஒட்டுனரோ யாரும் தலையிடவேயில்லை.  கவிதா என்பவர் கூறியிருப்பது முற்றிலும் அபாண்டமான அவதூறாகும். 

 

கட்சியின் பெயரையும், தலைவரின் பெயரையும் கவிதா தவறாகப் பயன்படுத்தி வந்தது தாமதமாகவே தெரிய வந்தது. எனவே, இது தொடர்பாக காவல்துறையினரிடம் கட்சியின் சார்பில் கவிதா மீது புகார் கொடுக்க முடிவுசெய்துள்ளோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=106284

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கவிதா திருமாவளவன் என்கிற பெயரில் வங்கிக் கணக்கு....

 

1185057_195014224008774_1384312609_n.jpg1005821_195014314008765_1422946015_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதி ஆவதற்கு முன்பே.. திருமணம் செய்துவிட்டால், இப்படியான பிரச்சினைகள் ஏற்படாது.
இதற்காகத்தான்... பல அரசியல் வாதிகள் மூன்று, நான்கு திருமணம் செய்து... உந்தத் தொல்லைகள் ஏற்படாமல் நிம்மதியாக இருக்கிறார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்த ஐடியாவும்  நல்லாத்தான் இருக்கு ! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல்வாதி ஆவதற்கு முன்பே.. திருமணம் செய்துவிட்டால், இப்படியான பிரச்சினைகள் ஏற்படாது.

இதற்காகத்தான்... பல அரசியல் வாதிகள் மூன்று, நான்கு திருமணம் செய்து... உந்தத் தொல்லைகள் ஏற்படாமல் நிம்மதியாக இருக்கிறார்கள். :D

 

அப்ப கருணாநிதி செய்தது சரி தானே சிறியண்ணா??? :lol:

(அவன் சிங்கன் தான்) :o:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதி ஆவதற்கு முன்பே.. திருமணம் செய்துவிட்டால், இப்படியான பிரச்சினைகள் ஏற்படாது.

இதற்காகத்தான்... பல அரசியல் வாதிகள் மூன்று, நான்கு திருமணம் செய்து... உந்தத் தொல்லைகள் ஏற்படாமல் நிம்மதியாக இருக்கிறார்கள். :D

 

அரசியல்வாதின்னா சபலப்புத்தியோட தான் வாழனும் என்றில்லைத் தானே. சபலப்புத்தி உள்ளதுகள்.. கலியாணம் கட்டலாம். கட்டினாலும் அதுகள் அடங்கப் போறதில்லை. அது வேற பிரச்சனை. :)

 

ஆனால் அரசியல்வாதின்னா.. அவனுக்கு/அவளுக்கு என்று சில அடிப்படை தகுதிகள்.. மனித சமூக ஒழுக்கம் அவசிமுன்னு ஒரு வரையறை வந்தால் அன்றி.. உதுகளைக் கட்டுப்படுத்துவது கடினம்..! :icon_idea:

>காதல் நாடகமாடி, தனது ஆதரவாளர்கள் கார்த்திக் உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் என்னை ஏமாற்றிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

 

ஆமா!, இவா முதல் முதலில் திருமாவாவைப் பார்த்துக் காசல் வசப்பட்டாவாம்.

 எற்கெனவே கல்யாணம் கட்டினவாவை இவர் 'காதல் வசனம் பேசி" ஏமாற்றினாராம். பாப்பாவும் ஏமாந்துவிட்டதாம்.

ஆனால் அரசியல்வாதின்னா.. அவனுக்கு/அவளுக்கு என்று சில அடிப்படை தகுதிகள்.. மனித சமூக ஒழுக்கம் அவசிமுன்னு ஒரு வரையறை வந்தால் அன்றி.. உதுகளைக் கட்டுப்படுத்துவது கடினம்..! :icon_idea:

 

இது அமெரிக்கனுக்கு வேண்டுமென்றால் பொருந்தும்.

கலாச்சாரம், பண்பாடு அற்ற இந்தியர்களுக்கு பொருந்தாது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Untitled-1-copy2.jpg

 

1006364_618639298167158_277244786_n.jpg
இந்த பெண்மணியை யார் என்றே தெரியாது-விசி

அப்டியா நம்பிட்டோம் !!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.