Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதறுதேங்காய்களாலும் கற்பூரங்களாலும் பூசிக்க முடியா கடவுள்களே...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கண்ட இரு கருத்துகளுடனும் நான் ஒத்து போகிறேன்.  இதனையே எனது முன்னைய கருத்தில் சுருக்கமாக கூறியிருந்தேன். கடவுளுக்கு ஆன்மீகத்திற்கு இவ்வாறான விழாகளுக்கும் தொடர்பில்லை.

ஒரு மகிழ்விற்காக செய்யபடும் நிகழ்வுகளே இவை என்றாலும் அதில் தவறேதும் இல்லை.

மகிழ்வூட்டம் நிகழ்வுகளும் மனித உளவள மேம்பாட்டுக்கு அவசியமானவையே. 

ஆனால் அன்னிய இன மக்கள் முன்பு செய்யபடுவதால் மற்றயவர்கள் எம்மை பார்த்து எள்ளி நகையாடும் விதத்தில் செய்யாமல்  சற்றே நவீனப்படுத்தி செய்வது நல்லது.

உதாரணமாக உணவு பரிமாறும்போது சுற்றாடலை அசுத்தப்படுத்தாத முறை,

காவடி எடுக்கும்போது மிருகத்தனமான பழைய சம்பிரதாயங்களை பின்பற்றாமல்  இக்காலத்துக்கு ஏற்ற முறையில் மகிழ்வூட்டும் நடனங்களை ஆடுதல் போன்ற விடயங்களை நிகழ்வை நடத்துவோர் கவனத்தில் எடுப்பது நல்லது என்பது எனது அபிப்பிராயம்.

மேற்கு நாடுகளில் நாம் எடுக்கும் இவ்வாறான நிகழ்வுகள் மற்றையோரால் அவதானிக்கபட்டு அது தொடர்பான கேள்விகள் எழுப்பபடும்போது எமது இளைய சமுதாயத்தினர் அதற்கு பதில் அளிக்க கூடிய விதத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்தல் நல்லது. மொழி அறிவு குறைந்த பழமைவாதிகளுக்கு இக்கேள்விகளால் எந்த பாதிப்பும் இல்லை. ஏதோ வாயில் வந்ததை கலாச்சாரம் என்ற பெயரில் கூறிவிட்டு தம்மை தாமே திருப்தி படுத்திவிட்டு சென்றுவிடுவார்கள். மொழி அறிவு, உலக நடைமுறை அறிவு உடைய, பல்லின சமுதாயத்துடன் அதிகமாக பழகும்  எமது புதிய தலைமுறையினரே மற்றைய மக்கள் முன் அவமானப்பட்டு அதன் விளைவாக தமிழ் நடைமுறைகளே வெறுக்கும் அளவிற்கு கூட  செல்லலாம்.

சண்ட மாருதன் தெளிவாக கூறியது போல் கலாச்சாரம் காலத்திற்கேற்ப திருத்தி கொள்ளப்பட வேண்டியது. எமது முன்னோர்களால் 10 ம் 15 ம் நூற்றாண்டிற்கு பொருந்திய  பல கலாச்சார நடைமுறைகள் தற்போதய 21 ம் நூற்றாண்டுக்கு அறவே பொருந்தாதது. இந்த உண்மை தமிழ் பழைமைவாதிகளுக்கு பிடிப்பதில்லை.

நீங்கள்  பொதுவாக  எழுதியிருந்தாலும்

பரிசில்   நடந்த நிகழ்வு

மற்றும் இங்கு இருப்பவன்  என்றரீதியில்

நடைமுறையில்  என்ன  நடக்கின்றது என்பதை அறிவேன்

அதனால்  சிலவற்றை  இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன்.

முதலில்  ஒன்றை  நாம் புரிந்து கொள்ளணும்

எம்மைப்பற்றி  

எமது முறைகள் பற்றி  இங்குள்ளவர்கள் (ஐரோப்பியர்கள்)   எதுவுமே அறிந்திருக்கவில்லை என்பது தவறு.

எனக்கு இதில்  நாட்டமில்லாது விட்டாலும்

இந்த திருவிழாவுக்கு

முன்பும்  

பின்னரும்

அன்றும்

நான்  சந்திக்கும் பிரெஞ்சுக்காறர்கள் இதை பெருமையாகத்தான் பேசிக்கொள்கிறார்கள்.

அவர்களுக்கு இந்தியா சென்று காணமுடியாத ஒரு நிகழ்வை இங்கு தரிசித்த மகிழ்ச்சிதான்  உயர்ந்து காணப்படுகிறது.

இவ்விழாவில்  எம்மவரைவிட ஐரோப்பியரே அதிக ஆர்வம்  காட்டுகிறார்கள்

நானே அதற்கு சாட்சி.

  • Replies 52
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
சுபேஸ் ....., உங்களின் கோபம் நியாயமானது ...... எனக்கும் இப்படியான நிகழ்வுகளைப் பார்க்கும்போது கோபப்பட்டிருக்கின்றேன்.
என்ன செய்வது இப்படியானவர்கள் எம்முள்ளே எப்போதும் இருந்து வருகின்றார்கள் அன்று உச்சகட்ட போர் இடம்பெற்ற காலத்திலும் போராளிகளும், மக்களும் என இறந்த நிலையிலும் கூட ஐந்தறிவுள்ள காகத்திற்கு இருக்கும் இன உணர்வு கூட இல்லாது எம்மினத்திலையே ஒருபகுதி மக்கள் இத்தகைய விழாக்கள் திருவிழாக்கள் செய்து வந்திருக்கின்றார்கள்.
எல்லோரும் ஒரே மாதிரி இருக்கமுடியாது அவர்களை அவர்கள் பாட்டில் விட்டுவிட்டு நாம் எமக்கான பணியினை செய்யவேண்டியதுதான்....., அவர்களை திருத்த வெளிக்கிட்டு எமது நேரத்தை விணடிக்காது எம் இனத்தின் விடியலுக்காக எம்மால் முடிந்ததை செய்வோம். 
இவர்களைப்பார்த்து கொபப்படுவதினால் எமது   உடல்நலம்தான் பாதிக்கும் இப்படியானவர்களை வேற்று இனத்தினர் என்று நினைத்துக்கொண்டு எமது பணியினை செய்வோம் ......

இதை யாழ் - வன்னி மக்களுக்கிடையேயான மனநிலையாக கொள்ளலாமா?

உண்மை ராஜவன்னியன் அண்ணா நான் யாழ்ப்பாணம் மற்றும் வன்னிய மட்டுமே குறிப்பிட்டேன். இதில் வேறு மக்களை நான் குறிப்பிட வேண்டிய தேவை இல்லை. 2009 இல் வன்னியில் இன அழிப்பு நடைபெறும் போது கிரிக்கற்றும் சினிமாவும் மானாட மயிலாடவும் என்று பல யாழ் தமிழர்கள் இருந்தார்கள் . இவர்கள் அங்கு போறாடா முடியாது ஆனால் மவுனமாக இதை எல்லாம் புறக்கணிக்கலாம் ன். யாழில் பல கோவில்கள் தேவைக்கு மிஞ்சி கட்டப் படுகின்றன அந்த பணத்தை மக்களுக்கு உதவலாம் . விளையாட்டுப் போட்டிகளை வைத்து அந்த பணத்தை மக்களுக்கு உதவலாம் ஆனால் எல்லாம் புலம் பெயர்ந்தவன் மட்டுமே செய்யணும் அவர்கள் அன்கு அனைத்து வசதிகளோடும் மகிழ்வாக இருப்பார்கள் என்பது சிலரது கருத்து . தேவை இல்லாமல் தேங்காய் உடைப்பதோ வீண் செலவு செய்வதோ எனக்கும் பிடிக்காது ஆனால் இங்கு திருவிழாக்கள் தான் தமிழர்களை தமிழர் என்று வைத்திருக்குறது . 99% அந்நிய சுழலில் இப்பிடியான விழாக்கள் தமிலரை கொஞ்சம் தமிழரா வைத்திருக்கும் . பிரான்சைப் பொருத்தவரை அவர்கள் சுவிஸ் ஐநாவில் ஊர்வலம் என்றாலும் நிறைய மக்கள் வருகிறார்கள் மாவீரர் தினம் மற்றும் இன விடுதலை விடயங்கள் எது என்றாலும் முன் நிற்கிறார்கள் அப்பிடியே கொஞ்சம் தங்கள் சந்தோசத்தையும் கோவில் என்ற ரீதியில் செய்கிறார்கள் . ஆனால் யாழில் வெறுமனே என்ன நடக்குறது என்று அங்கு பார்வைய செலுத்துபவர்களுக்கு மட்டுமே தெரியும் . மக்கள் பிரச்சனி தீரும் வரைக்கும் ஊரில் உள்ள  திருவிழாக்களை நிற்பாட்டி வைக்கலாம் தானே அதட்குமா அரசாங்கம் விடாது?

தேங்காய் ஒரு உணவு பண்டம்.
இந்த உலகில் குறிப்பாக இது மூன்றாம் தர நாடுகளில்தான் உற்பத்தி ஆகிறது. பாலாக அதை ஏற்றுமதி செய்கிறார்கள்.
இது போதாது என்று இருக்க ................
இப்போ மேலை நாட்டு பெண்கள் யோகா  காகா என்று அலைபவர்களுக்கு. தேங்காயின் இளநீர் சிறந்த (anti oxidant) பானம் என்று போட்டு கொடுத்திருக்கிறார்கள். இப்போ இளநீர் ஏற்றுமதி ஆகிறது தேங்காய் ஆகு முன்பே அழிந்து போகிறது.
 
பணத்தின் ஆதிக்கம்..... ஏழைகளின் சொந்த நிலங்களில் விளையும் உணவைக்கூட நிலா சோறு ஆக்கி  இருக்கிறது. அதாவது தேங்காயின் விலையை உள்ளூர் வாசிகளால் எட்டமுடியாது உள்ளது.
 
இந்த நேரத்தில் இந்த உணவு பண்டத்தை அங்கிருந்து கொண்டு வந்து இங்கே வீதிகளில் குப்பையாக  வீசுவதில். கடவுளுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது??
என்று ஒருமுறை உங்கள் மண்டையை உடைத்தால் குறைந்தா விடுவீர்கள்?? 
 
அப்படி என்று கேட்கிறார்களோ என்னமோ ???

அது சரி அண்ணா இங்குள்ள பணம் அங்கு போய் அங்குள்ள கோவில்களில் இதவிட 100 மடங்கு தேங்காய் உடைத்து அநியாய மாக்குகிரார்கள் அதை என்ன செய்யலாம்? அங்கு அழிவதும் இங்குள்ளவன் பணம் இங்கு அழிவது இங்குள்ளவன் பணம். முதலில் தேங்காயின் தேவை எங்கே இருக்குறதோ அங்கே தேங்காய விரயம் பண்ண வேண்டாம் என்று சொல்லுங்கோ அப்புறம் இங்கு வெறும் கொஞ்ச தேங்காய் உடப்பவர்களை  கட்டுப் படுத்தலாம்.வெறும் தேங்காய் மட்டும் அல்ல கற்ற்பூரம் மெழுகுவர்த்தி என்று எல்லாமே வீண் தான். ஆலயத்தில் எந்த மதம் என்றாலும் இப்பிடி செய்வது வீண். ஆனால் நாட்டில் ஒரு வேலை வெட்டி  இல்லாமல் ஆளுக்கொரு தொலைபேசி,மோட்டார் சயிக்கில் என்று வைத்திருந்து வீட்டுக்கு வீடு டிவி வைத்து நாடகம் மானாட மயிலாட என்று பார்த்து பணத்தையும் நேரத்தையும் மின்சாரத்தையும் வீண் அடிப்பது மட்டும் தேவையோ? அந்த மின்சாரத்தை அங்கு விவசாயத்திற்கு பாவிக்கலாம் பாவிக்கிறார்களா எம் மக்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அன்பு...

கடந்த 30ம் திகதி கூட ஊரில் அதாவது புங்குடுதீவில் ஒரு கோவில் கும்பாபிஷேசகம் நடந்திருக்கிறது..

கும்பாபிசேகம் நடந்து கொண்டு இருக்க வேறு ஒரு ஆலயத்தை சேர்ந்த அம்மா கனேடிய உறவுகள் சிலரது வீடுகளுக்கு போண் பண்ணி எனக்கு ஒரு பத்து லட்சம் அனுப்பினால் போதுமே...எல்லாருமாக சேர்ந்து பத்து லட்சம் அனுப்புங்கோ என்று அழுதாவாம்..அவா கேட்ட பத்து லட்சமும் எங்க இருக்கிறது வெளி நாட்டில் தான்......

நாடு இப்படியாகி விட்டது என்று நினைத்து அங்குள்ள ஆலயங்களில் வருடம் தோறும் தேர்கள் ஓடாமலா இருக்கிறது,புணருத்தானங்கள் நடக்காமாலா இருக்கிறது..???

இப்படி நிறைய விடையங்களை எழுதலாம்..நாடு இப்படி இருக்கிறது,மக்கள் கஸ்ரபடுகிறார்கள் ஆனால் இன்னும் காணி பிடிப்புக்கள்,வேலிச்சண்டைகள்,கோடு கச்சேரி ஏறாமலா எங்கள் மக்கள் இருக்கிறார்கள்...அங்குள்ள ஆலயங்களை சேர்ந்தவர்கள் வெளி நாட்டில் உள்ள ஆலயங்களை சேர்ந்தவர்களை அவ்விடம் அழைத்து கொடி ஏற்றுகிறார்கள்,கிரியைகள் செய்விக்கிறார்கள்...

வசதி அற்றவர்களா சொல்லுங்கள்........???? எழுதிறவர்கள் சும்மா வெட்டியாக  இருந்து கொண்டு சண்டை போட்டு கொண்டோ இல்லை,ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டோ எழுத இல்லை.....நாங்களும் நிறைய விடையங்களை கேட்டு மனதுக்குள் வைத்துக்கொண்டு தான் எழுத வருவம்...

அனேமாக இது தான் இந்த திரிக்கு எனது இறுதிக் கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறன்...ஏதாச்சும் எழுதப் போனால் அது தவறான வறையறைக்குள் தள்ளப்படுவதனால் இத்தோடு இதற்குள் இருந்து விடுபடுகிறன்..நன்றி.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 30ம் திகதி கூட ஊரில் அதாவது புங்குடுதீவில் ஒரு கோவில் கும்பாபிஷேசகம் நடந்திருக்கிறது..

அனேமாக இது தான் இந்த திரிக்கு எனது இறுதிக் கருத்தாக இருக்கும் என்று நினைக்கிறன்...ஏதாச்சும் எழுதப் போனால் அது தவறான வறையறைக்குள் தள்ளப்படுவதனால் இத்தோடு இதற்குள் இருந்து விடுபடுகிறன்..நன்றி.

ஏன் உங்களுக்கு  எனது ஊர்  மட்டும்  கண்ணுக்குள்  குத்துகிறது.......

(ஏதோ நம்மால  முடிந்தது :D  :D )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
சிதறுதேங்காய்களாலும் கற்பூரங்களாலும் கடவுள்களைப் பூசிக்கும் மக்கள், தங்கள் தாய்மண்ணில் அவலப்படும் மக்கள் அவலங்களைத் தணிப்பதற்கு பங்களிப்புச் செய்வதும் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது.
 
வருசத்தில ஒருக்கா இரத்தம் சிந்தி உழைப்பவர்கள் சிதறு தேங்காய் அடிப்பதில் என்ன தவறு....???அவர்கள் தங்கட மனத்திருப்திக்கு தேங்காய் உடைச்சு என்னவோ செய்கிறார்கள்.

தனிமனித சுதந்திரத்தை ஒட்டி எழுந்த கேள்வி,ஆதங்கம் நியாயமானது..எப்படியும் வாழலாம் என்பதும் இப்படித்தான் வாழணும் என்பதும் அவரவர் தனிமனித சுதந்திரங்கள்.. அவற்றில் ஏதோ ஒன்றில் தலையிடுவதுபோல் என் பதிவை படித்த போது தோன்றியது எப்படி என்று புரியவில்லை..சிலவேளை படித்தவர் உணர்ச்சி வசப்பட்டு எழுதியதாக இருக்கலாம்..

என் பதிவில் உள்ள என் ஆதங்கம் புரிந்துகொள்ளாவிட்டால் மீண்டும் சுருக்கமாக...
 
(விதையாய் வீழ்ந்த அந்தப்புனிதர்களின் கல்லறைகளின் நடுவே அடர்ந்துகிடக்கின்ற புற்க்களின் நடுவே பூத்திருக்கும் பூக்களின் அருகே உங்கள் உதடுகளைக்கொண்டு செல்லுங்கள்.அவற்றை முத்தமிடுங்கள்.அப்பொழுது அவர்களின் ஆன்மாவை முத்தமிடுவதாக நீங்கள் உணருவீர்கள்.அப்பொழுதும் அவர்கள் சந்ததியைப் பற்றியே பாடிக்கொண்டிருப்பார்கள்.
 
எங்களின் கடவுள்களே..!
 
பிள்ளையாருக்கு சிதறும் தேங்காய்களும் முருகனுக்காய் எரியும் கற்பூரங்களும் நீங்கள் நேசித்த அந்த சந்ததிகளுக்காக ஒரு நேர உணவாக,ஒரு சிறு குப்பிவிளக்காய் எரிந்திருந்தால்...???)
 
இவ்வளவுதான்..யாரும் ஊருக்கு காசு அனுப்புவதில்லை என்பதல்ல என்பதிவு... 
 
எங்கள் தெய்வங்கள் விரும்பியது தமிழீழசந்ததியின் நிம்மதியானவாழ்வே...அவர்கள் நேசித்த அந்த ஈழத்து சந்ததி இன்று அடுத்தவேளை உணவுக்கு கண்ணீர்விடும் நிலை வன்னியில்... எமக்காய் மடிந்துபோன மாவீரர்களை பூசிப்பதாய் சொல்லும் நாம் அந்த தெய்வங்கள் நேசித்த சந்ததி இருளில் இருக்கும்போது கற்களுக்கு ஒளிகாட்ட தண்ணியாக இறைக்கும் பணத்தை அந்தசந்ததியின் கண்ணீரை துடைக்க பாவிக்கமுடியாதா என்ற ஆதங்கமே எனது குமுறல்...
 
இதைக்கூட ஊருக்கு அனுப்பி இருக்கலாம் என்ற என் ஆதங்கமே இந்தப்பதிவு..இந்தக்காசையும் கொடுக்கலாம் என்று நினைப்பதும் கொடுக்க குடாது என்று நினைப்பதும் ஏற்கனவே கொடுப்பதால் இதைக் கொடுக்க தேவை இல்லை என்று நினைப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள்..அங்கு ஒரு நேரச்சாப்பாட்டுக்கூட வழி இல்லாமல் துடித்துக்கொண்டிருக்கும் பல பச்சிழம் குழந்தைகளுக்காக இந்தக்காசை பொதுக்காசாக சேர்த்து ஊருக்கு அனுப்பக்கூடாது என்று முழு மனதுடன் மன்சாட்சியின் சாட்சியுடன் உங்கள் நெஞ்சார நினைத்தால் கண்டிப்பாக இந்தப்பதிவுக்கு எதிராக கருத்துவைக்க ஒவ்வொருவருவரும் தகுதியானவர்களே..
 
தேங்காய் உடைக்கிறவர்கள் எல்லோரும் ஊரில இருக்கிறவர்களுக்கு உதவாமலும் இல்லை.தேங்காய் உடைக்காமல் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஊரில் இருப்பவர்களுக்கு உதவுபவர்களும் இல்லை 

இந்த பதிலுக்கும் என் இந்தப்பதிவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை..
 
எழுதப்பட்டிருக்கும் பதிவின் பொருளை சரியாக பல உறவுகள் வாசித்து உள்வாங்கினாலும் சில நேரங்களில் பல உறவுகள் உணர்ச்சி வேகத்தில் பதிவுகள் சொல்லவருவதை மறந்து சம்ப்நதமில்லாமல் எழுதிவிடுகிறார்கள்.. :(
 
இப்படியான நேரங்களில் தான் சிலருக்கு ஊரில மக்கள் கஸ்டப்படுகிறது ஞாபகம் வந்து தொலைக்குது போல :(

நான் உட்பட இந்தப்பதிவில் எனது ஆதங்கத்துடன் சேர்ந்துகொண்டவர்கள் எல்லோரையும் குறிப்பிடப்படுகிறது என்று நினைக்கிறேன்... சமூகத்தின் மேல் விமர்சனம் வைக்கும் ஒரு கவிதை,கட்டுரை,ஒரு சிறுகதை அல்லது ஏதாவது ஒரு பதிவு என்பது எப்பொழுது அதை எழுதுபவன் மனதில் ஒரு தூண்டலை,அவன் காணும் காட்சியின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அப்பொழுது அவர்கள் மனதில் இருக்கும் ஆதாங்கம் எழுத்துவழி ஒரு பதிவாக வருகிறது...அதைப்படிக்கும்போது அதே ஆதங்கத்துடன் இருந்தவர்களுக்கு பதிலாக தங்கள் ஆதங்கத்தை கொட்ட தூண்டப்படுகிறார்கள்...24 மணிநேரமும் பேனாவும் கையுமாக இங்கு யாரும் இருப்பதில்லை..எழுத்து இங்கு யாருக்கும் தொழிலும் இல்லை..இந்தக் கருத்தைப்பார்த்தல் 24 மணி நேரமும் ஈழத்தின் அல்லல்கள் குறித்து எழுதிக்கொண்டிருப்பவந்தான் எழுதமுடியும் என்பதுபோல் இருக்கிறது..
 
வணக்கம் சுபேஸ் எந்த விதத்தில் என்னுடைய கருத்து தனி மனித தாக்குதலாக இருக்குது என்று சொல்ல முடியுமா?
 
இப்படியான நேரங்களில் தான் சிலருக்கு ஊரில மக்கள் கஸ்டப்படுகிறது ஞாபகம் வந்து தொலைக்குது போல :(.தேரின் போது வீதியில் தேங்காய் உடைப்பது பிடிக்கவில்லை என்று சொல்லிச்,சொல்லி வருடா வருடம் தேருக்கு போய் வந்து குறை சொல்பவர்கள் தான் அதிகம்.இப்படியானவர்களுக்கு இந்த நேரத்தில் தான் ஈழம் பற்றிய பிரக்கை வந்து போகுமாக்கும்

இதுவும்  ஒருவித எழுந்தமானமான கருத்து மட்டுமல்ல ஆதாரமற்று இங்கு ஆதங்கப்பட்ட ஒவ்வொரு கள உறவையும் வலிந்து சீண்டுவது போன்றது.. மற்றவர்களைப்பற்றிய இப்படி எழுந்தமானமான கருத்துக்கள் வெளிப்படுத்தப்படும் இடம்,சந்தர்ப்பங்களை பொறுத்து சீண்டல் கருத்துக்களா நியாயமான ஆதங்கங்களா என்பது அமைகிறது.. 
 
2009 இல் வன்னியில் இன அழிப்பு நடைபெறும் போது கிரிக்கற்றும் சினிமாவும் மானாட மயிலாடவும் என்று பல யாழ் தமிழர்கள் இருந்தார்கள். இவர்கள் அங்கு போறாடா முடியாது ஆனால் மவுனமாக இதை எல்லாம் புறக்கணிக்கலாம். யாழில் பல கோவில்கள் தேவைக்கு மிஞ்சி கட்டப் படுகின்றன அந்த பணத்தை மக்களுக்கு உதவலாம் . விளையாட்டுப் போட்டிகளை வைத்து அந்த பணத்தை மக்களுக்கு உதவலாம் ஆனால் எல்லாம் புலம் பெயர்ந்தவன் மட்டுமே செய்யணும் அவர்கள் அன்கு அனைத்து வசதிகளோடும் மகிழ்வாக இருப்பார்கள் என்பது சிலரது கருத்து .உண்ண வழி இல்லாத ஊரிலிலையெ ஊருப்பட்ட தேங்காய்களை உடைத்து வழி படும் போது உணவு கிடைக்கும் ஊரில் தேங்காய் உடைத்தால் தப்பா? சுற்றி வர அந்நிய ராணுவமும் இனம் அழித்த ஒட்டுக் குழுக்களும் சுற்றி நிற்க  சுதந்திரம் இல்லாமல் பிரதட்டைகளும் காவடிகளும் தூக்கும் நம்மவர்கள் ஊரில் இருக்கும் போது ஓரளவு சுதந்திரமா இருக்கும் புலம் பெயர்மக்கள் மட்டும் ஒன்றும் செய்யக் கூடாது என்று சொல்ல முடியுமா?  பிரான்சைப் பொருத்தவரை அவர்கள் சுவிஸ் ஐநாவில் ஊர்வலம் என்றாலும் நிறைய மக்கள் வருகிறார்கள் மாவீரர் தினம் மற்றும் இன விடுதலை விடயங்கள் எது என்றாலும் முன் நிற்கிறார்கள் அப்பிடியே கொஞ்சம் தங்கள் சந்தோசத்தையும் கோவில் என்ற ரீதியில் செய்கிறார்கள் . ஆனால் யாழில் வெறுமனே என்ன நடக்குறது என்று அங்கு பார்வைய செலுத்துபவர்களுக்கு மட்டுமே தெரியும் . மக்கள் பிரச்சனி தீரும் வரைக்கும் ஊரில் உள்ள  திருவிழாக்களை நிற்பாட்டி வைக்கலாம் தானே அதட்குமா அரசாங்கம் விடாது?அது சரி அண்ணா இங்குள்ள பணம் அங்கு போய் அங்குள்ள கோவில்களில் இதவிட 100 மடங்கு தேங்காய் உடைத்து அநியாய மாக்குகிரார்கள் அதை என்ன செய்யலாம்? அங்கு அழிவதும் இங்குள்ளவன் பணம் இங்கு அழிவது இங்குள்ளவன் பணம். முதலில் தேங்காயின் தேவை எங்கே இருக்குறதோ அங்கே தேங்காய விரயம் பண்ண வேண்டாம் என்று சொல்லுங்கோ அப்புறம் இங்கு வெறும் கொஞ்ச தேங்காய் உடப்பவர்களை  கட்டுப் படுத்தலாம்.வெறும் தேங்காய் மட்டும் அல்ல கற்ற்பூரம் மெழுகுவர்த்தி என்று எல்லாமே வீண் தான். ஆலயத்தில் எந்த மதம் என்றாலும் இப்பிடி செய்வது வீண். ஆனால் நாட்டில் ஒரு வேலை வெட்டி  இல்லாமல் ஆளுக்கொரு தொலைபேசி,மோட்டார் சயிக்கில் என்று வைத்திருந்து வீட்டுக்கு வீடு டிவி வைத்து நாடகம் மானாட மயிலாட என்று பார்த்து பணத்தையும் நேரத்தையும் மின்சாரத்தையும் வீண் அடிப்பது மட்டும் தேவையோ? அந்த மின்சாரத்தை அங்கு விவசாயத்திற்கு பாவிக்கலாம் பாவிக்கிறார்களா எம் மக்கள் ?நாடு இப்படியாகி விட்டது என்று நினைத்து அங்குள்ள ஆலயங்களில் வருடம் தோறும் தேர்கள் ஓடாமலா இருக்கிறது,புணருத்தானங்கள் நடக்காமாலா இருக்கிறது..???நாடு இப்படி இருக்கிறது,மக்கள் கஸ்ரபடுகிறார்கள் ஆனால் இன்னும் காணி பிடிப்புக்கள்,வேலிச்சண்டைகள்,கோடு கச்சேரி ஏறாமலா எங்கள் மக்கள் இருக்கிறார்கள்...அங்குள்ள ஆலயங்களை சேர்ந்தவர்கள் வெளி நாட்டில் உள்ள ஆலயங்களை சேர்ந்தவர்களை அவ்விடம் அழைத்து கொடி ஏற்றுகிறார்கள்,கிரியைகள் செய்விக்கிறார்கள்...

எனக்கு பிரான்ஸ் கர்னிவெல் படங்களை பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்வுதான் யாழ்ப்பாணத்தில் புலம்பெயர்ந்தவர்கள் கஸ்ரப்பட்டு அனுப்பும் பணத்தில் ஒரு சிலதுகள் செய்யும் விசர்க்கூத்துக்கள் பற்றி இதை எழுதிய உறவுக்கும்....அதுகளுக்கும் இஞ்சை இருக்கிற சிலதுகளுக்கும் வித்தியாசம் இல்ல... கண்ணிருந்தும் குருடர்..ஆனால் என்ன அவர்கள் அப்படி செய்கிறார்களே நாங்கள் செய்தால் என்ன என்னும் கேள்வி மட்டும் சிறுபிள்ளைத்தனமானது.. இதன் உள்ள்ர்த்தத்தை புரிந்துகொள்ளக்கூடியவர்கள் புரிந்துகொள்ளலாம்..
 
கடைசியாக ஒன்று..கடைசிகாலத்திலாவது இவர்களின் தலைக்குள் இருக்கும் அறியாமை இவர்கள் அடிக்கும் தேங்காய்கள் சிதறியதுபோல் சிதறிப்போவதாக..
 
Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தேங்காய் கொண்டேணர்களில் வரி விதிப்புள்ள அரிசி வகைகள் களவாக தேங்காய் என விண்ணப்பித்து இறக்குமதி ஆகின்ற படியால் (தேங்காய்க்கு வரி கிடையாது)தமிழ் வணிகப்பகுதிக்கு தேவைக்கு அதிகமாகவே தேங்காய் வரத்து உள்ளது .இப்படி குப்பைக்கு போகவேண்டிய தேங்காய் லாச்சப்பல் தெருவில் குப்பையாகிண்றது.இங்கிலாந்தை தவிர மற்றைய ஐரோப்பிய நாடுகளில் 7 வீத விற்பனை வரியில் வாழ்பவர்களிற்க்கு இது பெரிய விடயம்தான்  :icon_idea:

La+Tomatina+-+Tomato+Festival+Photos+(24

tomato festival
  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அண்ணா இங்குள்ள பணம் அங்கு போய் அங்குள்ள கோவில்களில் இதவிட 100 மடங்கு தேங்காய் உடைத்து அநியாய மாக்குகிரார்கள் அதை என்ன செய்யலாம்? அங்கு அழிவதும் இங்குள்ளவன் பணம் இங்கு அழிவது இங்குள்ளவன் பணம். முதலில் தேங்காயின் தேவை எங்கே இருக்குறதோ அங்கே தேங்காய விரயம் பண்ண வேண்டாம் என்று சொல்லுங்கோ அப்புறம் இங்கு வெறும் கொஞ்ச தேங்காய் உடப்பவர்களை  கட்டுப் படுத்தலாம்.வெறும் தேங்காய் மட்டும் அல்ல கற்ற்பூரம் மெழுகுவர்த்தி என்று எல்லாமே வீண் தான். ஆலயத்தில் எந்த மதம் என்றாலும் இப்பிடி செய்வது வீண். ஆனால் நாட்டில் ஒரு வேலை வெட்டி  இல்லாமல் ஆளுக்கொரு தொலைபேசி,மோட்டார் சயிக்கில் என்று வைத்திருந்து வீட்டுக்கு வீடு டிவி வைத்து நாடகம் மானாட மயிலாட என்று பார்த்து பணத்தையும் நேரத்தையும் மின்சாரத்தையும் வீண் அடிப்பது மட்டும் தேவையோ? அந்த மின்சாரத்தை அங்கு விவசாயத்திற்கு பாவிக்கலாம் பாவிக்கிறார்களா எம் மக்கள் ?

அதுதானே அண்ணா எழுதியிருக்கிறேன் தேங்காயை உடைப்பவர்கள்.
உங்கள் மண்டைகளை ஒருமுறை உடையுங்கள் என்று!
 
திருப்பி த்பிருப்பி தமிழனுக்குள் தானே நீங்கள் நிற்கிறீர்கள். அங்கே பெற்றோர் என்றால் இங்கே அப்படியே அச்சடிச்சு பிள்ளைகள்.
 
உலகில் உள்ள மற்றைய வறிய  நாடுகளை ஒருமுறை இவர்கள் பார்க்கலாமே?? 

தேங்காய் உடைப்பது- ஆசையால் ஏற்படும் அழுக்குகள், விலகும் போது, ஆன்மாவின் பரிசுத்தம் வெளிப்படுகின்றது!

சரி, இந்தத் தத்துவத்தை அறிய, ஒரு தேங்காய் உடைத்துப் பார்த்தால் போதாதா? :o

ஊரிலே சிதறு தேங்காய் பூச்சி, பறவை விலங்குகளுக்கு உணவுக்காக அடிக்கிறது என்றும் உள்ளுக்கு ஐயர் உடைக்கிற தேங்காய் நீங்கள் சொன்ன காரணதிக்காக என்றும் நான் நினைத்தேன்

இங்கே உடனே குப்பைக்கு போற படியால் சிதறு தேங்காய் தேவை இல்லாத ஒன்று

அதுதானே அண்ணா எழுதியிருக்கிறேன் தேங்காயை உடைப்பவர்கள்.
உங்கள் மண்டைகளை ஒருமுறை உடையுங்கள் என்று!
 
திருப்பி த்பிருப்பி தமிழனுக்குள் தானே நீங்கள் நிற்கிறீர்கள். அங்கே பெற்றோர் என்றால் இங்கே அப்படியே அச்சடிச்சு பிள்ளைகள்.
 
உலகில் உள்ள மற்றைய வறிய  நாடுகளை ஒருமுறை இவர்கள் பார்க்கலாமே?? 

வறிய நாடுகள் வறிய நாடுகள் என்று சொல்கிறீர்களே அது எது என்று சொல்லுங்க  நானும் அறிய ஆவலா உள்ளேன் . ஏன் அந்த நாடு வறிய நாடு என்று 

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித சுதந்திரத்தை ஒட்டி எழுந்த கேள்வி,ஆதங்கம் நியாயமானது..எப்படியும் வாழலாம் என்பதும் இப்படித்தான் வாழணும் என்பதும் அவரவர் தனிமனித சுதந்திரங்கள்.. அவற்றில் ஏதோ ஒன்றில் தலையிடுவதுபோல் என் பதிவை படித்த போது தோன்றியது எப்படி என்று புரியவில்லை..சிலவேளை படித்தவர் உணர்ச்சி வசப்பட்டு எழுதியதாக இருக்கலாம்..

என் பதிவில் உள்ள என் ஆதங்கம் புரிந்துகொள்ளாவிட்டால் மீண்டும் சுருக்கமாக...
 
(விதையாய் வீழ்ந்த அந்தப்புனிதர்களின் கல்லறைகளின் நடுவே அடர்ந்துகிடக்கின்ற புற்க்களின் நடுவே பூத்திருக்கும் பூக்களின் அருகே உங்கள் உதடுகளைக்கொண்டு செல்லுங்கள்.அவற்றை முத்தமிடுங்கள்.அப்பொழுது அவர்களின் ஆன்மாவை முத்தமிடுவதாக நீங்கள் உணருவீர்கள்.அப்பொழுதும் அவர்கள் சந்ததியைப் பற்றியே பாடிக்கொண்டிருப்பார்கள்.
 
எங்களின் கடவுள்களே..!
 
பிள்ளையாருக்கு சிதறும் தேங்காய்களும் முருகனுக்காய் எரியும் கற்பூரங்களும் நீங்கள் நேசித்த அந்த சந்ததிகளுக்காக ஒரு நேர உணவாக,ஒரு சிறு குப்பிவிளக்காய் எரிந்திருந்தால்...???)
 
இவ்வளவுதான்..யாரும் ஊருக்கு காசு அனுப்புவதில்லை என்பதல்ல என்பதிவு... 
 
எங்கள் தெய்வங்கள் விரும்பியது தமிழீழசந்ததியின் நிம்மதியானவாழ்வே...அவர்கள் நேசித்த அந்த ஈழத்து சந்ததி இன்று அடுத்தவேளை உணவுக்கு கண்ணீர்விடும் நிலை வன்னியில்... எமக்காய் மடிந்துபோன மாவீரர்களை பூசிப்பதாய் சொல்லும் நாம் அந்த தெய்வங்கள் நேசித்த சந்ததி இருளில் இருக்கும்போது கற்களுக்கு ஒளிகாட்ட தண்ணியாக இறைக்கும் பணத்தை அந்தசந்ததியின் கண்ணீரை துடைக்க பாவிக்கமுடியாதா என்ற ஆதங்கமே எனது குமுறல்...
 
இதைக்கூட ஊருக்கு அனுப்பி இருக்கலாம் என்ற என் ஆதங்கமே இந்தப்பதிவு..இந்தக்காசையும் கொடுக்கலாம் என்று நினைப்பதும் கொடுக்க குடாது என்று நினைப்பதும் ஏற்கனவே கொடுப்பதால் இதைக் கொடுக்க தேவை இல்லை என்று நினைப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள்..அங்கு ஒரு நேரச்சாப்பாட்டுக்கூட வழி இல்லாமல் துடித்துக்கொண்டிருக்கும் பல பச்சிழம் குழந்தைகளுக்காக இந்தக்காசை பொதுக்காசாக சேர்த்து ஊருக்கு அனுப்பக்கூடாது என்று முழு மனதுடன் மன்சாட்சியின் சாட்சியுடன் உங்கள் நெஞ்சார நினைத்தால் கண்டிப்பாக இந்தப்பதிவுக்கு எதிராக கருத்துவைக்க ஒவ்வொருவருவரும் தகுதியானவர்களே..
 
இந்த பதிலுக்கும் என் இந்தப்பதிவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை..
 
எழுதப்பட்டிருக்கும் பதிவின் பொருளை சரியாக பல உறவுகள் வாசித்து உள்வாங்கினாலும் சில நேரங்களில் பல உறவுகள் உணர்ச்சி வேகத்தில் பதிவுகள் சொல்லவருவதை மறந்து சம்ப்நதமில்லாமல் எழுதிவிடுகிறார்கள்.. :(
 
நான் உட்பட இந்தப்பதிவில் எனது ஆதங்கத்துடன் சேர்ந்துகொண்டவர்கள் எல்லோரையும் குறிப்பிடப்படுகிறது என்று நினைக்கிறேன்... சமூகத்தின் மேல் விமர்சனம் வைக்கும் ஒரு கவிதை,கட்டுரை,ஒரு சிறுகதை அல்லது ஏதாவது ஒரு பதிவு என்பது எப்பொழுது அதை எழுதுபவன் மனதில் ஒரு தூண்டலை,அவன் காணும் காட்சியின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அப்பொழுது அவர்கள் மனதில் இருக்கும் ஆதாங்கம் எழுத்துவழி ஒரு பதிவாக வருகிறது...அதைப்படிக்கும்போது அதே ஆதங்கத்துடன் இருந்தவர்களுக்கு பதிலாக தங்கள் ஆதங்கத்தை கொட்ட தூண்டப்படுகிறார்கள்...24 மணிநேரமும் பேனாவும் கையுமாக இங்கு யாரும் இருப்பதில்லை..எழுத்து இங்கு யாருக்கும் தொழிலும் இல்லை..இந்தக் கருத்தைப்பார்த்தல் 24 மணி நேரமும் ஈழத்தின் அல்லல்கள் குறித்து எழுதிக்கொண்டிருப்பவந்தான் எழுதமுடியும் என்பதுபோல் இருக்கிறது..
 
இதுவும்  ஒருவித எழுந்தமானமான கருத்து மட்டுமல்ல ஆதாரமற்று இங்கு ஆதங்கப்பட்ட ஒவ்வொரு கள உறவையும் வலிந்து சீண்டுவது போன்றது.. மற்றவர்களைப்பற்றிய இப்படி எழுந்தமானமான கருத்துக்கள் வெளிப்படுத்தப்படும் இடம்,சந்தர்ப்பங்களை பொறுத்து சீண்டல் கருத்துக்களா நியாயமான ஆதங்கங்களா என்பது அமைகிறது.. 
 
எனக்கு பிரான்ஸ் கர்னிவெல் படங்களை பார்த்தபோது ஏற்பட்ட அதே உணர்வுதான் யாழ்ப்பாணத்தில் புலம்பெயர்ந்தவர்கள் கஸ்ரப்பட்டு அனுப்பும் பணத்தில் ஒரு சிலதுகள் செய்யும் விசர்க்கூத்துக்கள் பற்றி இதை எழுதிய உறவுக்கும்....அதுகளுக்கும் இஞ்சை இருக்கிற சிலதுகளுக்கும் வித்தியாசம் இல்ல... கண்ணிருந்தும் குருடர்..ஆனால் என்ன அவர்கள் அப்படி செய்கிறார்களே நாங்கள் செய்தால் என்ன என்னும் கேள்வி மட்டும் சிறுபிள்ளைத்தனமானது.. இதன் உள்ள்ர்த்தத்தை புரிந்துகொள்ளக்கூடியவர்கள் புரிந்துகொள்ளலாம்..
 
கடைசியாக ஒன்று..கடைசிகாலத்திலாவது இவர்களின் தலைக்குள் இருக்கும் அறியாமை இவர்கள் அடிக்கும் தேங்காய்கள் சிதறியதுபோல் சிதறிப்போவதாக..

தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொருவரும் பார்ட்டி,குடி,கும்மாளம் என்று எவ்வளவோ பணத்தை நாளாந்தம் செலவழிக்கிறார்கள்.ஹொலிடே போகுறார்கள் அதை எல்லாம் தவிர்க்கலாமே!.அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் கோயிலில் தேங்காய் உடைத்ததை கண்டதும் தான்  உங்களுக்கு மாவீரர்களும்,வன்னியில் கஸ்டப்படுகின்ற மக்களும் வந்து போகிறார்களாக்கும்.
 
அங்குள்ள பச்சை பாலர்கள் ஒரு நேர‌ சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருக்கிறார்கள் தான் அவர்களுக்கு உதவ நினைச்சால் உங்கள் ஒரு நேர சாப்பாட்டை குறைத்துக் கூட உதவலாம்.மனமுன்டானால் மார்க்கம் உண்டு.மனமில்லாதவர்கள் தான் ஏதாவது பிழை சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.லூட்ஸ் மாதா கோயிலுக்கு வருடா,வருடம் பெரு விழாவுக்கு எல்லா இன தமிழ் மக்களும் போய் கொண்டு இருக்கிறார்கள்,காசு செலவழித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.அதைப் பற்றி இது வரை ஒன்றும் எழுதியதைக் காணோம்.அது எல்லாவற்றையும் விட தேங்காய் தான் பெரிய விலை போல :unsure:
 
நீங்கள் தேருக்குப்  போய் தேங்காய் உடைத்தவர்களை பற்றித் தெரியாமல் அவர்கள் மாவீரர்களை மதிக்கவில்லை,முத்தமிடவில்லை என்று எப்படி எழுந்தமானமாக எழுதுவீர்கள்?
 
மற்றவர்கள் உணர்ச்சி வசப்பட்டு எழுதுகிறார்கள் என்று சொல்லும் நீங்கள் முதலில் உங்கள் கருத்துக்களை அவதானமாக வையுங்கள்.இனி மேல் உங்கள் திரியில் வந்து ஒப்புக்கு சுபேஸ் நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்று சொல்லி பாராட்டி விட்டு பச்சை குத்தி விட்டு போகுறேன் :icon_mrgreen: அது தானே நீங்கள் எதிர் பார்க்கிறீங்கள்?
 
உங்களை மாதிரித் தான் பல பேர் இருக்கினம்.தாங்கள் செய்கின்ற பிழை அவர்கள் கண்களுக்குத் தெரியாது ஆனால் அடுத்தவனில் பிழை பிடிக்க அலைவினம்.இனி மேல் மாவீரர் தினம் வருகுது கொஞ்சம்,கொஞ்சமாகத் தொடங்குவினம்.இனி மேல் அடுத்த தேர்த் திருவிழாவுக்கு வந்தும் இதேயே எழுதுங்கள்.இடையில் எத்தனையோ வந்து போகும் அதையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டாம் ^_^
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அது எல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் கோயிலில் தேங்காய் உடைத்ததை கண்டதும் தான்  உங்களுக்கு மாவீரர்களும்,வன்னியில் கஸ்டப்படுகின்ற மக்களும் வந்து போகிறார்களாக்கும்.

ரதி அக்கா.. உங்களுக்கு தேங்காயை தவிர இங்கு எழுதிய எதுவும் கண்னுக்கு தெரியவில்லை போல.. தேங்கையை உடைப்பதிலையே கண்ணும் கருத்துமாக இருகிறியள்.. இங்கு இந்த உடைத்த தேங்காய்களை மட்டும் பின்னால் பின் தொடர்ந்துவந்து கூட்டி அள்ளி அப்புறப்படுத்த மட்டும் பல்லாயிரம் யூறோக்கள் பரிஸ் மாநகரசபைக்கு கொடுக்கபடுகிறது.. தேங்காய் உடைப்புடன் மட்டும் நின்றுவிடுவதில்லை செலவுகள் அன்றுமுழுவதும் தண்ணியாக பலவிடயங்களில் காசாக கரைந்துபோகின்றன..எல்லாவற்றையும் மொத்தமாக எண்ணியே எழுடி இருந்தேன்..ஆனால் தேங்காய் உடைப்பை மட்டும் வைத்துகொண்டு நீங்கள் நடத்தும் கவன ஈர்ப்பு போராட்டம் இருக்கே... அட அட அட.... :D
 
அங்குள்ள பச்சை பாலர்கள் ஒரு நேர‌ சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் இருக்கிறார்கள் தான் அவர்களுக்கு உதவ நினைச்சால் உங்கள் ஒரு நேர சாப்பாட்டை குறைத்துக் கூட உதவலாம்.மனமுன்டானால் மார்க்கம் உண்டு.மனமில்லாதவர்கள் தான் ஏதாவது பிழை சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

நன் இரண்டு நேர சாப்பாட்டை குறைத்து உதவுகிறேன் றதி அக்கா..(மனமில்லாதவர்கள்தான் பிழை சொல்வார்கள் என்று நீங்கள் உறுதியாக சொல்லி அந்தக்கருத்தை உறுதியாக நம்புவதால் அதன் வழி நடப்பீர்கள் என்று ஊகிக்கிறேன் அக்கா) :)
 
லூட்ஸ் மாதா கோயிலுக்கு வருடா,வருடம் பெரு விழாவுக்கு எல்லா இன தமிழ் மக்களும் போய் கொண்டு இருக்கிறார்கள்,காசு செலவழித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.அதைப் பற்றி இது வரை ஒன்றும் எழுதியதைக் காணோம்.

ஆசிரியர் : ஷாஜகான் என்ன கட்டினார்?
மாணவன் : லுங்கி கட்டினார்.
ஆசிரியர் : :(
மாணவன் : எங்ககிட்டயேவா!!! :D

நீங்கள் தேருக்குப்  போய் தேங்காய் உடைத்தவர்களை பற்றித் தெரியாமல் அவர்கள் மாவீரர்களை மதிக்கவில்லை,முத்தமிடவில்லை என்று எப்படி எழுந்தமானமாக எழுதுவீர்கள்?
 
இதென்ன புதுக்கதை?? இப்படி எல்லாம் எழுதி இருக்கேனா..? முத்தமிடவில்லை கிஸ்பண்னவில்லை என்றேல்லாம்..? :D  யப்பா எனது பதிவை வாசித்த யாராவது சொல்லுங்கப்பா தேங்காய் உடைச்சவன் எல்லாம் மாவீரரை மதிக்கவில்லை முத்தமிடவில்லை என்றெல்லாம் எழுதி இருக்கிறேனா என்று.. யக்கோய்.. என்ன அநியாயம் இது..? :D
 
யக்கோய் காள மாட்ட பசு மாடுனு சொன்னதும் இல்லாம செண்பகம்னு பொம்பல பேரச்சொல்லி ஏமாத்துரியளா...? :D
 
இனி மேல் உங்கள் திரியில் வந்து ஒப்புக்கு சுபேஸ் நீங்கள் சொல்வதெல்லாம் சரி என்று சொல்லி பாராட்டி விட்டு பச்சை குத்தி விட்டு போகுறேன் :இcஒன்_ம்ர்க்ரேன்: அது தானே நீங்கள் எதிர் பார்க்கிறீங்கள்?

அப்படியா..? அப்படி நான் எதிர்பாக்கிறேனா..?   1240451_10151815336634336_1523033140_n.j
 
:D
 
உங்களை மாதிரித் தான் பல பேர் இருக்கினம்.தாங்கள் செய்கின்ற பிழை அவர்கள் கண்களுக்குத் தெரியாது ஆனால் அடுத்தவனில் பிழை பிடிக்க அலைவினம்.

அடுத்தவனைப்பற்றிய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கொசிப் கதைப்பதற்கும் ஒரு சமுதாய நிகழ்வை விமர்சனம் செய்வதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது அக்கா.  :)
 
கடைசியாக... (இதை பொதுமைப்பட எல்லா அந்தவகை கருத்துக்களையும் நினைத்து சொல்கிறேன்..) யாழில் விளங்கப்படுத்த முடியாத அல்லது விளங்கியும் தாங்கள் எழுதியதை நியாயப்படுத்த சம்ம்பந்தமில்லாமல் எழுதுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கமண்டுகளுக்கு திருப்பி பதில் போடுறதுக்கு சரத்தை தூக்கி கொண்டு முள்ளு பத்தைக்காலை ஓடலாம் .... :lol:
 
Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா..? அப்படி நான் எதிர்பாக்கிறேனா..?   1240451_10151815336634336_1523033140_n.j
 
உத்தமனாக, நல்லவனாக நம்பிக்கைதரும் ஒருவனை கோபப்படுத்தி, ஆத்திரப்படுத்தி சீண்டிப்பார்க்கும்போதுதான் அவனின் உண்மையான தன்மைகள் வெளிப்படுகின்றன. தாங்கள் சொல்லிய கருத்துக்களைத் தவறென்று சொல்லியவர்களை வெல்வதற்காக, மஞ்சள் நிறத்திலிருந்தால் அது எதுவென்றாலுமே, மணந்துகூடப் பாராது சந்தணமாக உடம்பில் பூசிக்கொள்ள முயலுகின்றனர். இத்திரியின் விவாதங்கள் அப்படி எண்ணவைக்கிறது.  

ஆமா 1979 இல் இதே சுபேஸ் என்னும் நபர் இப்படி இன்னும் ஒரு காமடியை சொன்னதற்க்காக இந்த நீதிமன்றம் இவரை உத்தமர் அற்றவர் என்று தீர்ப்பளிக்கிறது :D .. போங்கசார்.. உங்க பூசாரி தனமும்.. உங்க பொங்கச்சோறும் :D ...அவரவருக்கு அவரவர் மொழிலதான் யாழில பதில் சொன்னா புரியுது பலருக்கு..
 
காலங்காத்தாலையே கண்ணுக்க விளக்கெண்ணையை விட்டுகொண்டு தேடி இருப்பாய்ங்க போல.... என்னத்தை சொல்லாலாம் எண்டு.. :D
 
அது போக மனதுக்கு சந்தோசத்தையும் ஆறுதலையும் தரும் ஒரு நல்ல ஒரு நகைச்சுவை நடிகன் கவுண்டமணியை மஞ்சல் நிறத்தில் இருக்கும் ஒராள் எண்டு சொன்னதை வன்மையாகக் கண்டிக்கிறேன் :icon_mrgreen: .... என்ன சார் நீங்க.. ஒரு காமடிக்கு கூட ரென்சன் ஆகிக்கொண்டு...நீங்கள் யாழில் எழுதப்படும் மஞ்சல் ஜோக்குகள் படிப்பதில்ல போல.. :D
 
(அது போக நீங்க வலிந்து என்னை ஏதோ கெட்டவன் போல காட்ட படும் கஸ்டத்தை ரசித்தேன்.. நல்லாருக்கு.. நாங்க எல்லாம் உத்தமன் என்று எப்பயும் சொன்னதில்ல சார்.. உதவாக்கரைகள்.. உத்தமனாம் உத்தமன்.. நாங்க எல்லாம் எப்ப ஊரை விட்டு வெளிக்கிட்டமோ அப்பவே செத்தவங்க சார்..அதுசரி உங்க ஒரிஜினல் என்னசார்.... ஜ மீன் உங்க ஒரிஜினல் மனசு(களவிதிகள் காரணமாய் மனசு என்று தணிகை செய்யப்பட்டுள்ளது :D ).. ஏதும் உள் கோபமின்னா அதில வந்து நாலு அடி அடிங்க வாங்கிக்கிறன்....) :icon_idea:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா.. உங்களுக்கு தேங்காயை தவிர இங்கு எழுதிய எதுவும் கண்னுக்கு தெரியவில்லை போல.. தேங்கையை உடைப்பதிலையே கண்ணும் கருத்துமாக இருகிறியள்.. இங்கு இந்த உடைத்த தேங்காய்களை மட்டும் பின்னால் பின் தொடர்ந்துவந்து கூட்டி அள்ளி அப்புறப்படுத்த மட்டும் பல்லாயிரம் யூறோக்கள் பரிஸ் மாநகரசபைக்கு கொடுக்கபடுகிறது.. தேங்காய் உடைப்புடன் மட்டும் நின்றுவிடுவதில்லை செலவுகள் அன்றுமுழுவதும் தண்ணியாக பலவிடயங்களில் காசாக கரைந்துபோகின்றன..எல்லாவற்றையும் மொத்தமாக எண்ணியே எழுடி இருந்தேன்..ஆனால் தேங்காய் உடைப்பை மட்டும் வைத்துகொண்டு நீங்கள் நடத்தும் கவன ஈர்ப்பு போராட்டம் இருக்கே... அட அட அட.... :D
 
நானும் தேங்காயை பற்றி மட்டும் எழுதவில்லை.ஒரு கோயிலில் ஒரு வருடத்தில் ஒரு தடவை தான் திருவிழா நடக்குது.ஒரு தடவை தான் தேர் திருவிழா நடக்குது.உங்களுக்கு அந்த செலவு தான் கண்ணுக்குள் குத்துதோ.நீங்கள் நாத்திகராக இருக்கலாம்.கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருக்கலாம்.ஆனால் அதை நம்பி கடைப் பிடிக்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.திருவிழாவுக்கும்,தேருக்கும்,தேங்காய் உடைப்பிற்கும் எங்கட மதத்திற்கு தொடர்பு இருக்குதோ,இல்லையோ புலம் பெயர்ந்தாலும் காலம்,காலமாக தங்கட சம்பிரதாயங்கள் அழிந்து போகக் கூடாது தொடர்ந்து செய்பவர்கள் எல்லோரையும் நீங்கள் புண்படுத்துகிறீர்கள்.
 
ஒரு கதைக்கு நீங்கள் சொன்ன மாதிரி கொஞ்ச காலத்திற்கு உதுகள் எல்லாத்தையும் நிற்பாட்டி ஊரில் இருப்போருக்கு உதவுறோம் என்று வைத்துக் கொள்வோம்.பின்னர் எமது அடுத்த தலைமுறைக்கு எங்கட கோயிலில் இப்படி ஒரு விழா செய்தார்கள் என்று தெரிய வருமோ :unsure: .எங்கட கலாச்சாரம்,பண்பாடு எல்லாவற்றையும் அழித்து விட்டு கறுப்பின மக்கள் மாதிரி நாடோடிகளாக அலைய சொல்றீங்கள் போல ^_^ இங்கே உள்ள தமிழ் கிரிஸ்தவர்கள் வருடா,வருடம் தங்கட காசை செலவழித்து விழா எடுக்கிறார்கள் எனக்கு அது பிடிக்கவில்லை என்டாலும் நான் அவர்களிடம் போய் இந்தக் காசை ஊரில் கஸ்டப்படுகின்ற மக்களுக்கு கொடுக்கலாமே என்று சொல்ல மாட்டேன்.ஏனென்டால் அது அவர்கள் மத உணர்வு சம்மந்தப்பட்ட விசயம் :) 
 
இப்படியான கோயில் திருவிழாக்கள் கடவுள் நம்பிக்கையும் தாண்டி மகிழ்ச்சியான விசயம்.மற்ற நாட்டினரே வியந்து பார்க்கும் விசயங்கள்.உங்களுக்கு இப்படியான விசயங்கள் விருப்பம் இல்லா விட்டால் ஏன் ஒவ்வொரு வருடமும் கோயிலுக்குப் போய் விட்டு வந்து அழுகிறீங்கள்.ஒன்று பிடிக்கா விட்டால் ஒதுங்கி இருக்கலாம் தானே!
 
நன் இரண்டு நேர சாப்பாட்டை குறைத்து உதவுகிறேன் றதி அக்கா..(மனமில்லாதவர்கள்தான் பிழை சொல்வார்கள் என்று நீங்கள் உறுதியாக சொல்லி அந்தக்கருத்தை உறுதியாக நம்புவதால் அதன் வழி நடப்பீர்கள் என்று ஊகிக்கிறேன் அக்கா) :)
 
நான் என்ட சாப்பாட்டை குறைத்து ஊரில் உள்ள மக்களுக்கு உதவுகிறேன் என்று பொய் சொல்ல விரும்பவில்லை.அதற்காக நீங்கள் பொய் சொல்றீங்கள் என்று சொல்ல வரவில்லை.நீங்கள் தான் முதலில் இப்படியான விழாக்களை தவிர்த்து ஊரில் உள்ள மக்களுக்கு உதவலாம் தானே என்று கேட்டு இருந்தீர்கள் நான் அதற்கு பதிலாக நீங்கள் உங்கள் சாப்பாட்டை குறைத்து உதவலாமே!என்று சொன்னேனே தவிர நான் சாப்பாட்டை குறைத்து ஊருக்கு காசு அனுப்புகிறேன் என சொல்லவில்லை
 
ஆசிரியர் : ஷாஜகான் என்ன கட்டினார்?
மாணவன் : லுங்கி கட்டினார்.
ஆசிரியர் : 
மாணவன் : எங்ககிட்டயேவா!!! 

இதென்ன புதுக்கதை?? இப்படி எல்லாம் எழுதி இருக்கேனா..? முத்தமிடவில்லை கிஸ்பண்னவில்லை என்றேல்லாம்..? யப்பா எனது பதிவை வாசித்த யாராவது சொல்லுங்கப்பா தேங்காய் உடைச்சவன் எல்லாம் மாவீரரை மதிக்கவில்லை முத்தமிடவில்லை என்றெல்லாம் எழுதி இருக்கிறேனா என்று.. யக்கோய்.. என்ன அநியாயம் இது..? 
 
யக்கோய் காள மாட்ட பசு மாடுனு சொன்னதும் இல்லாம செண்பகம்னு பொம்பல பேரச்சொல்லி ஏமாத்துரியளா...? 
 
கோயிலில் போய் தேங்காய் உடைத்தவர்களை பொதுப்படையாக அவர்களை பற்றி ஒன்றுமே தெரியாமல் அவர்களை பார்த்து இப்படி செலவு செய்வதை விட மாவீரர்களை முத்தமிடுங்கள் அது,இது என்று நீங்கள் எழுதவில்லையா? அப்படியாயின் மன்னித்து விடுங்கள்  
 
அப்படியா..? அப்படி நான் எதிர்பாக்கிறேனா..?   1240451_10151815336634336_1523033140_n.j
 
:D
 
அடுத்தவனைப்பற்றிய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கொசிப் கதைப்பதற்கும் ஒரு சமுதாய நிகழ்வை விமர்சனம் செய்வதற்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது அக்கா.  :)
 
கடைசியாக... (இதை பொதுமைப்பட எல்லா அந்தவகை கருத்துக்களையும் நினைத்து சொல்கிறேன்..) யாழில் விளங்கப்படுத்த முடியாத அல்லது விளங்கியும் தாங்கள் எழுதியதை நியாயப்படுத்த சம்ம்பந்தமில்லாமல் எழுதுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கமண்டுகளுக்கு திருப்பி பதில் போடுறதுக்கு சரத்தை தூக்கி கொண்டு முள்ளு பத்தைக்காலை ஓடலாம் .... :lol:

கடைசியில் நீங்கள் எழுதி இருக்கிறீர்களே ஒரு பந்தி அதை அப்படியே உங்களுக்கு திருப்பி போட்டுக் கொள்ளுங்கோ
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அப்பவும் எங்க அப்பத்தா சொல்லிச்சு நீ சின்னப்பிள்ளை பெரிய மனுசங்க சகவாசம் வச்சுக்காதை எண்டு.. 
1231510_10151815871969336_463783199_n.jp
 
:D
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிலர் பேர் பதிலுக்கு பதில் எழுத முடியா விட்டால் உதைத் தான் கடைசி ஆயுதமாக எடுக்கிறவர்கள்.நீங்களும் பாவம் தானே சின்னப் பெடியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிலர் பேர் பதிலுக்கு பதில் எழுத முடியா விட்டால் உதைத் தான் கடைசி ஆயுதமாக எடுக்கிறவர்கள்.நீங்களும் பாவம் தானே சின்னப் பெடியன்

பதில் எழுதினாத்தான அக்கா பதில் எழுத..? :(   :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

பதில் எழுதினாத்தான அக்கா பதில் எழுத..? :(   :D

:o  நீங்கள் பெரிய அறிவாளி என்பது மறந்து போய் விட்டது :( உங்கள மாதிரி அறிவாளிகளுக்கு எழுதி நேரத்தை வீணடிச்சது என்ட பிழை தான் மன்னிச்சு கொள்ளுங்கோ :)
 
இந்த வருடம் தேர் முடிஞ்சிட்டுது இனி மேல் அடுத்த வருசம் தேருக்குப் போயிட்டு வந்தே இதே புலம்பலை தொடருங்கள் <_< அது வரை நன்றி வணக்கம்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நல்ல விசயத்திற்கும் தேங்காய் அடித்துத்தானே தொடங்குவது தமிழ்ச் சைவர்களின் பண்பாடு! அதுதான் சிதறச் சிதற உடைக்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

(அது போக நீங்க வலிந்து என்னை ஏதோ கெட்டவன் போல காட்ட படும் கஸ்டத்தை ரசித்தேன்.. நல்லாருக்கு.. நாங்க எல்லாம் உத்தமன் என்று எப்பயும் சொன்னதில்ல சார்.. உதவாக்கரைகள்.. உத்தமனாம் உத்தமன்.. நாங்க எல்லாம் எப்ப ஊரை விட்டு வெளிக்கிட்டமோ அப்பவே செத்தவங்க சார்..அதுசரி உங்க ஒரிஜினல் என்னசார்.... ஜ மீன் உங்க ஒரிஜினல் மனசு(களவிதிகள் காரணமாய் மனசு என்று தணிகை செய்யப்பட்டுள்ளது :D ).. ஏதும் உள் கோபமின்னா அதில வந்து நாலு அடி அடிங்க வாங்கிக்கிறன்....) :icon_idea:

யாழ்களத்தில் ஒரு உறுப்பினர் அதுவும் முன்னணி உறுப்பினர் என்பது தவிர எனக்கு உங்கள் பூர்வீகம் எதுவுமே தெரியாது. அதுவும் 778 பச்சைப்புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு உங்கள் பதிவுகளும் கருத்துகளும் எத்துணை வலிமைகொண்டதாக விளங்கியுள்ளது என்பதையும் நான் உணர்ந்துகொள்ள முடியாதவனுமல்ல. உங்களைக் குறிப்பிட்டு நான் அந்தக்கருத்தை எழுதவில்லை பொதுப்படையாகவே எழுதினேன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சொல்லாடலை நீங்கள் திரும்ப ஒருமுறை சரிபார்ப்பது நல்லது.

தாங்கள் சொல்லிய கருத்துக்களைத் தவறென்று ''சொல்லியவர்களை வெல்வதற்காக'',

தாங்கள் சொல்லிய கருத்துக்களைத் தவறென்று, உங்களை நோக்கி நான் கூறவில்லை. எனது கருத்துக்கு நீங்கள் வெளியிட்ட படம் பொருத்தமாகப் பட்டதால் அதனை எடுத்துக்கொண்டேனே தவிர உங்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கில்லை. இருந்தும் எனது கருத்து உங்கள் மனதில் தவறாகப்பட்டு அது உங்களை வருத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன்.  

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவும் எங்க அப்பத்தா சொல்லிச்சு நீ சின்னப்பிள்ளை பெரிய மனுசங்க சகவாசம் வச்சுக்காதை எண்டு.. 
1231510_10151815871969336_463783199_n.jp
 
:D

தம்பி  சுபேசுக்கு

அண்ணன்  எழுதிக்கொள்வது............

இந்த திரிமூலம்  ஒன்றை  நீங்கள்  புரிந்து கொள்ளலாம்

கருத்துக்களத்தில்  பதியப்படும்  எல்லா  கருத்துக்களுக்கும்   பதில்  எழுதுவது என்பது சுலபமல்ல.

அதை  நாங்கள்  செய்கின்றோம்

அதன்படி

நாம் தேவையற்று கடி படுகின்றோம்

அல்லது தொடர்ந்து சண்டைபிடிக்கின்றோம்  என்ற  கருத்து பரவலாக இங்கு உண்டு.

உங்களுக்கும்  அந்தமாதிரி  ஒரு கருத்து  இருந்திருக்கலாம்.

இந்த  திரியில் உங்களுக்கு வந்த கருத்துக்கள்   மற்றும்  வசைபாடல்கள் மூலம்

எமது நிலையை  நீங்கள்   உணர்ந்திருப்பீர்கள்  என நினைக்கின்றேன்.

எல்லாவற்றிற்கும்

தலை ஆட்டுபவனுக்கும்

கொடுத்து வாங்குபவர்களுக்கும் (பச்சை) இந்தப்பிரச்சினை இல்லை.

நமக்குத்தெரிந்ததெல்லாம்

சரி

அல்லது

பிழை

இரண்டும்தான்

நடுவில்  எல்லாம் ஒன்றும் இருக்கமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களைக் குறிப்பிட்டு நான் அந்தக்கருத்தை எழுதவில்லை பொதுப்படையாகவே எழுதினேன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். எனது சொல்லாடலை நீங்கள் திரும்ப ஒருமுறை சரிபார்ப்பது நல்லது.

தாங்கள் சொல்லிய கருத்துக்களைத் தவறென்று ''சொல்லியவர்களை வெல்வதற்காக'',

தாங்கள் சொல்லிய கருத்துக்களைத் தவறென்று, உங்களை நோக்கி நான் கூறவில்லை. எனது கருத்துக்கு நீங்கள் வெளியிட்ட படம் பொருத்தமாகப் பட்டதால் அதனை எடுத்துக்கொண்டேனே தவிர உங்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கில்லை. இருந்தும் எனது கருத்து உங்கள் மனதில் தவறாகப்பட்டு அது உங்களை வருத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன்.  

பாஞ்..பொருள் மயக்கத்தில் எழுதியவற்றிற்காக மனிப்புகேட்கிறேன்.. ஆனால் அதையும் சும்மா பகிடியாகவே எழுதினேன் பாஞ்.. வாசிக்கும்போது புரிந்திருக்கும்.. நன்றி உறவே....

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ரதி அக்கா நான் கோவில் திருவிழாக்களுக்கு போவதில்லை.. நீங்கள் கட்டுரையை வடிவாக வாசிக்கவில்லை... தெளிவாக கட்டுரை ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கன் எப்படி இந்த கட்டுரை உருவானதென்று.. நன்றி அக்கா..
 
ரதி அக்கா மற்றும் இங்கு கருத்தாடிய எல்லா உறவுகளுக்கும்.... இந்த கருத்தாடலில் பிரதான கட்டுரை தவிர்த்து மற்றைய எனது கருத்துக்கள் அல்லது பகிடிகள் ஏதாவது உங்கள் மனதை அல்லது இங்கு கருத்தாடிய வேறு யாராவது உறவுகளின் மனதை புண்படுத்தி இருந்தால் எல்லோரிடமும் மனம் திறந்து மன்னிப்புகேட்டுகொள்கிறேன்.. 
 
என் இனம் சார்ந்து எப்பொழுதும் என் சிந்தனைகளும் எழுத்தும் இருக்கும்.. அதற்கு எந்தக்கருத்துகளும் விமர்சனங்களும் தடையாக இருக்காது.. என் கண்களினூடு நுழைந்து மனசை உறுத்தும் விடயங்களுக்காக நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதிக்கொண்டிருப்பேன்.. நன்றி.. :)

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.