Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாளை திருமணம்!

Featured Replies

டொங்கி சொல்வது போன்று தமிழ் விக்கிப்பீடியாவில் தவறு இருக்க வாய்ப்பு உள்ளது. நான் பையனின் கருத்தை படித்து விட்டு, சீமானின் வயதை தேடிய பொழுது, இதில் 1963 என்று இருந்தது. அதன் அடிப்படையில் என்னுடைய கருத்தை எழுதினேன்.

அதேவேளை சினிமாவில் இருப்பவர்கள் தங்களை இளமையாக வைத்திருப்பது போன்று சீமானும் இருக்க வாய்ப்பு உண்டு. எதற்கும் விசாரித்துப் பார்க்கிறேன்.

இங்கே இருக்கின்ற நாம் தமிழர் கண்மணிகள் குழப்பத்தை தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

  • Replies 126
  • Views 17.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் இது உங்களுக்காக

http://en.wikipedia.org/wiki/Seeman_(director)

 

நன்றி டொங்கி... எனக்கு முதலே தெரியும் இது துரோகியலின் வேலை தான் என்று...10 நாளுக்கு முதல் சீமான் அண்ணாவின் விக்கிபீடியா திரிக்கு சென்று பார்த்தேன் அதில் எல்லாம் இருந்திச்சு ஆனால் வயது இல்லை...கலியாணம் செய்தாப் பிறக்கு அதில் 49ம்பது வயது என்று போட்டு இருந்திச்சு பார்த்ததும் அதிர்ந்து போனேன்...அதை நாம் தமிழர் தொண்டருக்கும் தெரியப் படுத்தினேன் சீமான் அண்ணாவின் வயதை கூட்டி போட்டு இருக்கிறாங்கள் கவனத்தில் எடுக்கவும் என்று....விசுகு அண்னை சொன்னது போல அவரின் வாழ்கையை கொச்சை படுத்த ஒரு கூட்டம் கங்கனம் கட்டி நிக்கிது...

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்

தமிழ் நாட்டு அரசியலையே கரைத்துக் குடிச்ச ஆளில்  நம்பிக்கை  இல்லையோ??? :lol:  :D  :D 

 

 

காங்கிரசை   சென்ற தேர்தலில் ஓட ஓட விரட்டிய மக்களிடம் ஆதரவு இருக்கிறது என கூறும் போதே அவரின் அரசியல் திறமையை மெச்சினேன்.அதற்காக தான் வேந்தனின் கருத்தை காட்டி எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய கட்டுரைகள் 

ஆராய்சிகள் போலவே

இவையும் தங்களுக்கு பிடிக்காதவர்களை

அவர்கள் இளம் பெண்ணை  மணந்தார் என்று இழிவு படுத்தவதற்காக

வேண்டுமென்றே அவரது வயதை  அதிகப்படுத்தி (தெரியாது என்று சொல்லக்கூடாது தமிழகம போய் ஆராய்ந்து வந்தது பொய் ஆகாது)

உங்களை  நீங்களே தாழ்த்தியுள்ளீர்கள்.

தொடருங்கள்

இன்னும் கீழிறங்க  நிரம்ப இடமிருக்கு.............

 

orn 30 November 1969 (age 43)

Sivagangai districtTamil Nadu,India Occupation Film directorActorComedian,PoliticianWriterSinger, Known for Founder of Naam Tamilar Katchi Religion Atheist Spouse(s) K Kayalvizhi Website

 

அண்னை விக்கிபீடீயாவில் எல்லாரும் எழுதலாம்...ஆனால் ஆதாரம் குடுக்க வேனும்...அப்படி குடுக்க வில்லை என்றால் 24 மனித்தியாலத்தில் அதை நீக்கி போடுவினம்...சீமான் அண்ணாக்கு 49ம்பது வயது என்று எப்படி ஆதாரம் காட்டினாங்களோ தெரியல துரோகி பஸ்சங்கள்.....

பையன்! சீமான் சின்ன வயதில் ஒன்றும் கட்சி ஆரம்பிக்கவில்லை. இந்த நவம்பர் மாதத்தில் அவருக்கு 50 வயது. அத்துடன் ஒரு பயணத்தில் இவை எல்லாம் பார்த்து வரவில்லை. நீண்ட கால அவதானிப்பின் அடிப்படையில் சீமான் பற்றிய என்னுடைய கருத்தை பல மாதங்களாகவே சொல்லி வருகிறேன்.

 

அண்னை குள்ள நரி கருணாநிதியோடை ஒப்பிடும் போது சீமான் அண்ணா சின்ன ஆள் தான் இது கூட தெரியாமலா ஹா ஹா...சீமான் அண்ணா வைகோ ஜயாவோடை பகை திருமாளவன் ஓட பகை என்று கற்பனை பன்னின ஆக்களுக்கு எல்லாம் கலியாண வீடு நல்ல ஒரு உதாரனம்

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 30 தொடக்கம் 40 வரை தொகுதிகள் கொடுக்க கலைஞர் தயாராக இருப்பர். இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் நடக்கும் போது தெரியும்.

அனேகமாக 70 வரையான தொகுதிகளை காங்கிரசுக்கும் தேமுதிகவுக்கும் கலைஞர் ஒதுக்குவார்.

வேந்தன் சொன்னது போன்று 7, 8 தொகுதிகளை நாடாளுமன்றத் தேர்தலில் வேண்டுமென்றால் கலைஞர் ஒதுக்க வாய்ப்பு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தொகுதி கொடுக்கிறார் என்பதல்ல காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில்(சட்டமன்ற தேர்த்தலில்) வெல்லும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டுக்கு நடுவிலே இருக்கின்ற, தமிழர்கள் வாழ்கின்ற பாண்டிச்சேரியில் காங்கிரஸின் ஆட்சிதான் நடக்கிறது. தெரியுமா?

தனித்து நின்றால் காங்கிரஸ் ஓரிரு தொகுதியில்தான் வெல்லும். ஒரு பத்து தொகுதியில் இரண்டாம் இடத்திற்கு வரலாம். ஆனால் அதற்கான ஐந்தில் இருந்து பத்து வீதம் வரையான வாக்கு வங்கி இருக்கிறது. திமுக கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் காங்கிரஸ் 20இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 30 தொடக்கம் 40 வரை தொகுதிகள் கொடுக்க கலைஞர் தயாராக இருப்பர். இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் நடக்கும் போது தெரியும்.

அனேகமாக 70 வரையான தொகுதிகளை காங்கிரசுக்கும் தேமுதிகவுக்கும் கலைஞர் ஒதுக்குவார்.

வேந்தன் சொன்னது போன்று 7, 8 தொகுதிகளை நாடாளுமன்றத் தேர்தலில் வேண்டுமென்றால் கலைஞர் ஒதுக்க வாய்ப்பு உண்டு.

 

இன்றைய  கலைஞரின்  நிலையில் இதைத்தவிர வேறு எதை அவரால்  செய்யமுடியும்???

இது குழ்ந்தைப்பிள்ளைக்கும் தெரியும்  சபேசன்

 

நீங்கள் பெரும் ஆய்வாளர்

இதற்குள்  நிற்கலாமோ?

வெளியில்  வாங்கோ............ :(

குழந்தைப் பிள்ளைக்கும் தெரிந்த விடயத்தை தெரியாதவர்கள் (கலைஞர் 7,8 தொகுதிகள்தான் கொடுப்பார் என்பவர்கள்) இங்கே இருக்கிறார்கள். அதனால்தான் நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தனித்து நின்றால் காங்கிரஸ் ஓரிரு தொகுதியில்தான் வெல்லும். ஒரு பத்து தொகுதியில் இரண்டாம் இடத்திற்கு வரலாம். ஆனால் அதற்கான ஐந்தில் இருந்து பத்து வீதம் வரையான வாக்கு வங்கி இருக்கிறது. திமுக கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் காங்கிரஸ் 20இற்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்.

 

 

காங்கிரஸ்  போன்ற ஒரு ஆலமரத்துக்கு  

தனித்து நின்றால் காங்கிரஸ் ஓரிரு தொகுதியில்தான் என்பது எவ்வளவு கேவலம்???

அதையாவது ஒத்தக்கொள்ளுங்கள்

இதற்கு காரணம்

1- ஈழத்தழிருக்கு செய்த அநியாயம்

2- அதை தகுந்த நேரத்தில் எடுத்துரைத்த சீமான்

தான்  காரணம்.

Edited by விசுகு

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகவே காங்கிரஸின் நிலை இதுதான். தனித்து நின்றால் ஓரிரு தொகுதியேலேயே வெல்லும் நிலைதான். இன்றைக்கு அதனுடைய வாக்கு வங்கி தேய்ந்து போவதற்கு காரணம் சீமான் அல்ல, திருமாவளவன்.

விடுதலைச் சிறுத்தைகள் பலமாக இருக்கின்ற தொகுதிகளை கணக்கெடுத்துப் பாருங்கள். ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டைகளாக விளங்கிய தொகுதிகள் அவைகள். சீமான் இளைஞர்கள் மனதில் இருந்ததை திருப்பி பேசினாரே தவிர, அவர் இல்லாது விட்டாலும் இதுதான் காங்கிரஸின் நிலையாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்கு நடுவிலே இருக்கின்ற, தமிழர்கள் வாழ்கின்ற பாண்டிச்சேரியில் காங்கிரஸின் ஆட்சிதான் நடக்கிறது. தெரியுமா?

 

அண்னை உங்கள விட அதிகம் தமிழ் நாட்டு அரசியல் இந்தியா அரசியலை பற்றி எனக்கு நல்லாவே தெரியும் ஆனால் நான் அதை பற்றி பெரிசா அலட்டி கொள்வது இல்லை...காங்கிரஸ் இப்ப என்ன நிலையில் இருக்கிது என்று பள்ளில படிக்கிர பிள்ளைகளுக்கு நன்றாக தெரியும்...தமிழ் நாட்டில் இனி காங்கிரச் தலை தூக்க சான்ஸ்சே இல்லை...பின்ன என்னத்துக்கு சோனியாவை கட்டிப் பிடிச்சு கொண்டு நின்ட கொலைஞர்..மாணவர் போராட்டத்தோடை காங் கூட்டனியில் இருந்து வெளிய வந்தவர்....தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் உந்த பெரிசுங்க பூல் முட்டையா இருந்த படியாய் தான் உந்த கள்ளக் கூட்டங்கள் அவை மேல ஏறி இருந்து மிளகாய் அரச்சதுங்கள்...ஆனால் நிலமை இப்ப அப்படி இல்லை...படிச்ச இளைஞர்கள் அதிகம் அரசியல் வாதிகளின் கபட நாடகத்தை மாணவர் கூட்டம் நன்ங்கு அறியும்.......சரி இவளவு வாக்குவாதப் பட்டு விட்டோம்..இன்னும் ஆறு மாதம் இருக்கு பொறுத்து இருந்து பாப்போம் என்ன நடக்குது என்று.....காலம் மாரி கொண்டு போக்குது ஆனால் ஒரு சிலர் பழைய திருக்குறளையே திரும்ப திரும்ப‌ சொல்லிக் கிட்டு இருக்கினம்....

  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் ஊழல் எதிலும் ஊழல்..யார் காங்கிரஸ் :D

தமிழ்நாட்டுக்கு நடுவிலே இருக்கின்ற, தமிழர்கள் வாழ்கின்ற பாண்டிச்சேரியில் காங்கிரஸின் ஆட்சிதான் நடக்கிறது. தெரியுமா?

அந்த மானிலத்து மக்களின் பிரதிநிதித்துவ  அமைப்பு மாறுபட்டது. அதற்கும் தமிழ் நாட்டுக்கும் தொடர்பில்லை. அதாவது இனிமேலைய காலங்களில் அம்பாறை கிழக்கு மாகாணம் அல்ல. அதை சரியாக விளங்க வேண்டும்.

 

எந்த விதத்திலும் கருணாநிதி 70 தொகுதிகள் வெளியே விட வாய்ப்பே இல்லை. 

 

கருணாநிதி தி.மு.க-காங்கிரஸ் கூட்டை திரும்ப புதுபிக்க முயலும் காரணங்கள் இரண்டு.

1. காங்கிரஸ் இன்னொருதடவை கருணாநிதியை மிரட்டி சீமானை சிறையில் போட்டு தமிழரை அடக்கும் முட்டாள் தனத்தை கனவிலும் நினைக்காது.  அமோகமான வாக்குக்களால் வென்று வந்தாலும் இனி அந்த பிழையை விடாது. இலங்கையை இனி ஒரு தடவையும் முழு மனதாக நம்பாது. முன்னர் நம்பி இரசாயனக் குண்டுகள் கொடுத்த பிழையை இனி விடாது. கருணாநிதியை சந்திக்க மறுத்த ராகுல் நாக்கை நீட்டிகொண்டு திரும்பி வந்துவிட்டார். காங்கிரஸ் இந்த முறை வேட்பாளர் தெரிவில் பலத்த சிக்கலை எங்கும் காணும். பல இடங்களில் அதன் கூட்டு மிகவும் நெருக்குப்படும். இதை சமாளிக்க ராகுல் புதிய திட்டம் வைக்கிறார். அதாவது கூட்டுகளில் கிடைக்கும் சில தொகுதிகளையும் பெருச்சாளிகள், திமிங்கிலங்கள் தங்கள் ஆட்களை போட்டு நிரப்பாமல் கொஞ்சம் கட்சிக்காக உழைப்பவர்களும் இடம் கொடுத்தால்தான் கட்சிக்காக யாரும் உழைப்பார்கள். ஆனால் காங்கிரஸ் முதளைகளால் உழுத்து போய்விட்டது.  தமிழ் நாட்டு நண்பர்கள் சொல்கிறார்கள் கருணாநிதியை ஊழலில் இறக்கியது காங்கிரஸ் என்று. அந்த அளவுக்கு காங்கிரசில் ஊழல். இது கூட்டுக்கட்சிகள் கொடுக்கும் சிறிய எண்ணிக்கையை சமாளிக்க உதவும். இதை கருணாநிதி உணருவதால் தனக்கு காங்கிரசால் இனிமேல் ஆபத்தில்லை என்று உணருகிறார். 

 

2.கருணாநிதி போக இனி பாதை இல்லை. தமிழ் நாட்டால் தூக்கி எறியப்பட போகிறார். பழை 20%, 30% கதைகளை நம்பி மூன்றாவது தேர்தலில் மண்கவ்வ கருணாநிதி அவ்வளவத்துக்கு முட்டாள் இல்லை. எதையோ ஒட்டுப்போட்டு தப்பிக்க பார்க்கிறார். இந்த தடவை லோக் சபாவில் ஜெயாவை கருணாநிதி நினக்க முடியாது எங்கிறார்கள் எனது தமிழ் நாட்டு நண்பர்கள். இவ்வளவுக்கும் இது வரையில் லோக் சபாவை அ.தி.மு.க ஆக்கிரமித்தது இல்லை. இந்த முறை அவர்களின் இலக்கு 40 என்ற்றால் அவர்களின் தன்னம்பிக்கை காண கருணாந்தி காங்கிரசுடன் மட்டும் அல்ல, ஆடு, மாட்டுடன் கூட கூட்டு வைக்கும் பீதியில் இருக்கிறார். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 
ஒரு தலைவருக்கு கட்சியினரே.. தம்பிமார்களே.. தொண்டர்களே.. நடத்தி வைத்த திருமணம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். 

சீமான்.. இந்தப் பெயரில் அப்படியென்ன ஈர்ப்போ தெரியவில்லை.. என்றைக்கு ஈழப் பிரச்சினையை இந்த சீமான் பேசத் துவங்கினாரோ அன்றிலிருந்தே அவர் இயக்குநர் என்கிற களத்தில் இருந்து அரசியல் களத்திற்கு கட்டாயமாகவே இடம் மாற்றம் செய்யப்பட்டுவிட்டார்..!
 
தமிழ்த் திரையுலகம் இராமேஸ்வரத்தில் நடத்திய எதிர்ப்புப் பேரணியில் சீமான் பேசிய பேச்சை நேரலையாக தொலைக்காட்சிகளில் பார்த்த தமிழகத்து மக்களின் மனதில் இன்னொரு அரசியல் பிரமுகராக அன்றைக்கே இடம் பிடித்துவிட்டார் சீமான்..! இன்றைய இளைஞர்களை கவருகின்றவகையிலான அவருடைய பேச்சும், சுபாவமும் அநேகம் பேரை அன்பர்களாக ஆக்கி.. எண்ணிக்கையை ஆயிரத்தில் இருந்து லட்சங்களாக்கியிருக்கின்றன..!
 
திருமாவளவனும், சீமானும்தான் இன்றைக்கு தமிழகத்து அரசியலில் இளைஞர்களால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளது உள்ளபடியே கொண்டாடப்படுபவர்கள்..!  இவர்களது அரசியல் களம் ஒன்று போலவே இருந்தாலும், ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்பதால் தனித்தனி இராச்சியங்களாக இவர்கள் இருப்பதுகூட ஒருவகையில் நல்லதுதான்..!
 
அரசியலுக்கு வராதபோது சீமானுடன் அவருடைய வீட்டில் இருந்தவர்களெல்லாம் அவருடைய உதவி இயக்குநர்கள்தான்.. அந்த உதவி இயக்குநர்களை பார்க்க வருபவர்கள்கூட அந்த வீட்டில் தங்கிவிட்டுச் செல்வார்கள். அந்த அளவுக்கு அவரது வீடு ஒரு சத்திரம் போலத்தான் இருந்தது..! கட்சி ஆரம்பித்த பின்புதான்.. கட்சிக்கார தம்பிகளும், பிரமுகர்களும் அவரைச் சுற்றிச் சூழ வந்து கொண்டிருக்கிறார்கள்..!
 
அண்ணனை பல இடங்களில் பேட்டிக்காக சந்தித்திருந்தாலும் முதல்முறையாக அவரைச் சந்தித்தது சில ஆண்டுகளுக்கு முன்பாக இயக்குநர்கள் சங்கத்தில்..!  தாத்தாவுக்கு தமிழ்த் திரையுலகம் பாராட்டு விழா நடத்தியபோது அதற்கான அழைப்பிதழ் வாங்குவதற்காக சங்கத்திற்கு வந்திருந்தார்.. இவருக்கான அழைப்பிதழை அன்று காலைதான் இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி வாங்கிச் சென்றிருந்தார். இப்போது சீமான் நேரடியாக வந்துவிடவே.. ஸ்டான்லிக்கு போனை போட்டு அழைப்பிதழ் கேட்டு.. வரவழைத்து வாங்கிச் சென்றார். இந்தப் பேச்சுக்காகவே சீமானை எனக்கு பிடித்துப் போனது..! ரொம்பவே சின்னப் புள்ளை மாதிரி யார் கண்ணனிடம் கோபித்துக் கொண்டார். 10 அழைப்பிதழ்கள் கேட்டார்.. அவரது கன்னத்தைப் பிடித்து தாஜா செய்து, கொஞ்சி.. சமாளித்து 5 அழைப்பிதழ்கள் மட்டுமே கொடுத்தனுப்பினார் யார் கண்ணன்..! இந்த பாச மழைல இயக்குநர்களை மிஞ்ச முடியாதுய்யா..! 
 
இப்போதைய சீமான் தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரமுகராகவும், தளகர்த்தகராகவும் மாறிய பின்பும் அவருடைய வாழ்க்கை முறை மட்டுமே மாறியிருக்கிறது. ஆனால் பழகும்விதம் அப்படியேதான் இருக்கிறது..! அவருடைய உதவி இயக்குநர்கள்.. அன்பர்கள்.. கட்சிக்காரர்கள்.. உறவினர்கள்.. இத்தனை பேர் கேட்டும் திருமணத்திற்கு தலையாட்டாமல் இருந்தவர்.. மத்திய உளவுத்துறையின் உள்ளடி வேலைகளுக்கு பின்புதான் முழித்துக் கொண்டார். தன்னுடைய திருமதியாரை எங்கே, எப்போது பார்த்தார்..? அவர்கள் இருவருக்குமிடையில் காதல் எப்போது பூத்தது என்பது பற்றியெல்லாம் சீக்கிரமாக பத்திரிகைகளில் அவரே சொல்வார். இல்லாவிடில் திருமதி சீமான் சொல்வார். அப்போது தெரிந்து கொள்வோம்..  இப்போது ஓவர் டூ நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. 

 
seeman-10.jpg
 
தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் பகுதியில் இருந்தே பேனர்கள்.. சென்னையின் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் போர்டுகள்..! திருநெல்வேலிக்கார நாம் தமிழர் கட்சிக்காரர் ஒருத்தர் சென்னையில் பல இடங்களில் தன் பெயரில் போர்டு வைத்திருக்கிறார்..!  நேற்றைய முன் தினமே பல்வேறு ஊர்களிலிருந்து நாம் தமிழர் தம்பிமார்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பணியை ஒதுக்கிவிட்டார்கள்..
 
seeman-1.jpg
 
உறவினர்கள் வரவேற்புக்கு தனி டீம்.. விருந்தினரை வரவேற்க தனி டீம்.. மீடியாக்களை அழைத்துச் செல்ல ஒரு டீம்.. சொந்தக் கட்சியினரை சமாளிக்க ஒரு டீம்.. பிற கட்சித் தலைவர்களை உபசரிக்க ஒரு டீம்.. விருந்துக்கு ஒரு டீம்.. பணப்பட்டுவாடாவுக்கு ஒரு டீம்.. அனைத்து ஏற்பாடுகளுக்கும் ஒரு தனி டீம் என்று அனைத்தையும் கச்சிதமாக பார்த்து பார்த்து நடத்தியிருக்கிறார்கள் நாம் தமிழர் அமைப்பினர்..!
 
seeman-1.jpg
 
ஏற்பாடு செய்திருந்த அரங்கத்தின் மேடையில் ஒரு பக்கம் வள்ளுவரும் மறுபக்கம் அவருடைய பரம எதிரி பெரியாரும் இடம் பெற்றிருந்தார்கள். இன்னும் பல தலைவர்களும் அரங்கத்தின் பல பகுதிகளில் இருந்து மக்களை பார்த்தபடியேதான் இருந்தார்கள்..! ஆனால் முக்கியமாக ஒருத்தரை காணவே காணோம். அது பேரறிஞர் அண்ணா.. அது ஏன் அண்ணா மீது சீமானுக்கும், திருமாவளவனுக்கும் இப்படியொரு கோபம்..? (சமீபத்தில் திருமாகூட அவரது 50-வது பிறந்த நாள் விழாவில் அண்ணாவுக்கு மட்டும் கட் அவுட் வைக்கவில்லையே என்று அவரது அன்புத் தம்பி கருணாநிதி கோபித்துக் கொண்டாராம்..!)  அண்ணா மட்டுமா..? முத்துக்குமார், செங்கொடிகளின் புகைப்படங்கள்கூட இல்லாதது பெரும் குறைதான்..! ஆனால் மேடையில் இயக்குநர் மணிவண்ணன் மற்றும் அவரது மனைவியாரின் புகைப்படங்களை வைத்திருந்தார்கள்..!
 
seeman-2.jpg
 
கூட்டம் திருமண அரங்கத்தில் நெருக்கியடிக்கும் என்று எதிர்பார்த்தே வெளியில் இரண்டு பக்கமும் ஷாமியானா போட்டு டிவி வைத்து அதில் ஒளிபரப்பு செய்தார்கள். அந்த இடத்துக்கும் கூட்டம் போக மறுத்தது..! அன்பாக சொல்லிப் பார்த்தார்கள். ஒரு சிலரிடம் உரிமையோடு கண்டிப்போடு சொல்லி வெளியில் அனுப்பி வைத்தனர். ஆனாலும் நேரடி அனுபவமே பெரிது என்பதால் கூட்டம் மறுபடியும் மறுபடியும் உள்ளே வந்து நின்று கொள்ள ஒரு கட்டத்தில் கட்சித் தம்பிமார்கள் போய்த் தொலைங்க என்று விட்டுவிட்டார்கள்..!
 
முதலில் மேடைக்குக் கீழே இருந்த பெரியவர்களையெல்லாம் மேடைக்கு அழைத்து அமர வைத்தார்கள்.. பிரபலங்கள் பலரும் மேடையேறத் துவங்க வருபவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சங்கடமாகிப் போனார்கள் விழா அமைப்பாளர்கள். மணப்பெண் மேடையேறியபோது பெரும் கைதட்டல்.. மணமகனும், மணமகளும் முகமன் காட்டியபோதும் மீண்டும் ஒரு கைதட்டல். மணமகளின் குடும்பத்தினர் அனைவருமே வந்திருந்தனர். காளிமுத்துவின் இன்னொரு குடும்பத்தினரும் வந்திருந்ததாக கட்சிக்காரர் ஒருவர் கூறினார்.. 
 
மணவிழாவின் முதல் நிகழ்ச்சியாக இறந்து போன தமிழ்ச் சொந்தங்களுக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்பு நாம்தமிழர் கட்சியினர் தமிழ் வளர.. தமிழர் வாழ என்று கூறி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்..! பெரியவர் பழ.நெடுமாறன் ஒரு தங்கச் செயினை எடுத்துக் கொடுக்க அதனை மணமகள் கழுத்தில் அணிவிக்க ஒரு நிமிடத்தில் திருமணம் நடந்தேறியது..! இதன் பின்பு மாலையையும் மாற்றிக் கொண்டார்கள்..!
 
seeman-6.jpg
 
 
seeman-8.jpg
 
seeman-5.jpg
 
உடனேயே மணமக்களை வாழ்த்த ஒரு கூட்டம் மேடையேறத் துவங்க.. அதே நேரம் தலைவர்களும் வாழ்த்துரை வழங்கத் துவங்கினார்கள்..! இரண்டும் ஒன்றாகவே நடக்க சீமானே கொஞ்சம் தவித்துப் போனார். ஆனாலும் முடியவில்லை.. அப்படியே விட்டுவிட்டார்கள்..! சினிமாக்காரர்கள் கொஞ்சம்.. கட்சியினர் அதிகம் என்ற ரீதியில்தான் கூட்டம்..! கட்சியினரே நடத்துவதால் கண்டிப்பாக கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை ஊகித்தே பல சினிமாக்காரர்கள் வாழ்த்துகளை எஸ்எம்எஸ்ஸிலேயே அனுப்பிவிட்டார்களாம்..! அண்ணன் சீமான் கொஞ்சம் ரிலாக்ஸாக மணமகனாகவே இருந்துவிட்டார்.. இடையில் சிற்சில இடங்களில் மாப்பிள்ளை மிதப்பில் இருந்ததையும், கெத்தாக மணமகளிடம் பேசுவதையும் பார்க்க முடிந்தது..! 
 
seeman-kayalvizhi.jpg
 
 
 
நடிகர்கள் சிவகுமார், சத்யராஜ், பிரபு, வாகை சந்திரசேகர், விவேக், சுந்தர்.சி, ராஜேஷ், ஜெயம் ரவி, மயில்சாமி, விக்னேஷ், மனோஜ், உதயா, ராமகிருஷ்ணன், வையாபுரி, ‘செல்’ முருகன், ‘பிளாக்’ பாண்டி, நடிகை சரண்யா, பட அதிபர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.சவுத்ரி, கவிஞர் காசி ஆனந்தன், திரைப்பட இயக்குனர்கள் பாலு மகேந்திரா, பாக்யராஜ், பாலா, பி. வாசு, கே.எஸ்.ரவிக்குமார், அமீர், சேரன், ஆர்.கே.செல்வமணி, பாலாஜி சக்திவேல், எழில், பொன்வண்ணன், ராஜா, சுசி கணேஷ், ஸ்டான்லி, கவுதமன், புகழேந்தி, திரைப்பட பாடலாசிரியர்கள் கவிஞர் நா.முத்துகுமார், கவிஞர் சினேகன், கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், திரைப்பட ‘ஸ்ட்ன்ட்’ டைரக்டர்கள் ஜாக்குவார் தங்கம், கனல் கண்ணன், பாடகி சின்னப்பொண்ணு என்று சினிமா கூட்டமும் கூடியிருந்தது..!

பாலாவின் காலில் அடிபட்டிருக்கிறது. இந்த நிலையிலும் மனிதர் நொண்டி நொண்டி நடந்து வந்திருந்தார். அதே நேரம், பேசும்போதெல்லாம் “எங்கள் அப்பா... எங்கள் அப்பா...” என்று சீமான் பாசத்துடனும், நேசத்துடனும் சொல்லிவரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தனக்குப் பதிலாக தன் மகன் மனோஜை அனுப்பியிருந்தார் பாரதிராஜா. ஆனால் நேற்று முன்தினம் நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க இதே ஒய்.எம்.சி.ஏ.க்கு பாரதிராஜா வந்திருந்தார் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்..!

 
“சாப்பாடு ரெடியா இருக்கு.. சாப்பிட்டு வாங்க.. நம்ம அண்ணன் சாயந்தரம்வரைக்கும் இங்கதான் இருக்கப் போறாரு..” என்று மைக்கில் பல முறை சொல்லியும் கூட்டம் குறைந்தபாடில்லை. “பொக்கேவை வைத்துக் கொண்டு சாப்பிட போக முடியாது..” என்று ஒருவர் வந்து சத்தம் போட்டுச் சொன்ன பின்னாடி மைக்கில் அட்வைஸ் செய்வதையும் விட்டுவிட்டனர் தோழர்கள்..! 
 
வாழ்த்த வந்திருந்த என்னுடைய முதலாளியுடன் நானும் மேடைக்குச் சென்று அன்புப் பரிசாக கொண்டு வந்திருந்த ரெட்சன் புத்தகத்தை அண்ணன் சீமானின் கையில் கொடுத்தேன். அடையாளம் கண்டு மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். “ரைட்டு வர்றண்ணே..” என்று சொல்லிவிட்டு அண்ணியாருக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு இறங்கினேன்..!
 
மேடையின் ஓரத்தில் சீமானின் பெற்றோர்கள் மனதில் ஒரு பாரம் இறங்கியதை போன்ற திருப்தியுடன் அமர்ந்திருந்தனர்.. பெற்றவர்களுக்கு இதுதானே பெரிய விஷயம்.. மேடையேறிய அனைத்துத் தலைவர்களிடத்திலும் தனது தாய், தந்தையரை அறிமுகப்படுத்தி வைத்தார் சீமான்.. அந்த கணம் அந்தப் பெற்றோரின் முகத்தில் தெரிந்த பூரிப்பும், மகிழ்ச்சியும் எத்தனை கைதட்டல்கள் கொடுத்தாலும் சீமானுக்குக் கிடைக்காத பெருமிதம்..!
 
வைகோ, தொல்.திருமாவளவன், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், ‘மாலை முரசு’ இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், நடிகரும், தி.மு.க. எம்.பி.யுமான ரித்திஷ், தமிழக பா.ஜனதா தேசியச் செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராசன், மாநிலச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணைச் செயலாளர் மகேந்திரன், பா.ம.க. துணைத் தலைவர் ஏ.கே.மூர்த்தி, சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மற்றும் சில சிறிய கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள்..! தி.மு.க.வின் சார்பில் ஸ்டாலின் வருவார் என்று எதிர்பார்த்தார்கள். வந்தாரா என்று தெரியவில்லை. தமிழச்சி தங்கபாண்டியன் வந்திருந்தார். கே.கே.நகர் பகுதி தி.மு.க. செயலாளர் தனசேகரனை மேடையில் பார்த்தேன்..! 
 
seeman-7.jpg
 
அடுத்தது சாப்பாடுதான் என்ற எண்ணத்தோடு வெளியில் வந்தபோது நமது வலையுலகத் தோழர் கவிஞர் மதுமதியை சந்தித்தேன்..! உணவுக்கு செல்லும் வழி எழுதி அதனை செல்லும்வழி தோறும் பேனர் போல் கட்டியிருந்தார்கள். டென்னிஸ் கோர்ட்டை தாண்டி சிறிது தூரம் சென்றவுடன் பெரிய ஷாமியானா அமைத்து சாப்பாட்டு பந்தி அமோகமாக நடந்து கொண்டிருந்தது..! 
 
seeman-6-madhumathi.jpg
 
சாப்பாட்டிற்காக 300 ஆடுகளை வைகுண்டத்திற்கு நேற்றைக்கே அனுப்பிவைத்துவிட்டதாக ஒரு இணை இயக்குநர் என்னிடம் சொல்லியிருந்த்தால் நானும் இதைத்தான் எதிர்பார்த்திருந்தேன். 200 நபர்களை வேலைக்கு வைத்து பல வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் நாம் தமிழர் கட்சித் தம்பிமார்கள்தான் சோற்றுத் தட்டைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்..! முந்தைய தினமே சாப்பாட்டு வேலைகள் ஆரம்பித்து.. 3 ஷிப்ட்டாக நடந்து கொண்டிருந்தது.. நாங்கள் சாப்பிட்டு வெளியில் வரும்போதும் அடுத்த ஷிப்ட்டுக்காக சோறு வெந்து கொண்டிருந்தது..!
 
seeman-3.jpg
 
நானும் மதுமதியும், அவருடைய நண்பர்கள் இருவருமாக பந்திக்கு முந்தினோம். ஆனால் அங்கே எங்களுக்கு முன்பாக ஒரு ஊரே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது..! காத்திருந்தாள் நடக்காது என்பதால் மூடிய இலைகளுக்கு முன்பாக சீட் போட்டு பிடித்துதான் சாப்பிட்டோம்.. இதுல என்னத்த வெக்கப்படுறது..? எல்லா இடத்துலேயும் இதுதானே நடக்குது..?
 
சோறையே கொட்டினார்கள்.. கறிக் குழம்பு.. வேறு கூட்டு எதுவும் இல்லை. ரசம், மோர் இல்லை. ஆனால் தயிர் மட்டும் வெளியில் கொடுத்தார்கள்.. சோறு வேண்டுமளவுக்கு கிடைக்கும்.. ஆனால் கறிக் குழும்பு ஒன்றுதான் இருக்கிறது என்றவுடன் பாதி பேர் முதல் ரவுண்டிலேயே கிளம்பிவிட்டார்கள்.. எனக்கு இரண்டு சீட்டு தள்ளி உட்கார்ந்திருந்த கவிஞர் மதுமதிக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்த்து..!
 
அவருடைய அருகில் ஒரு தமிழர் வந்து அமர்ந்திருந்தார்.. புல் பூஸ்ட்டில் இருந்தார். கறிக்குழம்பை ஊற்றியவுடன் அதில் கொஞ்சம் கறியை எடுத்து தான் கொண்டு வந்திருந்த பையில் போட்டுக் கொண்டார். மீண்டும் குழம்பு ஊற்றியவரை அழைத்து திரும்பவும் குழம்பை ஊற்றச் சொன்னார். அவரும் ஊற்ற.. அதில் இருந்த கறியை மட்டும் எடுத்து அதை பையில் போட்டுக் கொண்டார்.. மீண்டும் குழம்பு.. மீண்டும் அமுக்கல்.. அடேங்கப்பா.. இந்த விஷயத்துல தமிழனை அடிச்சுக்க ஆள் கிடையாது உலகத்துல..!!!
 
seeman-4.jpg
 
கை கழுவும் இடத்தில் ஒரு புதுமையைச் செய்திருந்தார்கள். இரண்டு தொட்டி நிறைய தண்ணீரை நிரப்பில் அதில் இருந்து 20 குழாய்களுக்கு கனெக்சன் கொடுத்திருந்தார்கள். வித்தியாசமான செட்டப்பில் இருந்தது.. சூப்பர்.. நிச்சயம் பாராட்ட வேண்டும்..!  கறிக்குழம்பு மட்டுமே என்பதால் தனியாக தயிரை கொடுத்து வயிற்றை கூல் செய்யச் சொன்னார்கள். அதையும் செய்தோம்..! 
 
seeman-8.jpg
 
சாப்பாடு தயாராகும் இடம் ஒன்றாக இருந்தும் அதனை பந்தி பிரிக்கும் இடம் மூன்றாக இருந்தது.. மூன்றுக்கும் வேறு வேறு பொறுப்பாளர்கள்.. வேலையாட்கள் என்று கச்சிதமாக பிரித்துக் கொடுத்திருந்தார்கள். இந்தக் கூத்தில் அங்கே திடீரென்று வந்து இரண்டு பெண் காவலர்கள் தங்களுக்கு தண்ணீர் பாட்டில் வேண்டும் என்றார்கள். ரெண்டுதான் கேப்பாங்கன்னு நினைச்சா.. எல்லாருக்கும் வேணும்.. ஒரு டஜன் வாங்கிட்டு வரச் சொன்னாங்க என்றார்கள். ஒரு பேச்சும் பேசாமல் 20 கேன் கொண்ட பேக்கையே தூக்கி அவர்கள் கையில் கொடுத்தார்கள் தம்பிமார்கள். அக்காமார்கள் வீர நடை போட்டு அதனை எடுத்துச் சென்றதை கீழே பாருங்கள்..!
 
seeman-9.jpg
 
வெளியே வரும்போது அகில உலக நக்கல் நாயகம் அண்ணன் பாமரனை சந்தித்தோம். வழக்கம்போல தனது பையனுக்கு உலக அறிவைக் காட்டுவதற்கு துணைக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார். சிறிது நேரம் அளவளாவினோம்.. உடன் வந்திருந்த நண்பர்களுக்கு என்னையும் மதுமதியையும் அறிமுகப்படுத்தி வைத்தார். “நல்ல பிளாக்குகளை எனக்குச் சொல்லுங்க தோழர்..” என்றார் பாமரன். “என் பிளாக்கை தவிர மத்தது எல்லாமே நல்லாயிருக்கும் தோழர்..” என்றேன்.. சிரித்துக் கொண்டார்.. உடனேயே சாப்பிட்டே தீர வேண்டும் என்று அவருடைய வயிறு சொன்னதால், எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார்..!
 
மீண்டும் அரங்கம் இருந்த இடத்திற்கே வந்தோம். வழியில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி பிரசுரங்கள்.. சீமானின் பேச்சுக்கள் அடங்கிய சிடிக்கள்.. ஈழம் சம்பந்தமான புத்தகங்கள்.. கீ செயின்கள்.. போர்டுகள்.. போஸ்டர்கள்.. பிரபாகரனின் புகைப்படங்கள் என்று திராவிடப் பாரம்பரியம் தாங்கிய அனைத்துவகை விற்பனைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.. என் கையும் வழக்கம்போல அரிக்கவே.. 3 புத்தகங்களை வாங்கிவிட்டு மேற்கொண்டும் அங்கே நின்றால் பர்ஸ் காலியாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வோடு கிளம்பினேன்..! 
 
அப்போதும் ஒரு ஆர்வத்தோடு நம்ம ஏ.சி. குணசீலன் என்ன செய்றாருன்னு தேடிப் பார்த்தேன். நேற்றைக்கு இருந்த ஏ.சி. வேற.. இப்ப இருக்குற ஏ.சி. வேற..! நேற்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி உத்தரவில் நடக்கும் விழா. இன்றைக்கு கட்சிக்காரர்களின் விழா எதுக்கு வம்பு என்றெண்ணி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த டாடா சுமோவின் முன் சீட்டில் அமர்ந்தபடியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். 
 
அரங்கத்தின் உள்ளேயும் போலீஸ் இல்லை.. சாப்பாட்டு கூடத்திலும் போலீஸ் இல்லை.. டிவி இருந்த பந்தலுக்குள்ளும் போலீஸ் இல்லை. ஆனாலும் ரொம்ப சவுகரியமா அவங்களுக்கு எங்க உக்காரப் பிடிக்குதோ அங்க உக்காந்து வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தாங்க..!  சொந்த வூட்டுக் கல்யாணம் மாதிரியே வந்தவர்களும், ஏற்பாடு செஞ்சவங்களும் நாயா உழைச்சுக்கிட்டிருக்கும்போது இதுல இவுகளுக்கு என்ன வேலை..? சந்தோஷம்தான்..!
 
இப்போதும் அரங்கத்தில் கூட்டம் நிரம்பியிருந்தது.. பரிசு கொடுக்கக் காத்திருந்த கூட்டம் கியூவில் நின்று கொண்டிருந்தது..! ஒவ்வொருவருடனும் தனித்தனி புகைப்படம் எடுத்து அவர்களை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தனர் மணமக்கள்..! இந்த அண்ணனின் சந்தோஷம் இன்றுபோல் என்றும் இருக்கட்டுமே என்று மனதிற்குள் வாழ்த்திவிட்டு மதுமதியுடன் கிளம்பினேன்..!
 
“இப்ப எங்க போறீங்க..?” என்றேன்.. "புலவர் இராமனுசம் ஐயாவை பார்க்கப் போறேன்.." என்றார் மதுமதி. “அவர் வீடு எங்கேயிருக்கு..?” என்று கேட்ட பின்பு, “நானும் அவரை பார்க்க வர்றனே..?” என்று கூறி அவருடனேயே கிளம்பினேன்..!
 
அடுத்தப் பதிவு ஐயா புலவர் இராமனுசம் அவர்களுடனான சந்திப்பு பற்றியது..!

புகைப்பட உதவி : பல்வேறு இணையத்தளங்கள். அனைவருக்கும் நன்றி..!

 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 30 தொடக்கம் 40 வரை தொகுதிகள் கொடுக்க கலைஞர் தயாராக இருப்பர். இதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் நடக்கும் போது தெரியும்.

அனேகமாக 70 வரையான தொகுதிகளை காங்கிரசுக்கும் தேமுதிகவுக்கும் கலைஞர் ஒதுக்குவார்.

வேந்தன் சொன்னது போன்று 7, 8 தொகுதிகளை நாடாளுமன்றத் தேர்தலில் வேண்டுமென்றால் கலைஞர் ஒதுக்க வாய்ப்பு உண்டு.

 

சட்டசபைத்தேர்தல் 2016ல் தான் வர இருக்கிறது. அதற்குள் கூட்டணிகள் மாறலாம். தமிழகத்தினைப் பொறுத்தவரையில் காங்கிரசுக்கு மதிமுக, விடுதலைச்சிறுத்தைகளை விட அதிக வாக்களார்கள் இருக்கிறார்கள். 5 வீத நிரந்தர வாக்காளர்கள் காங்கிரசுக்கு தற்பொழுது உள்ளதாகச் சொல்லுகிறார்கள். அத்துடன் அமைக்கும் கூட்டணியைப் பொறுத்து வாக்குவீத எண்ணிக்கை அதிகரிக்கும். கடந்த சட்டமன்றத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு குறைந்த இடங்களைப் பெற்று அதிமுக கூட்டணி அதிக இடங்களைப் பெற்றதற்கு முக்கிய காரணம் திமுக அரசிற்கு எதிரான அலை. சீமானின் காங்கிரசுக்கு எதிரான நடவடிக்கைகள் சிறிய தாக்கத்தினையே ஏற்படுத்தியது. காங்கிரசினால் 3 தொகுதியினைப் பெறக்கூடியதாக இருந்தது. அத்துடன் தேதிமுகவும் காங்கிரசு, திமுகவுடன் கூட்டணி சேரும்போது வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அவுஸ்திரெலியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத்தேர்தலில் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் பசுமைக்கட்சிக்கே எங்கட சனத்தில் பலர் வாக்களிக்கவில்லை. குரல் கொடுக்கும் வேட்பாளார்களுக்கே எங்கட சனத்தில் பலர் வாக்களிக்கவில்லை. தமிழகத்தில் தமிழர் அல்லாதவர்கள் பலர் வாழ்கிறார்கள். அத்துடன் சாதி வாக்குகள் பெறும் செல்வாக்கினைப் பெறும். குறிப்பிட்டசாதியைச் சேர்ந்தவர் காங்கிரசு போட்டியிடும் தொகுதியில் போட்டியிட்டால் வாக்குகள் வேறுபடலாம். கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் நடிகர் கார்த்திக் வை.கோ போட்டியிட்ட தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு கிடைத்த சாதி வாக்குகள் வை.கோவுக்கு கிடைத்திருந்தால் வை.கோ வெற்றி பெற்றிருக்கலாம்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

http://www.indian-elections.com/tamilnadu/virudhunagar.html

சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் வைகோ போட்டியிட்ட விருது நகரில் கிடைத்த வாக்குகளைப் பார்வையிட

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்கு நடுவிலே இருக்கின்ற, தமிழர்கள் வாழ்கின்ற பாண்டிச்சேரியில் காங்கிரஸின் ஆட்சிதான் நடக்கிறது. தெரியுமா?

 

சபேசன்,

 

நீங்கள் சொன்ன ஒரு தகவலை வைத்தே, உங்கள் அரசியல் அறிவை மதிப்பிடக் கூடியதாக உள்ளது.

 

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி என்கிறீர்கள்.

 

அங்கே காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்து வென்ற  ரங்கசாமி ஆட்சி அல்லவா நடக்கின்றது.

 

இதுபோல் தான் உங்கள் சீமான் அரசியல் நிலை குறித்த மதிப்பீடு உள்ளதா?

 

காங்கிரஸ், ஆந்திராவிலும் தேய்கிறது.

 

கர்நாடகாவில், பாரதிய ஜனதா ஆட்சி செய்த அடாவடிக் கூத்தினால் தான் நாம் வென்றோம் என்று பி சிதம்பரம் இந்தவாரம் சொன்னார்.

 

தமிழகத்தில், அடுத்தவர் முதுகில் ஏறி தான் வெல்ல முடியும் என்பது தான் காங்கிரசின் நிலை.

 

இம்முறை, காங்கிரஸ் திமுகவுடன் சேர்ந்தே நிற்கும்.

 

அதிமுக அணியில் வைகோ வருவார். சீமான், அதிமுக சார்பாக பிரசாரம் செய்வார். இது எனது கணிப்பு. பார்க்கலாம்.

Edited by Nathamuni

நாதமுனி! தவறான தகவலுக்கு வருந்துகிறேன். ஆனால் அவர்கள் பிரிந்தாலும் சேர்ந்தாலும் காங்கிரஸ் கட்சிதான். மூப்பனார் பிரிந்து கட்சி அமைந்த போதும், அது காங்கிரஸ்தான்.

இதிலேயே நீங்கள் ஒன்றைக் கவனியுங்கள். காங்கிரஸ் கட்சி பிளவுற்று போட்டியிட்ட போதும் பாண்டிச்சேரியில் வாழ்கின்ற தமிழர்கள் இரண்டு காங்கிரஸ் கட்சிகளுக்கும்தான் தமது வாக்கை வழங்கினார்கள். அங்கே அதிமுகவாலோ, திமுகவாலோ ஆட்சி அமைக்க முடியவில்லை.

இதற்கு காரணம் அங்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மக்களோடு நெருக்கமாக இருப்பதுதான். அங்கே கொள்கைகள் பற்றியெல்லாம் அக்கறை இல்லை. இதே போன்ற நிலைதான் தமிழ்நாட்டிலும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி! தவறான தகவலுக்கு வருந்துகிறேன். ஆனால் அவர்கள் பிரிந்தாலும் சேர்ந்தாலும் காங்கிரஸ் கட்சிதான். மூப்பனார் பிரிந்து கட்சி அமைந்த போதும், அது காங்கிரஸ்தான்.

இதிலேயே நீங்கள் ஒன்றைக் கவனியுங்கள். காங்கிரஸ் கட்சி பிளவுற்று போட்டியிட்ட போதும் பாண்டிச்சேரியில் வாழ்கின்ற தமிழர்கள் இரண்டு காங்கிரஸ் கட்சிகளுக்கும்தான் தமது வாக்கை வழங்கினார்கள். அங்கே அதிமுகவாலோ, திமுகவாலோ ஆட்சி அமைக்க முடியவில்லை.

இதற்கு காரணம் அங்கே காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மக்களோடு நெருக்கமாக இருப்பதுதான். அங்கே கொள்கைகள் பற்றியெல்லாம் அக்கறை இல்லை. இதே போன்ற நிலைதான் தமிழ்நாட்டிலும்.

 

 

உங்களது கருத்துடன் உடன் பட தயங்குகிறேன் சபேசன்.

 

தனி மனித செல்வாக்கு வேறு. கட்சி செல்வாக்கு வேறு.

 

எளிமையான ராமசாமிக்கு இருந்த தனி மனித செல்வாக்கு தான் அவரது கட்சியினை பதவிக்கு கொண்டு வந்தது.

 

அதே போல, கொடை வள்ளலான எம்ஜிஆர் உடைய தனி மனித செல்வாக்கு தான், திமுக இருந்து வெளியே அனுப்பப் பட்ட போதும் புது கட்சி அமைத்து ஆட்சியினை பிடிக்க முடிந்தது.

 

எளிமையான காமராஜரின் தனி மனித செல்வாக்கினால் தான் காங்கிரஸ் தமிழ் நாட்டில் கடைசியாக ஆட்சியினைப் பிடித்தது.

 

எச்சிக் கையினால் காகம் விரட்டத் தயங்கிய சிவாஜி கணேசனால் தமிழ் நாட்டில் ஒரு தொகுதியினை கூட வெல்ல முடியவில்லை. ஆந்திராவில் NTR புது கட்சி அமைத்து ஆட்சியினை பிடித்தார்.

 

மக்கள் விபரமானவர்கள். ஒருவரின் தகுதி அறிந்து தான் வாக்கு அளிக்கின்றனர். இந்த வகையில் 'கொதியர்' விஜய காந்த் அடுத்த முறை மண் கவ்வுவார்.

 

ஆந்திராவில், மரணம் அடைந்த ரெட்டி யின் தனி மனித செல்வாக்கு தான் அவரை அசைக்க முடியாத தலைவராக்கியது. காங்கிரஸ் அவரைப் பயன் படுத்தியது.

 

நேரு, இந்திரா, ராஜீவுக்கு இருந்ததும் தனி மனித செல்வாக்கு. ஆனால் அது இனிமேல் சோனியா, ராகுல் வசம் இருக்கப் போவதில்லை. (தவறாக பயன் படுத்தி இழந்து விட்டனர். இது பிரியங்கா வந்தால் மீண்டும் வரலாம்).

 

பிரிட்டனின் தட்சர், டோனி பிளையர் முதல், அமெரிக்காவின் பில் கிளிண்டன் வரை தனி மனித கவர்ச்சிதான் அரசியல்.

 

கட்சி எல்லாம் அவர்கள் பின்னால் தான்.

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மக்களோடு நெருக்கமாக இருக்கின்றார்கள் என்று நான் சொல்வதும் தனிமனித செல்வாக்கு என்று நீங்கள் சொல்வதும் ஒன்றுதான்.

இதுதான் அங்கே உள்ள நிலை. எத்தனையோ தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் மக்களோடு நெருங்கிப் பழகி தனிமனித செல்வாக்கோடு இருக்கிறார்கள். அத்தோடு காலம் காலமாக "கை" மீது குத்திப் பழக்கப்பட்ட பெருசுகளும் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு என்று தமிழ்நாட்டில் ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. இது மதிமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகளை விட சற்று அதிகம் என்பது வருத்தப்பட வைக்கும் செய்திதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மக்களோடு நெருக்கமாக இருக்கின்றார்கள் என்று நான் சொல்வதும் தனிமனித செல்வாக்கு என்று நீங்கள் சொல்வதும் ஒன்றுதான்.

இதுதான் அங்கே உள்ள நிலை. எத்தனையோ தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் மக்களோடு நெருங்கிப் பழகி தனிமனித செல்வாக்கோடு இருக்கிறார்கள். அத்தோடு காலம் காலமாக "கை" மீது குத்திப் பழக்கப்பட்ட பெருசுகளும் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு என்று தமிழ்நாட்டில் ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. இது மதிமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகளை விட சற்று அதிகம் என்பது வருத்தப்பட வைக்கும் செய்திதான்.

 

இல்லை ஐயா, இல்லை.

 

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்கிறார்கள் எனில், அந்த கட்சி அல்லவா பதிவிக்கு வந்து இருக்க வேண்டும்.

 

ராமசாமி மக்களுக்கு நெருக்கமாக இருந்த படியால் தான், அவர் வேறு கட்சி அமைத்த போதும் மக்கள் ஆதரவு இருந்தது.

 

மூப்பனார் தனது மக்கள் ஆதரவினால் தான் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி அமைத்து, பல தொகுதிகள் வென்று, காங்கிரசினை வீழ்த்தினார்.

 

எனவே தனி மனித செல்வாக்கு தான் எல்லாம். கட்சி பின்னால் தான்.

சீமானுக்கு அகவை 40 முதல் 45க்குள் இருக்கும். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவரைப் பற்றி எனக்கு தெரியும் பக்கத்து   ஊர்பையனாக....

 

தமிழகத்தில் எந்த அளவுக்கு திருமாவளவனுக்கு ஆதரவு இருக்கிறதோ அதே அளவு கடுமையான எதிர்ப்பும் இருக்கிறது. வைகோவுக்கு தெலுங்கர் என்ற அடையாளமும் திருமாவளவனுக்கு சாதியத் தலைவர் என்ற அடையாளமும் அவர்களை ஒரு எல்லைக்குமேல் வளரவிடாது. இந்த இரண்டும் இல்லாதது சீமானுக்கு ஒரு சாதகமான அம்சம்.

 

கலைஞர் பெயர் அளவுக்கதிமாக கெட்டுப் போயுள்ளது, முந்தைய ஆட்சியில் ஊராட்சித் தலைவர்,கவுன்சிலர், எம்எல்ஏ, எம்பி என ஆள் ஆளுக்கு செய்த அட்டூழியங்களால் மக்கள் திமுக மீது வெறுத்துப் போயிருந்தனர். இன்னும் கூட அந்த வெறுப்பு இருக்கிறது. அதனாலேயே அதிமுக வென்றது. தமிழ் நாட்டு அரசியலில் விருப்பு ஓட்டுகளை விட வெறுப்பு ஓட்டுக்களே தொகுதி வெற்றியை தீர்மானிக்கும். முந்தைய ஜெயலலிதா காலங்களில் தேவர் கட்சி என்று அழைக்கபப்ட்ட அதிமுக இந்த முறை தென் தமிழக தலித் மக்களிடமும் ஓரளவு செல்வாக்குடன் திகழ்கிறது. தற்போதுள்ள நிலையில் அதிமுகவை வெறுப்பதற்கு மின்வெட்டைத் தவிர்த்து வேறு காரணம் ஏதுமில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இது சரி செய்யப்பட்டால் அதிமுகவே அதிக நாடாளுமன்ற தொகுதிகளை வெல்லும். இதை தவிர்க்க திமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும்.

 

தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் காங்கிரசுக்கு இரண்டு முதல் ஐந்து சதவீத வாக்கு வங்கி உள்ளது(தனிப்பட்ட மனிதர்களால்) . சாதாரண ஓட்டுப்போடும் மக்களைப் பொறுத்தவரையில் காங்கிரசைப் பற்றிய கருத்து என்பது அது சார்ந்திருக்கும் கட்சியை பொறுத்தது. சீமானின் பேச்சு எல்லாரையும் சென்றடைகிறது. எல்லாருக்கும் அவர் மீது ஒரு நல்ல மதிப்பு இருக்கிறது.. ஆனால் அது அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. நாளைக்கே ஜெயலலிதா சீமானைக் கைது செய்தாலும் கூட ஜெயலலிதா வெற்றி வாய்ப்பில் எந்தவித பாதிப்பும் வந்து விடாது.  ஆனால் எதிர்காலத்தில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறக் கூடிய எல்லாத் தகுதிகளும் அவருக்கு உள்ளது.

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மக்களோடு நெருக்கமாக இருக்கின்றார்கள் என்று நான் சொல்வதும் தனிமனித செல்வாக்கு என்று நீங்கள் சொல்வதும் ஒன்றுதான்.

இதுதான் அங்கே உள்ள நிலை. எத்தனையோ தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் மக்களோடு நெருங்கிப் பழகி தனிமனித செல்வாக்கோடு இருக்கிறார்கள். அத்தோடு காலம் காலமாக "கை" மீது குத்திப் பழக்கப்பட்ட பெருசுகளும் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு என்று தமிழ்நாட்டில் ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. இது மதிமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகளை விட சற்று அதிகம் என்பது வருத்தப்பட வைக்கும் செய்திதான்.

 

 

முதலில்  நாம் யார்??

நமக்காக  எமது ரத்த உறவுகள்

பணபலம்

ஆள்பலம்

சாணக்கியம்

வரலாறு ........என்று இருந்த ஒரு கட்சியை கட்டுக்காசிழக்கச்செய்து

வரலாற்றிலேயே  இல்லாதபடி தூக்கி  எறிந்து

பாடம்  புகட்டினார்கள்

அதனுடன் சேர்ந்து  நின்றவர்களையும்

வாழ்வில் சந்திக்காத தோல்வியையும்

எதிர்பார்க்காத பாடத்தையும் கொடுத்து

வரலாற்றில் பதிந்தார்கள்.

 

ஆனால்  நீங்களோ

உங்களுக்கு கிடைக்கக்கூடிய

வெறும் தனிமனித  வெற்றிக்காக

அவர்களுக்கு நன்றி  கூறுவதற்கு கூட வேண்டாம்

தீமை செய்கிறீர்கள்

தூற்றி  திரிகிறீர்கள்.......

 

தொடருங்கள்

நீங்கள்  வென்று விட்டீர்கள் என நாம் உங்களை  வாழ்த்தும்வரை.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.