Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது- விக்னேஸ்வரனுக்கு நாம் தமிழர் கட்சி பதில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத் தலைவர் என்னும் பட்டத்தை சீமான் ஒருபோதும் எடுக்க இல்லை. அது மக்களால் வழங்கப்படும் உன்னதமான தகுதி, தயவு செய்து அதனைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.

  • Replies 66
  • Views 4.4k
  • Created
  • Last Reply

முதலில் சீமானை அடுத்த தேசியத்தலைவர் என்று இங்கு (யாழ்களத்தில்) யாரும் எழுதவில்லை. அவரும் அதை சொல்லவில்லை. தமிழகத்திற்கு 2020 இல் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரும் என்பதுதான் அவர்கள் சொல்லிவருவது. இல்லாததும், பொல்லாததுமான ஒன்றைச் சொல்லி விவாதத்தை வளர்க்காதிங்கப்பா.. :huh:

தமிழகம் அவர்களது அரசியல்.. சீமானால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் தமிழகத்து சிறப்பு முகாம்களிலும் அகதி முகாம்களிலும் வாடும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவை அளிப்பதில் ஒரு செயலாக்கத்தையாவது காட்டி நம்பிக்கையை வெளிப்படுத்தினால் நல்லதுதானே?

விக்ணேஸ்வரனோ.. எவரோ.. இன்றைய நிலையில் இலங்கை அரசியல் அமைப்புகளுக்கு விசுவாசமாவே தேர்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.. பதியேற்கவும் வேண்டும். இது யாபேருக்கும் தெரிந்த விடயம். அவர் வாக்குகளின் விகிதத்தைப் பொறுத்து சிலவற்றை செய்வோம் என்கிறார்.. அது பொறுத்திருந்து பார்க்கத்தக்கது.

மற்றும் அவர் தமிழர் கூட்டமைப்பு வேட்பாளராக கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தோடேயே போட்டியிடுகிறார்.. ஆகவே இங்கே கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது கூட்டமைப்பே தவிர விக்ணேஸ்வரன் கிடையாது.

குவேனி கையறு நிலையில் 'மென்டலாக' விஜயனால் சிதைக்கப்பட்டிருந்தால் எப்படி சுயமாக முடிவெடுப்பாள்? :huh:

அதனால்தான் விஜயனால் கைவிடப்பட்ட பிறகு குவேனியைக் கல்லெறிந்து கொன்றார்களாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்னதான் குத்தி முறிந்தாலும், அண்ணன் சீமானின் முக்கியத்துவத்தை குறைத்துவிட முடியாது. இன்று விக்கினேஸ்வரனைவிட, சம்பந்தரை விட, அண்ணன் சீமானுக்குதான் செல்வாக்கு. அவரை தேசிய தலைவர் என்று சொல்வதில் தவறு ஏதுமில்லை.

லூசு டக்ளசை ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைக்கும் போது எங்கே போனீர்கள்??

விக்னேஸ்வரன் அவர்கள் விட்ட தவறு இதற்கு மறுப்பு வெளியிட்டதுதான். ஆயினும் சொல்லவேயில்லை என்று அவர் சொல்லவில்லை. கணவன் மனைவியை உதாரணத்திற்கு எடுத்ததை அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நானும் சொல்கிறேன். கணவன் மனைவிக்குள்தான் பிரச்சனை. விஜயனிற்கும் குவேனிக்கும்தான் பிரச்சனை. அல்லது விஜயனுக்கும் பாண்டிநாட்டு தமிழ் இளவரசிக்கும்தான் பிரச்சனை.

தமிழ்நாட்டு அண்ணன் தங்கைக்காக ஓடிவரத்தான் வேண்டும். அது அவன் கடமை. ஆனால் முடிவை குவேனி எடுக்கட்டும்.

என்ன உதாரணத்தில் கணவன் -மனைவி என சொன்னார் என வாசித்து கிரகித்து எழுதவும். மறுப்பு அறிக்கை விட்டதால் தான் யார் புகுந்து விளையாடினார்கள் என்பதை புரிந்து கொள்ளக் கூடியததாக இருந்தது.சீமான் அவசரப்பட்டு விட்ட அறிக்கைக்கு மன்னிப்பு கோரலாம்.கொளுவி விட்டு கூத்து பார்ப்பவர்களை மக்கள் இனம் காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் அவர்களது அரசியல்.. சீமானால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் தமிழகத்து சிறப்பு முகாம்களிலும் அகதி முகாம்களிலும் வாடும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவை அளிப்பதில் ஒரு செயலாக்கத்தையாவது காட்டி நம்பிக்கையை வெளிப்படுத்தினால் நல்லதுதானே?

விக்ணேஸ்வரனோ.. எவரோ.. இன்றைய நிலையில் இலங்கை அரசியல் அமைப்புகளுக்கு விசுவாசமாவே தேர்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.. பதியேற்கவும் வேண்டும். இது யாபேருக்கும் தெரிந்த விடயம். அவர் வாக்குகளின் விகிதத்தைப் பொறுத்து சிலவற்றை செய்வோம் என்கிறார்.. அது பொறுத்திருந்து பார்க்கத்தக்கது.

மற்றும் அவர் தமிழர் கூட்டமைப்பு வேட்பாளராக கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தோடேயே போட்டியிடுகிறார்.. ஆகவே இங்கே கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது கூட்டமைப்பே தவிர விக்ணேஸ்வரன் கிடையாது.

கூட்டமைப்பா பேட்டியளித்தது? அவர் தானே. தவிர அவரே தான் சொன்னதை வழமையான இந்துவின் பாணியில் திரித்து எழுதியிருக்கின்றது என்று சொல்லும்போது, இந்தக் கதையே தேவையில்லைத்தானே! சிறப்பு முகாம்களில் உள்ள மக்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற உங்களின் வருத்தம் நியாயமானது. ஆனால் புலம்பெயர் தேசத்தில் இருந்து ஒருவர் கூட அந்த மக்களுக்கு ஒரு சதத்தையாவது கொடுத்து நம்பிக்கையைக் கட்டியெழுப்பவில்லையே. ஆனால் புத்தி சொல்ல மட்டும் கிளம்பி விடுவார்கள். ஏதோ சீமானோ, மற்றவர்களோ இவர்களுக்கு ஏவல் செய்ய இருப்பது போல நினைப்பில்

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் புலிகள் காசு கேட்ட போதே ஓடி ஒழித்தவர்கள் இப்போ மட்டும் காசு கொடுப்பார்களா? யாராவது இவர்களுக்கு தாம்பாழத்தில் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள்.தானாக எதையும் செய்ய மாட்டார்கள்.

நன்றி சகோதரி...இதுக்கை வந்து அறிவுறரை சொல்லுறோம் என்று நஞ்சைக் கக்கிற கூட்டம் தான் அதிகம்....முந்தி தேசிய தலைவர கொச்சை படுத்திய ஆக்கள் தான் இப்ப சீமான் அண்ணாவின் வளர்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கொக்கரிக்கினம்...நாளுக்கு ஒரு பூனைப் பெயரில் வந்து எழுதுவது..பிறக்கு கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் ஆக்களைக் காணக் கிடைக்காது..பிறக்கு புது ஜடியில வருவினம்...

விக்னேஸ்வரன் அவர்கள் விட்ட தவறு இதற்கு மறுப்பு வெளியிட்டதுதான். ஆயினும் சொல்லவேயில்லை என்று அவர் சொல்லவில்லை. கணவன் மனைவியை உதாரணத்திற்கு எடுத்ததை அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நானும் சொல்கிறேன். கணவன் மனைவிக்குள்தான் பிரச்சனை. விஜயனிற்கும் குவேனிக்கும்தான் பிரச்சனை. அல்லது விஜயனுக்கும் பாண்டிநாட்டு தமிழ் இளவரசிக்கும்தான் பிரச்சனை.

தமிழ்நாட்டு அண்ணன் தங்கைக்காக ஓடிவரத்தான் வேண்டும். அது அவன் கடமை. ஆனால் முடிவை குவேனி எடுக்கட்டும்.

முடிவைக் குவேனி எடுக்க வேண்டும் என்று தானே அவர்களும் சொல்கிறார்கள்? ஒரு சர்வசன வாகெடுப்பு நாடாத்தி தமிழ் ஈழமக்கள் தமது தீர்ப்பை வழங்கட்டும் என்று தானே சொல்கிறார்கள். அது தானே ஜனனாயகம்? இடையில் விக்கினேசுவரன் எதற்கு பிதற்றுகிறார்? பின்னர் தடுமாறுகிறார்? அவருக்குச் சொல்லச் சொன்னதை சொல்லி விட்டு பிறகு ஏன் தடுமாற்றம் ? அவரின் கூற்று தமிழ்நாட்டில் காங்கிரசுக்கும் களம் அமைத்துக் கொடுக்கவே சொல்லப்பட்டது. அடுத்த இந்தியத் தேர்தலை மையமாக வைத்து சொல்லப்பட்டது.

மக்கள் எதிர்ப்பைக் கண்டு அஞ்சி விட்டரா? அப்படியாயின் தேர்தலின் பின் வரும் எதிர்பை எப்படிச் சமாளிக்கப் போகிறார்? கூட்டமைப்பில் பலர் இன்று தேர்தல் கருதியே அமைதி காக்கிறார்கள்.தேர்தல் முடிந்ததும் விக்கியின் அரசியல் தெரிய வரும். 

அடுத்த இந்திய மத்திய அரசு ஒரு கூட்டரசாக வருவதே எமக்கு நல்லது.தமிழ் நாட்டில் காங்கிரசு படு தோல்வி காண வேண்டும். இந்திய ஆளும் வர்க்கம் விக்கியைக் கொண்டு தமிழ் நாட்டு அரசியல் நிலமைகளைக் கையாள நினைக்கிறது.அதனையே கிந்து முதல் ஆனந்தவிகடன் வரை செய்கிறது. இதில் எம்மைப் பாவிப்பது இந்திய மத்திய ஆளும் கும்பலே அன்றி தமிழநாட்டின் அரசியல் வாதிகளோ மக்களோ அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் அவர்களது அரசியல்.. சீமானால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் தமிழகத்து சிறப்பு முகாம்களிலும் அகதி முகாம்களிலும் வாடும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவை அளிப்பதில் ஒரு செயலாக்கத்தையாவது காட்டி நம்பிக்கையை வெளிப்படுத்தினால் நல்லதுதானே?

நீங்கள் சொன்னவற்றை சீமான் ஏற்கனவே பேசியுள்ளார். திபெத் அகதிகளை பராமரிக்கும் விதத்துடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். செந்தூரனின் உண்ணாவிரதத்திலும் அவரது கவனம் இருந்துள்ளது..

ஆட்சி அதிகாரத்தை கொண்டிராத சிறு தலைவரிடம் இவ்வளவை எதிர்பார்க்கும் நீங்கள் அம்மாவிடமோ, ஐயாவிடமோதான் இந்தக் கோரிக்கையை வைக்கவேண்டும். அவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தவர்கள்.. அனுபவிப்பவர்கள்.

தனி ஈழமே தீர்வு என்று தீர்மானம் போட்டவர் அம்மா.. டெசோ மாநாடு போடுபவர் ஐயா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் அவர்கள் விட்ட தவறு இதற்கு மறுப்பு வெளியிட்டதுதான். ஆயினும் சொல்லவேயில்லை என்று அவர் சொல்லவில்லை. கணவன் மனைவியை உதாரணத்திற்கு எடுத்ததை அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நானும் சொல்கிறேன். கணவன் மனைவிக்குள்தான் பிரச்சனை. விஜயனிற்கும் குவேனிக்கும்தான் பிரச்சனை. அல்லது விஜயனுக்கும் பாண்டிநாட்டு தமிழ் இளவரசிக்கும்தான் பிரச்சனை.

தமிழ்நாட்டு அண்ணன் தங்கைக்காக ஓடிவரத்தான் வேண்டும். அது அவன் கடமை. ஆனால் முடிவை குவேனி எடுக்கட்டும்.

முடிவெடுக்கிற கத்தரிக்காய் உரிமைக்ககத்தானே இத்தனைகளை இழந்து போராடினோம் .........
போராடிகொண்டிருக்கிறோம்.
இப்ப என்ன புதுசா ??
வெறி  முறிந்தவர்கள் மாதிரி..........
குவேனி முடிவெடுக்கட்டும் .............. ம்ம் ...ம்ம் ..ம். இழுக்குறீங்கள்?
அப்ப இவளவு நாளும் முடி எடுக்காமல்தான் போராடினோமா?
 
இனிமேல்தான் முடிவேடுக்கிறதா???
 
எடுத்து முடிய விகினேச்வரனை கேட்டு சொல்லுங்கள்.... என்ன முடிவு எடுத்திருக்கிறார் என்று.

கூட்டமைப்பா பேட்டியளித்தது? அவர் தானே. தவிர அவரே தான் சொன்னதை வழமையான இந்துவின் பாணியில் திரித்து எழுதியிருக்கின்றது என்று சொல்லும்போது, இந்தக் கதையே தேவையில்லைத்தானே! சிறப்பு முகாம்களில் உள்ள மக்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற உங்களின் வருத்தம் நியாயமானது. ஆனால் புலம்பெயர் தேசத்தில் இருந்து ஒருவர் கூட அந்த மக்களுக்கு ஒரு சதத்தையாவது கொடுத்து நம்பிக்கையைக் கட்டியெழுப்பவில்லையே. ஆனால் புத்தி சொல்ல மட்டும் கிளம்பி விடுவார்கள். ஏதோ சீமானோ, மற்றவர்களோ இவர்களுக்கு ஏவல் செய்ய இருப்பது போல நினைப்பில்

இது உங்களது அறியாமை.. பிறேமனில் கந்தசாமி தம்பதிகள். ஊரில் ஆங்கிலம் கற்பித்தவர். மனைவியும் ஆசிரியர். தமிழும் ஆங்கிலமும் இங்குள்ள தமிழ் பிள்ளைகளுக்கு ரியூசன் கொடுத்து அந்த காசை தொடர்ச்சியாக சில வருடங்கள் தமிழகத்திலுள்ள தமிழ் அகதி முகாமில் உள்ளவர்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கியதை நான் அறிவேன்.. தற்போது அவர்களது முதுமை காரணமாக இடைநிறுத்தியிருக்கலாம்.

இவ்வாறு ஆர்வமுள்ளவர்கள் இருக்கலாம். அதனால் 'ஆனால் புலம்பெயர் தேசத்தில் இருந்து ஒருவர் கூட அந்த மக்களுக்கு ஒரு சதத்தையாவது கொடுத்து நம்பிக்கையைக் கட்டியெழுப்பவில்லையே' எனக் கூறுவது தவறு.

இதற்கு நான் ஏற்கெனவே பதிலளித்துவிட்டேன்.. எனினும் எமக்காக ஒருவர் போராடப் போகிறாராம்.. எந்த நம்பிக்கையில் அவரை ஆதரிப்பது.. சீமான் எமக்காக மேடைகளில் ஊர்வலங்களில் முழங்கினாலும்.. அவர் வாழும் தமிழகத்திலேயாவது எமது மக்களுக்காக அவரால் என்ன செய்ய முடிந்தது நாம் அவர்மீது நம்பிக்கை வைக்க?!

மேற்குலகம் பின்பற்றும் ஜனநாயக அரசியலில் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதே அடிநாதம். அந்த வகையிலேயே வட்டுக்கோட்டை தீர்மானமும் அதையொட்டிய தேர்தல் விஞ்ஞாபனமும் அதற்கான மக்கள் ஆணையும் முன்னிலை பெறுகின்றன. அதை நீங்களோ நானோ தட்டிக்கழிக்க முடியாது. தனி ஈழமே தீர்வு என்பது மக்கள் வழங்கிய ஆணை..!

இன்று மறுபடி ஒரு தேர்தல் வரப்போகிறது. நாளை விகனேஸ்வரன் முதலமைச்சர் ஆகப்போவது ஏறக்குறைய முடிவான ஒன்று. இன்றைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதே நாளைய கோட்பாடாக இருக்கப்போகிறது. இதில் எவ்வளவு பெரிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உள்ளது என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

மற்றது, புலிகள் பேச்சுவார்த்தைக்குச் சென்ற விடயம் குறித்துப் பேசியிருந்தீர்கள்.. பேச்சுவார்த்தைக்குப் போவதால் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டதாக அர்த்தம் கிடையாது. ஒரு உதாரணத்துக்கு இங்கே குபெக்கைதனி நாடாகப் பிரிக்கவேண்டும் எனக் கோரும் குபெக்வா கட்சி மாநிலத் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது. அதற்காக அதன் தனி குபெக் கொள்கையைக் கைவிட்டது என்று அர்த்தம் கிடையாது.

பச்சை தீர்ந்து போச்சு இசை... :D

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்களது அறியாமை.. பிறேமனில் கந்தசாமி தம்பதிகள். ஊரில் ஆங்கிலம் கற்பித்தவர். மனைவியும் ஆசிரியர். தமிழும் ஆங்கிலமும் இங்குள்ள தமிழ் பிள்ளைகளுக்கு ரியூசன் கொடுத்து அந்த காசை தொடர்ச்சியாக சில வருடங்கள் தமிழகத்திலுள்ள தமிழ் அகதி முகாமில் உள்ளவர்களுக்கு நேரடியாகச் சென்று வழங்கியதை நான் அறிவேன்.. தற்போது அவர்களது முதுமை காரணமாக இடைநிறுத்தியிருக்கலாம்.

இவ்வாறு ஆர்வமுள்ளவர்கள் இருக்கலாம். அதனால் 'ஆனால் புலம்பெயர் தேசத்தில் இருந்து ஒருவர் கூட அந்த மக்களுக்கு ஒரு சதத்தையாவது கொடுத்து நம்பிக்கையைக் கட்டியெழுப்பவில்லையே' எனக் கூறுவது தவறு.

இதற்கு நான் ஏற்கெனவே பதிலளித்துவிட்டேன்.. எனினும் எமக்காக ஒருவர் போராடப் போகிறாராம்.. எந்த நம்பிக்கையில் அவரை ஆதரிப்பது.. சீமான் எமக்காக மேடைகளில் ஊர்வலங்களில் முழங்கினாலும்.. அவர் வாழும் தமிழகத்திலேயாவது எமது மக்களுக்காக அவரால் என்ன செய்ய முடிந்தது நாம் அவர்மீது நம்பிக்கை வைக்க?!

புலம்பெயர் தேசத்தவர் புடுங்கிக் கிழித்திருந்தால் சீமான் உதவவில்லையே என்ற கேள்வியே வந்திருக்காதல்லவா. ஒரு சதமும் கொடுக்கவில்லையே என்பது, ஒரு வசதி வாய்ப்பினையும் அந்த மக்கள் பெற்றிருக்கவில்லை என்பதன் வெளிப்பாடு. இயக்கம் சண்டைக்குப் போனபோது வாசலில் நின்று தண்ணி கொடுத்ததை எல்லாம் போராட்டத்தின் மிகப்பெரிய உதவியாக் கணக்கிடுவது போலுள்ளது. சீமான் இடம்பெயந்த மக்களுக்கு என்ன வகையான உதவியை வழங்கிட முடியும்? பொருளாதாரம், சட்ட உதவி??

பொருளாதார உதவி நாங்கள் செய்ய வேண்டியது. பல நாம் தமிழர் அமைப்புக்களின் கிளைகள் கொட்டில்களில் தான் இயங்குகின்றன. அந்தளவு அவர்களின் பொருாளாதார வளம் உள்ளது. அங்கே செலவளிக்கின்றார்னகள், இங்கே செலவளிக்கின்றார்கள் என்று கேள்வி யாராவது கேட்டால் சுட்டு விரல் உங்களை நோக்கித் திருப்பிக் கொள்ளுங்கள்.

சட்ட உதவி- அவர்களுக்கு ஆதரவான போராட்டங்களை அவர்கள் நடத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள். உண்மையில் உங்களைப் போன்றவர்களின் இப்படியான கருத்துக்களை அவர்கள் படிக்கும்பட்சத்தில் நிச்சயம் மனவருத்திற்கு உள்ளாவார்கள். உங்களைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை வர வைக்க எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்பது வேதனைக்குரியது. ஏதோ நேரத்தைக் கடத்த எழுதிப் போய்விட்டுப் போகலாம். ஆனால் பொறுப்புணர்ச்சியற்ற இப்படியான செயற்பாடுகள் மற்றவர்களுக்குச் சோர்வையே ஏற்படுத்தும்.

உங்களுக்காக போராடுபவர்கள் நம்பிக்கை ஏற்படுத்துவது இருக்கட்டும். உங்களோடு வாழ வந்தவரை நம்பிக்கை ஏற்படுத்த என்ன கேட்டீர்கள்.....

விக்னேஸ்வரன் அவர்கள் விட்ட தவறு இதற்கு மறுப்பு வெளியிட்டதுதான். ஆயினும் சொல்லவேயில்லை என்று அவர் சொல்லவில்லை. கணவன் மனைவியை உதாரணத்திற்கு எடுத்ததை அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

நானும் சொல்கிறேன். கணவன் மனைவிக்குள்தான் பிரச்சனை. விஜயனிற்கும் குவேனிக்கும்தான் பிரச்சனை. அல்லது விஜயனுக்கும் பாண்டிநாட்டு தமிழ் இளவரசிக்கும்தான் பிரச்சனை.

தமிழ்நாட்டு அண்ணன் தங்கைக்காக ஓடிவரத்தான் வேண்டும். அது அவன் கடமை. ஆனால் முடிவை குவேனி எடுக்கட்டும்.

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குவேனிக்கு பேச்சுரிமை வேண்டும் என்று கேட்கிறது. அது கிடைத்தபின்னர் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்கும். 1977 ஆண்டே விவாகரத்து கேட்டாயிற்று. ஆனால் இலங்கை அரசு குவேனியின் வங்கீலை சந்திக்கும் உரிமையை மறுத்துவருகிறது. வக்கீலை உள்ளே விட்டவுடன் குவேனி கோட்டில் நின்று விவாகரத்து கேட்பா. இதனால்த்தான் அரசு குவேனியை தொடர்ந்து 6ம் திருத்தம் எனற தடுப்பு காவலில் வைத்திருக்கு. 

புலம்பெயர் தேசத்தவர் புடுங்கிக் கிழித்திருந்தால் சீமான் உதவவில்லையே என்ற கேள்வியே வந்திருக்காதல்லவா. ஒரு சதமும் கொடுக்கவில்லையே என்பது, ஒரு வசதி வாய்ப்பினையும் அந்த மக்கள் பெற்றிருக்கவில்லை என்பதன் வெளிப்பாடு. இயக்கம் சண்டைக்குப் போனபோது வாசலில் நின்று தண்ணி கொடுத்ததை எல்லாம் போராட்டத்தின் மிகப்பெரிய உதவியாக் கணக்கிடுவது போலுள்ளது. சீமான் இடம்பெயந்த மக்களுக்கு என்ன வகையான உதவியை வழங்கிட முடியும்? பொருளாதாரம், சட்ட உதவி??

பொருளாதார உதவி நாங்கள் செய்ய வேண்டியது. பல நாம் தமிழர் அமைப்புக்களின் கிளைகள் கொட்டில்களில் தான் இயங்குகின்றன. அந்தளவு அவர்களின் பொருாளாதார வளம் உள்ளது. அங்கே செலவளிக்கின்றார்னகள், இங்கே செலவளிக்கின்றார்கள் என்று கேள்வி யாராவது கேட்டால் சுட்டு விரல் உங்களை நோக்கித் திருப்பிக் கொள்ளுங்கள்.

சட்ட உதவி- அவர்களுக்கு ஆதரவான போராட்டங்களை அவர்கள் நடத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள். உண்மையில் உங்களைப் போன்றவர்களின் இப்படியான கருத்துக்களை அவர்கள் படிக்கும்பட்சத்தில் நிச்சயம் மனவருத்திற்கு உள்ளாவார்கள். உங்களைப் போன்றவர்களுக்கு நம்பிக்கை வர வைக்க எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்பது வேதனைக்குரியது. ஏதோ நேரத்தைக் கடத்த எழுதிப் போய்விட்டுப் போகலாம். ஆனால் பொறுப்புணர்ச்சியற்ற இப்படியான செயற்பாடுகள் மற்றவர்களுக்குச் சோர்வையே ஏற்படுத்தும்.

உங்களுக்காக போராடுபவர்கள் நம்பிக்கை ஏற்படுத்துவது இருக்கட்டும். உங்களோடு வாழ வந்தவரை நம்பிக்கை ஏற்படுத்த என்ன கேட்டீர்கள்....தா

கருத்தாடுவதற்கும் விதண்டாவாதம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. விதண்டாவாதங்களையும் நினைத்தால் புடுங்கலாம்.. வீண் நேரம் என்பதால் தவிர்த்துக் கொள்ளுகிறேன்.

Edited by sOliyAn

விக்னேஸ்வரனே விளக்கம் கொடுத்துவிட்டார். சீமானும் கொஞ்சம் தப்பாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாடுவதற்கும் விதண்டாவாதம் செய்வதற்கும் வித்தியாசம் உண்டு. விதண்டாவாதங்களையும் நினைத்தால் புடுங்கலாம்.. வீண் நேரம் என்பதால் தவிர்த்துக் கொள்ளுகிறேன்.

தவிர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களைப் பற்றி இழிவாகப் பேசுவதையும் நீங்கள் விவாதம் என்று சொல்லிக் கொள்வதையும்.....

குவேனிக்கு மட்டும்தான் விவாகரத்து கேட்கும் உரிமை இருக்கு என்று விளங்க வைக்க முயல்வோர், குவேனிக்கு தனது விவாகரத்தை கோரும் உரிமை மறுக்கப்படுகிறது என்றதை எழுதுவதில்லை ஏன்?

வடக்கு கிழக்கு பிரிந்து போக வாகெடுப்பு நிகழ்தும்படிதான் பலதவைகள் தமிழக அரசியல் வாதிகள் கோரினார்கள். அது நடைபெறவில்லை.

(விக்கினேஸ்வரன் வெளிவிட்ட மறுப்பு அறிக்கையை விளங்காதவர்கள்தான் இந்த விவகாரத்தை குவேயின் விவாகரத்தாக சோடிக்கிறார்கள். அதை விக்கினேஸ்வரன் சொல்லவில்லை. இது மாற்றுக்கருத்துக்களின் சோடனை.ஆனால் 1977 ஆண்டைய வட்டுக்கோட்டை தீர்மானத்தின் முடிவு இனி அழிக்கப்பட முடியாத மக்கள் ஆணை என்பதால் அப்படி ஒரு விவாகரத்து வாக்கெடுப்பு அவசியமும் இல்லை).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.