Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செஞ்சோலை விஜயம்

Featured Replies

அப்பு, ராசா வன்னியை நோக்கி மக்களை இடப்பெயர புலிகள் என்ன என்ன செய்தார்கள் என்பதனை எனக்கு கூறாதீர்கள். அப்போது அந்த மண்ணில்தான் நான் இருந்தேன். வானத்தை நோக்கிச் சுட்டும் அந்த மண்ணை விட்டுப் பிரிய மனம் இல்லாத முதியவர்களை புலிகள் என்ன செய்தார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். (இவ்வளவும் தெரிந்த பின்னரும் புலிகளுக்கு ஆதரவாகத்தானே நாம் இருந்தோம்.)

நீங்கள் அந்த மண்ணில் இருந்த போது புலிகள் வானத்தை நோக்கி சுட்டதை மட்டும் கண்டீர்கள். ஆஸ்பத்திரிகள் வரை செல்கள் வந்து வீழுந்து வெடித்தையும்,  150,000 மக்கள் இறந்ததையும் நீங்கள் காணவில்லை. ஆச்சரியமான கண்பார்வையும், குண்டுகளில் இருந்து தப்பிக்கும் பலம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் புலிகள் வானத்தை நோக்கி சுட்டர்கள் என்றதையும் நீங்கள் அதை பார்த்ததையும் சொல்லத் தயாராக இருந்தீர்களானால் அது போதும் எங்களுக்கு.  நீங்கள் சொல்வதை அல்ல மற்றய பிழைப்புவாதிகள் சொல்லிவருகிறார்கள். ஏனெனில் பொய்யை சாட்சியமாக சொல்ல முயல்பவர்களுக்கு முன்னல் பின்னல் என்ன நடகிறது என்பதை அறிவது கஸ்டம்.

இதே புலிகளுக்கு வடபகுதியில் இருந்து 91 ஆம் ஆண்டுக்குப்பின்னர் இளையோர்கள் இணைய முன்வராததற்கு என்ன காரணம் என்று ஏன் உங்களால் ஆராய முடியாது? ஜெயசிக்குறு சமரின் முதுகெலும்பாக கிழக்கு மாகாண போராளிகளும் வன்னிப் போராளிகளுமே அதிகளவில் வீரச்சவாடைந்தார்களே இது தெரியுமா?

நீங்கள் புலிகளின் போராளிக்கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்றது நிச்சயமாக உண்மை. ஆனால் அதை நீங்கள் மட்டும் என்று நம்பி சந்தோசப்பட்டுவிட்டாதீர்கள். புலிகளின் பின்னர் காலம் என்று ஒன்று இல்லாமல் போகும் என்றதை அரசு கண்டுபிடித்த பின்னர் புலிகளின் சரித்திரம் பல புத்தகங்களாக வெளிவந்து விட்டது. எனவே நீங்கள் பத்தில் பதினொன்றுமட்டும்தான். ஜெய சுக்குறு மட்டும் அல்ல ஒரேஒரு போர். அந்த போர்களின் விபரததை யார் யார் எழுதப் போகிறார்களொ தெரியாது. ஆனாலும் கருணா தான் தலைமை வகித்ததிற்கு எப்படி ஆள் சேர்த்தார் என்பதை உங்களை விட புலிகள் சொன்னால் கொஞ்சம் நல்லதாக இருக்கும்.

இறுதி வரை போராடுவோம் என்று 2009 மே மாதம் தொடக்கத்தில் புலிகளின் குரல் வானொலி ஊடாக சவுண்டு விட்ட யோகி ஏன் சரணடைந்தார்? சிங்களவனை நம்பாதீர்கள் என்று அன்றில் இருந்து அனைவரும் கூறிவிட்டு பின்னர் எப்படி அதே சிங்களவனை நம்பி சரணடைய முற்பட்டார்கள்?

ஏன் ஐயா உங்களை நீங்கள் சீப் ஆக்குகிறீர்கள். புலிகளின் வானொலி புலிகளின் செய்தி பிரிவு. மேர்வின் சில்வாவும் நவநீதம் பிள்ளையும், கீதா குமார சிங்காவையும் திருமணம் செய்யத்தான் திரிகிறார். அவரை பற்றி அல்ல நாங்கள் கதைப்பது. நாங்கள் கதைக்க வருவது அரச குடும்பத்தை பற்றி என்பது புரிந்தால் எங்கள் அளவுக்கு உங்களையும் உயர்த்திவைத்து விவாதங்களை வைக்கலாம். இறுதிவரை போராடாமல் புலிகள் சரண் அடைந்தார்கள் என்றால் சரண் அடந்த பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்றதை நீங்கள் சொல்வீர்களா. அப்போ கருணாவும் இறிதிவரை போராடுவதாக சவுண்டுவிட்டாரா?

சரணடைந்த பின்னர் என்ன சிங்களம் செய்யும் என்று அன்றில் இருந்து நம்பினோமோ அதனைத்தான் இவர்களுக்கும் செய்திருப்பார்கள். இதற்காக நாம் அனுதாபப்படத்தான் முடியும்.

நீங்கள் சரண் அடைந்தவர்களுக்க அனுதாபப் படுவதையும், அவர்களுக்கு என்ன நடக்கும் என்று நம்பியதையும் பற்றி நீங்களும் ஒரு சரித்திரப்புத்தக்கம் எழுத வேண்டிய அவசரம் இல்லை. அது யாழில் எழுதுவோர் எல்லோருக்கும் தெரியும். ஆனால் "தாங்கள் தப்பிவிடுவோம்" என்ற மாயைக்குள்தான் அரச குடும்பம் மயங்கி நிற்கிறது. அவர்களுக்கு எதிராக விசாரணை வரும். அப்போது நீங்கள் இதே வசனத்தில் அந்த விசாரணை குழுவிடம் சொன்னால் மட்டும் மிகவும் நல்லது. யாழ் நிர்வாகம் கூட இப்படியான மனம் திறந்த சாட்சிகளை சேகரித்து வைத்து அரசை காப்பாற்ற துடிக்கும் "யாழின் மாற்றுக்கருத்துகளே" சரண அடைந்தவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்றதை பற்றி என்ன நினக்கிறார்கள் என்றதை கோடிட்டுக்குக்காட்டலாம். இதையேதான் நவநீதம் பிள்ளை இராணுவத்திடம் கேட்டா. இராணுவம் சொன்னமறுமொழிக்கும் நீங்கள் வந்து இதே வசனத்தில் கருத்து எழுதியிருந்திருக்கலாம்.

கே.பி.யை சிறிலங்கா அரசு கைது செய்து இன்றும் தனது கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருக்கின்றதே தவிர அவரை சுதந்திரமாக நடமாட விடவில்லை. அதேபோன்று நகுலன், ராம் போன்றவர்களும் படைத்தரப்பினரின் கண்காணிப்பில்தான் உலாவுகின்றனர் என்பதனை மறக்கக்கூடாது.

நாங்கள் எல்லாம் ஓடி ஒளிய வேண்டியதில்லை. எவ்வளவுதான் எழுதினாலும் ஒருவரும் திருந்துவதாகத் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தினை எழுதிக் கொண்டு இருப்பதனால் என்ன பயன்?

நீங்கள் ஓடி ஒழிய நினைத்து திரும்பி வந்திருந்தால் அதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. சில உண்ணிகள் மாடு செத்தாலும் களரமாட்டா. ஆனல் குளம் வற்றினால் அதன் பின்னர் அங்கேதான் இருந்து சாவேன் என்று கொக்குகள் அடம் பிடிப்பதில்லை. சில கொக்குகள் எப்ப ஓட என்று கணக்கு பார்த்துக்கொண்டிருக்கும். சில குளம் வற்றும் வரை சவுண்டுவிடும்.  பின்னர் அவையும் சவுண்டு விடாமல் பறந்து போகும்.

  • Replies 70
  • Views 4.1k
  • Created
  • Last Reply

மல்லை: இங்கு ஓட்டுகுழுக்கள் இலங்கை இராணுவம் தமிழர்களை கொல்லவில்லை என்று சொல்லுவதில்லை.... 1988க்கு பின் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு புலிகள் 40% பொறுப்பு...தான் தோன்றித்தனமாக இந்த போரை நீடித்து......

இதை ஏற்று கொள்ளதான் தேசிய-குத்தகை காரர்களுக்கு பிடிக்குது இல்லை...அவனில்...இவனில் பழியை போட்டு..புலியை புனிதமாக்குகிறார்கள் :)

உந்த லொஜிக் படி பார்த்தால் புலிகளை போராட தூண்டின தந்தை செல்வா, தொண்டமான், அஸ்ரப் எண்ட ஆக்கள் மேலை தான் நீங்கள் பழியை போட வேண்டும்...

அதென்ன 1988 ...?? ஏதாவது ஒண்டை குத்து மதிப்பாய் போட வேண்டியது...??

இந்திய படைகள் ஈழத்துக்கு வந்தது போல தான் பங்களாதேசுக்கும் போனவை... போய் எல்லாரும் ஆதரவாய் எண்டு நினைக்கும் போது முக்திபாகிணி போராளிகளையும் தலைமையையும் போட்டு தள்ளி விட்டு ஒரு ஆட்சியை பாக்கிஸ்தானுக்கு எதிராக கொண்டு வந்தது... இண்டைக்கு பங்களாதேசின் நிலைமை பாக்கிஸ்தானை விட கேவலம்... இதை தானே ஈழத்திலையும் எதிர்பாத்தனீங்கள்...??

  • கருத்துக்கள உறவுகள்

இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனையும் சந்தித்துள்ளார். (படங்கள்: ஜனாதிபதி ஊடக பிரிவு)

m03.jpg

ஒரு பதில் தேவை

இப்போ

இங்கு மகிந்த நிற்கின்றார்

எல்லோரும் சிங்கக்கொடி பிடிக்கிறார்கள்

இங்கு

புலிகள் குண்டுவைத்து 

ஏதாவது நடந்தால்

யாரைக்குறை  சொல்வோம்..............?????????????

ஒரு பதில் தேவை

இப்போ

இங்கு மகிந்த நிற்கின்றார்

எல்லோரும் சிங்கக்கொடி பிடிக்கிறார்கள்

இங்கு

புலிகள் குண்டுவைத்து 

ஏதாவது நடந்தால்

யாரைக்குறை  சொல்வோம்..............?????????????

நாய்க்கு எங்கை அடிச்சாலும் காலை தான் தூக்கும்...! :huh:

  • கருத்துக்கள உறவுகள்
இதில் இறந்தவர்கள் அப்பாவி மாணவ,மாணவிகள்.அவர்கள் போராட என்று போகவில்லை.தலைமைத்துவ பயிற்சி அது,இது என்று பலவந்தமாக பிடித்து செல்லப்பட்டவர்கள்.இங்கிருந்து கொண்டு அவர்கள் அப்படி பலவந்தமாக பிடித்து செல்லப்படவில்லை என்று எழுதினால் போல அது உண்மையாகி விடாது.பிள்ளைகளை பறி கொடுத்த மக்களுக்கும்,அங்கிருக்கும் மக்களுக்கும்,ஏன்  கூட்டிக் கொண்டு போனவர்களுக்குக் கூட எது உண்மை என்று தெரியும்
 
இது அப்பாவி மாணாக்கள் என தெரிந்தும்,அந்த அப்பாவி மாணாக்களை கொண்டதின் மூலம் இலங்கை அரசு பெரிய தவறு செய்துள்ளது.ஆனால் அதேயளவு பிழையை புலிகளும் அந்த மாணாக்களை பலவந்தமாக பிடித்துக் கொண்டு சென்றதன் மூலம் செய்துள்ளனர்.அது பத்தாமல் இந்த தலைமைத்துவ பயிற்சி பற்றி இணையத்தில் இலவச விளம்பரம் செய்து நடக்கும் இடம்,நடைபெறும் நேர‌ம் என்பவற்றை காட்டிக் கொடுத்தார்கள்.இவர்கள் அனைவருமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்
 
இப்படி சில விடயங்களில் புலிகள் பிழை விட்டுள்ளனர்.குற்றம் செய்தது இலங்கை அரசாயிருந்தாலும் அதைத் தூண்டி விட்டது புலிகளுக்கும்,புலம் பெயர் மக்களுக்கும் பெரும் பங்கு இருக்குது.
 
உந்த லொஜிக் படி பார்த்தால் புலிகளை போராட தூண்டின தந்தை செல்வா, தொண்டமான், அஸ்ரப் எண்ட ஆக்கள் மேலை தான் நீங்கள் பழியை போட வேண்டும்...

எனது ஆதங்கம் பிரபா சண்டையை தவிர்த்து வேறு ஒன்றும் செய்ய வில்லை என்பது...

இவனுகளை பற்றி எனக்கு தெரியாது.... செல்வா தொண்டை மானை பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது... சோனிகளை பற்றி கணக்கெடுக்க தேவையில்லை...

அதென்ன 1988 ...?? ஏதாவது ஒண்டை குத்து மதிப்பாய் போட வேண்டியது...??

இந்திய படைகள் ஈழத்துக்கு வந்தது போல தான் பங்களாதேசுக்கும் போனவை... போய் எல்லாரும் ஆதரவாய் எண்டு நினைக்கும் போது முக்திபாகிணி போராளிகளையும் தலைமையையும் போட்டு தள்ளி விட்டு ஒரு ஆட்சியை பாக்கிஸ்தானுக்கு எதிராக கொண்டு வந்தது... இண்டைக்கு பங்களாதேசின் நிலைமை பாக்கிஸ்தானை விட கேவலம்... இதை தானே ஈழத்திலையும் எதிர்பாத்தனீங்கள்...??

பிரபாவுக்கு தெரியும் தனக்கு சங்கு என்று...அது தான் இந்த போர்...தமிழர்களுக்காக இல்லை ...தனக்காக :)

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மூன்றுமே சாக்கடைகள் தான்.... இப்போது இலங்கையும் அய்க்கியம்

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மூன்றுமே சாக்கடைகள் தான்.... இப்போது இலங்கையும் அய்க்கியம்

விரும்பியோ விரும்பாமலோ நாங்கள் சர்வதேச பிரச்சினைகளுக்கிடையில் ஆடும் பொம்மைகள் ஆகி விட்டோம்.. என்னை கேட்டால் இதை விட சிறப்பாக வேறு யாராலும் நடந்து இருக்க முடியாது...

தலைவர் சாவடைந்தால் தமிழர்களுக்கு தீர்வு கட்டாயம் கிடைக்கும் எண்டு உணர்ந்து இருந்தால் அதையும் செய்திருப்பார்...

பால் குடிக்கே விளங்க கூடிய பிரச்சினை தலைவர் சரி எண்டு சொல்லி இருந்தால் உங்களை எல்லாம் காசு குடுத்து வாங்க சிங்களமும் சர்வதேசமும் தயாராக இருந்தது... இவ்வளவு காசை செலவளித்து அவரை அழிக்க அவங்கள் என்ன முட்டாள்களா...?? என்ன தலைவர் விற்க முன் வரவில்லை...

ஒருவேளை அவர் விற்று இருந்தால் அவரின் திறமைக்கு உலக பணக்காறர் வரிசயில் எப்படியும் முதல் 10 பேரில் ஒருவராக வந்திருப்பார்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பரப்பு. இப்படியே ஒய்யாரமாக இருந்து கொண்டு எதிர்வினையாற்றிக்கொண்டே இருங்கள். அவனவன் செய்வதனைச் செய்து கொண்டு இருப்பான்.

போரின் வடுவைச் சந்தித்த மக்களுக்குத்தான் கருத்துக் கூற உரிமை உண்டு. இன்று எதுவுமே இழந்து நாதியற்று இருக்கின்றவனுக்கு உங்கள் பசப்பு, சப்பைக் கொட்டும் வார்த்தைகளும் ஒன்றுக்குமே உதவாது.

கனவுலக சஞ்சாரத்தினை விட்டு விலகுவதாகவே இல்லை என்று அடம்பிடிக்கின்றீர்கள். என்றோ ஒருநாளைக்கு பட்டுத் தெறிந்தால் புரியும். அது விரைவில் உங்களுக்கும் நடக்கும். நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அது போராட்டம் தொடர்பாக மட்டும் என்றல்ல தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட நடக்கலாம். அப்போது இவற்றை எல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது எல்லாம் எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தால் பிறகு உங்களுக்கு வாழ்க்கையே இல்லாமல் போய்விடும்.

வடக்கு-கிழக்கு மக்கள் இன்று புலிகள் வர வேண்டும் என்றோ புலம்பெயர் தமிழர்கள் எங்களுக்காக போராடும்படி கேட்கவில்லை. மாறாக தம்மை நிம்மதியாக வாழ விட்டால் போதும் என்றே கூறி வருகின்றனர்.

ஒரு பதில் தேவை

இப்போ

இங்கு மகிந்த நிற்கின்றார்

எல்லோரும் சிங்கக்கொடி பிடிக்கிறார்கள்

இங்கு

புலிகள் குண்டுவைத்து 

ஏதாவது நடந்தால்

யாரைக்குறை  சொல்வோம்..............?????????????

இன்னும் பழைய நினைப்பு விடுதில்லைப் போல.

எப்ப யாரை போடலாம் எண்டு நினைத்தவைதான் கடைசியில் ஒட்டுமொத்தமாக அழிந்தவை.

Edited by nirmalan

போரின் வடுவைச் சந்தித்த மக்களுக்குத்தான் கருத்துக் கூற உரிமை உண்டு. இன்று எதுவுமே இழந்து நாதியற்று இருக்கின்றவனுக்கு உங்கள் பசப்பு, சப்பைக் கொட்டும் வார்த்தைகளும் ஒன்றுக்குமே உதவாது.

உந்தக்கதை உங்களுக்கும் சேர்த்து எண்டால் பொருத்தமாக இருக்கும்...

எந்த பலனையும் எதிர்ப்பார்க்காமல் அரசாங்கம் KP யை நல்லா வைச்சிருக்குது எண்டு சொல்லுற மாதிரியான கதைகளை விட்டால் உங்களின் கருத்துக்களில் கூட உப்பில்லை...

ஆனால் கேபி தமிழ் மக்களை விற்க முன்வராமல் இருந்தும் இராணுவ பாதுகாப்போடை சுதந்திரமாக இருக்கிறார் எண்டது உலக அதிசயம் 8 எண்டு கேள்விப்பட்டம்...

உங்களைப் போன்று நாங்கள் எல்லாம் மாயை உலகில் இல்லை அப்பு. நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் தொடர்பிலேயே உரையாடுகின்றோம்.

நீங்கள் என்னவென்றால் நிலவில் போய் வீடு கட்டுவோம் என்று அல்லவா நிற்கிறீர்கள். முதலில் கட்டிவிட்டு வாருங்கள். மிகுதியினை நான் கூறுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்காய்ச்சல் எங்களுக்கு இல்லை மகனே. புலிகள் விதைத்துவிட்டுச் சென்ற மாயைக்குள் இருந்து நீங்கள்தான் வெளியே வரவில்லை. அவர்கள் அந்த மாயைக்குள் இருந்தே அழிந்துவிட்டார்கள். தொடர்ந்தும் அவர்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்று கனவு உலகில் சஞ்சாரம் செய்யுங்கள்.

"விடுதலைப் புலிகளுக்கு பின்னைய காலகட்டம் என்று ஒன்று இல்லை" என்று அன்றே அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசன் அவர்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அது உண்மைதான். இதில் இருந்து புலம்பெயர் தமிழர்கள்தான் வெளியே வரவில்லை.

அந்த மக்களில் ஒருவன்தான் ஐயா நானும். அதனை உங்களுக்குப் புரிய வைக்க நான் என்ன அக்னிக் குண்டத்திலா விழ வேண்டும்?

விடுதலைப்புலிகளை நீங்கள் விமர்சிப்பதில் தப்பே இல்லை ஆனால் அந்த விமர்சனம் ஊடாக நீங்கள் தமிழர் தரப்பு இன்றும் வெறுக்க கூடிய ஒரு சிலரை "ப்ரொமோட்" பண்ண முயல்கின்றீர்கள் என்பது சோகமான உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் செஞ்சோலைப் படுகொலைகள் என்பதை புலிகளின் ஆட்பிடிப்பு விளைவு என்ற தொனியில் பேசி வருவதோடு.. புலிகளால் தான் எல்லாம் என்ற வகையில் சிங்கள அரசு.. தமிழ் ஒட்டுக்குழுக்கள் மற்றும் இந்திய காங்கிரஸ்காரர்கள் போல.. கருத்துக்களையும் கூவி வருகின்றனர்.

இவர்களின் இந்த எழுத்துக்களுக்கு ஆதாரம் எதுவும் இல்லை. தங்களின் சுய விருப்பு வெறுப்புக்கு அமைய கருத்துக்களை பழிகளை சுமத்தி வருகின்றனர்.

செஞ்சோலைப்படுகொலை என்பது முழுக்க முழுக்க சிங்கள விமானப்படையின் திட்டமிட்ட தவறினால் ஏற்பட்ட ஒன்று. மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு போர்க்கால தற்காப்புப் பயிற்சிகள் என்பது வழங்கப்படுவது உலகெங்கும் உள்ள நடைமுறையே. காரணம் மாணவர்களும் பொதுமக்களும் குறிப்பாக பெண்கள் இலகுவில் போரினால் பாதிக்கப்படக் கூடியவர்கள்.

அந்த வகையில் தான்.. சில தற்காப்புப் பயிற்சிகள்.. விமானத்தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி என்று பயிற்சி கொடுப்பார்கள். இரண்டாம் உலகப் போரின் போது.. சிறீலங்காவில் பல பகுதிகளில் அப்படி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மீது ஜப்பான் குண்டு வீசிக் கொன்றுவிட்டு.. பழியை சிறீலங்காவில் வெள்ளையர்கள் வழங்கிய தற்காப்புப் பயிற்சி மீது பழியாகப் போடவில்லை.

ஆனால் எதிரிக்கு வால்பிடிக்கும் ஒட்டுக்குழுக்கள் இங்கு அதனை.. புலிகள் மீது குற்றமாகக் காண்பதோடு பலியான பிள்ளைகளின் பெற்றோரின் வருத்தம் கண்டு தாம் மனம் வெதும்புவது போல பாசாங்கும் செய்கின்றனர்.

அந்தப் பிள்ளைகள் கூடி இருந்ததை காட்டிக் கொடுத்ததும்.. நம்மவர்களாகத் தான் இருக்கும். முன்னர் நல்லூர் திருவிழாவின் போது சிங்கள விமானப்படை தாக்குதல் நடத்தியது. முத்திரைச் சந்தியில் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதலில் பல பொதுமக்கள் பலியானார்கள். அது வேண்டும் என்றே நடத்தப்பட்ட தாக்குதல். ஆனால் ஒட்டுக்குழு ரேடியாவில் புலிகள் நல்லூரில் கண்காட்சி செய்து ஆட்திரட்டிக் கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. தாக்குதல் நடத்திய காலத்தில் முத்திரச்சந்தியில் போர் நினைவுச் சின்னங்களோ.. எதுவுமே இருக்கவில்லை. சங்கிலியன் சிலை தான் இருந்தது.

அதில் இருந்து அந்தத் தாக்குதல் பற்றிய தகவல்களை ஒட்டுக்குழுவினரே வழங்கி இருக்க வேண்டும் என்ற முடிவில் நடத்தப்பட்ட தேடுதலில் ஒரு தமிழ் பெண் உளவாளி கைது செய்யப்பட்டிருந்தார். அவர் அடிக்கடி கொழும்புக்கு போய் வந்ததோடு அங்கு ஒட்டுக்குழுக்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி இராணுவப் புலனாய்வாளராக செயற்பட ஆரம்பித்திருந்தார். அவரிடம் இருந்து இஸ்ரேல் தயாரிப்பு உடலில் அணியும்.. விசேட ஒலிப்பதிவு மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன. அவர் புலிகளால் அல்ல. பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பின் புலிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தார்.

வன்னிக்குள்ளும் இப்படியான ஆட்களின் ஊடுருவல் சமாதான காலத்தில் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்பிருந்திருக்கும். அந்த வகையில் பள்ளிமாணவர்கள் மீதான தாக்குதல்கள் முற்றுமுழுதாக திட்டமிட்ட இன அழிப்பு நடவடிக்கை என்பதில் மறுக்க எதுவும் இல்லை. ஆனால் இங்கு சிலர் 50% புலிகள் 50% இராணுவம் என்று சிங்களத்தின் இன அழிப்புக்கு சமாதானம் சொல்லும் கொடூரத்தைக் காண்கிறோம். இவர்கள் யாருமே போரால் பாதிக்கப்படவர்கள் அல்ல. போரைச் சாட்டி ஊரைவிட்டு ஓடி வந்து தங்கள் கஸ்டங்கள் நீங்கி.. சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்களே அந்தப் பிஞ்சுகளின் இழப்பை வைத்து சூதாட்டக் கருத்தாடி மகிழ்கின்றனர்.

இது மகிந்த செய்த படுகொலைகளைக் காட்டிலும் குரோதம் மிக்கது. இதில் இருந்து எம்மவர் சிலரின் மிகக் கொடூர மனநிலையை நாம் புரிந்து கொள்ளவும் முடிகிறது. இவ்வாறான ஒரு சமூகக் காரணிகள் மத்தியில் தான் புலிகள் போராட வேண்டி இருந்தது. அது கூட புலிகளின் வெற்றிகளை பாதிக்கச் செய்திருக்கின்றன. இவர்கள் மீதான புலிகளின் நடவடிக்கைகளே இறுதியில் சகோதரப்படுகொலை.. என்றாகி.. பயங்கரவாதமும் ஆக்கப்பட்டது. ஆனால்.. இவர்களை எல்லாம் தண்டிக்காமல் விடுவது.. எவ்வளவு ஆபத்து என்பதை நாம் இன்று கண்முன்னால் காண்கிறோம்..!!! :icon_idea:

Edited by nedukkalapoovan

இந்த நிர்மலன் என்பவர்  யாழில் புலி வாந்தி எடுக்கும் ஒருவரின் மறு உருவம் என்று நினக்கிறேன் . மகிந்த புலிகளுக்கு செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களை ஒன்று கூட்டுமாரு கூரினார் அதன் படி அவர்கள் மாணவர்களை ஒன்று படுத்தி இலங்கை விமனாக் குண்டு வீச்சுக்கு பலியாக்கினார்கள் . இதற்க்காக கோத்த பாயவிடம் புலிகள் பெரும் தொகைப் பணத்தை பெற்றார்கள் இது தான் உண்மை நிர்மலன் நீக இதை அறியாத அப்பாவி பாவம் வாந்தி போதும் இந்தப் பெயருக்கும் தடை வந்தால் அப்புறம் எந்த பெயரில் வருவீங்க பாஸ் ?

சுவிஸ்,இஸ்ரேல்,வடகொரியா,எரித்திரியா போன்ற நாடுகளில் கட்டாய ராணுவப் பயிற்ச்சி உள்ளது அதற்கு என்ன பண்ண போறீங்க?

சூப்பரப்பு. இப்படியே ஒய்யாரமாக இருந்து கொண்டு எதிர்வினையாற்றிக்கொண்டே இருங்கள். அவனவன் செய்வதனைச் செய்து கொண்டு இருப்பான்.

போரின் வடுவைச் சந்தித்த மக்களுக்குத்தான் கருத்துக் கூற உரிமை உண்டு. இன்று எதுவுமே இழந்து நாதியற்று இருக்கின்றவனுக்கு உங்கள் பசப்பு, சப்பைக் கொட்டும் வார்த்தைகளும் ஒன்றுக்குமே உதவாது.

அரச குடும்பம் அடிக்கிற உடுக்கு நீங்கள் ஏன் உருவாடுவான்?

எதற்காக மகள் இளவரசியும், தாய் இளவரசியும் நாட்டுக்கு வருகிறார்கள். இவர்களுடன் யார் என்ன அரசியல் தேவைகள் பற்றி பேசுகிறார்கள்?

எத்தனை முறை கேட்டாயிற்று அகதியான மக்கள் வாய் திறந்து தங்களை துயரங்களை கூற சர்வதேச நீதி விசாரணையை கொண்டுவரசொல்லி?

நீங்கள் எப்ப தொடக்கம் போரின் வடுவை சந்தித்த மக்களுக்கான அப்ப்புகாத்துக்கள் ஆனீர்களோ?

Edited by மல்லையூரான்

அப்பாவிகளை யார் கொன்றாலும் தவறு என்றுதானே வாதிடுகின்றேன். நீங்களோ புலிகள் தவறு எதுவுமே செய்யவில்லை என்று அல்லவா இங்கே என்னுடன் எல்லோரும் வாதாடுகின்றீர்கள்.

இதுவரைக்கும் புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவிகளதும், சிங்கள, இந்திய படைகளாலும் ஒட்டுக்குழுக்களாலும் கொல்லப்பட்ட அப்பாவிகளதும் புள்ளிவிபரங்களை தரமுடியுமா?

2009 மே 19 இன் பின்னர் இலங்கையின் தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த/நிகழ்ந்துகொண்டிருக்கும் படுகொலைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் இன்றும் மீழ்குடியேற்றப்படாது முகாம்களில் மக்கள் அல்லற்படுவதற்கும் யார் காரணம்? இப்போதுதான் புலிகள் என்று யாரும் இல்லை, வடக்கில் வசந்தம்தானே வீசுகிறதாம்.( நொண்டிக்குதிரைக்கு சறுக்கினது சாட்டாம் என்பதுபோல வெளிநாட்டுப்பணம்தான் என்ற உப்புச் சப்பற்ற பேச்சு அவசியமில்லை, கேட்டுக்கேட்டுப் புளிச்சுப்போச்சு....ஒரே போரடிக்குது உங்க எழுத்தை(?) படிக்க. முடிஞ்சா புதிசா ஏதும் இண்டைக்கு ட்ரை பண்ணமுடியுமா?)

அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை எதிர்த்து வியட்நாமிய மக்கள் போராடினர் என்றால் அந்தப் போராளிகளுடன்  வியட்நாமிய மக்கள் இருந்தனர். ஏன் விடுதலைப் புலிகளோடு மக்கள் இல்லை என்று நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆராயலாமே.

நைனா... யாழில், அதுவும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நடந்த பொங்குதமிழுக்கு வந்ததுண்டோ? இல்லை, அப்படியேதும் நடந்ததென்றாவது தெரியுமா? அந்த மாபெரும் மக்கள் கூட்டத்தையும் புலிகள் கட்டாயப்படுத்தியா கொண்டுவந்தார்கள்?

வியட்நாமிய போராளிகள் மக்களோடு இருந்து சாதாரண வீடுகளில் வாழ்ந்தும் சாதாரண வாகனங்களிலும் சென்று வந்தார்கள். விடுதலைப் புலிகள் போன்று சொகுசு வீடுகளில் வாழ்ந்தும் சொகுசு வாகனங்களிலும் திரியவில்லை. உங்களுக்கு நேரம் இருந்தால் வியட்நாம் போராட்டம் எப்படி வெல்லப்பட்டது என்று படியுங்கள்.

"கேட்கிறவன் கேனையனென்றால் எலியும் ஏரோப்பிளேன் ஓட்டுமாம்". இவர் ஒரு மாமேதை, உலகவரலாற்றையே கரைசுக்குடிச்சுவிட்டார். அதுதான் எடுக்கிற வாந்தியிலும் அதில் வரும் நாற்றத்திலும் விளங்கிட்டம்...ம்...

தாயகத்தில் இருந்து எழுதுவது போன்றுதான் நீங்கள் எழுதுகின்ற விதத்தில் பார்க்கத் தெரிகின்றது. ஏன்யா ஏமாற்றுவதற்கு நானா கி டைத்தேன். நான் புலம்பெயர் நாட்டில் இருந்துதான் எழுதுகின்றேன். இறுதிவரை எனது உறவுகள் விடுதலைப் புலிகளுக்காகவே உழைத்தார்கள். கடைசியில் சுதந்திரபுரத்தில் எமது உறவினர்களுக்கும் மக்களுக்கும் புலிகள் நடத்திக்காட்டிய வீரத்தினை வார்த்தைகளில் வடிக்க முடியாது. (புலிகளின் தலைமைக்கு தெரியாமல் அவை எல்லாம் நடந்துவிட்டது என்று எல்லாம் இங்கே பிறகு வாதிடக்கூடாது. இது தொடர்பாக புலிகளின் முக்கியஸ்தர்களிடம் முறையிட்டபோது எமக்கு எதிராகவே செய்கிறாங்கள். நாங்களே எங்கே போவது என்று தெரியவில்லை என்று புலம்பியது தனிக்கதை)

நல்லாத்தெரியுது...இந்தப் பரப்புரைக்கு மாசம் எவ்வளவு தாறாங்கள்?

ராசா... இந்த அரைச்ச மாவுகளையே அரைக்கும் வேலையெல்லாம் அப்பயிருந்தே தெரியும். முதலில், "மக்களின் குரல்" என்ற வானொலி ஒன்றிலும் பின்னர் தினமுரசு என்று ஒரு மஞ்சள் பத்திரிகையிலும், தீப்பொறி என்று ஒரு இணையத்தளத்திலும் இதே வாந்தியையே பார்த்தேன். இதெல்லாம் எங்களுக்கு புதுசு இல்லைக் கண்ணா...

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக 83 ஆம் ஆண்டில் இருந்து ஆதரவாக இருந்த என்னை இவ்வாறு எதிராக எழுதத் தூண்டியது எது? (இதற்கு இடைப்பட்ட காலத்தில் எல்லாம் புலிகள் செய்த சில செயல்களைக் கேள்விப்பட்ட போது எல்லாம் நான் நம்பாதவனாகத்தான் வாழ்ந்தேன். எனக்கு அது எல்லாம் நடந்தபோதுதான் வேதனை என்பதனைவிட அதிர்ச்சியாக இருந்தது.)

"சிங்கம் இளைச்சுபோய் படுத்திருந்தால் சுண்டெலியும் சுகம் கேட்குமாம்."

ஏன் புலிகள் இல்லையெண்டால் நரிகளுக்கும் வரி தோன்றுமோ?

வன்னியில் உள்ள மக்களின் மீள் வாழ்வாதாரத்துக்கு பணம் கொடுங்கள் என்று கூறினேனே தவிர யாழில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பணம் கொடுத்து சோம்பேறிகளாக்கி அவர்களில் இளைய சமூகத்தினை தவறான வழிகளுக்குச் செல்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் பணமே உதவுகின்றன என்பதனை மீண்டும் அழுத்திக் கூற விரும்புகின்றேன்.

தூங்குபவனை எழுப்பலாம், தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்பமுடியாது. இதே யாழ்ப்பாணமும் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலமும் உண்டு, அப்போதும் வெளிநாட்டுப் பணம் தாராளமாகவே வந்தது. அப்போது அங்கு இப்படியேதும் நடக்கவுமில்லை, யாரும் கெட்டுப்போகவுமில்லை. யாரையும் யாரும் கூட்டிக்கொடுக்கவுமில்லை, கெடுக்கவுமில்லை. புத்தியுள்ளவன் புரிந்துகொள்வான். தயவுசெய்து சுயநினைவோடு எழுதுங்கள். இங்கு நாம் வெளிநாட்டுப் பணத்திலும் வாழ்கிறோம், ஆனால் நீங்கள் புலம்புவதுபோல் "சோம்பேறிகளாக அல்ல". புரியாது தப்பாக எழுதி எம்மைக் கொச்சைப்படுத்தவேண்டாம்.

சிறிலங்காப் படையினர் போதைப் பொருள் விநியோகம் செய்தால் அதனை வாங்க இளைய சமூதாயத்திடம் பணம் இருக்கின்றதுதானே. அவன் என்ன இலவசமாகவா கொடுக்கின்றான்?

நல்ல நியாயம்...விற்பது தப்பில்லை, ஆனால் அதை வாங்குவது மட்டும் தப்போ? அப்போ பகிரங்கமாகவே அதை யாருமே விற்கலாமே? வந்து எனக்கு யாழ்ப்பாணத்தில ஒரு கடை போட்டுத்தர முடியுமா? நானும் விற்கிறன், வாங்கிறதுதானே தப்பு.இதைத்தான் சொல்லுறது விதண்டா வாதமெண்டு, புரியலயா? நான் பிடிச்ச முயலுக்கு மூன்று காலென்பது. ஹிஹிஹி....

சுயநினைவுடன்தான் நான் எழுதுகின்றேன். நீங்கள் எல்லாம் மாயைக்குள் கட்டுண்டு எழுதுகின்றீர்கள். அதனைவிட்டு வெளியே வாருங்கள்.

சுயநினைவுள்ளவன் இப்படி எழுதியிருக்க முடியாது.... சிறிலங்காப் படையினர் போதைப் பொருள் விநியோகம் செய்தால் அதனை வாங்க இளைய சமூதாயத்திடம் பணம் இருக்கின்றதுதானே. அவன் என்ன இலவசமாகவா கொடுக்கின்றான்?

கண்டிப்பாக இதுவும் புரிந்திருக்காதென்று எனக்குத் தெரியும்...ஏனெனில் 'தூங்குவதுபோல் நடிப்பதென்பது' இதுதான்.

அப்பாவிகளை யார் கொன்றாலும் தவறு என்றுதானே வாதிடுகின்றேன். நீங்களோ புலிகள் தவறு எதுவுமே செய்யவில்லை என்று அல்லவா இங்கே என்னுடன் எல்லோரும் வாதாடுகின்றீர்கள்.

அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை எதிர்த்து வியட்நாமிய மக்கள் போராடினர் என்றால் அந்தப் போராளிகளுடன்  வியட்நாமிய மக்கள் இருந்தனர். ஏன் விடுதலைப் புலிகளோடு மக்கள் இல்லை என்று நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆராயலாமே.

வியட்நாமிய போராளிகள் மக்களோடு இருந்து சாதாரண வீடுகளில் வாழ்ந்தும் சாதாரண வாகனங்களிலும் சென்று வந்தார்கள். விடுதலைப் புலிகள் போன்று சொகுசு வீடுகளில் வாழ்ந்தும் சொகுசு வாகனங்களிலும் திரியவில்லை. உங்களுக்கு நேரம் இருந்தால் வியட்நாம் போராட்டம் எப்படி வெல்லப்பட்டது என்று படியுங்கள்.

மக்களோடு வீடுகளில் வாழ்ந்து பின்னர் மக்களின் வீடுகளின் மீதும் குண்டுகள் விழும்போது... உங்களைப்போன்ற அல்லப்பறைகள் அப்போது எழுதுவீர்கள் இப்படி.... "போராடுபவர்களுக்கு மக்களின் வீடுகளுக்குள் என்ன வேலை... " என்றவாறு தூசணங்கள்.

தாயகத்தில் இருந்து எழுதுவது போன்றுதான் நீங்கள் எழுதுகின்ற விதத்தில் பார்க்கத் தெரிகின்றது. ஏன்யா ஏமாற்றுவதற்கு நானா கி டைத்தேன். நான் புலம்பெயர் நாட்டில் இருந்துதான் எழுதுகின்றேன். இறுதிவரை எனது உறவுகள் விடுதலைப் புலிகளுக்காகவே உழைத்தார்கள். கடைசியில் சுதந்திரபுரத்தில் எமது உறவினர்களுக்கும் மக்களுக்கும் புலிகள் நடத்திக்காட்டிய வீரத்தினை வார்த்தைகளில் வடிக்க முடியாது. (புலிகளின் தலைமைக்கு தெரியாமல் அவை எல்லாம் நடந்துவிட்டது என்று எல்லாம் இங்கே பிறகு வாதிடக்கூடாது. இது தொடர்பாக புலிகளின் முக்கியஸ்தர்களிடம் முறையிட்டபோது எமக்கு எதிராகவே செய்கிறாங்கள். நாங்களே எங்கே போவது என்று தெரியவில்லை என்று புலம்பியது தனிக்கதை)

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக 83 ஆம் ஆண்டில் இருந்து ஆதரவாக இருந்த என்னை இவ்வாறு எதிராக எழுதத் தூண்டியது எது? (இதற்கு இடைப்பட்ட காலத்தில் எல்லாம் புலிகள் செய்த சில செயல்களைக் கேள்விப்பட்ட போது எல்லாம் நான் நம்பாதவனாகத்தான் வாழ்ந்தேன். எனக்கு அது எல்லாம் நடந்தபோதுதான் வேதனை என்பதனைவிட அதிர்ச்சியாக இருந்தது.)

வன்னியில் உள்ள மக்களின் மீள் வாழ்வாதாரத்துக்கு பணம் கொடுங்கள் என்று கூறினேனே தவிர யாழில் உள்ள உங்கள் உறவுகளுக்கு பணம் கொடுத்து சோம்பேறிகளாக்கி அவர்களில் இளைய சமூகத்தினை தவறான வழிகளுக்குச் செல்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் பணமே உதவுகின்றன என்பதனை மீண்டும் அழுத்திக் கூற விரும்புகின்றேன்.

சிறிலங்காப் படையினர் போதைப் பொருள் விநியோகம் செய்தால் அதனை வாங்க இளைய சமூதாயத்திடம் பணம் இருக்கின்றதுதானே. அவன் என்ன இலவசமாகவா கொடுக்கின்றான்?

சுயநினைவுடன்தான் நான் எழுதுகின்றேன். நீங்கள் எல்லாம் மாயைக்குள் கட்டுண்டு எழுதுகின்றீர்கள். அதனைவிட்டு வெளியே வாருங்கள்.

உங்களைப் போன்று நாங்கள் எல்லாம் மாயை உலகில் இல்லை அப்பு. நடைமுறைச் சாத்தியமான விடயங்கள் தொடர்பிலேயே உரையாடுகின்றோம்.

நீங்கள் என்னவென்றால் நிலவில் போய் வீடு கட்டுவோம் என்று அல்லவா நிற்கிறீர்கள். முதலில் கட்டிவிட்டு வாருங்கள். மிகுதியினை நான் கூறுகின்றேன்.

அண்ணை உங்கட தலை சரண் அடைஞ்சு 4 வருடம் ஆக போகுது அவரின் சாதனைகளை ஒருக்கா சொல்லுங்கோவன்...

பிறகு நாங்கள் நிலவிலை என்ன கட்டுறம் எண்டதை பற்றி பேசலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பழைய நினைப்பு விடுதில்லைப் போல.

எப்ப யாரை போடலாம் எண்டு நினைத்தவைதான் கடைசியில் ஒட்டுமொத்தமாக அழிந்தவை.

இன்னும் பழைய நினைப்பு விடுதில்லைப் போல.

ஓமண்ணை

நாங்க ஒன்றையும் மறப்பதில்லை

எப்ப யாரை போடலாம் எண்டு நினைத்தவைதான் கடைசியில் ஒட்டுமொத்தமாக அழிந்தவை.

கேட்ட கேள்விக்கு  பதில் சொல்ல வக்கில்லை

உயிரையே  கொடுத்தவரை நோக்கி

கை நீட்டல்.........

:(

நீங்கள் என்னவென்றால் நிலவில் போய் வீடு கட்டுவோம் என்று அல்லவா நிற்கிறீர்கள். முதலில் கட்டிவிட்டு வாருங்கள். மிகுதியினை நான் கூறுகின்றேன்.

பின் என்ன கூறுவீர்கள் ..புத்த சிலையை வீட்டுக்கு முன் வையுங்கள் என்றுதானே ,,,,,,,,,,,,
 
மகிந்த என்னும் அரக்கன் செஞ்சோலை பிள்ளைகளுடன் நிற்பதற்கும் ,பிரபாகரன் என்னும் மகான் அவர்களுடன் நிற்பதற்கும் உள்ள வித்தியாசத்தை தெரியாத..............உங்களைப்போன்றவர்களை ,நீங்கள் எந்த ரகம்  என்பதை நான் இங்கு எழுத விரும்பவில்லை ,,,,,,,,,,,,,,,,,,சத்தியமாய் லூசுகள் என்றும் நான் சொல்லவில்லை  :lol:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.