Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்.. அதியசமோ, ஆகாசமோ இல்லை. இனப்பெருக்கத்திற்கான இயற்கையின் இயந்திரம்.

Featured Replies

நெடுக்கரின் 'பெண்மை' பற்றிய கவிதை 'வெரி சிம்பிளிஸ்டிக் ஆக உள்ளது! :D

 

இயற்கை பெண்ணை இனப்பெருக்கதிற்காக மட்டும் மட்டுமென்று உருவாக்கவில்லை!

 

அவ்வாறு இருந்தால், தனியாகப் பெண்களை மட்டுமே 'இயற்கை' உருவாக்கியிருக்கலாம்!

 

ஆணைத் தனியாக உருவாக்க வேண்டிய தேவை, இயற்கைக்கு ஏன் ஏற்பட்டது?

 

சில மீன் வகைகளையும், சில பூக்களையும், சில விலங்குகளையும்,  தேவைக்கு ஏற்ப ஆணாகவும், பெண்ணாகவும் மாறக்கூடிய வகையில் வடிவமைத்துள்ள இயற்கைக்கு, இது ஒன்றும் பெரிய விசயமாக இருந்திருக்காது!

 

கடல் குதிரைகளில் ஆண்கள் தான் கருக்களைச் சுமக்கின்றன! இனப்பெருக்கம் என்பது 'உயிரிகளின்' ஒரு குணாதிசயமாகும்! கீழ்நிலை உயிரிகள் 'பிளவடைதல்'மூலம் பெருகுகின்றன!ஆண், பெண் பேதங்கள், இங்கே இல்லைத் தானே, நெடுக்கர்! எனவே ஆணையும், பெண்ணையும் வேறு, வேறாக இயற்கை உருவாகியதற்கு மிகவும் முக்கிய காரணம் இருக்க வேண்டும்!

 

அத்துடன் இனப்பெருக்கம் மட்டுமே இயற்கையின் நோக்கமல்ல! சிங்கம் போன்ற மிருகங்கள், புணர்வில் ஈடுபடும் நோக்கத்தோடு, ஏற்கெனவே பிறந்த குட்டிகளை, அடித்துக் கொல்வதும் உண்டு  பூனை சில குட்டிகளைக் கொன்று தின்று விடுகின்றது! கங்காருக்கள் கருப்பையில் வளரும் குட்டிகளுக்குப் பாலூட்டாமல், சிலவேளைகளில் நிறுத்தி, அந்தக் குட்டிகளைக் கொல்வதும் உண்டு!

 

எனவே பெண்ணென்பவள் தனியே இனத்தைப் பெருக்குவதற்காக மட்டுமல்ல! அதற்கும் மேலே, இன்னுமொரு தேவைக்காகப் படைக்கப் பட்டிருக்கிறாள்! 

 

கவிதை நன்றாக உள்ளது! ஆனாலும் வெறும் 'ட்றை' ரேஸ்ட் ஆக உள்ளது! :o

 

 

Why Do Male Seahorses Give Birth?

by Rob Hainer, Demand Media

55909034_XS.jpg?w=300&h=300&keep_ratio=1

Male and female seahorses tend to be monogamous during the breeding season.

Seahorse males do something highly unusual in the animal kingdom; they get pregnant and deliver their offspring. Scientists don't have a clear reason why seahorses evolved this way, but they theorize this is one of the ways seahorses try to help the species survive. Neither parent gets involved in the child-rearing, though. When the male delivers the babies, they are on their own.

 
How It Works

Although the male carries the eggs, he doesn't make them. After a male and female seahorse spend time courting, the female deposits her eggs inside the male's pouch. He fertilizes the eggs inside the pouch. His pouch is a complex organ that regulates temperature, blood flow and water salinity for the eggs as they hatch so the babies are as prepared as possible for life in the ocean.

Making More Babies

One theory about why male seahorses carry the babies is that this gives the species the ability to create more babies quickly. The female deposits all her available eggs into his pouch when they mate, so she needs time to make more eggs. While he's carrying one set of eggs, she's creating more so they are ready when the first group is born. The male can deliver babies in the morning and get pregnant again the same day. The female expends her energy making more eggs rather than carrying fertilized ones.

Sharing the Load

Creating new life takes a lot of energy, which factors into another theory as to why male seahorses carry the babies. When the females create the eggs, she uses her energy to fill the egg casings with nutrients to help the babies mature. This takes some of the stress off the dad. He provides a safe and environmentally controlled environment for his babies, but the mom gives them some food.

Problems

Depending on the species, seahorses can deliver from five to more than 1,000 babies at a time. Unfortunately, only about five out of every thousand survive to adulthood. The babies are so tiny that they can't eat the same plankton food as their parents, so their choices are limited. Also, they tend to get carried away by ocean currents before they can latch onto rocks or other secure objects with their tails, becoming part of the zooplankton other animals eat. The fact that so few survive might be the reason seahorses share the baby duties more than other creatures.

 

http://animals.pawnation.com/male-seahorses-give-birth-4198.html

 

Edited by கா ளா ன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் கடற்குதிரை குஞ்சுகளை சுமந்தாலும்.. பெண் தான் முட்டை இடுகுது. படைப்பும் பெண் என்பதனை அதன் மூலமே அடையாளப்படுத்துது..! :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர், ஆணுக்கும் பெண்ணுக்குமிடையேயான 'பேதங்கள்' சுருங்கிக்கொண்டு வரும் நவீன உலகில், பெண்ணை வெறும் 'கருக்களைக் காவும்' இயந்திரமாகப் பார்க்கும் உங்கள் பார்வை, என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது! ஒரு வேளை, பெண்ணடிமைத் தனத்தின், ஆழமான அத்திவாரங்களில், உங்கள் நம்பிக்கைகள் கட்டப் பட்டிருக்கக் கூடும்! விரும்பியோ, விரும்பாமலோ, எமது சமுதாயம் சில நடைமுறைகளைக் காலாகாலமாகக் கடைப்பிடித்து வந்ததற்காக, நாம் அவற்றை நியாயப் படுத்த முயல்வது கூடாது! காலத்திற்கேற்ப  நாமும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்! பெண்ணென்பவள், இயற்கையின் ஒரு அற்புதமான 'ஆக்கம்'!

இதனாலேயே, சக்தியின்றிச் சிவமில்லை என்று கூறுவார்கள்!

சரி, அதை விடுங்கள்! நாய் வாலை, நிமிர்த்த முயல்கிறேனோ தெரியவில்லை!

 

பின்வரும் இணைப்பைப் பாருங்கள்! மிகவும் நல்ல ஒரு விஞ்ஞானக் கட்டுரை!

 

http://scientistatwork.blogs.nytimes.com/2011/06/29/male-or-female-good-question/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணடிமைத்தனம்.. பெண் விடுதலை.. இதெல்லாம் சமூக தளத்தில் பேசப்பட்டு சிலாகிக்கப்பட்டுக் கொண்டே மனிதர்கள் மீது மனிதர்கள் நடத்தும் அடக்குமுறைக்கு அளிக்கும் அங்கீகாரம். பெண்களால் வன்கொடுமைக்கு ஆளாகும் ஆண்களைப் பற்றி பேச மறுக்கின்ற மனிதர்கள்.. ஆண்களால் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றதை தூக்கிப் பிடிப்பார்கள். இந்த சமநிலையற்ற தன்மை தான் சமூத்தளத்தில் உள்ளது. ஆம்.. அறிவியல் ரீதியில்.. பெண்.. என்பது இனப்பெருக்கதிற்கான இயற்கையின் இயந்திரம் தான். அந்த இயல்புக்காக அந்த இயந்திரம் கொண்டிருக்கும் ஆற்றலை எல்லாம் வியந்து பார்ப்பது அவரவர் அறிவியல் அறிவாற்றலின்.. தன்மையில் அமைகிறது..! வியந்து பார்க்கனுன்னா.. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரும் வியப்புக்குரிய அம்சங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். அதில் மனித ஆணும் அடக்கம். பெண்ணும் அடக்கம்..!  :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணடிமைத்தனம்.. பெண் விடுதலை.. இதெல்லாம் சமூக தளத்தில் பேசப்பட்டு சிலாகிக்கப்பட்டுக் கொண்டே மனிதர்கள் மீது மனிதர்கள் நடத்தும் அடக்குமுறைக்கு அளிக்கும் அங்கீகாரம். பெண்களால் வன்கொடுமைக்கு ஆளாகும் ஆண்களைப் பற்றி பேச மறுக்கின்ற மனிதர்கள்.. ஆண்களால் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றதை தூக்கிப் பிடிப்பார்கள். இந்த சமநிலையற்ற தன்மை தான் சமூத்தளத்தில் உள்ளது. ஆம்.. அறிவியல் ரீதியில்.. பெண்.. என்பது இனப்பெருக்கதிற்கான இயற்கையின் இயந்திரம் தான். அந்த இயல்புக்காக அந்த இயந்திரம் கொண்டிருக்கும் ஆற்றலை எல்லாம் வியந்து பார்ப்பது அவரவர் அறிவியல் அறிவாற்றலின்.. தன்மையில் அமைகிறது..! வியந்து பார்க்கனுன்னா.. இந்தப் பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரும் வியப்புக்குரிய அம்சங்களைக் கொண்டிருப்பதைக் காணலாம். அதில் மனித ஆணும் அடக்கம். பெண்ணும் அடக்கம்..!  :)  :icon_idea:

அப்பாடா!, இப்போதைக்கு, இது காணும்! :D

U137P200T1D189937F8DT20081005195923.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் அண்ணா படைப்பும் சொல்கிறது. பெண்.. இனப்பெருக்கதிற்கான இயற்கையின் இயந்திரம்... என்று. 

   Incredible Human Machine
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

penguin.jpg

 

பெண்ணே

கண்ணே

கனியே

கனி அமுதே

கட்டி அணைக்க"வா"

கவ்விக் கொள்ள"வா"

கருணை கொண்ட"வா"

கண் காட்ட"வா"..!

 

பாசைகள் பலவிதம்

பரிமாறிட

கற்பனை பொங்க

கழிவிரக்கம் தொடங்க

சிந்தை மகிழ

சரசம் தவ்வ

சரீரம் பிணைய

சக்தி பீறிட

பாய்ச்சல் நிகழ்ந்திட

ஆடி அடங்கும்

அகிலத் தொடையில்

அடங்கிடும்

அவன் இனவெறி..!

 

கன்னி அவளும்

கலவி கண்டு

தேவை முடித்து

சேவை தந்து

அயர்ந்தாள்..

உருகி ஓடும்

திரவங்கள் கலந்திட

முந்தி ஓடும்

ஒற்றை விந்தின்

வெற்றியில்

உயிர் ஒன்றை

உருவாக்கும்

இயற்கையின்..

இயந்திரமாய்

முட்டை தந்து..!

 

அருமையான கவிதை.
 
பிள்ளைப்பாக்கியம் இல்லாத ஆடவர் தன் மங்கையவளுக்கு  எப்படி?
சிநேகிதரால்???? 
அல்லது..... 
விஞ்ஞான வளர்ச்சியின் மகிமையால்!!!!!!!!
எல்லாம் வெல்லலாம் என்பாரோ?
அல்லது....
எல்லாம் வெட்டியாடலாமென்பாரோ?

hermit crab தான் ஊர்ந்து போய் சங்குக்கு உயிரைக்கொடுக்கிறது. அவரசரமான முடிவால் சங்கு ஊர்கிறது என்று வாதாடலாமா?

 

இதில் முட்டைக்கு என்ன பிரத்தியேக பாகம் இருக்கிறது? அதை ஏன் தனியாக எடுத்துக்கொள்வான்? 

மிஷினுக்குள்ள கையைக் காலை விடும்போது கவனம் தம்பி! :wub::rolleyes: வெட்டிக்கிட்டி விடப்போகுது. :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையின் வீச்சு அபாரம் நெடுக்ஸ் !

கருத்துக்களில் .... என்ன சொல்ல....  .

 

பிரசவ  வார்ட்டிலும்  சத்திர சிகிச்சை நடக்குது,  பிண வறையிலும்  நடக்குது இரண்டிலும் நுட்பமாய் செயல்படுவதில் 100 வீதம் வித்தியாசமுண்டு. நாங்கள் பிரசவ அறையின் வாசலில் ஒருவிதமான தவிப்பான பரவசமான  மனநிலையில் இருக்கின்றோம் , நீங்கள்  மார்சுவரியில் நின்று பார்க்கின்றீர்கள் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

penguin.jpg

 

பெண்ணே

கண்ணே

கனியே

கனி அமுதே

கட்டி அணைக்க"வா"

கவ்விக் கொள்ள"வா"

கருணை கொண்ட"வா"

கண் காட்ட"வா"..!

 

பாசைகள் பலவிதம்

பரிமாறிட

கற்பனை பொங்க

கழிவிரக்கம் தொடங்க

சிந்தை மகிழ

சரசம் தவ்வ

சரீரம் பிணைய

சக்தி பீறிட

பாய்ச்சல் நிகழ்ந்திட

ஆடி அடங்கும்

அகிலத் தொடையில்

அடங்கிடும்

அவன் இனவெறி..!

 

கன்னி அவளும்

கலவி கண்டு

தேவை முடித்து

சேவை தந்து

அயர்ந்தாள்..

உருகி ஓடும்

திரவங்கள் கலந்திட

முந்தி ஓடும்

ஒற்றை விந்தின்

வெற்றியில்

உயிர் ஒன்றை

உருவாக்கும்

இயற்கையின்..

இயந்திரமாய்

முட்டை தந்து..!<<<<<<<<<<

 

 

 

 

 

 

 

நெடுக்ஸ் அண்ணை!! அதெப்படி உங்களுக்கு மாத்திரம் இப்படி மூளை வேலை செய்யுது?!!!!!!!!!!!!!....தெரியவில்லை; ஆனால் ஒரே ஒருமுறை ‘பிரசவவேதனையில் இருக்கும் ஒரு பெண்ணை நீங்கள் பார்த்திருந்தீர்களானால்.........................நிச்சயம் உங்களால் இப்படி எழுத முடியாது அண்ணை!. பிள்ளைப்பேறு என்பது அத்தனை சுகமல்ல! சுலபமும் அல்ல!.

 

அதிலும் உங்கள் சொல்லாடலில் ஒரு பிழை இருக்கிறது ‘கன்னி அவளும் என்றெழுதி இருக்கின்றீர்கள். ‘திருமணமாகாதவர்களைத்தான் ‘கன்னி’ என்று குறிப்பிடுவார்கள்.  பெண்களைச்சாடுவதில் அப்படி என்ன சுகம் காண்கின்றீர்கள் என்பது புரியவே இல்லை!

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கு.சாண்ணா: நீங்கள் நிறைய சமூகத் தள சகதிக்குள் சிக்குண்டு இருக்கிறீர்கள். அதற்குள் இருந்து வெளிய உங்களை இழுத்தெடுக்கிறது கஸ்டம். இது அதற்கான முயற்சியும் அல்ல. இது இதுதான் இந்த உலகில் எல்லாவற்றையும் கடந்த மறைந்து கிடக்கும்.. உண்மை என்பதை நோக்கி சிந்திக்க  உருவாக்கப்பட்டது. :lol:

 

மல்லையூரன்: நண்டியின் இடம்பெயர்வில்.. சங்கு ஊர்வதாக நீங்கள் நினைப்பதை.. நாங்கள் சொல்கிறோம்.. நண்டு என்ற இயற்கையின் பொறி சங்கு என்ற பிற இயந்திரம் ஒன்றின்.. புறப்பகுதியை.. காவி இடம்பெயரச் செய்கிறது என்று. நீங்கள் சொல்கிறீர்கள்.. அது பொறியல்ல.. நண்டு என்று..! இதுதான் இங்கு உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு. :icon_idea::)

 

ஆமிக்காரன்: இந்த இயந்திரத்தின் பிடிக்குள் சிக்கி சிதைந்து நொந்து நூடில்சான ஆக்களை பார்த்துத் தானே எச்சரிக்கிறீங்க. :lol:

 

சுவி அண்ணா: நீங்கள் பிரசவ அறையில் இருந்து பார்ப்பதை பெண் என்றீங்க. பிண அறையில் உள்ளதை பிணம் என்றீங்க. நாங்க பிரசவ அறையில் இருப்பதையும்.. பிண அறையில் இருப்பதையும்... பெண்  என்றோ சொல்கிறோம். ஒன்று இயங்குகின்ற இயந்திரம். மற்றது இயங்க முடியாத இயந்திரம்..! அவ்வளவு தான். ஓடுகிற காரை வீட்டில வைச்சிருப்போம். ஓடாத காரை.. கராச்சில விட்டிடிறம் இல்லையா. ஆனால் இரண்டையும்  கார் என்று தானோ சொல்கிறோம். அதுபோல..! :icon_idea::)

 

தமிழ்தங்கை: நீங்கள் சொல்வதை தான் நாங்களும் சொல்கிறோம். பெண்.. இனப்பெருக்கத்திற்கான இயற்கையின் மதிநுட்ப தயாரிப்பில்.. உருவான.. இயந்திரம் என்று. அந்த இயந்திரத்திற்கு.. நோகுது.. வலிக்குது.. என்பதை வெளில உணர்த்த முடியுது. சொல்ல முடியுது. அது இயற்கை அதற்கு தந்த இயல்பு. இதே ஒரு உணர்வை..நாம செலுத்தும்.. காருக்கு வைச்சிருந்தா.. அது மனிதர்கள் நாங்கள் செய்யுற ஆக்கினைக்கு எத்தினை சொல்லி திட்டும். அந்த பெண் என்ற இயந்திரம் உணரும் உணர்த்தும் வலியை இந்த ஆண் என்ற இயந்திரமும் உணர்ந்து கொள்கிறது. அதைப் பற்றி அல்ல இங்கு பேச்சு. பெண்.. என்பது இதுதான் என்பதே பேச்சு. :lol::)

 

கலியாணம் கட்டித்தானா எல்லா உயிரினமும் இனப்பெருக்கம் செய்யுது. இல்லைத் தானே. மேலும் கலியாணம் கட்டின பெண்களை.. கன்னி என்று சொல்வதில்லை என்றால் அதற்கு என்ன காரணம்..????! கலியாணம் கட்டிறப்போ.. பொதுவா மனிதப் பெண்கள் கன்னிகள் தானே. கலியாணம் கட்டின அடுத்த நொடி.. அது இல்லாமல் போயிடுமா..??!  :):icon_idea:

Edited by nedukkalapoovan

மல்லையூரன்: நண்டியின் இடம்பெயர்வில்.. சங்கு ஊர்வதாக நீங்கள் நினைப்பதை.. நாங்கள் சொல்கிறோம்.. நண்டு என்ற இயற்கையின் பொறி சங்கு என்ற பிற இயந்திரம் ஒன்றின்.. புறப்பகுதியை.. காவி இடம்பெயரச் செய்கிறது என்று. நீங்கள் சொல்கிறீர்கள்.. அது பொறியல்ல.. நண்டு என்று..! இதுதான் இங்கு உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வேறுபாடு.  :icon_idea:  :)

 

 

ஒருமனிதன் மூச்சு விடுவதை நிறுத்போவதாக இருந்த்ததால் ஆப்பிரேசனுக்கு போகிறான். அவனுக்கு இன்னொருவனின் சுவாசப்பை மாற்றப்படுகிறது.  இப்போது அவ்ன் மூச்சு விடுகிறான். அந்த மனிதன் இப்போது யார் என்ற சர்ச்சை கிழம்புமா? உயிர் இருந்த மனிதனா, உயிரற்ற சுவாசப்பையா அந்த மனிதன்?

 

இயங்காமல் சடத்துவமாக இருக்கும் முட்டையை தானாக இயங்கிச்சென்று கருக்கட்டவைக்கும் உயிரை முட்டை காவி வரவில்லையே.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணை,

 

‘அவள் ஒரு இயந்திரம்’ என்று நீங்கள் எழுதியது பிழை என்பதுதான் இங்குள்ள பேச்சு:).

 

‘உள்வாங்குதல்’ என்பது ‘இறைவனோ இல்லை நம்பாதவற்கு இயற்கையோ பெண்களுக்கு கொடுத்த கொடை!. ‘ஆண்களால் எதையும் உள்வாங்க முடியாது!:).  அதற்கு நீங்களே நல்லொரு சான்று!...இத்தனை பேர் சொல்லியும் ‘மூன்றுகால் என்று நிற்கின்றீர்களே! சரி அதை விடுங்கள்.

 

 

‘பெண்களை’ ஒரு இயந்திரம் என்றளவில் வைத்துத்தான் தங்களால் பார்க்க முடியும் என்பது உங்கள் அறிவுக்கு எட்டியது. இதில் என்னத்தை நான் சொல்ல!

 

 

‘தேவதை என்று கவி பாடுவதும்,, அதிசயமென்று வாய் பிளப்பதும் ஆகாயம் என்று அண்ணாந்து பார்ப்பதும் ‘ஆண்கள் தான்! ‘பெண்கள் தங்களைத்தாங்களே புகழ்ந்துகொண்டு திரிவதில்லை!. ஆண்கள் ஏற்படுத்திய ‘கோட்பாடுகளில் இப்போது புதிதாக நீங்கள் ஒன்றைச்சொல்கின்றீர்கள்!.

 

‘அதை மறுப்பதற்கு மட்டுமே எனக்கு உரிமை இருக்கிறது!. ‘உங்கள் எழுத்தில் எனக்கு உடன்பாடு இல்லை:)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்.. அதியசமோ, ஆகாசமோ இல்லை. இனப்பெருக்கத்திற்கான இயற்கையின் இயந்திரம்.

 

 

ஏனுங்க நெடுக் சாமி? கொஞ்சம் மாத்தி யோசிச்சு பாருங்க...

 

neduks_zps97ae725d.jpg

 

உதுவும் நல்லாய்த்தானுங்க இருக்கு சாமியோவ்.....
 
அவங்க செய்ததை  அதுதான் அந்த மிசின்...மிசின் செய்ததை நீங்களும் செய்யலாமெல்ல????  
அட விஞ்ஞானம் வளர்ந்துட்டுதெல்லே!!!!
நீங்களும் பிள்ளை பெத்து பாருங்க! அனுபவத்தை சொல்லுங்க....நாங்களும் கேப்பம் :lol:
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் அண்ணா, ஒரு பெண்ணில்லாத வீடு, கடவுள் இல்லாத கோயில் மாதிரி. அந்த பெண் தாயோ, தாரமோ, சகோதரமாகவோ இருக்கலாம். அறிவியல் அறிவியல் என்று சொல்லி ஒரு உயிரை இந்த உலகிலே பிறப்பிக்கிற பெண்ணை, தாயை, இயந்திரம் என சொல்ல உங்களுக்கு எப்படி மனது வருகிறது? உயிரையே உருக்கி ஒரு தாய் ஒரு பிள்ளையைப் பெறுகிறாள். அவள் மிசினா? வேணும் எண்டா நீங்கள் மூண்டு பிள்ளையப் பெத்துப் போட்டிட்டு பெண்ணை இயந்திரம் எனக் கவிதை எழுதலாம். இந்த அறிவியலால் விளக்க முடியாத, எத்தனையோ விசயங்களும்  நோய்களும் துன்பங்களும் இந்த உலகிலே இருக்கும் போது அறிவியலைச் சாட்டி பெண்ணை இயந்திரம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

எத்தனை பெண்களை ஆராய்ச்சி செய்து போட்டு இப்படி பெண் அதிசயமல்ல என்ற முடிவுக்கு வந்தீர்கள்? பெண்மையின் மென்மையும், அழகும், அறிவும் வாழ்நாள் முழுக்க ஆராட்சி செய்தாலும் முடிவுக்கு வரமுடியாத இரகசியங்கள் கொண்டது. பெண்மையை உருப்படியாக அனுபவிக்காத நீங்கள் அந்தப் பெண்மை குறித்து கருத்துக்கூற தகுதி அற்றவறாகிறீர்கள். பொம்பிளைய வெட்டிப் பார்க்கிறதும், அதே எலும்பு ரத்த சதைக் கலவையோட குடும்பம் நடத்துவதும் ஒன்றல்ல.

இப்போது இல்லைமயிலே, இப்படித்தான் கவிதை வரும். நாளை முதுமையிலே நாடி அடங்கும் போது, தளர்ச்சி வரும் போதுதான் இயந்திரத்தை விட பெண் ஏன் மேலானவள் எண்ட விளக்கம் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஏனுங்க நெடுக் சாமி? கொஞ்சம் மாத்தி யோசிச்சு பாருங்க...

 

neduks_zps97ae725d.jpg

 

உதுவும் நல்லாய்த்தானுங்க இருக்கு சாமியோவ்.....
 
அவங்க செய்ததை  அதுதான் அந்த மிசின்...மிசின் செய்ததை நீங்களும் செய்யலாமெல்ல????  
அட விஞ்ஞானம் வளர்ந்துட்டுதெல்லே!!!!
நீங்களும் பிள்ளை பெத்து பாருங்க! அனுபவத்தை சொல்லுங்க....நாங்களும் கேப்பம் :lol:

 

 

இதே மிசின் என்றதனை தானே உறுதி செய்யுது. பெற்றோலில ஓடுற காருக்கு.. செட்டையை வைச்சு.. பறக்க விட்டால்.. அது ஏரோ பிளேன்..! செட்டையை கழற்றி விட்டால் கார்.. இதுக்குப் போயி...! :)

 

 

நெடுக்குக்கு சொல்லுறமாதிரியே... ரெண்டு மூன்று வரி இருக்கு இந்தப் பாடலிலே...

 

 

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mlKjPHLlEGw#t=80

Edited by கவிதை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.