Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவைத்(தேன்)

Featured Replies

வணக்கம் கள உறவுகளே ,

பிரபல்யமான கவிஞர்கள் பொதுவாகக் கருத்துக்களங்களை எட்டிப் பார்ப்பதில்லை என்ற மனக்குறை எனக்குப் பலகாலமாகவே உண்டு . விதிவிலக்காக ஈழத்தின் விலைமதிக்கமுடியாத கவிஞரான வா செ ஐ என்ற அழைக்கப்படும் பொயட் யாழ் இணையத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்வேன் . நான் வாசித்த பிரபல கவிஞர்களின் கவிதைகளில் என்னைப் பாதித்த ஒரு சில கவிதைகளை இந்த சுவைத்( தேன் ) பகுதியில் பதிவிடலாம் என நினைகின்றேன் . இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் .

நேசமுடன் கோமகன்
**************************************************************************

01 புத்தி

melted-mind.jpg

தனக்குப் புத்தி
நூறு என்றது மீன் -
பிடித்துக் கோர்த்தேன்
ஈர்க்கில் .

தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது ஆமை -
மல்லாத்தி ஏற்றினேன்
கல்லை .

எனக்குப் புத்தி
ஒன்றே என்றது தவளை,
எட்டிப் பிடித்தேன்-
பிடிக்குத் தப்பி
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை -

"நூறு புத்தரே !
கோர்த்தாரே !
ஆயிரம் புத்தரே !
மல்லாத்தாரே!
கல்லேத்தாரே !
ஒரு புத்தரே !
தத்தாரே!
பித்தாரே !

நான் அண்மையில் வாசித்த குவர்நிகாவில் வெளிவந்த கற்சுறா எழுதிய பிரமிளின் கவிதைகள் தொடர்பாக எழுதிய கட்டுரையில் எனக்குப் பிடித்த பிரமிளின் கவிதையில் ஒன்று . இந்தக் கவிதையில் எனது புரிதல் என்னவென்றால் பிரமிள்
கவிதையைத் தவளையாக்கி இருக்கின்றார் . புத்தியைப் புத்தராகியிருக்கின்றார் . தத்தலை தத்ராக்கி யாரைப் பித்தராக்கியிருக்கின்றார் ?? அதற்கும் அப்பால் வேறு எதோ இதற்குள் இருக்கின்றது . இன்னும் எனக்கு விளங்கவேயில்லை . உங்களுக்கு ஏதாவது விளங்கியதா ??
 
*******எழுத்துப்பிழை திருத்தப்பட்டது

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதையினைப் பற்றி முன்னர் படித்திருந்தேன்! ஆனால் சுயமாக ஒரு விளக்கமும் தரமுடியாது.

--------

அன்புள்ள ஜெயமோகன்,

இத்துடன் பிரமிளின் ‘தவளைக் கவிதை’ பற்றிய எனது புரிதலை உங்களுக்கு அனுப்புகின்றேன். அண்மையில் எழுத்தாளர் கற்சுறா பிரமிள் கவிதைகள் பற்றிக் கூறிய காணொளி பார்த்தபோதும், பிரமிள் கவிதைகள் நூலினை வாசித்தபோதும் மேற்படி பிரமிளின் ‘தவளைக் கவிதை’ பற்றி எழுந்த எனது எண்ணவோட்டங்களின் பிரதிபலிப்புகளே எனது இக்கருத்துகள். ஒரு பிரதிக்குப் பலவகையான புரிதல்கள் சாத்தியம். அவ்விதமான சாத்தியங்களை உள்ளடக்கி இருப்பதென்பது சிறந்ததொரு பிரதியின் முக்கிய பண்புகளிலொன்றாகக் கருதுபவன் நான். அந்த வகையில் இது பற்றிய உங்கள் புரிதல்களையும் அறிய அவாவுடனுள்ளேன். அது மேலும் என் புரிதலை அதிகமாக்கலாம். அதே சமயம் இவ்விதமான கருத்துப் பரிமாறல்கள் ஆரோக்கியமானவை; இன்பமளிப்பவை.

அன்புடன்.
வ.ந.கிரிதரன்

தவளைக் கவிதை

- பிரமிள் -

தனக்கு புத்தி
நூறு என்றது மீன் -
பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில்
தனக்குப் புத்தி
ஆயிரம் என்றது ஆமை -
மல்லாத்தி ஏற்றினேன்
கல்லை.
‘எனக்கு புத்தி
ஒன்றே’
என்றது தவளை,
எட்டிப் பிடித்தேன் -
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை -
’நூறு புத்தரே!
கோர்த்தரே!
ஆயிரம் புத்தரே!
மல்லாத்தரே!
கல்லேத்தரே!
ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!

மேற்படி பிரமிளின் ‘தவளைக்கவிதை’ பற்றி எழுத்தாளர் கற்சுறா அண்மையில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வொன்றில் கவிதை பற்றி ஆற்றிய உரையினை உள்ளடக்கிய காணொளியொன்றினை முகநூற் பக்கத்தில் பார்க்க, கேட்க முடிந்தது. மேற்படி தனது உரையில் கற்சுறா மேற்படி கவிதை பற்றிக் குறிப்பிடும்போது ஆரம்பத்தில் தனக்கு, தனக்கு என்று கூறியவர் பின்னர் எனக்கு என்று கூறுவதை முக்கியதொரு விடயமாகக் கருதுகின்றார். அதற்கேதாவது முக்கிய காரணமிருக்கக் கூடுமோ என்று ஆராய்கின்றார். முதலிரு தடவைகள் தனக்கு, தனக்கு என்பதைப் படர்க்கையில் கூறியிருக்கின்றார். எனக்கு என்று கூறும்போது தவளையில் கூற்றாக ‘எனக்கு..’ என்று கூறியிருக்கின்றார். இதுவும் தனக்கு புத்தி ஒன்றே என்றது தவளை என்பதும் ஒன்றே. இதற்கு மறைமுக அர்த்தம் ஏதாவதிருக்கக் கூடுமோ என்று கருதத்தேவையில்லை என்பதென் புரிதல்.

நூறு புத்தி உள்ள மீனை எடுத்துக் கோத்திட முடிந்தது ஈர்க்கில். மீன் பெருமைப்பட்ட புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியவில்லை. இது போல் தன் புத்தி அதனிலும் அதிகமென்று பெருமைப்பட்ட ஆமையை மல்லாத்தி விட்டால், அதன் மேல் கல்லை ஏற்றி வைத்து விட்டால், அதன் கதை அவ்வளவுதான். அதனால் மீண்டும் நிமிர்ந்திட முடிகிறதா? ஆமை பெருமைப்பட்ட அதன் புத்தியால் அதனைக் காப்பாற்ற முடியுமா? ஆனால் இவற்றுடன் ஒப்பிடும்பொழுது குறைந்தளவே புத்தி உடையதாகக் கூறிக்கொள்ளும் தவளையை மட்டும் பிடிக்க முடிந்ததா? இங்கு கவிஞர் தவளையைக் கவிதையாக உருவகிக்கின்றார். அந்தத் தவளையோ கைகளுக்கு அகப்படாமல் தத்தித் தத்திச் செல்கிறது. இலக்கியத்தின் ஒரு பிரிவான கவிதையைத் தவளையாக உருவகித்திருப்பதால் (தவளை கவிதை என்று கூறாமல் , தவளைக்கவிதை என்று கூறியிருப்பதால்; தவளை கவிதை என்று கூறியிருந்தால், தவளையும் கவிதையும் என்று பொருளாகியிருக்கும்), நூறு புத்தியுள்ள மீனையும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையையும் ஏனைய பிரிவுகளாகக் கருதலாம். ஒரு விதத்தில் நூறு புத்தியுள்ள மீனை சிறுகதைக்கும், ஆயிரம் புத்தியுள்ள ஆமையை (ஆடி அசைந்து நிதானமாகச் செல்வதால்) நாவலுக்கும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிறுகதை எழுதுவதற்குரிய அறிவுத் தேடலை விட நாவல் எழுதுவதற்குரிய தேடல் மிக அதிகம். அதனால்தான் சிறுகதைக்குரிய அறிவுத் தேடலை நூறு புத்தியாகவும், நாவலுக்குரிய தேடலை ஆயிரம் புத்தியாகவும் எழுத்தாளர் கருதுகின்றார். ஆனால் கவிதைக்குரிய அறிவுத் தேடல் அதிகமாக இல்லாவிட்டாலும் (அதனால்தான் தவளைக் கவிதை தனக்கு ஒரு புத்தி என்கின்றது), மேலும் ஏனைய பிரிவுகளை விட , கவிதையானது உணர்ச்சியின் விளைவாக உருவாவது. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளுக்குத் தேவையான அறிவுத்தேடலும், ஆக்குவதற்குரிய நேரமும் இதற்குத் தேவையில்லை. ஆனால் , நல்லதொரு கவிதையினை உருவாக்குவது சிறுகதையினை எழுதுவதை விட, நாவலொன்றினை எழுதுவதை விடச் சிரமமானது. அதனால் தான், கவிதையானது எழுத்தாளரின் பிடிக்குள் அகப்படாமல் தத்தி, நழுவிச் செல்கிறது. அதனால்தான் எழுத்தாளர் கவிதையினைத் தவளையாக உருவகிக்கின்றார்.

நூறு புத்தரே!
கோர்த்தரே!

நூறு புத்தியுள்ளதால் நூறு புத்தரே என்றார்.

ஆயிரம் புத்தரே!
மல்லாத்தரே!
கல்லேத்தரே!

ஆயிரம் புத்தியுள்ளதால், ஆயிரம் புத்தரே என்றார். இவ்விதம் ஆயிரம் புத்தி என்று பெருமைப்பட்ட ஆமையை மல்லாத்தி, கல்லை ஏற்றியதும் அதன் ஆட்டம் சரி. அதனால்

ஆயிரம் புத்தரே!
மல்லாத்தரே!
கல்லேத்தரே!

என்றார்.

ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!

எழுத்தாளரின் கட்டுப்பாட்டுக்குள் அகப்படாமல், தத்தித் தத்திச் செல்வதால், ஒரு புத்தியுள்ள தவளைக் கவிதையினை

ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!

என்றார்.

கவிதையைப் பொறுத்தவரையில் இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளைவிட எழுதுவது மிகவும் இலகுவானதென்று பலர் எண்ணி விடுகின்றார்கள். அதனால்தான் புற்றீசல்கள்போல் தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர்கள் முளைத்து விடுகின்றார்கள். உண்மையில் பிரமிள் புற்றீசல்கள்போல் படையெடுத்த புதுக்கவிஞர்களால் நிறைந்துவிட்ட அன்றைய தமிழ் இலக்கியப் பரப்பின் மீதான விமர்சனமாகத்தான் மேற்படி ‘தவளைக்கவிதை’ என்னும் கவிதையினை எழுதியிருக்கின்றாரென்று படுகிறது. கவிதை எழுதுவதை மிகவும் இலகுவாக எண்ணி ஆயிரக்கணக்கில் கவிதைகளைப் பொழிந்து தள்ளும் கவிஞர்களை நோக்கி, ‘நீங்கள் மிகவும் இலகுவாகக் கருதிப் படைக்கின்றீர்களே கவிதைகள். அவை கவிதைகளே அல்ல. இலக்கியத்தின் ஏனைய பிரிவுகளை விடக் கவிதை எழுதுவதுதான் மிகவும் சிரமமானது.’ என்று சாடுகின்றார் பிரமிள். இவ்விதமாக பொழியப்படும் கவிதைகளை மேற்படி காணொளியில் எழுத்தாளர் கற்சுறாவும் சாடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும்

எனக்கு புத்தி
ஒன்றே’
என்றது தவளை,
எட்டிப் பிடித்தேன் -
பிடிக்குத் தப்பித்
தத்தித் தப்பிப்
போகுது தவளைக்
கவிதை -

என்று கவிதையின் ஆரம்பத்தில் கூறிய பிரமிள் இறுதியில்

ஒரு புத்தரே!
தத்தரே!
பித்தரே!

என்கின்றார். ‘ஒரு புத்தி என்றது தவளை. அதாவது கவிதை. அதனைக் கையாளத் தெரியாத தத்துக்குட்டிகள் இவர்கள். யார்? ஆயிரக்கணக்கில் புற்றீசல்களைப் போல் பெருகியிருக்கும் தமிழ்க் கவிஞர்கள். கவிதையோ இவர்களின் கைகளில் அகப்படாமல் தத்தித் தத்தி ஓடுகிறது. இவர்களும் அதன் பின்னால் தத்தித் தத்தி ஓடுகின்றார்கள். ஆனால் கவிதைதான் இவர்கள் கைகளுக்கு அகப்படவில்லை. இவர்கள் கவிஞர்களா? பித்தர்கள் இவர்கள் என்று சாடுகின்றார். மேற்படிக் கவிதைக்குத் ‘தவளைக் கவிதை’ என்று தலைப்பிட்டுள்ளதால் கவிதையின் முதன்மைப் பொருள் சமகாலத் தமிழ்க் கவிதையும் அதனைப் படைக்கும் கவிஞர்களும். மேலும் மேற்படி கவிதையினை இன்னுமொரு கோணத்திலும் அணுகலாம். எதற்காகக் கவிதையினைத் தவளைக் கவிதை என்றார்? குறைந்த அளவு அறிவுத் தேடலும் ஆயிரக்கணக்கில் பிரசவிக்கப்படும் இன்றைய தவளைக் கவிதையானது தத்தித் தத்தித் தப்பிப் போகுது. எதனிடமிருந்து உண்மைக் கவிதையிடமிருந்து. தவளைக்கு இன்னுமொரு பெயர் மண்டூகம். மண்டூகம் என்பதற்கு இன்னுமொரு பொருள்: மண்டுகளின் ஊகம். அதாவது முட்டாள்களின் ஊகம். ஆக, இன்றைய தமிழ்க் கவிதையானது மண்டுகளின் ஊகம் என்று சாடுகிறாரோ பிரமிள்?

மேற்படி தனது உரையில் கற்சுறா புத்தரே என்பது புதுமைப்பித்தனையும், தத்தரே என்பது தத்துவமேதை கிருஷ்ணமூர்த்தியினைப் பற்றியதாகவுமிருக்குமோ என்று சந்தேகமொன்றினை எழுப்பியிருப்பார். அது அவரது புரிதலென்றால், அதில் நான் தலையிட முடியாது. ஏனெனில் ஒரு படைப்பானது படைக்கப்பட்டதுமே அதன் ஆசிரியர் இறந்துவிட்டாரென்றும் கருத்தொன்று நவீன இலக்கியத்தில் நிலவுகின்றதல்லவா? அதன்படி ஒரு படைப்பை வாசிக்கும் ஒவ்வொருவருவரும் ஒரே மாதிரிப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடோ, தேவையோ இல்லையல்லவா? ஒவ்வொருவரும் தத்தமது அறிவுக்கேற்ப ஒவ்வொருவகையில் விளங்கிக்கொள்ளலாம். ஒரு படைப்புக்கு இவ்விதமாகப் பல புரிதல்கள் இருக்கலாம். ஆனால் என் புரிதல் இது. அவ்வளவே. இந்தப் புரிதல்கூட இன்னுமொரு சமயம் இன்னுமொரு புரிதலாகப் பரிணாமம் அடையலாம். அதற்கான சாத்தியமும் உண்டு.

கனடா இலக்கியவானில் அண்மைக்காலமாகத்தான் கற்சுறாவின் உரைகளைப் போல், படைப்புகளைப் பற்றிய விமர்சனங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன. இது ஆரோக்கியமான அறிகுறி. இதுபோன்ற கருத்தரங்குகளும், திறனாய்வுகளும் தொடரட்டும்.

பதிவுகள்: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1539:-17-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54
கற்சுறாவின் காணொளி: https://www.youtube.com/watch?feature=player_embedded&v=fMdFcEnRrw

வ.ந.கிரிதரன்

-----------------

அன்புள்ள கிரிதரன்,

ஒரு கவிதையை வாசிக்க குறைந்தபட்ச வாசிப்பு அதிகபட்ச வாசிப்பு என இரு தளங்களை உருவாக்கிக்கொள்வது பயனளிக்கும் என்பது என் எண்ணம்.

குறைந்தபட்ச வாசிப்பு என்பது அந்தக்கவிதை உருவான மொழி-பண்பாட்டுச்சூழலில் கவிதையின் வரிகள் மூலம் பொதுவாக அடையச்சாத்தியமான அர்த்தம். அந்த மொழி-பண்பாட்டுச்சூழலில் உள்ள, கவிதையின் தனிமொழியை கற்பனைமூலம் விரித்து அறியும் பயிற்சி கொண்ட எல்லா கவிதைவாசகர்களும் ஏறத்தாழ அடையக்கூடிய வாசிப்பு அது.

ஒரு வகுப்பில், ஒரு விவாதக்கூடத்தில், ஓர் வாசிப்பரங்கில் எப்போதும் அந்தக் குறைந்தபட்ச வாசிப்பைத்தான் முதலில் முன்வைக்க முடியும். இந்த வரிகள் இவ்வாறெல்லாம் பொருள் அளிக்கின்றன, ஒட்டுமொத்தமாக இக்கவிதை இந்தப் பொருளை, இந்த உணர்வை, இந்த தரிசனத்தை அளிக்கிறது என்று சொல்லலாம்.

அப்படிச் சொன்னதுமே அதை அங்குள்ள ஒவ்வொருவரும் தாண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் தனிப்பட்ட வாசிப்பைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதைத்தான் அதிகபட்ச வாசிப்பு என்கிறேன்.

அப்படி அந்தரங்க வாசிப்பு நிகழ்கையில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தனித்த அர்த்தங்களை அளிப்பதைக் காணமுடியும்.கவிதை வெவ்வேறு தனிப்பட்ட உணர்ச்சிகளுடனும் தனிப்பட்ட அனுபவங்களுடனும் தொடர்பு கொண்டு விரிவதை உணரமுடியும். வெவ்வேறு கவிதைகளுடன் அக்கவிதையை ஒவ்வொருவரும் இணைத்துக்கொள்வதை காணமுடியும்.

இவ்வாறு அனைவரும் தங்கள் வாசிப்பைச் சொல்லிமுடிக்கையில் அத்தனை வாசிப்பும் சேர்ந்து அந்தக் கவிதையை முன்னகர்த்தி இன்னொரு பொதுஅர்த்தம் நோக்கிக் கொண்டுசென்றிருப்பதைக் காண்போம். அதன்பின் மறுநாள் அதேகவிதையை விவாதிக்க அமர்ந்தால் அந்த முதல்கட்ட குறைந்தபட்ச வாசிப்பு முந்தைய நாள் நிகழ்ந்த அதிகபட்ச வாசிப்பின் ஒட்டுமொத்தமாகவே இருக்கும்

இவ்வாறுதான் கவிதைகள் சமூகத்தால் வாசித்து உள்வாங்கப்படுகின்றன. ஒரு கவிதை வெளியான உடனே அதன் வாசிப்பு நிகழ்வதற்கும் சிலவருடங்கள் கழித்து அதன் வாசிப்பு நிகழ்வதற்கும் நடுவே பெரும் வேறுபாடு உள்ளது. ஆரம்பத்தில் முற்றிலும் புரியாதவையாகக் கருதப்பட்ட பல கவிதைகள் ஒரு தலைமுறைக்காலம் தாண்டியதும் மிக எளிய கவிதைகளாக ஆகிவிடுகின்றன.

இப்படிச் சொல்கிறேன். கற்சுறாவின் வாசிப்பு என்பது அவரது அந்தரங்கமான அதிகப்ட்ச வாசிப்பு. அப்படி வாசிக்கக்கூடாதென்றில்லை. கவிதையில் உள்ள சொற்கள் சொல்லப்படுபவை அல்ல, ‘வந்துவிழுபவை’. அவை ஏன் வந்து விழுந்தன என்று நாம் யோசிப்பது கவிதை வாசிப்பின் ஒரு முக்கியமான கூறுதான்.

உங்கள் வாசிப்பு இன்னொரு அதிகபட்ச வாசிப்பு. உங்களைப்போல இன்னும் பத்துபேர் அமர்ந்திருக்கும் சபையில் இன்னும் பத்துவாசிப்புகள் வெளிவரும். கவிதை அந்த[ பத்துக் கோணங்களின் சமரசப்புள்ளியில் தன் அர்த்ததை நிகழ்த்திக்கொண்டிருக்கும். சென்ற இருபதாண்டுக்காலத்தில் முப்பத்திரண்டு கவிதையரங்குகளை நிகழ்த்தியிருக்கிறோம். தமிழிலும் மலையாளத்திலும் உள்ள மிகச்சிறந்த கவிஞர்கள் அமர்ந்து அவர்களின் கவிதைகளை விவாதித்திருக்கிறார்கள். இந்த ‘அர்த்தம்திரளல்’ நிகழ்துவருவதைக் கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.

ஆகவே கடைசி அர்த்தம் என ஒன்றில்லை. கவிதை என்பது ஓர் ஆழ்மன எழுச்சி மொழியைச் சந்திக்கும் ஒரு கணம் மட்டுமே. அர்த்தம் மூலம் அது தன்னை நிகழ்த்துவதில்லை, வாசகர்களில் உருவாக்கும் ஆழ்மன எழுச்சி மூலமே நிகழ்த்துகிறது.

கடைசியாக, இருபதாண்டுகளுக்கு முன் இக்கவிதைபற்றி பிரமிளிடம் பேச நேர்ந்திருக்கிறது. பிரமிள் அன்று தமிழில் ஒலிக்கக்கேட்ட அரைவேக்காட்டுக் கோட்பாட்டுக்கூச்சல்களைக் கண்டு எரிச்சலுற்று இதை எழுதினதாகச் சொன்னார். நூறும் ஆயிரமும் அறிந்தவன் அசட்டுத்தனமாக ஒன்றில் நிற்கையில் உள்ளுணர்வெனும் ஒன்றை மட்டும் அறிந்தவன் முன்செல்வதைச் சொல்லியிருக்கிறேன் என்றார்.

நான் சொன்னேன், இக்கவிதையில் ‘தவளைக் கவிதை’ என்ற சொல்லாட்சி எனக்கு அதிகமாகப் படுகிறது. கவிதையை நீங்கள் இப்படி அர்த்தம்கொள்ளவேண்டும் என்று சொல்வதுபோல் உள்ளது. வெறுமே ’தவளை’ என்று மட்டும் சொன்னாலே போதுமே -என்று

வழக்கம்போல பிரமிள் கடும் சினம் கொண்டு கத்த ஆரம்பித்தார். ‘நீ என்ன பெரிய புடுங்கியா?’ என்ற தரத்தில்.

வழக்கம்போல நான் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் பேசாமல் நின்றேன்.

அதன் பின் அவரே ‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’ என்றார்

‘புத்தரே’ என்ற சொல் உங்களை மீறி விழுந்தது. எனக்கு அது கவிதையை மீறிய அர்த்தத்தை அளிக்கிறது. நான் ஆயிரம்காலடிச்சுவடுகள் என்ற ஒரு நாவலை எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஆயிரம் புத்தர்களைக் காட்டமுயலும் நாவல். [எழுதிமுடிக்காமல் கையில் இருக்கிறது] அதனுடன் இந்தக்கவிதை ஒத்துப்போகிறது- என்றேன்

என்னிடம் அதை விளக்குமாறு பிரமிள் சொன்னார். நான் சொன்னேன், ஆறு வேகமிழக்கும்போது கிளைகளாகப்பிரிவதுபோல புத்தர் புத்தரல்லாமலாகும்போதுதான் நூறாகவும் ஆயிரமாகவும் பிரிகிறார்.தத்துவ புத்தர், ஆசார புத்தர், வழிபாட்டு புத்தர். அத்தனை புத்தர்களும் பிடிக்குச்சிக்குபவர்கள். ஒற்றைப்புத்தர் நழுவிச்சென்றுகொண்டே இருப்பார்.நடையா, தாவலா, பறத்தலா என்று சொல்லமுடியாதபடி- என்று

பிரமிள் ‘அது ஒரு நல்ல வாசிப்பு’ என்றபின் ‘தவளைக் கவிதை என்று சொன்னதால் மட்டும் அப்படி வாசிக்கமுடியாமல் ஆகிறதா என்ன?’ என்றார்.

நான் ‘அது தடையாக இருக்கிறது’ என்றேன்.

பிரமிள் ‘எந்தக் கவிதையிலும் கவிதைவாசகன் சில சொற்களைத் தன்னையறியாமலேயே நீக்கம்செய்துகொண்டுதான் வாசிக்கிறான்’ என்றார். ‘கவிதையை நல்ல வாசகன் திரும்பச்சொல்லும்போது நுட்பமான ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கும்…சொற்கள் இடம் மாறியிருக்கும். வேறு சொல் வந்து சேர்ந்திருக்கும். கண்டிப்பாக சில சொற்கள் இல்லாமலாகியிருக்கும்’

அதற்கு உடனே ஒரு உவமை சொன்னார். அதுதான் பிரமிள். ஹென்றி ஷாரியரின் பாப்பில்யான் நாவலில் அலுமினியக்குழாய்களில் பணம் வைத்து மலக்குடலுக்குள் செருகுவார்கள். இரண்டு மூன்று குழாய்கள். ஆனால் வெளியே எடுக்கும்போது எப்போதும் உள்ளே போன வரிசைமுறை மாறியிருக்கும். அதைப்போலத்தான். உள்ளே சென்ற கவிதை அங்கே அவனுக்குள் கிடந்து புரள்கிறது, மாறுகிறது.

நான் கேட்டேன் ‘வாசகன் கவிதையில் சொற்களைச் சேர்ப்பதுண்டா?’ .

‘சேர்த்தால் அவனைச் செருப்பாலடிக்கவேண்டும்’ என்றார் பிரமிள்

ஜெ

http://www.jeyamohan.in/?p=37243

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல திரி கோமகன். ஒரு சிறிய கவிதைக்குள் இத்தனையா.?????

  • தொடங்கியவர்

மிக நீண்ட விரிவான பதிலைத் தந்த கிருபன்ஜி க்குமிக்க நன்றிகள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட விரிவான பதிலைத் தந்த கிருபன்ஜி க்குமிக்க நன்றிகள் :) :) .

நன்றி இக்கவிதையைப் பற்றி ஆராய்ந்த கற்சுறா, வ.ந. கிரிதரன், ஜெயமோகன் ஆகியோருக்குத்தான்.

ஜெயமோகன் கவிதை வாசிப்பைப் பற்றிச் சொல்லியுள்ளதை ஏற்றுக்கொள்வதால்தான் கவிதைகளை பிரித்து மேய்ந்து ஆராய்ந்து விமர்சனம் செய்வதில்லை. நல்ல உணவகத்தில் சுவையான உணவை உண்ணும்போது அதனைச் சமைத்த சமையல் விற்பன்னர் எப்படிச் சமைத்தார் என்று ஆராய்வதில்லை. அதுபோலத்தான் இலக்கிய நுகர்வும் எனக்கு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை... அன்பு அண்ணாவே அருமை,
படைப்புகள் சிறப்பென்றால் அதற்கு இறப்பேதும் உண்டோ.

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாய்  1966 /67 என நினைக்கின்றேன் .எனது நண்பனுடன் ஒரு இடத்துக்கு போகும்  போது வழியில் ஒரு கள்ளுக் கொட்டில். நண்பனுக்குத் தாகம். சைக்கிள் தானாகவே சென்று கொட்டிலுக்கு அருகே ஸ்ரண்ட் போட்டு நின்றது . அங்கு ஐந்தாறு பேர் தரித்த பணன்குத்தியில் இருந்து பிளாவில் கள்ளருந்திக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் விடுகதை நிகழ்ச்சி அமோகமாய் போய்க் கொண்டிருந்தது. எனது நண்பனும்   கள்ளுக்குக்குச் சொல்லிவிட்டு  ஒரு குத்தியில் இருந்து  பிளா வைக்க வாகாய்  மண்ணை கும்பியாக்கி வைக்க  கள்ளும் வர மெய் மறந்து அருந்திக் கொண்டிருந்தார். நான்  கனவாய் பிரட்டல் வாங்கி அவருக்கும் கொடுத்து சுவைத்துக் கொண்டிருந்தேன் . சற்று நேரம் விடுகதையில் ஸ்தம்பிதம் ஏற்பட  எனது நண்பன் எடுத்து விட்டான் பாருங்கள் : 

நூத்துப் புத்தர  கோத்திரே  

ஆத்துப் புத்தர  மாத்திரே - கல்லேத்தரே 

ஓத்துப்  புத்தர  தத்திரே .

எல்லோரும் கொஞ்சம் சலசலத்து ஓய்ந்தார்கள் , அமைதி . அன்று அங்கு வந்திருந்த குடிமகன்களுக்கு அது புரியவில்லை . எனக்கும் தான் .(இப்ப அவன்மீது கொஞ்சம் மதிப்பும் கூடிட்டுது .கோதாரி ,அவன் ஐந்தாம் வகுப்புத்தான் படித்தவன்.  நான் ஹீ ...ஹீ...எஸ்.எஸ். சி .நிறையப் கதைப்  புத்தகங்கள் படிக்கிறனான்.) எல்லோரும் அவனிடம் தம்பி விளக்கம் சொல்லுங்கோ என்டீச்சினம். அவனும் கொஞ்சம் பிகு பண்ணிட்டு சொன்னான்.

ஒரு முனிவர் கடற்கரையால நடந்து போறார். அப்போ ஒரு மீனவர், தனக்குத் தானே , இந்த இடத்தில நிறைய மீன் படுது, ஆமையின் தடமும் கிடக்கு,  நாளைக்கு வலை கொண்டு வந்து  எல்லாத்தையும் அள்ளிக் கொண்டு போகணும்  என்றபடி முனிவரைக் கடந்து போறார். இப்ப ஆமை வெளியே வந்து மீனோட கதைக்குது. அந்த மனிதன் நாளைக்கு வலை கொண்டு வந்து எல்லாத்தையும் அள்ளிக் கொண்டு போகப் போறானாம் ஆமையாரே, ஆமையோ அவராவது என்னைப் பிடிக்கிரதாவது, நான் நிலத்திலும் இருப்பன் ,நீரிலும் இருப்பன் எனக்கு ஆயிரம் வழி தெரியும் என்றது. மீனோ எனக்குக் கடல்தான் ,உள்ளே நூறு வழி இருக்கு, இந்தத் தவளையை பார்க்கத்தான் பாவமாய் இருக்கு என்றது. தவளையும் ஓமோம் எனக்குத் தத்துற ஒரு வழியைத் தவிர வேறொன்றும் தெரியாது என்றது. இதை முனிவர் கேட்டுட்டு முனிவரும் தன பாட்டில போறார்.

அடுத்தநாள் அவ வழியால முனிவர் வரும்போது , அந்த மீனவர் வலைவீசிப் பிடித்த மீன்களை ஈர்குல கோர்த்துக் கொண்டு இறுக்கினார் . பக்கத்தில ஆமையை மல்லாக்கப் போட்டு  கல்லு வைத்திருந்தார். தவளை தன பாட்டுக்கு தத்திப் போய்க் கொண்டு இருந்தது. ( நல்ல காலம், அவர் சீன மீனவர் அல்ல ).

அதைப் பார்த்துத் தான் அந்த முனிவர் மேற் கூறியவண்ணம்  பாடினார்.

பிறகென்ன  அவர (நண்பனை) அந்தக்  கள்ளு   பார்ல இருந்து  எழுப்பி  சைக்கிள்  பார்ல இருத்தி மிதித்துக் கொண்டு போனன்.

இது தனிப்பாடல்கள் போல் அல்லது  செவி வழியாக வந்ததை இருக்கலாமென  நான் நினைக்கின்றேன். :rolleyes:  :D .

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி கோமகன்
அதிமேதாவித்தனம் எப்போதுமே ஆபத்தில் வந்து முடியும்

என்பது மட்டும் விளங்குகின்றது
 
  • தொடங்கியவர்

நல்ல திரி கோமகன். ஒரு சிறிய கவிதைக்குள் இத்தனையா.?????

அதுதான் கவி(தை) :D :D . வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் :) :) .

நூத்துப் புத்தர  கோத்திரே  

ஆத்துப் புத்தர  மாத்திரே - கல்லேத்தரே 

ஓத்துப்  புத்தர  தத்திரே .

விளக்கம் சொல்லியும் பலமுறை படித்தபின்பு தான் பாடல் விளங்க முடிகிறது. என்ன வரிகள் !!??

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

காணாமல் போனவன்

1378339_549055635148789_798715409_n.jpg

நடுநிசிப் பொழுதொன்றில்
விழிகள் மூடிக்கொண்டாலும்
மனசு உறங்குவதாயில்லை.

தொலைவில் ஓர் அசரீரி
முனங்குவதும் பின் அலறுவதுமாய்

நிச்சயமாய் அந்த அழுகுரல்
ஓர் ஆண்மகனுடையதாய்தான் இருக்கவேண்டும்
என்னால் நன்றாகவே ஊகிக்க முடிகிறது

பீதி ஆட்கொள்ளும் தருணம்
அது என்றாலும்
ஆவது ஆகட்டும் என்று
கதவுதிறந்து பார்கின்றேன்

அங்கே

முழந்தாளிட்டு
கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டிருக்கிறது

ஆடைகளை காணவுமில்லை

தலையில் துப்பாக்கிச்சூடுபட்டு இறந்தவன்போலும்
மூளை முழுவதும்
வெளித்தள்ளி கிடக்கிறது

இளம் இரத்தம் என்பதால்
ஈரம் காய்ந்திடவுமில்லை .

பிள்ளைக்கு கொடுப்பதற்காய்
அவன் ஆசை ஆசையாய் வாங்கிய கரடிபொம்மை ஒன்றை
வாயில் கவ்வுவதும்
பின்
கீழே போடுவதுமாய் நிற்கிறது
நாய் ஒன்று .

சற்றேநெருங்கி அவன்
முகம் பார்கின்றேன்

ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை

அவன் நெற்றியில்
பெரிதாய் எழுதப்பட்டிருக்கிறது
இவன்
காணாமல் போனவன் என்று ...

-பிரகாசக்கவி-

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

E=mc2  

lega-emc2-l.jpg

ஒற்றைக் குருட்டு
வெண்விழிப் பரிதி
திசையெங்கும் கதிர்க்கோல்கள்
நீட்டி
வரட்டு வெளியில் வழிதேடி
காலம் காலமாய்
எங்கோ போகிறது.
‘எங்கே?’
என்றார்கள் மாணவர்கள்.
ஒன்பது கோடியே
முப்பதுலெச்சம் மைல்
தூரத்தில்
எங்கோ
ஒரு உலகத்துளியின்
இமாலயப் பிதுக்கத்தில்
இருந்து குரல்கொடுத்து,
நைவேத்தியத்தை
குருக்கள் திருடித் தின்றதினால்
கூடாய் இளைத்துவிட்ட
நெஞ்சைத் தொட்டு
‘இங்கே’ என்றான் சிவன்.
‘அசடு’ என்று
மாணவர்கள் சிரித்தார்கள்.

ஒரு குழந்தை விரல்பயிற்ற
ஐன்ஸ்டீனின் பியானோ
வெளியாய்
எழுந்து விரிகிறது.
மேஜையில் அக்ஷர கணிதத்தின்
சங்கேத நதி!
மனித மனத்தின் மணற்கரையில்
தடுமாறும்
ஒரு பழைய பிரபஞ்ச விருக்ஷம்.
நதி பெருகி
காட்டாறு.

காலமும் வெளியும் ஒருமித்து
ஓடும் ஒற்றை நிழலாறு.
ஒரு புதிய பிரபஞ்சம்.
நேற்று நேற்று என்று
இறந்த யுகங்களில்
என்றோ ஒருநாள் அவிந்த
நக்ஷத்ர கோளங்கள்
ஒளிவேகத்தின்
மந்தகதி தரும் நிதர்சனத்தில்
இன்றும் இருக்கின்றன -
காலமே வெளி!

இன்று கண்டது
நேற்றையது,
இன்றைக்கு நாளைக்கு.
இக்கணத்தின் கரையைத்
தீண்டாத
இப்புதிய புவனத்தின் பிரவாகம்
வேறொரு பரிமாணத்தில்.

விரிந்து
விண்மீன்களிடையே
படர்ந்த நோக்கின்
சிறகு குவிகிறது.
பிரபஞ்சத்தின்
சிறகு குவிந்தால்
அணு.

அணுவைக் கோர்த்த
உள் அணு யாவும்
சக்தியின் சலனம்.
அணுக்கள் குவிந்த
ஜடப்பொருள் யாவும்
சக்தியின் சலனம்.
ஒளியின் கதியை
ஒளியின் கதியால்
பெருக்கிய வேகம்
ஜடத்தைப் புணர்ந்தால்
ஜடமே சக்தி!

மெக்ஸிக்கோவில்
பாலைவெளிச் சாதனை!

1945
ஹிரோஷிமா நாகசாகி.
ஜடமே சக்தி.
கண்ணற்ற
சூர்யப் போலிகள்.
கெக்கலித்து
தொடுவான்வரை சிதறும்
கணநேர நிழல்கள்.
பசித்து
செத்துக் கொண்டிருக்கும்
சிவனின்
கபாலத்துக்
கெக்கலிப்பு.

இசைவெளியின் சிறகுமடிந்து
கருவி ஜடமாகிறது.
பியானோவின் ஸ்ருதிமண்டலம்
வெறிச்சோடிக் கிடக்கிறது.
உலகின் முரட்டு இருளில்
எங்கோ ஒரு குழந்தை அழுகிறது.
ஜன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்
தெறிக்கிறது பரிதி.
ஒரு கணப் பார்வை.

நன்றி பிரமிளின்   கவிதைகள்
 
Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா சுவைத் தேன்  கவித் தேன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இரண்டாவது கவிதை எந்தவித நயமும் இன்றி இருக்கிறது.

  • தொடங்கியவர்

03  வகுப்பறை

ThirukadaiyurElephant.jpg

இந்த நான்கு சுவர்களுக்குள்,
சன்னல் கதவுகள் அடைக்கப்பட்ட
சிறை அறைகளுக்குள் வரிசையாகப் போடப்பட்ட
பெஞ்சுகளுக்குக் கீழே
பிறர் அறியாமல்
சிறிய கால்களை
ரகசியமாக ஆட்டியாட்டிக்கொண்டு
எல்லாவற்றையும் ரசிக்கிறோம்
என்று சிரித்தும்
எல்லாம் புரிகிறது என்று
இடையிடையே தலையாட்டியும்
பாடங்களின் சிறையிலடைக்கப்பட்ட
இளம் வண்ணத்துப் பூச்சிகள்.
 
அடி வேரறுத்து
சிமெண்ட் சட்டியில் வரையறுக்கப்பட்ட கால
பராமரிப்பில்
பறித்து நடப்பட்ட மரங்கள்
வலையில் வீழ்ந்த கிளிகள்
எந்த தெய்வத்தைக் கண்டாலும்
மத்தகம் குனிந்து கால் மடக்கி
தும்பிக்கை உயர்த்தி வணக்கம் சொல்கின்ற
காடு மறந்துபோன
குட்டிப் பேரானைகள்
 
வி.டி.ஜெயதேவன் கவிதைகள் -தமிழில்: யூமா வாசுகி
 
  • 3 weeks later...
  • தொடங்கியவர்

04 வண்ணத்துப் பூச்சியும் கடலும்

two.jpg

சமுத்திரக் கரையின்
பூந்தோட்ட மலர்களiலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளiரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது
முதல் கணம்
உவர்த்த  சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

நன்றி : பிரமிள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

05 வீரர்கள் துயிலும் நிலம்

971471_10152018604133959_689938045_n.jpg

பேய்க் கூச்சல் வீசி எழும்
காற்றில் ஒடிந்து விழும்
காவோலைச் சத்தத்தில்
குயில்
மிரண்டு அலறும்

மேற்கே பனந்தோப்பு

கோடையிலே மணலோடும்
மார்கழியில் நீரோடும்
ஓடும் ஒரு வெள்ளவாய்க்கால்
தெற்கே திசை நீள

கிழக்கெல்லை பொன்னிப்புலம்
நிலமற்றோர், "நிறம் குறைந்தோர்"
புறந்தள்ளப்பட்டோரின் குடியிருப்பு

செம்மண் தரையும் வயலும் வடக்கே
இவை நடுவே
மருதத்தின் சஞ்சலத்தின் மீது
விரிகிறது ஒரு இடுகாடு

வீரர்கள் துயிலும் நிலம்

இந்த நிலத்தில்தான் நூற்றுக்கணக்கானோர்
தூங்குகிறார்

புன்சிரிப்பும் புத்துயிர்ப்பும்
முகத்துக்கு மெருகேற்ற
நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள்
நினைவை நெருடுகிற நண்பர் பலர், உறவினர்கள்
நானறியா இளைஞர்கள்

கணப்பொழுது நெஞ்செரியும்
நெஞ்சில்
எழுகின்ற நினைவெரியும்
நினைவில் உயிர் பரவும் கதை எரியும்
இந்த நிலத்திலதான் தூங்குகிறார் என்னவர்கள்
நெடுந்தூரம் சென்று நிரை கவர்ந்தோர்
காற்றோடும் கடலோடும் புகையோடும் போனவர்கள்
போனவர்கள் போக
மீந்து கிடந்த உடலங்கள் கொண்டுவந்து
இட்டுப் புதைத்து எடுத்த நடுகல்லின்
எட்டுப்புறமும் உறைந்திருக்கும்
உம் ஆத்மா என்கிறார்கள்

வீரச்சாவடைந்தோர் சொர்க்கத்தைச் சேர்வார்கள்
என்ற பழங்கதையைத் தமிழர்கள் நம்பார்

ஆண்டுக்கொருமுறை உற்றமும் சுற்றமும்
ஆட்சியும்
உங்களை நினைவு கொள்ள வருவார்கள்

அம்மாவின் கண்ணீர்
கல்லறையின் மேற்படிந்த
புழுதியைக் கழுவிய பிற்பாடு
நடுகற்கள் வளருமிந்த
இடுகாட்டு நெடு நிலத்தில்
பூச்சொரிவார்
விளக்கேற்றித் துயருறுவார்
வீரம் விளைந்த கதை விம்மி விம்மிச் சொல்லி
நெஞ்சு நெகிழ்வார்கள்

எதை நினைத்தோம்?
எதை மறந்தோம்?

நம்பாதே வார்த்தைகளை முற்றாக

வீரர்களுள்
மாற்ரானின் படைவலியைச் சிதைத்தவர்கள் உள்ளார்கள்
அப்பாவி மக்களது சிரமரிந்து முலையரிந்து
குருதி முகம் நனைய இரவிரவாய் முகம் துடைத்து
வழி மாற்றி மொழி மாற்றி விழி மாற்றி
வெற்றியோடு மீண்டவரும் உள்ளார்கள்

மாவீரம் தியாகத்தின் மறுபக்கம் இது
இவையெல்லாம்
காதோடு காதாக வாய்மொழியில் வாழுகின்ற சத்தியங்கள்

இலட்சியத்தின் தாகத்தில் மட்டுமே
தங்கியிருப்பதில்லை மேன்மை

வெற்று வார்த்தைப் பந்தலிலே
உம் நினைவைச் சோடித்து
தெருத்தெருவாய்ப் பாடி வைத்த
யுத்தப் பரணியெல்லாம்
செத்த வீட்டு வாசலிலே வெட்டி இட்ட வாழைகளாய்
நாலாம் நாள் உதிர்கிறது
ஞாபகமும் தொலைகிறது

சங்கிலியனின் உடைவாளில் படிந்த
குழந்தைகளின் இரத்தத்தில்
என் கனவு கரைகிறது
ராஜ ராஜ சோழன் துவம்சம் செய்த
கர்ப்பிணிப் பெண்களின் அவல விழிகளில்
வரலாறு தற்கொலை செய்கிறது
தஞ்சைப்பெரிய கோவிலின் கீழ்ப் புதையுண்ட
எலும்புக்கூடுகளின் துயரில்
என் கவிதை நனைகிறது

வரலாற்றில் வீரர்கள் இல்லை

நம்பாதே வார்த்தைகளை முற்றாக
நம்பாதே வார்த்தைகளை

காலத்தின் சன்னிதியில் மாசகற்றிய வீரத்தின்
கதை சொல்லக் காத்திருக்கிறேன்
இருப்பையும் இறப்பையும் இழப்பையும்
அப்போது பாடுவேன்.

நன்றி : கவிஞர் சேரன்

(சரி நிகர், 1994, மாவீரர் நாளுக்காக எழுதியது)

Edited by கோமகன்

  • 1 month later...
  • தொடங்கியவர்

 06  'நான்'

31.jpg

ஆரீன்றாள் என்னை?
பாரீன்று பாரிடத்தே
பாரீன்று உயிர்க்குலத்தின்
வேரீன்று வெறும்வெளியில்
ஒன்றுமற்ற பாழ்நிறைத்து
உருளுகின்ற கோளமெலாம்
அன்று பெற்று விட்டவளென்
தாய்!

வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடும் அரன் தீவிழியால்
மூடியெரித்துயிரறுத்த
காடு ஒத்துப் பேய்களன்றி
ஆருமற்ற சூனியமாய்
தளமற்ற பெருவெளியாய்
கூரையற்று நிற்பது என்
இல்!

யாரோ நான்? - ஓ! ஓ! -
யாரோ நான் என்றதற்கு
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும்
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும்
இருள் முனகும் பாதையிலே
பிறந்திறந்து ஓடுவதோ
நான்!

நன்றி : பிரமிள்

  • 1 month later...
  • தொடங்கியவர்

07 பார்வை

vision-mission-spotlight-1-600x400.png

நிலவை மழித்தான்
தேவ நாவிதன்.
சிகையாய் முகில்கள்.
வானில் விரிந்தன.
மனிதன் வியந்து.
கவியானான்.

வெயிலை வழியவிட்டான்
வெளிக் கடவுள்.
இரவு பகலுக்கு
எதிரிடை யாச்சு.
மனிதன்
இருமையை விசாரித்தான்.

போகப் போக
வியப்பும் விசாரமும்
தளரத் தளர
மீந்தது கண்வெளி
உலகு ஒன்றே.
இன்று
சூர்ய சந்திரச்
சிற்றணு ஒதுக்கி
புவனப் படர்ப்பை
கால வெளியைக்
கணித நோக்கால்
கடந்து
நட்சத்திர மண்டல
காலக்ஸிக் குவியல்
குவாஸர் சிதைவைக்
கண்டான்.

கொஞ்சம் வியப்பு
ஒருகண விசாரம்
மறுகணம் மனிதன்
கண்டதைப் பிடித்து
ஆராய்ந்தான்.
கண்டதைக் கண்டது
கண்ணீர் விட்டது.

********************************

நன்றி : பிரமிள்

பதிவிட்டவர்;  குவளைக் கண்ணன்
நன்றி; http://www.kalachuvadu.com/issue-92/page34.asp

Edited by கோமகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.