Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி எவனுக்கும் கிடையாது. காசி ஆனந்தன் [video ]

Featured Replies

kasiyananthan-150x150.jpgதமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முழைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார் கடும்தொனியில் காசியானந்தன்(காணொளி)

வடமாகாண தேர்தல் முடிந்து அங்கே விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இதனை பெரிதாக ஊடகர்கள் அலசி ஆய்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

அங்கிருந்து கொண்டு தமிழர்களின் விடுதலைஉணர்வினை மழுங்கடிக்கும் முயற்சியினை நாலுபக்கத்திலும் நஞ்சர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த தேர்தல் மகிந்த அரசிற்கு பெரிதும் உதவி புரிந்திருக்கின்றது மகிந்தவின் அரசு ஒருநேர்மையான அரசு ஜனநாயகத்தை மதிக்கிற அரசு ஆகவே அந்த ஜனநாயவாதியான மகிந்த போற்றுதற்குரியவர் என்று ஐ.நா மன்ற ஆணைக்குழு அவர்மீது கொடுமையான சர்வதிகாரி என்ற குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்ற நேரத்தில் அவரை ஒருஜனநாயகவாதியாக காட்டுகின்ற நாடகத்திற்கு இந்த மாணாசபை பயன்பட்டிருக்கின்றது

இன்னென்று இந்த மாகாணசபையினை தமிழீழ மக்கள் வடக்கு மக்கள் ஆதரத்திருக்கின்றார்கள் தமிழர் கூட்டமைப்பினை ஆதரித்திருக்கின்றார்கள்.

தமிழர் கூட்டமைப்பினை ஏன் ஆதரித்தார்கள் என்றால் அந்த கூட்டமைப்பினை எதிர்த்து நின்ற சிங்கள ஆட்சியாளர்கள் படுதோல்வி அடையவேண்டும் என்ற நோக்கோடுதான் மக்கள் இந்த வாக்கினை அளித்திருக்கின்றார்கள்.

விக்னேஸ்வரன் போன்றவர்கள் சமஸ்டிதான் எங்கள் கொள்ளை என்று சொல்கிறார்கள் அந்த சமஸ்டிக்காக வடமாகாண மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை விக்னேஸ்வரன் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழீழத்திற்காக போராடிய மக்களை ஒடுக்கிய அடக்கிவிட்டதான நினைத்த மகிந்த அரசினை தேற்கடித்து தமிழிழத்தின் மீது தமிழீழ மக்கள் உறுதியாக நிக்கின்றார்கள் என்பதற்காகவே கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள்.

கூட்டமைப்பு ஒருவகையில் சிறுஅளவு பயன்பட்டிருக்கின்றது அது என்னவென்றால் அந்த மண்ணில் சிங்களஆட்சியாளர்களும் அவர்களின் கைகூலிகளும் அந்த மாகாணசபையில் உட்காராமல் தடுத்திருக்கின்றது அது ஒன்றைத்தான் இந்த மாகாணசபை செய்திருக்கின்றது

மகாணசபை பயனுள்ளதா இல்லையா என்றால் முழுமையாக பயனற்றது ஆனால் உலகத்தின் பார்வையில் தமிழீழத்தின் ஒருபகுதியினை ஒருமாகாண சபையாக வருகின்றபோது அதுசிங்களவன் கையில் இல்லை என்பதை காட்ட பயன்பட்டிருக்கின்றது.

வெற்றிக்களிப்பில் விக்னேஸ்வரன் போன்றவர்கள் பேசுகின்ற பேச்சு அயோக்கியதனமான பேச்சு நாங்கள் தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று அவர் சொல்கின்றார்.அவர் எந்த தமிழீழத்தை கைவிட்டோம் என்று சொல்கின்றார் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தைசெல்வா தீர்மானம் இயற்றி நிறைவேற்றிய 27ஆண்டுகளாக சமஸ்டி கேட்டு சிங்களவனோடு இணைந்து சமஸ்டி பெறமுடியாது என்று உறுதியாக நம்பிய தந்தைசெல்வா அதே அண்டு வட்டுக்கோட்டையில் நிறைவேற்றி தமிழீழ தீர்மானத்தை எதிர்த்து தமிழீழ தீர்மானத்தை கைவிட்டுவிட்;டோம் என்று சொல்கிறார்.

அந்த தமிழீழ தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விட்டு பொது தேர்தலில் வாக்களித்து அதை வெற்றிபெற செய்தார்களே அந்த வெற்றிபெற செய்த தமிழிழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கிறார்

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று காலம்முழுவதும் சொல்லி வந்த எங்கள் அரும்பெரும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கொண்டிருந்த அந்த ஈடுணையற்ற கொள்ளை தமிழீழம் அதனை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார்

எந்த தமிழீழத்திற்காக 40ஆயிரம் வீரவிடுதலைப்புலிகள் தங்கள் உயிரைகொடுத்து மாவீரர்களாகி போனார்களே அந்த தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கிறார் 3இலட்சம் மக்கள் செத்து மடிந்தார்களே இதுவரை அந்த தமிழீழத்தை கைவிட்டு விட்டோம் என்று சொல்கிறார்.

தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முளைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார்.

அவருடைய சொற்பொழிவு தமிழீழ மக்களின்அடிநெஞ்சில் நெருப்பு வைக்கின்றது தமிழீழ மக்களின் உணர்வு பற்றி எரிகிறது அவர் மறந்துவிடகூடாது அவர் தெளிவாக சொல்லவேண்டும் ஒன்று பட்டஇலங்கைக்குள் நாங்கள் சிக்கலை தீர்ப்போம் என்று சொல்கிறார் சிங்கள சிறீலங்காவின் சட்டதிட்டங்களுக்கு அமைய எங்களின் போராட்டங்கள் அமையும் என்கிறார் நான் இவரைபார்த்து கேட்கிறேன் போராடுங்கள் உங்களால் முடியுமா? காந்தியடிகள் பிரிட்டிஸ்காரனின் சட்டதிட்டங்களுகமையதான் இந்தியாவில் அறபோராட்டங்கள் நடத்தினார் இது உங்களால் முடியுமா?

ஏதாவது ஒரு மேடையில் விக்னேஸ்வரன் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்லமுடியுமா?

விக்னேஸ்வரனோ சம்மந்தனோ துணிச்சலான ஒருமேடையில் என்னுடைய தாயகம் தமிழீழம் என்று சொல்லமுடியுமா இன்னிலையில் இவர்கள் சமஸ்டி பேசுகின்றார்கள்.

வேதாளம் பளையபடி முருங்கைமரத்தில் ஏறுகின்றார்கள் தமிழ் நாட்டுமக்கள் விக்னேஸ்வரனை விட போரடிக்கொண்டிருக்கின்றார்கள் தமிழக முதல்வர் ஜெயலிதா தமிழீழத்திற்கு வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றார்கள் தமிழீழத்திற்காக தமிழ்நாட்டில் இருந்து கூட்டமைப்பை விட அதிகமாக போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்நாட்டில் நெருப்பு விட்டு எரியும் தமிழீழ விடுதலை உணர்வினை அணைக்கவேண்டும் என்று நினைக்கிறார் விக்னேஸ்வரன்.அது அணையாது உலகத்தில் நீங்கள் மட்டும்தான் தமிழீழத்திற்காக இருக்கின்றீர்கள் என்று நினைக்காதீர்கள் தமிழீழத்தில் தமிழீழமா சமஸ்டியா என்று ஒருதேர்தல் நடத்தமுடியுமா அப்பொழுது பாருங்கள் மக்கள் உங்கள் முகத்தில் செருப்பால் அடிப்பார்கள்.

இவ்வாறான சின்னத்தனமான முயற்சிகளில் இறங்காதீர்கள் என்று விக்னேஸ்வரனை பார்த்து பணிவாக கேட்டுக்கொள்கின்றேன் என்று உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் தெரிவித்துள்ளார்.

 

http://goldtamil.com/?p=8559

 

 

 

  • Replies 111
  • Views 6.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வதில் நிறைய நியாயங்கள் இருந்தாலும்.. இன்றைய பூகோள அரசியல் பொருண்மிய இராணுவ நிலையை கருத்தில் கொண்டு.. எமது மக்கள் அரசியல் அநாதைகளாக அடிமைகளாக நடுக்கடலில் தந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில்... சில துரும்புச் சீட்டுக்களை பிடித்தாவது அவர்கள் கரைக்கு வருவதை அனுமதித்துத்தான் ஆக வேண்டி உள்ளது. கரைக்கு வந்த பின் யோசிக்கலாம் மிச்சம்.

 

அதற்காக நீங்கள் குறிப்பிடுவது போல கடலுக்குள் எங்களை தள்ளியவன் நல்ல பெயர் எடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது தான். அதற்கான தண்டனையை அவன் அனுபவிக்க வேண்டின் அதனை தீவிரமாக முன்னெடுக்க வேண்டியது புலம்பெயர் மக்களும் தமிழகத்தில் உள்ள உங்களைப் போன்ற மெய்யான தமிழீழப் பற்றாளர்களும்.. தமிழக மக்களும்.. உலகத் தமிழினமுமே ஆகும்..!

 

அந்த வரலாற்றுக் கடமையை நாம் செய்யத் தவறிக் கொண்டு.. விக்னேஸ்வரன் மீது மட்டும் பாய்ந்து எதுவும் ஆகப்போவதில்லை. இவற்றை அறிக்கைகளால் செய்து முடிக்கவும் முடியாது. மேலும் விக்னேஸ்வரனின் அரசியல்.. என்பது சிறீலங்காவின் சிங்கள அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது. ஆனால் புலம்பெயர் மக்களின் அரசியல் என்பது எமது மக்களின் நியாயமான அபிலாசைகளை சொல்லக் கூடிய சுதந்திரத்தைக் கொண்டது. சர்வதேச சட்டங்கள் அதற்கு ஜனநாயக வழியில்..அனுமதி அளிக்கின்றன..! அதனை நாம் பயன்படுத்திக் கொள்ளத் தவறக் கூடாது.

 

மகிந்த போன்ற.. ஒரு இன அழிப்பாளனை தப்ப விடுவதே எமக்கு மட்டுமல்ல... எதிர்கால மனித சமூகத்திற்கே அவன் தவறான ஒரு உதாரணமாகி நிற்க வழி சமைக்கும்..! அந்த இன அழிப்பாளனை சர்வதேசச் சட்டங்களின் முன் நிறுத்தி.. தண்டிக்க வேண்டிய பொறுப்பு இன்று புலம்பெயர் மக்கள் கையில் தான் அதிகம் உள்ளது. தாயக மக்கள் இதற்கு நேரடியாக பங்களிப்பதில் சிக்கல் இருக்கவே செய்யும். நிச்சயம் அவர்களிடம் இருந்தான மறைமுகப் பங்களிப்பு இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில் அவர்கள் தான் அதிகம் மகிந்தவால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் இருப்பவர்களைப் பார்த்து அதைச் செய்ய முடியுமா? இதைச் செய்ய முடியுமா என்று கேட்பது எல்லாம் கொஞ்சம் அதிகம். எம்மை அழிக்கச் சிங்களவன் என்னென்ன திட்டங்களைப் போட்டு மாட்ட முடியும் என நினைக்கின்றானோ, அதை எல்லாம் இவர்களே உருவாக்கிக் கொடுப்பது சரியாகப்படவில்லை. 300 வருடங்ளுக்கு மேலாக மேற்கத்தையர் ஈழத்தில் கோவில்களை அழித்தபோதும், விக்கிரகங்களைக் கிணற்றிலோ, மறைவாகவோ வைத்துக் காப்பாற்றி வந்தது எங்கள் இனம். இப்போதும் அப்படி ஒரு நிலையையே சந்தித்து உள்ளோம். தமிழீழத்துக்காகப் போராடத் துணிபவர்கள் உங்களின் சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருங்கள். ஆனால் அது வரை மக்கள் சுவாசிக்கவும் இடம் கொடுங்கள். 2009க்குப் பிறகு உருவான துரோகிகளை விட, உருவாக்கப்பட்ட துரோகிகள் தான் அதிகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்ச்சிகவிஞர் என்பதற்காகப் பொங்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. :wub:

தங்களின் இந்த வார்த்தைகள் ஒற்றுமைக்குரிய வார்த்தைகளே இல்லை, மீண்டும் எம்மிடையே பிரிவினையை உண்டாக்கும் வார்த்தைகள்.

இந்தத்தேர்தல் மூலம்  எதுவும் கிடைக்கபோவதில்லை, மலசல கூடம் கட்டவும்,கொசுமருந்து அடிக்கவும் தான் என்று விமர்சித்தவர்கள் எல்லாம் இப்ப வந்து விக்கினேஸ்வரன் தமிழீழம் எடுத்துத் தரவேண்டும் என்பது எவ்வளவு வேடிக்கையான ஒன்று?

இப்படி உசுப்பேத்துபவர்கள் கைவிட்டாலும் ஈழத்தமிழன் யாரும் தமிழீழக்கொள்கையைக் கைவிடமாட்டான் என்பதற்கு காலாகாலமாக நடந்துவரும் தேர்தல் முடிவுகளே சாட்சி, அதற்குரிய பரீட்சார்த்த முடிவுகளாக மட்டுமே இந்த மாகாணசபையும் இருக்க முடியும்.

சிங்கள இனவாத அரசு சிறுபான்மை இனத்திற்கு எந்தவொரு அதிகாரத்தையும் தரப்போவதில்லை இதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெளிவாக நிரூபிக்கப்பட வேண்டும். அதற்குத் தடையாக இருந்ததாக புலிகளைச் சாட்டி இலங்கை அரசும், பிராந்திய அரசுகளும், சர்வதேசமும் ஒதுங்கியே இருந்தது ஆனால் இனி அப்படி ஒரு சூழ்நிலை இல்லை. காலங்கள் சென்றாலும் ஏதாவது ஒரு தீர்வு வந்தே ஆகவேண்டும், அதே போல தமிழீழம் என்பதும் 100நாள் வேலைத்திட்டம் இல்லை என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

 

அதே வேளை தமிழீழக்கோட்பாட்டை முனொழிந்த தந்தை செல்வா வழியை கூட்டமைப்பு மறந்ததாகச் சொல்லும் தாங்களோ அல்லது

இப்படியான சித்தாந்தங்களை முன்மொழியும் யாராகினும் தமிழீழம் என்ற கோட்பாடுக்காய் இழந்த உயிர்,உடமைகளுக்கு பொறுப்பேற்பீர்களா? படுகொலை சிங்கள இனவாத அரசான மஹிந்த அரசு போர்க்குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்தே ஆகணும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, அதேவேளை மீண்டும் மஹாவம்ச புனைவுகளில் கட்டுண்ட சிங்கள இனவாதி ஒருவன்(த்தி) தான் ஆட்சிக்கு வரப்போகிறார்கள். அந்த வகையில் இனவாதம் தோற்கடிக்கப்படாதவரைக்கும் இலங்கையில் எந்தத் தீர்வும் சாத்தியம் இல்லை.

 

தமிழீழம் என்பதையும்  வெறும் உணர்ச்சி அரசியலாகத்தான் தம் போன்றோர் நிறுவ முனைகிறீர்கள். தமிழினம் ஆயுத ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு இன்று "அ" வில் இருந்து தொடங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கும் போது நீங்கள் "ஃ" வை முன்மொழிகிறீகளே அதற்கு எந்த விதமான சாத்தியமான வழிகளை முன்வைக்கிறீர்கள்?

தமிழகத்தில் ஐயா மாறி அம்மா மாறி ஆட்சிகு வ்ந்தாலும் தீர்மானம்போடுவதும், தந்தியடிப்பதோடும் இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு

அவர்கள் கடமை முடிந்து விடும். உங்களைப் போன்றோர் வேடந்தாங்கல் போன்று சீசனுக்கு சீசன் வந்து பொங்கிவிட்டுப் போவதுடன் சரி. :o:icon_idea:

 

 

 

ஐயான்ரை உணர்ச்சிப் பேச்சைக் கேக்க நல்லாத் தானிருக்கும். 77 ஆம் ஆண்டுத் தேர்தலிலை அண்ணை முழங்காத முழக்கமா?

 

தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரனோ செய்வதெல்லாம் சரியெனப் படவில்லை. ஆனால் நாட்டுக்கு வெளியே இருந்து கொண்டு இன்னொரு புரட்சி வெடிக்கும் . தமிழீழம் மலரும் எண்டு உச்சஸ்தாயிலை பேசி ஆகப் போறது ஒண்டும் இல்லை.

 

இவ்வளவு உணர்வாயுள்ள ஐயா தாயகத்திற்குப் போய் அந்தப் புரட்சியைக் கொண்டு நடத்தலாம்.

 

அட இந்தியாவை விட்டு என்னைப் போக அனுமதிக்க மாட்டினம் எண்டால் காந்தியை மாதிரி இந்தியாவிலை இருந்து வெளியே போக அனுமதிக்கச் சொல்லி ஐயா போராடலாம்.

 

அதுக்குள்ளை கொழும்பான் யாழ்;பபாணத்தான் எண்டு பிரதேச வாதம் கதைக்கிறதும் அவற்றை வயசுக்கும் அனுபவத்திற்கும் ஏற்றதாத் தெரியேல்லை.

Edited by Manivasahan

காசிஆனந்தன் பாதுகாப்பாக இருந்து கொண்டு எதுவும் கதைக்கலாம்.இதே காசி தலைவர் கூப்பிடும்போது போகவில்லை என்ற கதையும் போராளிகளின் ஊடாக கேள்விப்பட்டுள்ளேன் .

  • கருத்துக்கள உறவுகள்
இந்த ஜயா மேல் எனக்கு எப்பவும் மரியாதை உண்டு...
இந்த நேரத்தில் இப்படியான அறிக்கைகள் விடாமல் இருப்பதே நல்லம்......
  • கருத்துக்கள உறவுகள்

பத்து தடவை பாடை வராது

சீறும் புலியே தமிழா சிரிதுக்கொண்டே

செருக்களம் வாடா

என்று ஆயிரம் ஆயிரம் இளஞர்களை உசுப்பேத்தி விட்டு

தான் குடும்பத்தோடு இந்தியா சென்றது மட்டுமல்லாமல் அங்கு தனது இருபிள்ளைகளையும் எமது பிரச்சினையை காட்டி மெடிக்கல் சீட்டு வாங்கி டாக்குத்தராகிய இந்த ஈனப்பிழைப்புவாதிக்கு விக்னேஸ்வரனை விமர்சிக்க எந்த் உரிமையும் இல்லை. தமிழரசு கட்சியின் அசுர பலம் இருந்தும் ராசதுரையிடம் மண்கவ்விய இவருக்கு 133 000 விருப்பு வாக்கில் வென்ற விக்னேஸ்வரனை விமர்சிக்க என்ன அருகதையுண்டு?

விக்னேஸ்வரன் சமஸ்டித்தீர்வை பெற்ருத்தந்தால்,

எமது பிர்சினையை சொல்லி தமிழகத்தில் இவர் வயிறுவளர்க்க முடியாது, அதுதான் இந்தப்பாய்சலுக்கு காரணம்.

கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக சொல்லிவிட்டது ஒன்று பட்ட இலங்கைக்குள் தான் தீர்வு என்று. அதன் அர்தம் என்ன ?தமிழ் ஈழத்தை கைவிட்டாகி விட்டது.

இந்த நிலைப்பாட்டுக்குத்தான் மக்கள் அமோக ஆதரவு தந்துள்ளார்கள். ஆக இது மக்களின் முடிவு.

மக்கள் தமிழ் ஈழமே தீர்வு என நினைத்திருந்தால் கூட்டமைப்பை புறக்கணித்திருப்பர் அல்லது வேறு ஒரு மாற்று சக்தியை களமிறக்கி இருப்பர்.

2009 லெயே தனி நாடு என்ற கருத்தாக்கம் சாவடிக்கப்பட்டு விட்டது. மக்கள் இதை உணர்ந்தே தமது வட்டுக்கோட்டை ஆணையை மாற்றி இப்புதிய ஆணையயை வழங்கியுள்ளனர்.

கூட்டமைப்புக்கு மக்கள் தற்ப்போது வழங்கியுள்ள ஆணை சமஷ்டிக்கே, தனி நாட்டுப் பிரிவினைக்கல்ல.

தனி நாடு வேண்டுமென்பவர்கள் கூட்டமைப்பை விட்டு விடுங்கள். காசியோ அல்லது வேறு எந்த ஒரு ஈனப்பிறவியையோ தலைவராக வைத்து முடிந்தால் உங்கள் இலக்கை அடையுங்கள்.

பிரபாகனால் முடியாத ஒரு விடயத்தை இவர்கள் நடத்தி காட்டுவார்களாம் அதுவும் வெளிநாட்டில் இருந்து, இதை அங்கே ஊரில் இருக்கும் அப்பாவிகள் நம்பி உள்ளதையும் தொலைக்கோனுமாம்.

கேக்கிரவன் கேனை என்றால். . . .

  • கருத்துக்கள உறவுகள்

நாம் விழுவோம்

தவழுவோம்

மண்டியிடுவோம்

கயிறைப்பிடிப்போம்

..........................

...............................

................................

 

என பலவாறும் எமக்குத்தெரிந்தது

70 களிலிருந்தே எம்முடனிருக்கும்  காசியண்ணைக்குத்தெரியாதா????

 

அவரது வார்த்தைகளில் சில சொற்களில் கடுமை இருப்பதைத்தவிர 

அவரது அறிக்கையில் தப்பிருப்பதாக தெரியவில்லை.

 

ஒரு அறிக்கை

அல்லது

ஆய்வு

அல்லது

பேச்சு  என்று வரும்போது அது

இலக்கையும்

காலத்தையும்

வரலாற்றையும் எடுத்துக்கொண்டு செய்யப்படுமே தவிர

எமது தனிப்பட்ட பிரச்சினைகள்

வாழ்வியல்

பொருளாதாரநிலை சார்ந்து அல்ல.

 

அந்தவகையில் திரு காசி  அவர்கள் முள்ளிவாய்க்காலில் நின்று அதன் தொடர்ச்சியாக  பேசுகின்றார் என்று தான்  நான் பார்க்கின்றேன்.

இதில் எமக்கு சரி அல்லது பிழை இருக்கலாம்.

எவருக்கும் பயப்படாமல் தனது கருத்தை வைக்கின்றார்

இங்கு எழுதுபவர்கள் கூட அவருடன் தொலைபேசியில் அவரது கருத்துக்கு

விளக்கம் கேட்கமுடியும். கேட்கலாம்.

 

அப்படியாயின் எனது கேள்வி

அவர் தனது கடமையைச்செய்கிறார்

நாம் என்ன  செய்கின்றோம்

எமது கடமையைச்செய்கின்றோமா???

அல்லது அவரது கடமையை  விமர்சிப்பது மட்டும் தான் எமது கடமையா???

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பத்து தடவை பாடை வராது

சீறும் புலியே தமிழா சிரிதுக்கொண்டே

செருக்களம் வாடா

என்று ஆயிரம் ஆயிரம் இளஞர்களை உசுப்பேத்தி விட்டு

தான் குடும்பத்தோடு இந்தியா சென்றது மட்டுமல்லாமல் அங்கு தனது இருபிள்ளைகளையும் எமது பிரச்சினையை காட்டி மெடிக்கல் சீட்டு வாங்கி டாக்குத்தராகிய இந்த ஈனப்பிழைப்புவாதிக்கு விக்னேஸ்வரனை விமர்சிக்க எந்த் உரிமையும் இல்லை. தமிழரசு கட்சியின் அசுர பலம் இருந்தும் ராசதுரையிடம் மண்கவ்விய இவருக்கு 133 000 விருப்பு வாக்கில் வென்ற விக்னேஸ்வரனை விமர்சிக்க என்ன அருகதையுண்டு?

விக்னேஸ்வரன் சமஸ்டித்தீர்வை பெற்ருத்தந்தால்,

எமது பிர்சினையை சொல்லி தமிழகத்தில் இவர் வயிறுவளர்க்க முடியாது, அதுதான் இந்தப்பாய்சலுக்கு காரணம்.

கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக சொல்லிவிட்டது ஒன்று பட்ட இலங்கைக்குள் தான் தீர்வு என்று. அதன் அர்தம் என்ன ?தமிழ் ஈழத்தை கைவிட்டாகி விட்டது.

இந்த நிலைப்பாட்டுக்குத்தான் மக்கள் அமோக ஆதரவு தந்துள்ளார்கள். ஆக இது மக்களின் முடிவு.

மக்கள் தமிழ் ஈழமே தீர்வு என நினைத்திருந்தால் கூட்டமைப்பை புறக்கணித்திருப்பர் அல்லது வேறு ஒரு மாற்று சக்தியை களமிறக்கி இருப்பர்.

2009 லெயே தனி நாடு என்ற கருத்தாக்கம் சாவடிக்கப்பட்டு விட்டது. மக்கள் இதை உணர்ந்தே தமது வட்டுக்கோட்டை ஆணையை மாற்றி இப்புதிய ஆணையயை வழங்கியுள்ளனர்.

கூட்டமைப்புக்கு மக்கள் தற்ப்போது வழங்கியுள்ள ஆணை சமஷ்டிக்கே, தனி நாட்டுப் பிரிவினைக்கல்ல.

தனி நாடு வேண்டுமென்பவர்கள் கூட்டமைப்பை விட்டு விடுங்கள். காசியோ அல்லது வேறு எந்த ஒரு ஈனப்பிறவியையோ தலைவராக வைத்து முடிந்தால் உங்கள் இலக்கை அடையுங்கள்.

பிரபாகனால் முடியாத ஒரு விடயத்தை இவர்கள் நடத்தி காட்டுவார்களாம் அதுவும் வெளிநாட்டில் இருந்து, இதை அங்கே ஊரில் இருக்கும் அப்பாவிகள் நம்பி உள்ளதையும் தொலைக்கோனுமாம்.

கேக்கிரவன் கேனை என்றால். . . .

 

ஆமாம். கேட்கின்றவன் கேனையாக இருந்தால்... நீங்கள் கூட ..... இதற்குள் இடையில் புகுந்து, ஈனப்பிறவி, புலியெதிர்ப்புக் கருத்துக்களை இடைசெருகலாகப் புகுத்துகின்ற செயலை நீங்களும் நிறுத்தி விடுங்கள். மதிப்புக்குரிய காசியானந்தன் அவர்களின் அவதானமற்ற வார்த்தைகளைத் தான் விமர்ச்சிக்கப்படுகின்றதே தவிர அவரல்ல. தமிழீழம் கிடைக்குமா இல்லை பெற முடியுமா என்பது எல்லாம் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் மூடிக் கெகாண்டு போங்கள்.

கூட்டமைப்பு என்ன கருத்தினைக் கொண்டிருக்கின்றது, அது எப்படிச் செயற்படும் என்பதை எல்லாம் யாரும் எங்களுக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை... பார்த்துக் கொள்ள மற்றவர்களால் முடியும்...

இடையில் புகுந்து நரித்தனம் செய்கின்ற வேலைகள் ஏதும் இருப்பின் இங்கிருந்து ஓடிப் போய்விடுங்கள்

காசி ஐயா உங்கள் மேல் உள்ள மரியாதையை எவர் கதைகேட்டும் இழக்க விரும்புரியல் எண்டு விளங்க வில்லை மக்களால் தேர்த்து எடுக்கபட்ட ஒரு தலைவரை நீங்கள் கடுமையா விமர்சனம் பண்ணுவது ஏற்புடையது இல்லை .

 

புலம் பெயர்த்தவர் சொல்லும் கதைகேட்டு காணமல் போனவர்கள் இவர்கள் நேற்று ஒரு அண்ணனின் நிலை தகவல் .

 

2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் செல்வராசா கஜேந்திரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவர் 112,077 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

இவருக்கு அடுத்த இடத்தை பத்மினி சிதம்பரநாதனும் (68,240) கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் (60,770) பெற்றுக் கொண்டனர்.

புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் ஆசியோடு இந்த மூவரும் 2010இல் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாகப் போட்...டியிட்டனர். 2004இல் ஏறக்குறைய 240,000 விருப்பு வாக்குளை பெற்றிருந்த இந்த மூவரும் சேர்ந்து உருவாக்கிய கட்சி அந்தத் தேர்தலில் வெறும் 7,544 வாக்குகளையே பெற்றது.

கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் தமது ஆதரவு இல்லை என்பதை தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் முகத்தில் அறைந்தது போல் தெரிவித்திருந்தனர்.

எனோ! தெரியவில்லை! இதையெல்லாம் மீண்டும் சிலருக்கு நினைவுபடுத்த வேண்டும் போல் தோன்றியது. அதுதான் சொல்லியிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் கூட்டமைப்பின் மாகாண சபைக்கான வெற்றியை தமிழ் மக்கள் மாகாணசபையை கேட்கின்றனர் என்ற தொனியில் விளக்க முனைகின்றனர். அது முற்றிலும் தவறு. 1988/9 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோஸை ஆதரித்தது வரதராஜப் பெருமாளை தோற்கடித்ததன் மூலம்... தமிழ் மக்கள் அதனை தெளிவாகவும் சொல்லிவிட்டனர்.

 

தமிழ் மக்கள் கூட்டமைப்பில் சம்பந்தன்.. சுமந்திரனின் குரலுக்கு.. முற்றிலுமாக.. தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக் கொண்டு.. வாக்களிக்கவில்லை. தமிழின அழிவை.. ஏற்படுத்திய.. சிறீலங்கா அரசுக்கும் சிங்கள கட்சிகளுக்கும் அவர்களுக்கு முண்டு கொடுப்போருக்கும் எதிராகவே பாவித்துள்ளனர்.

 

மேலும் வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் உட்பட இலங்கைத் தீவில் உள்ள கிட்டத்தட்ட எல்லா தமிழ் பேசும் மக்களும் அங்கீகரித்து நின்ற ஒன்று. அதனை வடமாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம்.. மாற்றி அமைத்து மக்களிடம் திணிக்க முடியாது என்பதை சிலர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

தமிழீழம் என்றது எமது பாரம்பரிய நில.. ஆட்சி.. உரிமைக்கான அடையாளம். அதனை விட்டுக் கொடுக்கவோ.. இழக்கவோ.. அதனை தோற்கடிக்கவோ.. எவராலும் முடியாது. அந்த உரிமைக்காக உயிர் கொடுத்தோர் ஆயிரம் ஆயிரமாகும். அதனை கூட்டமைப்பினர் மலினப்படுத்த முனைந்தால்.. கூட்டமைப்புக்கும் சங்கரிக்கு டக்கிளசுக்கு.. கற்றுக்கொடுத்த பாடம் தான் பதிலாகும்..! :icon_idea:

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1977 ம் ஆண்டு தேர்த்தல் விஞ்ஞாபனத்தில் தமிழீழம் எடுத்து தரலாம் என மக்களிடம் வாக்கு வாங்கி அமோக வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று எதிர்கட்சி அந்தஸ்தும் கிடைத்து கூட்டமைப்பு சரித்திரம் படைத்தது. அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் காசி ஆனந்தனும் இருந்தார்.அப்போ மக்களுக்கு வாக்குறுதி அளித்த தமிழீழம் எங்கே காசி ஆனந்தன் அவர்களே??
 
நீங்கள் இலங்கை அரசுக்கு பயந்து இந்தியாவில் இருந்து கொண்டு தமிழீழம் கேட்கலாம். சிறிலங்காவின் இன்று  பிரிவினை கேட்கமாட்டேன் என்று பாரளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுத்து தான் தேர்தலில் பங்கு பற்றவோ அல்லது பாராளுமன்றம் செல்லவோ கூட்டமைப்பால் முடியும்.
 
விக்கினேஸ்வரன் கொழும்பில் பிறந்தாரோ அல்லது உலகின் எந்த மூலையில்  பிறந்தாரோ அவர் ஒரு தமிழர்.அவருக்கு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாக்களித்து முதலாமிடத்தில் உள்ளார்.அங்குள்ள மக்களே  அவரை நிராகரிக்காத போது நீங்கள் ஏன் அவர் போராடவில்லை என்கிறீர்கள். 
 
தமிழீழம் தேவை எனில் நீங்கள் சிறிலங்காவுக்கு வந்து மக்களுக்காக போராடலாம்.அப்படி நீங்கள் போராட  நினைத்தால் அங்கு உங்களுக்கு என்ன நடக்கும் என தெரிந்து கொண்டும் ஏன் விக்னேஸ்வரனோ சம்பந்தனோ போராடவில்லை என நீங்கள் கேட்பது சுய நலம் கொண்டதாக தெரியவில்லையா?

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். கேட்கின்றவன் கேனையாக இருந்தால்... நீங்கள் கூட ..... இதற்குள் இடையில் புகுந்து, ஈனப்பிறவி, புலியெதிர்ப்புக் கருத்துக்களை இடைசெருகலாகப் புகுத்துகின்ற செயலை நீங்களும் நிறுத்தி விடுங்கள். மதிப்புக்குரிய காசியானந்தன் அவர்களின் அவதானமற்ற வார்த்தைகளைத் தான் விமர்ச்சிக்கப்படுகின்றதே தவிர அவரல்ல. தமிழீழம் கிடைக்குமா இல்லை பெற முடியுமா என்பது எல்லாம் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் மூடிக் கெகாண்டு போங்கள்.

கூட்டமைப்பு என்ன கருத்தினைக் கொண்டிருக்கின்றது, அது எப்படிச் செயற்படும் என்பதை எல்லாம் யாரும் எங்களுக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை... பார்த்துக் கொள்ள மற்றவர்களால் முடியும்...

இடையில் புகுந்து நரித்தனம் செய்கின்ற வேலைகள் ஏதும் இருப்பின் இங்கிருந்து ஓடிப் போய்விடுங்கள்

தூயவன் இதில் எங்கே புலி எதிர்ப்பை கண்டீர்கள் என்று என்னை சூ சூ என்றி விரட்டுகிறீர்கள்?

புலிகள் 2009 ஒடு முடிந்து விட்டார்கள். இபோது அவர்கள் இல்லை. ஆகவே புலி ஆதரவு நிலையும் இப்போது இல்லை. புலி எத்ரிப்பு நிலையும் இப்போது இல்லை.

ஒரு விசயத்தை அவர்கள் செய்ய முயன்றார்கள், முடியவில்லை. இப்போது மக்கள் அடுத்த கட்டத்துக்கு போய்விட்டார்கள்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அல்லது ஊனரும் பக்குவம் இல்லாமல் நெடுக்கு நீங்கள் போன்றவர்கள் முரண்டு பிடிக்கிறீர்கள்.

தனிநாடு எனும் கருத்தியல் 2009 உடன் சாவடிக்கப்பட்டு விட்டது, மற்றைய நாடுகளை, பேரினவாதிகளை விடுங்கள், இந்த கோரிக்கையை மேற்க்கொண்டு செல்லக் கூடிய பலமோ ஆளுமையோ, தலைமையோ இப்போது எம்மிடம் இல்லை.

இதை உணர்ந்துதான் 1977 தொட்டு 2009 வரை பிரிவினையை ஆதரித்த வடக்கு தமிழர் இப்போது "ஒன்றுபட்ட இலங்கை" என்ற கருத்தை முன்வைத்த தேர்தல் விஞாபனத்துக்கு வாக்களித்துள்ளனர்.

பிரிவினைவாதம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு இலங்கை தமிழர் மத்தியில் எடுபடாது, வேலைக்கும் ஆகாது.

இந்த இடைவெளியில் இருப்பதை காப்பதும் இயலுமானவரை தருவதை பெறுவதும் தான் தமிழ் தலைவர்களின் தலையாய கடைமை.

இதைத்தான் கூட்டமைப்பும் சீவீ யும் செய்ய விழைகின்றனர்.

அடையமுடியாத ஒன்றை கைவிட்டு, அடைய கூடிய குறைந்த பட்ச உரிமை (சமஷ்டி) யை பெறுவதே புத்திசாலித்தனம். இதுவே மக்கள் கூட்டமைப்புக்கு கொடுத்துள்ள ஆணை.

காசி என்ன கடவுளா விமர்சனத்துக்கு அப்பால்பட? எழுதிப் பிழைத்ததை தவிர இவர் இனத்துக்கு செய்தது என்ன? 2002 2005 காலப்பகுதியில் கூட நாடு திரும்பாமல் இந்தியாவில் இருந்து உள்ள சலுகைகளை எல்லம் அனுபவித்தவர்.

இவர் வாயை திறக்காமல் நான் இவரை திட்டவில்லை. இது இவர் பொல்லை கொடுத்து வாங்கிய அடி.

உண்மையில் இலங்கை அரசிற்கு வேணும் என்றால் யாரும் இலங்கையில் இருந்து தனி நாட்டு கோரிக்கைய விட்டு விட்டேன் என்று  அறிக்கை விடலாம். ஆனால் அனைத்து உலகத்திற்கு அப்பிடி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதே போன்று புலம் பெயர்ந்து இருப்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தமிழ் ஈழக் கோரிக்கைய விட தேவை இல்லை  :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

 

இணைப்புக்கு நன்றி நுனா அண்ணா இந்த ஜயா மேல் வர வர நம்பிக்கை அதிகரிதிட்டே போகுது..இப்படியே போனால் கண்டிப்பாய் தமிழர்கள் மனதில் இந்த ஜயா இடம் பிடிப்பார்....எல்ல விசயத்திலும் தெளிவாய் இருக்கிறார்...சிங்களத்தின் பூச்சாண்டி விளையாட்டை நங்கு தெரிந்து வைத்து இருக்கிறார்....

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இலங்கை அரசிற்கு வேணும் என்றால் யாரும் இலங்கையில் இருந்து தனி நாட்டு கோரிக்கைய விட்டு விட்டேன் என்று அறிக்கை விடலாம். ஆனால் அனைத்து உலகத்திற்கு அப்பிடி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதே போன்று புலம் பெயர்ந்து இருப்பவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் தமிழ் ஈழக் கோரிக்கைய விட தேவை இல்லை :icon_idea:

பூசலார் கட்டிய கோவில் போல நீங்கள் புலத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யுங்க உங்களை நிலத்தில் இருந்து யாரும் எதும் கேட்க்கப்போறதில்லை. ஆனா தனிநாடு கோரிக்கையை கைவிடுறதாயும் சமஸ்டிக்குள் தீர்வு காணுவதாயும் நிலத்தில் மக்கள் முடிவு செய்து அதை அவர்களின் பிரதிநிதிகள் முன்னெடுக்கும் போதும் அதை தடுக்க ஓடிவந்து புலத்தில் வாழும் எவருக்கும் உரிமை இல்லை. எத்தனனை அழுத்தம் இருந்தாலும் தமது தலைவிதியை தாமே தீர்மானிகவல்லவர்கள் எமது மக்கள், இந்த தேர்தல் உணர்த்தும் செய்தி இதுதான்.
  • கருத்துக்கள உறவுகள்

பூசலார் கட்டிய கோவில் போல நீங்கள் புலத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யுங்க உங்களை நிலத்தில் இருந்து யாரும் எதும் கேட்க்கப்போறதில்லை. ஆனா தனிநாடு கோரிக்கையை கைவிடுறதாயும் சமஸ்டிக்குள் தீர்வு காணுவதாயும் நிலத்தில் மக்கள் முடிவு செய்து அதை அவர்களின் பிரதிநிதிகள் முன்னெடுக்கும் போதும் அதை தடுக்க ஓடிவந்து புலத்தில் வாழும் எவருக்கும் உரிமை இல்லை. எத்தனனை அழுத்தம் இருந்தாலும் தமது தலைவிதியை தாமே தீர்மானிகவல்லவர்கள் எமது மக்கள், இந்த தேர்தல் உணர்த்தும் செய்தி இதுதான்.

 

 

சிங்களவனோ

எதிரியோ  எம்மை  பிரித்து பார்ப்பதைவிட  நாமே அதிகம் பார்க்கின்றோம்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றை  பிடித்துக்கொண்டு புகுந்து விளையாடுகின்றோம்.

 

தமிழர்கள்  எல்லோரும் (தாயகம்  தமிழகம் புலம்)

ஒன்றாக இருக்கவேண்டிய

ஒரு குரலில் குரல் கொடுக்கவேண்டிய

காலமிது

 

புலத்தில்  உள்ளவன் தாயகம் பற்றி  பேசக்கூடாது

என்பதெல்லாம் அடிப்படை தார்மீகக்கோட்பாடுகளையே  தகர்க்கும்  செயல்.

 

மகிந்த ஒன்றும் மயிலே இறகு போடு என்று தேர்தலை  நடாத்தவில்லை.

பல பக்கத்தாலும் அழுத்தம் இருந்தது

இதில் தமிழக புலத்தவர் உழைப்புக்களை பின் தள்ளலாகாது.

 

தேர்தலில் வென்றவரே

புலத்தவருக்கு நன்றி  சொல்கிறார்

முதலமைச்சராக வரப்போபவர்

பிரபாகரன்  போராளி

மாவீரர்களது கல்லறைகள் மீள  எழும்பும் என்கிறார்.

இது தான் அடிப்படை.

இங்கிருந்து தான் எல்லாம்.

எதிர் பாராத வெற்றி மூலம்

வென்றவர்கள் அனைவரும் புரிந்து கொள்வது

இது மாவீரரின் தொடச்சி  என்பது தான்.

அதை மறந்தால்

மீட்சியே  இல்லை.

அதை அவர்  உணர்ந்துள்ளனர்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுவதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை விசுகு. நான் சொல்லவருவதெல்லாம் புலத்தில் இருப்பவர்கள் நிலத்தில் இருப்பவரின் நிலை, இயலுமை மற்றும் விருப்பு அறிந்து அதன்படி அவர்களை நடக்க அனுமதிக்க வேண்டும். கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் தனி நாடு பற்றி எதுவுமில்லை. சமஷ்டிதான் கோரிக்கை என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. யாருக்காக வாக்களித்தார்களோ, மக்கள் 80% இந்த விஞ்ஞபனத்துக்குதான் வாக்ககிட்டனர். இபோது முதலில் 13 ஐ பலப்படுத்தி பெறுவதை பெற்றுக்கொண்டு தொடது சமஷ்டி நோக்கி நகருவதே இப்போதய தேவை.

இதை விடுத்து நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கையை தூக்கிப்பிடிப்பது, தொடர்ந்த்தும் மக்கள் இரும்புபிடியில் தவிக்கவே வழி செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் தேர்தல் நடாத்தியமைக்காக அரசாங்கத்திற்க நன்றி பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களை நடாத்துவதன் மூலம் மட்டும் வடக்கி;ல் ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டும் முதல் கட்டமாக இதனைக் கருத வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

1956ம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் தங்களது ஜனநாயக விருப்பங்களை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டுமென்றே கோருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் சாசனத்தில் காணப்படும் உரிமைகளை புறக்கணிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு இன சமூகத்திற்கு மட்டும் அதிகாரத்தை வரையறுப்பதன் மூலம் நாடு பிளவுபடுவதனை தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96969/language/ta-IN/article.aspx

ஏன் இவர் உந்தக் கத்துக் கத்துறார் இந்தியாவிலிருந்து கொண்டு. மற்றவன் செத்து தமிழீழம் எடுத்துக் கொடுக்க் பிளேனில் வந்து இறங்குவார் உவர் நம்ப புலத்துத் தமிழர் மாதிரி.

 

மக்கள் எப்பவும் தெளிவாய் தான் இருக்கின்றார்கள். காசி  மாரி காலத்து தவளை மாதிரி கத்திக் கத்தியே..........

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுவதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை விசுகு. நான் சொல்லவருவதெல்லாம் புலத்தில் இருப்பவர்கள் நிலத்தில் இருப்பவரின் நிலை, இயலுமை மற்றும் விருப்பு அறிந்து அதன்படி அவர்களை நடக்க அனுமதிக்க வேண்டும். கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் தனி நாடு பற்றி எதுவுமில்லை. சமஷ்டிதான் கோரிக்கை என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. யாருக்காக வாக்களித்தார்களோ, மக்கள் 80% இந்த விஞ்ஞபனத்துக்குதான் வாக்ககிட்டனர். இபோது முதலில் 13 ஐ பலப்படுத்தி பெறுவதை பெற்றுக்கொண்டு தொடது சமஷ்டி நோக்கி நகருவதே இப்போதய தேவை.

இதை விடுத்து நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கையை தூக்கிப்பிடிப்பது, தொடர்ந்த்தும் மக்கள் இரும்புபிடியில் தவிக்கவே வழி செய்யும்.

 

 

நன்றி

 

முள்ளிவாய்க்காலுக்குப்பின்....

இரண்டு அமைப்புக்கள்

வளரணும்

அவை  தமக்கென தனியாக பாதைகளை  வகுத்து

தமிழ் மக்களின் தாயக உரிமைப்போரை

சர்வதேசம்  எம்மை தடை செய்த காரணங்களை ஆராய்ந்து

தவிர்த்து

செயற்படணும்  என விரும்புபவன் நான்.

அதில்  என்றுமே  எனது  பார்வை  ஒன்றே

இது பற்றி  யாழில்  அன்றிலிருந்து எழுதிவருபவன்.

அவை

கூட்டமைப்பு

நாடு கடந்த அரசு.

 

ஆனால் எல்லாத்தமிழர் போல்

நான்  ஒரு புலி

இதில்  எந்த மாற்றமும் இல்லை.

கிட்டத்தட்ட

30  வருடங்களாக

இளமை

வாழ்வு

உழைப்பு

அனைத்தையும் அதற்காக கொடுத்தவன்.

புலத்தவன் பேசக்கூடாது  என்பதில் 

பெறுபவற்றை  பெற்றுக்கொண்டு தட்டிவிடும் 

சுயநலம் மட்டுமே இருக்கக்கூடும். :(  :(  :(

புலத்திலும்

கப்டன்

கேர்ணல்

பிரிகேடியர்

மாமனிதர்

நாட்டுப்பற்றாளர்.......  என கௌரவப்படுத்தப்பட்டுள்ளனர்  என்பதை  எவரும் மறக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனும் சுமந்திரனும்.... ஐக்கிய இலங்கை... ஒன்றுபட்ட இலங்கை.. என்ற பதங்களை.. பாவிப்பதால் மட்டும் சிறீலங்கா சிங்கள அரசு தீர்வுகளை முன்வைக்கப் போறதில்லை.

 

சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை.. தங்களிடம் மிகையான அதிகாரங்கள் இருக்க தாங்கள் தமிழர்களுக்கு வழங்கும் அற்ப சொற்ப அதிகாரங்களின் கீழ் அவர்கள் வாழலாம் என்பது தான்... அன்றும் இன்றும் நிலைப்பாடு.

 

இதனால் தான்.. டட்லியில் இருந்து.. ரணில் வரை செய்த அத்தனை ஒப்பந்தங்களும் சிங்களத்தால் ஒரு தலைப்பட்சமாகவே மீறப்பட்டுள்ளது. சிங்களம்.. இன்று இராணுவ பலத்தையும் தமிழர் பகுதியில் வைத்துக் கொண்டுள்ள நிலையில்.. சம்பந்தனும்... சுமந்திரனும் ஐக்கிய இலங்கைக்குள் கட்டிப்பிடிக்கப் போறம் என்று சொன்னாலும்.. சிறீலங்கா எதனையுமே வழங்கப் போறதில்லை.

 

முதலில்.. இங்கு புலம்பெயர் மண்ணில் விக்கியர் பற்றிய புதிய கனவில் உள்ளவர்கள் இதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

இந்த மாகாண சபைகளே விடுதலைப்புலிகளிடம் ஆயுதம் இருந்தபோது.. அதைப் பறிக்க உருவாக்கப்பட்ட ஒன்று.

 

கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்ட விடயமும்.. வடக்கு மாகாண சபை தேர்தலில் சொல்லப்பட்ட விடயமும் பெரிய வித்தியாசத்தைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

 

மேலும்.. விடுதலைப் புலிகள் அமைப்புக் கூட சுவிஸ்லாந்தில் உள்ள சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு ஒன்றிற்கு தமிழர்களின் தாயகம்.. சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட நிலையில் செல்ல தயார் என்றே சொல்லி இருந்தது. அதில் பிரிக்கப்படாத இலங்கை என்பது.. தானாகவே வந்து சேருது. பிரிக்கப்படாத இலங்கை என்ற பதம்.. இலங்கை பிளவடைவதை விரும்பாத சர்வதேச சக்திகளை திருப்திப்படுத்த முன்வைக்கப்படும் ஒன்று. அதற்காக தமிழ் மக்கள் அடைய விரும்பும் அரசியல் உரிமையை விட்டுக் கொடுக்க முயலக் கூடாது.

 

சிங்களம் உருப்படியான ஒரு தீர்வுக்கு தன்னை தயார்ப்படுத்தாத நிலையில்.. தமிழ் மக்களின் அபிலாசை என்பதை தமிழ் மக்கள் முற்றாகக் கைவிடனும் என்றில்லை. அதனை தான்..காசி ஆனந்தன் ஐயா வலியுறுத்துகிறார்.

 

கூட்டமைப்பு..ஐக்கிய இலங்கை.. சமஸ்டி.. சுயநிர்ணயம்.. என்று எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிறீலங்கா ஐக்கிய இலங்கை என்பதை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது. எந்த விதமான அதிகாரப்பகிர்வு பற்றியும் பேசுவதாக இல்லை.

 

இந்த நிலையில்.. முதன்மை சர்வதேச சக்திகளைத் திருப்திப்படுத்த.. சம்பந்தன் ஐக்கிய இலங்கையையே தமிழ் மக்களின் விருப்பாக இனங்காட்ட விளைகிறார். அது உண்மையில் மிகத்தவறான அணுகுமுறை மட்டுமன்றி.. 35 வருட கால போராட்டத்தை பயங்கரவாதமாகக் காட்டியவர்களுக்கு வழங்கும் ஒத்துழைப்புப் போன்றது.

 

இந்த இடத்தில் சம்பந்தன் தெரிவிக்க வேண்டிய விடயம். தமிழ் மக்களின் அபிலாசை என்பது.. தமிழீழம் தான். ஆனால் அதற்கு மாற்றீடாக குறைந்த பட்சத் தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள்.. சமஸ்டி முறையிலான.. சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்திய.. சுயாதீன இயக்கமுள்ள.. அலகு ஒன்றிற்கான.. அதிகாரப்பகிர்வை ஏற்கத் தயாராக இருக்கிறோம் என்று.

 

இந்த இடத்தில் தான் சம்பந்தனும்.. சுமந்திரனும் விமர்ச்சனத்துக்கு உள்ளாகிறார்கள். சம்பந்தன் தொடர்பில்.. நீண்ட ஒரு சந்தேகம் உள்ளது. நீலனும் அஸ்ரப்பும் சேர்ந்து உருவாக்கிய சந்திரிக்காவின் பொதியில்.. எந்த ஒரு அர்த்தபுஷ்டியான விடயமும் இருக்கவில்லை. ஆனால் அதனை திருப்திகரமான ஒன்று என்று வரவேற்றவர் சம்பந்தன். அந்தப் பொதியை முற்றாக நிராகரித்தார்கள் புலிகள். சம்பந்தன் மீண்டும் அப்படியான ஒரு சிக்கலுக்குள் தமிழ் மக்களை மாட்டிவிட முனையலாம் என்பதால் தான்.. காசி ஐயா போன்றவர்கள்.. தமிழ் மக்களின் உச்ச அபிலாசையை முன்னிறுத்தப் பாடுபடுகிறார்கள். அது இன்றைய யார் மீதும்.. திடமாக.. நம்பிக்கை வைக்க முடியாத ஒரு சூழலில் மிக அவசியமாகும்.

 

விடுதலைப்புலிகளின் தலைமை விலைபோகமாட்டாதது என்ற நம்பிக்கை தான் தமிழ் மக்கள் அவர்கள் எடுத்த எல்லா அரசியல் நிலைப்பாடுகளையும் ஆதரிக்கச் செய்தது. ஆனால் சம்பந்தன் சுமந்திரன் நிலை அப்படியான ஒன்றல்ல. அவர்களின் சொந்த விருப்புகளை தமிழ் மக்களின் விருப்பாகக் காட்டி திணிக்க முற்பட்டால் அதனை எதிர்க்கும் திராணியும் பலமும் தமிழ் மக்களிடம் இருந்தால் மட்டுமே இவர்கள் சோரம் போவதைத் தடுக்க முடியும். அதற்கு காசி ஐயா போன்றோரின்.. இந்த நிலைப்பாடுகளின் பால் மக்கள் உறுதி கொண்டிருப்பதும் அவசியம். அவற்றைப் புறக்கணிக்க முடியாது. கூடாது.

 

சிங்களத்தின் இன்றைய கனவு.. புலிகளை அழிச்சாச்சு. எனி.. தமிழீழக் கனவையும் சிதைத்து தமிழர்களை அவர்களின் நிலத்தில்... தனது இராணுவத்தை விஸ்தரித்து..தனது.. அதிகார எல்லைக்குள் நிரந்தரமாக அடிமைப்படுத்தி வைப்பது தான். இந்த நிகழ்ச்சி நிரலை முறியடிக்க தமிழர்கள் பல வழிகளிலும் பயணிக்க வேண்டி உள்ளது. சம்பந்தனின் சுமந்திரனின் வழி ஒன்றென்றால்.. நாடுகடந்த தமிழீழ அரசின் வழி இன்னொன்று. காசி ஐயாவின் வழி இன்னொன்று. இதில் அவர் உசத்தி இவர் தாழ்வுன்னு.. சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதற்கான அவசியம் இன்று தமிழ் மக்களுக்கு இல்லை. காரணம் தமிழ் மக்கள் ஒன்றுமே இல்லாத அனாதைகளாக நிற்கின்றனர்..!

 

முதலில் இந்த நிலையில் இருந்து வெளிவருவதே தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க உதவும். மாறாக... ஆளையாள் அவர் சரி.. இவர் பிழை என்று திட்டுவதால்.. எதுவும் ஆகப்போவதில்லை. :icon_idea:

 

Edited by nedukkalapoovan

விசுகு அண்ணா ,நெடுக்ஸ் நீங்கள் தான் குழப்பிறீங்க .கோசான் சொல்வது சரி விட்டுடுங்க .தற்போது  எமக்கு எல்லாம் கிடைத்துவிட்டது ,இனி என்ன போராட்டம் ,புலி ,புலம்பெயர்  புலி ஆதரவு . :rolleyes: ..............தமிழீழம் ,மாவீரர்கள் . :( ..
 
சிங்களவன் இப்பதான் பாத்திரத்த தந்துள்ளான் பிச்சை போடுவான் நிச்சயம் போடுவான் ......... :D  :icon_idea:  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.