Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணசபைக்கு காணி அதிகாரங்கள் இல்லை - சிறிலங்கா உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபைக்கு காணி அதிகாரங்கள் இல்லை - சிறிலங்கா உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு
[ வியாழக்கிழமை, 26 செப்ரெம்பர் 2013, 11:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]


மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் கிடையாது என்றும், சிறிலங்காவின் மத்திய அரசுக்கே காணி அதிகாரங்கள் அனைத்தும் உள்ளதாகவும், சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் தலைமை நீதியரசர் மொகான் பீரிஸ் தலைமையிலான, மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வே இந்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

நீதியசர்கள் மொகான் பீரிஸ், சிறீபவன், ஈவா வணசுந்தர ஆகியோர் தனித்தனியாக இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

மத்திய மாகாணத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டத்தில் மாகாணசபைகளுக்கு காணிகள் தொடர்பான எந்த அதிகாரங்களும் இல்லை என்று கடந்த 2000ம் ஆண்டு கண்டி மேல் நீதிமன்றம், தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், 13வது திருத்தச்சட்டத்தின் படி காணி அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை நிறுத்தக் கோரி சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தில், காணி, காணி அபிவிருத்தி அமைச்சினால், மனுச்செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழு, 13வது திருத்தச் சட்டத்தில் காணி அதிகாரங்கள் எதுவும் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு, சிறிலங்கா அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று, சிறிலங்கா அரசின் சார்பில் வாதிட்ட சட்டவாளர் கோமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.

காணி தொடர்பான அதிகாரம் மாகாணசபைகளுக்கு இருப்பதாக இதுவரை பொய்யான பரப்புரைகளை செய்து வந்த சிறிலங்கா அரசுக்கு எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு இந்தத் தீர்ப்பு முறையான பதிலை அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தமிழர் தரப்பினால் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், வடக்கு மாகாணசபை தெரிவு செய்யப்பட்டுள்ள சூழலில் இந்தத் தீர்ப்பு வெளியாகியிருப்பது பெரும் சர்ச்சையையும் சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20130926109142

ஆரம்பிச்சிட்டாங்க  :(  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபைக்கு காணி அதிகாரங்கள் இல்லை - சிறிலங்கா உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பு

[ வியாழக்கிழமை, 26 செப்ரெம்பர் 2013, 11:56 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் கிடையாது என்றும், சிறிலங்காவின் மத்திய அரசுக்கே காணி அதிகாரங்கள் அனைத்தும் உள்ளதாகவும், சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

.

நீதியசர்கள் மொகான் பீரிஸ், சிறீபவன், ஈவா வணசுந்தர ஆகியோர் தனித்தனியாக இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

.

.

http://www.puthinappalakai.com/view.php?20130926109142

சிங்களவன் தீர்ப்பளிக்கின்றான்  இது எதிர்பார்த்ததுதான்

ஆனால் மூன்று நீதியரசர்களில் இவர் ஒரு தமிழர்.

இப்படியானவர்களைத்தான் நாளை நாம் புத்திஜீவிகள் எனத் தலையில்  தூக்கி வைத்துக் கொண்டாடுவோம்

இந்தியா தமிழர்கள் மேல் திணிக்க இருந்த தீர்வு இது...நீதி அரசர்களை ஏசுவதால் ஒண்டும் ஆகப்போவதில்லை... இதை தான் திருத்த சட்டமூலம் அதிகாரங்களை கூடுதலாக்க வேண்டும் எண்று எங்களவர்கள் கடந்த 26 வருசமாக கெஞ்சுகிறார்கள்... கெஞ்சுறவர்களை விஞ்சுறது தானே உலகம்...

இதை புலிகள் வாங்க இல்லை எண்டு தான் எங்கட நிறைய அறிவாளிகளுக்கு புலிகள் மீது கோபம்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்துக்கான இன்னுமொரு தடைக்கல்லும் தகர்த்தெறியப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.