Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மக்களுக்கு சேவை செய்ய அமைச்சுப்பதவிகள் தான் வேண்டுமென்பதில்லை' - அனந்தி சசிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'மக்களுக்கு சேவை செய்ய அமைச்சுப்பதவிகள் தான் வேண்டுமென்பதில்லை' - அனந்தி சசிதரன்
[ செவ்வாய்க்கிழமை, 01 ஒக்ரோபர் 2013, 11:15 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ]


நடந்து முடிந்த வடமாகாண சபைத்தேர்தலில் வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கு அடுத்ததாக அதிகூடிய விருப்பு வாக்குகளை அளித்து என்னை வெற்றி பெறச்செய்த எனது உறவுகளுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்.

எத்தகையதொரு எதிர்பார்ப்புடன் நீங்கள் எனக்கு வாக்குகளை அளித்தீர்களோ அவ்வழித்தடத்திலிருந்தும் நான் இம்மியளவும் விலக மாட்டேன் என உறுதி கூறுகின்றேன்.

இந்நிலையில் ஒரு சில இணைய ஊடகங்களில் அனந்தி சசிதரன் ஆகிய நான் வடமாகாண சபையின் அமைச்சுப் பதவிக்களுக்காக அடிபடுவதாக திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் சில உள்நோக்கத்துடன் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படுகின்றது.

அத்தகைய திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை முற்றாக நிராகரிப்பதோடு எமது மக்களுக்கு சேவையாற்ற மாகாண சபை அமைச்சுப் பதவிகள் தான் தேவையானது எனவும் நான் ஒரு பொழுதும் கருதவில்லை.

யுத்தத்தின் வடுக்களை தாங்கி நிற்கும் எமது மக்களுக்கு சேவை செய்வதற்கும் குரல் கொடுப்பதற்கும் மாகாண சபை உறுப்பினர் பதவி என்பது கூட தடைக்கல்லாக இருந்தால்; அதனையும் தாண்டிச் செல்ல நான் தயாராகவே இருக்கின்றேன்.

தேர்தல் காலப்பகுதியில் என் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை முயற்சிகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பொறிமுறையொன்றை உறுதி செய்து உதவுமாறு எனது கட்சித் தலைமையிடம் கேட்டுள்ளேன்.

அமைச்சுப்பதவிகள் போன்றவற்றிக்காக முரண்பட்டுக்கொள்வது, எந்த மக்கள் உன்னதமான இலக்கிற்காக எமக்கு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தார்களோ அந்த எமது உறவுகளையே சலித்து போக வைத்து எம்மை அம்மக்களிடமிருந்து அன்னியப்படுத்திவிடும்.

எனவே மக்களுக்கு சேவை செய்ய அமைச்சுப்பதவிகள் தான் வேண்டுமென்பதில்லை என்பதனை அனைவருக்கும் மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நடந்து முடிந்த தேர்தல் கால பகுதிகளில் பெண் என்ற வகையிலும் யுத்தத்தின் வடுக்களை தாங்கி நிற்கும் தாயொருத்தி என்ற வகையிலும் எனது வெற்றிக்காக தோள் கொடுத்த மகளீர் அமைப்புக்கள் அனைத்திற்கும் மீண்டும் நன்றிகள்.

பெண்ணொருவரை அமைச்சர் ஆக்குவதன் ஊடாக தமக்காக குரல் கொடுக்கும் சக்தி ஒன்று தொடர்பில் அவர்கள் கொண்டுள்ள அக்கறையினை நான் நன்றியுடன் புரிந்து கொள்கின்றேன். அந்த வகையினிலேயே கூட்டமைப்பு தலைமையிடம் எனக்காக அமைச்சு ஒன்றை வழங்கியுதவுமாறு அவர்கள் கோரியிருக்கலாம் என நம்புகின்றேன்.

பதவிகள் மற்றும் கதிரைக்கனவுகளை தாண்டி எனது மக்களிற்கான சேவையென்பதையே இலட்சியமாகக் கொண்டுள்ளேன் என்பதை மீண்டுமொரு முறை நான் உறுதிப்படுத்திக்கொள்கின்றேன்.

அன்புடன்

அனந்தி சசிதரன்
வட மாகாணசபை உறுப்பினர்
யாழ்ப்பாணம்
01.10.2013


http://www.puthinappalakai.com/view.php?20131001109171

இது தோற்றவர்கள் கிளறிவிட்ட புரளி என்று தெரிந்தது. ஆனால் யாழின் சில அவசர உறவுகள் அவசரக் கருத்துகள் எழுதினார்கள். அந்த கருத்துகளின் அமைக்கப்படிருந்த வடிவங்களே அவற்றில் சிந்தனை தடங்கல்கள் இருப்பதை தெளிவாகக் காட்டியிருந்தன.

 

இதில் நிச்சயமாக அவரோ அல்லது அவரின் அனுசரணையாளகளோ மந்திரிப்பதவி கேட்கவில்லை என்பது தெரிகிறது. எனவே மந்திரிப்பதவிகள் போராடத்தின் அம்சமாக வழங்கப்டவேண்டுமேயல்லாமல், அதிகாரமில்லாத சபையை நியாப்படுத்த சிலருக்கு வழங்கப்படுவதை தவிர்க்க வேண்டும். இது தோற்றவர்களுக்கு மேலும் தீனி போடுமேயல்லாமல் அவர்களின் தாக்குதல்களை நிறுத்தாது. அவர்கள் எப்படி பதவிகள் பகிரப்பட்டு வழங்ககப்பட்டாலும் அதில் தவறு கண்டு தமது ஆப்பிறுக்கல் முயற்சியை தொடர்வார்கள். இதில் தோற்றவர்கள் மகுடி வாசிக்க சில அறிவு ஜீவிகள் எழுந்து நின்று படம் எடுத்து ஆடுவதை தவிர்க்க வேண்டும். 

 

அனந்தி தனது கட்சியை காப்பாற்ற எடுத்த முயற்சிக்கு நன்றி. அவர் தனது போராட்டங்கள் தான் தொடர தேவையான ஆயுதங்களை, அடுக்கணிகளை உள்ளே பேசி பெற்றுக்கொள்ள முயல்வதும் தொடர வேண்டும்.

 

 

Edited by மல்லையூரான்

யுத்தத்தின் வடுக்களை தாங்கி நிற்கும் எமது மக்களுக்கு சேவை செய்வதற்கும் குரல் கொடுப்பதற்கும் மாகாண சபை உறுப்பினர் பதவி என்பது கூட தடைக்கல்லாக இருந்தால்; அதனையும் தாண்டிச் செல்ல நான் தயாராகவே இருக்கின்றேன்.

 

நிதானமாக முடிவு செய்யவும்  .

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரன் யாழ் கள உறவுகள் யாரும்.. அனந்தி அமைச்சுப் பதவி கேட்கிறார்.. கொடுக்க வேண்டும் என்று எழுதி இருக்கவில்லை. மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றவர் என்ற வகையில்.. அவரின் செயல்வீச்சை அதிகரிக்க.. அமைச்சுப் பதவி அவருக்கு வழங்கப்படுதல் நல்லது.. அதனை அனுபவம்.. அதுஇதென்று சாக்குப் போக்குச் சொல்லி.. தட்டிக்கழிப்பதை தான்... கள உறவுகள் சுட்டிக்காட்டி அது தவறான அணுகுமுறை என்று கருத்துக் கூறியுள்ளனர். அனந்தி அக்காக்கு அவரின் செயற்பாட்டுக்கு உதவிக் கூடிய வகையில்.. முக்கிய பொறுப்பு அளிக்கப்படும் என்பது.. பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பும் கூட. அதை நிராகரித்தால்.. அது கூட்டமைப்புத் தலைமை மீது மக்கள் அதிருப்தி அடைவதையே செய்யும். அனந்தி அக்கா.. பெருந்தன்மையோடு செயற்பட்டாலும்.. மக்களின் எதிர்பார்ப்பு என்றொன்றுள்ளது. அதனை அவர்கள் தங்கள் விருப்பு வாக்குகளின் மூலம் காட்டியும் உள்ளனர். :icon_idea::)

ஆப்பிறுக்கல்களுக்கு இடமளித்து கூட்டமைப்பு மீது குற்றங்கள் கண்டு பிடிக்கப்பட்டமை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதனால் மட்டுமே கட்சியைக் காப்பாற்ற அனந்தி தனக்காக மந்திரிப் பதவிகளுக்களுக்க வாதாடியவர்களிடம் இருந்து தன்னை விலத்தி, அறிக்கை விட வேண்டி இருந்தது. இதில் யாழின் அறிவு ஜீவிகள் எதிரிகளின் சதியில் விழுந்து தங்களை தாங்கள் எதிர் கன்னையில் கண்டமை தவிர்க்கப்படிருக்க வேண்டும். 

 

அனந்திதான் தான் பதவி கேட்கவில்லை என்று கூறியிருக்கிறா. நான் அறிவு ஜீவிகள் "அனந்தி பதவி கேட்டபடியால் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்" என்று சொல்லவில்லை. கண்ணை மூடிக்கொண்டு அவரசப்பட்டு சதியில் விழுந்தமையைத்தான் கண்டித்திருந்தேன். 

 

இந்தியா சம்பந்தரை கேளாமல் வரதரை பதவியில் போட்ட நாடு.  தேர்தல் நடை பெறாவிட்டால் இந்தியாவுக்கு வலிப்பு ஒன்றும் இல்லை. ஆனால் சம்பந்தருக்கு வலிப்பு இருந்தது. கூட்டமைப்பின் முயற்சியால் சில சில இடங்களில் காணப்பட்ட சொந்த நல ஈடுபாடுகளை இணைத்து தேர்தல் கொண்டுவரப்பட்டது.

 

சம்பந்தர் தன்னையேதான்  புலிகளின் கையாள் இல்லை என்று பலதடவைகள் விளங்கப்படுத்த முயன்றவர். இது தமிழ் மக்களுக்காக செய்ய வேண்டியதொன்றல்ல. இது இந்தியாவை, மேற்குலகை திருப்த்திப்படுத்த செய்த ஒன்று. ஆனால் அதே சம்பந்தர் போராளிகளின் பங்கை அங்கீகரித்து, போராளிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தலில் இடம் கொடுப்பதாக கூறி, அனந்தியை அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவராக நிறுத்தினார். இது "இந்தியாவின் நியமனம்" என யாழில் விவரிக்கப்பட்ட விக்கினேஸ்வரனுடன் சேர்த்து செய்யப்பட்ட நியமனம். கூட்டமைப்பும், தாயக மக்களும் தங்களில் பாதைகளில் நியாயமாகவும் தெளிவாகவும் பயணிக்கிறார்கள். அனந்திக்கு மந்திரிப்பதவி கிடையாதா? அப்படிக் கிடைக்காவிட்டால் அது கூட்டமைப்பில் காணப்படும் அநீதியின் விளைவா? என்பதை ஆராயமல் சதிகளின் வ்லையில் விழுவது தவிர்க்கப்பட வேண்டும்.

 

அதிகாரமில்லாத மாகாண சபைத் தேர்தலை எதிர்த்தவர்களும் கூட எதிரியின் வலையில் விழுந்த போது அனந்தியின் மந்திரிப் பதவிக்காக விவாதித்தார்கள். எனது நிலைப்பாடு சதி எது, தமிழ்மக்கள், போராளிகள் மீதான அக்கறை எது என்றதை கவனமாக ஆராய்ந்து கருத்துக்கள் வைக்கப் வேண்டும் என்பதே. அனந்தி இந்த விவாதத்தை விரும்பாமல் அறிக்கைவிட்ட படியால் இனி இதைப் போகவிட்டுவிடுவோம். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் இந்தப் பெரிய பந்தியில் கூட மக்களின் எதிர்பார்ப்புக்கு தீர்வு இல்லை. அனந்தி அக்கா வேண்டாம் என்று சொல்லக் கூடிய நிலையை தோற்றுவிப்பதை விடுத்து.. மக்களின் வாக்குகளுக்கு மதிப்பளித்து.. அவருக்கு முக்கியத்துவம் வழங்கி மக்கள் பணியை அவர் செய்ய சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதை விடுத்து கூட்டமைப்பு வங்குரோத்து பதவிப் போட்டி அரசியலை நோக்கி.. மக்களின் வாக்குகளை பாவிப்பதை நிச்சயம் எல்லோரும் கண்டிக்கவே செய்வார்கள்.

 

சிங்களம்.. இந்தியா.. மேற்குலகின் நலன்களுக்காக தமிழீழத்தை கைவிட்டதாகச் சொல்லிக் கொள்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதனை இராஜதந்திர நகர்வென்றும் சொல்ல முடியாது. ஏனெனில் மேற்குலக ராஜதந்திரிகளுக்கு நல்லாத் தெரியும் தமிழ் மக்கள் தமிழீழத்தை அதாவது தன்னாட்சி உரிமையை எதிர்பார்க்கிறார்கள் என்று. அதனை பிபிசி போன்ற ஊடகங்களும் எதிரொலித்திருக்கின்றன.

 

இந்த நிலையில்.. தமிழீழமும் வேண்டாம்.. தன்னாட்சியும் வேண்டாம்.. மாகாண சபை போதும்.. என்ற அறிவிப்புக்கள் மேற்குலகே எதிர்பார்க்காத ஒன்று. இவை தமிழ் மக்களின் பேரம் பேசலை தான் வலுவிலக்கச் செய்யும். உள்ளதையும் கெடுத்ததாகவே  முடியும்..!

 

கூட்டமைப்புத் தலைமை.. அயலவர்களை..திருப்திப்படுத்தல் செய்ய வெளிக்கிட முதல் வாக்குப் போட்ட மக்களை திருப்திப்படுத்த முயல வேண்டும். இன்றேல்.. கூட்டமைப்பு சரிந்து உதிர்வது... தானாக நடக்கும்..! அப்போது வருந்திப் பயனில்லை..! :icon_idea::)


வரதராஜப் பெருமாள் விட்ட அதே தவறான பாதையில் தான் இன்று சம்பந்தன் போய்க்கிட்டு இருக்கிறார். வரதராஜப் பெருமாள் இந்தியாவை திருப்திப்படுத்த சொந்த மக்களை காட்டிக்கொடுத்தார்.  இறுதில் மக்கள் முன் நிற்க முடியாமலே நாட்டை விட்டு ஓடினார். அவர் தமிழீழப் பிரகடனம் செய்த போதும் கூட மக்கள் அவரை மதிக்கத் தயாராக இருக்கவில்லை. காரணம்.. அவரின் தமிழீழத்தின் தன்மையை மக்கள் நன்கே விளங்கிக் கொண்டிருந்தனர். அந்த நிலைக்கு சம்பந்தன் போகமாட்டார் என்று நம்புவோமாக..! :icon_idea:

தேர்தலை இந்தியா- இந்தியா மட்டும்தான், (22ம் கூட்டத்தொடரில் கேட்டுக்கொண்டதற்காக அல்ல) கொண்டுவந்தது. அதில் தனிய இந்தியாவின் நலந்தான் இணைப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலால் மேற்குநாடுகளுக்கு லாபம் குறைவு.

 

தேர்தல் நேரம், சம்பந்தர், சுமந்திரன், சுரேஸ். அடைக்கலநாதன், மாவை, சித்தார்த்தன் (சிறீதரனுமா என்பது ஞாபகமில்லை) போன்றோர் வெளிப்படையாக மன்மோகன் சிங்கின் கருத்துக்களை கூறி மக்களை ஆர்வப்படுத்தி வாக்களிக்க வைக்க முயன்றார்கள். இதில் இந்தியாவின் நலன் வெளிப்படையாக காட்டப்படிருந்தது. மாகாணசபை செயல்ப்பாடுகள்  போராட்டத்தை வலுவிழக்கவைக்கும் என்ற நிலைப்பாட்டை முன்னேற்றினாலோ அல்லது தமிழீழத்தில் இந்தியாவின் நலனை எதிர்ப்பதாகவோ இருந்தால் குமார் மாதிரியே தாயக மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்க வேண்டும். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அவர்கள் முன்திரி கொட்ட மாதிரி அடிக்கடி அறிக்கை விட்டு சம்மந்தன் ஐயாட்ட வாங்கி கட்டிக்க போறா பாவம் அரசியலுக்கு புதுசில்ல நெளிவு சுளிவு தெரிய நாள் எடுக்கும்

:D

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி ஒரு பக்கா அரசியல் வாதியாகீட்டா. வாழ்த்துக்கள். அமைச்சு பதவி அவவுக்கும், வாக்கு போட்டவர்களுக்கும் கட்சி தலைமைக்கும் இடையான விடயம். புலம்பெயர் புண்ணாக்காகிய நான் இதில் சொல்ல ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அங்க அனந்தி வீட்டில army ஆட்டம் போடா புலம் பெயர் புண்ணாக்கு பத்திரிகைகள் தான் செய்தியை வெளி உலகிற்கு கொண்டு வந்தது உடனடியாக புலம் பெயர் புண்ணாக்கு அமைப்புகள் பல தங்கள் ஊடக இந்த செய்திய பல அரசு அதனோட சம்மந்தப்பட்டவர்களுக்கு கொண்டு சென்று கடும் அழுத்தம் பிரையோகிகப்பட்டது

புலம் பெயர் புன்னாக்குகளுக்கு அனந்தி நன்றியும் சொல்லி இருந்தா

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி செய்ததற்க்கு பு.பு க்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். இததான் மக்கள் உங்களிடம் எதுர்பார்கிறார்கள். அட்வைஸ் அல்ல. உடனே வீட்டுக்கு போனவர் சும்ந்திரன் மற்றும் மாவை. ஊடக அழுத்தமும் அதிகம் நாட்டில் உள்ளே இருந்துய்ஹான் வந்தது. இருந்தாலும் பு. பு க்கள் செய்த இந்த வேலை பாராட்டுக்குரியதே.

கூட்டமைப்பு எதை செய்தாலும் அவர்களை குறை சொல்வதும் திட்டி தீர்ப்பதும் இங்கு யாழ் களத்தில் ஒரு சிலரின் அன்றாட தொழிலாகி விட்டது. தவறுகள் செய்வதை தட்டி கேட்போம் என்ற உண்மையான அக்கறை நேர்மை இவர்களுக்கு இருக்குமானால் 2009 ம் ஆண்டிற்கு முன்னர் அங்கு நடந்த அரசியல் ராஜதந்திர தவறுகள் எதையுமே இவர்கள் சுட்டிப் காட்டி அதை திருத்த முற்படவில்லை. வீரத்தையும், தியாகத்தையும் பாராட்டிய, கௌரவித்த அதே வேளை இழைக்கப்பட்ட பாரிய அரசியல் ராஜதந்திர தவறுகளை சுட்டி காட்டி இருப்பார்களேயானால் வீரத்திற்கும், தியாகத்திற்கும் ஒரு அர்த்தம் இருந்திருக்கும். பாரிய தவறுகள் இழைக்கப்படும் போது வேடிக்கைபார்தது வாளாவிருந்ந இவர்கள் இன்று மட்டும் எதற்கெடுத்தாலும் சம்பந்தரிலும், சுமந்திரனிலும் பாய்வது ஏன்? அவர்களுக்குதான் அது வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற இன்னமும் அந்த தவறுகள் என்ன எண்ணே இன்னமும் இவர்களுக்கு புரியவில்லை. இவங்கள போய் அப்பவே திருதவில்லை எண்டி சொல்லுறீங்க.

நீங்க வேற இன்னமும் அந்த தவறுகள் என்ன எண்ணே இன்னமும் இவர்களுக்கு புரியவில்லை. இவங்கள போய் அப்பவே திருதவில்லை எண்டி சொல்லுறீங்க.

 

 

உங்களை சூது வாது தெரியாமலே வளர்த்திருக்காங்க...   அது மட்டும் தெளிவாய் விளங்குது...  

 

இலங்கை அரசியல் சட்ட அமைப்பை அங்கீகரித்து இருக்கிற கூட்டமைப்பு  உங்களுக்கு தீர்வாக எதையும் பெற முடியாது...    அதுவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை கொண்ட  நாட்டிலை  மக்களால் தெரிவு செய்யப்பட்ட  ஒரு  அரசாங்கத்தையே தனது அதிகாரத்தால் காரணமே சொல்லாது கலைக்கும் நிலை இருக்கும் போது  கூட்டமைப்பு  தீர்வை வாங்கி தரும் எண்டதோ அது நிலைக்கும் எண்டதோ கனவு மட்டும் தான்... 

  • கருத்துக்கள உறவுகள்

சரி கூட்டமைப்பால் ஒன்றும் முடியாது. அப்ப அவங்களை அவர்பாட்டில் விட்டுட்டு நீங்க உங்க புரட்சிய ஆரம்பிக்கிறது தானே? எப்ப பிளேன் ஏறுறீங்கள்?

சரி கூட்டமைப்பால் ஒன்றும் முடியாது. அப்ப அவங்களை அவர்பாட்டில் விட்டுட்டு நீங்க உங்க புரட்சிய ஆரம்பிக்கிறது தானே? எப்ப பிளேன் ஏறுறீங்கள்?

 

ஏன் கூட்டமைப்புக்கு போட்டியாய் வாறாக்களை காட்டி குடுக்கவோ...??? 

 

அது சரி புரச்சி இலங்கையிலை இருந்து தான் செய்ய வேணும் எண்டு உங்களுக்கு யார் சொன்னது...?? 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு வகுப்பெடுக்கிறவை.. கூட்டமைப்புக்கு புத்திமதி சொல்லுறதை ஏற்கினம் இல்லை.

 

தலைவருக்கு தெரியும்.. ஆயுதப் போராட்டப் பயணம்.. இறுதிக் கட்டத்தை அடையுது என்பது.  2002 போர் நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின் விடுதலைப்புலிகள் மக்களிடம் சொன்னது எனி ஒரு போர் என்றால் வென்றாலும் தோற்றாலும் அதுவே இறுதிப் போர் என்று.

 

அதுமட்டுன்றி எந்த ஒரு கட்டத்திலும்.. ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்படக் கூடாது என்ற வகையில் தான் தலைவர் கூடிய வரை தமிழ் தேசிய தளத்தை விரிவுபடுத்தி.. ஒரு கூட்டமைப்பை உருவாக்க பல தரப்பையும் இணைத்து இணங்கி போனார். அதனை வளர்க்க பொங்குதமிழ் போன்ற விடயங்களை மக்கள் முன் கொண்டு வந்தார். அதேவேளை புலம்பெயர் மக்களையும் தாயக அரசியலில் உள்ளிளுத்தார். புலம்பெயர் மக்களுக்கான தனித்துவ நடவடிக்கைகளையும் வகுத்துக் கொடுத்தார்.

 

பெரிய இராஜதந்திரத் தோல்வி என்று படம் காட்டிறவை.. தேசிய தலைவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்குப் பின்னாலும் இருந்த அரசியலைப் பார்க்க மனம் கொள்கிறார்கள் இல்லை. இதில... புலிகளுக்கு வேற இன்று.. வகுப்பெடுக்கிறார்கள்.

 

எத்தகைய இடர் வரினும்.. கொள்கைகள் தளராமல் நின்றும் காட்டினார்கள் புலிகள். தம்மை பலியிட்டு மக்களுக்கு ஏதேனும் நடக்கட்டும் என்று கூட எதிரியை எதிர்க் கொண்டவர்களுக்கு சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்கும்.. கூட்டத்தினரை வைச்சு.. அரசியல் பாடம் எடுப்பது மக்களிடம் செல்லாது என்பதை அனந்தி அக்காவிற்கு மக்கள் வழங்கிய ஆணை எடுத்துக்காட்டாகிறது.

 

எமது போராட்டம் இன்று மந்த நிலையில் இருக்கக் காரணம்.. புலம்பெயர் மக்களை அந்நியப்படுத்தும் செயற்பாடுகளும் ஆகும்.

 

இதனை இன்று இரண்டு தரப்பினர் எம்மத்தியில் செய்கின்றனர்.

 

1. எதிரியும் அவனது கூலிகளும்.

 

எதிரிக்கு களத்தில் சேவகம் செய்து எனிப் பிழைப்பு நடத்த முடியாது என்ற கட்டத்தில் இப்போ ஒட்டுக்குழுக்களின் காட்டிக்கொடுப்பு.. புலம்பெயர் தேச மக்களைப் பிரித்தாளும்.. குழப்பிவிடும் திட்டம் நோக்கி எதிரிக்கு பணி செய்வதாக அமைகிறது.

 

2. கூட்டமைப்பில் உள்ள சிலர். இவர்களின் இந்திய விசுவாச.. சிங்கள விசுவாச இணக்க அரசியலுக்கு ஒப்படைப்பு அரசியலுக்கு பாதகமாக புலம்பெயர் மக்களின் செயற்பாடுகள் இருப்பதால் அவர்களை அந்நியப்படுத்த அல்லது அவர்களில் இருந்து அந்நியப்பட்டு நிற்க விளைகின்றனர்.

 

இங்கு தான் புலிகளை கூட விடத்தவறிய... மிக மோசமான வரலாற்றுத் தவறை செய்து கொண்டிருக்கிறார்கள். அவற்றை சுட்டிக்காட்டத் தயங்கிக் கொள்வதும்.. தாயக மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளாமல் சாணக்கிய அரசியல் செய்வதும்.. எதிரிக்கும் அவனுக்கு வால்பிடிப்பவர்களுக்குமே அரசியல் களங்கள் எதிர்காலத்தில் பிரகாசமாகும்.

 

அதனை நோக்கியே யாழிலும் சில உள்நுழைவாளர்களின் செயற்பாடுகள் உள்ளன. இதனை மக்கள் நன்கே அறிந்திருக்கிறார்கள். மக்களை எனியும் எனியும் எவரும் ஏமாற்றி பிழைக்கலாம் என்றால்.. அது சம்பந்தன்.. சுமந்திரன் உட்பட எவராலும் எனி ஆகாது..!

 

சேகுவரா சொன்னது போல.. நான் தோற்று விட்டேன் என்பதற்காக.. இது வெல்லப்படவே முடியாத போராட்டம் என்று பொருள் படாது.. என்பது எமக்கும் பொருந்தும்..! ஆனால் இப்போராட்டம் வெல்லப்படவே முடியாது... என்று காட்டவே இங்கும்.. எதிரிகள்.. சந்தர்ப்பவாத அரசியல் கோமாளிகள்.. முனைகின்றனர்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

ஏன் கூட்டமைப்புக்கு போட்டியாய் வாறாக்களை காட்டி குடுக்கவோ...??? 

 

அது சரி புரச்சி இலங்கையிலை இருந்து தான் செய்ய வேணும் எண்டு உங்களுக்கு யார் சொன்னது...?? 

 

இப்பிடித்தான் ஒரு காலத்தில புளொட் பிரச்சாரம் செய்தது. :lol:

 

இப்பிடித்தான் ஒரு காலத்தில புளொட் பிரச்சாரம் செய்தது. :lol:

 

 

 

இப்பிடி சொல்லி அனுப்பி விட்டவைதான் காட்டியும் குடுத்தவை...  முக்கியமாக கூட்டணிக்காறர்... 

அனந்தி அக்காவிற்கு மக்கள் வழங்கிய ஆணை என்று கூறும் நெடுக்ஸ் விக்கினேவரனுக்கு மற்றும் சித்தார்த்தனுக்கு மக்கள் வழங்கிய ஆணையை பற்றியும், 2010 ல் கஜேந்திரன்,பத்மினி கூட்டணிக்கு வழங்கிய படுதோல்வியை பற்றியும் என்ன கூறுகிறார்.

 2010 ல் கஜேந்திரன்,பத்மினி கூட்டணிக்கு வழங்கிய படுதோல்வியை பற்றியும் என்ன கூறுகிறார்.

 

 

2010 ல்  நடந்த தேர்தலிலை இதே யாழ்ப்பாணத்திலை கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் வெறும் 65 119 ...  அது  வாக்களித்த 23% மான வாக்காளர்களில்  46% விகிதம்  இருந்த 9 ஆசனங்களில்  5 வெல்லப்பட்டது...    

 

அதே அரச தரப்பும்  ஐதேகவும் சேர்ந்த சிங்கள தரப்புக்கள் யாழ்ப்பாணத்தில்   62 000 வாக்குக்களுக்கு மேல் வாங்கி கொண்டன... 

 

தேர்தலை பெரும்பான்மையான மக்கள் புறக்கணித்து இருந்தனர்...  கூட்டமைப்பையும் தான்...   

 

இந்த மாகான சபை தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மட்டும் 213 907 வாக்குகள் கூட்டமைப்புக்கு கிடைத்து இருக்கிறது.... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அக்கா 87,000 மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்ற ஒருவர். அவருக்கு மக்கள் அளித்த அங்கீகாரத்திற்கு அளிக்கப்பட வேண்டிய கெளரவத்தையே மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

 

விக்னேஸ்வரன் தான் பெற்ற விரும்பு வாக்குகளிற்காக முதலமைச்சர் ஆகி இருக்கிறார். அவருக்கு இந்தத் தேர்தலில்.. மக்கள் அளிக்க விரும்பிய இடத்தை அளித்திருக்கிறார்கள்.

 

சித்தார்த்தனின் விருப்பு வாக்குகள் தொடர்பில் முரண்பாடு உள்ளது. ஏனெனில்.. கூட்டமைப்பில் மிச்சப் பேருக்கு கிட்டத்தட்ட 30,000 -- 18,000 இடையில் கிடைத்துள்ளது. மேலும் சித்தார்த்தன் பன்னெடும் காலம்.. கொலை அரசியல் செய்த வவுனியாவில் இருந்து அவரை யாழ் மாவட்டம் நோக்கி நகர்த்தியமை.. போன்ற பல்வேறு கேள்விகள் அங்குள்ளன. சித்தார்த்தனின் விருப்பு வாக்குகள்.. என்பது மக்கள் அவரின் பிரதிநிதித்துவத்தை.. அனந்தி அக்கா அளவிற்கு அங்கீகரிக்கவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. சித்தார்த்தனிற்கு இராணுவத்தின் வாக்குகளும் விழுந்திருக்கச் சந்தர்ப்பம் உள்ளது. காரணம்.. அவர் இறுதிப் போரின் போது சிங்களப் படைகளோடு நின்று பணியாற்றிய ஒருவர். அது வன்னி மாவட்ட மக்களுக்குத் தெரியும்.

 

கஜேந்திரன்.. பத்மினி போன்றவர்களை சம்பந்தன் இறுதி நேரத்தில் கழற்றிவிட்டதும்.. மக்கள் சிறிது குழப்பமடைந்திருந்த சூழலிலும் அவர்கள் மக்களை நோக்கி தங்களை வலுவாக நிலை நிறுத்த முன் தேர்தலை சந்திக்க வேண்டி வந்ததும்.. பெரும்பாலான தமிழ் தேசிய ஆதரவு சக்திகள் கூட்டமைப்பை ஆதரித்து நின்ற நிலையிலும் மக்கள்.. வாக்குகளை சிதறடிக்காமல்... கூட்டமைப்பை வெல்ல வைக்க முற்பட்டதில்.. கஜேந்திரன்.. பத்மினி தோற்றார்கள் எனலாம். மக்கள் அவர்களின் கொள்கைக்காக அவர்களை நிராகரித்தார்கள் என்று கூற முற்படுவது மக்களின் அரசியல் அறிவை உணர்ந்து கொள்ளாத முடிவென்று கொள்ளலாம்.

 

ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவிற்கு வாக்குப் போட்ட அதே தமிழ் மக்கள் பின்னர்.. எந்தத் தேர்தலிலும் போடேல்ல. மக்கள்.. ஒற்றுமையையும்.. தமது முதன்மை விருப்புக்களையும்.. வலியுறுத்துவதில் தான் இப்போ வாக்கிச் சீட்டை பயன்படுத்துகிறார்களே தவிர.. சம்பந்தன்.. சுமந்திரன் சார்ந்த அரசியலுக்குள் அவர்கள் இல்லை.. எனலாம்..! :icon_idea:

 

Edited by nedukkalapoovan

அனந்தி அக்காவிற்கு கிடைத்த வெற்றி யுத்தத்தில் கணவனை இழந்ததுடன் மூற்று பிள்ளைகளின் தாயான அவர் தெரியமாக உலகிற்கு சாட்சி சொல்ல முன்வந்த துணிச்சலுக்கும், யதார்த்தத்தை உணர்ந்து நீதியான நடைமுறை சாத்தியமான தீர்வுக்காக போராட முன் வந்ததற்குமானது. கற்பனை உலகில் வாழும் கஜேந்திரன் வகையறாக்களுடன் சேர்நதிருந்தால் அனந்தி தோல்வியை தழுவியிருப்பார். நிச்சயமாக அவர் அறிவுசார் சிந்தனை உடையவர்.

  • கருத்துக்கள உறவுகள்

செல்வராஜா கஜேந்திரன் கற்பனை உலகில் வாழ்ந்தவர் என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதியுள்ளது. அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த போதே பல்வேறு அச்சுறுத்தல்கள் மத்தியிலும் மக்களிடம் தேசிய உணர்வைக் காவிச் செல்லப் பாடுப்பட்ட ஒருவர். அதேபோல் கஜேந்திர குமார் பொன்னம்பலம்.. தந்தையின் அரச படுகொலையின் பின்னர் பல்வேறு அச்சுறுத்தல்கள் மத்தியில் மக்களுக்காக நியாயமாகக்..குரல் கொடுப்பவர். கூட்டமைப்பின் தலைமையில் இன்றுள்ள எவருக்கும் இந்தளவு மக்கள் நெருக்கப் பங்களிப்பு இருந்ததில்லை  பொங்கு தமிழ் என்ற உணர்வேந்தலை யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பித்து வைத்தவர்களும் இவர்களே. துடிப்பான இளைஞர்களாக மக்களோடு நின்று அன்றில் இருந்து இன்று வரை பணியாற்றி வருபவர்கள்.

 

சம்பந்தன் போன்றவர்கள் போல... சிங்களவனின் பஜிரோவில்.. சிங்கக் கொடியை பறக்கவிட்ட கூட்டத்தைச் சார்ந்தவர் அல்ல. யார் கற்பனை உலகில் தமிழ் மக்களின் துயரில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்பதை காலம் அழகாகக் கற்றுத் தந்துள்ளது..! கஜேந்திரன் கற்பனை உலகில் வாழ்ந்தார் என்று சொன்னால் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிக்கும் சம்பந்தன் அதனை விட மோசமான உலகில் வாழ்கிறார்.. வாழ்ந்தார் என்பதே யதார்த்தம்..!

 

கொஞ்சம் பின்னாடி போய் பாருங்க.. நீங்கள் எல்லோரும் இன்று தூக்கிப் பிடிப்பவர்கள்.. கொழும்பில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெரிய வரும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

TNA Wants Autonomous State – Suresh Premachandran

Posted by: uktamilnews in INDIA NEWSLATEST UPDATESSRI LANKA NEWSUK NEWSWORLD NEWS 2 days ago 0 61 Views

 

s_premachandran_tna_02.jpgBy Camelia Nathanial

Having won the majority of the seats in the concluded Northern Provincial Council elections, the TNA is sceptical about the intentions of the government and their sincerity in addressing the concerns of the Tamil people. TNA parliamentarian Suresh Premachandran, in an interview with The Sunday Leader, stated that the government is simply exaggerating the LTTE threat by speculating on LTTE cadres still at large in order to justify the need for additional troops in the Northern peninsula. He claims that, in spite of the large voter turnout, there was large scale military intimidation; the people came out to vote in numbers as they felt that this was perhaps their only chance to bring about change. Below are excerpts of the interview.

Excerpts of the interview:

Q. With the resounding win of your party in the Northern Provincial Council election, what is the next step with regard to working together with the government?

A. We are not against the government. The Northern Provincial Council election was held and the people have given a resounding victory to the TNA. The first step that we want is for the Sri Lankan government to implement the 13th amendment fully, so that the provincial council can function independently. There are few powers for the provincial councils, and those powers must be given to the province so that they make their statutes and do whatever they want.

However, here the issue is that the government keeps saying that the lands are vested with the central government and not the province etc. Judgements like these might lead to issues. If the people who were displaced are to be resettled, then the land problem must be solved. There is no point if we have to be running behind the government for every land issue to be resolved; no province can function on their own.

These are some problems that we could be facing. However, we are definitely prepared to sit with the government, even if the government keep saying that they are not going to give us police powers, land powers etc. There are various other matters that need to be settled as well. There must be a proper taxation system, and for that the financial powers of the provincial council must be enhanced. These matters must be discussed with the government too. We are certainly not against the government, and we have never said that we don’t want to talk to the government.

The problem with the government is that they are not prepared to come forward and talk to achieve a long lasting, amicable settlement. They are purely looking at vote buying in the South, and they feel that they are depending on the Sinhala Buddhist votes. They strongly feel that if they give the powers to the Tamil people, they will lose their power. In that situation, we do not know how far the government will come forward to give us the powers appropriated by the 13th Amendment. That will not resolve all the Indian issues, but they have to implement it.

Q. How does the TNA intend to work out these issues? 

A.We all have to sit down with the government and discuss the issues at hand. The president told the Indian government and leaders that he was prepared to go beyond the 13th Amendment. He set up two committees – the expert committee and the All Party Representative Committee (APRC) – because at the time he strongly felt that they needed to go beyond the 13th Amendment. Those reports are now here and we are prepared to discuss the matters with the government, but we do not know what their ideas are.

Now we are in the process of forming the provincial council, and we are selecting the ministers. They will most probably take their oaths next week. After that we have to see how far the government is ready to give the powers. On the other hand, we are having an army commander as the governor and he is behaving like an army commander – not like a governor. So we want some civil person who understands devolution to be appointed. Only when these issues are resolved can there be smooth functioning in the North, as far as the PC is concerned.

Q. The TNA has been very adamant regarding the removal of the army in the North, or confining them to barracks. Do you still maintain this demand, and why?

A. We definitely want the army removed from the civil functioning of the North. If a similar thing happened in the South, would the Sinhala people accept it? We have made it clear at each and every platform that the army should be withdrawn or confined to barracks, and the Tamil people have voted us in for that. The government know very well that there is no point in having such a large army presence in the North. If we want a normal and democratic atmosphere, without any fear or intimidation, then definitely the army must be withdrawn.

Q. You say that the army interfered and intimidated people in the North during the election. If that is the case, how do you justify the highest voter turnout in the Northern Province – even greater than that of the Wayamba or Central province?

A. Even though an election was held there and there was a greater voter turnout, I still maintain that there was a huge army influence. Even the international election monitors noticed it, and they have cited their observations. In front of each and every polling booth there were two military intelligence personnel in civil.

This was how the election was held. Some say that there was a huge voter turnout, but there was a reason for that. In spite of the army intimidations and threats, the people turned out in numbers because they believed that this was their only chance to find a solution to the issues faced by the Tamil people. That is why the turnout was so high, as they were aware that this might be their only chance to vote and make a change.

Q. There are allegations that the government commenced all these development projects in the North just to hoodwink the international community and buy the votes of the Tamil people. However, since that did not happen, now they say that the government will cut back on these projects in order to punish the people. What is your view?

A. The development projects in the North in no way addresses the immediate problems of the Tamil people. They put up national highways, widened some roads, provided some electricity and developed some schools. I am not denying that, and it is all well and good. But for the last 30 to 40 years, the villages have remained exactly where they were and there is no development as such. If you go to any village, the roads are dilapidated and even the local representatives and institutions are not able to function effectively because they were under the control of the TNA.

The minister and governor in Jaffna did not allow the work to be done at village level. They did not allow the local government to function, and they did not allow the money to be spent. On the other hand, after four years since the end of the war, we have over 50,000 widows in the North and there are over 12,000 children orphaned. The government does not have any plan or program to help these widows, or for that matter even the so-called rehabilitated ex LTTE cadres. In addition, there are over 7,000 missing persons and the government never addressed these concerns.

The government vehemently denies that there are missing persons, and the parents have lost contact with the children who surrendered to the army. In this scenario, how can there be true reconcillation? If the government wants to withdraw the money allocated to the Northern Province, then they are treating the NP as an alien state. If that is how they want to treat the NP, then well and good – they must tell us openly.

Q. There are allegations that there is a huge caste issue in the North, and that the TNA works for the benefit of the upper caste only. How would you respond to these allegations?

A. This is absolute rubbish. We never had power in our hands throughout history, so how can anyone assume that we will not care for the poor man? This is the first time that we are having power, at least in the North, and moreover very limited power. Under these circumstances, how can anyone accuse us of such? It is baseless. In fact, we have two so-called low caste members in our party and they were elected a certain number of votes. We have given them their rightful place. We know how to manage our land, so why are these people worried or afraid of it? We are not accusing the government of anything, in spite of even the president establishing his own family. How come no one is raising this issue?

Q. Is the TNA working according to the agenda of the Tamil Diaspora?

A. Our election manifesto is in all three languages and any sensible person can read it and understand. We have very clearly stated there that we are prepared to resolve all the issues within a united Sri Lanka, and I do not understand what else we can say.

We feel that there must be a long lasting resolution. The people in the North have been living there for a historical period and that was accepted in the Indo Lanka accord. In the first sentence it says that the North and East are the historical habitats of the Tamil speaking people. What we want is some sort of autonomous state for the North and the East. This is a manifesto created by the five parties in the alliance, and this has nothing to do with the Diaspora. If the government and the Buddhist hardliners want to interpret it any differently, I am very sorry for them.

Q. Unemployment is the biggest issue in the North at present. What plans does your party have to address this issue?

A. Our area is predominantly an agricultural and fishery based industry, and due to the war all the infrastructure and even certain factories were destroyed. Therefore, we have to think anew of the resources available. We also plan to look at creating skilled labour. Although there are people ready to work, they are not skilled and this is one of the main concerns. We need to give them that training and knowledge.

Q. According to the army there are over 4,000 LTTE cadres still at large who have not undergone rehabilitation and they pose a threat to security in the North. What is your take on this issue?

A. Gen. Hathurusinghe wants to keep the Northern Province under military control, and they want to justify their presence in the North by claiming that there are still large amounts of LTTE cadres. That may be the reason why he is saying that.

As far as the government news has reported, they have rehabilitated around 12,000 ex LTTE cadres and released them. What sort of program has the government provided for them? Nothing at all; they are only talking about these numbers. We are asking the government to withdraw the army and now they are coming up with these numbers.

This clearly shows the government’s mentality and intentions. They want to keep the army in the North and want, in fact, to increase the numbers. Any sensible person can understand why they are making these sorts of statements. They simply want to increase the troop numbers just to have control, and that is why they are coming up with these fictitious figures.

 

http://www.uktamilnews.com/tamil/english/news/latest-updates/tna-wants-autonomous-state-suresh-premachandran.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.