Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா: மறையும் நம்பிக்கைக் கீற்று! - 'தி இந்து' ஆசிரியர் தலையங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா: மறையும் நம்பிக்கைக் கீற்று! - 'தி இந்து' ஆசிரியர் தலையங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 01 ஒக்ரோபர் 2013, 10:21 GMT ]

இலங்கையில், ''மாகாண சபைகளுக்கு நில நிர்வாகம், காவல்துறை நிர்வாக அதிகாரம் கிடையாது' என்று அறிவித்திருக்கிறது அரசு. போருக்குப் பின் அங்கு நிரந்தரமான அமைதி ஏற்பட சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா - தொடர்ந்து வலியுறுத்தி வந்த விஷயம் அதிகாரப் பகிர்வு.

இலங்கைப் பிரச்சினையில் ஆரம்பம் முதலே, மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் அவற்றுக்கு அதிகாரங்கள் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தீர்வை முன்வைத்து வருகிறது. இந்தியாவின் ஆலோசனைப்படி, மாகாணங்கள் பிரிக்கப்பட்டன; ஆனால், அதிகாரங்கள் பிரித்தளிக்கப்படவில்லை.

போருக்குப் பின், அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வகைசெய்யும் 13-வது சட்டத் திருத்தத்தை முடக்கும் முயற்சிகளும் தொடங்கின. இந்தியா இதற்கு எதிராகத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

மாகாணத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதுகூட, இந்தியா வந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடமும், "மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் அரசியலமைப்பின் ஷரத்துகளை முழுமையாக அமல்படுத்துவதோடு, அவற்றுக்கு அப்பாலும் சென்று அர்த்தமுள்ள மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்.

தேர்தல் வெற்றிக்குப் பின்னர், "நில நிர்வாகம், காவல் நிர்வாகம் இரண்டும் மாகாண அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்பதையே பிரதானமாக வலியுறுத்தி வந்தனர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் முதல்வர் வேட்பாளரான சி.வி. விக்னேஸ்வரனும். இலங்கை அரசின் அறிவிப்போ அனைத்துத் தரப்பினரையும் ஏமாற்றியிருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தம், "இலங்கையிலுள்ள தேசியப் பிரச்சினைக்கு நில அதிகாரம் ஓர் அடிப்படைக் காரணமாக அமைந்தது" என்று கூறியிருப்பது இந்த நேரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

அதிகாரமற்ற அரசின் ஆட்சிக்கு ஏற்கெனவே இலங்கையில், கிழக்கு மாகாணம் ஓர் உதாரணமாக இருக்கிறது. இதுவரை மாகாண அரசுகளால் அங்குள்ள மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை.

இப்போது அதிபர் ராஜபக்ஷவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அங்கு ஆட்சியில் இருக்கிறது. இந்த ஆட்சியாலும் ஓராண்டில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்பட முடியவில்லை. எதிர்க்கட்சிகள் மட்டும் அல்ல; கூட்டணிக் கட்சியான - ஆட்சியில் இரு அமைச்சர்களைப் பெற்றிருக்கும் - இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்வரே, "தற்போதைய ஆட்சி பொம்மை ஆட்சி" என்று கூறுகிறார்.

இப்படிப்பட்ட மாகாண அரசுகளைத்தான் இலங்கை அரசு விரும்புகிறது என்றால், அங்கு தேர்தல்கள் தேவை இல்லையே?

கால் நூற்றாண்டுக்குப் பின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தியதையே அரசின் வெற்றியாகக் கொண்டாடுகிறார் அதிபர் ராஜபக்ஷ; உண்மையான வெற்றி மாகாணங்களின் சுதந்திரமான செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்!

http://www.puthinappalakai.com/view.php?20131001109170

  • Replies 87
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

காணி, காவல்துறை அதிகாரம் இருந்தால் ஈழத்தமிழனுக்கு சுதந்திரம் வந்துவிடும் என்கிற ஊகத்துடன் எழுதப்பட்டுள்ள கட்டுரை. இதுதான் சரியான தீர்வென்று யார் தீர்மானித்தது? ராஜீவ் கான் தீர்மானித்ததால் எல்லாம் சரியென்று ஆகிவிடுமா??

கிழக்கு மாகாணத்திலும்தான் ஓராண்டுக்கு முன்னர் தேர்தல் நடந்தது. அங்கு தமிழர்கள் வாழவில்லையா? அங்கு காணி, காவல்துறை அதிகாரம் இல்லாதமை இந்துவின் கண்களுக்கு இவ்வளவுநாளும் தென்படவில்லையா? :rolleyes:

இப்போது வட மாகாணத்தின்மேல் வந்துள்ள புதிய கரிசனைக்குக் காரணம் தமிழர்மேல் உள்ள அனுதாபம் அல்ல. மாறாக சிங்களவன் நம்மள நாய்க்கும் கீழாக மதிக்கிறானே என்கிற ஆதங்கம்தான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்துவில் இப்படி ஓர் நம்சார்புச் செய்தி. சம்பந்தர், சுமந்திரன் விக்னேஸ்வரனின் காய்நகர்த்தல்கள் பலன் குடுக்குமாப்போல தெரியுது. இன்னும் சமஸ்டி நோக்கி போக கடும் முயற்சி தேவைப்படுகிறது. இடையில புலம்பெயர் புண்ணாக்குகள் தனிநாடு அது இது என்று எல்லாத்தையும் போட்டடிக்க கூடாது கடவுளே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு எதிரான கட்சி ஒன்றால் ஆளப்படப்போவது வடமாகாண சபைதான். எதுவித அதிகாரமும் இல்லாத மாகாணசபையைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாகக் காட்டும் இந்தியாவும் இலங்கை-இந்திய அதிகார வர்க்கத்திற்கு எப்போதுமே வக்காலத்து வாங்கும் இந்துவும் இப்போது மாகாண சபைக்கு கொஞ்சமாவது அதிகாரம் இருப்பதாகக் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். அதுதான் அவர்களது கவலை.

தற்போது கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் செய்யவேண்டியதெல்லாம் இந்த மாகாண சபை எதுவித அதிகாரமும் அற்றது, இதை வைத்து வடமாகாணத்தில் அரச காரியங்களையோ, அபிவிருத்தியையோ செய்யமுடியாது என்று இந்தியாவிற்கும் பிற சர்வதேச நாடுகளுக்கும் புரிய வைப்பதுதான். அதன் மூலம் கூடியளவு அதிகாரப் பகிர்ந்தளிப்பை அவர்கள் மூலம் கோரவேண்டும். அது 13+ ஆக ஆரம்பித்து சமஷ்டியில் முடிந்தால்தான் வெற்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்.. அப்படிப் பார்த்தால் கூட பிள்ளையானின் ஆட்சி கிழக்கில் நடைபெற்றபோது அது ஒரு தமிழன் ஆட்சிதானே.. வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்டதுகூட ஒப்பந்தத்துக்கு முரணானது. ஆனால் இவர்கள் அதைப்பற்றிப் பேசமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுறது சுலபம் கிரு செய்யுறது கடினம். புலம்பெயர்ஸ் இதை விளங்கி ஒத்தாசையா இருந்தால் கொஞ்சம் லேசாகும். ஆனா விளங்கினா தானே. உணர்ச்சி வசப்பட மட்டும்தான் தெரியும்.

தற்போது கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் செய்யவேண்டியதெல்லாம் இந்த மாகாண சபை எதுவித அதிகாரமும் அற்றது, இதை வைத்து வடமாகாணத்தில் அரச காரியங்களையோ, அபிவிருத்தியையோ செய்யமுடியாது என்று இந்தியாவிற்கும் பிற சர்வதேச நாடுகளுக்கும் புரிய வைப்பதுதான். அதன் மூலம் கூடியளவு அதிகாரப் பகிர்ந்தளிப்பை அவர்கள் மூலம் கோரவேண்டும். அது 13+ ஆக ஆரம்பித்து சமஷ்டியில் முடிந்தால்தான் வெற்றி.

இந்தியாவுக்கு புரிய வைக்க முடியாது...   அதுவும் காங்கிரஸ் ஆட்ச்சியில் இருக்கும் வரைக்கும்... தனது சாதனையாக அப்படி இல்லை எண்றுதான் இந்தியா வாதாடும்...   தமிழர்களுக்கு தீர்வை வழங்கியதாகவே காட்டியும் கொள்ளும்... 

இந்தியாவை விட்டு மற்றய நாடுகளை அனுகுவதுதான் இந்தியாவுக்கும் கூட திருத்தங்களை முன் வைக்க தூண்டும்...  இல்லை இன்னும் இந்தியாதான் எண்றால் தோல்வி இப்போதே ஆரம்பித்து விடும்... 

இந்திய மக்கள் இண்றும் புரிந்து வைத்து இருப்பது இந்தியாவில் இருக்கும் மானிநலங்களுக்கான அதிகாலம் இலங்கை மானிலங்களுக்கும் இருக்கிறது என்பது... 

சொல்லுறது சுலபம் கிரு செய்யுறது கடினம். புலம்பெயர்ஸ் இதை விளங்கி ஒத்தாசையா இருந்தால் கொஞ்சம் லேசாகும். ஆனா விளங்கினா தானே. உணர்ச்சி வசப்பட மட்டும்தான் தெரியும்.

ஒரு விசயத்தை விளங்கி கொள்ளுங்கோ புலம் பெயர்ந்தவையை ( புலிகளையும் கூடவே )தூக்கி எறிஞ்சது  சம்பந்தனின் இராஜதந்திரம் எண்டு இப்பவும் சிலர் வக்காலத்து வாங்கிகிறார்கள்... 

2009 ம் ஆண்டு புலம்பெயர்ந்தவையோடு சேர்வதில் இருந்து விலகியது சம்பந்தனே...  புலம்பெயர்ந்த அமைப்புகளோடு சமரசமாக பேசுவதை கூட  அவர்கள் விரும்பவில்லை...   இப்ப திடீர் எண்று நம்பிக்கை வையுங்கள் சமாதானமாக போக சொல்லுவதால் அற்றுப்போன நம்பிக்கை மீள வருமா...?? 

நம்பிக்கை எண்டதை உங்களின் செயல்களால் நீங்களாக உருவாக்க வேண்டியது...  கண்ணை மூடிக்கொண்டு வைக்க எல்லாம் முடியாது...  அதை கட்டி எழுப்ப வேண்டிய கடமையும் கூட கூட்டமைப்பின் மீதுதான் இருக்கிறது.. 

  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்கா: மறையும் நம்பிக்கைக் கீற்று! - 'தி இந்து' ஆசிரியர் தலையங்கம்

இந்து ராமுக்கு சிறிலங்கா கொடுக்கும் சன்மானங்கள் குறைந்துவிட்டனவோ ......  :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் இருந்து விலகாவிட்டால் அவர்களால் அங்கு வாழவே முடியாது, ஏனென்றால் நீங்கள் கேட்பது தனிநாடு. அதனால் உங்களை வெட்டி விட்டது சரியே. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் கூட இல்லையா?

அரசுக்கு எதிரான கட்சி ஒன்றால் ஆளப்படப்போவது வடமாகாண சபைதான். எதுவித அதிகாரமும் இல்லாத மாகாணசபையைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாகக் காட்டும் இந்தியாவும் இலங்கை-இந்திய அதிகார வர்க்கத்திற்கு எப்போதுமே வக்காலத்து வாங்கும் இந்துவும் இப்போது மாகாண சபைக்கு கொஞ்சமாவது அதிகாரம் இருப்பதாகக் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார்கள். அதுதான் அவர்களது கவலை.

தற்போது கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் செய்யவேண்டியதெல்லாம் இந்த மாகாண சபை எதுவித அதிகாரமும் அற்றது, இதை வைத்து வடமாகாணத்தில் அரச காரியங்களையோ, அபிவிருத்தியையோ செய்யமுடியாது என்று இந்தியாவிற்கும் பிற சர்வதேச நாடுகளுக்கும் புரிய வைப்பதுதான். அதன் மூலம் கூடியளவு அதிகாரப் பகிர்ந்தளிப்பை அவர்கள் மூலம் கோரவேண்டும். அது 13+ ஆக ஆரம்பித்து சமஷ்டியில் முடிந்தால்தான் வெற்றி.

"எதுவித அதிகாரமும் இல்லாத மாகாணசபையைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாகக் காட்டும் இந்தியாவும் 

தற்போது கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் செய்யவேண்டியதெல்லாம் இந்த மாகாண சபை எதுவித அதிகாரமும் அற்றது, இதை வைத்து வடமாகாணத்தில் அரச காரியங்களையோ, அபிவிருத்தியையோ செய்யமுடியாது என்று இந்தியாவிற்கும் "

"கோழியும் உங்கன்ரை. புழுங்களும் உங்கன்ரை. " என்பதுதான் இங்கே விளங்கப்பட வேண்டியது. இதில் விக்கினேஸ்வரன் கோழி புழுங்களை தின்கிறதே சொன்னால் வீட்டுக்கறன்தான் சண்டைக்கு வருகிறானே. இந்தியா கொண்டுவந்த தீர்வு! அதிகாரம் இருக்கப்படாது என்ற நோக்கத்துடன் வரையப்பட்ட தீர்வு! அதில் அதிகாரம் இல்லை என்று குரல் எழுப்பியதால் இந்தியா கொண்டுவந்த முள்ளிவாய்க்கால் அவலம். வரதர் இந்தியா ஓடமுதல் எதையாவது செய்திருக்கலாமே? ஏன் தனி நாடு பிரகடனப்படுத்தினார். இந்தியா போனவர் அங்கே அதன் காரணத்தை இதுவரையில் இன்னமும் சொலவில்லையா?

இன்று இந்தியா தேர்தலைக் கொண்டுவருகிறது. தண்டவாளம் போடுகிறது. சாம்பூர் அனல் மின்சார நிலையம் ஆக்குவிக்கிறது. ஏன்?

சிங்கள மக்கள் சர்வதேசத்துக்கு இணையாக தங்களின், அறிவு, விளக்க ஆற்றல்களை முன்னேற்றும் வரை , தகநாயக்கா, R.G. செனநாயக்கா, சிறில் மத்தியூ, விமல், குண்தாச, சம்பிக்க... என்பவர்கள் தோன்றத்தான் செய்வார்கள். கிட்டத்தட்ட உலக நாடுகள் எல்லாமே 66 வீதம் தான் அரசியல் மாற்றத்திற்கு கேட்கும் அங்கீகாரம். சிங்கள மக்களும் அவர்களுடன் இணையத்தக்க முஸ்லீம் மக்களும் இன்று கிடத்தட்ட 90% இதில் நாணலும் நின்று பிடிக்காது வேப்பமரம் போன்ற இறுக்கமான சம்ஷ்டியும் நின்று பிடிக்காது. 

உங்களிடம் இருந்து விலகாவிட்டால் அவர்களால் அங்கு வாழவே முடியாது, ஏனென்றால் நீங்கள் கேட்பது தனிநாடு. அதனால் உங்களை வெட்டி விட்டது சரியே. இதை புரிந்து கொள்ளும் பக்குவம் கூட இல்லையா?

தனிநாட்டை கேட்டது புலம்பெயந்தவை இல்லை... !   இதே போல ஒரு இக்கட்டான காலத்தில்  தந்தை செல்வாவே முன் மொழிந்தார்.... !  

சாத்வீக வளியிலையோ இல்லை அரசியல் வளியிலையோ முடியாது எண்ட போதுதான் ஆயுதங்களை கையிலை பிடிச்சவை... 

ஆயுத போருக்கு முன்னால் தமிழர்கள் இப்போதைய கால அடக்கு முறைக்கு கொஞ்சமும் இணை இல்லாத கொடுமைகளை அனுபவித்தனர் எண்டதை நீங்கள் அறியாமல் இருப்பது ஆச்சரியமாக இல்லை...   வேண்டும் எண்டால் சொல்லுங்கோ தேடிப்பிடிச்சு  பட்டியல் போடுகிறன்... 

அந்த கொடுமைகளில் இருந்து மீள் படவே தந்தை செல்வா தமிழீழத்தை முன் மொழிந்தார்... 

சிங்களம் எப்போதும் உங்களுக்கு எதையும் தராது எண்டதை 75 வருட வரலாறு சொல்கிறது...  இதை புரிய முடியாமல் நீங்கள் இருப்பது எங்களின் தவ்று இல்லை... 

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் வரதராஜப் பெருமாள் தனிநாட்டுப் பிரகடனத்தை மேற்கொண்ட பிறகே இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தவர்..! கோஷான் இப்ப என்னத்துக்கு கோஷம் போடுறார் என்றுதான் விளங்கவில்லை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

செல்வா கேட்டபோது ஆயுதப்போராட்டம் சரிவராது என்ற பட்டறிவு (hindsight) தமிழர் எவர்க்கும் இருக்கவில்லை. 1984ல் அமிரை இந்தியா கூப்பிட்டு சொன்ன போது மிதவாதிகளுக்கு விளங்கிவிட்டது. 2009 இல் உலக நாடுகள் எல்லாம் சேர்ந்த்து ஆயுதப் போரை அடித்து நொறுக்கிய போது நிலத்தில் வாழும் மக்களுக்கு புரிந்து விட்டது. கூட்டமைப்புக்கும் புரிந்து விட்டது. தனி நாடு ஒன்று வருவதை இந்தியா இன்னும் 1000 வருடங்களுக்கு விடாது. இந்தியா வை மீறி வேறுயாரும் எட்டிக்கூட் பார்க்காயினம். இது விளங்கியபடியால் தான் முன்பு தனிநாடு கேட்டு உயிரை கொடுத்து போராடிய மக்கள் இப்ப சமஸ்டி கேக்கினம். இதை ஏற்று கொள்ளும் பக்குவமில்லாமல் தனி நாடு கேட்கும் பு. பு களை வெட்டி விடுவதை தவிர கூட்டமைபுக்கு வேறுவழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அமிரைக் கூப்பிட்டு விளங்கப்படுத்திய இந்தியா அதே நேரத்தில் ஆயுதப் போருக்கும் பயிற்சி வழங்கிய விடயமானது ஒரு இனிய முரண்பாடு ஆகும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. அயுத பயிற்ச்சி வழங்கியது ஜே ஆரை மாகாண சபை வரைக்கும் படிய வைக்க. உங்களுக்கு தனிநாடு தர அல்ல. இந்தியாவை நீங்கள் இன்னும் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. அயுத பயிற்ச்சி வழங்கியது ஜே ஆரை மாகாண சபை வரைக்கும் படிய வைக்க. உங்களுக்கு தனிநாடு தர அல்ல. இந்தியாவை நீங்கள் இன்னும் புரியவில்லை.

தனிநாடு இவர்கள் பெற்றுத் தருவார்கள் என்று மக்கள் நம்பியிருந்தது 1987 வரைக்கும்தான்.. அதன்பின் இவர்களின் வண்டவாளங்கள் மக்கள் எல்லோருக்கும் புரிந்துவிட்டது.

சாத்தான் வேதம் ஓதியதை (அமிரைக் கூப்பிட்டு இந்தியா விளங்கப்படுத்தியதாக நீங்கள் எழுதிய விடயம்) அமிர் புரிந்துகொள்ளவில்லையே என்பதுதான் எனது ஆதங்கம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. அயுத பயிற்ச்சி வழங்கியது ஜே ஆரை மாகாண சபை வரைக்கும் படிய வைக்க. உங்களுக்கு தனிநாடு தர அல்ல. இந்தியாவை நீங்கள் இன்னும் புரியவில்லை.

ஆசியாவின் super power  க்கு இலங்கை பிரச்சனையை தீர்க்க இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்?? . super power  க்கு   புலம் பெயர்ந்தவர்கள் கேட்கும் தமிழீழம் தான் பிரச்சனையா என சோனியாவை கேட்டு சொல்லவும்.

இந்தியா ஒரு அகிம்சை நாடு.. மெல்லிய இதயம் கொண்டது.. தமிழீழம் என்றாலே நெஞ்சுவலி வந்துவிடும்.. :lol:

நிச்சயமாக. அயுத பயிற்ச்சி வழங்கியது ஜே ஆரை மாகாண சபை வரைக்கும் படிய வைக்க. உங்களுக்கு தனிநாடு தர அல்ல. இந்தியாவை நீங்கள் இன்னும் புரியவில்லை.

அப்ப இந்தியாவுக்காக மாகானசபை முதலமைசராக இருந்த வரதராஜ பெருமாள் ஏன் தமிழீழம் பிரகடன படுத்தினவர்...??   ஏன் தமிழீழ தேசிய இராணுவம் அமைத்தவர்...?? 

  • கருத்துக்கள உறவுகள்

தனிநாடு அமைவதை அனுமதிப்பதில்லை. இது இந்தியாவின் கொள்கை முடிவு (policy decision). யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் இது மாறாது. அதற்கு கஸ்மீர் முதல், தமிழ்நாட்டின் மீது எப்போதும் இருக்கும் சந்தேகம் வரை பல காரணங்கள் உண்டு. மெல்லிய இதயமும் இல்லை ஒரு மண்ணும் இல்லை, எல்லாம் இந்திய நலன் பேணும் முஸ்தீபு. இலங்கையில் தமிழரும் சிங்களவரும் எப்போதும் ஆயுத அல்லது அரசியல் முறுகலில் இருந்த படியே இருக்கோணும், அப்பதான் இருவருக்கும் முக்கியமான இருவரும் வேண்டுகின்ற "கடவுள்" நிலையில் இந்தியா இருக்கலாம், காலாகாலத்துக்கும். இதில் தமிழர் தரப்பினை ஒட்டுமொத்தமாக ஆதரித்து தனிநாடு எடுக்க விடுவது இந்தியா சிங்கள தேசத்தை இழக்கவே வழி செய்யும். அதை ஒரு போதும் இந்தியா அனுமதியாது. தமிழரும் சிங்களவர்களும் இந்தியாவுக்கு இரண்டு பொண்டாட்டிகள் போல. ஆளை ஆளுக்கு ஏவிவிட்டு சுகம் அனுபவிக்கிறாம். இதில் எந்த பொண்டாட்டியையும் அவன் முற்றாக ஆதரிக்க முடியாது. இதுதான் இந்தியா வின் இலங்கை கொள்கை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விளக்கம் தெரிந்ததுதான்.. அதனால்தான் பஞ்சாயத்து இப்ப டில்லியில் நடக்காமல் ஐநாவின் வாசல்படியில் நிற்குது.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வரதர், அமிர், ஜே ஆர், பிரபா, ரணில், சொல்கைம், மகிந்த எல்லொரும் இந்த கொள்கையிற்க்கு ஆடினார்கள், ஆட்டுவிக்கப் பட்டார்கள் மறுத்த போது தூக்கியடிக்கப் பட்டார்கள். இதில் நீங்கள் நியாயத்தையோ, நேர்மையையோ மனிதாபிமானத்தையோ எதிர்பார்த்தால், நீங்கள் உலக அரசியல் புரியாத தத்துக் களே.

இப்படி அப்பாவித்தனமா ஐநா வை நம்பும் உங்களை பார்க்க சிரிபுத்தான் வருகிறது. ஐநா என்ன கைலாயமே போனாலும், இலங்கையில் இந்தியா வைத்ததுதான் சட்டம். இதை எப்படி மனேஜ் பண்ணலாம் என்று ஐநாவுக்கு அட்வைஸ் சொல்லி வழிநடத்துவதே இந்தியா தான்.

வரதர், அமிர், ஜே ஆர், பிரபா, ரணில், சொல்கைம், மகிந்த எல்லொரும் இந்த கொள்கையிற்க்கு ஆடினார்கள், ஆட்டுவிக்கப் பட்டார்கள் மறுத்த போது தூக்கியடிக்கப் பட்டார்கள். இதில் நீங்கள் நியாயத்தையோ, நேர்மையையோ மனிதாபிமானத்தையோ எதிர்பார்த்தால், நீங்கள் உலக அரசியல் புரியாத தத்துக் களே.

யாராவது எங்களுக்கு பிரச்சினையை தீர்ப்பினம் எண்டு நினைக்கும் ஆக்கள் பலரின் கருத்து இதுதான்...  

உங்கட இந்த கொள்கைக்கு ஏரோப்பிளேனிலை போக முயற்சி செய்தியள் எண்டால் தான் குறைஞ்சது  சைக்கிளிலையாவது போவீர்கள்.... 

உங்கட உந்த உதாருக்காக எங்கட தேவை என்ன எண்டதை சொல்ல படாதோ, இல்லை கொள்கையிலை நிலையாக நிக்கவும் படாதோ...?? 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சக்காலம் பொறுத்திருக்க வேண்டும்.. மகிந்தருக்கும் இந்தியா தீர்ப்பு எழுத முயற்சிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.