Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழர் தியாகு சாகும் வரை உண்ணா நிலைப் போராட்டத்தை மேற்கொண்டு உள்ளார்.

Featured Replies

புண்ணாக்கு என்று பல இடங்களில் கோசன் எழுதி உள்ளார் அதனைத் திருப்பி எழுதினால் மட்டும் ஏன் தணிக்கை செய்கிறீர்கள்? விளங்கவில்லை.

யாரிட்டை கேக்கிறீயள் இணையவனிட்டையா...??    

  • Replies 112
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாரதர், ஆனைக்கோட்டையில் நடந்தது இன்னொரு முள்ளிவாய்க்காலில் கொண்டுபோய் விடும் எனறு தெரிந்தும் இப்படி அங்கலாய்ப்பது ஏனோ?

இந்த முறை விடக்குடாது. நானும் புலத்தில காசு சேர்த்து ஒரு கடையாவது வாங்கிடோனும்.

  • தொடங்கியவர்

யாரிட்டை கேக்கிறீயள் இணையவனிட்டையா...??    

தெரியாது னுனாவிலான் எண்டு மேல கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் தியாகு ஐயா அவர்கள் ஈழத்தமிழர்மீது கொண்டுள்ள அக்கறையும் அன்பும் கரிசனையும்
வேறு யாருக்கும் வராது.நன்றி ஐயா உங்களுக்கு

எங்கள் அரசியல்வாதிகள் அவரிடமிருந்து பல பாடங்கள் படிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

திரு தியாகு அவர்களுக்கு உண்ணாவிரதம் வெற்றியளிக்க வாழ்த்துக்கள் .உங்கள் கோரிக்கை வெற்றி அளிக்கும் வரை சாகும் வரை உண்ணா விரதத்தை கை விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்

இந்திய அரசினால் இக்கோரிக்கை ஏற்கப்படாது. அதற்காக அவர் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத்தேவையில்லை. ஆனால் இவரின் உண்ணாவிரதத்தினால் மீண்டும் தமிழக மாணவர்களிடம் எழுச்சி ஏற்படவாய்ப்பு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வந்து ஜுஸ் கொடுப்பார் தோழர் குடிச்சிட்டு படத்துக்கு போஸ் கொடுப்பார். சீன் ஓவர், அடுத்த காட்சி எங்கப்பா?

செய்தி - தற்ஸ்தமிழ்

சென்னை: இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தியாகு மேற்கொண்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

'இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு கடந்த மூன்று நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இலங்கையில் நடைபெறவுள்ள இந்த காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று நான் பல முறை அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறேன். டெசோ சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்திலே உள்ள மற்ற அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கையை இந்திய அரசுக்கு வைத்துள்ளன. ஆனாலும், இந்திய அரசிடமிருந்து இதுவரை எந்தவிதமான நல்ல பதிலும் வந்தபாடில்லை. உரிய நேரத்தில் இந்தியா தக்க முடிவெடுக்குமென்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தான், தியாகு உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

தி.மு.க. சார்பில் நேற்றைய தினம் கழகத்தின் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., முன்னாள் அமைச்சர் க.பொன்முடி ஆகியோரை தியாகு உண்ணா விரதம் இருக்கும் இடத்திற்கே நான் அனுப்பி வைத்தேன். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவனும் நேற்றைய தினம் அங்கே சென்று தியாகுவுடன் இணைந்து உண்ணா விரதம் இருந்திருக்கிறார்.

தியாகு கோரிக்கை நியாயமானது என்ற போதிலும், ஏற்கனவே அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு; தி.மு.க. ஆட்சியில், என்னுடைய முயற்சியால் தூக்குத் தண்டனையிலிருந்து மீட்கப்பட்ட அவருடைய முக்கியமான உயிர், இப்போதும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அறிக்கையை விடுக்கின்றேன்.

அவர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அடிப்படையாக ஒன்பது கோரிக்கைகளை வைத்திருக்கிறார் என்ற போதிலும்; காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது. காமன் வெல்த்அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். நவம்பரில் இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது போன்றவற்றை தோழர் தியாகு முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறார். அந்தக் கோரிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்ற போதிலும், காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகம் அனுமதித்துள்ள மற்ற அறப்போராட்டங்களில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அந்த வழியிலே தொடர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

propaganda பரப்புரையை மேற்கொள்ளுபவர்கள் பரப்புரையின் உட்கருத்தை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. பரப்புரையின் தந்திரங்களை உபயோகித்து மக்களின் கருத்துக்களை அல்லது செயல்பாடுகளை மாற்றியமைப்பது, நெறிப்படுத்துவது, அல்லது கட்டுப்படுத்துவதே அவர்களின் குறிக்கோள்.

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் பொதுவா நான் மற்றவர்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல எதனிப்பதுண்டு. ஆனா உங்களுக்கு மட்டும் பதில்சொல்ல என்னால் முடிவதில்லை. உங்களின் கருத்துக்கள் எனக்கு விளங்கும் நாளில் கட்டாயம் பதில்தருவேன். எனக்குத்தான் விபரம் பத்தாதாது என்று என நினைகிரேன்.

இங்கு சிலதுகள் இந்தியாவினால் மூளைசலவை செய்யபட்டு. தமிழ் ஊடகங்களில் பல்வேறு வகைகளில் கிந்தியத்துக்கு சார்பான அரசியல் நிகழ்ச்சி நிரலை தமிழ் மக்களை விரும்பியோ விரும்பாமலோ ஒன்றுமேயில்லாத ஒரு தீர்வை திணிப்பதற்க்கு ஏதுவாக பரப்புரை மேற்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது அதற்க்கு அந்த சிலதுகள் கடுமையாக வீட்டுபாடம் செய்யிணம் அந்த வேலைக்கு ஆங்கிலீசில் பெயர் propaganda இந்த பரப்புரை தொப்பியை அளவாணவர்கள் போட்டு அழகு பார்கலாம் இப்ப விளங்குதா mr .goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை பெருமாள் இன்னும் ஒரு தரம் விளங்கப்படுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

புண்ணாக்கு என்று பல இடங்களில் கோசன் எழுதி உள்ளார் அதனைத் திருப்பி எழுதினால் மட்டும் ஏன் தணிக்கை செய்கிறீர்கள்? விளங்கவில்லை.

நாரதர்,
 
எனக்கு விளக்கம் பத்தாது, இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டியவரை நான் ஒரு கூட்டத்தையே அப்படிச் சொன்னேன். நீங்கள் என்னை தனியாக குறிப்பிட்டு அப்படி விழித்தீர்கள்.
 
சட்டநுணுக்கம் தெரிந்தவர் நீங்கள் உங்களுக்கே பாடம் எடுப்பது என் சிறு புத்தி.

இங்கே ஒரு கூட்டத்தை எப்படி வேணும் எண்டாலும் சொல்லலாம் என்னும் சட்டம் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. இசுலாமியத் தமிழர்களை விழித்து புண்ணாக்குக்கள் என்று எழுதி இருந்தால் அதுவும் இவ்வாறு விடப்பட்டா இருக்கும்?

கருத்துக்கள் பண்பாக எழுதப்பட வேண்டும் என்று ஒரு விதி இருந்ததாக நாபகம். நிழலியின் புதிய யாழ்க் களவிதிகள் ,மாற்றப்பட்டதா என்று தெரியவில்லை.இப்போது இங்கே எல்லாம் தலைகீழாகத் தானே நடக்கிறது.  பலர் சேர்ந்ததே ஒரு கூட்டம். புலம் பெயர்ந்தவர்கள் பலர் பல இழப்புக்களைத் தாங்கியே இந்தப் போராட்டத்தின் பின் புலமாக இருந்தனர்.

அவர்கள் அனைவரையுமே அவமதிக்கும் புண்படுத்தும் ஒரு சொல்லாடலை  , தனி நபர்களைத் தாக்கவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

  • தொடங்கியவர்

//கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.//

//பிரதேச வாதம். சாதீயம் என்பனவற்றை ஊக்குவிக்கும் எந்தக்கருத்தும் தவிர்க்கப்படல் வேண்டும்//

//துரோகி, பச்சோந்தி போன்ற அரசியல் ரீதியான தூற்றுதலுக்குரிய சொற்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப் படல் வேண்டும்.//

//சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடும், பண்போடும் கருத்தாடல் செய்யவேண்டும்.//

மேற் காட்டிய யாழ்க் கள விதிகள் எல்லாமுமே மீறப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

புல்லரிக்குதண்ணே. அப்பிடியே பாயின்ட் பை பாயின்ட் ஜி ஜீ தோத்தார் போங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.history.com/this-day-in-history/gandhi-begins-fast-in-protest-of-caste-separation

சாகும்வரை உண்ணாவிரதத்தை காந்தி கூட நடத்தினவராம்.. :rolleyes:

இதற்கு இதோ கோஷன் சேயின் பதில்கள்.. :D

1) அது 20ஆம் நூற்றாண்டு.. இது 21ஆம் நூற்றாண்டு.. :huh:

2) அது வட இந்தியா.. இது தென்னிந்தியா.. :rolleyes:

3) அது பிரிட்டிஷ் அரசு.. இது இந்திய அரசு.. :blink:

புல்லரிக்குதண்ணே. அப்பிடியே பாயின்ட் பை பாயின்ட் ஜி ஜீ தோத்தார் போங்கள். 

நாரதர் அண்ணா சொன்னது இதை தான். :rolleyes:

கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100794

கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 2.0 இல் இருக்கும் கள விதிகளுக்கு மேலதிகமாக நடைமுறைக்கு வரும் விதிகள் / அறிவித்தல்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=121271

  • கருத்துக்கள உறவுகள்

http://www.history.com/this-day-in-history/gandhi-begins-fast-in-protest-of-caste-separation

சாகும்வரை உண்ணாவிரதத்தை காந்தி கூட நடத்தினவராம்.. :rolleyes:

இதற்கு இதோ கோஷன் சேயின் பதில்கள்.. :D

1) அது 20ஆம் நூற்றாண்டு.. இது 21ஆம் நூற்றாண்டு.. :huh:

2) அது வட இந்தியா.. இது தென்னிந்தியா.. :rolleyes:

3) அது பிரிட்டிஷ் அரசு.. இது இந்திய அரசு.. :blink:

இந்தியாவில் இருக்கும் அத்தனை ஏய்ப்புக்காரருக்கும் பிரதான ஏய்ப்புக் குரு அவர்தானே. அவர்கிட்ட இருந்துதானே இந்த கோல்மாலை எல்லம் இவர்கள் பழகியது.

  • தொடங்கியவர்

ஏன் தேசியத் தலைவரும் சாகும்வரை உண்ணா நோன்பு இருந்தாரே? அவரும் செத்து இருக்க வேண்டும் என்று கோசன் விரும்புகிறாரா?

போராடுபவர்களை மூகமூடி போட்டுக் கொண்டு வந்து ஏளனம் செய்வதைப்  போல் ஒரு கீழ்த்தரமான விடயம் இருக்க முடியாது.

தனது வாழ் நாழிலில் பெரும் பகுதியைத் , கொண்ட அரசியற் கொள்கைக்காக போராட்டா வாழ்விற்காக தியாகம் செய்த ஒரு மக்கள் போராளி , தோழர் தியாகு.

ஒருவரும் சாவதற்காகப் போராடுவதில்லை, வாழ்வதற்காகவே.

  • தொடங்கியவர்

புல்லரிக்குதண்ணே. அப்பிடியே பாயின்ட் பை பாயின்ட் ஜி ஜீ தோத்தார் போங்கள். 

தமிழில் அடிப்படை அறிவு இருந்தால் போதும் கள விதிகளை விளங்கிக் கொள்ள.

மனிதாபிமானம் போன்ற அடிப்படை மனிதப் பண்புகள் இருந்தால் போதும் பண்பாகக் கருத்தாடல் செய்ய.

உமது கருத்துக்களில் இவை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. கற்பனையில் பினாமி, கடை வைத்தல் போன்ற அவதூறுகளை மாற்றுக் கருது உடையோர் மீது அள்ளி விடுவதால் உமது கருத்துக்கள் உண்மையாகப் போவது இல்லை.

பினாமிகள் கடை வைத்தவர்கள் இருந்தால் அவர்கள் யார் என ஆதாரத்துடன் எழுதவும். மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பவர்களை இவ்வாறான கற்பனைக் கதைகளால் எதிர் கொள்ள முயல்வது கீழ்த்தரமான கருத்தாடற் பண்பு.

சிந்தனை வளர்ச்சி  அற்றவரும், பொய் சொல்பவரும், மன நோய் உள்ளவரும்ம் மட்டுமே  இவ்வாறு கற்பனைக் கதாபாத்திரங்களை மாற்றுக் கருத்துடையோரின் மீது ஏற்றிக் கருத்தாடுவர்.   

சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பவர் வங்கி கணக்கு எதுக்கு போட்டு இருக்கு முதல் கேள்வி .

பார்க்க போன தலைவர் சீமான் கழுத்தில் போட்டு இருப்பது எத்தினை பவுன் ...அல்லது குப்பி கயிறா அப்பாவியின் இரண்டாவது கேள்வி .

தியாகு அய்யாவின் போராட்டத்தையும் அரசியலாக்கி அவரது தியாகத்தை கொச்சைப்படுத்தி விடாதீர்கள் பிழைப்புவாதிகளே....

ஐயா அதுக்கு எப்பவும் லைற் கம்பத்தை கண்டால் காலைத்தூக்கும் பழக்கம் தானே ...............நீங்கள் உதுகளை கணக்கெடுக்காதீங்க ....................அப்புறம் மனிதர்க்கும் அதுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும் ///////// :D

  • தொடங்கியவர்

சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பவர் வங்கி கணக்கு எதுக்கு போட்டு இருக்கு முதல் கேள்வி .

பார்க்க போன தலைவர் சீமான் கழுத்தில் போட்டு இருப்பது எத்தினை பவுன் ...அல்லது குப்பி கயிறா அப்பாவியின் இரண்டாவது கேள்வி .

ஏன் தேசியவிடுதலைப் போராட்டம் என்ன பச்சைத் தண்ணியிலா நடந்தது? புலத்தில காசு சேத்துத் தானே நடந்தது? போராட மக்களிடம் தானே அவர்கள் கேட்க முடியும்? அவர்களுக்கு அரசுகளா பணம் கொடுப்பார்கள்? 

சீமான் தன்னை விடுதலைப் புலி என்று சொன்னாரா? ஆயுதப் போர் செய்வதாகச் சொன்னாரா? ஏன் நீங்கள் ஒருவரும் கழுத்தில் சங்கிலி போடவில்லையா?

சீமானிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீங்கள் சரியான வழியில் போராடலாமே? உங்கள் பின்னாலும் மக்கள் வருவார்கள்.உங்களுக்கும் போராட நிதி தேவை என்றால் நீங்களும் அவர்களிடம் தானே செல்ல வேண்டும்? இதில் என்ன தவறு இருக்க முடியும்?    

  • கருத்துக்கள உறவுகள்

பினாமிகள், கடைவைத்தவர்கள், இன்னும் தனிநாட்டு பிரிவினைக்கு வாக்கெடுப்பு நடத்துறோம் வாரீர் வாரீர் வந்து தாரீர் தாரீர் என்று கடைவிரிப்பவர்கள் யார் என்பது இப்படியான குற்றசாட்டுக்கள் யாரரின் மனச்சாட்சியை தைக்கிறது என்பதில் இருந்தே தெரிகிறது. 2009 ற்கு முன் யார் பணம் சேர்த்தார்கள்? இப்போது யார் பணம் சேர்கிற்ரர்கள், தியாகு ஏன் வங்கி கணக்கை நீட்டுகிறார். அவர்களின் கடை, அவர்களின் பஸ் அவர்களின் கட்டிடம் என்று அறியப்பட்ட சொத்துகள் இன்று யார்கையில் இருக்கிறது?

இந்த சொத்துக்களை அனுபவிப்பவர்கள் இன்னமும் புலத்தில் இருந்தபடி தனிநாட்டு வாக்கெடுப்புக்கு போராடுவோம் என்று ஏன் இன்னமும் உதார் விடுகிறனர்? மறைவாக இவர்களால் எப்படி இலங்கை போய்வர முடிகிறது எல்லாத்தையும் கூட்டி கழித்து பாருங்கள் யார் பினாமிகள் என்பது கண்ணாடியில் விம்பம் போல தெரியும். இதற்கு மேலே சொன்னால் தனிமனித தாக்குதல் எனறு நிர்வாகம் வெட்டிவிடும்.

இவ்வளவு கேட்கும் நீங்கள் ஈழ பிரச்சினையில் கருணாநிதி செய்தால் போலி என்பதும் நாடகம் என்பதும் என் .

அவரிடம் என்ன தவறு இருக்க முடியும் ?

அவரும் உண்ணாவிரதம் இருந்தார் எதோ தோசையோ டொசொவொ எண்டு எல்லாம் சொல்லுறார் நாங்கள் என் நம்புறம் இல்லை ?

  • தொடங்கியவர்

பினாமிகள், கடைவைத்தவர்கள், இன்னும் தனிநாட்டு பிரிவினைக்கு வாக்கெடுப்பு நடத்துறோம் வாரீர் வாரீர் வந்து தாரீர் தாரீர் என்று கடைவிரிப்பவர்கள் யார் என்பது இப்படியான குற்றசாட்டுக்கள் யாரரின் மனச்சாட்சியை தைக்கிறது என்பதில் இருந்தே தெரிகிறது. 2009 ற்கு முன் யார் பணம் சேர்த்தார்கள்? இப்போது யார் பணம் சேர்கிற்ரர்கள், தியாகு ஏன் வங்கி கணக்கை நீட்டுகிறார். அவர்களின் கடை, அவர்களின் பஸ் அவர்களின் கட்டிடம் என்று அறியப்பட்ட சொத்துகள் இன்று யார்கையில் இருக்கிறது?

இந்த சொத்துக்களை அனுபவிப்பவர்கள் இன்னமும் புலத்தில் இருந்தபடி தனிநாட்டு வாக்கெடுப்புக்கு போராடுவோம் என்று ஏன் இன்னமும் உதார் விடுகிறனர்? மறைவாக இவர்களால் எப்படி இலங்கை போய்வர முடிகிறது எல்லாத்தையும் கூட்டி கழித்து பாருங்கள் யார் பினாமிகள் என்பது கண்ணாடியில் விம்பம் போல தெரியும். இதற்கு மேலே சொன்னால் தனிமனித தாக்குதல் எனறு நிர்வாகம் வெட்டிவிடும்.

யாழ்க் கள விதிகளை மீண்டும் உங்களுக்குத் தருகிறேன், யார் பினாமிகள் யார் சொதுக்களைக் கொள்ளையடித்தார்கள் என்பதை நீங்கள் தாராளமாக எழுதலாம். அதை விட்டு விட்டு இங்கு எழுதுபவர்களை பினாமிகள் கொள்ளைய்டித்தார்கள் என்று எழுதுவது ,யாழ்க் கள விதிகளை மீறும் கருத்தாடல். இதனை நீங்கள் தொடர்ந்தும் செய்தால் உங்களைத் தடை செய்யும் படி கேட்ட நேரிடும். கருத்தாடல் செய்வதானால் நேர்மையாக பண்பாகச் செய்து பழகவும்.

//

  • தனி நபர் தாக்குதல், கருத்தாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குவது/ சீண்டுவது என்பன முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டியவை
  • சங்கங்கள், நிறுவனங்கள் அல்லது அவற்றின் உறுப்பினர்களை (செயற்பாடுகளை) விமர்சிப்பவர்கள், ஆதாரங்களோடு விமர்சிக்கவேண்டும்.
  • ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.//

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.