Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணத்தின் பின்னர் விடுத்த அறிக்கை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணத்தின் பின்னர் விடுத்த அறிக்கை:

[Monday, 2013-10-07 13:10:22]
-Vikky-sathyapiramanam-071013-276-%285%2

என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவி. தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது. இது சம்பந்தமாக இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அகற்றுவது காலத்தின் தேவையாக அமைந்துள்ளது.

  

அதன் ஒரு அலகாகவே நாட்டின் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தீர்மானித்தோம். எமது செயற்பாடு ஐக்கிய இலங்கைக்குள்ளேயே நாம் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்க்கின்றோம் என்ற எமது மனோநிலையை எடுத்துக் காட்டக்கூடியதாய் அமைந்துள்ளது.

போருக்குப் பின்னரான எமது மக்களின் தேவைகளை காலதாமதம் இன்றி பூர்த்தி செய்வதான கிட்டிய நோக்கை உதவுவதாகவும் எமது செயற்பாடு அமைந்துள்ளது. சிங்கள மக்கள், பாதிக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கையில் விடிவை ஏற்படுத்த தம்மாலான சகலதையும் தமது பிரதிநிதிகள் மூலம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

உள்ளக சுயநிர்ணயம் ஒருநாட்டை பிரிவுபடுத்தாமல் ஒற்றுமைப்பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்ற உண்மையை எமது சிங்கள சகோதர சகோதரிகள் தமது அரசியல்வாதிகளுக்கு இடித்துரைக்க முன்வரவேண்டும்.

சிங்களமொழியும் பாரம்பரியங்களும் சிங்கள மக்களுக்கு எந்த அளவு முக்கியமோ அதே அளவு எமது மொழியும் எமது பாரம்பரியங்களும் எமக்கும் முக்கியம் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்து செயலாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இங்கு வன்முறைக்கு இடமில்லை. வலோத்காரத்திற்கு இடமில்லை. புரிந்துணர்வு ஒன்றே எம்மை சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் நோக்கிச் செல்ல வழிவகுக்கும். எனவே என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக! இறைவன் ஆசி சகலருக்கும் கிடைப்பதாக!

 

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணசபை

 

நன்றி - செய்தியிணையம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ இன அழிப்பு.. போர்க்குற்றம்.. எல்லாம் சகோதரத்துவத்துக்குள்.. மறக்கப்பட்டு.. மன்னிக்கப்பட்டு விட்டதோ..???! நல்லது ஐயா நீங்கள் மறப்பீர்கள் மன்னிப்பீர்கள்.. ஏன்னா உங்க உங்க குடும்பங்கள் அப்படியே உள்ளன. ஆனால்.. குடும்பம் குடும்பமா சிங்கள இனவெறி அரசின் தாக்குதலுக்கு இலக்காகி இழந்து போன ஆயிரம் ஆயிரம் தமிழர்கள்.. இப்போ சிங்கள - தமிழ் சகோதரத்தை ஐக்கிய இலங்கையை வேண்டி நிற்கிறார்களா.. தாங்கள் மீண்டும் ஓர் இன அழிவுக்குள் செல்லாத நிலையில் தங்கள் நிலத்தில் தாங்களே தங்களை ஆளவும்.. வாழவும் விரும்புகிறார்களா..????! :icon_idea::(

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  முதலமைச்சருக்கு.......

 

தமிழர்களின் சுதந்திரப்போராட்டம்  சார்ந்து

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில்

ஏதாவது ஒரு துரும்பு கிடைக்காதா என தமிழினம் 

தாழ்ந்து நிற்கும்  இவ்வேளையில்

அவர்களுக்கு தலமை தாங்குமாறு தாங்கள் பொறுப்பளிக்கப்பட்டுள்ளீர்கள்

 

எந்தக்காலத்திலும்

தங்களிடம் பொறுப்பைக்கொடுத்தது  தவறு என

மக்கள் வேதனைப்படாதவகையில் தங்களது கடமைகள் இருக்கணும் என்று

வாழ்த்துகின்றேன்

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது முதலமைச்சர் விக்கினேசுவரனை வழி நடத்த அவருக்கு தேவை சில அரசியல் வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழு. நீதிபதிகளுக்கும், சட்டத்தரணிகளுக்கும் அரசியல் தெரியும் என்று தமிழர்கள் நம்பியது அந்தக்காலம். சிஙகள அரசுடன் தோல்வியில்லாத அரசியல் செய்வதாயின் தமிழர் அணியிடம் 100% அரசியல் ஞானமும் விவேகமும் இருக்க வேண்டும்.

வணங்காமுடியின் கருத்தை வரவேற்கிறேன். நெடுக்கஸ் அவர்களே முதல்வர் கூறியது சிங்கள, தமிழ் மக்களிடையேயான சகோதரத்துவம் பற்றியது. அது நியாயமானது. யுத்தக்குற்றங்களை மன்னிப்பது பற்றி அவர் எதுவும் கூறவில்லை. தமிழ் மக்களுக்கு வழங்கப்படும் நீதியான அரசியல் தீர்வுதான் இன சகோதரத்துவத்தை உருவாக்கும், என்பதையும் சிங்கள மக்களுக்கான வேண்டுகோளாக அவர் விடுத்துள்ளதை நீங்கள் கவனிக்கவில்லையா?

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

எதுங்கோ நியாயம்.. முள்ளிவாய்க்காலில்.. இலட்சக்கணக்கில் மக்களை கொன்ற போது வெடிகொழுத்திக் கொண்டாடினது.. சகோதரத்துவம். சரணடைந்தவர்களை கண்ணக்கட்டி.. கையைக் கட்டி... நிர்வாணமாக்கிக் கொன்றது சகோதரத்துவம். சொந்தச் சகோதரிகள் போன்ற தமிழ் பெண்களை வன்புணர்ந்து கொன்றது சகோதரத்துவம். இத்தனை ஆயிரம் மக்களை முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தது சகோதரத்துவம். அப்புறம் காட்டுக்குள்ள கொண்டு போய் அநாதரவாக விட்டது சகோதரத்துவம். அவர்களை விடுப்புப் பார்க்க ஊருலாப் போனது சகோதரத்துவம். புத்தர் சிலைகளை நாட்டினது சகோதரத்துவம். கிறீஸ் பூதங்களை அனுப்பினது சகோதரத்துவம். இராணுவத்தை வீட்டுக்கு வீடு காவலில் நிறுத்தி உள்ளமை சகோதரத்துவம். காணிகளை பறிச்சு வைச்சு.. சிங்களப் படைகளை குடியேற்றிறது சகோதரத்துவம்... இன்னும் என்னென்ன எல்லாங்கோ.. நியாயமான சகோதரத்துவம்.

 

விக்னேஸ்வரனுக்கு.. வாசுதேவ சம்பந்தியானதால.. சகோதரப் பாசம் புட்டுக்கிட்டு வரலாம். ஆனால்.. அடிவாங்கிச் செத்த நமக்கு வருமாங்கோ...???????! கொஞ்சம் யோசியுங்கோ. ஏங்கோ.. சுட்ட மண்ணையும் பச்சை மண்ணையும் ஒட்டலாமுன்னு கணக்குப் போடுறீங்கோ. உந்தத் தப்புக்கணக்கால தானே தமிழன் அழிஞ்சு நலிஞ்சு நிற்கிறான். இதே சகோதரத்துவத்தைப் பேசித்தானே.. பிரித்தானியர்களிடம் தமிழர்களை அடகு வைத்தார்கள்.. சேரு.. பொன்னு இராமநாதர்களும்.. பொன்னம்பலங்களும். அவர்களின் வாரிசுகளில் இவரும் ஒருவராம்.  அவர்கள் பல்லக்கில் பவனி வந்திட்டு பாடையில் ஏறிப் போய்ட்டார்கள். பாவம் மக்கள் அவர்களை எல்லாம் பிரதிநிதிகள் என்று நம்பி பாயிலையே பாடை ஏறுகிறார்கள்.. வாழ முதல்...!

 

மீண்டும்.. பிரபாகரன்களையே உருவாக்கப் போகிறது.. இந்தச் சகோதரத்துவம்..! வேற எதுவுமே இலங்கைத் தீவில் இதனால் சாத்தியமாகப் போவதில்லை. சிங்களவன்.. உங்களோட சகோதரத்துவம் வேணான்னு சொன்னாலும் விடமாட்டிங்க போல இருக்கே. கவுண்டா - செந்தில் நகைச்சுவை கணக்கா தமிழனின் அரசியலை கொண்டு வந்து நிறுத்தினது தான் மிச்சம். :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் கோருவது சிங்களவனோடு சகோதரத்துவம் அல்ல. இலங்கைத் தீவில் தனித்துவமும்.. சுய ஆட்சியும்.. வாழ்வுரிமையும். அதற்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பதற்காகவே போராடினார்கள்.. மடிந்தார்கள். வாக்குப் போட்டார்கள்..! அதனை சகோதரத்துவம் பேசி விற்க விக்னேஸ்வரனுக்கு யாரும் வாக்குப் போடேல்ல. இதே சகோதரத்துவத்தை தேர்தல் விஞ்ஞாபனத்தில் அச்சடிச்சிருந்தா... விக்கி இன்று இந்த இடத்தில நின்றிருக்க முடியாது.. என்பதை உங்களைப் போன்ற நியாயவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

மக்கள் ஏமாற்றும் இந்த போலி ஜனநாயக வியாபாரிகள் தான் எமது இனத்தின் சாபக்கேடு..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பலர் தங்களது கருத்துக்களைக் கூறியிருந்தார்கள் சிலர் விக்கு வினாயகம் அவர்கள் மகிந்தகாலில் சஸ்டாங்கமாக விழுந்ததுக்கு வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார்கள். கேவலம் ஒரு சமாதான நீதவான் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்யக்கூடிய ஒரு மாகாண முதலமைச்சர் பதவி என்றால் அதனது தார்ப்பர்யம் எப்படிப்பட்டது என்பதை யாவரும் அறிந்துகொள்வர். இதற்கு ஏன்தான் இவ்வளவு கொம்பு சீவுகிறார்களோ தெரியாது

 

தவிர, தமிழ்மக்கள் விக்கு வினாயகம் தலைமையிலான கூத்தமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களித்தது சிங்களத்தை மறுதலிக்கவே, அன்றேல், தமிழர்கள் சிங்களத்துடன் சகோதரத்துவம்பேணி சமவாழ்வுவாழவேண்டுமாக நினைப்பார்களாகவிருந்தால் சிங்களத்தின் ஏவலாளிகளாக எடுபிடிகளாக நிறையப்பேர் தேர்தலில் வாக்குவேண்டி நின்றார்கள், விக்கு வினாயகம் இப்படித் தடாலடியாகத் தோசையைத் திருப்பிப்போடும் எனத் தெரிந்திருந்தால் நாறியிருப்பார்.

 

மற்றப்படி தமிழீழம்நோக்கிய பயணப்பாதை இவர்களது நடத்தைகளால் ஒன்றும் தடைப்பட்டு நிற்காது, எது நடக்கவேண்டுமோ அதுவே தானாக நடந்தேறியுள்ளது, இதன்மூல கூத்தமைப்பினது தமிழர் விரோத தேசமாம் இந்தியாவினதும் திருகுதாளம் மீண்டுமொருமுறை வெளிவந்துள்ளது.

 

பதவியேற்றதும் மனைவி, பிள்ளைகள், அவர்களது சிங்களப்பொண்டாட்டிமார் மற்றும் தனது சிங்களச்சம்பந்திகள் சமோதரராய் படம் எடுத்து அதைப் பத்திரிககளுகும் வினியோகித்ததன்மூலமும் தான் யார், யாருக்கு விசுவாசி, தனது சொந்தங்கள், சேர் பொன் இராமநாதன் அருணாச்சலம் போன்றோரது சிங்கள அடிப்பொடித் தொண்டராகவே இப்போதும் இருக்கிறேன் என்பதை, எல்லோருக்கும் தெரிவித்திருக்கிறார். தமிழன் மீண்டும் ஏமாந்துள்ளான் அன்றேல் ஏமாத்தப்பட்டுள்ளான். ஆனால் இத்திருட்டுப்பயல்கள் நீண்டகாலத்துக்கு எம்மை ஏமாத்தமுடியாது.  

 

கருத்துக்களப் பொறுப்பாளர்கள் கடந்த சில எனது இடுகைகளது கருத்துக்களை பிரசுரிப்பதிலிருந்து எடுத்தெறிந்துள்ளது காணக்கூடியதாக உள்ளது இதில் கோவப்பட எதுவுமில்லை ஆனால் இதன்மூல தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இங்கே சொன்ன கருத்துகள் ஏதோ அவர் போர்க்குற்ற விசாரனையில் இருந்து அரசுக்கு விதலை கொடுக்கொனும் எண்டு பேசின மாதிரி கிடக்கு. மனுசன் 10 வருடமா ரிட்டயர் பண்ணிப் போட்டு கோயில் குளம் என்று திரிஞ்சது. வலுக்கட்டாயமாக கூட்டமைப்பின் அத்தனை உறுப்பினர்களும் போய் வலிய கூப்பிட்டுப் போட்டு,மக்களும் அவரை நம்பி வாக்களித்த பின் அவரை அப்படி செய்,மிப்படிச் செய் என்று அதிகாரம் செய்யக்கூடாது. குறிப்பா புலத்தில் இருந்து.

வாழ்த்துக்கள்  முதலமைச்சருக்கு.......

 

தமிழர்களின் சுதந்திரப்போராட்டம்  சார்ந்து

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில்

ஏதாவது ஒரு துரும்பு கிடைக்காதா என தமிழினம் 

தாழ்ந்து நிற்கும்  இவ்வேளையில்

அவர்களுக்கு தலமை தாங்குமாறு தாங்கள் பொறுப்பளிக்கப்பட்டுள்ளீர்கள்

 

எந்தக்காலத்திலும்

தங்களிடம் பொறுப்பைக்கொடுத்தது  தவறு என

மக்கள் வேதனைப்படாதவகையில் தங்களது கடமைகள் இருக்கணும் என்று

வாழ்த்துகின்றேன்

 i,m also வாழ்த்துக்கள்  :icon_idea: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.