Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹரி ஆனந்தசங்கரி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  Gary-seithy-20131007.-150.jpg

திரு ஹ. ஆனந்தசங்கரி அவர்கள் எதிர்வரும் கனடிய பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் கனடியத் தேர்தல் ஆணையத்தினால் புதிய தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் வெளியிடப்பட்டது பலரும் அறிந்ததே. அப்புதிய எல்லைகளின் படி, ஆனந்தசங்கரி அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தொகுதியான ஸ்காபேரா ரூஜ் றிவர் (Scarborough-Rouge River) தொகுதி தற்போது ஸ்காபேரா நோர்த் (Scarborough North) மற்றும் ஸ்காபேரா ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் எந்தத் தொகுதியில் ஹரி போட்டியிடவுள்ளார் என்பதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளார்.

இப் பகுதியில் லிபரல் (Liberal) கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிடவுள்ளது பற்றி திரு ஹரி ௬றும்போது, 'தான் இந்தத் தொகுதியில் பல ஆண்டுகள் வாழ்ந்து, தனது சட்ட நிறுவனத்தை நிறுவி தொழில் புரிவதை சுட்டிக் காட்டி, இத் தொகுதி மக்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயலாற்றக் கிடைத்துள்ள இந்த மிக அரிய சந்தர்ப்பத்தையிட்டு தான் மிகவும் உற்சாகமடைந்துள்ளதாகவும் ௬றினார். தனது இளம்பிராயம் முதல் சமூகப் பணிகளில் தன்னை இணைத்துக் கொண்ட ஹரி அவர்கள், கார்ள்டன் பல்கலைக்கழகத்தில் (Carleton University) மாணவத் தலைவராக இருந்து பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுத்ததோடு, கனடிய தமிழர் இளையோர் முன்னேற்ற நடுவத்தின் (The Canadian Tamil Youth Development Centre - CanTYD) தலைவராகவும், கனடிய தமிழர் வர்த்தகச் சம்மேளனத்தின் (Canadian Tamil Chamber of Commerce) தலைவராகவும் இருந்த போது பெற்ற அனுபவங்களையும் வைத்து, கடின உழைப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இத் தொகுதி மக்களுக்குச் சேவையாற்ற விரும்புவதாகவும் ௬றினார்.

கார்ள்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் இளமானிப் பட்டத்தைப் பெற்று, பின்னர் ஒஸ்குட் சட்டக் கல்லூரியில் (Osgoode Hall Law School) சட்ட இளமானிப் பட்டத்தையும் பெற்றுள்ள திரு ஹரி அவர்கள் ஸ்காபேராவில் சட்டத் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஹரி ஆனந்தசங்கரி அசோஸியற்ஸ் (Gary Anandasangaree and Associates Professional Corporation) நிறுவனத்தின் தலைவராக உள்ளதுடன் கனடியத் தமிழர் பேரவையின் (Canadian Tamil Congress) சட்ட ஆலோசகராகவும், யுத் சலன்ச் பண்ட் (Youth Challenge Fund) நிதியத்தின் இயக்குனராகவும், ரொறொன்டோ காவல்துறை தலைமை அதிகாரியின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார்.

அத்தோடு, திரு ஹரி அவர்கள் பல ஆண்டுகளாக மனித உரிமைச் சட்ட வல்லுனராகவும், மனித உரிம செயற்பாட்டாளராகவும் இருப்பதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனது நேரடியான செயற்பாடுகளினூடாக சர்வேதச நீதிக்காகக் குரல் கொடுத்து வருகின்றார். ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் இளமானிப் பட்டம், ஒஸ்குட் சட்டக் கல்லூரியில் சட்ட இளமானிப் பட்டம், மகில் பல்கலைக்கழக (McGill University) முதுமானிப் பட்டம் பெற்று, தற்போது யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) சட்டம் மற்றும் சமூகத் துறையில் கலாநிதி (PhD) பட்டப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் ஹரினி சிவலிங்கம் அவர்களை திருமணம் புரிந்துள்ள திரு ஹரி அவர்கள் பைரவி மற்றும் சஹானா ஆகியோரின் தந்தையாவார்.

Gary-seithy-20131007.jpg

                                  http://www.youtube.com/watch?feature=player_embedded&v=cfXt2JF-4tg

http://www.seithy.com/breifNews.php?newsID=94426&category=TamilNews&language=tamil

ஸ்காபரோ ரூச் றிவர் தொகுதி ஏற்கனவே புலம்பெயர் தேசத்தின் முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபெசனின் தொகுதியாக இருப்பதால் அடுத்த முறையும் அவர் என்டீபி கட்சியின் சார்பில் போட்டியிடுவார். எனவே அந்த தொகுதியை விடுத்து மற்றைய தொகுதியல் அல்லது  தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபரோவின் அல்லது மார்க்கத்தின் இன்னொரு தொகுதியில் போட்டியிடுவதே சரியான தெரிவாக இருக்கும்.

இல்லாவிட்டால் வழமையான தமிழர்களின் பண்பான தமிழனுக்குத் தமிழனே குழிபறிக்கும் வழக்கத்தை தொடரும் எண்ணத்துடன் ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் போட்டியிட்டால் உள்ளதும் போனதே நொள்ளைக்கண்ணா என்ற நிலை வரலாம்.

எனவே தமிழருக்காக பலகாலமாகப் பாடுபட்டதாகச் சொல்லப்படும் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் சரியான முடிவெடுத்து இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் பேரவா!

Edited by Manivasahan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வடிவாக கட்டுரையை வாசிக்கவில்லை போலுள்ளது. 2 தொகுதிகளை ஒன்றிணைத்து அதை 3 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். அதில் ஒன்றில் தான் ஹரி ஆனந்தசங்கரி போட்டியிடுகின்றார். ராதிகாவை விட நன்றாகவே இவர் செயற்படக்கூடியவர். நிச்சயம் ஈழம் தொடர்பான சிந்தனையில் பாராளுமன்றத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துவார்.

கனடாவில் இருந்து ஜெனிவாவில் ... ஏன் தமிழ் மக்களில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் பேரணை கொண்டு வரப்பட்ட போது அனுமதிக்கப்பட்ட 2 பேர் ஒன்று ஹரி, மற்றது அவரது உதவியராகப் பணியாற்றும் வாணி என்கின்ற என்னுமொருவர். அவர் சென்ற மாதம் கூட ஜெனிவாவில் மனிதஉரிமைகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். அதற்கு காரணம் அவர் கனடாச் சட்டத்தரணிகளில் ஊடாக பங்காற்றும் வாய்ப்பினை ஏற்படுத்தினார்.

ராதிகாவினால் போதியளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. அவர் தனியாகப் பாராளுமன்றத்தில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ராதிகா வெல்வது பற்றி எவ்விதமான கவலையுமில்லை. ஆனால், ஹரி அண்ணா நிச்சயம் வெல்ல வேண்டும்.

ஹரி அண்ணா இதைப் பற்றி ராதிகாவோடு ஆலோசித்ததிருப்பார். ஆனால் ராதிகாவின் சோம்பேறித்தனம் காரணமாக நாட்கள் இழுபடுவதால் தான் தான் இது பற்றி அறிவித்துள்ளார். ஆயினும் எந்தப் பகுதியில் எனத் தெரிவிக்காமைக்கு ராதிகாவின் பதிலுக்காகக் காத்திருக்கின்றார் எனத் தோன்றுகின்றது. நிச்சயம் அது பற்றி அவர் விரைவில் தெரிவிப்பார்.

இவர் ஒரு இடத்தைத் தெரிவு செய்தால் hதிகா பேசாமல் மற்றய இடத்தைத் தெரிவு செய்ய வேண்டியது தானே? இதில் குழம்ப என்ன இருக்கின்றது?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் 3-5 வரையான தமிழர்கள் போட்டியிட உள்ளார்கள். ஒவ்வொருவரும் மற்றய தமிழ் போட்டியாளர்களுக்கு நிச்சயம் எதிராக இருக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் 3-5 வரையான தமிழர்கள் போட்டியிட உள்ளார்கள். ஒவ்வொருவரும் மற்றய தமிழ் போட்டியாளர்களுக்கு நிச்சயம் எதிராக இருக்கமாட்டார்கள். 

நல்ல முயற்சி

கனடாவே இன்று எமது பிரச்சினையில் பலவாறு முன் மாதிரியாகவும்

தமிழர் தரப்புக்கு ஆதரவாகவும் இருந்து வருகிறது

அதை  எம் ஒற்றுமை மூலம் மேன்மேலும் வலுப்படுத்தணும்

அதற்காக உழைக்கும் அத்தனை  உறவுகளுக்கும்  நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் சொல்லுறதைப் பார்த்தால் ராதிகா நேரகாலத்தோட கலியாணம் செய்தால் உற்சாகமாக இருப்பார் போல தெரியுது.

நீங்கள் வடிவாக கட்டுரையை வாசிக்கவில்லை போலுள்ளது. 2 தொகுதிகளை ஒன்றிணைத்து அதை 3 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். அதில் ஒன்றில் தான் ஹரி ஆனந்தசங்கரி போட்டியிடுகின்றார். ராதிகாவை விட நன்றாகவே இவர் செயற்படக்கூடியவர். நிச்சயம் ஈழம் தொடர்பான சிந்தனையில் பாராளுமன்றத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துவார்.

கனடாவில் இருந்து ஜெனிவாவில் ... ஏன் தமிழ் மக்களில் சிறிலங்கா தொடர்பான அமெரிக்காவின் பேரணை கொண்டு வரப்பட்ட போது அனுமதிக்கப்பட்ட 2 பேர் ஒன்று ஹரி, மற்றது அவரது உதவியராகப் பணியாற்றும் வாணி என்கின்ற என்னுமொருவர். அவர் சென்ற மாதம் கூட ஜெனிவாவில் மனிதஉரிமைகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். அதற்கு காரணம் அவர் கனடாச் சட்டத்தரணிகளில் ஊடாக பங்காற்றும் வாய்ப்பினை ஏற்படுத்தினார்.

ராதிகாவினால் போதியளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. அவர் தனியாகப் பாராளுமன்றத்தில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ராதிகா வெல்வது பற்றி எவ்விதமான கவலையுமில்லை. ஆனால், ஹரி அண்ணா நிச்சயம் வெல்ல வேண்டும்.

ஹரி அண்ணா இதைப் பற்றி ராதிகாவோடு ஆலோசித்ததிருப்பார். ஆனால் ராதிகாவின் சோம்பேறித்தனம் காரணமாக நாட்கள் இழுபடுவதால் தான் தான் இது பற்றி அறிவித்துள்ளார். ஆயினும் எந்தப் பகுதியில் எனத் தெரிவிக்காமைக்கு ராதிகாவின் பதிலுக்காகக் காத்திருக்கின்றார் எனத் தோன்றுகின்றது. நிச்சயம் அது பற்றி அவர் விரைவில் தெரிவிப்பார்.

இவர் ஒரு இடத்தைத் தெரிவு செய்தால் hதிகா பேசாமல் மற்றய இடத்தைத் தெரிவு செய்ய வேண்டியது தானே? இதில் குழம்ப என்ன இருக்கின்றது?

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் 3-5 வரையான தமிழர்கள் போட்டியிட உள்ளார்கள். ஒவ்வொருவரும் மற்றய தமிழ் போட்டியாளர்களுக்கு நிச்சயம் எதிராக இருக்கமாட்டார்கள்.

"இவர் ஒரு இடத்தைத் தெரிவு செய்தால் hதிகா பேசாமல் மற்றய இடத்தைத் தெரிவு செய்ய வேண்டியது தானே? "

ராதிகா ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள தொகுதி ரூஜ் றிவர் தொகுதியில் அவர் அலுவலகம் அமைத்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார். இதன் மூலம் அடுத்த முறை இந்த மக்களின் வாக்கு வங்கியை தீரும்பவும் தக்க வைக்க முயன்று கொண்டிருக்கிறார். இந்த நேரத்திலதெரிவை ராதிகா முதலில் செய்வதே சரியான விடயமாக இருக்கும். அதை விடுத்து ஹரி ஒரு இடத்தைத் தெரிவு செய்தால் ராதிகா மற்ற இடத்து;ககுப் போக வேண்டியது தானே என்ற உங்களின் பதிலே இந்த விடயத்தில் உங்கள் நடுநிலையை சந்தேகிக்க வைக்கிறது.

அடுத்ததாக ஹரி அவர்கள் பெருமளவு தமிழ் மக்கள் வசிக்கும் ஸ்காபறோ பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக வருவது குறித்து எனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும்  இல்லை. ஆனால் ஒரே தொகுதியில இரண்டு தமிழர்கள் போட்டியிடுவதை என்னால் ஏற்று;க கொள்ள முடியவில்லை. 

மற்றும்படி அவர் தமிழ் மக்களின் பிரதிநிதியாக வந்து விடக் கூடாது என்பது எனது கருத்து அல்ல. காரணம் தமிழ் மக்களிடம் அறிமுகமுள்ள ஒரு தமிழர் பாராளுமன்ற உறுப்பினராக வருவது வரவேற்கப்பட வேண்டியதே.

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் நினைவுபடுத்த வேண்டும். கடந்த தேர்தலில் ராதிகா ரூஜ்றிவரீல் போட்டியிட்ட நிலையில தான் சார்ந்த தொழில் கட்சியின் வேற்றின வேட்பாளருக்காக தமிழ் மக்கள் மத்தியில்  ஹரி பிரச்சாரங்களில் ஈடுபட்டார். கட்சி அங்கத்தவர் என்ற முறையில ;இதில் தவறில்லை என்றாலும் இவர் தெரிவு செய்யப்பட்டால் தமிழர்களுக்காக அளப்பெரும் சேவையைச் செய்து விடுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இறுதியாக அடுத்த பொதுத் தேர்தலில் ராதிகா, ஹரி உள்ளிட்ட பல தமிழர்களும் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிக்காமல் பாராளுமன்ற உறுப்பினர்களாக வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமுமாகும்.

Edited by Manivasahan

பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.   தமிழ் மக்கள் விடயத்தில் இவர் நினைத்திருந்தால் நிறையச் செய்திருக்கலாம்.  இவருக்கு அதற்கான தகுதியும் திறமையும் இருக்கிறது.  ஆனால், இவர் இதுவரை தமிழ் மக்களுக்குச் செய்தது வெறும் பம்மாத்தாகத் தான் எனக்குத் தெரிந்தது, தெரிகிறது. பார்க்கலாம், பாராளுமன்ற உறுப்பினராக வந்த பின்பு என்ன செய்கிறார் என்று.....

வணக்கம் தமிழிச்சி

கன காலத்துக்குப்பின்...

யாரை என்று தெளிவாக குறிப்பிடுங்கள்

பிழையான செய்திகளுக்கு வழி  வகுக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் சொல்லுறதைப் பார்த்தால் ராதிகா நேரகாலத்தோட கலியாணம் செய்தால் உற்சாகமாக இருப்பார் போல தெரியுது.

ஏன்.. இப்ப.. ராதிகா மேடம்..  நல்ல சுறுசுறுப்பா தானே இருக்கிறா..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்.. இப்ப.. ராதிகா மேடம்..  நல்ல சுறுசுறுப்பா தானே இருக்கிறா..! :lol::D

அந்தப்பிள்ளையை

வேலை செய்ய  விடுங்கப்பா

சும்மா

பின்னாலும் முன்னாலும் கலைச்சுக்கொண்டு........ :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சொன்ன விடயம் தான் மணிவாசகன். ராதிகாவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் நான் பங்கெடுத்திருந்தேன். அவர் வெற்றி பெற வேண்டும் என்ற அவா அப்போது நிறையவே இருந்தது. இப்போதும் அவர் வெல்வது தொடர்பாக எந்த எதிர் உணர்வும் கிடையாது.

ராதிகா அலுவலகம் அமைத்துச் செயற்படுவது தொடர்பாகப் பெரிதாகச் சொல்கின்றீர்களே, அவர் கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அலுவலகத்தை ஆரம்பிக்கவில்லை என்பது தெரியுமா? அதற்குப் பிற்பாடு தான் ஆரம்பித்தார். அதுவும் பலருடைய வேண்டுகோளால்... அதைத் தவிர, அவர் நிறைய எதிர்ப்புணர்வை அவர் மக்களிடம் சம்பாதித்துக் கொண்டுள்ளார் என்பது தான் பிரச்சனை.

மேலே ஹரி ராதிகாவோடு ஆலோசித்திருக்கலாம் என்று பட்டும்பாடமலும் தான் சொன்னேன். ஆனால் அது தான் உண்மை. ராதிகா சுயமாக ஒரு இடத்தைத் தெரிவு செய்யததால் தான் தான் ஹரி தன் இடத்தைப் பற்றிச் சொல்லாமல், அறிவிப்பினை மட்டும் வெளியிட்டு விட்டு இருக்கின்றார். ராதிகா சுயமாக முடிவு எடுக்கத் தெரியாது இருப்பின், ஹரி தன் இடத்தை அறிவிக்கும் நிலமை வரலாம். அது ராதிகாவின் தவறு தான் காரணமாக இருக்கும்.

அவரது பணியைக் குறைத்து மதிப்பிடவில்லை. நீதன் சாண் இன்று அவரது கட்சியில் உயர்நிலை அடைய அவர் நிச்சயம் பங்களிப்புச் செய்திருப்பார். தவிர சனல் 4இன் விபரணம் பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்ட போது, தன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை அவர் அங்கே அழைத்து வந்திருந்தார்.

நான் எப்போது என்னை நடுநிலைவாதி என்றேன். என்றுமே நான் பக்கச் சார்ப்பானவன். எனக்குப் பிடித்தவர்களையும், பிடித்த விடயங்களை மட்டுமே ஆதரிப்பேன், அது தமிழீழம் என்பதில் இருந்து, கடவுள் வரை எல்லா விடயங்களிலும் எனக்குப் பக்கச் சார்பான எண்ணமே உள்ளது.அது மறைக்கின்ற விடயமே கிடையாது.

பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.   தமிழ் மக்கள் விடயத்தில் இவர் நினைத்திருந்தால் நிறையச் செய்திருக்கலாம்.  இவருக்கு அதற்கான தகுதியும் திறமையும் இருக்கிறது.  ஆனால், இவர் இதுவரை தமிழ் மக்களுக்குச் செய்தது வெறும் பம்மாத்தாகத் தான் எனக்குத் தெரிந்தது, தெரிகிறது. பார்க்கலாம், பாராளுமன்ற உறுப்பினராக வந்த பின்பு என்ன செய்கிறார் என்று.....

அவர் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள். அதற்காக நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பு என்பதையும் பட்டியலிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பிள்ளையை

வேலை செய்ய  விடுங்கப்பா

சும்மா

பின்னாலும் முன்னாலும் கலைச்சுக்கொண்டு........ :lol:  :D

அந்தப் பிள்ளையை நாங்க ஏன் கலைக்கப் போறம். அவாட வேலை எங்களுக்கு எதுக்கு..??! :)

அவாவே சொல்லுறா தான்.. தான் சோம்பேறின்னு...! :icon_idea:

http://youtu.be/p7-iY8iZZFk

ஏன்.. இப்ப.. ராதிகா மேடம்..  நல்ல சுறுசுறுப்பா தானே இருக்கிறா..! :lol::D

ராதிகாவிலை எனக்குப் பிடிச்ச பக்கம் இது. :lol:

கரிபியங்களின் ஊர்வலங்களுகுப் போனால் யார் என்று கண்டுபிடிப்பதே கடினமாகிவிடிகிறது. சுத்தம் அவளவையாகவே மாறிவிடுகிறார். :D

Edited by மல்லையூரான்

ஹரி அண்ணா அவர்கள் தொடர்ச்சியா ஐநா கூட்டத் தொடரில் எமக்காக பிரச்சாரம் செய்பவர். மற்றும் பல அரசியல் செயல் பாடுகளையும் செய்பவர். அவர் கனடிய பாராளுமன்றம் செல்வது எமக்கு பலமே  :icon_idea:

அப்பா மாதிரி வராவிட்டா சரி.  உடும்பு இறைச்சியும் கிடைக்காம இந்த முறையும் அந்த சனம் அவரை ஏமாத்தி போட்டுது. சனம் இலேசில மாறக்காயினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி அண்ணா அவர்கள் தொடர்ச்சியா ஐநா கூட்டத் தொடரில் எமக்காக பிரச்சாரம் செய்பவர். மற்றும் பல அரசியல் செயல் பாடுகளையும் செய்பவர். அவர் கனடிய பாராளுமன்றம் செல்வது எமக்கு பலமே  :icon_idea:

அவரும் போகட்டும், இவவும் திரும்பவும் போகட்டும்.
 
நிக்கிற தமிழர் எல்லாம் ஒரு தொகிதில நிக்காமல் பிரிந்து நிண்டு வெல்லுங்கோ!
 
நானும் நிப்பன் (!) என்னயும் பிடிச்சு அனுப்பி விடுங்கோ!
  • கருத்துக்கள உறவுகள்
 
அப்பா மாதிரி வராவிட்டா சரி.  உடும்பு இறைச்சியும் கிடைக்காம இந்த முறையும் அந்த சனம் அவரை ஏமாத்தி போட்டுது. சனம் இலேசில மாறக்காயினம்

சனம் எப்படி மறக்கும், சங்கரியார் எல்லாத்தையும் மறவுங்கோ எண்டதை.

Edited by Nathamuni

வணக்கம் தமிழிச்சி

கன காலத்துக்குப்பின்...

யாரை என்று தெளிவாக குறிப்பிடுங்கள்

பிழையான செய்திகளுக்கு வழி  வகுக்கலாம்

வணக்கம் விசுகு, நான் ஹரி ஆனந்தசங்கரியைத்தான் குறிப்பிட்டேன்.  2009இற்குப் பின்னர் பலரை அடையாளங் காணக்கூடியதாக இருந்தது போலவே 2015இற்குப் பின்னர் இவரையும் அடையாளங் காண முடியும். 

அவர் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள். அதற்காக நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பு என்பதையும் பட்டியலிடுங்கள்.

நான் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவே இருந்தேன்.  ஆனால், இவர்களின் செயற்பாடுகள் அதிகம் சுயநலம் சார்ந்துதான் இருந்ததே தவிர, பொதுநலன் சார்ந்து இருக்கவில்லை.  2000இன் ஆரம்பத்திலிருந்தே (அப்போதுதான் இவர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தொடங்கினார்)  இவர்களின் செயற்பாடுகளை அவதானித்துக் கொண்டுதான் இருந்தேன்.    அவருக்கு இருந்த பக்கவாத்தியங்கள் மூலமாகவே அவர் நிறையச் செய்திருக்கலாம்.   அவருடைய கல்வித் தகமையையும் தொடர்புகளையும் வைத்து நிறையச் செய்திருக்கலாம்.  அவர் ஐ.நா. செல்லவில்லை என்று நான் இங்கு கூறவில்லை.  ஆனால், செய்தது வெறும் தூசு என்றே கூறுவேன்.    அவர் செய்ததெல்லாம் ஐ.நா. சென்று வெறும் அறிக்கைகள் வாசித்தது மட்டுமே.  அவர் நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் மக்களின் ஆதரவுடன் சிறிலங்கா அரசாங்கத்தை இன்னும் சிக்கலில் மாட்டியிருக்கலாம்.   ஆனால், அவர் கனேடியத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவேண்டுமென்பதற்காக நடத்தப்பட்ட நாடகங்களே அந்த அறிக்கை வாசிப்புகள் என்பதை சிலரால்தான் விளங்கிக் கொள்ள முடியும்.

2015 தேர்தலில் வெற்றி பெற்று இவர் கனேடியப் பாராளுமன்ற உறுப்பினரான பின்பு, ஐ.நா.விலோ அல்லது வேறெங்கிலோ தமிழீழ மக்களுக்காக இவரால் குரல் கொடுக்க முடியுமா?  இவர் இப்போது ஐ.நா. சென்று வாசிக்கும் அறிக்கைகளையேனும் அதன் பின்னர்  வாசிக்க முடியுமா?    

நான் முன்னர் பல தடவைகள் யாழில்,  ராதிகா சிற்சபைஈசனையும் அடையாளங் காட்டியிருந்தேன்.  நான் குறிப்பிட்ட மாதிரியே அவருடைய செயற்பாடுகள் இருந்தது என்பதை இப்போது யாழ் வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இவை எனது அனுபவத்தின் வாயிலான எதிர்வுகூறல்களே.  காலம் தான் பதில் சொல்லும்.

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை .

எனக்கும் இந்த ஆளில் நம்பிக்கைகவரின் நடத்தைகள் புகழுக்கு அலைபவர் போலிருக்கு. ஆனால் இதில் பொயிட்ன்ஸ்

1.) அவர் தமிழன்.  திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்து வாக்களிக்கலாம்.

2.) தமிழர் வாக்களிக்கலாம். இலங்கை அரசியலை கனடாவில் செய்தால் தூக்கி எறியப்படுவார். ஆகையால் கனடாவில் ஊத்தையை விதைக்கிறமா என்று கவைப்பட தேவை இல்லை.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவே இருந்தேன்.  ஆனால், இவர்களின் செயற்பாடுகள் அதிகம் சுயநலம் சார்ந்துதான் இருந்ததே தவிர, பொதுநலன் சார்ந்து இருக்கவில்லை.  2000இன் ஆரம்பத்திலிருந்தே (அப்போதுதான் இவர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தொடங்கினார்)  இவர்களின் செயற்பாடுகளை அவதானித்துக் கொண்டுதான் இருந்தேன்.    அவருக்கு இருந்த பக்கவாத்தியங்கள் மூலமாகவே அவர் நிறையச் செய்திருக்கலாம்.   அவருடைய கல்வித் தகமையையும் தொடர்புகளையும் வைத்து நிறையச் செய்திருக்கலாம்.  அவர் ஐ.நா. செல்லவில்லை என்று நான் இங்கு கூறவில்லை.  ஆனால், செய்தது வெறும் தூசு என்றே கூறுவேன்.    அவர் செய்ததெல்லாம் ஐ.நா. சென்று வெறும் அறிக்கைகள் வாசித்தது மட்டுமே.  அவர் நினைத்திருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் மக்களின் ஆதரவுடன் சிறிலங்கா அரசாங்கத்தை இன்னும் சிக்கலில் மாட்டியிருக்கலாம்.   ஆனால், அவர் கனேடியத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவேண்டுமென்பதற்காக நடத்தப்பட்ட நாடகங்களே அந்த அறிக்கை வாசிப்புகள் என்பதை சிலரால்தான் விளங்கிக் கொள்ள முடியும்.

2015 தேர்தலில் வெற்றி பெற்று இவர் கனேடியப் பாராளுமன்ற உறுப்பினரான பின்பு, ஐ.நா.விலோ அல்லது வேறெங்கிலோ தமிழீழ மக்களுக்காக இவரால் குரல் கொடுக்க முடியுமா?  இவர் இப்போது ஐ.நா. சென்று வாசிக்கும் அறிக்கைகளையேனும் அதன் பின்னர்  வாசிக்க முடியுமா?    

நான் முன்னர் பல தடவைகள் யாழில்,  ராதிகா சிற்சபைஈசனையும் அடையாளங் காட்டியிருந்தேன்.  நான் குறிப்பிட்ட மாதிரியே அவருடைய செயற்பாடுகள் இருந்தது என்பதை இப்போது யாழ் வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இவை எனது அனுபவத்தின் வாயிலான எதிர்வுகூறல்களே.  காலம் தான் பதில் சொல்லும்.

அது தான் சொன்னனே, நீங்கள் அவருக்கு ஏதாவது செய்வதற்கு அறிவுரை கூறி இருக்கலாம் என்று. இப்போதும் கூடக் காலம் கெட்டுப் போய்விடவில்லை. தராளமாக அவர் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிச் சொல்லுங்கள். அவருக்கு ஆலோசனை வழங்கமுடிவில்லை. ஆனால் அவதூறாகப் பேச மட்டும் நன்றாக வருகின்றது.

2000 ஆண்டு அவர் செயற்பட வெளிக்கிட்டது இருக்கட்டும். 93ம் ஆண்டில் இருந்து செயற்படுகின்ற நீங்கள் என்ன செய்யமுடிந்தது? ஹரிக்கு அவர் தகமைகள் எல்லாம் வானத்தில் இருந்து கொட்டியதா என்ன? அவர் வளர்த்துக் கொண்டார். வளர்க்க விரும்புகின்றார்.

அவர் தன்னால் முடிந்தளவு முயற்சிக்கின்றார். ஐநாவு;குப் போனோம், பாராளுமன்றத்துக்குப் போனோம் என்று அதன் முன்னுக்கு நின்று படம் எடுத்துச் செய்திகளில் போடுவார்கள். நாங்களும் ஏதோ பெரிதாகச் செய்கின்றார்கள் என்று பார்த்தால், பார்வையாளர் மண்டபத்தில் இருந்து படம் எடுத்திருப்பார்கள். அதைத் தான் இத்தனை காலமும் நாடு கடந்த அரசு,உற்பட அனைத்து அமைப்புக்களும் செய்து வந்தன. ஹரி தான் கனடா வழக்கறிஞர் சங்கத்தினூடாக பேசுகின்ற வாய்ப்பினைப் பெற்றார். அவர் அறிக்கையை வாசித்தார் என்றால், அதைக் கூடச் செய்யக்கூட ஒருவனும் இங்கில்லை. போராட்டம், மூடிய அறையில் இருந்து உண்ணாவிரதம் மட்டும் செய்வார்கள்.சென்ற மாதம் கூட அவர் ஜெனிவாவுக்குப் போய்த்தான் வந்தார். அதைப் போய்ச் செய்தியாகப் போட்டு அவர் விளம்பரம் தேடவில்லை.

ஒரு மனிதனின் சமூக சேவை என்பது அவனது விருப்பத்தில் இருந்து வர வேண்டியது. 93களில் இருந்து நீங்கள் நாட்டுக்காக இருந்தீர்கள் என்றால் அது கௌரவிக்கப்பட வேண்டியது. ஆனால் அதே நீங்கள் மற்றவர்களின் செயல்களை மதிக்கத் தெரியவில்லை என்றால் நிச்சயம் அதற்குத் தகுதியானவர் நீங்கள் கிடையாது.

நான் அறிந்தவரை அவர் சென்ற தேர்தலில் லிபரல் சார்பாகப் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அவர் அப்போது போட்டியிடும் மனநிலையில் இருக்கவில்லை.

ஹரியைத் தவிர வேறு யாராவது ஐநா போய் விருந்தால் யார் விடுதிகளில் அறை எடுத்து, யார் கூட இருக்கின்றார்கள் என்று பார்ப்பதற்கே நேரம் செலவாகியிருக்கும்

Edited by தூயவன்

  • 2 weeks later...

கரி ஆனந்தசங்கரிக்கு போட்டியாக களமிறக்க கனேடிய மக்கள் அவையை சார்ந்தவர்கள் தகுதியானவரை தேடித்திரிவதாக அறிந்தேன். ஏற்கனவே ராதிகாவுக்கு எதிராக லோகன் கணபதியை களமிறக்கி உள்ளார்கள் .லோகனுக்கு சில மருத்துவர்கள் ஒரு தமிழருக்கு எதிராக போட்டியாக நிற்க்காமல் வேறு தொகுதியில் நிற்கும்படி ஆலோசனை சொன்னதாக கேள்வி .

இதே கூட்டம் தான் Dr .இலகுப்பிள்ளை யின் வெற்றியையும் தடுத்தவர்கள் .

  • 7 months later...

கரி ஆனந்தசங்கரிக்கு எதிராக உ .த வீடு வீடாக புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்கள் .கரி போட்டியிட உள்ள தொகுதியின் தமிழர்களிடம் சென்று ,லிபரல்கட்சி நியமனத்திற்காக இரண்டு தமிழர்களும் குயராத்தியரும் போட்டியிடுவதாயும் தாங்கள் குயராத்தியருடன் இணைந்து வேலைசெய்வதாயும் இவருக்கு வாக்களிக்குமாறும் சொல்லியுள்ளார்கள் .

கரி ஆனந்தசங்கரிக்கு போட்டியாக களமிறக்க கனேடிய மக்கள் அவையை சார்ந்தவர்கள் தகுதியானவரை தேடித்திரிவதாக அறிந்தேன். ஏற்கனவே ராதிகாவுக்கு எதிராக லோகன் கணபதியை களமிறக்கி உள்ளார்கள் .லோகனுக்கு சில மருத்துவர்கள் ஒரு தமிழருக்கு எதிராக போட்டியாக நிற்க்காமல் வேறு தொகுதியில் நிற்கும்படி ஆலோசனை சொன்னதாக கேள்வி .

இதே கூட்டம் தான் Dr .இலகுப்பிள்ளை யின் வெற்றியையும் தடுத்தவர்கள் .

இப்போதுதான் இந்தத் திரியைப் பார்த்தேன்.  Dr. இலகுப்பிள்ளையையும் ஹரியையும் தயவுசெய்து ஒப்பிடாதீர்கள்.   Dr. இலகுப்பிள்ளையின் தகுதிகளுக்கு முன்னால் இவர் வெறும் தூசு.  Dr. இலகுப்பிள்ளை தேசியத் தலைவரின் ஒப்புதலோடு தேர்தலில் நின்றவர்.  தலைவரின் கோரிக்கையையும் மறுத்துத்தான் உலகத்தமிழர் அவருக்கெதிராகச் செயற்பட்டது.   Dr. இலகுப்பிள்ளை அவர்கள் பல்லாண்டுகாலமாக தேசியத்தோடு தோளோடு தோள் கொடுத்தவர்.  தேசியத்திற்கு அவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது.  

ஆனால், ஹரியின் விடயம் அப்படியல்ல.  அவர் தமிழ் மக்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார்தான்.  மறுப்பதற்கில்லை.  ஆனால், தேசியம் என்று வரும்போது அவர் ஒரு சூதாட்டக்காரர்.  முதலில் கனேடியத் தமிழ்க் கொங்கிரசிற்குள் புகுந்து அதனை தேசியத்திலிருந்து திசை திருப்பினார்.  மூன்று வருடங்களுக்கு முன்னர் வர்த்தக சம்மேளனத்திற்குள் நுழைந்து அதனையும் இன்னும் பாழாக்கிவிட்டு நட்டாற்றில் விட்டுவிட்டுச் சென்றார்.  இப்போது கனேடிய அரசியலுக்குள் புகவுள்ளார்.  அங்கும் அதே கதைதான் நடக்கப் போகிறது.  அர்ஜுன் குறிப்பிட்டதுபோல் இவர் அவரது தந்தைக்குத் தப்பாமல் பிறந்த தனயன்தான்.  கனேடியத் தமிழ் கொங்கிரசைத் தேசியத்திலிருந்து விலத்தியதே இவர்தான்.  இப்படிப்பட்டவர் Canadian Tamilsஇற்கு வேண்டுமானால் ஏதாவது செய்வார்.  ஆனால், தாயகத்தில் வாடும் தமிழ்மக்களுக்கு இவரால் ஆகப் போவது ஒன்றுமில்லை.

நீலக்கலராக இருந்த இவரது வியாபார விளம்பரங்களை லிபரலின் சிவப்புக் கலருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மாற்றினார்.  அவரது விளம்பரங்களில் தனது ரையைக்கூட சிவப்பு நிறத்தில்தான் கட்டியிருக்கிறார்.  இப்போது இவர் அநேகமாக சிவப்பு நிறங்களையே அணிந்து வருகிறார்.  ஏன் Youtube இல்கூட சிவப்பு வர்ணம் வரும்படி பார்த்துக் கொள்கிறார்.

இப்போதைக்கு எனக்குத் தெரிந்தவரையில் போட்டியிடவிருக்கும் எந்தத் தமிழரும் கனேடியப் பாராளுமன்றத்திற்குச் செல்வதற்குக் தகுதியானவர்கள் அல்ல.  எனக்குத் தெரிந்தவரையில் போட்டியிட விரும்புபவர்களும் கனேடியத் தமிழ் கொங்கிரஸ் மற்றும் உ.த.வின்  இழிநடவடிக்கைகளால் தேர்தலிலிருந்து விலகியிருக்கவே விரும்புகிறார்கள்.   2019இல் தகுதியானவர் சிலர் போட்டியிடலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

எப்போது கனேடியன் தமிழ் காங்கிரஸ் தேசியத்தை விட்டு விலத்திச் சென்றது எனக் கூற முடியுமா? உங்களைப் போன்ற சிலருக்கு என்ன பிரச்சனை என்றால் நீங்கள் ஒரு உலகத்தை உருவாக்கி வைத்திருப்பீர்கள். அதற்குள் தான் அனைவரும் குதிரை ஓட்ட வேண்டும். இல்லை என்றால் அது தமிழ்த் தேசியமன்று எனக் கருத்து சொல்லிக் கொண்டிருப்பீர்கள். கனேடியத் தமிழ் காங்கிரஸ் எப்போது தேசியத்தில் இருந்து திரும்பியது... அதை ஹரி எப்படி மாற்றினார் என்று விளக்கம் தாருங்கள்... இப்படி மொட்டையாக எழுதுவது வேண்டாமே... ஹரி ஒன்றும் தமிழ்த் தேசியத்தை எதிர்க்கவில்லை. அதற்கு எதிராகவும் வேலை செய்யவில்லை.

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.