Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனுக்கு அச்சுறுத்தல்!

Featured Replies

Wigneshwaran_260.jpgவாராந்தரம் இடம்பெறும் அமைச்சரவை குழுக் கூட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்துள்ள வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டால், அதற்கு எதிராக கடும் அரசியல் நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

அவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் வேளையிலேயே ஜனாதிபதி வடமாகாண முதலைமைச்சருக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்று அமைச்சரவை கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்கு சி.வி. விக்னேஸ்வரன் தயாரானால் முழு வடமாகாணத்திலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மாகாண சபை உறுப்பினர்களும் இந்த செயற்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் கூறியுள்ளார்.

இந்த செயற்பாட்டிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் தலைவர் எழிழனின் மனைவியான ஆனந்தி சஷிதரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வடமாகாண முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளும் சந்தர்ப்பத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட் மற்றும் டெலோ ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் அலரி மாளிகைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

http://tamilworldtoday.com/?p=37899

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனுக்கு.... அச்சுறுத்தல்  என்றவுடன், ஒட்டுக்குழுக்களோ...  ஸ்ரீலங்கா இராணுவமோ.... என்று, பயந்து விட்டேன்.
ஏன்.... இந்த மாகாண சபைத் தேர்தல் நடந்தது.... என்று, வெறுப்புப் தான் ஏற்படுகின்றது.

நானும் அப்பிடி நினைத்துதான் வந்தேன் ...................ஆனால் இந்த தேர்தல் மூலம் ஏதாவது சிறிய நன்மை என்றாலும் எம் மக்களுக்கு கிடைக்கும் என்று நினைத்தேன் ,போகிற போக்கை பார்த்தால் ................ :(

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம்... தேங்காய் பூத் தலையனின் திருவிளையாடல்.
பேசாமல்.... மாவையை,  முன் நிறுத்தி இருக்கலாம்.
எவனும்.... வாலாட்டி இருக்க மாட்டான்.

கூட்டமைப்பின் கொள்கை பரப்புச் செயலர் கோசன் வந்து இந்தச் செய்தி உண்மையா என்று உறுதிப்படுத்தவும். கொ ப சேயை முடிசூடு விழாவோடு காணவில்லை ?

மிஸ்டர் புள்ளயானை வெல்லுவார் போல் இருக்கு.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் என்ன சீமானே ஊர்காசிலே உயிர்வாழ?

ஒரு மாசம் விடுப்பில இருந்த படியால் இங்க வந்து அடிக்கடி கருத்துச் சொல்ல முடிந்தது, திங்கள் முதல் மீண்டும் தினசரி 5 காட்ச்சிகள்.

இனி கொஞ்சம் கஸ்டம். புல பினாமிகளுக்கு யோகம்தான், கேள்வி இல்லாமல் யாவாரம் செய்யலாம்.

இந்த செய்தி நம்பும் படியாக இல்லை. சம்பந்தரும் விக்னேஸ்வரனும் இப்படி முறுகி கொள்வார்கள் என நான் நம்ப்விலை. இது மாகானாசபை பதவி கிடைக்காமல் அலையும் சில சில்லறைகளின் வேலை.

நாளைக்கே இது பொய் என்று தெரிய வந்தால் உங்கள் முகத்தில் பூசப்பட போகும் கரியை துடைக்க துணி தயார் செய்து வைங்க.

இந்த செய்தி உண்மையா இருந்தால் 2009 இல் தமிழர்கள் நட்டாட்டில் நிண்டது போல, இது இன்னொரு முறை. அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

------

ஒரு மாசம் விடுப்பில இருந்த படியால் இங்க வந்து அடிக்கடி கருத்துச் சொல்ல முடிந்தது,

------

 

நினைப்புத்தான்... பிழைப்பைக் கெடுக்கும் என்பார்கள்.

அது... உங்களுக்கு நன்கு பொருந்தும்.

 

தமிழ்வேர்ல்ட் இணையத்தள சாயம் வெளுக்கிறதா.. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள்
செய்திகளைத் திரித்து எழுதுவதில் தமிழ் ஊடகங்களை யாராலும் வெல்லமுடியாது.
 

மாகாண  முதலமைச்சர்களுக்கான கூட்டத்தில் ஒரு மாகாணத்தின்
முதலமைச்சர் கலந்துகொள்வதில் என்ன தப்பு இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்புத்தான்... பிழைப்பைக் கெடுக்கும் என்பார்கள்.

அது... உங்களுக்கு நன்கு பொருந்தும்.

கருத்து என்றுதான் சொன்னேன் தமிழன் நல்ல கருத்து என்று சொல்லவில்லையே.

வடிவேல் சொல்லுற மாதிரி, நம்ம அடிச்சு பெரிய பெரிய ரவுடிங்கெல்லாம் ஓய்ஞ்சு போய் உரவிடே ஓடி இருக்காங்க. அடி வாஅங்கிறதில நாங்க அப்படி.

நம்மள அடிச்சு, நம்ம அடிச்சில :)

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து என்றுதான் சொன்னேன் தமிழன் நல்ல கருத்து என்று சொல்லவில்லையே.

வடிவேல் சொல்லுற மாதிரி, நம்ம அடிச்சு பெரிய பெரிய ரவுடிங்கெல்லாம் ஓய்ஞ்சு போய் உரவிடே ஓடி இருக்காங்க. அடி வாஅங்கிறதில நாங்க அப்படி.

நம்மள அடிச்சு, நம்ம அடிச்சில :)

 

3495880855_e59ba4deba.jpg

 

வடிவேலு என்பவரும்.....  வடை மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டவரா?

மந்திரிப்பதவி வழங்களில் நவநீதம் பிள்ளைக்கு திருமணம் பேசும் மேர்வின் சில்வாக்களுக்கு இடம் இல்லை. 

 

ஆனந்த சங்கரிக்கு தரம் இருக்கலாம். ஆனால் இவர் மகிந்தாவிடம் முதல் மந்திரிப்பதவி கேட்டுச் செய்த துரோகங்களால் மக்களின் முன்னால் இவரால் போக முடியாது. இதனால் அவரை நியமன உறுப்பினராக தூக்கி நிறுத்தி தனது கையை பழுத்தாக்க கூட்டமைப்பு முயவில்லை. ஆனால் வென்றவர்களுக்குள் எல்லோருக்கும் தரம் இருக்க வேண்டும் என்பதில்லை. பலருக்கு தரம் இருக்கலாம் ஆனால் பதவிகள் நான்கு. இதில் முதலமைச்சர் பதவியை மற்றக்கட்சிகள் தமிழரசுக்கட்சி மீது போட முடியாது. அவர் ஏற்கனவே தான் கட்சி நடுநிலையானவர் என்று கூறிவிட்டார். மேலும் தமிழர்சுக்கட்சியின் மாவைக்கு வர வேண்டிய பதவியை சுரேஸ் பொறாமையால் பிடிவாதம் பிடித்த போது விட்டுக்கொடுப்பதற்காகவே பொது வேட்பாளர் கொண்டுவரப்பட்டது.  

 

ஒன்றுக்கொன்று எதிரான கொள்கைகளைக் கொண்ட "கட்சிக்கு மந்திரிப்பதவி" என்பவரும், "மாவட்டத்துக்கு மந்திரிப்பதவி" என்பவரும் இணைகிறார்கள். இவர்கள் இணையும் ஒரே ஒரு கொள்கை சுயநலத்துக்கு மந்திரிப்பதவி என்பதாகும். இவர்கள் தேர்தல் நேரம் முயன்றது கூட்டமைப்பின் தலைமையை கைப்பற்றி தமது சதிர்களை ஆடவே. ஆனால் அது ஒரு பொது முதல் மந்திரியை நியமித்து தவிர்க்கப்பட்டுவிட்டது

 

கட்சிகள் ஐந்து. மாவட்டங்கள் ஐந்து. சுரேஸ் முல்லைதீவுக்கு 2 இரண்டு மந்திரிகள் கேட்டார். எனவே அதற்கு இணையாக பிடிவாதம் பிடிப்பதானால் EPRLFயை விட மூன்று பங்கு பெரிய தமிழரசுக்கட்சி தான் 6 மந்திரிகளை கேட்க வேண்டி வரும். அல்லது மிகுதி மாவட்டங்கள் 8 மந்திரிகளை கேட்பார்கள். கிளிநொச்சி மக்களும் இறுதிப்போரில் முல்லைத் தீவுதான் போனார்கள். மன்னார் மக்களும் இந்த இரண்டு மாவட்டங்கள் போலத்தான் தாழ்வு நிலையில்  இருக்கிறார்கள். வவுனியாவை கவனிக்காமல் விட்டால் அது வடக்கின் அம்பாறை ஆகும். இரண்டு மந்திரிகள் முல்லைத்தீவுக்கு போனால் மிகுதி ஆறுக்கும் எங்கு போவது?

 

மேலும் தாங்கள் தான் ஜனநாயகம் உள்ளவர்கள் என்கிறார்கள். தமிழரசுக்கட்சி "திறமையின் அடிப்படையில் மந்திரிப்பதவி" என்கிறது. அந்த நேரத்தில் மாவட்டத்திற்கு ஒரு மந்திரிப்பதவி என்று போனால் தமிழசுக்கட்சிக்கு எந்த மாவ்ட்டம்? அதில் அது எப்படி தனது திறமை அடிப்படையில் தெரிவுகளை செய்ய முடியும். அதற்கு கிடைக்கும் மாவட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் உதவாதவர்களாயின் தமிழரசுக்கட்சி மட்டும் காவாலி மந்திரி ஒன்றுடன் போகவேண்டும்; ஆனால் மற்றக்கட்சிகள் நல்ல மந்திரிகளுடன் போவதா? கட்சிக்காக இடம், மாவட்டத்துக்க இடம் என்று கூறிக்கொண்டு தமிழரசுக்கட்சியின் திறமை முதலிட கொள்கையை தடுத்து மறிப்பவர்கள் எப்படி தம்மிடம் ஜனநாயகம் இருக்கு என்று பீற்றுகிறார்கள்?

 

இதில் கூட்டமைப்பின் உபகட்சிகள் தங்களை அழித்து கூட்டமைப்பு என்ற தனிக்கட்சி வேண்டும் என்றவர்களே. (மேலும் அதில் உள்ள கோமாளித்தனம் தம்முள் தலைமையை மதிக்காததாக பிரேமசந்திரன் தனது கட்சி மந்திரியை நீக்குகிறார். கட்சியை மதிக்காததால் சிவாஜிலிங்கம் தலைமையை நீக்குகிறார். ) இதற்கு தயாராக இருந்தவர்கள் பின்னர் எதற்கு கட்சிக்கு மந்திரிப்பதவி கேட்கிறார்கள்?  அது எப்படி அப்போது கட்சிகள் வேண்டாம் என்ற்வர்கள் இப்போ கட்சிக்கு மந்திர்ப்பதவி என்கிறார்கள்? 

 

ஒரு கட்சி "கட்சிக்கு மந்திரிப்பதவி" கேட்கிறது. இதுதான் ஜனநாயகமாக இருந்தால், கட்சியிந் தனிப்பட்ட பலம் என்பதை கணக்கில் எடுக்க கூடாது என்றும் இருந்தால்  கூட்டணி என்ற கட்சி வெல்லவில்லை; அதற்கும் உண்மையில் இவர்கள் ஒரு மந்திரிப்பதவி ஒதுக்க முயன்றார்களா? வெல்லவில்லை என்றாலும் இவர்களுடன் தேர்தலில் நின்று உழைத்த அந்ததக்கட்சியை எப்படி தங்களின் ஜனநாயகத்தின் படி ஒதுக்கிவிட சொல்கிறார்கள்.  அதில் ஆனந்த சங்கரியை விட நல்ல தமிழ் அபிமானிகள் இருந்தால் அவர்களை ஒதுக்குவதா இவர்களின் ஜனநாயகம்? 

 

இரண்டு மந்திரிகளை தனக்கு கேட்ட சுரேசுடன், நான்கு உப கட்சிக்கும் ஒரு மந்திரி என்று கூறும் சிவாஜி லிங்கம் சேர்ந்து ஏற்கனவே  இரண்டு மந்திரிகளை உடைய யாழ்ப்பாணத்துக்கு மேலும் ஒரு மந்திரிப்பதவி என்பது இவர்களிடம் கொள்கை இல்லை என்பதைக் காட்டுகிறது.  இதில் சுரேசும், சிவாஜிலிங்கமும் என்ன சொல்லுகிறார்கள் என்றால் தாம் சொல்வது மட்டும்தான் ஜனநாயகம் என்கிறார்கள். சுரேஸ் முன்னர் தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தவுடன் வரதர் அணியில் இருந்து பிரிந்தவர். சிவாஜிங்கமும் அதே மாதிரிப் பிரிந்தவர். தமிழரசுக்கட்சி ஒன்றுதான் தன்னை காங்கிரசுடன் இணைத்தது, POLT டுடன் இணைத்தது.  கூட்டணியுடன் இணைததது. EPRLF,TELOவுடன் இணைத்தது. எனவே இவர்கள் சுயநலம் தலைவிரித்தாடும் போது பிரிந்து ஓட முயலாமல் இணைந்து செயல்ப்படுவது எப்படி என்று புரிந்துகொள்ள வேண்டும்.

 

மந்திரிகள் என்பவர்கள் தமது கட்சியின் கீழோ அல்லது தனியாக தமது மாவட்டத்தில் ஆபிசு உண்டாக்கி தனியாகவோ இயங்கப் போபவர்கள் அல்ல. மந்திரிசபை என்பது ஒரு தனி யூனிட். நிதி மந்திரி இல்லாமல் பொருளாதார மந்திரி இயங்க முடியாது. பொருளாதார மந்திரி இல்லாமல் எரிபொருள் மற்றும் சக்தி அமைச்சர் இயங்கமுடியாது. எல்லாமே ஒன்றுக்குள் ஒன்று தொடுப்பும் இணைப்பும் உள்ளவைகள். இவர்களை ஒரு பொது யூனிடாக இயங்க வைப்பவர் முதல்மந்திரி அல்லது பிரதமமந்திரி. அவரால் தெரியப்படாமல் கட்சி ஒன்றால் திணிக்கப்படும் மந்திரி வைத்துக்கொண்டு எப்படி முதல்மந்திரி  மந்திரிகள்சபையை வினைத்திறனுடன் நடத்த முடியும்.   தனக்குக் தேர்தலில் கிடைத்த பிரதிநிதிகள் குழுவிலிருந்து திறமையின் அடைப்படையில் விருப்பமானாவர்களை தெரிந்து மந்திரி சபையை அமைப்பதுதான் முதலமைச்சர் அடுத்த தேர்தலின் போது மக்களுக்கு பதிலளிக்கத் தக்க நிலையில் அவரை இட்டு வைத்திருக்கும். இந்த பிரதிநிதிகள் குழுவிலிருந்து முதல் மந்திரி திறமையின் அடிப்படையில் மந்திரிகளை தெரிவு செய்தால் அதை தமது கட்சியை உடைக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டுவது அவர்களின் கோழிச் சணடை குணம் அல்லாமல் உண்மையானதாக இருக்க முடியாது.

 

ஒரு கட்சி திற்மையானவர்களை தேர்தலில் போடாமல் தனது உறவுகளையும் தமிழ் மேர்வின் சில்வாக்களையும் தேர்தலில் போட்டால் அதற்கு மந்திரிப்பதவி கிடைக்காமைக்கு அது மட்டுமே பொறுப்பு. EPRLF தமிழரசுக்கட்சியின் பாதி அளவு வேட்பாளர்களை தேர்தலில் போட்டது.   ஆனால் தமிழர்சுக்கட்சியின் மூன்றில் ஒரு பங்கு பிரதி நிதிகளை பெற்றிருக்கு. அதன் ஒரு "விளக்கம் EPRLF மக்களின் விருப்பத்திற்கேற்ப திறமையானவர்களையும், நம்பிக்கையானவர்களையும் களம் இறக்காமையே. EPRLF தேர்தலில் இறக்கியவர்கள் சுரேசின் உறவுகளும் அவர்களின் எடுபிடிகளுமே. இதனாலேயே அவர்களை மக்கள் நிராகரித்தார்கள்" என்பதாகும்.  இதே தவறை மந்திரி சபையிலும் திணிக்க EPRLF முயன்றால் EPRLF கூட்டமைப்பை விட்டு நீங்குவதுதான் நல்லது..  

Edited by மல்லையூரான்

3495880855_e59ba4deba.jpg

 

வடிவேலு என்பவரும்.....  வடை மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டவரா?

வடைக்கு என்று ஒரு தனி மாகாணம் இருக்குதோ? 

 

நீங்கள் ஒரே தமாஸ்தான் சிறி  :lol:

 

 

 

நல்ல கருத்து மல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள்

செய்திகளைத் திரித்து எழுதுவதில் தமிழ் ஊடகங்களை யாராலும் வெல்லமுடியாது.

 

மாகாண  முதலமைச்சர்களுக்கான கூட்டத்தில் ஒரு மாகாணத்தின்

முதலமைச்சர் கலந்துகொள்வதில் என்ன தப்பு இருக்கின்றது

 

அதெப்பிடி வாத்தியார்.. மற்ற முதல்வர்கள் சிங்களவர்கள் இல்லையா.. தன்மானத் தமிழன் எப்படி அதில் கலந்து கொள்வது? தேசியம் தெரியாத தேங்காய்ப்பூ தலையன் சதி இது

இப்படித்தான் மாவை புறக்கணிப்பு வெளிநாடு ஓட்டம் என்றும் எழுதினார்கள் ,விசாரித்தால் மாவை சிகிச்சைக்காக இந்தியா சென்றவர் .இதெல்லாம் செய்தியென்று .

திங்கள் இந்தியாவில் சிகிச்சை செவ்வாய் யாழில் ஊடகவியலாளருடன் சந்திப்பு.........

இப்படித்தான் மாவை புறக்கணிப்பு வெளிநாடு ஓட்டம் என்றும் எழுதினார்கள் ,விசாரித்தால் மாவை சிகிச்சைக்காக இந்தியா சென்றவர் .இதெல்லாம் செய்தியென்று .

திங்கள் இந்தியாவில் சிகிச்சை செவ்வாய் யாழில் ஊடகவியலாளருடன் சந்திப்பு.........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.