Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:-

14 அக்டோபர் 2013

gajan_CI.jpg

நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் மக்கள் அளித்த ஆணையை கூட்டமைப்பு தவறாக துஸ்பிரயோகம் செய்யக்கூடாதென கோரிக்கை விடுத்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதே வேளை மக்களும் அடுத்து தேர்தலொன்று வரும் வரை ஒதுங்கியிருக்கும் மனோபாவத்தினை கைவிட வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பத்திரிகையாளர் மாநாட்டில் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மணிவண்ணன் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவர் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

விடுதலைப் போராட்டம் மற்றும் தியாகங்கள் பற்றியும் சுயநிர்ணய உரிமை பற்றியும் தேர்தல் மேடைகளில் பேசிக்கொண்டிருந்த கூட்டமைப்பு தற்போது தேர்தலின் பின்னதாக 13 வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபை பற்றியும் உள்ளக சுயநிர்ணயம் பற்றியும் இப்போது பேசுகின்றது. மக்கள் ஆணையினை 13 வது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபை எனும் தீர்விற்கான அங்கீகாரமாகவும் விடுதலைப்புலிகள் மீதான போர்க்குற்ற விசாரணைக்கு கோரும் அங்கீகாரமாகவும் கோர முற்படுவதாக அங்கு பேசிய கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

மக்கள் ஆணைக்கு எதிராக கூட்டமைப்பு செயற்படுவதனால் மாற்று அரசியல் தலைமை ஒன்றை மக்கள் விரும்புவார்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொது செயலாளர் கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இனிமேலும் மௌனம் காத்துக் கொண்டிருக்காதெனவும் மக்களை அணிதிரட்டி மக்கள் போராட்டங்களை ஜனநாயக வழியில் முன்னெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97669/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ரவுண்டு குழப்பங்காட்ட குழப்பங்காட்டிகள் ரெடியாயிட்டீனம் போல :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

யாருங்க இவர்? எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல இருக்கு...?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

யாருங்க இவர்? எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல இருக்கு...?

ஜி .ஜி பொன்னம்பலத்தின் பேரன்  :D பேரனுக்கு தப்பாமல் பிறந்திருக்கின்றார் என்று நிருபித்துவருகின்றார் .

என்ன இடையில் அந்த இருவரையும் விட மோசமான குமாரை விட்டுவிட்டீர்கள் ,இதுதான் அரசியல் என்பதா ?

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம். முப்பெரும் தலைவர்கள் என்றவர்களில் ஜி.ஜி பொன்னம்பலமும் அடங்குகிறார் என்பதை சிலர் இலகுவாக மறந்து விடுகிறார்கள்.

என்ன இடையில் அந்த இருவரையும் விட மோசமான குமாரை விட்டுவிட்டீர்கள் ,இதுதான் அரசியல் என்பதா ?

நான் ஏற்கனவே இன்னொருத்திரியில் அப்பனுக்கு தப்பாமல் பிறந்திருக்கின்றார் என்று எழுதியும் இருக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட குமார் பொன்னம்பலம் , ரவிராஜ், தராக்கி போன்றோர் சிங்கள இனவாத அரசால் படுகொலை செய்யப்பட்டார்கள். "கழுவிய மீனுக்குள் நளுவிய மீன்கள்" இன்றும் சிங்கள அரசுக்கு கொடி பிடிக்கிறார்கள். இதுவும் அரசியலில் ராஜதந்திரம் என்று சொல்வார்களாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம். முப்பெரும் தலைவர்கள் என்றவர்களில் ஜி.ஜி பொன்னம்பலமும் அடங்குகிறார் என்பதை சிலர் இலகுவாக மறந்து விடுகிறார்கள்.

நுணா அன்றைய அய்க்கிய தேசிய கட்சியில் சேனாநாயக்க அமைச்சரவையில் மீன்பிடி கைத்தொழில்  அமைச்சராக இருந்துகொண்டு 10 இலட்சம் மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறிக்கத் துணை நின்ற G. G. பொன்னம்பலம் முப்பெரும் தலைவர்களில் ஒருவரா?

1977 ல் அமோக வெற்றி பெற்ற இவர்களை பாராளுமன்றம் அனுப்பிய மக்களை கேட்க வேண்டும். அப்போ எதிர்க்கட்சியாக இருந்தவர்களும் இவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

1977 ல் அமோக வெற்றி பெற்ற இவர்களை பாராளுமன்றம் அனுப்பிய மக்களை கேட்க வேண்டும். அப்போ எதிர்க்கட்சியாக இருந்தவர்களும் இவர்களே.

எவர்களைக் கேட்கவேண்டும்? 1948 - 1949 களில் நடந்த மலையக மக்கள் குடியுரிமை பறிப்புக்கும். 1977 இல் நீங்கள் சொல்லும் அமோக வெற்றி பெற்ற அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? நான் கேட்டது உங்களின் பதிலைத்தான்.

இப்படி அநேகர் நேரடியாக பதிலளிக்கமல் வேறு ஏதேதோவெல்லம் சொல்வதால்தான் பெரும்பாலும் நான் அரசியல் திரிகளுக்குள் முன்னர் வருவதில்லை.

1977 இல் கூட்டணி அமோக வெற்றி பெற்று பாராளுமன்றம் போகையிலும் குமார் காங்கிரஸ் சார்பில் யாழ்ப்பாணத்தில் நின்று கட்டுகாசு இழந்தவர் .தமிழர்களின் ஒற்றுமைக்கு எப்பவும் குந்தகமாக இருந்தது இவர்கள் பரம்பரை .

ஆயுத போராட்டம் தொடங்க கொழும்பு சென்ற குமார் யாழ்பக்கம் வரவேயில்லை ,பின்னர் புலியின் அரசியல் வங்கிரோத்து அறிந்து மெதுவாக அவர்கள் சார்பு எடுத்துவிட்டார் .

யாழ்பாணத்தில் ஜனநாய முறையில் நடந்த தேர்தலில் தமிழர்கள் சார்பில் மாபெரும் வெற்றி பெற்ற யோகேஸ்வரன் துரோகியானதும் கட்டுக்காசை இழந்த குமார் பொன்னம் பலம் மாமனிதர் ஆனதும் முட்டாள்கள் கையில் ஆயுதம் கிடைத்தால் எதுவும் சாத்தியம் என்பதை மீண்டும் நிரூபித்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நூறு வீதம் பிழையான முடிவு என்பது எனது கருத்து. இதே போன்ற பிழையான முடிவுகளை சுயநலம் கருதி சேர் பொன்.இராமநாதன் போன்றோர் கூட எடுத்து இருக்கிறார்கள். 

40 களில் தமிழ் மக்களுக்கு துரோகம் புரிந்த ஜி.ஜி பின்னர் 70களீல் தமிழர் விடுதலை கூட்டணி என்ற அமைப்பாகி தமிழீழம் தான் முடிந்த முடிவு என்ற கொள்கையுடன் தேர்த்தலில் வென்றார்கள்.அப்போதும் ஜி.ஜி ஒரு தலைவராக இருந்தார். அவரின் கட்சிக்கு மக்கள் வாக்களித்து வெல்ல வைத்தார்கள் மாறாக அவரை புறக்கணிக்கவில்லை என்பது எனது வாதம்.

இறப்புக்கு முதல் சற்று மாற்றம் காட்டிய G.G.,  செல்வாவிடம் தனக்கு பதவி வேண்டாம் என்று கூறிவிட்டார். தனது பெயரை செல்வா பயன் படுத்தலாம் ஆனால் மக்களை வழி நடத்துவது செல்வாவின் பொறுப்பு மட்டுமே என்று கூறிவிட்டார். செல்வாவின் இறப்புக்கு பின்னர் அதிகாரம் சிவசிதம்பரத்திடமும் அமிர்தலிங்கத்திடமும்தான் போனது.  அதையேதான் G.G.விரும்பின்னார். அவர் தன்னை முப்பெரும் தலைவனாக்க விரும்பவில்லை. கூட்டணித் தலைவர்களான G.G யோ அல்லது தொண்டமானோ இணைப்பு மூலம் தமக்கு வழங்கப்பட்ட தலைமை பதவிகளை பயன் படுத்தி மக்களிடம் செல்லவில்லை.  G.G பதவியை பாவிக்காத காரணம், "மக்களின் ஜனநாயகத் தலைவன்" என்று சொல்லும் போது செல்வா அதில் தன்னை விட மிகத்தூரமான தனி இடத்தில் இருந்தார் என்றதை ஒதுக்கொண்டதும், தனது கடந்தகால தவறு களுக்கு பிராயச்சித்தமாகவும், காலம் கடந்துவிட்டமையால் தான் இனிக் கலைத்துப்பிடிப்பதை தவிர்க்கவுமே அவ்வாறு நடந்திருந்தார். 

குமார் மீது இருக்கும் மிகப்பேருய குற்றச்சாட்டு தமிழ் காங்கிரசை புதிப்பித்தமை. அதை விட அவருக்கு அரசுகளிடம் தந்தை அளவு பலம் இருக்கவில்லை. தேர்தலில் புலிகள் தலையிடக்கூடாது என்றவுடன் தானாக விலகிவிட்டார். இது புலிகளுக்கும் அவருக்குமிடயில் தூரத்தைக்குறைத்தது.  சந்திரிக்கா ஆரம்பம் தொடக்கம் சம்பந்தரிடம், நீலனிடம் காட்டிய காதலால் குமாரை அண்டவில்லை. இதனால் குமார் சந்திரிக்கா மீது காய்ச்சல் காட்டி வந்தார். இதுவும் புலிகளுக்கு அவருடன் உறவுகளை ஏற்படுத்த உதவியது. அவரிடம் இருந்த 70-80 பென்ஸ்கார்களை வாடகைக்குவிட அரசு தேவைப்ப்ட்டது. ஆனால் இதில் புலிகள் எப்படி இவருடன் ஒத்து போயிருக்க முடியும் என்பது தெரியவில்லை. இவருக்கும் சிங்கள பெண்களுக்கும் இருந்த தொடர்பை பயன்படுத்தி கொலை செய்யபட்டதாகவும் வதந்திகள். 

ஆனால் கஜேந்திர குமார் இந்த மாதிரி கேடு கெட்ட வரிசையில் இல்லை என்பது எனது அனுமானிப்பு. அவர் வெறுமனே சாத்தியமில்லாத ஒன்றில் அலைகிறார் என்றுதான் நினைக்கிறேன். அரசு இவர் கூட்டமைப்பை எதிர்த்து பேசுவதை தற்காலிகமாக விரும்புகிறது. ஏன் எனில் அரசின் பிர்தான எதிரி கூட்டமைப்பு. ஆனால் இவர் ஒரு தொகுதில் தன்னும் வென்றால் உடனே 6ம் திருத்தம், பயங்கரவாதம் என்று எல்லாம் கூறி உள்ளே போட்டுவிடும். அதுவரைக்கும் இவர் எந்த வழியில் எதிர்த்தாலும் கூட்டமைப்பை எதிர்த்தால் சரி என்று நடந்து கொள்கிறது அரசு. ஆனால் கூட்டமைப்பால் அப்படி நடந்தகொள்ள முடியாது. சிறிதரன், அனந்தி.... எல்லார் பதுகாப்பையும் மனதில் வைத்துத்தான் செயல்ப்பட வேண்டியது அவர்களின் நிலை. 

செல்வா G.G இறக்க சில மாதங்களுக்கு முன்பாகத்தான் இறந்தார் என்றாலும் G.G. க்கு அந்த குறுகிய காலத்தில் செய்ய எதுவும் இருக்கவில்லை என்றாலும் அவர் கூட்டணியை வழி நடத்த முயவில்லை என்றதுதான் நான் அந்த நேரம் அறிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

1977 இல் கூட்டணி அமோக வெற்றி பெற்று பாராளுமன்றம் போகையிலும் குமார் காங்கிரஸ் சார்பில் யாழ்ப்பாணத்தில் நின்று கட்டுகாசு இழந்தவர் .தமிழர்களின் ஒற்றுமைக்கு எப்பவும் குந்தகமாக இருந்தது இவர்கள் பரம்பரை .

ஆயுத போராட்டம் தொடங்க கொழும்பு சென்ற குமார் யாழ்பக்கம் வரவேயில்லை ,பின்னர் புலியின் அரசியல் வங்கிரோத்து அறிந்து மெதுவாக அவர்கள் சார்பு எடுத்துவிட்டார் .

யாழ்பாணத்தில் ஜனநாய முறையில் நடந்த தேர்தலில் தமிழர்கள் சார்பில் மாபெரும் வெற்றி பெற்ற யோகேஸ்வரன் துரோகியானதும் கட்டுக்காசை இழந்த குமார் பொன்னம் பலம் மாமனிதர் ஆனதும் முட்டாள்கள் கையில் ஆயுதம் கிடைத்தால் எதுவும் சாத்தியம் என்பதை மீண்டும் நிரூபித்தது.

புளட் தமக்குள் சுடுபட்டிருக்கும் போது தராக்கி போன்றோர் தமிழ் மக்களுக்காக பேசியவர்.குரல் கொடுத்தவர். அவர் மாமனிதர் .(சிங்களத்தால் கொல்லப்பட்டவர்). சம்பந்தர் அப்போதும் பம்மல் இப்போதும் பம்மல் தான். ஜெனிவாவுக்கு முதலில் போகாமல் பம்மியவர்களையும் மக்கள் நன்கு அறிவர்.
 
குமார் பொன்னம்பலம், மனோ கணேசன்,ரவிராஜ் போன்றோர் சிங்கத்தின் குகையில் இருந்து அரசபயங்கரவாதிகளின் அரசியல் படுகொலைகளை உலகுக்குக்கும் சிங்கள மக்களுக்கும் எடுத்துரைத்தார்கள். முடிவு குமாரும், ரவிராஜும் கொல்லப்பட்டு மாமனிதர் ஆனார்கள்.
 
எத்தனையோ கொலைகளுக்கு பொறுப்பான மண்டையன் குழுவுக்கு தலைவரான ஈ.பியின் இராணுவ தளபதி பின்னர் மனம் திருந்தி கூட்டமிப்பில் பேச்சாளராக வரவில்லையா?  அப்போ அவர் புலிகளால் கொல்லப்பட்டாரா?
முட்டாள்களான புளட்டின் கையில்  ஆயுதம் கிடைத்து தங்களுக்குள் சுடுபட்டு இறந்ததும் மாலை தீவை பிடிக்கப்போய் நாறியதையும் மக்கள் நன்கே அறிவர். பல கொலைகளை அறிந்த புளட் சித்தாத்தன் இன்று கூட்டமைப்பில் ஓரங்கமாக இருந்து என்னத்தை செய்யப்போகிறார் என பார்க்கலாம்.

எவர்களைக் கேட்கவேண்டும்? 1948 - 1949 களில் நடந்த மலையக மக்கள் குடியுரிமை பறிப்புக்கும். 1977 இல் நீங்கள் சொல்லும் அமோக வெற்றி பெற்ற அவர்களுக்கும் என்ன சம்பந்தம்? நான் கேட்டது உங்களின் பதிலைத்தான்.

இப்படி அநேகர் நேரடியாக பதிலளிக்கமல் வேறு ஏதேதோவெல்லம் சொல்வதால்தான் பெரும்பாலும் நான் அரசியல் திரிகளுக்குள் முன்னர் வருவதில்லை.

வாலி தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

குமார் புலிகளின் சார்பாக இருந்துதான் இங்கு சிலரின் பிரச்சனை. குமார் மட்டும். டக்லசுடனோ அல்லது எந்த பிசாசுடனோ சேர்ந்து புலிகளை எதிர்த்திருந்தால் அவரின் பரம்பரையின் மீது பழி போடப்பட்டிருக்க மாட்டாது. மாறாக இன்று தூற்றுவோரால் வாழ்த்துபட்டும், வாழ்ததுவோரால் தூற்றப்பட்டும் இருந்திருப்பார். உயிர் ஆபத்தின் மத்தியில் கொழும்பில் தமிழ்மக்களுக்காக சிங்கள ஊடகங்களில் கூட நேரடி விவாதம் புரிந்ததெல்லாம் மறக்கப்பட்டிருக்கும்.சிங்கள மக்கள் மத்தியிலும் அவருக்கு இருந்த செல்வாக்கிற்கு சிங்கள அரசிற்கு சார்பாக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டிருந்தால் அமைச்சராகவோ, வெளிநாட்டு உயர்ஸதானிகராகவோ ஆகியிருக்கலாம் . கேவலம் டக்லசுக்கு ஆதரவாக கருத்து எழுதுபவர்களும் அவரைத் தூற்றுகிறார்கள். முட்டாள்கள் கையில் எழுதுகோல் கிடைத்ததைப்போல.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

குமார் புலிகளின் சார்பாக இருந்துதான் இங்கு சிலரின் பிரச்சனை. குமார் மட்டும். டக்லசுடனோ அல்லது எந்த பிசாசுடனோ சேர்ந்து புலிகளை எதிர்த்திருந்தால் அவரின் பரம்பரையின் மீது பழி போடப்பட்டிருக்க மாட்டாது. மாறாக இன்று தூற்றுவோரால் வாழ்த்துபட்டும், வாழ்ததுவோரால் தூற்றப்பட்டும் இருந்திருப்பார்.

உயிர் ஆபத்தின் மத்தியில் கொழும்பில் தமிழ்மக்களுக்காக சிங்கள ஊடகங்களில் கூட நேரடி விவாதம் புரிந்ததெல்லாம் மறக்கப்பட்டிருக்கும்.சிங்கள மக்கள் மத்தியிலும் அவருக்கு இருந்த செல்வாக்கிற்கு சிங்கள அரசிற்கு சார்பாக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டிருந்தால் அமைச்சராகவோ, வெளிநாட்டு உயர்ஸதானிகராகவோ ஆகியிருக்கலாம் . கேவலம் டக்லசுக்கு ஆதரவாக கருத்து எழுதுபவர்களும் வரை தூற்றுகிறார்கள். முட்டாள்கள். கையில். எழுதுகோல் கிடைத்ததைப்போல.

நன்றி

எனது நேரத்தை மிச்சப்படுத்திக்கொள்கின்றேன்.

என்னைப்பொறுத்தவரை

குமார் பொன்னம்பலத்தை  கை நீட்டும் தகுதி  இங்கு எவருக்கும் கிடையாது

என்ன குறை அவர் தமிழருக்காக உயிர் இழக்கணும் என்று.

காசுக்காக??

பதவிக்காக??

செல்வாக்குக்காக???

பாதுகாப்புக்காக??? :(  :(  :(

இதிலிருந்தே

தமிழர்களுக்காக எழுதுகின்றோம்  என்று

இங்கு எழுதுபவர்களின்

அறிவையும்

வேட்கையையும் அறிந்து கொள்ளமுடியும் :(

1977 இல் கூட்டணி அமோக வெற்றி பெற்று பாராளுமன்றம் போகையிலும் குமார் காங்கிரஸ் சார்பில் யாழ்ப்பாணத்தில் நின்று கட்டுகாசு இழந்தவர் .தமிழர்களின் ஒற்றுமைக்கு எப்பவும் குந்தகமாக இருந்தது இவர்கள் பரம்பரை .

ஆயுத போராட்டம் தொடங்க கொழும்பு சென்ற குமார் யாழ்பக்கம் வரவேயில்லை ,பின்னர் புலியின் அரசியல் வங்கிரோத்து அறிந்து மெதுவாக அவர்கள் சார்பு எடுத்துவிட்டார் .

யாழ்பாணத்தில் ஜனநாய முறையில் நடந்த தேர்தலில் தமிழர்கள் சார்பில் மாபெரும் வெற்றி பெற்ற யோகேஸ்வரன் துரோகியானதும் கட்டுக்காசை இழந்த குமார் பொன்னம் பலம் மாமனிதர் ஆனதும் முட்டாள்கள் கையில் ஆயுதம் கிடைத்தால் எதுவும் சாத்தியம் என்பதை மீண்டும் நிரூபித்தது.

எவ்வளவு குரூரமான ஆள் நீங்கள் எல்லாம் எண்டதுக்கு நல்ல ஒரு உதாரணம் இது... 

புலிகளின் அரசியல் வங்குரோத்து தெரிந்து ஒருவர் தன்னை முன்னிலை படுத்த உயிர் அச்சுறுத்தல் வரும் அளவுக்கா  செயற்படுவார்.. ???   அப்படி நீங்கள் சொல்வது போல வாகில் குமார் கொல்லப்படாமல் தன்னை காத்து கொண்டு இருந்து இருப்பார்... 

நீங்கள் எல்லாம் இரட்டை நாக்கு கொண்ட பாம்புகள்... 

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கஜேந்திர குமார் இந்த மாதிரி கேடு கெட்ட வரிசையில் இல்லை என்பது எனது அனுமானிப்பு. அவர் வெறுமனே சாத்தியமில்லாத ஒன்றில் அலைகிறார் என்றுதான் நினைக்கிறேன்.

தமிழ் மக்கள் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்களின் கூட்டு (Confederation) சாத்தியமில்லை என்றால் தனிநாடு எப்படி சாத்தியமாகும்? :unsure:

தனிநாட்டை அடையலாம் என்று தேசியத்தை வலுப்படுத்தும் செயற்பாடுகள் எல்லாம் சும்மா பொழுதுபோக்குக்குக்தானா? :rolleyes: 

தனிநாடு தேவையின் நிமித்தம். அதை பெறும் வழிகள் சாத்தியமானதாக இருக்க வேண்டும். ஒரு நாட்டுக்குள் இரண்டு தேசங்களோ அல்லது  ஒரு ஐக்கிய இலங்கைக்குள் சுய நிர்ணய உரிமையோ எல்லாமே 6ம் திருத்தத்தை தவிர்க்க முயலும் சொல்லாடல்கள்.  தனி நாடு காண்பதற்கு 2009ம் ஆண்டுவரைக்கும் ஆயுதப் போராட்டம் ஒரு சாத்தியமான வழி. இனி அப்படி ஒன்று இல்லை.  சர்வதேச ராஜதந்திரத்தை பயன் படுத்துவது இன்று ஏற்றுக்கொள்ள கூடிய வழி.

அதன் படி சர்வதேசத்தை எங்கு முரணலாம், எங்கு ஒத்துப் போக வேண்டும் என்பது மிக அவதானமாக சிந்தித்தி செயல்ப்பட வேண்டியவை. அவர்கள் தேர்தலை கொண்டுவந்தால் அதை நிராகரித்துவிட்டு கஜேந்திரகுமார் ஐ.நா. போனது மாதிரிப்போய் அது காணுமாக இருக்கும் என்று நான் நமபவில்லை.  2012 பங்குனியில் சம்பந்தர் ஐ.நா போவதா இல்லையா என்பது பெரிய விவாதமாக இருந்தது. கூட்டமைப்பினர் விமான சீட்டுகள் பெற்றிருந்தார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் மகிந்தாவின் மிரடல்களால் போகாமல் விட்டார்கள். இதை பற்றி அவர்கள் சர்வதேச நாடுகளுடன் பேசிய பின்னர் சர்வதேச நாடுகளின் விருப்பத்திற்கமையவே போகவில்லை என்று கூறினார்கள்.

ஆனாலும் கவனிக்க வேண்டியது இதில் ஐ.நா போவதை கூட்டமைப்பு தவிர்த்திருந்தாலும் சர்வதேச நாடுகள் அதை பெரித்துபடுத்த இல்லை. ஆனால் தேர்தலை பகிஸ்கரித்திருந்தால் நிச்சயமாக அவை பெரித்து படுத்தியிருக்கும். எனவே தேர்தலில் அவர்களின் விருப்பை விட்டுவிட்டு  கஜேந்திரகுமார் எவ்வளவு இழகிய கோரிக்கையை முன்னால் வைத்தாலும் அதை பெறத்தக்க இடம் என்று ஒன்றும் இல்லை. இதனால் அவர் பேசுவது சாத்தியமில்லாதது. இன்றய தேர்தலின் பின்னால் வடமாகணத்துக்கு இருக்க வேண்டிய அதிகாரம் கிடைக்கப்போவதிலை. அந்த கஸ்ட நிலையை தமது ஆரம்ப புள்ளியாக ஆக்குவார்கள் என்று கூட்டமைப்பு சொல்வது அவர்களுக்கு சர்வதேசத்திடம் போய்க் கதைக்க ஒரு சந்தர்ப்பம் இருப்பதைக் காட்டுகிறது. எனவே 2013 பங்குனியில் கஜேந்திர குமார் ஐ.நா போனது 1982ல் ஜனாதிபதி பதவிக்கு குமார் போட்டியிட்டத்துக்கு சமன். எவ்வளவு திறமையாக கஜேந்திரகுமார் பேசினாலும் ஐ.நாவில் அவரின் பேச்சை நம்பி நாடுகள் செயலாற்ற இறங்க மாட்டா. அதுதான் அவரால் ஒருநாட்டுக்குள் இரண்டு தேசங்களை பெற முடியாது. ஆனால் இலங்கை அரசின் குணத்தை வெளியே காட்டவைத்து இராஜதந்திர முறையில் தனி நாடு காணுவது சாத்தியம்.  சர்வதேச நாடுகள் தீர்வுக்காக இலங்கையுடன் பேசுவது என்பது  கஷ்டடமான விடயம் என்பதை தாங்களே இப்போது உணருகின்றன. என்வே அவர்கள் பார்க்க நாமும் அதே குணத்தை வெளிக்காட்டாமல் சர்வதேசத்துடன் பேச நாம் தாயாராக இருக்கிறோம் என்றதை காட்டுவதுதான் இன்று கூட்டமைப்பு செய்யும் வழிமுறை. 

Edited by மல்லையூரான்

குமார் புலிகளின் சார்பாக இருந்துதான் இங்கு சிலரின் பிரச்சனை. குமார் மட்டும். டக்லசுடனோ அல்லது எந்த பிசாசுடனோ சேர்ந்து புலிகளை எதிர்த்திருந்தால் அவரின் பரம்பரையின் மீது பழி போடப்பட்டிருக்க மாட்டாது. மாறாக இன்று தூற்றுவோரால் வாழ்த்துபட்டும், வாழ்ததுவோரால் தூற்றப்பட்டும் இருந்திருப்பார். உயிர் ஆபத்தின் மத்தியில் கொழும்பில் தமிழ்மக்களுக்காக சிங்கள ஊடகங்களில் கூட நேரடி விவாதம் புரிந்ததெல்லாம் மறக்கப்பட்டிருக்கும்.சிங்கள மக்கள் மத்தியிலும் அவருக்கு இருந்த செல்வாக்கிற்கு சிங்கள அரசிற்கு சார்பாக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டிருந்தால் அமைச்சராகவோ, வெளிநாட்டு உயர்ஸதானிகராகவோ ஆகியிருக்கலாம் . கேவலம் டக்லசுக்கு ஆதரவாக கருத்து எழுதுபவர்களும் அவரைத் தூற்றுகிறார்கள். முட்டாள்கள் கையில் எழுதுகோல் கிடைத்ததைப்போல.

எப்பனும் சரித்திரம் தெரியாதா நிழல் போல கிடக்கு ,குமாரின் கடைசி காலம் பற்றி நான் கதைக்கவில்லை ,முழு தமிழனும் ஒற்றுமைப்பட்டு சரித்திரம் படைத்த தேர்தலில் கூட சேராமல் தனித்து நின்று கட்டுகாசு இழந்தவர் குமார் .

எவ்வவளவு கேவலம் கெட்டவர்களும் அது இலங்கையாகலாம் தமிழ் நாடாகலாம் புலி என்று உச்சரித்தால் சப்பு கட்டும் கூட்டம் தான் இங்கு அதிகம் .உண்மையானவர்களை இனம் காணாமல் ஜால்ரா கோஷ்டிகளை நம்பியதும் புலிகளின் அழிவிற்கு அதுவும் ஒரு காரணாம் .

தராக்கி பற்றி அவருடன் பழகியவர்களை கேட்டால் தெரியும் .எமது போராட்டம் இன்று இந்த நிலைக்கு வர காரணாமாக இருந்தவர்களில் அவரும் ஒருவர் .

  • கருத்துக்கள உறவுகள்
அர்ஜுன், நீங்கள் செய்த  நல்லவற்றை வசதிக்காக மறந்து விட்டு கூடாதவற்றை வடித்தெடுத்து வாதிடுகிறீர்கள். After all எல்லோரும் மனிதர்கள் தானே.தவறுகள்  செய்யாதவரை நான் இன்று வரை கண்டதில்லை. நீங்கள்?
 
யாரைப்பற்றி எழுதினாலும் அவருடன் கூட இருந்த மாதிரி எழுதுகிறீர்கள்.நாங்கள் என்ன செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக நினைக்கிறீகள் போல.

அவனவனை மண்டையில் போடும் போது விசில் அடித்து நியாயப்படித்திவிட்டு  உங்கடை ஆட்களை மற்றவன் போட்டு முடிய ஞானம் பிறக்குது போல ,உந்த தெளிவு அப்ப வந்திருந்தால் எத்தனை உயிரை காப்பாற்றியிருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

அவனவனை மண்டையில் போடும் போது விசில் அடித்து நியாயப்படித்திவிட்டு  உங்கடை ஆட்களை மற்றவன் போட்டு முடிய ஞானம் பிறக்குது போல ,உந்த தெளிவு அப்ப வந்திருந்தால் எத்தனை உயிரை காப்பாற்றியிருக்கலாம் .

இதனை இந்திய,இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து கும்மி அடித்த நீங்களும் சிந்தித்து இருந்தால் புலிகளும் மக்களும் அவர்களின் பலத்தை எதிரியின் மீது செலுத்தி இருக்கலாம்.அதே  நேரம் நாமும் பலம் பெற்றிருக்கலாம்.இந்தப்பக்கத்தையும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.