Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நானும் எழுதியிருந்தேன்

நானே அடிமை

என்னிடம் சுதந்திரம்  கேட்கின்றீர்கள் என்று........ :lol:  :D

விசுகு அண்ணா ஒரு தாயாக இருந்தும் என் பெண் பிள்ளைக்கு ஒரு எல்லைக்கு அப்பால் என்னால் தடைகளை அகற்ற முடியவில்லை. உங்களுக்கே தெரியும் எனது மகள் விரும்பிப்படித்து பெற்ற தொழில் air hostress அதனைத் தொடர நான் அனுமதிக்கவில்லை சில மாதங்களோடே நிறுத்திவிட்டேன். காரணம் நான் சார்ந்த சமூகமும் அதனோடான எங்களது வாழ்வும்.....கண்களுக்குத்தெரியாத கட்டுகள் சமூகவாழ்வோடு இணைத்து எங்களைக்கட்டிப்போட்டிருக்கிறது. மீற முடியாது என்று சொல்லவிரும்பாவிட்டாலும் மீறி அதன் மூலம் எதிர்கொள்ளும் எதிர்வினைகளை ஏற்றுப்போராடும் சக்தி என்னிடம் இல்லை என்பதே உண்மை. ஒரு பெண் பிள்ளை விடயத்திலேயே ஒரு பெண்ணாக இருந்தும் கட்டுகளை உடைக்க முடியாமல் பெண் பிள்ளையின் சுதந்திரத்தை அவளுக்கு அமையப்போகும் எதிர்கால வாழ்வின் நிமித்தம் தடைபோடும் என்னால் எப்படி சுதந்திரத்தை அளவுகோல் வைத்துப் பார்க்கமுடியும்? என்னை சுதந்திரம் என்ற அளவுகோலுக்குள் வைத்துப் பார்த்தால் எங்கள் சமூகத்தில் பலருக்குக் கிடைக்காத எல்லையற்ற சுதந்திம் எனக்கு இருக்கிறது. ஆனால் உலகம் என்ற பரந்த வெளியில் நாங்கள் வெறும் பூச்சியமே.... எங்கள் சமூகத்திற்கு வெளியே நின்று பார்க்கும்போது எங்கள் சுதந்திரம் என்பதை சமூகம் கூட்டு வாழ்வியல் என்ற வட்டங்கள் தமக்குள்ளேயே அடக்கிவிட்டன என்பது புரியும். :rolleyes:

  • Replies 219
  • Views 16.6k
  • Created
  • Last Reply

சஹாரா நான் இதை பல தடவை மீண்டும்மீண்டும் வாசித்து பார்த்தேன். ஆனால் என்னால் இதை நம்ப முடியவில்லை. :(  உங்களது மகள் விரும்பி படித்த தொழில் ஆனபடியால் அவவை தொடர்ந்து வேலை செய்ய விட்டிருக்க வேண்டும்.

Edited by நவீனன்

சாகாறாவாலேயே  முடியவில்லை

ம்ம்ம்

இன்னும் எத்தனை நூறாண்டுகள் போகணும் என்பதை புரிந்து கொள்ளலாம்...... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 கடவுள்தான் காப்பாற்றவேண்டும். :blink:  சுமேரியரையா! ஊரையா! என்பதை உறவுகள்தான் முடிவுசெய்யவேண்டும். :lol:  :D  :o  

உதுதான்...... உப்பிடியான எண்ணம் கொண்டவர்கள்தான் எம் சமூகத்தில் அதிகம். எங்கே தன் மனைவியும் மற்றவரைப் பார்த்துத் திருந்திவிடுவார்கள் என்னும் பயத்தில் மற்றவரை மட்டம் தட்டி உங்கள் உள்வீட்டை அடக்குவது. பிறகெங்க சுதந்திரம்................ :lol: :lol: :lol:

சுமேரியர்களை இனிமேல் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..! :icon_idea:

ஆண்டவர் காப்பாற்றியதால் தான் இவ்வளவு சுதந்திரத்துடன் இருக்கிறேன் இசை. :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா ஒரு தாயாக இருந்தும் என் பெண் பிள்ளைக்கு ஒரு எல்லைக்கு அப்பால் என்னால் தடைகளை அகற்ற முடியவில்லை. உங்களுக்கே தெரியும் எனது மகள் விரும்பிப்படித்து பெற்ற தொழில் air hostress அதனைத் தொடர நான் அனுமதிக்கவில்லை சில மாதங்களோடே நிறுத்திவிட்டேன். காரணம் நான் சார்ந்த சமூகமும் அதனோடான எங்களது வாழ்வும்.....கண்களுக்குத்தெரியாத கட்டுகள் சமூகவாழ்வோடு இணைத்து எங்களைக்கட்டிப்போட்டிருக்கிறது. மீற முடியாது என்று சொல்லவிரும்பாவிட்டாலும் மீறி அதன் மூலம் எதிர்கொள்ளும் எதிர்வினைகளை ஏற்றுப்போராடும் சக்தி என்னிடம் இல்லை என்பதே உண்மை. ஒரு பெண் பிள்ளை விடயத்திலேயே ஒரு பெண்ணாக இருந்தும் கட்டுகளை உடைக்க முடியாமல் பெண் பிள்ளையின் சுதந்திரத்தை அவளுக்கு அமையப்போகும் எதிர்கால வாழ்வின் நிமித்தம் தடைபோடும் என்னால் எப்படி சுதந்திரத்தை அளவுகோல் வைத்துப் பார்க்கமுடியும்? என்னை சுதந்திரம் என்ற அளவுகோலுக்குள் வைத்துப் பார்த்தால் எங்கள் சமூகத்தில் பலருக்குக் கிடைக்காத எல்லையற்ற சுதந்திம் எனக்கு இருக்கிறது. ஆனால் உலகம் என்ற பரந்த வெளியில் நாங்கள் வெறும் பூச்சியமே.... எங்கள் சமூகத்திற்கு வெளியே நின்று பார்க்கும்போது எங்கள் சுதந்திரம் என்பதை சமூகம் கூட்டு வாழ்வியல் என்ற வட்டங்கள் தமக்குள்ளேயே அடக்கிவிட்டன என்பது புரியும். :rolleyes:

சகாரா உங்களை இவ்வளவு சமூகத்துக்குப் பயப்பிடுபவராக நான் எண்ணியிருக்கவில்லை. ஒன்றில் அவரை முதலே வேறு துறையில் படிக்க வைத்திருக்க வேண்டும். அல்லது தொடர்ந்து அவரை அந்த வேலையைச் செய்ய விட்டிருக்க வேண்டும்.

சாகாறாவாலேயே  முடியவில்லை

ம்ம்ம்

இன்னும் எத்தனை நூறாண்டுகள் போகணும் என்பதை புரிந்து கொள்ளலாம்...... :(  :(  :(

என் பிள்ளைகளுக்கு நான் சமூகத்துக்குப் பயந்து எதிர்கால நலனில் அக்கறை காட்டாது இருக்க முடியாது. சமூகம் எதையும் கூறாவிடிலும்கூட நாமாகக் கற்பனைசெய்து எமக்கு நாமே தடைக்கற்களாக இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

வரப்போகும் விமர்சனங்களை நினைக்காமல் படிக்க விட்டிருக்கலாம். தற்போது இன சனத்தின்மீதுள்ள மரியாதையால் முடிவை மாற்றி இருக்கலாம். அதற்கு அவரது மகளும் உடன்பட்டிருக்கலாம். 

இங்கே அவர் சமூகத்தின்மேலுள்ள பயத்தால் இம்முடிவை எடுத்திருக்க முடியாது. ஏனெனில் வெளிநாடுகளில் எவரும் எவருக்கும் பயந்து வாழும் நிலை இல்லை.

ஆகவே தனது இன சனத்துக்காக வல்வை கொடுக்கும் அன்பும் அதன் காரணமாக விளைந்த மரியாதை உணர்வு பாராட்டுதற்குரியது மட்டுமல்ல, போற்றுதற்குரியதுமாகும். :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை ஆகவே தலைப்பு சார்ப்பாக என்னிடமிருந்து எந்தவித கருத்துக்களும் வராது...

பிள்ளைகள் படிப்பு விடையத்தில் முடிவுகளை எடுக்க வேண்டியர்கள் பிள்ளைகளா..பெற்றோரா...பிள்ளைகள் தடம் புரண்டாலும் தட்டிக் கொடுக்க வேண்டியவர்கள் யார்..என்ற கேள்விகள் தான் என் மனத்துக்குள் எழுகிறது...ஒரு பெண் பிள்ளைக்கு சிறந்த பணியை ஆற்றக் கூடிய பொறுப்பு கூடுதலாக தாயிடம் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்..அவர்களே சமுதாயயயயம் என்று தொடங்கினால் பிள்ளைகள் என்ன செய்வார்கள்..

காரணம்...சகராக்காவின் மேல் உள்ள கருத்து...சமுதாயம் என்பது எங்களுக்காக இருக்கிறதே தவிர சமுதாயத்திற்காக எங்களை விருப்பு வெறுப்புக்களை எல்லாம் துலைச்சுட்டு நிற்கவேணும் என்ற அவசியம் இல்லை...உங்கள் துணிவு என்பது என்ன வெறும் எழுத்தோடு முடித்துவிடுகிறீர்களா...இல்லை நான் துணிவான பெண் எனக்கு இருக்கும் துணிவு  என் பிள்ளைக்கு இல்லை என்று நீங்களாவே சமுதாயத்திற்காக அவரது எதிர்காலக் கனவுகளைத் தடுத்தீர்களா..

வார்த்தைக்கு வார்த்தை துணிவு அது இது என்று புரணாம் பாடும் நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையையே நம்ப முடிய இல்ல..

நான் இவற்றைச்  கேட்க வர ஆ..யாயினி தொடங்கிட்டாள் என்று யாரும் என்னை சப்பித் துப்பாதீர்கள்..பிள்ளைகள் தவறான வளிகளில் போகிறார்கள் தான் இல்லை என்று சொல்ல வர இல்ல...எல்லாப் பிள்ளைகளும் தவறானவளிக்கு போய்விடுவார்கள் என்ற மாயையில் வாழதீர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

சஹாரா நான் இதை பல தடவை மீண்டும்மீண்டும் வாசித்து பார்த்தேன். ஆனால் என்னால் இதை நம்ப முடியவில்லை. :(  உங்களது மகள் விரும்பி படித்த தொழில் ஆனபடியால் அவவை தொடர்ந்து வேலை செய்ய விட்டிருக்க வேண்டும்.

நவீனன் எனது மகள் விரும்பிப் படித்திருந்தாலும் நடைமுறைச்சாத்தியங்களில் நிறையச் சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிய நிலைகளைத் தோற்றுவிக்கக்கூடிய அதிகூடிய பிரச்சனைகளை தரக்கூடிய பணி என்பதை உங்களால் மறுக்கமுடியாது. திருமணவயதில் இருக்கும் அவரைப்பற்றிய தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்க்கவேண்டியது ஒரு தாயின் கடமை இல்லையா.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சாகாறாவாலேயே  முடியவில்லை

ம்ம்ம்

இன்னும் எத்தனை நூறாண்டுகள் போகணும் என்பதை புரிந்து கொள்ளலாம்...... :(  :(  :(

சகாறா என்பவள் சட்டங்களை ஆளும் சர்க்கரவர்த்தினி இல்லை விசுகு அண்ணா சாதாரண சமூகவிலங்குதான். நூறாண்டு தேவையில்லை ஒரு பத்தாண்டு போதும் விருப்பப்பட்டு மறுக்கவில்லை என்பது என்னை அறிந்தவர்களுக்குப் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன் எனது மகள் விரும்பிப் படித்திருந்தாலும் நடைமுறைச்சாத்தியங்களில் நிறையச் சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிய நிலைகளைத் தோற்றுவிக்கக்கூடிய அதிகூடிய பிரச்சனைகளை தரக்கூடிய பணி என்பதை உங்களால் மறுக்கமுடியாது. திருமணவயதில் இருக்கும் அவரைப்பற்றிய தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்க்கவேண்டியது ஒரு தாயின் கடமை இல்லையா.... :rolleyes:

ஒரு தாயின் மேலான கடமையில் ஒன்று இன்றைய காலத்திற்கு ஏற்ப தனது மகளின் கனவுகளையும் மதிக்கவும் அதேநேரம் அவளது திறனை மற்றவர்களுக்காகவும் உறவுகளுக்காகவும் பறித்தல் அல்லது மறைத்தல் கூட மகளுக்கு செய்யும் அம்மாவின் ஓரவஞ்சம்தானே.

திருமணம் தான் பெண்ணின் வாழ்வில் நிறைவு அல்ல. திருமணம் ஒரு அங்கமே தவிர அதுவே முடிவு அல்ல.

சகாரா உங்கள் முடிவு உங்கள் சுயவிருப்பம். ஆனால் பெண் பிள்ளை என்பதற்காக அவளது தெரிவை மறுக்கும் அம்மாவாக உங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ற கல்வியும் தொழிலும் இருந்தால் உலகில் எந்த மூலையிலும் ஒரு பெண்ணென்ன ஆணென்ன யாராலும் சாதிக்க முடியும். இதனை சமூகம் சம்பிரதாயம் என்ற வரையறைக்குள் முடக்கி எங்கள் பிள்ளைகளின் கனவுகளை சிதைக்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா உங்களை இவ்வளவு சமூகத்துக்குப் பயப்பிடுபவராக நான் எண்ணியிருக்கவில்லை. ஒன்றில் அவரை முதலே வேறு துறையில் படிக்க வைத்திருக்க வேண்டும். அல்லது தொடர்ந்து அவரை அந்த வேலையைச் செய்ய விட்டிருக்க வேண்டும்.

என் பிள்ளைகளுக்கு நான் சமூகத்துக்குப் பயந்து எதிர்கால நலனில் அக்கறை காட்டாது இருக்க முடியாது. சமூகம் எதையும் கூறாவிடிலும்கூட நாமாகக் கற்பனைசெய்து எமக்கு நாமே தடைக்கற்களாக இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

எனது வாழ்வை நன்றாக அறிந்தவர்கள் ஒரு காலமும் நான் சமூகத்திற்குப் பயப்படுவதாகக் கொள்ளமாட்டார்கள் சுமே. தற்சமயம் இது ஒரு தற்காலிகத்தடைதான் மற்றது இது ஒரு உதாரணத்திற்குத்தான் இவ்விடத்தில் பதிவிட்டேன் ஏனெனில் முழுமையான சுதந்திரத்தை வெளிப்படுத்தும் ஒரு நிர்மலமான நிலைக்கு இன்னும் எங்களுடைய சமூகம் தயாராகவில்லை. சுதந்திரம் என்ற சொல் எமக்கு எழுதத் தேவையாக இருக்கிறது. சுதந்திரம் என்று பேசி சொந்த வாழ்க்கையைச் சுட்டுக் கொண்ட பெண்கள் ஏராளம் சுமே. அதிகம் பேச முற்படும்போது காயப்படுவதும் அதிகமாக இருக்கும். இந்தக்களத்தில் பலரும் மரியாதை கருதி வெளிப்படையாகப் பேசவில்லை என்று தோன்றுகிறது. :)

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை ஆகவே தலைப்பு சார்ப்பாக என்னிடமிருந்து எந்தவித கருத்துக்களும் வராது...

பிள்ளைகள் படிப்பு விடையத்தில் முடிவுகளை எடுக்க வேண்டியர்கள் பிள்ளைகளா..பெற்றோரா...பிள்ளைகள் தடம் புரண்டாலும் தட்டிக் கொடுக்க வேண்டியவர்கள் யார்..என்ற கேள்விகள் தான் என் மனத்துக்குள் எழுகிறது...ஒரு பெண் பிள்ளைக்கு சிறந்த பணியை ஆற்றக் கூடிய பொறுப்பு கூடுதலாக தாயிடம் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்..அவர்களே சமுதாயயயயம் என்று தொடங்கினால் பிள்ளைகள் என்ன செய்வார்கள்..

காரணம்...சகராக்காவின் மேல் உள்ள கருத்து...சமுதாயம் என்பது எங்களுக்காக இருக்கிறதே தவிர சமுதாயத்திற்காக எங்களை விருப்பு வெறுப்புக்களை எல்லாம் துலைச்சுட்டு நிற்கவேணும் என்ற அவசியம் இல்லை...உங்கள் துணிவு என்பது என்ன வெறும் எழுத்தோடு முடித்துவிடுகிறீர்களா...இல்லை நான் துணிவான பெண் எனக்கு இருக்கும் துணிவு  என் பிள்ளைக்கு இல்லை என்று நீங்களாவே சமுதாயத்திற்காக அவரது எதிர்காலக் கனவுகளைத் தடுத்தீர்களா..

வார்த்தைக்கு வார்த்தை துணிவு அது இது என்று புரணாம் பாடும் நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையையே நம்ப முடிய இல்ல..

நான் இவற்றைச்  கேட்க வர ஆ..யாயினி தொடங்கிட்டாள் என்று யாரும் என்னை சப்பித் துப்பாதீர்கள்..பிள்ளைகள் தவறான வளிகளில் போகிறார்கள் தான் இல்லை என்று சொல்ல வர இல்ல...எல்லாப் பிள்ளைகளும் தவறானவளிக்கு போய்விடுவார்கள் என்ற மாயையில் வாழதீர்கள்..

இந்தப்பதில் அந்தத் தலைப்பிற்குச் சம்பந்தமில்லாதது

ஆக விமானப்பணிப்பெண்ணாக வேலைக்குச் செல்ல அனுமதியை மறுக்கிறேன் என்பது உங்களுக்குத் தவறாக இருக்கலாம். ஆனால் அந்தப்பணியைத் தடுத்திருந்தாலும் வீட்டிற்குள் முடக்கி வைக்கவில்லை இன்னொரு திசையில் அவருடைய படிப்புத் தொடர்கிறது. சுதந்திரம் துணிவு என்பது ஏற்றம் கொடுப்பதாக அமைக்கப்படவேண்டும் ஒரு பெண்ணிற்கு வீழ்ச்சியைக் கொடுப்பதாகவும், தவறான கண்ணோட்டத்தை வழங்குவதாகவும் இருப்பதை அனுமதிக்கமுடியாது. ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயாரில்லாதவர்கள் அதில் தொடர்ந்து பயணிக்கமுடியாது யாயினி. 

நவீனன் எனது மகள் விரும்பிப் படித்திருந்தாலும் நடைமுறைச்சாத்தியங்களில் நிறையச் சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிய நிலைகளைத் தோற்றுவிக்கக்கூடிய அதிகூடிய பிரச்சனைகளை தரக்கூடிய பணி என்பதை உங்களால் மறுக்கமுடியாது. திருமணவயதில் இருக்கும் அவரைப்பற்றிய தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்க்கவேண்டியது ஒரு தாயின் கடமை இல்லையா.... :rolleyes:

உண்மை தான். ஆனால் நீங்களும் உங்கள் மகளும் இது பற்றி முதலே யோசிக்கவில்லையா?

ஏன் அவ வேறு ஒரு துறையில் முதலே படித்து இருக்கலாம் தானே.

மேலும் உங்களை பற்றி இருந்த கணிப்பு உடைந்து விட்டது. அதாவது யாயினி கூறியது போல் துணிவு தன்நம்பிக்கை உள்ள ஒருவர் என்று நினைத்திருந்தேன்.

அடுத்து எமது சமுகத்துக்கு பயப்பட வெளிக்கிட்டால் நாம் எமது பிள்ளைகளை வீட்டிற்குள் தான் வைத்து கொண்டு இருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரப்போகும் விமர்சனங்களை நினைக்காமல் படிக்க விட்டிருக்கலாம். தற்போது இன சனத்தின்மீதுள்ள மரியாதையால் முடிவை மாற்றி இருக்கலாம். அதற்கு அவரது மகளும் உடன்பட்டிருக்கலாம். 

இங்கே அவர் சமூகத்தின்மேலுள்ள பயத்தால் இம்முடிவை எடுத்திருக்க முடியாது. ஏனெனில் வெளிநாடுகளில் எவரும் எவருக்கும் பயந்து வாழும் நிலை இல்லை.

ஆகவே தனது இன சனத்துக்காக வல்வை கொடுக்கும் அன்பும் அதன் காரணமாக விளைந்த மரியாதை உணர்வு பாராட்டுதற்குரியது மட்டுமல்ல, போற்றுதற்குரியதுமாகும். :)

சமூகத்துக்காக எம் நியாயமான ஆசைகளையும் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்களையும் அன்பு என்றும் மரியாதை என்றும் போலிக் காரணங்கள் காட்டித் தடுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு நிலை வரின் நானோ என் கணவரோ அந்த இனசனத்தின் விமர்சனங்களை காதுகொடுத்தும் கேட்க மாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். ஆனால் நீங்களும் உங்கள் மகளும் இது பற்றி முதலே யோசிக்கவில்லையா?

ஏன் அவ வேறு ஒரு துறையில் முதலே படித்து இருக்கலாம் தானே.

மேலும் உங்களை பற்றி இருந்த கணிப்பு உடைந்து விட்டது. அதாவது யாயினி கூறியது போல் துணிவு தன்நம்பிக்கை உள்ள ஒருவர் என்று நினைத்திருந்தேன்.

அடுத்து எமது சமுகத்துக்கு பயப்பட வெளிக்கிட்டால் நாம் எமது பிள்ளைகளை வீட்டிற்குள் தான் வைத்து கொண்டு இருக்க வேண்டும்.

இதற்குப் பதில் அளிப்பது கடினமானது நவீனன்

சரி என்னுடைய கருத்திற்கு பதில் அளிப்பதை விட்டுட்டு சுமெயின் திரிக்குப் பதில் அளியுங்கோ..... கணவன் மனைவிக்கு வழங்கும் சுதந்திரம் எவ்வளவு தூரம் கிடைக்கும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பதில் அந்தத் தலைப்பிற்குச் சம்பந்தமில்லாதது

ஆக விமானப்பணிப்பெண்ணாக வேலைக்குச் செல்ல அனுமதியை மறுக்கிறேன் என்பது உங்களுக்குத் தவறாக இருக்கலாம். ஆனால் அந்தப்பணியைத் தடுத்திருந்தாலும் வீட்டிற்குள் முடக்கி வைக்கவில்லை இன்னொரு திசையில் அவருடைய படிப்புத் தொடர்கிறது. சுதந்திரம் துணிவு என்பது ஏற்றம் கொடுப்பதாக அமைக்கப்படவேண்டும் ஒரு பெண்ணிற்கு வீழ்ச்சியைக் கொடுப்பதாகவும், தவறான கண்ணோட்டத்தை வழங்குவதாகவும் இருப்பதை அனுமதிக்கமுடியாது. ஒரு நீண்ட போராட்டத்திற்கு தயாரில்லாதவர்கள் அதில் தொடர்ந்து பயணிக்கமுடியாது யாயினி. 

சகாரா எனக்கு இப்போது வேறு சந்தேகம். நீங்கள் எழுதுவதில் சுதந்திரம் உங்கள் வாழ்வில் கிடைக்கிறதா??? அதாவது உங்கள் உரிமையை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்துக்கொண்டு இருப்பவரா???அல்லது சுதந்திரமாக இருப்பவரா????? :D :D

இதற்குப் பதில் அளிப்பது கடினமானது நவீனன்

நன்றி சகாரா, இதற்கு மேல் இது பற்றி கருத்தாடி உங்களை இடைஞ்சல் படுத்த விரும்பவில்லை.

உங்கள் மகள் வேறு ஒரு துறையில் படிப்பதையிட்டு சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா எனக்கு இப்போது வேறு சந்தேகம். நீங்கள் எழுதுவதில் சுதந்திரம் உங்கள் வாழ்வில் கிடைக்கிறதா??? அதாவது உங்கள் உரிமையை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்துக்கொண்டு இருப்பவரா???அல்லது சுதந்திரமாக இருப்பவரா????? :D :D

கலோ சுமே இப்படி நம்ம தலையிலேயே கைவைக்கக்கூடாது. :lol:

காரணம்...சகராக்காவின் மேல் உள்ள கருத்து...சமுதாயம் என்பது எங்களுக்காக இருக்கிறதே தவிர சமுதாயத்திற்காக எங்களை விருப்பு வெறுப்புக்களை எல்லாம் துலைச்சுட்டு நிற்கவேணும் என்ற அவசியம் இல்லை...

போராளிகள் விடயத்திலும் இதுதான் உங்கள் கருத்தா?!

வார்த்தைக்கு வார்த்தை துணிவு அது இது என்று புரணாம் பாடும் நீங்கள் ஏன் உங்கள் பிள்ளையையே நம்ப முடிய இல்ல..

நான் இவற்றைச்  கேட்க வர ஆ..யாயினி தொடங்கிட்டாள் என்று யாரும் என்னை சப்பித் துப்பாதீர்கள்..பிள்ளைகள் தவறான வளிகளில் போகிறார்கள் தான் இல்லை என்று சொல்ல வர இல்ல...எல்லாப் பிள்ளைகளும் தவறானவளிக்கு போய்விடுவார்கள் என்ற மாயையில் வாழதீர்கள்..

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

சுமே ஒன்றைக் கவனத்தில் எடுக்கவேண்டும் 2008 இல் முகந்தெரியாத யாழ்கருத்துக்கள நண்பர் வட்டத்தையே என் வீட்டுக்கு அழைத்து சந்திப்பை செய்தவள். எழுத்தைக் காட்டிலும் செயலில் சுதந்திரம் அதிகம் உண்டு தாயேஃ :D

யாயினி, on 20 Oct 2013 - 12:39 PM, said:snapback.png

இதை ஏன் யாயினி எழுதினா என்பது புரியவில்லையே... சோழியன் யாயினியின் பதிவில் இப்படி இல்லையே...?

சமூகத்துக்காக எம் நியாயமான ஆசைகளையும் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றங்களையும் அன்பு என்றும் மரியாதை என்றும் போலிக் காரணங்கள் காட்டித் தடுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படி ஒரு நிலை வரின் நானோ என் கணவரோ அந்த இனசனத்தின் விமர்சனங்களை காதுகொடுத்தும் கேட்க மாட்டோம்.

உண்மையை கூறுங்கள்.. நீங்கள் வீட்டில் இருக்கும்போது வரும் உறவினர்களுக்கோ அல்லது விருந்தினர்களுக்கோ உங்கள் கணவர் தேனீர் போட்டுக் கொடுப்பாரா?  :o

இதற்குப் பதில் அளிப்பது கடினமானது நவீனன்

சரி என்னுடைய கருத்திற்கு பதில் அளிப்பதை விட்டுட்டு சுமெயின் திரிக்குப் பதில் அளியுங்கோ..... கணவன் மனைவிக்கு வழங்கும் சுதந்திரம் எவ்வளவு தூரம் கிடைக்கும்?

சுமேயின் திரிக்கு என்ன பதில் சொல்வது?

பெண்களுக்கு என்ன சுதந்திரம் எமது சமுதாயத்தில் இருக்கு என்பது அப்பட்டமாக மேலே உள்ள கருத்துக்கள் விடை பகிருது.

Edited by நவீனன்

சுமே ஒன்றைக் கவனத்தில் எடுக்கவேண்டும் 2008 இல் முகந்தெரியாத யாழ்கருத்துக்கள நண்பர் வட்டத்தையே என் வீட்டுக்கு அழைத்து சந்திப்பை செய்தவள். எழுத்தைக் காட்டிலும் செயலில் சுதந்திரம் அதிகம் உண்டு தாயேஃ :D

யாயினி, on 20 Oct 2013 - 12:39 PM, said:snapback.png

இதை ஏன் யாயினி எழுதினா என்பது புரியவில்லையே... சோழியன் யாயினியின் பதிவில் இப்படி இல்லையே...?

காரணம்...சகராக்காவின் மேல் உள்ள கருத்து...சமுதாயம் என்பது எங்களுக்காக இருக்கிறதே தவிர சமுதாயத்திற்காக எங்களை விருப்பு வெறுப்புக்களை எல்லாம் துலைச்சுட்டு நிற்கவேணும் என்ற அவசியம் இல்லை... என்ற யாயினியின் கருத்துக்கு,

போராளிகள் விடயத்திலும் இதுதான் உங்கள் கருத்தா?! ... என்று கேட்டிருக்கிறேன். ஏனெனில் சமுதாயத்திற்காக தங்களைத் தொலைத்தவர்கள்தானே அவர்கள்_!

  • கருத்துக்கள உறவுகள்

சோளியன் அண்ணா..தயவு செய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..குறிப்பிட்ட இந்த திரிக்குள் நான் உட்பட யாரும் போராளிகள் பற்றி எழுத இல்ல..எனவே அவர்களை அவர்களாகவே இருக்க விட்டுவிடுவோம்..

தேசிய தலைவருக்கு பலத்த பாதுகாப்பு இருந்தது. அவர் நினைத்தாலும் தனியாக செல்ல முடியாது. அதற்காக அவருக்கு சுதந்திரம் இல்லை என்று கூறிவிட முடியுமா? பெண் சமூகத்தின் உற்பத்திக்கான காரணி என்பதால் சமூகமானது பாதுகாப்புக்காக சில கட்டுப்பாடுகளை விதித்தால் அவற்றை எப்படி அடக்குமுறை என்று கூறமுடியும்?

சோளியன் அண்ணா..தயவு செய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்..குறிப்பிட்ட இந்த திரிக்குள் நான் உட்பட யாரும் போராளிகள் பற்றி எழுத இல்ல..எனவே அவர்களை அவர்களாகவே இருக்க விட்டுவிடுவோம்..

நீங்கள் சமூகம்பற்றி எழுதியதால் சமூகத்துக்காக புறப்பட்ட அவர்களும் வந்தார்கள்.  :D  ஒரு கருத்தானது சமூகத்தை குறிக்கும்போது அது சகலதையும்தானே அடக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.