Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாற்றமடிக்கும் வியர்வையும் டியோடரன்டஸ்; பாவனையும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டியோடரன்டஸ் Deodorants என்பது இப்பொழுது, சீப்புப் பவுடர் போலாகிவிட்டது. வீட்டுப் பாவனைப் பொருள் போல எங்கும் கிடைக்கின்றன. யாருக்குத்தான் மற்றவர்கள் முன்னால் தங்களது உடல் நாற்றத்துடன் போய் நிற்க மனதிருக்கும். 

deodorant.jpg

நாற்றமும் நறுமணமும்

"அரசியின் கூந்தல் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா" ஆராய்ந்து பார்த்த கதைகள் நினைவிற்கு வருகிறதா? அந்தக் காலத்தில் அரசிகள் முடிக்கு மட்டுமே தேடிய வாசனைத் திரவியங்கள் இன்று தொழிலாளர்களின் அக்குளுக்கும் அவசியமாகிவிட்டன. சந்தை வாய்ப்புகளும் விற்பனையும் அமோகமாக இருக்கின்றன.

india_hair_decoration_styling_jasmine_fl

அக்குள் மணத்திற்கும் பொதுவான உடல் மணத்திற்கு காரணம் வியர்வையாகும். ஆனால் இயற்கையாக வியர்வை மணப்பதில்லை. வியர்வையில் நீரும் சில உப்புக்களும் மட்டுமே இருக்கின்றன. இவற்றில் எந்த மணமும் கிடையாது. ஆனால் சுரக்கும் அந்த வியர்வையில் பக்றீரியா கிருமிகள் பெருகும்போதே மணம் ஏற்படுகிறது.

நாற்றமற்ற வியர்வைக்குக் காரணம் என்ன?

"எல்லோருக்குமே வியர்க்கிறது, எல்லோரது உடலிலும் கிருமிகள் இருக்கலாம் ஆனால் ஏன் எல்லோரது வியர்வையும் மணப்பதில்லை" என்ற எண்ணம் உங்கள் மனதில் எழுந்திருக்கும். வியர்வையில் மணம் ஏற்படுவதானது எமது மரபணு சார்ந்தது.

Woman-holding-nose.jpg

அதைக் கொடுப்பற்குக் காரணமாக இருப்பது ABCC11 என்ற மரபணுவாகும். ஆனால் சிலரில் இந்த மரபணுவானது சிறிய மாற்றங்களுடன் செயலற்று இருப்பதுண்டு. அவ்வாறான மரபணு மாற்றமுற்றவர்களின் வியர்வை மணப்பதில்லை. மிகுதியான பெரும்பாலானவர்களுக்கு மணக்கவே செய்யும்

jid201314i1.jpg

University of Bristol  லில் ஒரு ஆய்வானது 6,495  பெண்களிடையே செய்யப்பட்டது. இந்த ஆய்வின் பிரகாரம் மிகச் சிறிய எண்ணிக்கையானோருக்கு மட்டும் (2% -117 out of 6,495) அவ்வாறான மாற்றமுற்ற மரபணு இருந்தமை கண்டறியப்பட்டது. அதன் அர்த்தம் அவர்களது அக்குள் வியர்வையில் நாற்றம் இல்லை என்பதாகும்.

ஆய்வின் ஆச்சரியமான அம்சங்கள் இனித்தான் காத்திருக்கிறது.

  • இந்த ஆய்விற்கு உட்பட்டவர்களில் 117 பேரது வியர்வை மட்டுமே நாற்றமற்றது. அதை விகிதாசார ரீதியில் நோக்கினால் ஒவ்வொரு 50 பேருக்கு ஒருவரது வியர்வையே உடல் நாற்றம் அற்றதாகும்.
  • நாற்றமான வியர்வை சுரப்பவர்களில் 5 சதவிகிதமானவர்கள் டியோடரன்டஸ்  எதையும் உபயோகிப்பதில்லை.
  • வியர்வையில் நாற்றம் அற்றவர்களில் சுமார் 20 சதவிகிதமானவர்களும் டியோடரன்டஸ்  எதையும் உபயோகிப்பதில்லை. அதற்கான அவசியம் அவர்களுக்கு இல்லாததால் அது ஓரளவு எதிர்பார்க்கக் கூடியதே.
  • ஆனால் வியர்வை நாற்றமற்றவர்களில் சுமார் 78 சதவிகிதமானவர்களும் டியோடரன்டஸ் உபயோகிப்பதாக ஆய்வு கூறியது.

இதை இலகுவான மொழியில் சொன்னால் எப்படி இருக்கும். சமூகத்தில் பெரும்பாலானவர்களின் வியர்வையில் நாற்றமிருக்கிறது. இருந்தபோதும் அவர்களில் சிலர் தமது அக்குள் வியர்வை நாற்றத்தை மறைக்க வாசனைத் திரவியங்களை உபயோகிப்பதில்லை. ஆனால் அக்குள் வியர்வை நாற்றம் அற்றவர்களில் மிகக் குறைந்தவர்களே தமக்கு நாற்றமில்லை என்பதை உணர்ந்து டியோடரன்டஸ் உபயோகிப்பதில்லை. 

1-s2.0-S1748681509004872-gr3.jpg

மந்தை ஆடுகள் போல மனிதர்களும்

ஆனால் மிகப் பெரும்பான்னையான வியர்வை நாற்றமற்றவர்கள் மந்தை ஆடுகளை போல மற்றவர்களை பின்பற்றுகிறார்கள். அதாவது எந்தத் தேவையுமற்று டியோடரன்ஸ்சை உபயோகிக்கிறார்கள் என்பதுதான்.

இவர்கள் இப்படியாக தேவையற்றபோதும் டியோடரன்டஸ் உபயோகிப்பதற்குக் காரணம் என்ன? சமூகப் பழக்க வழக்கங்கள்தான். சமூகத்தில் பலரும் நாகரீகம் எனக் கருதுவதை தாமும் மறுகேள்வியின்றிப் பின்பற்றுகிறார்கள் என நினைக்கிறேன். மற்றொரு காரணம் ஊடகங்களின் விளம்பர உத்திகளைப் புரிந்து கொள்ளாமல் கடைப்பிடிப்பதாகவும் இருக்கலாம்.

இது மேலை நாட்டில் செய்யப்பட்ட (University of Bristol) ஆய்வாகும். 'வடஆசிய நாட்டவர்கள் பெரும்பாலும் டியோடரன்டஸ் உபயோகிப்பதில்லை. அதற்கான தேவை அவர்களுக்கு இல்லை' என அந்த ஆய்வுக்குழுவின் தலைவரான Professor Ian Day கூறினார். தெற்காசிய நாட்டவர்களான எங்களைப் பற்றி அந்த ஆய்வு எதையும் தனியாக எடுத்துரைக்கவில்லை. 

காதில் கற்குடுமி

இந்த ஆய்வின்போது வியர்வையுடன் தொடர்பற்ற மற்றொரு விடயமும் தெரிய வந்தது. அது காதுக் குடுமி பற்றியது. பொதுவாகக் காதுக்குடுமி என்பது பசை போன்ற தன்மையானதாகும். ஆனால் மிகச் சிலரில் அது எப்பொழுதும் காய்ந்து இறுகி 'கற்குடுமி' யாகத் தொல்லை கொடுக்கும். அவர்களுக்கும்

நாற்றமற்ற வியர்வையுள்ளவரின் அதே மாற்றமுற்ற ABCC11 மரபணு இருக்கிறதாம்.

000.png

ஆம் இயற்கை விசித்திரமானதுதான். கற்குடுமி என்ற தொல்லை ஒருசிலருக்கு கொடுத்துவிட்டு அதனை நட்ட ஈடு கொடுப்பதுபோல நாற்றமற்ற வியர்வையைக் கொடுத்திருக்கிறது.

தனித்துவமான உடல் மணங்கள்

பெரும்பாலானவர்களது உடலில் மணம் இருந்தாலும் எல்லோரது வியர்வையும் ஒரே மணத்தைக் கொடுப்பதில்லை. கைவிரல் அடையாளம்போலத் தனித்துவமானது. சில மணங்கள் மற்றவர்கள் ஆகர்ஸப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் சிலரது மணங்கள் மற்றவர்களை கிட்ட நெருங்க விடாது விலக வைத்துவிடுகின்றன.

அவ்வாறு கடுமையான உடல் நாற்றம் உண்டாவதை bromhidrosis என மருத்துவத்தில் கூறுவர்.

உடல் மணத்தைக் குறைக்க வழிகள்

உடல் மணமானது ஒவ்வொருவருக்கும் தனித்துவமான போதும் அதன் 

வீச்சை நாம் சில நடைமுறைகள் மூலமாகச் குறையச் செய்யலாம்.

எடையைக் குறைப்பது முக்கியமானது. அதீத எடையானது உடலின் செயற்பாட்டிற்கு அதிக சிரமத்தைக் கொடுக்கிறது. சிரமப்படும் உடல் அதீதமாக வியர்க்கிறது. அதனால் உடல் மணம் மோசமாகும். எனவே எடையைக் குறைப்பதானது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதுடன் மணத்தையும் குறைக்கிறது.

தினமும் குளியுங்கள். முக்கியமாக வேலை முடிந்த பின்னர் குளிப்பது மிகவும் அவசியம். கிருமி கொல்லி சோப் வகைகளை உபயோகிக்க வேண்டியதில்லை. வழமையான சோப் போதுமானது. Soap free wash மேலும் நல்லது

ஆடைகளை இயற்கையான துணியிலானதாக தேர்ந்தெடுங்கள். செயற்கை இழையத்திலான ஆடைகள் ஈரலிப்பை உறிஞ்ச முடியாதலால் வியர்வை தேங்கி நிற்கும் அதிக மணத்தைக் கொடுக்கலாம். தினமும் ஆடைகளை மாற்றுங்கள்.

bodyodor-causes.gif

உணவைப் பொறுத்த வரையில் ஆடு மாடு போன்றவற்றின் இறைச்சிகள் 

(Red meat) அதிக மணத்தைக் கொடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதே போல இஞ்சி, மிளகு, மீன், போன்றவையும் உடல் மணத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. மதுபானமும் அவ்வாறே.

ஆனால் அதிகளவு நீர் அருந்துவதும், உணவில் அதிகளவில் பழங்களையும் காய்கறிகளையும் சேர்ப்பது நல்லது. தீட்டாத தானியங்களும் நல்லது என்கிறார்கள்.

அவற்றிற்கு மேலாக அவசரம், அந்தரம் பதற்றம், பதகளிப்பு போன்றவை மன அமைதியைக் குலைத்து வியர்வையை அதிகமாக்கி மணத்தை ஏற்படுத்தலாம். முன அமைதிப் பயிற்சிகள், யோகாசனம், தியானம் போன்றவையும் உதவும்.

0.0.0.0.0.0

'நீ என்ன Deodorants பாவிக்கிறாய். நல்ல வாசமாக இருக்கு' எனக் காதலியை முகத்திற்கு நேரே கேட்கும் அளவிற்குக் காலம் மாறிவிட்டது. அவற்றின் பாவனை அந்தளவிற்கு அதிகரித்துவிட்டது.

அழகிற்கு அழகு சேர்ப்பது என்றிருந்தவை அலங்கோலங்களை அலங்கரிப்பாக மாற்றவும் செய்கின்றன. தங்கள் அழகுகளை அலங்கோலமாக மாற்றுகிறோம் என்பது தெரியாமல் செய்பவர்களும் இருக்கிறார்கள். 

எங்களை நாங்களே அழகு படுத்தவும், மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பதற்கும் என பலவிதமான அழகுசாதனப் பொருட்கள் சந்தைகளை நிறைக்கின்றன.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col) 

குடும்ப மருத்துவர்

http://hainallama.blogspot.ca/2013/10/blog-post_16.html

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடையள் திருந்திறதுக்கு நிறைய இடமிருக்கிது. :D

  • கருத்துக்கள உறவுகள்

தேவையோ.. இல்லையோ.. இந்தமாதிரி சில விடயங்களை ரோபாட் மாதிரி செய்து பழக்கமாகிவிட்டது.. :blink:

வியர்வை இருக்கட்டும். 
 
யானை வரும் பின்னே கறி மண‌ம் வரும் முன்னே என்பது போல் சிலர் - பலர் நிலமை.
 
எப்ப திருந்துவார்களோ ?
  • கருத்துக்கள உறவுகள்

வியர்வை இருக்கட்டும்.

யானை வரும் பின்னே கறி மண‌ம் வரும் முன்னே என்பது போல் சிலர் - பலர் நிலமை.

எப்ப திருந்துவார்களோ ?

வீட்டில் சமைக்கும்போது உடுப்புக்களை பாதுகாப்பாக ஒதுக்காமல் விடுவது.. தமிழ்க்கடை மணம், சமையலின்போது நல்ல vent fan (650 cfm minimum) இப்படி பாவிக்காமல் விடுவது என்று பல காரணங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் வியர்வையை விட... பெண்களின் வியர்வை, நல்ல வாசனையாக இருப்பது ஏன்...? :D  :icon_idea:

ஆண்களின் வியர்வையை விட... பெண்களின் வியர்வை, நல்ல வாசனையாக இருப்பது ஏன்...? :D  :icon_idea:

நெப்போலியன் போல இருக்க ஆசைப்படுகிறேன். 

 

"Will return to Paris tomorrow evening. Don't wash."

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் வியர்வையை விட... பெண்களின் வியர்வை, நல்ல வாசனையாக இருப்பது ஏன்...? :D  :icon_idea:

கிளர்ச்சியோடு பெண்களைப் பார்த்துக் கிட்ட நெருங்கினால் அவர்களின் வியர்வை வாசனை ஆண்களை ஈர்க்குமாம். :wub:  ஆண்களும் தேன்கூட்டைப் பார்த்த நரி மாதிரி கிறங்கிப் போய் நிற்பார்களாம். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்தலுக்கு நன்றி nunavilan.

ஆண்களின் வியர்வையை விட... பெண்களின் வியர்வை, நல்ல வாசனையாக இருப்பது ஏன்...? :D  :icon_idea:

 

Sex Pheromones.

 

 

http://www.scientificamerican.com/article.cfm?id=pheromones-sex-lives

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.