Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இசைப்பிரியா விடயத்தில் பெண்கள் அமைப்புக்கள் மௌனம் காப்பது ஏன்? அரியநேத்திரன் எம்.பி. கண்டனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியா விடயத்தில் பெண்கள் அமைப்புக்கள் மௌனம் காப்பது ஏன்? அரியநேத்திரன் எம்.பி. கண்டனம்!

[Monday, 2013-11-04 10:22:33]
ariyaneththiran-seithy-2-150.jpg

இசைப்பிரியா காணொளி விவகாரம் உலகமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் பெண்ணொருவருக்கு இழைக்கப்பட்ட உயர்ந்த கொடூரத்தை பார்த்திருந்தும் இலங்கையிலுள்ள எந்த ஒரு மாதர் அமைப்பும் பெண்ணுரிமை சங்கங்களும் தமது கண்டனத்தை தெரிவிக்காமை கவலை தருகின்ற விடயமாகும் என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தனது கருத்தைத் தெரிவிக்கையில்; இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட கொடுமையை சாதாரண ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையாகப் பார்க்கப்பட வேண்டும். இலங்கையில் எத்தனையோ மாதர் அமைப்புக்கள் பெண்ணுரிமை சங்கங்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு காரணங்களுக்கு குரல் கொடுக்கும் இந்த பெண்கள் அமைப்புக்கள் இசைப்பிரியாவுக்கு இழைத்த இந்தக் கொடுமையை பார்த்தும் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்ணுரிமை மாதர் உரிமை அரசியல் உரிமை ஆண்களுக்கு நிகரான சமத்துவ உரிமைக்காக போராடி வருகின்றோமென்று கூறிக்கொள்ளும் இந்த பெண்கள் அமைப்புக்கள் இத்தகைய கொடூரத்தை கண்டும் கூட ஜனநாயக ரீதியான தமது கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை. இசைப்பிரியா ஒரு போராளி என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு அவரை நிர்வாணமாக்கி பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கி அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

நாகரீகத்தன்மையுள்ள எந்த மனிதனும் செய்யத்தகாத செயலை இந்த காட்சி மூலம் காணமுடிகிறது. இது மனித குல நாகரீகத்துக்கே இழுக்குத்தரும் செயல் என்பதை இலங்கையிலுள்ள பெண்ணுரிமை அமைப்புக்களும் உலகநாடுகளின் அமைப்புக்களும் ஜனநாயக வழியிலாவது இதைக்கண்டிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி - செய்தியிணையம்

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் குறிப்பா London ராஜேஷ் அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் குறிப்பா London ராஜேஷ் அக்கா

அவ அமேஷன் காடுகளில் உள்ள பெண் குரங்குகள் வல்லுறவு கொள்ளபடுவது சம்மந்தமாக அறிக்கை தயாரிக்கிறா பொறுங்க சுண்டல் பிறதர். ஆறுதலா எப்படி நம்மடைய விடயத்தில் நஞ்சை கக்குவது எப்படி என்று கிழவி ஆராய்ந்து கொண்டிருக்கும் எனக்கு இவவை பார்க்கும் போதெல்லாம் பாக்கியராஜ் படத்தில் வரும் கிழ வில்லி மாதிரிதான் .

வாஸ்தவம்தான் 

தில்லிலி ஒருபெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாத்தான் அந்த அமைப்புகள் எல்லாம் வாய் திறப்பாங்களாம். 

  • கருத்துக்கள உறவுகள்

priya5.jpg

ராஜேஸ் அக்காவுக்கு இணையானவதான் நம் ஐ.நா. ராதிக்கா குமாரசாமி. மகிந்த அவரை பொதுகாரியதரிசி போட்டிக்கு அனுப்பிவைப்பத்தாக ஆசை காட்டி தமிழருக்கு எதிராக செய்யத்தக்க துரோகம் எல்லாவாற்றையும் ஐ.நா வில் செய்ய வைத்தவர். தமிழ் குழந்தைகளை காப்பத்தாக நடித்துக் கெடுத்தவர்.  அந்த ம்னுசி பெண்களுக்கவும் குரல் கொடுக்கலாம்தானே. 

ஒரு தமிழ் பெண் மானபங்கபடுத்தபட்டு படுகொலை செய்யப்பட்ட மிக முக்கியமான சாட்சியம் நம்பதகுந்த சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளிவந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் ஒரு கலாச்சார சீரழிவு என்று தொட்டதிற்கெல்லாம் கூக்குரலிடும் அமைப்புகளிடம் எந்த அறிக்கையும் இல்லை.வெகுஜன அமைப்புகளிடம் இருந்தும் குரல் எதுவும் வரவில்லை. ஏனோ தெரியவில்லை தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் உத்தியோகபூர்வ அறிக்கை இல்லை. தொடர் மெளனம். என்ன ராஜதந்திரமோ தெரியாது. யாழ் மாவட்டத்தில் அதிக வாக்குகள் பெற்ற திரு விக்கினேஸ்வரனும் மெளனம். அவருக்குள் இருக்கும் நீதி தேவதையும் மௌனம். திருநீற்று பதிகம் பாடிய சம்பந்தரும் மெளனம். இதில் அரசியல் வேண்டாம் ஒரு எம் இனத்து பெண் சகோதரி என்ற சாதாரண மனித உணர்வு கொள்வது உலகம் முழுவதும் உள்ளது தானே? இவ்வுணர்வுகூட தமிழர்களிடன் இல்லையோ? ஒரு ஐரோப்பிய, அமெரிக்க பெண்ணுக்கு நடந்திருந்தால் கூட அந்நாட்டு மக்கள் அமைப்புகளில் இருந்து கண்டனக்குரல் வந்திருக்கும். ஆனால் ஒரு பெண் ஐரோப்பிய நவீன உடை அணிவதையே கலாச்சார, பண்பாட்டு சீர்கேடு என்று தமக்குள் பெருமையடித்து கொள்ளும் எம் மக்களின் பொது அமைப்புகள் எல்லாம் வாய் மூடி மெளனம். பய மெளனமா? அல்லது மெளனம் சம்மதம் என்பதா?

சிங்கள பெண் மன்னம்பேரி மானபங்கபடுத்த பட்ட போது சிங்கள பொது அமைப்புகள் எல்லாம் அரசை எதிர்த்து கிளர்ந்தெழுந்தன. மன்னம் பேரியும் ஜேவிபி என்ற தடை செய்யபட்ட போராட்ட அமைப்பை சேர்ந்ந போராளி பெண்தானே, அதுவே இசைப்பிரியா என்றால் சொந்த மக்களே மெளனம். உலகில் முன்னோடியான இனம் எமது இனம். தன் வீட்டு பெண்ணை அடுத்த வீட்டு ஆடவன் பார்த்தால் கற்பு போய்விடும் என்று வேலியை உயர்த்தி அடைத்த இனம். தனக்காக போராட புறப்பட்டு அதனால் இசைப்பிரியா மானபங்கபடுத்தபட்டதே வேடிக்கை பார்க்கிறது . இவர்களின் கலாச்சாரமே போலியா?

Edited by tulpen

நாம் அடுத்தவனுக்குப் பயந்தே வாழ்க்கையைத் தொலைப்பவர்கள். எம் கலாச்சாரம் என அழுபவர்கள், அடுத்தவன் தப்பாய் நினைப்பார்கள் எனபதற்காய் தானே கட்டிக்கொண்டு அழுகிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனுங்க இந்த சுத்துமாத்து...உங்கள் கட்சியில் இருக்கும் அனந்தி இது பற்றி வாயே திறக்கலை இதுவரை.

எழிலனின் ஒளிப்பதிவு இதுபோலவந்தால்,  என்ன  அமைதியாய் இருப்பாவா?

எனது கருத்துக்கள் சிலரை மிகவும் பாதிக்கும். ஆனால் ஒரு இனம் இப்படி தொடர்சியாக முட்டாள் ஆக்கப்படக்கூடாது

உண்மை புலன் நீங்கள்கூறுவதும் நூறுவீதம் உண்மையே . சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

இந்த கேள்வியை 2,3 நாட்களுக்கு முன்னர் எழுப்பியதே கூட்டமைப்பு. இப்போ நீங்கள் அவர்களுக்கே திருப்பி விடுகிறீர்கள். :o

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை சுமந்து அண்னை கனடாவில் வந்து பிளந்து கட்டினவர்...இது பற்றி ஒருக்தையில்லை..அதைவிட இங்கை சாமரம் வீசுரவையும் கப் சிப் ..இவைக்கெல்லம் பணப் பட்டுவாட பிரச்சினையிலைதான்.....இப்ப கூத்தமைப்பை சேர்த்து இப்ப படலை திறக்கினாம்..ச்மந்துவும் அட்டிகடி வருகுது ...மகிந்தவிரை தூதுவரகவந்து அலுவல் பார்க்குதோ தெரியது......

'பெண்களின் பாதுகாப்புக்கு பதில் கூறுபவர்கள் யார்?" நீதி கேட்டு யாழில் ஆர்ப்பாட்டம்
யாழ்.புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலையத்திற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்புக்கள்  இன்று புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
DSCF2152.JPG
பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகில் இவ் ஆர்ப்பாட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
கடந்த செவ்வாய்க்கிழமை (29) அதேஇடத்தினைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மைதிலி (வயது - 27) என்ற பெண்  சடலமாக மீட்கப்பட்டார்.
 
மேற்படி பெண் திங்கட்கிழமை (28) இரவு தொலைபேசியில் உரையாடியவாறு வீட்டிற்கு வெளியில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் காணப்பட்டுள்ளார்.
 
இதனையடுத்து மேற்படி பெண்ணின் உறவினர்கள் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
DSCF2165.JPG
தொடர்ந்து மாடு கட்டச் சென்ற ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வயல் கிணற்றிலிருந்து மேற்படி பெண் சடலம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அமைப்புக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட பெண்ணின் தந்தையாரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
DSCF2180.JPG
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துக்கூறுகையில்,
 
யாழ்.மாவட்டத்தில் கடந்த காலங்களில் 5 பெண்கள் காணமல்போயுள்ளனர். இவர்களில் இருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதுடன் மேலும் மூவரின் நிலைமை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.
DSCF2179.JPG
இதற்கு எதிராக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இல்லாமல் செய்ய முடியும்' என தெரிவித்துள்ளனர்.
 
DSCF2172.JPG
DSCF2162.JPG
 
DSCF2155.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.