Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் இருந்து முஸ்லீம்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டமை இனச் சுத்தீகரிப்பு:- சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் பாரிய குற்றங்களை புரிந்தார்கள் என்பது உண்மை. ஆனால் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டமை இனச் சுத்தீகரிப்பு இதனை மறுக்க முடியாது"

 

 

தமிழர்களுக்கு எதிராக முஸ்லீம்கள் பாரிய குற்றங்களை புரிந்தார்கள் என்பது உண்மை. ஆனால் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டமை இனச் சுத்தீகரிப்பு  இதனை மறுக்க முடியாது என கனடாவில் சுமந்திரன்  தெரிவித்துள்ளார். இதனை சர்வதேச சட்டங்கள் கூறியிருக்கின்றன.  இதேவேளை தமிழ்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைகள் இனப் படுகொலை என்பதனை சர்வதேசம் இதுவரை ஏற்க மறுக்கிறது. முழுமையாக காணொளியை பாருங்கள் கேளுங்கள்.

 

 

 

இதில் சுமந்திரன் சொல்வது சட்டத்துறை தொழில்துறை புள்ளிகள் சம்பந்தமானது. அதேநேரம் அவர்களை நிரந்தமாக அனுப்புவது புலிகளின் நோக்கமல்ல எம்பதும் முஸ்லீம்களுக்கு திருவ்ரமுடியாமைக்கு அரசும் அவர்களின் தலைமைகளும் காரணம் என்பதும் நடந்தது இன சுத்திகரிப்பாக இல்லை என்பதற்கான  அரசியல் சார்ந்த விளகங்கள்.  ஆனால் புலம் பெயர் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது சுமந்திரன் சொல்வது யாதார்த வாழ்வில் நிகழ்கிறது. புலிகளை பயங்கரவாதிகளாக காட்ட விரும்பும் மேற்கு நாடுகள் அரசு இன்வழிப்பு செய்ததற்கான அடையாளம் இல்லை என்றும் புலிகள் இன சுத்திகரிப்பு செய்தார்கள் என்று கூறுவதும் ந்டைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் சுமந்திரனை தூதுவனாக கண்டு தூதுவனை கொலை செய்வத்தை தவிக்க வேண்டும். மாறி சுமந்திரனை முஸ்லீம்களின் வக்கீல்களாகவோ தமிழ் துரோகியகவோ காண்பது அவர் விளங்கவைக்க முயலும் சட்ட நுணுக்கத்தை ஆராய முயலாமை. 

 

வன்னிப் புஸ்பா சொல்வதை ஆமியை வைத்து நிரூபித்தாக வேண்டும். ஆனால் ஆமி அதை ஒத்துக்கொள்ள போவத்தில்லை. ஆமி "தமிழர்களை கொல்லாமல் முஸ்லீம்களை கொல்லத்தான் முயன்றார்கள், ஆகவே தமிழர்கள் தாங்கள் வெளியேறாமல் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள்" என்று நிரூபிக்க முயலக்கூடாது. அது நம்மை நிச்சயம் பொய்யர்கள் ஆக்கும். 

 

அரசால் 65 வருடகால இன்விரோத போராட்டத்தில் ஆறுமாதத்தில் 150,000 மக்கள் கொல்லப்பட்டாகள். ஆனால் இதற்கு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட 60,000 மக்களின் கதை வைக்கப்படுகிறது. மேலும் அதே மாதிரியே அரசால் 1995 தமிழ் மக்கள் முழுவத்தாக வெளியேற்றப்பட்டாகள். இதை கவனமான முறையில் வெளியே தெரிய வைத்து அரசு செய்த இன சுத்திகரிப்பையும் வெளிக்கொண்டுவரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொல்லும் கருத்துகள் தமிழ் மக்களின் கருத்துகள் தானா என்று அறிய, சுமந்திரனை ஒருக்கா தேர்தலில நிற்க விட வேணும்!

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பு வேறு.. இடப் பெயர்ச்சி வேறு.. கோத்தா கூட கொழும்பு வாழ் தமிழரை பஸ் ஏற்றி வவுனியாவில் நிப்பாட்டியவர்.. வலிவடக்கில் இன்றும் மக்கள் மீள்குடியேறுவதற்குத் தடை உள்ளது.

காணொளியை முழுமையாக கேட்டுவிட்டு கருத்தெழு தவேண்டும் .அடுத்த பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில்சுமந்திரன்  போட்டியிடுவார்.

 

ஈழவேந்தனு டைய  கேள்விக்குரிய பதிலையும் கேளுங்கள் .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி சுமந்த்ரன் போட்டியிட்டால் அவரை படுதோல்வியடைய வைக்க யாழ் தமிழர்கள் இப்பொழுதே செயல்ப்பட தொடங்க வேண்டும் புலம் பெயர் உறவுகள் பாரிய நிதி பங்களிப்பை வழங்கி எந்த ஷக்தியுடனாவது கூட்டனி வைத்து சுமந்திரனை ஓட ஓட விரட்ட வேண்டும் அதற்க்கான களப்பணியை இப்பொழுதே தொடங்க வேண்டும்

DEPOSIT இழக்க பண்ணுகின்ற அளவுக்கு அவருடைய தோல்வி இருக்கணும்

சுமந்திரன் ஒரு விஷக்கிருமி தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்க வந்திருக்கும் ஒருவர் இப்பொழுது இருந்தே ஒவொரு யாழ் மக்களும் யாழில் இருக்கும் உங்கள் உறவுகளுக்கு சுமந்திரனை பற்றி எடுத்துக்கூறி அவரை படுதோல்வியடைய வைக்க தமிழ் தேசியத்தன் பால் அக்கறை கொண்ட அத்தனை தமிழர்களும் முயற்சிக்க வேண்டும்

அப்பிடி சுமந்த்ரன் போட்டியிட்டால் அவரை படுதோல்வியடைய வைக்க யாழ் தமிழர்கள் இப்பொழுதே செயல்ப்பட தொடங்க வேண்டும் புலம் பெயர் உறவுகள் பாரிய நிதி பங்களிப்பை வழங்கி எந்த ஷக்தியுடனாவது கூட்டனி வைத்து சுமந்திரனை ஓட ஓட விரட்ட வேண்டும் அதற்க்கான களப்பணியை இப்பொழுதே தொடங்க வேண்டும்

DEPOSIT இழக்க பண்ணுகின்ற அளவுக்கு அவருடைய தோல்வி இருக்கணும்

சுமந்திரன் ஒரு விஷக்கிருமி தமிழர்களின் இருப்பையே கேள்விக்குறியாக்க வந்திருக்கும் ஒருவர் இப்பொழுது இருந்தே ஒவொரு யாழ் மக்களும் யாழில் இருக்கும் உங்கள் உறவுகளுக்கு சுமந்திரனை பற்றி எடுத்துக்கூறி அவரை படுதோல்வியடைய வைக்க தமிழ் தேசியத்தன் பால் அக்கறை கொண்ட அத்தனை தமிழர்களும் முயற்சிக்க வேண்டும்

கிழிச்சிங்க டக்கியையும் மகிந்தவையும் உங்களால் விரட்டமுடியவில்லை,இதுக்குள்ள வெட்டிப்பேச்சுக்கு

குறைச்சலில்லை விசைப்பலகையும் இல்லாவிட்டால் உங்கள் இருப்பே ?

  • கருத்துக்கள உறவுகள்

அதையும் பாக்கலாம் டக்கி மகிந்தாவோட கூட்டணி வைச்சாவது சுமத்திரன் என்ற விஷக்கிருமிய தோற்கடிக்கிறது தான்

அதையும் பாக்கலாம் டக்கி மகிந்தாவோட கூட்டணி வைச்சாவது சுமத்திரன் என்ற விஷக்கிருமிய தோற்கடிக்கிறது தான்

அது தானே பார்த்தேன் புசுக்குட்டி வெளியிலவரக்கானமே என்று :D  இதைத்தானே டொராண்டோவில் உங்கட கூட்டாளிமார் செய்கினம்.

இன அழிப்பு வேறு.. இடப் பெயர்ச்சி வேறு.. கோத்தா கூட கொழும்பு வாழ் தமிழரை பஸ் ஏற்றி வவுனியாவில் நிப்பாட்டியவர்.. வலிவடக்கில் இன்றும் மக்கள் மீள்குடியேறுவதற்குத் தடை உள்ளது.

கோத்தா விடுதிகளில் தங்கியிருந்த தமிழரைத் தான் வெளியேற்றீயவன் .அதற்கும் வழக்கு போட்டு தடுத்தது சுமந்திரன்

தான்

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் க்கு கனடாவில் ஆரத்தி எடுத்து colombo இல் இன்வெஸ்ட் பண்ணும் உன்களை போன்றவர்களை விட அந்த toronto தமிழர்க்க பருவாயில்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் இந்த வாதம் அரைவேக்காட்டுத் தனமானது. முஸ்லீம்களின் வெளியேற்றம் என்பது அன்றைய சூழ்நிலையில் சமூகங்களிடையே பிரச்சனைகளை தூண்டிவிட்டு சிங்களம் குளிர்காய்ந்து கொண்டிருப்பதை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதோடு.. மீண்டும் நிலமைகள் சீரானதும் நீங்கள் உங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பலாம் என்றும் சொல்லப்பட்ட ஒன்று.

 

அதற்கேற்ப.. 2002 பிரபா - ஹக்கீம் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய முஸ்லீம்கள் மீளவும் வந்து குடியேற அழைக்கப்பட்டதை சுமந்திரன் போன்ற கொழும்பு வாசிகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..!

 

ஆனால் அதேவேளை கிழக்கிலும் மன்னாரிலும் எமது மக்கள் முஸ்லீம்களால்.. நிரந்தரமாக விரட்டி அடிக்கப்பட்டு ஊர்களே காலி செய்யப்பட்டு காணிகள் அபகரிப்பட்டமையானது.. அது தான்.. இன சுத்திகரிப்பாகும்.

 

ஆயுத பலம் படைத்த உலகம் தனக்கொரு நீதி அடுத்தவனுக்கு ஒரு நீதின்னு சொல்ல..

 

இந்த ஒரு உதாரணம் போதும்.

 

சிறுவர்களைப் படையில் சேர்ப்பதாகச் சொல்லி புலிகளை பயங்கரவாதிகள் ஆக்கிய பிரிட்டன்.. படைகளுக்கு சிறுவர்களை சேர்ப்பது பற்றி மூச்சும் விடுவதில்லை. புலிகள் அதற்குப் பயங்கரவாதிகள் என்றால்.. பிரிட்டனும் பயங்கரவாதி தான் நீதியின் முன்னால். ஆனால்...

 

சமூகங்களிடையே நீதி சமன் என்று சொல்லும் சுமந்திரன்.. கிழக்கில் தமிழ் மக்களை அவர்களின் நிலங்களில் இருந்து வீடுகளில் இருந்து நிரந்தரமாக விரட்டி அடித்த முஸ்லீம்களின் செயலை.. இனச்சுத்திகரிப்பு என்று மொழியத்தயாரா..??! இன்று வரை அதற்காக ஒரு முஸ்லீமும் மன்னிப்புக் கோரியதில்லை. அந்த மக்களை மீளக் குடியேற அழைத்ததும் இல்லை. ஆனால்.. புலிகள் நியாயமான வெளியேற்றத்திற்கு வழங்கப்பட்ட விளக்கங்களால் அதற்கு மன்னிப்புக் கோரியதுடன் மீளக் குடியேறத்தக்க வழி வகைகளையும் உத்தரவாதங்களையும் அளித்தனர். புலிகள் வழங்கிய நீதி எங்கே முஸ்லீம்கள் அவர்களின் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு வழங்கிய நீதி என்ன..???!

 

Army joining age 'should be 18', say campaigners.

 

_70984923_getty.jpg
 
Recruits can volunteer with parental consent at 16
 

The British Army should stop recruiting under 18-year-olds, campaigners and religious figures have urged.

 

An open letter from human rights group Child Soldiers International called on the Ministry of Defence to raise the joining age from the current 16.

 

All Church in Wales bishops signed the letter, along with other Christian peace groups from around the UK.

 

The MoD said it had no plans to change the recruitment age, arguing enlisting could be beneficial for youngsters.

 

At present, 16-year-olds can join the Army with parental consent and can apply from 15 and 7 months.

 

http://www.bbc.co.uk/news/uk-24854074

 

 

Edited by nedukkalapoovan

சுமந்திரன் தனிய தோற்றால் பிரச்சனை இல்லை இவரால் கூட்டமைப்பும் சேர்ந்து தோற்கும்.

 

இவர் நிற்கும் தொகுதியில் ஒரு நல்ல சுயேட்சை வேட்பாளரை தெரியு செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தேவையற்ற

வேண்டப்படாத

தாமாக தேடித்தேடி  கேட்கப்படும் 

மன்னிப்பு

சுயநலமானது

அது பெறுமதியற்றது....... :( 

இருப்பதையும் கெடுக்கும்.... :( 

 

அவர்கள் சில அரசியல் பாதைகளை பின்பற்றித்தான் சில்வற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தை அந்த மாகாணத்தில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர் வெல்ல வேண்டும். முஸ்லீம்களுடன் சமரசம் தேவை. கூட்டமைப்பு அங்கு சரியாக கால் ஊன்றாமல் கக்கீம் போன்றவர்கள் அங்கிருந்து நாளும் பொழுதும் தமிழர்களை தொடர்ந்து வெளியேற்ற அரசுக்கு கை கொடுத்துவருவதை அனுமதிக்கக் கூடாது. 

 

பல கேள்விகள் கேட்கப்படிருந்தன. எல்லாவற்றையும் கழித்துவிட்டு சுமந்திரன் வன்னிப் புஷ்பாவின் கேள்வியை தெரிந்தெடுத்திருந்தார். அவர்கள் சொல்லவரும் சேதியை தெரிய,புரிய முயல வேண்டும். சுமந்திரன் முஸ்லீம்கள் அக்கறை காட்டாத போது அசாத் சாலியை மனோகனேசனுடன் சேர்ந்து உழைத்து வெளியே கொண்டுவந்தவர். கூட்டமைப்பில் ஒருவர் கக்கீமை எதிர்த்து பேச தயாரில்லாத போது நீதி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றவர் சுமந்திரன். சிராணி கேசில் கக்கீமை எதிர்த்த ஒரே ஒரு ஆள் என்றதால் இவரின் பேச்சு அமெரிக்க தூதுவராலயத்தால் வாங்கப்படிருந்தை நாம் அந்த நேரம் அவதானித்திருந்தோம். கக்கீமை எதிர்த்து முஸ்லீம் பொதுமக்களுக்காக வாதிடுபவர் ஒருவரை அவசரம் அவசரமாக துரோகியாக்க கூடாது. 

 

சுமந்திரனை கூட்ட்மைப்பில் வைத்து தோற்கடிப்பது, தங்கள் வேட்டியை தாங்களே கழற்றி காட்டுவது போன்ற மடைத்தனமான முயற்சி. இந்த முயற்சியில் ஒருவர் தனிய மட்டும் இறங்கினாலே அவரால் தமிழ் மக்களுக்கு எற்படகூடிய துரோகம், சுமந்திரன் முஸ்லீம்களின் யாழ்ப்பாண வெளியேற்றத்தை வைத்து தன் வாழ்நாள் முழுவதும் செய்ய முடியாத துரோகம் என்ப்தை விள்ங்கிக்கொண்டு அதை தொடர வேண்டும்.  ஆனால் இந்த முயற்சியால் தான் சிதைபடாமல் கூட்டமைப்பு வென்று ஆனால் அதேநேரம் சுமந்திரன் மட்டும் தோற்றால் அந்த நேரம் கூட்டமைப்பு தன் பாதையில் பின் வாங்குமா? இதனால் இல்லையா கூட்டமைப்பு வென்று தேசிய நல்லிணக்கத்துக்கானா அமைப்பின் அயூப் அஸ்மின் மன்னரில் தோற்ற போது கூட்டமைப்பு அவர் தோற்றவுடன் அவரை கைவிடாமல் நியமன உறுப்பினர் பதவி கொடுத்தது. எனவே ஒரு வேளை தேர்தலில் சுமந்திரனை தோற்கடிக்கலாம். ஆனால் அவர் பாரளுமன்றம் போவதை தடுப்பது என்பது அரசியல் குழந்தைகளின் பேச்சு.

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் சுமந்திரன் போட்டியிட்டால் அவரை தோற்கடிப்பதற்கான முழுமையான முயற்சியில் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்களும் இளைஞர்களும் ஈடுபடுத்தப்பட இருகின்றார்கள் ஒட்டு மொத்தமாக அவர் தொகுதியில் வீடு வீடாக சென்று அவரின் தில்லுமுல்லுகளை மக்களிடம் எடுத்து கூற இருகின்றார்கள் அந்த இளைஞர்கள்

தமிழர்களும் முஸ்லிம்களும் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து ஒன்றாக வரும் இந்த நேரம் பழைய புண்ணை சொரிந்து சிண்டுமுடியும் வேலையில் இறங்கி இருக்கும் சுமந்திரன் விரட்டபடுவது நிச்சையம்

இனியாவது வெளிநாட்டு வாழ் தமிழர்கள் சுமந்திரனை விழாக்களுக்கு அழைக்காமல் இருங்கள்

Edited by SUNDHAL

எமக்கு இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு ,அதை செய்யாமல் எமக்கு ஒன்றுக்குமே உதவாத ஒரு சமூகத்தின் மேல் அக்கறைப்பட்டு பேசுவது எதோ  ஒன்றை சடைவதுபோல உள்ளது ................................ :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இன சுத்திகரிப்பாம் அதாம் இதாம் என்று தமிழர்களை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையிக் தமிழர்களின் போராட்டத்தை விற்கும் --செயலில் -------  ஈடுபட்டு இருகின்ற- என்பதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

Edited by நிழலி
அநாகரீகமாக எழுதப்பட்ட கருத்து நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

hakeem_pirapa_2_130402.jpg


hakeem_pirapa_3_130402.jpg

 

 

SLMC, LTTE sign agreement, plan more meetings.

 

[TamilNet, Saturday, 13 April 2002, 19:26 GMT]

 

(News Feature) Muslim leaders and the Liberation Tigers have signed an agreement to cooperate on affairs related to Sri Lanka's Muslim community, the head of the largest Muslim party told a press conference Saturday. Mr. Rauf Hakeem, leader of the Sri Lanka Muslim Congress (SLMC) and a delegation from his party flew to the LTTE-held town of Kilinochchi on Saturday morning for discussions with an LTTE delegation headed by the movement's leader, Mr. Vellupillai Pirapaharan.

Mr. Hakeem said the talks with the LTTE leader were friendly and productive. The three and a half hours of discussion centred around several problems faced by Muslims in the Northeast, he said.
 

hakeem_pirapa_1_130402.jpg

 

"A joint committee comprising representatives of LTTE and SLMC would be appointed to co-ordinate affairs related to the return of displaced Jaffna Muslims to their own homes," Mr. Hakeem, a Minister in Sri Lanka's government told reporters at a press conference in Colombo, on his return from Killinochchi Saturday night.

"Mr Pirapaharan has agreed to invite all displaced Muslims to return to their own places in the northeast," Mr. Hakeem said. Likewise, it was decided that a suitable environment should be created for people displaced from villages in the east to resettle in their homes, SLMC sources said.

"As a result of Saturday's talks, solutions to several problems faced by Muslims have been found," Mr. Hakeem said. "This will calm the apprehension among our [Muslim] people about the peace process."

"Mr.Pirapaharan and myself have signed a joint statement regarding the return of the displaced Muslims. It has been agreed to appoint a joint committee consisting LTTE and SLMC representatives to facilitate the process of resettling the displaced Muslims," Mr. Hakeem said.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6845

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனும் சம்பந்தரும் வெளிநாடுகளில் தமிழர் மக்களிடம் பிச்சைக்குப் புறப்பட முன் இவற்றை வாசித்து வரலாற்றை புரிந்து கொண்டு.. வரலாற்று உண்மைகளை பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். சிங்களவன் திருப்திப்படனும் என்பதற்காக கொழும்பில் சுகமாக வாழனும் என்பதற்காக தமிழ் மக்களை கூறி அரைவிலைக்கு விற்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

hakeem_pirapa_2_130402.jpg

hakeem_pirapa_3_130402.jpg

 

 

 

இந்தியவின் தாளத்துக்கு ஆடுபவர் சுமந்திரன் என்பது புலனாகிறது.. சம்பந்தப்பட்டவர்களே ஒப்பந்தம் போட்டு சேர்ந்து நிற்கிறார்கள்.. இவர் என்னடா எண்டால்.. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் மாவட்டத்தில் சுமந்திரன் போட்டியிட்டால் அவரை தோற்கடிப்பதற்கான முழுமையான முயற்சியில் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மக்களும் இளைஞர்களும் ஈடுபடுத்தப்பட இருகின்றார்கள் ஒட்டு மொத்தமாக அவர் தொகுதியில் வீடு வீடாக சென்று அவரின் தில்லுமுல்லுகளை மக்களிடம் எடுத்து கூற இருகின்றார்கள் அந்த இளைஞர்கள்

தமிழர்களும் முஸ்லிம்களும் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து ஒன்றாக வரும் இந்த நேரம் பழைய புண்ணை சொரிந்து சிண்டுமுடியும் வேலையில் இறங்கி இருக்கும் சுமந்திரன் விரட்டபடுவது நிச்சையம்

இனியாவது வெளிநாட்டு வாழ் தமிழர்கள் சுமந்திரனை விழாக்களுக்கு அழைக்காமல் இருங்கள்

யாழ் மாவட்டத்தில் நீங்கள் செய்திருக்கும் முன்னேற்பாடு போற்றப்பட வேண்டியது. வீடுவீடாக வேறு போய் சொல்லப் போகிறீர்கள்... அருமை.. அருமை.. சூப்பர் திட்டம். ஒழிந்தார் சுமந்திரன். வெற்றி நிச்சயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.