Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும்--- சம்பந்தன் கருத்து

Featured Replies

இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும்--- சம்பந்தன் கருத்து

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 நவம்பர், 2013 - 16:53 ஜிஎம்டி

மாற்று மீடியா வடிவில் இயக்க

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/11/sambandanonindiachogm_131107_sambandanindiachogm_au_bb.mp3

130305165352_rsambanthantnampsrilankalon

'காமன்வெல்த் மாநாடு-- இந்தியா வந்தாலும் அது இலங்கையின் செயல்பாட்டை அங்கீகரிப்பதாகாது'- இரா.சம்பந்தன்

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கலந்துகொள்வது குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், இந்தியா இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் மட்டும், அது இலங்கையின் மனித உரிமைச் செயல்பாட்டை அங்கீகரிப்பதாக யாரும் கருத முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கிறார்.

இது இலங்கைக்கும் தெரியும், இந்தியாவுக்கும் தெரியும், பிற நாடுகளுக்கும் தெரியும் என்றார் சம்பந்தன்.

காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் மன்மோஹன் சிங் கலந்துகொள்வது குறித்து , தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுவதாகக் கூறப்படுவது குறித்து தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, முடிவெடுக்கவேண்டியது, இந்தியப் பிரதமரும், இந்திய அரசியல் கட்சிகளும், இந்திய மக்களும்தான் , இதில் இந்தியப் பிரதமருக்கு அறிவுரை கூற தன்னால் முடியாது என்றார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை, இதே நிலைப்பாடுதான், இதற்கு மாறாக யாரும் எதையும் தெரிவிக்கவில்லை என்றார் சம்பந்தன்.

இந்தியா இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாவிட்டால், அது தமிழ் மக்களுக்கு சாதகமாக இலங்கைப் பிரச்சினையில் செயல்படமுடியாமல் போய்விடும், எனவே இந்த மாநாட்டில் அது கலந்துகொள்வது அவசியம் என்று முன்வைக்கப்படும் வாதம் பற்றிக் கேட்டதற்குப் பதிலளித்த அவர், இந்தியா 1983லிருந்து இலங்கைப் பிரச்சினையில் செயல்பட்டுவருகிறது, இடையே சில காலம் " சில பிரச்சினைகள் காரணமாக" இந்தியா இலங்கைப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடாமல் ஒதுங்கியிருந்தது, இப்போது அது மீண்டும் இப்பிரச்சினையில் கவனம் செலுத்துகிறது, இது தமிழர்களால் வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்றார்.

இந்தியாவின் செயல்பாட்டைப் பொறுத்தவரை அதை மேலும் பரந்த்பட்ட அளவில் பார்க்கவேண்டும், காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வது என்பது சம்பிரதாயபூர்வமான ஒரு நிகழ்வு. இதில் கலந்துகொண்டாலும்,கலந்து கொள்ளாவிட்டாலும் அதனால் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், சர்வதேச அரங்குகளில், குறிப்பாக ஐ.நா மன்ற மனித உரிமைக் கவுன்சில் போன்ற இடங்களில், இந்தியாவின் நிலைப்பாடு தமிழர்களுக்கு சாதகமாகவே இருந்து வந்திருக்கிறது என்றார்.

இது போல வரும் 2014 மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் இந்தியா தனது பங்களிப்பை ஆற்றும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131107_sambandanindiachogm.shtml

  • கருத்துக்கள உறவுகள்

//இது போல வரும் 2014 மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்திலும் இந்தியா தனது பங்களிப்பை ஆற்றும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்//

ஆம்.. வரைபுத் தீர்மானத்தை வெட்டிக்கொத்தி, தமிழகத்திற்கும் போக்குக்காட்டி, காத்திரமான பங்களிப்பை மேற்கொள்ளவேணும் இந்தியா.. :D

  • தொடங்கியவர்

தமிழர்கள் தரப்பிலை அரசியலில் தாங்கள் மட்டும் இருக்க வேண்டும் எனும் எண்ணம் தான் இருக்கிறது அதுக்கு என்ன தேவையோ அதை செய்கிறார்...

2013 மார்ச்சில் ஐ.நா.வில் இந்தியாவிட்ட திருகுதாளத்தை மகாநாட்டை பார்த்திருக்க கூடிய 3ம் வகுப்பு பிள்ளை கூட அவதானிக்கத் தவறியிருக்காது. அவர் செய்வது பொதுநலவாய மகாநாட்டுக்கு இந்தியா வந்துவிட்டால் கூட்டமைப்பு இக்கட்டில் மாட்டிகொள்ளாமல் இருக்க முயல்வதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மன்மோகன் சிங் வந்தால் இலங்கைக்கு வெற்றி என்பதை மறுக்க முடியாது.  ஏன் எனில் அவரின் வரவை எதிர்த்த ஒரேஒருகாரணம் இலங்கை மீதான போர்குற்றசாட்டு. இதை இலங்கை மறுக்கிறது. ஆனால் அந்த மறுப்பை ஏற்காமல் இந்த குற்றசாட்டை முன் வைத்து கனடா பிரதமர் வரவில்லை. ஆனல் இந்தியபிரதம் வந்தால் அதன் விளக்கம் இந்தியா இலங்கையின் மறுப்பை ஒத்துகொள்கிறது என்பதாகும். எனவே இலங்கை தனது நிலைப்பாட்டில் வென்றதாகிறது.

வராவிட்டல் பேர்த்தில் செய்தது மாதிரி இந்திய அதிகாரிகள் இலங்கையை காப்பாற்றுவார்கள். கைவிடுதல் எளிதில் நடக்கக் கூடியத்தில்லை.  தமிழ் நாட்டில் கேட்பது போல இந்தியா முழுவத்தாக பகிஸ்கரித்தால் பிருத்தானியா, நியூசிலாந்து, கனடா போன்ற்வை பொதுநலவாயத்தில் சில காத்திரமான கேள்விகளை எழுப்ப முடியும். எது நடந்தாலும் பொதுநலவாயம் முடிய தமிழருக்கு எந்த புதிய நன்மையும் நடக்க இல்லை. ஆனால் சில நிபந்தனைகள் பூர்த்தியானால் அது இலங்கைக்கு வெற்றி. அவை நிகழாவிட்டால் கனிசமான தோல்வி மட்டும். மகாநாட்டை இலங்கையில் நிகழாமல் தடுக்க முடியாமை தமிழரின் போராட்டம் முன்னால் போக புதிய இடைவெளியை திறந்து வைக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

:lol: மிகப் பெரிய நகைச்சுவை என்னண்டா, இன்னும் த.தே.கூ ஏதோ தமிழர்களுக்குச் செய்வதாக நம்பி கொண்டிருக்குது பல சனம் ! அவர்களோ இந்தியாவுக்கு பின்பக்கத்தை எப்படி இன்னும் நல்லாச் சொறிஞ்சு விட்டு நல்ல பெயர் எடுக்கலாம் எண்டு கிரியேட்டிவா, அவுட் ஒf பொக்ஸா, ரூம் போட்டெல்லாம் யோசிக்கீனம்!

  • கருத்துக்கள உறவுகள்

இணக்க அரசியல் செய்பவர்கள் எப்படித் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது

என்ற சாணக்கியம் கூட்டமைப்பின் தலைவருக்குத் தெரியவில்லையா

இந்தியப் பிரதமரும் காமன்வெல்த் மாநாடும்--- சம்பந்தன் கருத்து

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 நவம்பர், 2013 - 16:53 ஜிஎம்டி
 
மாற்று மீடியா வடிவில் இயக்க
http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/11/sambandanonindiachogm_131107_sambandanindiachogm_au_bb.mp3

130305165352_rsambanthantnampsrilankalon
'காமன்வெல்த் மாநாடு-- இந்தியா வந்தாலும் அது இலங்கையின் செயல்பாட்டை அங்கீகரிப்பதாகாது'- இரா.சம்பந்தன்

, இந்தியா 1983லிருந்து இலங்கைப் பிரச்சினையில் செயல்பட்டுவருகிறது, இடையே சில காலம் " சில பிரச்சினைகள் காரணமாக" இந்தியா இலங்கைப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிடாமல் ஒதுங்கியிருந்தது, இப்போது அது மீண்டும் இப்பிரச்சினையில் கவனம் செலுத்துகிறது, இது தமிழர்களால் வரவேற்கப்படவேண்டிய ஒன்று என்றார்.
http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131107_sambandanindiachogm.shtml

A final call will be taken by Dr. Singh, the Ministry of External Affairs and Sonia Gandhi

Prime Minister Manmohan Singh’s trip to Colombo to attend the Commonwealth Heads of Government Meeting (CHOGM) remained undecided on Thursday, with opinion divided both within the Union Council of Ministers and the Congress Core Group – the party’s highest informal decision-making body.

The Bharatiya Janata Party is in favour of the Prime Minister going to Colombo but its Tamil Nadu unit met party president Rajnath Singh and wanted the party high command to urge upon Dr. Singh not to attend CHOGM.

The Union Cabinet which met on Thursday did not discuss the issue even informally, said government sources.

Minister of State in the Prime Minister’s Office V. Narayanasamy told The Hindu that a decision could be expected around Sunday.

Though the Cabinet Committee on Political Affairs also met after the regular Cabinet meeting, it is not clear whether the issue was taken up, even informally.

It may, however, come up at a meeting of the Congress Core Group that usually meets on Fridays.

Keywords: CHOGM, Commonwealth meet, Sri Lanka war crimes, Sri Lankan Tamils, ethnic conflict, human rights violation, LTTE, Eelam War, Manmohan Singh, India-Sri Lanka relations

http://www.thehindu.com/news/national/suspense-still-on-pms-visit-to-colombo/article5326757.ece?ref=relatedNews

சம்பந்தரோ சுமந்திரனோ ஒன்றும் செய்யவில்லை ,மக்களுக்கு துரோகம் செய்கின்றார்கள் என்று விமர்சிப்பவர்கள், தாங்கள் செய்கின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரோ சுமந்திரனோ ஒன்றும் செய்யவில்லை ,மக்களுக்கு துரோகம் செய்கின்றார்கள் என்று விமர்சிப்பவர்கள், தாங்கள் செய்கின்றது .

ஆம், ஒன்றுமில்லை :rolleyes: . புலிகளைப் போற்றிப் பாடி தேர்தலில் ஆசனங்களை வெல்லவும் இல்லை. வென்ற பின்னர் இந்தியாவின் வாலையும் மகிந்தவின் வேறெதையோவையும் பற்றிக் கொள்ளவும் இல்லை! அரசியல் வாதிக்கும் அவர்களின் அல்லக் கைகளுக்கும் வேணுமெண்டால் இதெல்லாம் மக்களுக்கு அவசியமானதாய் இருக்கலாம். எனக்கு அப்படி இல்லை! 

கரி ஆனந்தசங்கரிக்கு போட்டியாக களமிறக்க கனேடிய மக்கள் அவையை சார்ந்தவர்கள் தகுதியானவரை தேடித்திரிவதாக அறிந்தேன். ஏற்கனவே ராதிகாவுக்கு எதிராக லோகன் கணபதியை களமிறக்கி உள்ளார்கள் .லோகனுக்கு சில மருத்துவர்கள் ஒரு தமிழருக்கு எதிராக போட்டியாக நிற்க்காமல் வேறு தொகுதியில் நிற்கும்படி ஆலோசனை சொன்னதாக கேள்வி .

இதே கூட்டம் தான் Dr .இலகுப்பிள்ளை யின் வெற்றியையும் தடுத்தவர்கள் .

சம்பந்தரை விமர்சிக்கும் கூட்டம் மேற்குறித்த செய்கைகளை செய்யும்கனடாதமிழினத்தின் துரோகிகளை ஏன் விமர்சிப்பதில்லை..

ஆம், ஒன்றுமில்லை :rolleyes: . புலிகளைப் போற்றிப் பாடி தேர்தலில் ஆசனங்களை வெல்லவும் இல்லை. வென்ற பின்னர் இந்தியாவின் வாலையும் மகிந்தவின் வேறெதையோவையும் பற்றிக் கொள்ளவும் இல்லை! அரசியல் வாதிக்கும் அவர்களின் அல்லக் கைகளுக்கும் வேணுமெண்டால் இதெல்லாம் மக்களுக்கு அவசியமானதாய் இருக்கலாம். எனக்கு அப்படி இல்லை!

புலம்பெயர்ந்து தங்கள் வசதியாக இருந்துகொண்டு தாயக மக்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை அப்படித்தானே .

  • தொடங்கியவர்

புலம்பெயர்ந்து தங்கள் வசதியாக இருந்துகொண்டு தாயக மக்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை அப்படித்தானே .

ஆடிக்கு ஒருக்கால் அமைவாசைக்கு ஒருக்கா வடக்குக்கும் கிழக்குக்கும் போய் வரும்  கொழும்பிலை குடி இருக்கிறவை மட்டும்  அரசியல் வேலை செய்யலாமாக்கும்.... 

சரி உங்கட தலைமையை சேர்ந்த யார்  கிட்டடியிலை  கிழக்கு மாகாணம் போய் வந்தவை என்ன செய்தவை எண்டதை ஒருக்கால்  சொல்வீர்களோ...?? 

]சென்ற கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து சம்பந்தன் ஐயா முல்லைத்தீவு வழியாக தென்னமரவடி ,புல்மோட்டை ,

திரியாய் வழியாக மக்களை சந்தித்து திருகோணமலைக்கு சென்றவர் .இந்த வயதிலையும் அவர் தன்னால் இயன்றதை செய்கின்றார் .புலத்திலுள்ள உள்ளவர்களால் *** அசைக்க முடிந்ததா ?திருகோணமலையில் தமிழரசுக் கட்சிமூலமாகத்தான் யாரும் வெல்லலாம் மகிந்தவின் கட்சி யாழ்லில் மூன்று இடங்களை வெல்ல உங்களைபோன்ற ஆட்கள்

தமிழருக்கு எதிராக வசை பாடுகிறீங்கள்.

ஆடிக்கு ஒருக்கால் அமைவாசைக்கு ஒருக்கா வடக்குக்கு செல்வது உங்கடதலைவர் கஜேந்திரன் கூட்டம்தான் சிலருக்கு அனுபவம் தானாம் பேசும்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி

அமைதி

உறவுகளே

உரையாடுங்கள்

அதுவே  போர்க்களமாகாது பார்த்துக்கொள்ளுங்கள்

தமிழர்களை  பிரிந்துவிடும்  எதுவும் இனி வேண்டாம் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் தரப்பிலை அரசியலில் தாங்கள் மட்டும் இருக்க வேண்டும் எனும் எண்ணம் தான் இருக்கிறது அதுக்கு என்ன தேவையோ அதை செய்கிறார்...

அரசியல் என்றால் அதுதானே.. எதிரணியை வளர விடக்கூடாது. அதை சரியாக செய்கிறார்கள். அவர்களுக்கு எதிரணி சிங்கள அரசியல்வாதிகள் அல்ல.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம், ஒன்றுமில்லை :rolleyes: . புலிகளைப் போற்றிப் பாடி தேர்தலில் ஆசனங்களை வெல்லவும் இல்லை. வென்ற பின்னர் இந்தியாவின் வாலையும் மகிந்தவின் வேறெதையோவையும் பற்றிக் கொள்ளவும் இல்லை! 

புலிகளை போற்றிப் பாடினால் மட்டும் தேர்தலில் ஜெயிக்கலாம் என்றால், கஜேந்திரன்&கஜேந்திரகுமார் அணி இப்போது ராசா ஆகியிருக்க வேண்டும். 

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றிகளின்பின் சம்பந்தன் சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்தார். இப்போது சொல்லும் அதே கருத்துகளைதான் சொன்னார்கள். அதன் பின்னரும் மாகாணசபை தேர்தலில் வெற்றி! முன்பைவிட பெரிய வெற்றி.

சரி. இப்போ மீண்டும் அடுத்த தேர்தல் வரை ஆண்டுக் கணக்கில் வசை பாடுவோம். தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன்பு களத்தில் இறங்குவார்கள் அவர்கள். யாருக்கு வெற்றி என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும்.

அரசியலில் ஜெயிப்பதுதான் முக்கியம்.

ஓம்! தேர்தலில் வெல்வதே முக்கியம்! இந்தியாவுக்கும் சிங்களவனுக்கும் முன்னுரிமை கொடுத்து தமிழர்களை வாக்கு முட்டை போடும் வாத்துகளாக மட்டும் வைத்திருந்தால் வெல்வது சாத்தியம்! ஆனால் பெரிய கேள்வி: யார் வெல்வது? மக்களா சம்பந்தனா? :D

  • கருத்துக்கள உறவுகள்

உவர் சம்பந்தன் கூட்டுகள்.. தமிழ் நாட்டில நிற்கேக்க ஒரு கருத்து. டில்லில நிற்கேக்க ஒரு கருத்து. மகிந்த கூட நிற்கேக்க இன்னொரு கருத்து. லண்டனில நிற்கேக்க இன்னொரு கருத்து. ரொரண்டோவில நிற்கேக்க இன்னொரு கருத்து. உந்த மானம் கெட்ட பிழைப்பால தானே உங்களை எல்லாம் எட்ட வைச்சது. இன்னுமா நீங்க திருந்தல்ல..! :rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து தங்கள் வசதியாக இருந்துகொண்டு தாயக மக்கள் எக்கேடுகெட்டாலும் பரவாயில்லை அப்படித்தானே .

(ஓம்! நான் சுகமாகத் தான் இருக்கிறன். ஆனால் ஓட்டுப் போட்ட மக்கள் வரிப்பணத்தில் அந்த மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்காமல் சராசரி அரசியல் வாதியாக அல்ல. நானே உழைக்கும் காசில (அகதிக் காசும் அல்ல!) என்னால் இயன்றதை தாயகத்தில இருக்கிற தமிழருக்கும் செய்து கொண்டு நான் இருக்கிறன். இதைச் சொல்ல எனக்கு எந்தக் குற்றவுணர்வும் இல்லை!)

இண்டையத் தேதியில இருந்து அடுத்த தேர்தல் வரும் வரைக்கும் இருந்து பாருங்கோ. இணக்க அரசியலும் "இந்திய முதுகு சொறி" அரசியலும் செய்து எவ்வளவு தூரம் த.தே.கூ சாதிக்கும் என்று தெரிந்து விடும். கடைசியில் டக்கியின் லெவலில் தன் வந்து நிப்பினம். ஒரே ஒரு வித்தியாசம் இருக்கும்: டக்கி வெளிப்படையாகச் செய்தார், இவர்கள் திரைக்குப் பின்னால் செய்வார்கள்! அவ்வளவே!  :D

உவர் சம்பந்தன் கூட்டுகள்.. தமிழ் நாட்டில நிற்கேக்க ஒரு கருத்து. டில்லில நிற்கேக்க ஒரு கருத்து. மகிந்த கூட நிற்கேக்க இன்னொரு கருத்து. லண்டனில நிற்கேக்க இன்னொரு கருத்து. ரொரண்டோவில நிற்கேக்க இன்னொரு கருத்து. உந்த மானம் கெட்ட பிழைப்பால தானே உங்களை எல்லாம் எட்ட வைச்சது. இன்னுமா நீங்க திருந்தல்ல..! :rolleyes::(

அது "இராசதந்திரம்" நெடுக்கர்! உங்களுக்குத் தெரியாது. சுமந்திரன் மாதிரி "ஈழத்து ஹென்றி கிசிஞ்சருக்கு" தான் தெரியும்! நாடு இல்லை, நிலம் இல்லை, இருக்கிற நிலத்தில பாதுகாப்பும் இல்லை,ஆனா "இராசதந்திரம்" மட்டும் நிறைய இருக்கு த.தே.கூ விட்ட!  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை போற்றிப் பாடினால் மட்டும் தேர்தலில் ஜெயிக்கலாம் என்றால், கஜேந்திரன்&கஜேந்திரகுமார் அணி இப்போது ராசா ஆகியிருக்க வேண்டும். 

நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றிகளின்பின் சம்பந்தன் சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்தார். இப்போது சொல்லும் அதே கருத்துகளைதான் சொன்னார்கள். அதன் பின்னரும் மாகாணசபை தேர்தலில் வெற்றி! முன்பைவிட பெரிய வெற்றி.

சரி. இப்போ மீண்டும் அடுத்த தேர்தல் வரை ஆண்டுக் கணக்கில் வசை பாடுவோம். தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன்பு களத்தில் இறங்குவார்கள் அவர்கள். யாருக்கு வெற்றி என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும்.

அரசியலில் ஜெயிப்பதுதான் முக்கியம்.

அனந்தியை மாதிரி இன்னும் நாலு புலிகளை சம்பந்தர் போட்டிருந்தால் கொஞ்சப்பேர் வாலை கிளப்பி இருப்பினம் என்றது உங்களுக்கு தெரியுதோ இல்லையோ சம்பந்தருக்கு தெரியும்.

டக்ளசே பிரதி பண்ணும் அளவுக்கு கூட்டணியின் அரசியல் கொடிகட்டிப்பறக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம்! தேர்தலில் வெல்வதே முக்கியம்! இந்தியாவுக்கும் சிங்களவனுக்கும் முன்னுரிமை கொடுத்து தமிழர்களை வாக்கு முட்டை போடும் வாத்துகளாக மட்டும் வைத்திருந்தால் வெல்வது சாத்தியம்! ஆனால் பெரிய கேள்வி: யார் வெல்வது? மக்களா சம்பந்தனா? :D

சந்தேகத்துக்கு இடமில்லாமல்... சம்பந்தன்தான்!

அவரது வெற்றிப் பாதையில் தடைக்கல் ஏதும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகத்துக்கு இடமில்லாமல்... சம்பந்தன்தான்!

அவரது வெற்றிப் பாதையில் தடைக்கல் ஏதும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை.

தலைவர்கள் மக்கள் முன் தமது சேவையை செய்து

மக்களுக்கான தமது கடமைகளை செய்து

தவித்து நிற்கும்  தமிழினத்துக்கு ஒத்தடமாக  இருக்கணும் 

அதன் பின்பே

மக்கள் ஊடாக அவரவருக்கான பதவிகள் கிடைக்கணும்

இதுவே

இன்றைய  தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர்கள் மக்கள் முன் தமது சேவையை செய்து

மக்களுக்கான தமது கடமைகளை செய்து

தவித்து நிற்கும்  தமிழினத்துக்கு ஒத்தடமாக  இருக்கணும் 

அதன் பின்பே

மக்கள் ஊடாக அவரவருக்கான பதவிகள் கிடைக்கணும்

இதுவே

இன்றைய  தேவை.

அதற்கு புதிதாக ஒரு தலைவரும் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு புதிதாக ஒரு தலைவரும் தேவை.

அவரவரது சேவைகள் ஊடாகவும்

மிகவும் இக்கட்டான காலகட்டத்தில்

இவர்களின் செயற்பாடுகள் ஊடாகவுமே

மக்கள் அடுத்த தலைவரை தெரிவு செய்ய முடியும்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவரவரது சேவைகள் ஊடாகவும்

மிகவும் இக்கட்டான காலகட்டத்தில்

இவர்களின் செயற்பாடுகள் ஊடாகவுமே

மக்கள் அடுத்த தலைவரை தெரிவு செய்ய முடியும்........

நல்லதா போச்சு. அங்குள்ள மக்கள் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.