Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து சோனியாவே தீர்மானிப்பார்?

Featured Replies

Sonia_Manmohan.jpgகொழும்பு பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் மத்திய அமைச்சரவை ஒப்படைத்துள்ளது,

இந்திய மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகாரக்குழு பிரதமர் மன்மோகன்சிங்கின் இல்லத்தில் நேற்று கூடி, கொழும்பு மாநாடு தொடர்பாக ஆராய்ந்தது.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் மன்மோகன் சிங் மாநாட்டில் பங்கேற்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் ஒருமித்த கருத்தை எட்ட முடியாததால், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை சோனியாகாந்தி தலைமையிலான காங்கிரஸ் உயர்மட்டக் குழுவிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இத்தகைய பின்னணியில், டெல்லியில் இன்று இடம்பெறவுள்ள காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில், மன்மோகன்சிங் கொழும்பு மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படுமென அறியமுடிகிறது.

எவ்வாறாயினும், பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை மாநாட்டில் கலந்துகொள்வதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=qg1Pii41hR4

 

தெரிந்த விசயம் தானே...
இப்போ... ராகுல் தம்பியும், சேர்ந்துள்ளதாக.... கதை அடிபடுது. :D  :lol:

நான் போகமாட்டேன் என்றோ, இல்லை கலந்து கொள்வேன் என்றோ உறுதிபட சொல்ல இந்தியா என்ன கனடா போல் அல்லது பிரிட்டன் போல் ஜனநாயக நாடா அல்லது மன்மோகன் சிங் ஸ்ரிபன் கார்பர், கமரூன் போல் சுயபுத்தி உள்ள பிரதமரா? மனதிற்குள் குற்ற மனப்பாங்குடன் அதை மறைக்க கள்ள மௌனத்தை கடைப் பிடிக்கும் திருட்டு முழி நாடல்லவா!

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து சோனியாவே தீர்மானிப்பார்?

 

எதைத்தான்

அவர் சொல்லாமல் இவர் செய்தார்??? :(

  • கருத்துக்கள உறவுகள்

சோனியாவிடம் அதிகாரத்தைக் கொடுத்து போவதுதான் என்கிற முடிவை எடுக்க வைக்கப் போகிறார்கள்.. இதன்மூலம் தமிழகத்துக்கு ஒரு சேதி சொல்லப்படும்.. :o

சோனியா முடிவு எடுப்பதுக்கு எதுக்கடா நாலுதரம் போண்டாவும் டீயும் குடிக்கவா கூடி கதைச்சியல் ஷப்பா :D

சோனியா முடிவு எடுக்க மாட்டார். (முடிவு எடுப்பார், ஆனல் சொல்வது.....)

 

சோனியா முடிவு எடுத்தால் அதை போவதற்காக பாவிக்க முடியாது. அது அவருக்கு "பாரத்தத்தின் அன்னை" என்ற பொலிவூட் ரைடிலை கெடுத்துவிடும். 

 

போவது என்று எடுத்தால் மன்மோகன் சிங் காகவும் போவதில்லை என்று எடுத்தால் "பாரத தாய் முசோலினி அம்மாவாகவும்" காட்டப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்னோவ்டன் கசியவிட்ட அமெரிக்க உளவறியும் இரகசியங்களில், அமெரிக்கா இந்தியாவை உளவு பார்த்ததாக ஒரு தகவலும் இல்லை, கவனித்தீர்களா? ஏன் உளவு பார்ப்பான்? சோனியாவிடம் சிங்கின் பாத்றூம் அட்டவணை கூட இருக்கும் போது இரகசியங்கள் இத்தாலி வழியாக அமெரிக்கா போயிருக்கும்! பிறகேன் உளவு பார்ப்பான்? சுண்டக்காய் நாடுகளில் கூட வெளிநாட்டில் பிறந்த நபர்கள் தலைமைப் பதவிக்கு வரமுடியாது என்று சட்டம் இருக்கு. பிராந்திய வல்லரசு எண்டு பீத்திக் கொள்ளும் இந்தியாவில் ஒரு இத்தாலிப் பெண்ணிடம் திறப்பையே கொடுத்து நடத்தச் சொல்லியிருக்கிறார்கள்! எல்லாம் தூர நோக்கில் தமிழர்களுக்கு நன்மையே! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த டம்மி பீஸ் ஏதாவது காரணம் சொல்லி sri lanka போய்விடும் நாங்கள் வழமையாய் எதிர்பார்த்து ஏமாந்து போவது மாதிரி ஊடகங்களில் ஒரு விம்பம் உருவாக்கப்படும் இது தேவையா ?

  • கருத்துக்கள உறவுகள்

வருவாரா... வரமாட்டாரா... என்ற இழுபறியில்.....
சும்மா..... வாயை,  மூடிக் கொண்டிருந்தே...
பொதுநலவாய மாநாட்டு தலைவர்களில்... மன்மோகன் சிங்(கிங்) சூப்பர் ஸ்ரார் ஆகி விட்டார். :D  :lol:

Edited by தமிழ் சிறி

வருகிறார் மன்மோகன்; 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கும் பயணம் வடக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்பு  news
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதா அல்லது மாநாட்டைப் புறக்கணிப்பதா என இறுதித் தீர்மானமொன்றை எடுப்பதற்காக தடுமாறிவந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், குறித்த மாநாட்டில் பங்கேற்பதென முடிவெடுத்துள்ளார் என்று டில்லி இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

இதேவேளை எதிர்வரும் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதுடன் இந்திய அபிவிருத்தித் திட்டங்களையும் பார்வையிடுவார்.

இதற்கான ஏற்பாடுகளை இந்திய துணைத் தூதரகம் மேற்கொண்டுள்ளதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் மன்மோகன் கலந்து கொள்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆயினும் அவர் மாநாட்டில் பங்கேற்பதற்கு முடிவு செய்துள்ளார் என்று புதுடில்லி வட்டாரங்களில் இருந்து நேற்று இரவு அறிய முடிந்தது.

பிரதமரின் இந்த முடிவை பகிரங்கமாக அறிவித்தால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு மேலும் உக்கிரமடைந்து நிலைமை மோசமடையலாம் என்ற அச்சத்தாலேயே இதுவிடயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு சமாளித்துவருகின்றது.

கொழும்புப் பயணத்துக்கு மத்திய அமைச்சரவை மன்மோகனுக்கு ஒப்புதல் வழங்கினாலும், உள்நாட்டு அரசியல் நெருக்கடி உட்பட முக்கிய சில காரணங்களால் அவரது கொழும்பு பயணத்துக்கு முதல்நாளே மாநாடு குறித்த அறிவிப்பை டில்லி உத்தியோக பூர்வமாக விடுக்கும் எனவும் அவ்வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியாவின் சார்பில் எவரும் பங்கேற்கக்கூடாது என ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்த தமிழக சட்டசபையிலும் இதனை மீள வலியுறுத்தி ஏகமனதாக தீர்மானமொன்றை நிறைவேற்றியது.

அத்துடன், தமிழகத்தில் ஆங்காங்கே மாநாட்டு எதிர்ப்புப் போரும் இடம்பெற்று வருவதால் இந்திய மத்திய அரசுக்கு மாநாடு விடயத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இவை ஒருபுறமிருக்க மறுபுறத்தில் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், வாசன், ஜெயந்தி நடராஜன், அந்தோனி ஆகியோரும் மாநாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டது.

இவ்வாறு எதிர்ப்புகள் வலுத்தாலும், இந்திய வெளியுறவுத்துறை - மாநாட்டில் பிரதமர் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பரிந்துரையை செய்தது.

இதனையடுத்து, இதுவிடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை பிரதமரிடம் ஒப்படைத்துவிட்டு மத்திய கூட்டணி அரசின் பிரதான கட்சியான காங்கிரஸும்  அதிலிருந்த நழுவியது.

எனவே, முடிவெடுக்கும் சக்தி அமைச்சரவைக்கு வழங்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்க மன்மோகன் முடிவெடுத்துள்ளதால் அதற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டும் என்ற கருத்தில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று டில்லி அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

இழுத்தடிப்பை மேற்கொண்டு வந்த பிரதமர் மன்மோகன் சிங் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கும் முடிவை எடுப்பதற்கு கீழ்வரும் காரணங்கள் ஏதுவாக அமைந்தன என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அவற்றில்,
1) தெற்காசிய நாடொன்றில் பொதுநலவாய மாநாடு நடைபெறவுள்ள நிலையில், குறித்த வலயத்தில் பலம் பொருந்திய நாடான இந்தியா அதை புறக்கணிப்பதால் சர்வதேச ரீதியில் ஏற்படும் தாக்கங்கள்.

2) மாநாட்டை புறக்கணித்தால் இலங்கையில் காலூன்றும் சீனாவின் ஆதிக்கம் மேலும் தலைதூக்கம். இதனால் இந்தியாவுக்கு பொருளாதார ரீதியில் இழப்புகள் ஏற்படும் அபாயம்.

3) இலங்கை சம்பந்தப்பட்ட மாநாடு அல்ல. பொதுநலவாய அமைப்பின் மாநாடு. எனவே, அதன் அங்கத்துவ நாடாக இருந்துகொண்டு அதில் பங்கேற்காவிட்டால் எதிர்காலத்தில் ஏற்படும் சர்வதேச நெருக்கடிகள்.

4) இலங்கையுடன் அண்மையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள்.
இவையே பட்டியலில் முன்னிலையில் இருக்கும் காரணிகளாகும்.

அதேவேளை, கொழும்பு மாநாட்டுக்குச் சென்றால் தமிழகத்தில் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கவும் சவுத் புளோக் பிரமருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. அதாவது, இலங்கைப் பயணத்தின் போது யாழுக்கு முதலில் சென்று அங்கு கூட்டமைப்புடன் பேச்சு நடத்தினால் நெருக்கடிகளை ஓரளவேனும் சமாளிக்கலாம் என்பதே அந்த ஆலோசனை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், பிரமதர் மன்மோகனின் பயண நிகழ்ச்சி நிரலை இந்தியா இன்னும் வெளியிடவில்லை. எதுஎப்படியிருந்தபோதிலும், கொழும்பு மாநாட்டுக்கு மன்மோகன் வருவாரா? வரமாட்டாரா என்ற கேள்விக்கு, வருவார் என்ற பதில் தற்போது கிடைத்துள்ளது.

இது தொடர்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகனிடம் சுடர்ஒளி வினவியபோது, "இது காங்கிரஸ் கட்சி சம்பந்தப்பட்ட விடயமல்ல. எனவே, அது குறித்து கருத்து கூறமுடியாது. பொதுநலவாய மாநாடு தொடர்பில் மத்திய அரசே முடிவெடுக்க வேண்டும்'' என்று கூறினார்.

"கொழும்புக்கு இந்தியாவின் சார்பில் ஒரு துரும்புகூட போகக்கூடாது என கலைஞர் கருணாநிதி தெளிவாக கூறியுள்ளார். இதையும் மீறி பிரதிநிதிகள் செல்வார்களாயின் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதற்காக தமிழகம் தயாராகின்றது'' என்று உதயனிடம் கூறினார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=811512427909252510#sthash.mGiCM4Ky.dpuf

மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்?

08 நவம்பர் 2013
Bookmark and Share

மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்?

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் என அந்நாட்டின் முன்னணி ஊடகமான  NDTV தகவல் வெளியி;ட்டுள்ளது.
ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசியல்வாதிகள் உள்ளிட்டத்தரப்பினரின் அழுத்தங்களுக்கு பிரதமர் அடிபணியக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும், அதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அமர்வுகளை பிரதமர் புறக்கணிக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இந்திய அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்ற போதிலும், பிரதமரின் பங்களிப்பு நிச்சயமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அமர்வுகளில் பங்கேற்பது குறித்து ஆராய்வதற்கு இன்றைய தினம் காங்கிரஸின் முக்கிய தலைர்கள் கூடியிருந்தனர்.
கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
எவ்வாறெனினும், கட்சி எவ்வாறான தீர்மானம் எடுத்தது என்பது பற்றி எவரும் தகவல்களை வெளியிடவில்லை.
இதேவேளை, ஏனைய எல்லா விடயங்களை விடவும் தேசிய நலன் முக்கியத்துவம் வாய்ந்தது என கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98705/language/ta-IN/article.aspx

New Delhi: Prime Minister Manmohan Singh is likely to cancel his visit to Commonwealth Heads of Government meeting (CHOGM) in Sri Lanka. Sources close to the development said that a final decision will be out soon. According to sources, the parties attending the Congress core group failed to reach a consensus on the matter. P Chidambaram, who was part of the meet, cited that Tamil sentiments should be taken into view before a decision is finalised. ALSO SEE DMK chief Karunanidhi appeals to PM to boycott CHOGM However, a last minute effort is being made to convince AIADMK and DMK that foreign policy should be taken into consideration. The Prime Minister has come under intense preassure over his scheduled visit to the island nation. DMK chief Karunanidhi appealed to the Prime Minister once again to boycott the CHOGM in Sri Lanka. "The Prime Minister has a conscience, enough if acts according to his conscience. I did not threaten on withdrawing support. It's been long time since we withdrew our support," Karunanidhi said. Political parties and various groups in Tamil Nadu are strongly opposed to India's participation in the summit and the Tamil Nadu Assembly recently adopted a resolution demanding a complete boycott of the event alleging that Sri Lanka has indulged in atrocities against ethnic Tamils. The government is in a dilemma over the issue with some sections feeling that the Prime Minister's absence at the CHOGM could affect India's image internationally and hence he must participate.

Read more at: http://ibnlive.in.com/news/prime-minister-to-cancel-chogm-meet-in-sri-lanka/433012-37-64.html?utm_source=ref_article

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இலங்கையுடன் பேரம் படியவில்லை போல.. அதுதான் இந்த இழுப்பு இழுக்கினம்.. எதுவாக இருந்தாலும் சிங்களவன் பயப்பிடான்.. சிங் போகாவிட்டால் இந்தியா உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்தப்படும் - காரியவாசம்.. :D

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் இரு தரப்பு உறவுகளின் திருப்பு முனையாக அமையும்; தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டு news

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் இலங்கை விஜயம் இரு தரப்பு உறவுகளின் திருப்பு முனையாக அமையும் என சிரேஸ்ட ராஜதந்திரியும் முன்னாள் பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவருமான கலாநிதி தயான் ஜயலதிக்க தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இந்திய பிரதமர் பங்கேற்காவிட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் நிச்சயமாக இடைவெளி ஏற்படும்,

(இலங்கையில் மகிந்த அரசராக வேண்டிய தேவையை யாரின் வருக்கையும் மாற்றாது)

பிரதமர் அமர்வுகளை புறக்கணித்தால் அது குறிப்பாக சிங்கள மக்களின் நம்பிக்கையில் பெரு விரிசலை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(இது சிக்கலான சூத்திரம். இந்தியாவிடமிருந்து இப்போது விலகுவது சிங்கள மக்கள் அல்ல, மகிந்தாவே. சிங்கள மக்கள் மன்மோகன் வந்தால் அவருக்கு வாக்களிக்கப் போவதில்லை. அவர்கள் ஒரே ஒருவருக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள். அது மகிந்தாவுக்கு. மன்மோகன் வந்து யாழ்ப்பாணம்(வடக்கு) போனால் சிங்கள மக்கள், பிரபாகரனுக்கு விட்டுக்கொடுக்காத  மகிந்தா விக்கினேஸ்வரனால் தோற்கடிக்கப்பட்டத்தாகவே கருதுவார்கள். இதனால் சிங்கள மக்கள் இந்தியாவிலிருந்து மேலும் விலகுவார்கள். தயான் தனது தலிவரை காப்பதாக நினைத்து  இப்படி பிழையான அறிவுரை கொடுத்து அவரைக் கெடுக்கிறார். இதே பிழையைத்தான் இவர் பிரான்சில் விட்டு அங்கே பதவி பறி போனது)

 

 

அமர்வுகளில் பங்கேற்காது தமிழர்களுக்கு அரசியல் தீர்வுத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தியாவின் முனைப்புக்களில் பாதக விளைவுகளை ஏற்படுத்தும். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது.

(இந்தியா குற்றவாளிகளை விசாரிக்கும் படி இலங்கையை கேட்பதாக நடித்து, இந்தியா ஐ.நா.வில் போர்குற்றம் வரவிடாமல் இலங்கையை பாதுகாத்துவருவதை மூடி போட்டு மறைக்கிறார். கலோ தயான் இந்தியா விசாரணைக்கு எதிரானது-அதாவது மன்மோகன் சிங் வந்தால் விசாரணை பின்னடைவைத்தான் சந்திக்கும்.).

 

இந்திய இலங்கை உறவுகளில் விரிசல் ஏற்பட்டால் அது பிராந்திய வலயத்தையே பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

(அதை தேடித்தானே மகிந்தாவும் நீங்கள் எல்லோரும் சீனாவிடம் சென்று மண்டியிட்டனீர்கள். இப்போது இது என்ன வெள்ளைக்கதை?. சீனவிடம் ஆயுதம் வாங்கி போர் செய்யும் போது இந்த அறிவுரையை இலங்கைக்கும், இந்தியாவுக்கும் கொடுத்திருக்கலாமே)

 

வரலாற்றில் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் சரியான அதிகாரப் பகிர்வு பொறிமுறைமை ஒன்றை அறிமுகம் செய்ய வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(தேர்தலில் நிற்பது மகிந்தா. தயான் அல்ல. சிங்கள மக்கள் அதிகாரப் பகிர்வை கொடுக்க வேண்டாம் என்று மகிந்தாவுக்கு வாக்களித்தபடியால் அவரும்  கொடுக்கப் போவதில்லை. இதில், தேர்தல் தேவைகளை தவிர்த்து இந்தியா உள்நாட்டு விவகாரம் என்று சொல்லி இனியும் தலையிடாது.) 

Home Share on email Share on print
Google0 0 0 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=171832430209247439#sthash.bn2jESDa.dpuf

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங் போகாவிட்டால் பெரிதாக ஒன்றும் நடந்து விடாது. இந்தியா முழுமையாக பகிஷ்கரித்தால் அது, ஒரு மெசேஜ் சொல்லும். இருந்தாலும், சிங் வரப்போகிறார் என்று இந்திய தூதரகம் ஏற்பாடுகளை செய்கிறது. சிங் போவதாக அறிவிக்கும் நாளில், இந்தியாவில் வேறு ஏதாவது சென்சேஷன் நியூஸை கிளப்பி விடுவார்கள். அது, இந்த நியூஸை மேவிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் இரு தரப்பு உறவுகளின் திருப்பு முனையாக அமையும்; தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டு news

 

இந்தியப் பிரதமர், இலங்கைக்கு விஜயம் செய்யாவிட்டாலும்....

இரு தரப்பு உறவுகளும்... திருப்பு முனையாக அமையும். :)

 

மலையாளத்தில், "புலி வாலைப் பிடித்த நாயர்" என்று பழமொழி உண்டு.

இலங்கையில் மாநாட்டை நடத்த வேண்டும் என்று... முன்னுக்கு நின்று உழைத்த இந்தியா....

இப்ப அதனாலேயே.... தர்ம சங்கட நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது.

என்ன... செய்வது விதைத்ததைத்தான்... அறுவடை செய்ய முடியும். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியப் பிரதமர், இலங்கைக்கு விஜயம் செய்யாவிட்டாலும்....

இரு தரப்பு உறவுகளும்... திருப்பு முனையாக அமையும். :)

 

மலையாளத்தில், "புலி வாலைப் பிடித்த நாயர்" என்று பழமொழி உண்டு.

இலங்கையில் மாநாட்டை நடத்த வேண்டும் என்று... முன்னுக்கு நின்று உழைத்த இந்தியா....

இப்ப அதனாலேயே.... தர்ம சங்கட நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது.

என்ன... செய்வது விதைத்ததைத்தான்... அறுவடை செய்ய முடியும். :D

மலையாள பழமொழியா.. துலைஞ்சுது! நம்ம அதிரடிப் படை உங்களை மலையாளி ஆக்க போகுது. ஜாக்கிரதை

  • கருத்துக்கள உறவுகள்

மலையாள பழமொழியா.. துலைஞ்சுது! நம்ம அதிரடிப் படை உங்களை மலையாளி ஆக்க போகுது. ஜாக்கிரதை

 

அதிரடிப்படையா... புலநாய்வுப் படையா... சபேசன்36dog_smiley.gif. :D  :lol:

மன்மோகன் இலங்கை செல்லப்போவதில்லை?!

— 08/11/2013 at 11:14 pm | no comments

ndtv-logoஇந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார் என அந்நாட்டின் முன்னணி ஊடகமான  NDTV தகவல் வெளியிட்டுள்ளது. ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசியல்வாதிகள் உள்ளிட்டத்தரப்பினரின் அழுத்தங்களுக்கு பிரதமர் அடிபணியக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகவும், அதற்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அமர்வுகளை பிரதமர் புறக்கணிக்க வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இந்திய அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்ற போதிலும், பிரதமரின் பங்களிப்பு நிச்சயமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அமர்வுகளில் பங்கேற்பது குறித்து ஆராய்வதற்கு இன்றைய தினம் காங்கிரஸின் முக்கிய தலைர்கள் கூடியிருந்தனர்.

கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

எவ்வாறெனினும், கட்சி எவ்வாறான தீர்மானம் எடுத்தது என்பது பற்றி எவரும் தகவல்களை வெளியிடவில்லை.

இதேவேளை, ஏனைய எல்லா விடயங்களை விடவும் தேசிய நலன் முக்கியத்துவம் வாய்ந்தது என கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

 

http://tamilleader.com/?p=22799

புறக்கணிப்பு குறித்து மகிந்தவுக்கு நாளை கடிதம் எழுதுகிறார் மன்மோகன்சிங் – பிரிஐ தகவல்
[ சனிக்கிழமை, 09 நவம்பர் 2013, 13:56 GMT ] [ கார்வண்ணன் ]
கொமன்வெல்த் மாநாட்டைத் தாம் புறக்கணிப்பது தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் நாளை கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் இந்தியப் பிரதிநிதித்துவ மட்டம், மற்றும் கொமன்வெல்த் மாநாட்டில் இருந்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விலகிக் கொள்வது தொடர்பாக,சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாளை தெரியப்படுத்தப்படவுள்ளது.

கொமன்வெல்த் மாநாட்டில் இருந்து விலகிக் கொள்வது தொடர்பான தனது முடிவு குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நாளை இந்தியப் பிரதமர் கடிதம் எழுதக் கூடும் என்று இந்திய அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும். கொமன்வெல்த் மாநாட்டில் இருந்து மன்மோகன்சிங் விலகிக் கொள்வது தொடர்பான முடிவு இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அதேவேளை இந்தியக் குழுவுக்கு வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமை தாங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மன்மோகன்சிங் கொழும்பு செல்வதை தவிர்த்தால், துணைக்குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி இந்தியக் குழுவுக்குத் தலைமை தாங்குவாரா என்று எழுப்பிய கேள்விக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையட் அக்பருதீன் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.

எனினும். 1993ம் ஆண்டுக்குப் பின்னர் நடந்துள்ள 10 கொமன்வெல்த் மாநாடுகளில், 5 தடவைகள் மாத்திரமே இந்தியாவின் சார்பில் பிரதமர் பங்கேற்றுள்ளதாகவும், 4 முறை அமைச்சர்களே தலைமையேற்றுள்ளதாகவும ஒருமுறையே துணைக்குடியரசுத் தலைவர் தலைமை தாங்கிச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20131109109399

சோனியாவும் வலியுறுத்தினார்: மன்மோகன் சிங் இலங்கை வரமாட்டார் ?November 9, 2013  11:05 amBookmark and Share
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும் இதே கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனினும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பார் என தெரிகிறது. இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து இலங்கை அரசிடம் இதுவரை அதிகாரப் பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

காமன்வெல்த் மாநாட்டில்,பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் இலங்கை செல்லக்கூடாது என வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

 

http://tamil.adaderana.lk/news.php?nid=47473

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிப்பு குறித்து மகிந்தவுக்கு நாளை கடிதம் எழுதுகிறார் மன்மோகன்சிங் – பிரிஐ தகவல்

------

 

அட... இந்த "பொதுநலவாய, மானாட மயிலாட மாநாடு" செம காமெடியாருக்கப்பா...

கடிதம் எழுதுற வருத்தம், மத்திய அரசுக்கும்... தொத்தினது சந்தோசம்.

அதற்கு... முன்னோடியாக, இருந்த தமிழகத் தலைவர்களை... வாழ்த்த வயதில்லை, வணங்குகின்றேன். :D  :lol: 

'இலங்கை மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ளமாட்டார்'
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 நவம்பர், 2013 - 16:01 ஜிஎம்டி

இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டுக்கான இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் அவர்களே தலைமை தாங்குவார் என்று பிடிஐ செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டி, இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்க வட்டாரங்கள் கூறியதாக வந்துள்ள இந்தச் செய்திகளின்படி, இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என்பது குறித்து இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஞாயிறன்று பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து இலங்கை ஜனாதிபதிக்கு அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டார் என்ற இந்த முடிவு குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பினரும் இந்தியப் பிரதமர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என்று கேட்டிருந்தனர்.
அதேவேளை திமுக தலைவர் கருணாநிதி, பிரதமரின் இந்த முடிவு தமக்கு ஓரளவு ஆறுதல் தருவதாகக் கூறியுள்ளார். அந்த மாநாட்டில் இந்தியா முழுமையாக கலந்துகொள்ளக் கூடாது என்பதுதான் தமது கோரிக்கை என்றும், ஆனாலும் பிரதமரின் முடிவு தமக்கு ஓரளவாவது ஆறுதலைத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131109_chogmmanmohan.shtml

Edited by மல்லையூரான்

Karuna welcomes PM's decision to skip CHOGM
Chennai: DMK President M Karunanidhi today welcomed Prime Minister Manmohan Singh''s decision not to take part in the Commonwealth Summit in Sri Lanka in view of opposition by political parties in Tamil Nadu and said it came as "some consolation" 

 

Khurshid to head delegation at CHOGM Summit
New Delhi: External Affairs Minister Salman Khurshid will head the Indian delegation at the CHOGM Summit to be held in Sri Lanka next week with Prime Minister Manmohan Singh deciding against undertaking the visit in view of the opposition by parties in Tamil Nadu as well as a section in Congress.

 

http://www.ptinews.com/news/-dyalsty#dv1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.