Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!

Featured Replies

  • தொடங்கியவர்

01 கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?

முதலாவது பதில்: வில்லோ. மரம் மற்றும் ஓக் மரம்

02 நறுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது?

இரண்டாவது பதில்: வெற்றிவேற்கை

03 “ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏல் என்றால் ஏலாய்” எனக்கூறியவர் யார்?

மூன்றாவது பதில்: ஒளவையார்

04 குறிப்பு பெயரெச்சம் என்றால் என்ன ?

நான்காவது பதில்: காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு

முடியும் எச்சச்சொல் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

05 திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள் யார் யார் ?

ஐந்தாவது பதில்:

கருடாம்சம்        பெரியாழ்வார்

சுதர்சனம்            திருமழிசையாழ்வார்

பாஞ்சசன்யம்     பொய்கையாழ்வார்

களங்கம்             திருமங்கையாழ்வார்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

 01 வில்லோ மரம்

02 வெற்றிவேற்கை

03 நல்வழிப்பாடலில் ஒளவையார் கூறுகிறார்

04 காலத்தையோ, செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும். உதாரணம் : நல்ல மாணவன் , அழகிய மலர்

05 பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்

கருடாம்சம்    - பெரியாழ்வார்

சுதர்சனம் - திருமழிசையாழ்வார்

களங்கம் -  திருமங்கையாழ்வார்

 புயல் சரியான பதிலை சொல்லியிருப்பதால் அவருக்கே இந்தமுறை பரிசு செல்கின்றது .

  • Replies 306
  • Views 25.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

01 ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?

அல்பேனியா

02 பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?

சுவிட்சர்லாந்து.

03 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் என்ன ?

மலைபடும்கடாம்

04 தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் ?

செயப்படுபொருள் – எழுவாய் – பயனிலை

05 மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி யார் ?

அறவண அடிகள்

Edited by கோமகன்

01 ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?

முதலாவது பதில்: அல்பேனியா

02 பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?

இரண்டாவது பதில்: சுவிஸ்.

03 99 வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் என்ன ?

மூன்றாவது பதில்: மலைபடுகடாம்

04 தமிழின் தொடர் அமைப்பு எந்த அடிப்படையில் அமையும் ?

நான்காவது பதில்: செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்னும் அடிப்படையில் தமிழின் தொடர் அமைப்பு அமையும்.

05 மணிமேகலைக்கு உதவிய பெளத்தமதத் துறவி யார் ?

ஐந்தாவது பதில்: அறவண அடிகள்.

Edited by Puyal

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 அல்பேனியா

02 சுவிட்சர்லாந்து.

03 மலைபடும்கடாம்

04 செயப்படுபொருள் – எழுவாய் – பயனிலை

05 அறவண அடிகள்

புயல் நீங்கள் ஒரேதடவையில் சரியான பதிலைத் தந்தாலும் போட்டி விதிமுறையை மீறி அழித்து எழுதியமையால் உங்களுக்கு பரிசு தரமுடியவில்லை . ஆனாலும் , உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும் மனங்கனிந்த பராடுக்களும் உரித்தாகுக :) :) .

  • தொடங்கியவர்

01 கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் யார் ?

இரட்டைப் புலவர்

02 தொல்காப்பியத்தின் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது ?

அகத்திணை, புறத்திணை.

03 தென்னவன் பிரமராயன் என்ற விருதைப் பெற்ற நாயன்மார் யார் ?

மாணிக்கவாசகர்

04 அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் யார் ?

குலசேகரர்

05 உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?

கருவிழி

Edited by கோமகன்

01 கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் யார் ?

முதலாவது பதில்: இரட்டைப் புலவர் (முதுசூரியர், இளஞ்சூரியர்)

02 தொல்காப்பியத்தின் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது ?

இரண்டாவது பதில்: தமிழ் நூல்கள் சொல்லும் பொருளையும் சொல்லும் பாங்கினையும் கூறுவது பொருளதிகாரம்.

03 தென்னவன் பிரமராயன் என்ற விருதைப் பெற்ற நாயன்மார் யார் ?

மூன்றாவது பதில்: மாணிக்கவாசகர்.

04 அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் யார் ?

நான்காவது பதில்: குலசேகரர்.

05 உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?

ஐந்தாவது பதில்: கண்ணின் கருமணி.

  • தொடங்கியவர்

01 கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் யார் ?

முதலாவது பதில்: இரட்டைப் புலவர் (முதுசூரியர், இளஞ்சூரியர்)

02 தொல்காப்பியத்தின் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது ?

இரண்டாவது பதில்: தமிழ் நூல்கள் சொல்லும் பொருளையும் சொல்லும் பாங்கினையும் கூறுவது பொருளதிகாரம்.

03 தென்னவன் பிரமராயன் என்ற விருதைப் பெற்ற நாயன்மார் யார் ?

மூன்றாவது பதில்: மாணிக்கவாசகர்.

04 அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் யார் ?

நான்காவது பதில்: குலசேகரர்.

05 உடலில் இரத்தம் பாயாத பகுதி எது ?

ஐந்தாவது பதில்: கண்ணின் கருமணி.

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 இரட்டைப் புலவர்.

02 அகத்திணை, புறத்திணை.

03 மாணிக்கவாசகர்.

04 குலசேகரர்.

05 கருவிழி.

புயல் நீங்கள் ஒரேதடவையில் 4 கேள்விக்கு சரியான பதிலைத் தந்தாலும்  2 ஆவது கேள்வியில் சறுக்கிவிட்டீர்கள் . சரியான பதில் , தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் இலக்கணம் கூறுகின்றது . உங்களுக்கு பரிசு தரமுடியவில்லை . ஆனாலும் , உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும் மனங்கனிந்த பராடுக்களும் உரித்தாகுக :) :) .

  • தொடங்கியவர்

01 காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?

சிக்காகோ

02 குண்டலகேசியின் ஆசிரியர் யார் ?

நாதகுத்தனார்

03 இரண்டாம் குலோத்துங்க மன்னனின் சிறப்பு பெயர் என்ன ?

கிருமி கண்ட சோழன்

04 அமில மழை என்றால் என்ன ?

காற்றில் கலந்துள்ள மாசுக்களான சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றின் ஆக்சைடுகள் எளிதில் மழை நீரில் கரைந்து அமிலங்களை தோற்றுவிக்கின்றன. இதற்கு அமில மழை என்று பெயர்.

05 திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனை வழிபட்டவர் யார் ?

காரைக்கால் அம்மையார்
 
Edited by கோமகன்

1. சிக்காகோ 2. நாதகுத்தனார் 3. கிருமி கண்ட சோழன் 4. மழை பெய்யும்போது அதில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும் 5. காரைக்கால் அம்மையார்

  • கருத்துக்கள உறவுகள்

01 காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?

சிக்காகோ

02 குண்டலகேசியின் ஆசிரியர் யார் ?

நாதகுத்தனார்

03 இரண்டாம் குலோத்துங்க மன்னனின் சிறப்பு பெயர் என்ன ?

கிருமி கண்ட சோழன்

04 அமில மழை என்றால் என்ன ?

சில சமயங்களில் மழை பெய்யும்போது அதில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும். அந்த மழையை `அமில மழை’ என்கிறார்கள். சாதாரணமாகப் பெய்யும் மழையில் அமிலத்தன்மை மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால், வானவெளியில் உள்ள கரியமில வாயு மழைநீருடன் கலந்து வீரியமில்லாத கார்பானிக் அமிலமாக மாறிவிடுகிறது. அமில மழையிலோ, கந்தகமும், நைட்ரஜன் ஆக்சைடுகளும் கலந்துவிடுவதால் கந்தக மற்றும் நைட்ரிக் அமிலங்கள் உருவாகிவிடுகின்றன. அதை, `வீரியம் மிக்க அமில மழை’ என்கிறார்கள்.

05 திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனை வழிபட்டவர் யார் ?

காரைக்கால் அம்மையார்

01 காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?

முதலாவது பதில்: சிக்காக்கோ 

02 குண்டலகேசியின் ஆசிரியர் யார் ?

இரண்டாவது பதில்: நாதகுத்தனார்

03 இரண்டாம் குலோத்துங்க மன்னனின் சிறப்பு பெயர் என்ன ?

மூன்றாவது பதில்: கிருமி கண்ட சோழன்

04 அமில மழை என்றால் என்ன ?

நான்காவது பதில்: சல்பூரிக் அமிலமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்தது அமில மழை எனப்படும்.

05 திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனை வழிபட்டவர் யார் ?

ஐந்தாவது பதில்: காரைக்கால் அம்மையார்

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 சிக்காகோ

02 நாதகுத்தனார்

03 கிருமி கண்ட சோழன்

04 காற்றில் கலந்துள்ள மாசுக்களான சல்பர் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றின் ஆக்சைடுகள் எளிதில் மழை நீரில் கரைந்து அமிலங்களை தோற்றுவிக்கின்றன. இதற்கு அமில மழை என்று பெயர்.

05 காரைக்கால் அம்மையார்

தமிழினி 4 ஆவது கேள்விக்குப் போதிய விளக்கம் இல்லாதகாரணத்தால் பரிசு பறிபோகின்றது  . புயல் சரியான பதில் சொன்னாலும் , நுணாவே போட்டிவிதிப்படி பரிசைத் தட்டிச் செல்கின்றார் . அனைவருக்கும் எனது  வாழ்த்துக்கள்  :)  :)  .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 வினைத்தொகை என்றால் என்ன?
 
மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப்பெற்று வரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

02 தமிழ் இலக்கணத்தில் இரட்டைக்கிளவி என்றால் என்ன?

ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தராது அதுவே இரட்டைக்கிளவி ஆகும்.

03 முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?

இத்தாலி

04 உருத்திராக்கம் தரிக்கத் தக்க இடங்கள் யாவை?

குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள்,

05 பஞ்சகவ்வியம் என்பது யாது?

பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசுவின் சாணம், பசுவின் சிறுநீர்
 
Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

01 வினைத்தொகை என்றால் என்ன?

மூன்று காலத்துக்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தளுவப்பெற்று வரும் தொடரே வினைத்தொகை ஆகும். உ+ம் : ஊறுகாய், படர்கொடி

02 தமிழ் இலக்கணத்தில் இரட்டைக்கிளவி என்றால் என்ன?

ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால்

 பொருளைத்தராது அதுவே இரட்டைக்கிளவி ஆகும்.

(.கா)

சலசல,கலகல

மேற்கண்ட வார்த்தைகளை சல,கல என பிரித்தால் பொருளைத் தராது.எனவே அது இரட்டைக்கிளவி எனப்படும்.

03 முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?

இத்தாலி

04 உருத்திராக்கம் தரிக்கத் தக்க இடங்கள் யாவை?

குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள்.

05 பஞ்சகவ்வியம் என்பது யாது?

பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசுவின் சாணம், பசுவின் சிறுநீர் .

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

1 மூன்று காலத்திற்கும் பொருந்தி பெயர்ச்சொல்லால் தழுவப்பெற்று வரும் தொடரே வினைத்தொகை ஆகும்.

2 ஒரு சொல் தொடர்ந்து இரண்டுமுறை வரும்.ஆனால் தனித்தனியே அவற்றைப் பிரித்தால் பொருளைத்தராது அதுவே இரட்டைக்கிளவி ஆகும்.

3 இத்தாலி

4 குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள்,

5 பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசுவின் சாணம், பசுவின் சிறுநீர்

ஒரேதடவையில் பதிலைத் தந்த நுணாவுக்கு இந்த முறை பரிசு அழிக்கப்படுகின்றது :) :) .

  • தொடங்கியவர்

01 திருவிழா என்றால் என்ன ?

ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவுக்கு திருவிழா என்று பெயர்.

02 யார் யார் திருவிழாவில் பஞ்சமூர்த்திகளாக பவனி வருவார்கள்  ?

விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் (சிவபெருமான்), பார்வதி, சண்டீசர் .

03 டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

மன்சூர் அலிகான் பட்டோடி.

04 முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனது சிறப்புப் பெயர் என்ன ?
 
பொன்வேய்ந்த பெருமாள்.

05 தமிழ் இலக்கணத்தில் தொடை என்றால் என்ன ? அவை எத்தனை வகைப்படும் ?  அதன் விபரங்கள் யாது ?

எழுத்துகள் ஒன்றி வர தொடுப்பது தொடை ஆகும் . இவை எதுகைத்தொடை , மோனைத்தொடை, முரண்தொடை, இயைபுதொடை, அளபெடைத்தொடை என ஐந்து வகைப்படும் .

Edited by கோமகன்

01 திருவிழா என்றால் என்ன ?

ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவுக்கு திருவிழா என்று பெயர். இதனை மகோத்ஸவம் எனவும் கூறுவர்.

02 யார் யார் திருவிழாவில் பஞ்சமூர்த்திகளாக பவனி வருவார்கள்  ?

விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் (சிவபெருமான்), பார்வதி, சண்டீசர்

03 டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

மன்சூர் அலிகான் பட்டோடி

04 முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனது சிறப்புப் பெயர் என்ன ?

மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான்

05 தமிழ் இலக்கணத்தில் தொடை என்றால் என்ன ? அவை எத்தனை வகைப்படும் ?  அதன் விபரங்கள் யாது ?

எழுத்துக்கள் புணர்ந்து சொற்களைப் பிறப்பிக்க சொற்கள் புணர்ந்து சொற்றொடர்கள் உருவாகின்றன. இத் தொடர்களை செய்யுளில் பயன்படுத்தும்போது ஓசை இனிமைக்காகவும் பொருள் நயத்திற்காகவும் வகுக்கப்பட்ட ஒரு இலக்கண வகையே தொடை ஆகும். சிறுசிறு பூக்களைக் கொண்டு அலங்காரமாக ஒரு மாலை தொடுத்தல் போல சொற்களை ஒரு முறைப்படி தொடுத்து பா இயற்றும்போது பாடலுக்கு அது மெருகூட்டுகிறது. இத் தொடைகள் எண்வகைப்படும் என்று இலக்கண விளக்கம் கூறுகிறது. ஆய்வு முயற்சியால் ஒன்பதாவதாக ஒரு தொடையும் இலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது தெரிய வந்தது.

மோனை, இயைபு, எதுகை, முரண், அளபெடை (அளபு), அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடை ஆகும். அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேல்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என்ற எட்டும் தொடை விகற்பங்கள் ஆகும். எண்வகைத் தொடைகளில் மோனை, இயைபு, எதுகை மற்றும் அளபெடைத் தொடைகள் சொல்லில் உள்ள எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுபவை. முரண் தொடை, அந்தாதித் தொடை மற்றும் இரட்டைத் தொடைகள் சொற்களை அடிப்படையாகக் கொண்டு இயற்றப் படுபவை. ஒன்பதாவதாக வருகின்ற இப் புதிய தொடையும் சொற்களின் அடிப்படையில் அமைக்கப் படுவதே ஆகும்.

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவுக்கு திருவிழா என்று பெயர்.

02 விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ்கந்தர் (சிவபெருமான்), பார்வதி, சண்டீசர் .

03 மன்சூர் அலிகான் பட்டோடி.

04 பொன்வேய்ந்த பெருமாள்.

05 எழுத்துகள் ஒன்றி வர தொடுப்பது தொடை ஆகும் . இவை எதுகைத்தொடை , மோனைத்தொடை, முரண்தொடை, இயைபுதொடை, அளபெடைத்தொடை என ஐந்து வகைப்படும் .

மயூரன் ஒரேதடவையில் பதில் தந்தாலும் , 4 ஆவது 5 ஆவது பதிலில் சறுக்கியுள்ளீர்கள். ஆதனால் என்னால் பரிசு தரமுடியவில்லை . ஆனாலும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள் .

  • தொடங்கியவர்

01 எந்த ஆண்டு மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன?

1630

02 மண்பாண்டம் செய்யும் கலையையும், வேளாண்மைத் தொழிலையும், படகு கட்டி கடலை கடக்கும் தொழிலை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்?
 
ஆஸ்திராலாய்டுகள்.

03 தொல்காப்பியத்தில் அகப்பொருள் உரைக்கும் நான்கு இயல்கள் எவை ?

திணையியல்

களவியல்

கற்பியல்

பொருளியல்

04 தமிழ் இலக்கணத்தில் வினையாலணையும் பெயர் என்றால் என்ன ? உதாரணம் தருக?

ஒரு வினைமுற்று சொல் தன் வினைமுற்றுப் பொருளைக் காட்டாமல் வினை செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச்சொல்லாக வருவதே வினையாலணையும் பெயர் ஆகும்..
உதாரணம் : படித்தவன், கண்டவர் , சென்றனன்

05 சிவன் கோவில்களில் ஆறாதார ஸ்தலங்களை வரிசைப்படுத்துக ?

திருவாரூர் (மூலாதாரம்)
திருவானைக்கா (சுவாதிஷ்டானம்)
திருவண்ணாமலை, (மணிபூரகம்)
சிதம்பரம், (அநாகதம்)
திருக்காளத்தி, (விசுத்தி)
காசி (ஆக்ஞை)

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

01 எந்த ஆண்டு மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன?

1630

02 மண்பாண்டம் செய்யும் கலையையும், வேளாண்மைத் தொழிலையும், படகு கட்டி கடலை கடக்கும் தொழிலை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்?

ஆஸ்திராலாய்டுகள். 

03 தொல்காப்பியத்தில் அகப்பொருள் உரைக்கும் நான்கு இயல்கள் எவை ?

அறம், பொருள், இன்பம், வீடு

04 தமிழ் இலக்கணத்தில் வினையாலணையும் பெயர் என்றால் என்ன ? உதாரணம் தருக ?

"ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உறுப்பு ஏற்றும், ஏற்காமலும் வேறொரு பயனிலையைக்கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் ஆகும்."

வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.

மேற்கண்ட விளக்கங்களைப்போல் வினையாலணையும் பெயரைக் கண்டறிவது புரியாததோ, கடினமானதோ அல்ல. மிகவும் எளிது. 

உதாரணம் : "கொடு" என்பதன் வினையாலணையும் பெயர் எது ?

அ.கொடுத்து

ஆ.கொடுத்த

இ.கொடுத்தல்

ஈ.கொடுத்தவள்

விடை : ஈ.கொடுத்தவள் (மூன்று இடங்களிலும், மூன்று காலங்களிலும் உணர்த்தி வந்துள்ளது)

05 சிவன் கோவில்களில் ஆறாதார ஸ்தலங்களை வரிசைப்படுத்துக ?

(மூலாதாரம்) திருவாரூர், (சுவாதிஷ்டானம்) திருவானைக்கா, (மணிபூரகம்) திருவண்ணாமலை, (அநாகதம்) சிதம்பரம், (விசுத்தி) திருக்காளத்தி, (ஆக்ஞை) காசி என்னும் ஆறுமாம். (கயிலையை சஹஸ்ரதளமாகவும், மதுரையை துவாதசாந்தமாகவும் கூறுவர்.)

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 1630

02 ஆஸ்திராலாய்டுகள்.

03 திணையியல்

    களவியல்

    கற்பியல்

    பொருளியல்

04 ஒரு வினைமுற்று சொல் தன் வினைமுற்றுப் பொருளைக் காட்டாமல் வினை செய்தவனையோ அல்லது பொருளையோ குறிக்கும் பெயர்ச்சொல்லாக வருவதே வினையாலணையும் பெயர் ஆகும்..

உதாரணம் : படித்தவன், கண்டவர் , சென்றனன்

05திருவாரூர் (மூலாதாரம்)

திருவானைக்கா (சுவாதிஷ்டானம்)

திருவண்ணாமலை, (மணிபூரகம்)

சிதம்பரம், (அநாகதம்)

திருக்காளத்தி, (விசுத்தி)

காசி (ஆக்ஞை)

நுனாவிலான் ஒரேதடவையில் பதில் சொல்லியிருந்தாலும் 3 ஆவது கேள்விக்கான பதில் சரியாக இல்லாத காரணத்தினால் அவருக்குப் பரிசு வழங்க முடியவில்லை

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 யார் யார் திருக்கயிலாய  சந்தான குரவர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ?
 
மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்த சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் .

02 பரஞ்சோதி மாமுனிவருக்கு குருவானவர்  யார்?
 
சத்தியஞான தரிசனிகள்.

03 மரதன் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை
கடப்பதாகும்?

26 மைல்கள்

04 ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?

1920

05 ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை எழுதியவர் யார் ?

கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

*** எழுத்துப்பிழை திருதப்பட்டது

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

01 யார் யார் திருக்கயிலாய  சந்தான குரவர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ?

மெய்க்கண்டார், அருள் நந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகிய நால்வரும் சந்தான குவர் எனப்படுவர். 

02 பரஞ்சோதி மாமுனிவருக்கு குருவானவர்  யார்?

சத்தியஞான தர்சினி

03 மரதன் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை

கடப்பதாகும்?

42.195 kilometres (26 miles and 385 yards)

04 ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?

1920

05 ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மனிமேகலையை எழுதியவர் யார் ?

சீத்தலைச் சாத்தனார்

  • கருத்துக்கள உறவுகள்

01 யார் யார் திருக்கயிலாய  சந்தான குரவர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ?

     திருநந்திதேவர், சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார்

02 பரஞ்சோதி மாமுனிவருக்கு குருவானவர்  யார்?

     சத்தியஞான தரிசினிகள்

03 மரதன் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்?

     26.2 மைல்

04 ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?

     1920

05 ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மனிமேகலையை எழுதியவர் யார் ?

     சீத்தலைச் சாத்தனார் (சீழ்த்தலைச் சாத்தனார்)

கோமகன் சார் அது மனிமேகலை இல்லை மணிமேகலை சார். :)

பெண்ணின் இடையில் ஆடும் மேகலையினை இடைதழுவி அவிழ்த்து விடுவதும் காதலில் இன்பம் பயக்கும்  :rolleyes: 

  • தொடங்கியவர்

கோமகன் சார் அது மனிமேகலை இல்லை மணிமேகலை சார். :)

பெண்ணின் இடையில் ஆடும் மேகலையினை இடைதழுவி அவிழ்த்து விடுவதும் காதலில் இன்பம் பயக்கும்  :rolleyes: 

ஆஹா ...................... அது...........  :lol:  :D .  இதுக்குத்தான் ஐயா தொடர்ந்து எழுதவேண்டும் என்று சொன்னேன் . பிழை திருத்தப்பட்டுள்ளது :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.