Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் எறிந்த கேள்வியும் நீங்கள் பிடித்த பதிலும் !!!!!!!!!!

Featured Replies

01 யார் யார் திருக்கயிலாய  சந்தான குரவர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ?

முதலாவது பதில்: உமாபதி சிவாச்சாரியார், மெய்கண்டதேவர், அருணந்தி சிவாச்சாரியார் மற்றும் மறைஞானசம்பந்த சிவாச்சாரியார்.

02 பரஞ்சோதி மாமுனிவருக்கு குருவானவர்  யார்?

இரண்டாவது பதில்: சத்திய ஞான தரிசனிகள்.

03 மரதன் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை
கடப்பதாகும்?

மூன்றாவது பதில்: 26 மைல்கள் 385 யார்கள்.

04 ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?

நான்காவது பதில்: 1920.

05 ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை எழுதியவர் யார் ?

ஐந்தாவது பதில்: சீத்தலைச்சாத்தனார்.

  • Replies 306
  • Views 25.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01  மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்த சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் .

02 சத்தியஞான தரிசனிகள்.

03 26 மைல்கள்

04 1920

05 கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

நுணாவிலான் ஒரேதடவையில் பதில் சொல்லியதால் அவருக்கே இந்தமுறை பரிசு வழங்கப்படுகின்றது .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 ஒருவர் இருமும்பொழுது அந்த இருமலின் வேகம் மணிக்கு எவ்வளவு வேகமாக இருக்கும் ?

மணிக்கு 100 கிலோ மீட்டர் .

02 எரிமலை இல்லாத கண்டம் எது ?

அவுஸ்திரேலியா .

03 தமிழ் இலக்கணத்தில் எண்ணும்மை என்றால் என்ன ? உதாரணம் தருக ?

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும். உதாரணம் :  அவன் இவன் , இரவு பகல் , இராப்பகல் .

04 தமிழ் இலக்கணத்தில் தெரிநிலை பெயரெச்சம் என்றால் என்ன ?

காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலை பெயரெச்சம் ஆகும்.

05 சூக்கும உடம்பு என்றால் என்ன ?

ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் காரண தன் மாத்திரை ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் என்னும் அந்தக்கரணம் மூன்றும் ஆகிய எட்டினாலும் ஆக்கப்பட்டு ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாய், அவ்வவ்வான்மாக்கள் போகம் அனுபவித்தற்குக் கருவியாய் ஆயுள் முடிவின் முன்னுடம்பு விட்டு மற்றோருடம்பு எடுத்தற்கு ஏதுவாய் இருக்கும் அருவுடம்பு எனப்படும் .

Edited by கோமகன்

1)  50 மைல்

2) அவுஸ்ரேலியா

3) கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் "உம்" எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணுமை எனப்படும்.

உதாரணம் :-

அல்லும் பகலும், அவனும் இவனும், காதலும் சாதலும்  :rolleyes:

4) காலத்தையும் செயலையும் உணர்த்தி நிந்று அறுவகை பொருட்பெயருள் ஒந்றிநைக் கொண்டு முடியும் எச்சவிநைச் சொல் தெரிநிலை பெயரெச்சம் எனப்படும்

5)  உள்ளுடம்பு சூக்கும உடம்பு என அழைக்கப்படும்

நாலாம் வகுப்பு கேள்விகள் மாதிரி இருக்கு கோ!!

  • கருத்துக்கள உறவுகள்

01 ஒருவர் இருமும்பொழுது அந்த இருமலின் வேகம் மணிக்கு எவ்வளவு வேகமாக இருக்கும் ?

100 km/per hour (60 mph).

02 எரிமலை இல்லாத கண்டம் எது ?

Australia

03 தமிழ் இலக்கணத்தில் எண்ணும்மை என்றால் என்ன ? உதாரணம் தருக ?

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்எனும் விகுதி வெளிப்படையாக வருமாயின் அது எண்ணும்மை எனப்படும்.

(.கா)

         அல்லும் பகலும்

         காதலும் கற்பும்

         அவனும் இவனும்

04 தமிழ் இலக்கணத்தில் தெரிநிலை பெயரெச்சம் என்றால் என்ன ?

காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலை பெயரெச்சம் ஆகும்.

05 சூக்கும உடம்பு என்றால் என்ன ?

இது உள்ளுடம்பாகும்.இதை கொண்டு யாவற்றையும்அறிந்து கொள்ளலாம்.தொலைவில் நிகழ்வதை பார்க்கலாம்.கேட்கலாம். அப்படி பார்ப்பதும் கேட்பதும் புறத்தே உள்ள கண்களாலோ காதுகளாலோ அல்ல, சூக்குமமான அந்தக்கரண அறிவால்,அவை அனுபவமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் பல கட்டுரைகளுக்கு எண்ணும்மை அடிப்படையில்தான் தலைப்பை வைக்கிறார்கள்.. கோமகனின் திரிகளும் அதற்கு விதிவிலக்குகள் அல்ல.. :D

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 மணிக்கு 100 கிலோ மீட்டர் .

02 அவுஸ்திரேலியா .

03 கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும். உதாரணம் :  அவன் இவன் , இரவு பகல் , இராப்பகல்

04 காலத்தையும், செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலை பெயரெச்சம் ஆகும்.

 05 ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் காரண தன் மாத்திரை ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் என்னும் அந்தக்கரணம் மூன்றும் ஆகிய எட்டினாலும் ஆக்கப்பட்டு ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாய், அவ்வவ்வான்மாக்கள் போகம் அனுபவித்தற்குக் கருவியாய் ஆயுள் முடிவின் முன்னுடம்பு விட்டு மற்றோருடம்பு எடுத்தற்கு ஏதுவாய் இருக்கும் அருவுடம்பு எனப்படும் .

அலைமகள் நுணவிலான் ஒரேதடவையில் பதில் தந்தாலும் அவர்களுடைய பதில்கள் போதிய தெளிவின்மையைக் காட்டுவதால் இம்முறை யாருக்குமே பரிசளிக்க முடியவில்லை .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 சிவஞான சித்தியார், இருபா இருபது என்னும் இரண்டு நூல்களையும்  அருளிச் செய்தவர் யார் ?

திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார்.

02 திருவிழாவில் கொடியேற்றத்   தத்துவம் என்ன ?

திருவிழாவின் முதல்நாளில் இக்கொடி ஏற்றுதலின் நோக்கமாவது, திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதம் அடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்யப் போகின்றான் என்பதாகும்.

03 திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் அண்ணளவாக இருக்கும் ?

8 ஆயிரம் லிட்டர்.

04 சூளாமணி என்ற நூலை எழுதியவர் யார் ?

தோலாமொழித்தேவர்.

05 யசோதர காவியம் எதனை செய்யாதே என்று கூறி நிற்கின்றது ?
 
உயிர்க்கொலை தீது எனச் சொல்கின்றது .

Edited by கோமகன்

01 சிவஞான சித்தியார், இருபா இருபது என்னும் இரண்டு நூல்களையும்  அருளிச் செய்தவர் யார் ?

முதலாவது பதில்: சகலாகம பண்டிதர் எனப்படும் திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார்

02 திருவிழாவில் கொடியேற்றத்   தத்துவம் என்ன ?

இரண்டாவது பதில்: சமம், விசாரம், சந்தோசம், சாதுசங்கமமாகிய நான்கு குணங்களையும் கால்களாக உடையது நந்தி. அது வெள்ளை நிறம் பொருந்திய பரிசுத்த தர்ம குணங்களையும் உடையவர்களானால் அவர்களை இறைவன் அவர்களிருக்கும் நிலையிலிருந்து மிக உயர்த்திவிடுவான் என்பது தான் தத்துவம்.

03 திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் அண்ணளவாக இருக்கும் ?

மூன்றாவது பதில்: சுமார் 8000 லீற்றர்

04 சூளாமணி என்ற நூலை எழுதியவர் யார் ?

நான்காவது பதில்: தோலாமொழித்தேவர்

05 யசோதர காவியம் எதனை செய்யாதே என்று கூறி நிற்கின்றது ?

ஐந்தாவது பதில்: அறங்களில் தலையாயதும் நன்னெறி எனப்படுவதுமாகிய கொல்லாமை என்னும் சிறந்த கோட்பாட்டைக் கூறுகின்றது. அதாவது யசோதரகாவியம் கொல்லாமையை வலியுறுத்துகின்றது. (அதேவேளை ஆக்க வேண்டியது அறம் என்றும் போக்க வேண்டியது சினம் என்றும் குறிப்பிடுவதும் யசோதர காவியம் தான்)

  • கருத்துக்கள உறவுகள்

01 சிவஞான சித்தியார், இருபா இருபது என்னும் இரண்டு நூல்களையும்  அருளிச் செய்தவர் யார் ?

அருணந்தி சிவாச்சாரியார்

02 திருவிழாவில் கொடியேற்றத்   தத்துவம் என்ன ?

( 1 ) சமம், விசாரம், சந்தோசம், சாதுசங்கமாகிய நான்கு குணங்களையும் கால்களாக உடையது நந்தி. அது வெள்ளை நிறம் பொருந்திய பரிசுத்த தர்ம தேவதை. அதனை ஒப்ப ஆன்மாக்கள் தூய்மை உடையவர்களாகி, அந்நான்கு குணங்களையும் உடையவர்களானால், அவர்களை இறைவன் அவர்களிருக்கும் நிலையிலிருந்து மிக உயர்த்திவிடுவான் என்பதை இது குறிக்கிறது.
 
( 2 ) திருவிழாவின் முதல்நாளில் இக்கொடி ஏற்றுதலின் நோக்கமாவது, திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதம் அடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்யப் போகின்றான் என்பதாம்.

03 திமிங்கலத்தின் உடலின் எவ்வளவு இரத்தம் அண்ணளவாக இருக்கும் ?

 8 ஆயிரம் லிட்டர்

04 சூளாமணி என்ற நூலை எழுதியவர் யார் ?

தோலாமொழி தேவர்

05 யசோதர காவியம் எதனை செய்யாதே என்று கூறி நிற்கின்றது ?

உயிர்க்கொலை பெரும்பாவம். பாவனையால் பலியிடுதலும் கொலையே. புலால் உண்ணுதல் கொடிய பாவம். கூடா ஒழுக்கம் பஞ்சமா பாதகத்தைச் செய்யத் தூண்டும். இவை விலங்குப் பிறவிக்கும் நரகலோகத்திற்கும் இட்டுச் செல்லும். இவற்றைப் போக்க ஒரே வழி அறவோர் அறவழி நடத்தலே என்பது சூளாமணியின் தத்துவச் சிந்தனையாகும்.

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார்.

02 திருவிழாவின் முதல்நாளில் இக்கொடி ஏற்றுதலின் நோக்கமாவது, திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதம் அடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்யப் போகின்றான் என்பதாகும்.

03 , 8 ஆயிரம் லிட்டர்.

04 தோலாமொழித்தேவர்

05 உயிர்க்கொலை தீது எனச் சொல்கின்றது.

புயலும் நுணாவும் சரியான பதில்களையே  தந்திருக்கின்றீர்கள் . ஆனாலும்,  போட்டி விதிப்படி புயலே பரிசுக்குத் தெரிவாகின்றார் . நுணாவுக்கு எனது மனங்கனித்த பாராட்டுக்கள் :) :) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

01 பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் யார் ?

பாஸ்கோ நூனியெத் தே பால்போவா.

02 பிரான்சில் எந்த ஆண்டில் குடியரசு நிறுவப்பட்டது ?

1792.

03 முதன் முதலில் நில அளவை முறையை எந்த மன்னன் அறிமுகப்படுத்தினான் ?

முதலாம் இராஜராஜன்.

04 திரு ஞானசம்பந்தர் முயற்சியினால் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்துக்கு மாறிய பாண்டிய மன்னன் யார் ?

கூன் பாண்டியன்.

05 தமிழ் இலக்கணத்தில் முற்றெச்சம் என்றால் என்ன ? உதாரணம் தருக ?

ஒரு வினைமுற்று சொல் தன்னுடைய வினைமுற்று பொருளை தராமல்.
வினையெச்ச பொருளைத் தருமாயின் அதற்கு “முற்றெச்சம்” என்று பெயர். இச்சொல் தனித்து நோக்கும்போது வினைமுற்றாகத் தோன்றும். இரண்டு வினைமுற்று தொடர்ந்து வருமாயின் அது முற்றெச்சம் ஆகிறது.

உதாரணம் :
சிறுவர் பாடினர் மகிழ்ந்தனர்.
படித்தனர் தேர்ந்தனர்.
எழுதினன் முடித்தனன்.

Edited by கோமகன்

01 பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் யார் ?

முதலாவது பதில்: வாஸ்கோ நுனென்ஸ் டி பல்போவா

02 பிரான்சில் எந்த ஆண்டில் குடியரசு நிறுவப்பட்டது ?

இரண்டாவது பதில்: 1792

03 முதன் முதலில் நில அளவை முறையை எந்த மன்னன் அறிமுகப்படுத்தினான் ?

மூன்றாவது பதில்: முதலாம் இராஜராஜசோழன்

04 திரு ஞானசம்பந்தர் முயற்சியினால் சமண சமயத்தில் இருந்து சைவ சமையதுக்கு மாறிய பாண்டிய மன்னன் யார் ?

நான்காவது பதில்: கூன் பாண்டியன். (சைவசமயத்திற்கு மாறிய பின் வழங்கப்பட்ட பெயர் நின்றசீர் நெடுமாறன்)

05 தமிழ் இலக்கணத்தில் முற்றெச்சம் என்றால் என்ன ? உதாரணம் தருக ?

ஐந்தாவது பதில்: ஒரு வினைமுற்றுச்சொல் தன்னுடைய வினைமுற்றுப் பொருளைத் தராமல் வினையெச்சப்

பொருளைத் தருமாயின் அது முற்றெச்சம் என அழைக்கப்படும். உதாரணம்: கற்றனன் மகிழ்ந்தான் (கற்று மகிழ்ந்தான்)

Edited by Puyal

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !! போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 பாஸ்கோ நூனியெத் தே பால்போவா

02 1792

03 முதலாம் இராஜராஜன்

04 கூன்  பாண்டியன்

05 ஒரு வினைமுற்று சொல் தன்னுடைய வினைமுற்று பொருளை தராமல்.
வினையெச்ச பொருளைத் தருமாயின் அதற்கு “முற்றெச்சம்” என்று பெயர். இச்சொல் தனித்து நோக்கும்போது வினைமுற்றாகத் தோன்றும். இரண்டு வினைமுற்று தொடர்ந்து வருமாயின் அது முற்றெச்சம் ஆகிறது.

உதாரணம் :
சிறுவர் பாடினர் மகிழ்ந்தனர்
படித்தனர் தேர்ந்தனர்
எழுதினன் முடித்தனன்

ஒரே முறையில் பதிகளை சரியாகத் தந்த புயலுக்கு பரிசில்கள் வழங்கப்படுகின்றன :) :) .

புதிய கேள்விகள் இன்னமும் ஏன் வரவில்லை
 
வாழ்க வளமுடன்
  • தொடங்கியவர்

01 கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்? என்று பாடியவர் யார் ?

பத்திரகிரியார்

02 திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம்  இயற்றியவர் யார் ?

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை

03 முதல் எழுத்து அகர வரிசையில் அமைந்த தமிழின் முதல் நூல் எது ?

அகராதி நிகண்டு.

04 திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் யார் ?

கால்டு வெல்

05 இரும்பில் ஒலியின் வேகம் வினாடிக்கு எவ்வளவு ?

5040 மீ / வினாடி

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

01 கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்? என்று பாடியவர் யார் ?

பத்திரகிரியார் .

02 திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம்  இயற்றியவர் யார் ?

வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 

03 முதல் எழுத்து அகர வரிசையில் அமைந்த தமிழின் முதல் நூல் எது ?

ஆத்திசூடி

04 திராவிட மொழிகளின் ஒப்பிலகணத்தை எழுதியவர் யார் ?

 கால்டு வெல்

05 இரும்பில் ஒலியின் வேகம் வினாடிக்கு எவ்வளவு ?

5040 மீ/விநாடி

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !!  எல்லோருக்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள் .

போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதிகள் பின்வருமாறு ,

01 பத்திரகிரியார் .

02 வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை .

03 அகராதி நிகண்டு .

04 கால்டு வெல் .

05 5040 மீ/விநாடி .

நுணாவிலான் ஒரேதடவையில் பதில் தந்திருந்தாலும் 3 ஆவது கேள்விக்கான சரியான பதில் " அகராதி நிகண்டு " ஆகும் .எனவே உங்களுக்கான பரிசு பறிபோகின்றது . ஆனாலும் போட்டியில் ஆர்வத்துடன் பங்கு பற்றிய உங்களுக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும் :) :) .

  • தொடங்கியவர்

01 எந்த மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு ?

அனப்லெப்ஸ்

02 காண்டா மிருகத்தின் கொம்புகள்   எதனால் உருவானவை ?

மயிரிழைகளால் ( கெரட்டின் )

03 ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன? உதாரணம் தருக .

ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். உதாரணம் தை , ஆ

04 எழுத்திலக்கணம் என்றால் என்ன ?

எழுத்துகளை வார்த்தைகளில் அல்லது வாக்கியங்களில் அல்லது செய்யுள்களில் பயன்படுத்தும் முறைகளை வரையறுப்பதே எழுத்திலக்கணம்.

05 திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் யாரால் பாடப்பட்டது ?

பகழிக்கூத்தர்

Edited by கோமகன்

01 எந்த மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு ?

முதலாவது பதில்: அனப்லெப்ஸ்.

02 காண்டா மிருகத்தின் கொம்புகள்   எதனால் உருவானவை ?

இரண்டாவது பதில் எமது முடி மற்றும் நகம் போன்றவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான பொருள் கெரட்டின் எனப்படும்.

காண்டாமிருகத்தின் கொம்பும் கெரட்டின் என்னும் பொருளால் ஆனது.

03 ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன? உதாரணம் தருக .

மூன்றாவது பதில்: ஒரேயொரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து

ஒரு மொழிச்சொல் என்று  பெயர்உதாரணம் கோ (மன்னன்), ஆ (பசு), க (அக்கினி)

04 எழுத்திலக்கணம் என்றால் என்ன ?
 
நான்காவது பதில்: எழுத்துக்களை வார்த்தைகளில் அல்லது வாக்கியங்களில் அல்லது செய்யுள்களில் பயன்படுத்தும்
 
முறைகளை வரையறுப்பதே எழுத்திலக்கணம்.
 
05 திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் யாரால் பாடப்பட்டது ?
 
ஐந்தாவது பதில்: பகழிக்கூத்தர்

Edited by Puyal

உலகிலேயே தண்ணீர் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது?

  • கருத்துக்கள உறவுகள்

வெனிஸ்,

  • தொடங்கியவர்

01 எந்த மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு ?

முதலாவது பதில்: அனப்லெப்ஸ்.

02 காண்டா மிருகத்தின் கொம்புகள்   எதனால் உருவானவை ?

இரண்டாவது பதில் எமது முடி மற்றும் நகம் போன்றவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான பொருள் கெரட்டின் எனப்படும்.

காண்டாமிருகத்தின் கொம்பும் கெரட்டின் என்னும் பொருளால் ஆனது.

03 ஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன? உதாரணம் தருக .

மூன்றாவது பதில்: ஒரேயொரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச்சொல்

என்று  பெயர்உதாரணம் கோ (மன்னன்), ஆ (பசு), க (அக்கினி)

04 எழுத்திலக்கணம் என்றால் என்ன ?
 
நான்காவது பதில்: எழுத்துக்களை வார்த்தைகளில் அல்லது வாக்கியங்களில் அல்லது செய்யுள்களில் பயன்படுத்தும் முறைகளை
 
வரையறுப்பதே எழுத்திலக்கணம்.
 
05 திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் யாரால் பாடப்பட்டது ?
 
ஐந்தாவது பதில்: பகழிக்கூத்தர்

வணக்கம் கள உறவுகளே !!  போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . சரியான பதில்கள் பின்வருமாறு ,

01 அனப்லெப்ஸ்

02 மயிரிழைகளால் ( கெரட்டின் )

03 ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். உதாரணம் தை , ஆ

04 எழுத்துகளை வார்த்தைகளில் அல்லது வாக்கியங்களில் அல்லது செய்யுள்களில் பயன்படுத்தும் முறைகளை வரையறுப்பதே எழுத்திலக்கணம்.

05 பகழிக்கூத்தர்

சரியான பதிலை ஒரேதடவையில் தந்த புயலுக்குப் பரிசை அளிக்கின்றேன் :) :) .

  • தொடங்கியவர்

01 ஐந்திணை எழுபதின் ஆசிரியர்  யார் ?

மூவாதியார்.

02 இடைச்சங்கத்தின் கால எல்லை எவ்வளவு ?

3700 ஆண்டுகள்.

03 கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?

செம்பு.

04 எந்த தானியம் மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்டது?

சோளம்.

05 சிதம்பர மும்மணிக்கோவையை இயற்றியவர் யார் ?

குமரகுருபரர் .

Edited by கோமகன்

01 ஐந்திணை எழுபதின் ஆசிரியர்  யார் ?

      மூவாதியார்

02 இடைச்சங்கத்தின் கால எல்லை எவ்வளவு ?

       3700 ஆண்டுகள்

03 கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?
      செம்பு

04 எந்த தானியம் மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்டது?

      சோளம்

05 சிதம்பர மும்மணிக்கோவையை இயற்றியவர் யார் ?
      குமரகுருபரர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.