Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தி சசிதரன் (எழிலன்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொறுத்திருந்து பார்ப்போம் நெடுக்கின் துணிவை!!! :icon_idea:

இது சுமே அக்காவிற்குமான பதில்..

இன்றைய தொழில்நுட்ப உலகில்.. நாங்க ஒன்றை உறுதிப்படுத்த விரும்பினால் அதைச் செய்ய பல வழிகள் உள்ளன. இது மிகப் பழைய மற்றும்.. மனதுகளை நோகடிக்கக் கூடிய வழிமுறை. இதில் இறங்க நாங்கள் துணிவை விட அறிவைப் பாவிப்பது சிறந்தது என்றே எண்ணுவோம்.

இங்குள்ள கள உறவுகள் எவரின் உண்மைத் தன்மையும் தெரியாமல் தான் நாங்கள் கருத்தாடி இருக்கிறோம். கருத்தாடி வருகிறோம். அதில் சிலர் வெளிப்படையாக உள்ளனர். பலர் பகுதி வெளிப்படையாக உள்ளனர். இன்னும் சிலர் வெளிப்படை இன்றி உள்ளனர்.

அனந்தி அக்கா தவர வேறு எவருமே இங்கு தொலைபேசி மூலமோ வேறு அடையாளம் மூலமோ.. உறுதிப்படுத்தப்பட்டு கருத்துப் பரிமாற சக கள உறவுகளால் அழைக்கப்பட்டதில்லை.

இங்கு சில பிரபல்யங்கள் கூட அங்கத்தவர்களாக உள்ளனர். அவர்களின் கருத்துக்களுக்குத் தான் நாம் முக்கியமும் பதிலும் அளிக்கிறோமே தவிர.. அவர்களின் பின்னணிகளை ஆராய்வதோ.. கண்டுபிடிப்பதோ கருத்துக்களத்தில் கள உறவுகளின் வேலை அல்ல. அது உளவுப் பணி. கருத்துக்கள உறவுப் பணி அல்ல..! அதனை ஒரு சக கள உறவாக நாங்கள் செய்யமாட்டோம். அதனை துணிவு என்பதன் பெயரால் முன்னிறுத்துவது அபந்தம். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 108
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆராவது லண்டன் உறவுகள், மெசொப்பொத்தேமியா சுமேரியர் வீட்டுக்குச் சென்று, அவரது வீட்டிலுள்ள அலங்காரப் பொருட்கள், தோட்டம், துரவு, அவரது வளவுக்குள் இருக்கும் மீன் வளர்க்கும் தொட்டி, ஆகியவற்றைப் படம் எடுத்து இங்கு இணைப்பீர்களா? :D

சும்மா ஒரு முறை உறுதிப்படுத்தத் தான்! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இப்பவும் டவுட்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைகளை தெரிய கேள்விகள் கேட்காமல் விட்டதினால்தான் எமது போராட்டம் இந்தளவிற்கு போனதென இன்றும் கூறுகின்றார்கள்.இனிவரும் காலங்களில் கேள்விகள் சந்தேகங்கள் வருவதில் தவறில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை தெரிய கேள்விகள் கேட்காமல் விட்டதினால்தான் எமது போராட்டம் இந்தளவிற்கு போனதென இன்றும் கூறுகின்றார்கள்.இனிவரும் காலங்களில் கேள்விகள் சந்தேகங்கள் வருவதில் தவறில்லை.

அது சரி !

சுமோவோட அனந்தி தான் கதைச்சவ எண்டத, என்னண்டு நாங்கள் நம்பிறது! :D

அவவின்ர காரியதரிசியாயும் இருக்கக் கூடுமல்லவா?

மனித வாழ்க்கையே ஒரு நம்பிக்கையில் தானே இயங்குகின்றது! :D

நண்பர்களே!

இங்கு கருத்துச் சொல்பவர்களில் எத்தனைபேர் சொந்தப் பெயரில் , இருக்கும் இடத்தினை வெளிப்படுத்தி கருத்துச் சொல்கிறீர்கள்.  சொந்தப் பெயரினைப் பயன்படுத்தி கருத்து சொல்ல துணிவு அற்றவர்களக பலர் உள்ளார்களே..??

அப்ப் எப்படி நம்பிக்கையான இங்கே கருத்துப் பகிர்வைச் செய்ய முடியும்??/

கருத்துக்கு நம்பிக்கை ஏன் தேவை என்றதை விரிவாக ஆராய முடியுமா?

வள்ளுவரையோ அல்லது சோகிரதீசையோ தனிப்பட தெரிந்து கொண்டபின்னரா அவர்களின் கருத்துக்களை ஏற்க முடிந்தது. வள்ளுவர் என்ற ஐடி வந்தவர் எழுதியதை எப்படி நீங்கள் ஏற்கிறீர்களோ அல்லது தள்ளி வைக்கிறீர்களோ அப்படி ஒவ்வொரு யாழின் ஐ.டி களையும் கண்டு கொள்ளலாமே. 

எழிலன் அனந்தி என்பவர் ஒருவர் மக்களால் நன்கு அறியப்பட்டவர். இங்கே பதிபவர் உண்மையாக அதே நபரா அல்லது அந்த  அனந்தி எழிலனின் பெய்ரை புனை பெயராக பாவிக்கிறாரா என்பது தான் இங்கே போய்கொண்டிருக்கும் விவாதம். அதாவது இருவரும் ஒருவரா என்றதை கண்டுபிடிக்க எடுத்த முயற்சிதான் அது. அதை கிரகிக்க கஸ்டமாக இருக்கிறதா?  இதற்கும் புனைபெயரில் கருத்து எழுதுவதற்கும் ஏன் முடிச்சு போடுவான்? புனை பெயரில் கருத்து எழுதுவது தவறு என்ற்தை விவாதிக்க முயன்றால் அதற்கு தனி திறக்கலாமே. அதை ஏன் பொருத்தமில்லாத இந்த இடத்தில் செருகுவான்? 

நம்பிக்கை வைக்க என்ன யாழில் நடப்பவை கலியாணப் பேச்சு என்று நம்பியா வந்திணைதிருக்கிறீர்கள்? இது வரை தெரிந்திருக்காவிட்டால் - இவை அரசியல் விவாதங்கள்.

<_<

  • 2 weeks later...

அனந்தி அக்காவுடனான சந்திப்பு இன்று 6-8 மணிவரை என கூறப்பட்டிருந்தாலும் கிட்டத்தட்ட 6.30 - 7.30 வரையாக ஒரு மணித்தியாலம் நடைபெற்றது. நேரம் சென்றதால் 7.30 மணியளவில் கலந்துரையாடலை முடித்து அவரை விரைவாக அழைத்து சென்று விட்டார்கள். அதற்கிடையில் யாழில் இணைந்திருப்பது நீங்களா என அவரிடம் கேட்டேன். ஆம் என கூறினார்.

நேரடியாக இணைந்துள்ளீர்களா அல்லது உங்கள் சார்பாக காரியதரிசி இணைந்துள்ளாரா எனவும் கேட்க முயற்சி செய்தேன். ஆனால் அதற்குள் அழைத்து சென்று விட்டார்கள்.

எது எப்படியோ இது அனந்தி அக்கா தான்.

(என்னை நம்புவோருக்காக இங்கு கூறுகிறேன். நம்பாதவர்கள் வேறு வழியில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

வேற வேலை இல்லை ஒவோருத்தடையும் பிடிச்சு வைச்சு இது நீங்களா அது உங்க நிழலா இல்லை நிஜமா எண்டு கிட்டு......ஈஸ்வரா

கேட்காவிட்டால் அவர்மேல் தாக்குதல் நடத்திக்கொண்டிருப்பீர்கள்.

மயூரன் அண்ணா என்னை கேட்கும்படி இன்னொரு திரியில் கூறியிருந்தார். எனவே அவ்வாறு என் பதிலை பார்த்துக்கொண்டிருந்தோருக்காக நான் இங்கு எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு தொடர்பு கொண்டு இப்பிடி கேட்டால் அது அவர்களுடைய ப்ரிவசியைய் பாத்திக்காதா ? இப்பிடியே ஒராள் போன் போட்டு ஒராள் நேரடியா கேள்வி மேல கேள்வி கேட்டால் எப்பிடி இப்பிடியானவர்கள் யாழுக்கு வர மனசு வரும்? ஒரு பொது கூட்டத்தில் ஒருவரை யாழின் பெயரை பயன்படுத்தி நீங்கள் தான் யாழுக்கு வாரநீங்களா என்று கேட்பது அந்த மனிதரை சங்கடுத்துக்கு உள்ளாக்கும் அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் செயல் இதுக்காகவே யாழ் நிர்வாகம் உங்களை போன்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்?

இப்பிடியான கள உறுப்பினர்களின் தான்தோன்றிதனமான செயல்பாடுகளை யாழ் கள நிர்வாகம் கண்டுக்காமல் இருப்பது சரி அல்ல........

மற்றவர்களுக்கு கேட்காதவாறு அவரது காதருகே தான் அவரிடம் கேட்டேன். அவரே சந்தோசமாக ஆம் என்று பதிலளித்தார். உங்களுக்கு என்ன பிரச்சினை?

சுண்டல்.. எப்பிடி இப்பிடி சிரிப்புக்குறி போடாமலே எழுதுறீங்க? :D

  • கருத்துக்கள உறவுகள்

பின்னால வந்து நீங்க போடுவீங்க எண்டு தான் எல்லாம் ஒரு நம்பிக்கை தானே :D

த்தோடா இவா காத்துக்குள்ள போய் கேட்டவாவாம் இதை நாங்க நம்பனுமாம் :D

அனந்தி அக்கா இன்னும் ஒரு கருத்து கூறினார் தாங்கள் சாதாரணமா ஒரு விண்ணப்ப படிவம் அடிக்க கூட பணம் இல்லாமல் இருப்பதாக நிதி பற்றாக்குறை அதிகம் என்று .

அடிகடி அவர் அங்கு கூரிய விடையம் நான் எனது பிள்ளைகளை அங்கு விட்டுட்டு வந்துள்ளேன் என்பதே அதில் இருந்து தெரிவது என்னவென்றால் யாராக இருந்தாலும் இப்போதிய நிலைமையில் சூழ்நிலை கைதிகளே .

எழுந்தமானத்துக்கு சுயமாக எதையும் பேசமுடியாது இதை இங்கு உள்ள நாங்கள் புரிந்து கொண்டால் நன்று 

நன்றி .

Edited by அஞ்சரன்

த்தோடா இவா காத்துக்குள்ள போய் கேட்டவாவாம் இதை நாங்க நம்பனுமாம் :D

காதுக்குள்ளாலை கேட்டன் என்றோ காதில் கை வைத்து கேட்டேன் என்றோ கூறவில்லையே. காதருகே என்று நான் கூறியதன் அர்த்தம் மற்றவர்களுக்கு கேட்காதவாறு கேட்டேன் என்பது.

உங்களை நம்ப சொல்லி நான் சொன்னனானா? என்னை நம்புபவர்களுக்காக தான் எழுதினேன்.

ஆளாளுக்கு தொடர்பு கொண்டு இப்பிடி கேட்டால் அது அவர்களுடைய ப்ரிவசியைய் பாத்திக்காதா ? இப்பிடியே ஒராள் போன் போட்டு ஒராள் நேரடியா கேள்வி மேல கேள்வி கேட்டால் எப்பிடி இப்பிடியானவர்கள் யாழுக்கு வர மனசு வரும்? ஒரு பொது கூட்டத்தில் ஒருவரை யாழின் பெயரை பயன்படுத்தி நீங்கள் தான் யாழுக்கு வாரநீங்களா என்று கேட்பது அந்த மனிதரை சங்கடுத்துக்கு உள்ளாக்கும் அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் செயல் இதுக்காகவே யாழ் நிர்வாகம் உங்களை போன்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும்?

இப்பிடியான கள உறுப்பினர்களின் தான்தோன்றிதனமான செயல்பாடுகளை யாழ் கள நிர்வாகம் கண்டுக்காமல் இருப்பது சரி அல்ல........

அவர் தனது சொந்த பெயரில் யாழுக்கு வந்ததால், அது குறித்து விசாரிப்பதில் தவறு இல்லை என்பதே எனது கருத்து. அவர் புனை பெயரில் இணைந்திருந்தால், அதுபற்றி பொது இடத்தில் விசாரிப்பதுதான் தவறு. மற்றும் தாயகத்தில் அதுவும் வடக்கில் பல மக்களின் விருப்புக்குரியவராக இருக்கும் ஒருவர் யாழ் களத்தில் அங்கத்துவராக இருப்பதை இப்படியான இடத்தில் விசாரிப்பது… அவரைச் சுற்றி யாழை அறியாது இருப்போருக்கும் யாழ் பற்றி மறைமுகமாக அறிவிக்கும் செயலாதலால், இதை யாழ் நிர்வாகம் வரவேற்றுப் பாராட்ட வேண்டும்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்கு கேட்காதவாறு அவரது காதருகே தான் அவரிடம் கேட்டேன். அவரே சந்தோசமாக ஆம் என்று பதிலளித்தார். உங்களுக்கு என்ன பிரச்சினை?

நீங்கள் செய்தது தவறு துளசி. பக்கத்தில் நின்றவரிடம்.. போன் போட்டுக் கேட்டிருந்தால்.. இங்கு.. மெளனமாக இருந்திருப்பார்கள். :lol:  :D  பிரச்சனை துளசி கேட்பதா என்பது தானே தவிர.. கேட்பதல்ல. சிலருக்கு இதுவே பிழைப்பாப் போச்சுது. ஒருவர் கேட்டால் குற்றம். மற்றவர் கேட்டால் குற்றமில்லை. வேண்டாப் பொண்டாட்டி கால் பட்டா குற்றம்.... கை பட்டால் குற்றம் என்ற மனநிலையில் சிலர் யாழுக்கு வருகிறார்கள் போலுள்ளது. இந்தப் பிரச்சனைக்கு காள்கோள் இட்டவர்கள் மெளனமாக இருந்து கொண்டிருக்கிறார்கள். எதுஎப்படியோ.. துளசியாவது இந்தப் பிரச்சனைக்கு நேரடித் தீர்வை எட்ட உதவியமைக்கு நன்றி.  ஆனாலும் எங்களைப் பொறுத்த வரையும்.. இந்தத் தலைப்பில் நடக்கின்ற சில விடயங்கள் யாழிற்கு ஒரு தவறான உதாரணமாகிறது என்றே தென்படுகிறது. குறிப்பாக அனந்தி அக்காவை குறிவைப்பதில்.. உள்நோக்கம் இருக்கோ என்றே சந்தேக்கிக்கிறது.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்காகத்தானப்பா

சும்மா  உட்கார்ந்து

நடப்பவைகளை  பார்த்துவிட்டு மட்டும் வந்தேன்....... :(  :(  :(

அனுபவம்

உங்களது வயசளவு.....................

கள உறவு ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க நீக்கியுள்ளேன்.

Edited by துளசி

இந்தப் பிரச்சனைக்கு காள்கோள் இட்டவர்கள் மெளனமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

---

---

ஆனாலும் எங்களைப் பொறுத்த வரையும்.. இந்தத் தலைப்பில் நடக்கின்ற சில விடயங்கள் யாழிற்கு ஒரு தவறான உதாரணமாகிறது என்றே தென்படுகிறது. குறிப்பாக அனந்தி அக்காவை குறிவைப்பதில்.. உள்நோக்கம் இருக்கோ என்றே சந்தேக்கிக்கிறது.  :icon_idea:

உண்மை அண்ணா, நிர்வாகம் நேரடியாக அனந்தி அக்காவுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி அதை இங்கே கூறியிருக்க வேண்டும். அல்லது அவ்வாறு உறுதிப்படுத்துவது அவசியமில்லாவிட்டால் இந்தத்திரியை மூடியாவது விட்டிருக்கணும்.

நிர்வாகம் இரண்டையும் செய்யாதது பலர் அனந்தி அக்கா மேல் தாக்குதல் நடத்த வசதியாகி விட்டது.

Edited by துளசி

இதுக்காகத்தானப்பா

சும்மா  உட்கார்ந்து

நடப்பவைகளை  பார்த்துவிட்டு மட்டும் வந்தேன்....... :(  :(  :(

அனுபவம்

உங்களது வயசளவு.....................

தகப்பன் சாமி எம் பெருமான் முருகக் கடவுள்… ஐயா! தந்தைக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய பிரணவநாதன் என்று கதை இருக்கும்போது…?!  :o  :D

உண்மை அண்ணா, நிர்வாகம் நேரடியாக அனந்தி அக்காவுடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்தி அதை இங்கே கூறியிருக்க வேண்டும். அல்லது அவ்வாறு உறுதிப்படுத்துவது அவசியமில்லாவிட்டால் இந்தத்திரியை மூடியாவது விட்டிருக்கணும்.

நிர்வாகம் இரண்டையும் செய்யாதது பலர் அனந்தி அக்கா மேல் தாக்குதல் நடத்த வசதியாகி விட்டது.

துளசி,

உங்கள் தவறுகளுக்கும், தொடர் விதி மீறல்களுக்கும் நிர்வாகத்தினை குறை கூறுவதை முதலில் நிறுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு தடவையும் விதிகளுக்கு புறம்பாக மற்றவர் முகம் சுளிக்கும் வண்ணம் தொடர்ந்து எழுதுவதும் பின்னர் அதனை மட்டுக்களும் நிர்வாகத்தினரும் வந்து திருத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் வெறுப்புக்குரியது. பல திரிகளில் அவற்றை குழப்புகின்றமாதிரி பலவாறு எழுதி மற்றவர்களையும் வெறுப்புக்குள்ளாக்குவதும், பின்னர் நிர்வாகம் வந்து அதனை பூட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.

எவர் உறுப்பினராகச் சேர்ந்தாலும் அவரை  இன்னார் தான் என்று பரிசோதித்து உறுதிப்படுத்துவது யாழில் எக்க்காலத்திலும் நடவாததுடன் அதற்கான தேவையும் இல்லை.

எவர், அவர் யாராக இருப்பினும் களத்தில் இணைந்து விட்டால் அவரது கருத்துகளை மாத்திரம் தான் எமக்கு முக்கியாமனது. அவர் கருத்துகள் தான் எம்மை அவருடன் தொடர்பில் இணைப்பது. ஏனைய கருத்தாளர்களை பார்ப்பது போன்று தான் அவர் ஒரு சக கருத்தாளராகத்தான் நிர்வாகத்தால் அவர் பார்க்கப்படுவார்.

அவரை இன்னார் என்று அடையாளம் கொள்ள விரும்புகின்றவர்கள் எடுக்கும் களத்திற்கு வெளியான எந்த ஒரு விடயத்துக்கும் நாம் பொறுப்பாகவும் மாட்டோம்.

நன்றி

மிக்க நன்றி உங்கள் பதிலுக்கு.

இந்த திரியில் நான் ஒன்றும் குழப்பும் விதமாக பதில் எழுதவில்லை. நான் எனது கருத்தையே எழுதினேன்.

எவர் உறுப்பினராகச் சேர்ந்தாலும் அவரை  இன்னார் தான் என்று பரிசோதித்து உறுதிப்படுத்துவது யாழில் எக்க்காலத்திலும் நடவாததுடன் அதற்கான தேவையும் இல்லை.

எவர், அவர் யாராக இருப்பினும் களத்தில் இணைந்து விட்டால் அவரது கருத்துகளை மாத்திரம் தான் எமக்கு முக்கியாமனது. அவர் கருத்துகள் தான் எம்மை அவருடன் தொடர்பில் இணைப்பது. ஏனைய கருத்தாளர்களை பார்ப்பது போன்று தான் அவர் ஒரு சக கருத்தாளராகத்தான் நிர்வாகத்தால் அவர் பார்க்கப்படுவார்.

மற்றவர்கள் அனந்தி அக்கா மேல் தாக்குதல் நடத்தும் போதே இந்த கருத்தை வந்து நீங்கள் கூறியிருந்தால் பரவாயில்லை.

இப்பொழுது என் மூலமாவது உங்கள் பதில் இத்திரியில் கிடைத்தது மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரன் நீங்கள் யாழ் இணையக் களத்தின் நீண்ட கால நடைமுறை தெரியாமல் குறுகிய அரசியல் கண்ணோட்டங்கள் நிமித்தம் கருத்தெழுதுகிறீர்கள் இத்தலைப்பில். அதற்கு பதில் அளிப்பது அநாவசியமானது என்பதால்.. யாழ் களத்தின் பொது நடைமுறைகளை புரிந்து கொண்டு களத்தில் உறவுகளாக இணைபவர்களை சமனாக கள விதிக்கு அமைய நடத்த வேண்டும் என்று மட்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். இது தான் இங்கு எங்களின் எதிர்பார்ப்பே தவிர வருபவரின் அரசியல்.. சமூகப் பின்புலம் அறிவதற்கு அல்ல யாழ் களம். இப்போ உங்களை எடுத்துக் கொண்டால் கூட யார் என்று அறியாமல் தான் உங்கள் கருத்துக்கு கருத்து வைக்கின்றோம். இந்தக் கருத்துக்களால்.. சட்டபூர்வ செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுக்கப் போவதில்லை. மாறாக அபிப்பிராயம் தெரிவித்தலே அநேகம் உள்ளது. அந்த வகையில் தனிமனித உறுதிப்படுத்தல்கள் இணைய அடிப்படைவிதிகளுக்கு அப்பால் கோரப்படுத்தல்.. அதனை இங்கு பகிர்தல்.. களவிதிக்கு கூடப் புறம்பானது. ஒரு தடவை யாழ் கள விதியைப் படியுங்கள். இத்தலைப்பில் இதற்கும் மேல் கருத்துரைப்பது.. இங்கு இணைய விரும்பும் உறவுகளுக்கே சங்கடத்தையும் தயக்கங்களையும் தோற்றுவிக்கும்.  நன்றி. 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.