Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசின் அடுத்த வீடியோ .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  ஐயா

  • தொடங்கியவர்

வெறும் வார்த்தை ஜாலங்களும் வலி எங்களுக்கு மட்டும் தான் என்ற நினைப்பும் தான் எங்களை இங்கு கொண்டு வந்து விட்டிருக்கு ,

இரட்டை கோபுரத்தை தாக்கியவனும் தற்கொலை தாக்குதல் தான் செய்தான் ,அவனுக்கும் ஒரு வலி இருந்தததால் தான் அதை செய்தான் .

என்ரை பிள்ளைக்கு வலி ஏற்படுத்தி விட்டான் என்று இன்னொரு பிள்ளைக்கு காயம் ஏற்படுத்த எனக்கு உரிமை இல்லை .

போராட்டத்திற்குள் இருக்கும் போது எதுவும் தெரியாது உயிர்விடுவது கூட ,

நாட்டிற்காக விடுதலைக்காக என்றுதான் போராட போய்  உயிர் விட்ட அனைவரினதும் நோக்கமும் உயர்ந்ததுதான் இதையே தான் சிங்களமும் சொல்லுகின்றது .

எந்த வரைமுறைக்குள் நின்றோம் போராடினோம் என்று தான் இங்கு கேள்விக்குரியதாகின்றது .ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக எதையும் செய்யலாம் என்றால் சிங்களம் செய்ததும் சரியாகிவிடும் .

நாட்டிற்காக உயிரையே விட்ட போராளிகளை விமர்சனத்திற்கு உட்படுத்த கூடாது என்று தான் எம்மவர்  பலர் நினைக்கின்றார்கள் ஆனால் உலகம் அப்படி பார்க்காது .

போராட்டத்தில் நாம் விடும் தவறுகள் எல்லாம் எமது போராட்டத்திற்கு தடையாகத்தான் வந்து முடிந்திருக்கின்றது அதைத்தான் நாங்கள் விமர்சனப்படுத்துகின்றோமே ஒழிய போராளிகளையோ அல்லது அவர்கள் தியாகத்தையோ அல்ல .

  • கருத்துக்கள உறவுகள்

தனது மனைவி பிரவச வலியால் துடிக்கிறாள் .....
துடித்தவள் பிள்ளை வெளியில் வருமுன்பே மயக்கம் அடைகிறாள். பல மணிநேரம் வலியால்  துடித்தவளின் உணர்வுகள் குறைய தொடங்குகிறது. தனது அருமை தனக்கு ஒரு வாரிசு  தர நினைத்து தன்னையும் அழிக்க போகிறது என்று ............ ஜூலியஸ் சீசர் துடிக்கிறான். எந்த முன் அனுபவமோ உலகில் வேறு எங்கும் அப்படி நடந்தே இருக்காத ஒரு முடிவை  எடுத்து   தனது வாளால் மனைவியின்  வயிறை வெட்டி பிள்ளை எடுத்துவிட்டு . வெட்டிய வயிறய் தனக்கு தெரிந்த மாதிரி  தைத்து பொருத்தி மனைவியின் உயிரை  காப்பாற்ற போராடுகிறான். உலகில் அதிசயம் நிகழ்கிறது  மனைவியும் பிள்ளையும்  தப்புகிறார்கள்.
இன்று இந்த உலகில் சிசரியன் செய்து எத்தனை இலட்சம் குழந்தைகள் வாழுகின்றார்கள் .
 
ஜூலிட் சீஷர் தனது மனைவியின் வயிறை வாளால் வெட்டிய போது  அதை யாராவது படம் பிடித்திருந்தால்...........
அர்ஜுன் அவர்கள் சீசரின் மனைவிக்காக எவளு துயர்பட்டிருப்பர்? என்று எண்ணி  பார்க்கிறேன். நல்ல வேளை அந்த காலத்தில் இந்த கறுமாந்த வீடியோ இருக்கவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வார்த்தை ஜாலங்களும் வலி எங்களுக்கு மட்டும் தான் என்ற நினைப்பும் தான் எங்களை இங்கு கொண்டு வந்து விட்டிருக்கு ,

இரட்டை கோபுரத்தை தாக்கியவனும் தற்கொலை தாக்குதல் தான் செய்தான் ,அவனுக்கும் ஒரு வலி இருந்தததால் தான் அதை செய்தான் .

என்ரை பிள்ளைக்கு வலி ஏற்படுத்தி விட்டான் என்று இன்னொரு பிள்ளைக்கு காயம் ஏற்படுத்த எனக்கு உரிமை இல்லை .

போராட்டத்திற்குள் இருக்கும் போது எதுவும் தெரியாது உயிர்விடுவது கூட ,

நாட்டிற்காக விடுதலைக்காக என்றுதான் போராட போய்  உயிர் விட்ட அனைவரினதும் நோக்கமும் உயர்ந்ததுதான் இதையே தான் சிங்களமும் சொல்லுகின்றது .

எந்த வரைமுறைக்குள் நின்றோம் போராடினோம் என்று தான் இங்கு கேள்விக்குரியதாகின்றது .ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக எதையும் செய்யலாம் என்றால் சிங்களம் செய்ததும் சரியாகிவிடும் .

நாட்டிற்காக உயிரையே விட்ட போராளிகளை விமர்சனத்திற்கு உட்படுத்த கூடாது என்று தான் எம்மவர்  பலர் நினைக்கின்றார்கள் ஆனால் உலகம் அப்படி பார்க்காது .

போராட்டத்தில் நாம் விடும் தவறுகள் எல்லாம் எமது போராட்டத்திற்கு தடையாகத்தான் வந்து முடிந்திருக்கின்றது அதைத்தான் நாங்கள் விமர்சனப்படுத்துகின்றோமே ஒழிய போராளிகளையோ அல்லது அவர்கள் தியாகத்தையோ அல்ல .

முதலில்

மனிதனாக பேசுவோம்...

பின்னர் அடுத்த கட்டமான  தெய்வத்துக்கு போகலாம்.........

  • தொடங்கியவர்

அந்த வீடியோவில் ஒரு இடம் வருகின்றது ,இனியும் தாங்காது என்று சில போராளிகளே மக்களை வெளியே போகவிட முனைந்தார்களாம் அவர்களை மக்களுக்கு முன்னாள் மரத்தில் கட்டி வைத்து சுட்டார்களாம் .புலிகளிலும் சில OSKAR SCHINDLER  இருந்திருக்கின்றார்கள் .

அப்ப இந்த உலகம் ,சனல் நான்கு ,கோர்டன் வைஸ் ,பிராங்கஸ் கரிசன் ,நவி அம்மையார் சொல்வதெல்லாம் பொய் உங்கள் வலியும் தேவையும் அவர்களுக்கு விளங்கவில்லை .அது உங்களுக்கு மட்டுமே விளங்கிய ஒன்று .இப்படியே கண்ணை கட்டிக்கொண்டு இருங்கள் .

  • தொடங்கியவர்

முதலில்

மனிதனாக பேசுவோம்...

பின்னர் அடுத்த கட்டமான  தெய்வத்துக்கு போகலாம்.........

மற்றவர்களுக்கான வலி எப்பவும் உங்களுக்கு புரிந்ததில்லை .புரியவும் மாட்டாது .

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் வார்த்தை ஜாலங்களும் வலி எங்களுக்கு மட்டும் தான் என்ற நினைப்பும் தான் எங்களை இங்கு கொண்டு வந்து விட்டிருக்கு ,

இரட்டை கோபுரத்தை தாக்கியவனும் தற்கொலை தாக்குதல் தான் செய்தான் ,அவனுக்கும் ஒரு வலி இருந்தததால் தான் அதை செய்தான் .

என்ரை பிள்ளைக்கு வலி ஏற்படுத்தி விட்டான் என்று இன்னொரு பிள்ளைக்கு காயம் ஏற்படுத்த எனக்கு உரிமை இல்லை .

போராட்டத்திற்குள் இருக்கும் போது எதுவும் தெரியாது உயிர்விடுவது கூட ,

நாட்டிற்காக விடுதலைக்காக என்றுதான் போராட போய்  உயிர் விட்ட அனைவரினதும் நோக்கமும் உயர்ந்ததுதான் இதையே தான் சிங்களமும் சொல்லுகின்றது .

எந்த வரைமுறைக்குள் நின்றோம் போராடினோம் என்று தான் இங்கு கேள்விக்குரியதாகின்றது .ஒரு உயர்ந்த நோக்கத்திற்காக எதையும் செய்யலாம் என்றால் சிங்களம் செய்ததும் சரியாகிவிடும் .

நாட்டிற்காக உயிரையே விட்ட போராளிகளை விமர்சனத்திற்கு உட்படுத்த கூடாது என்று தான் எம்மவர்  பலர் நினைக்கின்றார்கள் ஆனால் உலகம் அப்படி பார்க்காது .

போராட்டத்தில் நாம் விடும் தவறுகள் எல்லாம் எமது போராட்டத்திற்கு தடையாகத்தான் வந்து முடிந்திருக்கின்றது அதைத்தான் நாங்கள் விமர்சனப்படுத்துகின்றோமே ஒழிய போராளிகளையோ அல்லது அவர்கள் தியாகத்தையோ அல்ல .

உங்களை போன்றவர்களுக்கு எதிர் கருத்து எழுதி............. எங்களுக்கு ஏதும் ஆகபோவதட்கு இல்லை.
 
சிங்கள பேரினவாத அரசு ஆதிக்கத்தில் இருந்து மீள ஆயுத போர் என்று படம் காட்டியவர்கள். தங்களது உயிருக்கு ஆபத்து நெருங்கியபோது ..........
பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று ஓடிவிட்டார்கள்.
அங்கு இருந்தவர்களுக்கு புலிக்கு போனாலும் சாவு ......... போகாவிட்டாலும் செல் பொம்பர் அடித்து சாவு என்ற நிலைதான் இருந்தது. இந்த நிலையில்தான் 13 14 வயது சிறுவர்கள் புலியில் போய்  சேர்ந்தார்கள்.
பள்ளியில்  சென்று படியுங்கள் படித்து பெரியவர்கள் ஆனால் நாட்டுக்கு எவ்ளவோ செய்யலாம் என்று அறிவுரை கூறி 1990 ஆம் ஆண்டில் அவர்களை திருப்பி வீடுகளில் கொண்டுவந்து விட்டு போவார்கள்.
 
பின்பு எதிரி பாரிய பிரச்சாரம் செய்து படை திரட்டி ....... 
தமிழ் நில பரப்பெங்கும் போர் தொடக்கினான். புலிகள் மரபு வழி போர் முறைமைக்கு  மாறவேண்டிய நிலைமை ஏற்பட்டது. பின்பு 13 14 வயது சிறுவர்களுக்கும் பயிற்சி  கொடுத்து  இணைக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டார்கள்.
 
பின்பு சிங்கள எதிரி பிராந்திய பிசாசுகள் என்று எல்லாம் கூடி தமிழரை சொந்த நிலத்தில் வைத்து  உழுது விதைக்க வந்த பொது . இருந்த ஒரே நிலைமை எல்லோரும் போரடுவத்துதான். அப்போ கட்டாய ஆட்சேர்ப்பில் இறங்கினார்கள்.......
 
இனத்தின் மீது எவளவு சுமை வந்தாலும் சுமக்க புலிகள் மட்டுமே இருந்தார்கள்.
அவர்களை காட்டி கொடுக்கவும்......... இனத்தை கூடி வேட்டையாடவும்  30 பேரில்  அமைப்புகள்.
பழிப்பு [பாசாங்கு செய்ய நாட்டுக்கு நாடு உங்களை போன்ற நாலுபேர் குறையாமல் இருந்தார்கள்.
 
மக்களுக்காக இருந்த புலிகள் இப்போ இல்லை............
இனி மக்களுக்கு என்ன நிலை? அது தான் நாளந்த செய்தி ஆச்சே.
 
விமர்சிக்கிறோம் 
ராஜ தந்திரம் சொல்லி கொடுக்கிறோம் 
இந்தியா சுதந்திரம் வைத்திருக்கிறது .....
சேர்ந்து தூக்கி கொண்டு  வருகிறோம். புலிகள் விடுகிறார்கள் இல்லை.
புலிகள் ஒற்றுமையை குலைத்து விட்டார்கள் 
என்று 30 வருடம் வாழ்ந்த நீங்கள் எல்லோரும் கூடி 
ஒரு கட்சி அமைத்து .... புலிகள் விட்ட தவறுகள் எதையும் விடாமல்.
மக்களுக்கு  ...........
ஒரு ஊரில் ஒரு பாடசாலை ஒன்றை கட்டி கொடுங்கள்.
 
அதன் பின்பு வந்து உங்கள் அனுபவங்களையும்..........
விமர்சனங்களையும் எழுதுங்கள்.
கேட்கிறோம்.
 
எங்களுக்கு .........
நாங்கள் இருக்கிறோம்!
என்று புலிகள் சொனால் மட்டுமே. பயமற்ற வாழ்க்கை. அது  விரும்பி வந்தது அல்ல அதுதான் கிடைத்தது.
 
எனது மூத்த பிள்ளையை கொன்றவனிடம் இருந்து எனது இரண்டாவது பிள்ளையை காக்கும்  உரிமைக்கு ............. நான் யாரிடமும் கையேந்த வேண்டிய தேவை இல்லை.
  • தொடங்கியவர்

ஆக மொத்தம் கோத்தாவில் மரியாதை வைக்க சொல்லுகின்றீர்கள் .

சர்வதேச விசாரணை ஒன்று வருமானால் புலிகள் செய்த குற்றங்களும், ஶ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக காலாகாலமாக புரிந்து வரும் இன அழிப்பு நடவடிக்கையும் நிரூபிக்கப்படலாம். அதன் மூலம் தமிழ் மக்கள் எதிர் பார்க்கும் நியாயமான, நீதியான அரசியல் தீர்விற்கான பாதை திறந்து விடப் படலாம். ஆனால் சர்வதேச விசாரணை வேண்டாம் என்று தடுப்பவர்கள் உங்கள் தரப்பினர் தானே அர்ஜுன்.

Edited by tulpen

தங்களை எதிர்ப்பவர்கள்  அரசுடன் என்று சொல்லுவது  புலிகளின் எழுதாவிதி,

அந்த கூடைக்குள் நாங்கள் இல்லை தம்பி .

அரசு புலிகள் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் இல்லை போர்குற்றம் செய்ததில் .

அரசு எல்லாவற்றையும் மறுப்பது போலத்தான் புலி ஆதரவாளர்களும் இங்கு  மறுக்கின்றார்கள்

புலிகள் தமக்கான தண்டனையை தாங்களே பெற்றுக்கொண்டார்கள். தண்டனை பெறாதவர்கள் அரசு தான். பலர் பாலோடுது தேன் ஓடுது என்று சொல்லி அரசை காப்பாற்ற படாத பாடு படுகிறார்கள்.விமர்சனம் என்று சொல்லி அரசின் காணொளிகளை இணைத்து நாசுக்காக அவர்களுக்கு பிரச்சாரம் செய்கிறீர்கள்.எங்கோ பிறந்து வளர்ந்த சனல்  4 ஊடகவியலாளர்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் போது தமிழராக பிறந்து சிங்கள அரசின் காணொளிகளை இணைத்து உங்களை நீங்களே சிறுமைப்படுத்தி கொள்கிறீர்கள்.

  • தொடங்கியவர்

பூனை கண்ணை மூடி உலகம் இருண்டதென்று சொன்ன கதைதான் .

எதிரி என்ன செய்கின்றான் என்று அறியாமல் இருந்ததன் விளைவு கண்ணால் கண்டதுதானே.

கொஞ்சம் என்றாலும் உலகத்தை காட்டுவம் என்றால்  வேண்டாம் என்று  அடம் பிடிக்கின்றிர்கள் . :icon_mrgreen:

தங்களை எதிர்ப்பவர்கள்  அரசுடன் என்று சொல்லுவது  புலிகளின் எழுதாவிதி,

அந்த கூடைக்குள் நாங்கள் இல்லை தம்பி .

அரசு புலிகள் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் இல்லை போர்குற்றம் செய்ததில் .

அரசு எல்லாவற்றையும் மறுப்பது போலத்தான் புலி ஆதரவாளர்களும் இங்கு  மறுக்கின்றார்கள்

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வலியுறுத்தும் உலக அழுத்த்த்தில் இருந்து தப்புவதற்காக குற்றவாளிகள் உருவாக்கிய வீடியோவை இங்கு இணைத்து அதற்கு ஆதரவாக கருத்து எழுதியதால்தான் உங்கள் தரப்பு என்று குறிப்பிட்டிருந்தேன். சர்வதேச விசாரணை மூலம் சகல குற்றங்களும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. புலிப்போராளிகளின் குற்றங்கள் சர்வதேச விசாரணை மூலம் நிரூபிக்கபட்டால் அதனை மேற்கொண்டவர்கள் தண்டனை அடையவேண்டும் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. புலி ஆதரவாளர்கள் அதை மறுத்தாலும் குற்றம் நிரூபிக்கபட்டால் தண்டனை அடைந்து தான் ஆகவேண்டும். ஆனால் புலிகள் குற்றம் சாட்டும் தாங்கள் சர்வதேச விசாரணையை தடுப்பவர்கள் பற்றி எதிராக எழுதுவதில்லை. அதாவது புலிகளுக்கு எதிராக குற்றம் சாட்டும்போது  உங்களுக்கு ஏற்படும் உத்வேகம், வெறி என்பன ஸ்ரீலங்கா என்ற உலகால் அங்கீகரிக்கபட்ட நாட்டு இராணுவம் மேற்கொண்ட  குற்றம் குறித்த சர்வதேச ஊடகங்களால் உருவாக்க பட்ட காணோலிகள் பற்றிய திரியில்  காணப்படுவதில்லை.

நீங்கள் கூறும் தீவிர புலி ஆதரவாளர்களுக்கும் தீவிர புலி எதிர்ப்பாளரான தங்களுக்கும் இடையில் என்னால் எந்த வேறுபாட்டையும்  காணமுடியவில்லை. தீவிர புலி எதிர்ப்பு  வெறி  என்ற கருத்தியலை தவிர வேறு எந்த ஆக்கபூர்வமான கருத்தையும் உங்களிடம் நான் காணவில்லை.

புலிகள் இப்போது இல்லை. போராட்டதில் தோல்வி அடைந்து விட்டார்கள். அவர்களில் போராட்ட தவறும் அதற்கு காரணம் என்பது தமிழ் மக்களுக்கும் தெரியும். இது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல.உலக அரசியல் போக்குகளை கவனத்தில் எடுக்காமல்  சிறந்த வாய்ப்புகளை தவறவிட்டு கடும்போக்கு எடுத்த காரணத்தினால் அவர்கள் தோல்வி அடைய நேரிட்டது.  அதேவேளை  அவர்களின் தியாகங்களையும் அர்பணிப்புகளையும் கெளரவிப்பதோடு புலிகளின் அரசியல் பாதையில் இருந்து விலகி புதிய  யுக்திகளின் மூலம் எமது தமிழ் மக்களின் நியாயமான இலக்கை அடைய எல்லோரும் இணைந்து செயற்படவேண்டும். அதை விட்டு புலி ஆதரவாளரை சீண்டுவதில் சுகம் காணும் அற்ப சந்தோசத்தை அடைவதே உங்கள் நோக்கம் என்றால் தொடருங்கள் அதை. நீங்கள் கூறும் தீவிர புலி ஆதரவாளரை போல உங்களையும் திருத்த முடியாது. தீவிர புலி எதிர்ப்பில் மட்டும் தங்கி இருக்கும் அதை தவிர வேறு எதுவும் தெரியாத தாங்கள் எப்படி எமக்கு உலகத்தை காட்ட முடியும். உங்கள் புலி காய்சல் கண்ணாடியால் உலகத்தை பார்க்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.

தாங்கள் இணைத்த வீடியோவை உருவாக்கிய குற்றவாளிகள் ஏன் புலிகளின் குற்றங்களையும் நிரூபிக்க போகும் சர்வதேச விசாரணையை தடுக்கிறார்கள் என்ற எனது கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை. அதற்கு பதிலாகவும் புலி ஆதரவாளர்களையே குற்றம் சாட்டுகிறீர்கள்.

  • தொடங்கியவர்

"குறை இருப்பின் எம்மிடம் கூறவும் நிறை இருப்பின் நண்பர்களிடம் கூறவும் "

புலிகளிடமும்  ஆதரவார்களுடன் தான் புலி பற்றிய விமர்சனங்கள் நான் வைப்பேன் ,எதிரிகளுடனும் பிற இனத்தவர்களுடனும் அல்ல .

எம்மவர் சிலர் புலி புலி என்றுவிட்டு பிற இனத்தவர்களுடன் கதைக்கும் போது அவங்கள்  பயங்கரவாதிகள் என்பதையும் பார்த்திருக்கின்றேன் .

எனது பிள்ளையைத்தான் என்னால் கண்ணடிக்கமுடியும் வீதியில் போகும் குற்றவாளியை போலீசில் தான் காட்டிகொடுக்கமுடியும் .

அர்யூன் அவர்களே  நியாயமான சர்வதேச விசாரணை வருமானால் குற்றம் நிரூபணமானால் குற்றவாளிகள் எவரும் தப்ப முடியாது. தங்கள் எதிரிகளான புலிகளும் தப்ப முடியாது என்பது தங்களுக்கு திருப்தியே.  இங்கு அதுவல்ல பிரச்சனை. குற்றம் செய்தவர்கள் தண்டனை அடைந்தார்கள் என்ற விடயத்துடன் அது போய்விடும். அது ராஜபக்சவாக இருக்கட்டும் புலி உறுப்பினர்களாக இருக்கட்டும்.

 ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த இனக்கொலையை நிரூபணமவாதன் மூலமே எமது(உங்களதும் எனதும் சந்ததியும் இதற்குள் அடக்கம்) எதிர்கால சந்ததியினர் ஸ்ரீலங்கா என்ற நாட்டில் கெளரவத்துடன் வாழ்வதற்கான நியாயமான அரசியல் தீர்வை நோக்கி செல்ல முடியும்.  ஆகவே இவ்வாறான விசாரணையை தமிழர்கள் என்ற ரீதியில் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு காலம் காலமாக இழைத்த அநீதிகள் வெளிக்கொணர வைப்பதே தமிழர்களின் ராஜதந்திரம் . ஆகவே நாம் அவ்விடயத்தில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்த வேண்டுமேயொழிய புலிகள் விடயத்தில் அல்ல புலிகளின் மீது குற்றம் சாட்டுவதற்கு அவர்களின் குற்றங்களை ஹைலைற் பண்ணுவதற்கு  ஸ்ரீலங்கா அரசு இருக்கிறது.  அது நமது வேலை அல்ல. எதிரியில் வேலையை நாம் செய்ய கூடாது. ஆகவே தமிழ் தரப்பினது கவனம் முழுவதும் ஸ்ரீலங்கா அரசின் மீதே இருக்க வேண்டும். அதுவே சிறந்த ராஜதந்திரம். இந்த ராஜதந்திரத்தையே நீங்கள் பெரு மதிப்பு வைத்திருக்கும் இந்தியாவும், நான் மதிப்பு வைத்திருக்கும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளும் தங்கள்  சொந்த விடயங்களில்  செய்து வருகின்றன.

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"குறை இருப்பின் எம்மிடம் கூறவும் நிறை இருப்பின் நண்பர்களிடம் கூறவும் "

புலிகளிடமும்  ஆதரவார்களுடன் தான் புலி பற்றிய விமர்சனங்கள் நான் வைப்பேன் ,எதிரிகளுடனும் பிற இனத்தவர்களுடனும் அல்ல .

எம்மவர் சிலர் புலி புலி என்றுவிட்டு பிற இனத்தவர்களுடன் கதைக்கும் போது அவங்கள்  பயங்கரவாதிகள் என்பதையும் பார்த்திருக்கின்றேன் .

எனது பிள்ளையைத்தான் என்னால் கண்ணடிக்கமுடியும் வீதியில் போகும் குற்றவாளியை போலீசில் தான் காட்டிகொடுக்கமுடியும் .

தேத்தண்ணிகடை வாசகம் அண்ணைக்கு கை குடுக்குது..

  • 2 weeks later...

அர‌சின் வீடியோவில்.... உண்மை எதுவும், இருக்காது என்ற‌ ப‌டியால்....நானும் பார்க்கவில்லை.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.