Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ள விடுதலைப் புலிகளின் இராஜதந்திர பலம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலம் சிதைக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்ற நிலையில்தான் புலிகளின் இராஜதந்திர பலத்தைச் சிங்கள தேசம் உணரத் தொடங்கியுள்ளது. புலிகளின் இராஜதந்திர நடவடிக்கையின் காரணமாக சர்வதேச ரீதியாக ஏற்பட்டு வருகின்ற கடும் அழுத்தங்களால் இன்று சிங்களம் சிக்கித் தவிக்கின்றது. தென்னிலங்கை சிறிதும் எதிர்பார்க்காத அளவுக்கு மேற்குலகின் அழுத்தம் அதிகரித்து வருகின்றது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மகிந்த ராஜபக்ச குடும்பம் தவிக்க ஆரம்பித்துள்ளது.

 

புலிகளைத் தவறாக எடைபோட்டதன் விளைவை சிங்களம் இன்று அனுபவிக்க தொடங்குகிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பாகச் சர்வதேசம் இதுவரை கொண்டிருந்த தவறான மாயை இப்போது களையப்பட்டிருக்கின்றது. புலிகளின் போராட்டம் நியாயமானதுதான் என்பதைச் சர்வதேசம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அந்தப் போராட்டம் உண்மையானது என்பதை சர்வதேச நாடுகள் தமக்குள் ஏற்றுக்கொள்ளத்தொடங்கியுள்ளன. உலகில் 54 நாடுகளைத் தனது காலனித்துவ ஆதிக்கத்திற்குள் வைத்திருந்து உலகில் பெரும் சாம்ராஜ்ஜியமாகத் திகழ்ந்த பிரித்தானியா இன்று ஈழத் தமிழர் பக்கம் தனது பார்வையைத் திருப்பியிருக்கின்றமை பெரும் வரலாற்று மாற்றமாகும். அதற்கு அப்பால் கனடா, ஜேர்மனி, மொறீஸியஸ் தீவு உள்ளிட்ட நாடுகளும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக மாறியிருக்கின்றமையானது சிறிலங்காவை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

அண்மைக்காலமாக சிறிலங்காவிற்கு வருகின்ற வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தமிழர் தாயகத்திற்கும் வந்து செல்கின்றமையானது சிறிலங்கா அரசாங்கத்தை மட்டுமன்றி சிங்கள இனவாதக் கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் சிங்கள மக்களையும் பெரும் சிக்கலில் மாட்டியிருக்கின்றது. இவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் என்று தென்னிலங்கை கனவுகூட கண்டிருக்காது. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றது என்ற உண்மையை சர்வதேசம் நேரிடையாகவே உணரத் தொடங்கியுள்ளது.

 

தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சர்வதேச ரீதியாகவே தனியானதொரு மதிப்பு இருக்கின்றது. கடந்த காலங்களில் கொழும்புக்கு அடுத்த நகரமாகத் திகழ்ந்த யாழ்ப்பாண மாவட்டம் போரின் தாக்கத்தால் அதன் சோபையை இழந்திருந்தது. போரினால் சின்னாபின்னமாகி பெரும் பின்னடைவைக் கண்டிருந்த இந்த மாவட்டம் தற்போது மீண்டும் தனது பழைய நிலைக்குச் செல்ல முயன்றாலும் அது பெரும் கஸ்டமான காரியமாகவே இருக்கின்றது. ஏனெனில், யாழ்ப்பாணத்திற்கென்று சர்வதேசத்திடம் தென்னிலங்கை பெற்றுக்கொள்கின்ற பெருந்தொகை நிதி தென்னிலங்கையின் அபிவிருத்திக்கே செலவிடப்படுவதால் யாழ்ப்பாணம் மீண்டும் வளர்ச்சியடைய முடியாத நகரமாகவே இருக்கின்றது.

 

இந்த நிலையில், இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்கின்ற வெளிநாட்டுத் தலைவர்கள் உண்மை நிலவரங்களை அறிந்து செல்கின்றனர். சிறிலங்கா இராணுவம் சமாதானம் என்ற பெயரிலும் அபிவிருத்தி என்ற பெயரிலும் எத்தகைய நாடகமாடுகின்றது என்று சர்வதேசம் தற்போது நன்றாகவே அறிந்துகொண்டு வருகின்றது. யாழ்ப்பாண நகரம் மட்டும் பொலிவாக இருக்கின்றது. சன நடமாட்டமாக, அபிவிருத்தியடைந்த தேசமாக இருக்கின்றது. ஆனால், வெளியே இருந்து வருகின்றவர்களும் சர்வதேச பிரதிநிதிகளும் இது அனைத்தும் யாழ்ப்பாணத்தின் வளர்ச்சி என்று கருதட்டும் என்பதற்காகவே சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்டு இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

 

ஆனால், யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிவுமிக்க கட்டடங்கள், வங்கிகள், வியாபார நிலையங்கள், எரிபொருள் நிலையங்கள், உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் அனைத்துமே தென்னிலங்கைச் சிங்களவர்களுடையவை. அவர்கள் தான் இங்கே முதலீடு செய்து எங்கள் மக்களின் பணத்தைச் சுரண்டிச் செல்கின்றார்கள். பொலிவுமிக்க யாழ்ப்பாண நகரத்தை விட மிகுதி இடங்கள் இன்னும் வளர்ச்சியை எட்டிப் பார்க்கவில்லை. இதனைச் சர்வதேசம் எட்டிப்பார்த்திருக்கின்றது. டேவிற் கமரூன் உட்பட அனைத்து வெளிநாட்டு பிரமுகர்களும் யாழ்ப்பாணத்திலுள்ள உண்மை நிலமையை நன்கு அறிந்து செல்கின்றார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரசாங்கம் எந்த வகையில் அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளது என்பதற்கு யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியின் வள்ளலை வைத்து சர்வதேசம் அறிந்துகொள்ளுகின்றது.

 

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக என்று தாங்கள் வழங்குகின்ற நிதி உண்மையில் தமிழர் தாயகத்தில் செலவழிக்கப்படவில்லையென்றும் அது தென்னிலங்கையின் மிகை அபிவிருத்திக்கே செலவிடப்படுகின்றது என்பதையும் அண்மைக்காலமாக நாட்டுக்கு வந்து செல்கின்ற சர்வதேச முக்கியஸ்தர்கள் அறிந்துசெல்கின்றனர். இது மகிந்த அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவாகும். உண்மை நிலைமையை வெளியுலகம் அறிந்துகொண்டுள்ளமையால் மகிந்தவின் இராஜதந்திரம் தற்போது பெரும் தோல்வி கண்டுள்ளது. சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சராக இருந்த அமரர் கதிர்காமர் தமிழ் இனத்தவராக இருந்த காரணத்தால் அவரின் இராஜதந்திரத்தை சர்வதேசம் நம்பியது. ஆனால், அவருக்கு பின்னர் வந்த வெளிவிவகார அமைச்சர்கள் தொடர்பாக இன்று மேற்குலகமோ ஆசிய நாடுகளோ எந்த விதத்திலும் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் சொல்வது எதுவும் இன்று சர்வதேசத்திடம் எடுபடவில்லை. சர்வதேசமே நேரில் வந்து தமிழர்களின் துன்பங்களைப் பார்த்துச் செல்கின்ற நிலமை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.

 

சர்வதேசம் இங்கு வருவதற்கு, குறிப்பாக பிரித்தானியப் பிரதமர் இங்கு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்ன? நாம் ஏற்கனவே, முன்னைய கட்டுரையன்றில் சுட்டிக்காட்டியது போன்று புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டங்கள் தான் இன்று தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியிருக்கின்றது. தாயகத்திலுள்ள தமிழ் மக்கள் சிறிலங்காப் படைகளால் துன்பப்படுத்தப்படுகின்ற விடயங்களை பொறுக்க முடியாமல் புலம்பெயர் தமிழ் மக்கள் அங்கே ஆர்ப்பாட்டங்கள், கவனயீர்ப்புகள் போன்றவற்றைச் செய்தார்கள். உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டார்கள். இதன் விளைவே மகிந்தவின் இராஜதந்திரத்தைத் தோற்கடித்தது.

 

இங்கே தாயகத்தில் ஏதோ எல்லாவற்றையும் மறந்துவிட்டுத்தான் மக்கள் இருக்கிறார்கள் என்று புலம்பெயர் உறவுகள் நினைக்கக்கூடும். அப்படியில்லை. புலம்பெயர் தேசத்து உறவுகளைப் பற்றித்தான் இங்கே கதைகள். அலுவலகங்களிலும் பாடசாலைகளிலும் இன்று சிறிய இடைவேளைகளின் போது மகிந்தவின் ஆட்சி ஈடாட்டம் காண்கின்றது என்றும் அதற்கு எமது புலம்பெயர் தமிழ் மக்களின் வலுவான போராட்டங்களே காரணம் என்றும் வெளிப்படையாகவே பேசுகின்றார்கள். இந்த நிலை தொடர்பாக புலம்பெயர் உறவுகள் பெருமைப்படவேண்டும்.

 

ஈழத் தமிழரும் புலம்பெயர் தமிழரும் எதிர்பார்ப்பது போன்று போர்க்குற்றம் செய்த சிங்களப் படைத்தளபதிகளும் மகிந்த குடும்பமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது உண்மை. இந்த உண்மையை மகிந்தவும் உணர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டார். அதனால்தான் தற்போது மகிந்த குடும்பம் அமைதியாக இருக்கின்றது. இது அச்சத்தின்பாற்பட்ட அமைதி. இதுவரை மகிந்தவின் இராஜதந்திரம் வெற்றிபெற்றிருக்கலாம் இப்போதுதான் புலிகளின் இராஜதந்திரம் வெற்றிபெறத் தொடங்குகின்றது. புலிகளின் இராஜதந்திரம் வெறுமனே மகிந்தவைப் போர்க்குற்றவாளியாக்குவதல்ல. அந்தப் போர்க்குற்றம் மூலமாக எமது தமிழீழம் என்ற தனியரசை நிறுவுவது.

 

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலின் போது எதை உள்ளுர நினைத்தாரோ அது நிறைவேறியது. சிங்களத்தின் உண்மை நிலமையை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க மகிந்த ராஜபக்சவை ஒரு கருவியாக்க தேசியத் தலைவர் நினைத்தார். 2005 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையின் போது தலைவர் யுத்தம் தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. நானும் (கட்டுரையாளர் வீரமணி) கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நின்றவாறு தலைவர் மீண்டும் யுத்தம் தொடங்குவது பற்றி அறிவிப்பார், அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். (ஏனெனில் அப்போது சமாதான காலம். ஆனால், சிறிலங்கா படைகளின் அட்டூழியம் அதிகரித்திருந்தது) ஆனால், தேசியத் தலைவர் தெளிவாக இருந்தார். மீண்டும் சமாதானம் தொடர்பாகவே கருத்து வெளியிட்டார். மகிந்தவுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார். தேசியத் தலைவர் அவர்கள் அந்த மாவீரர் தின உரையில் மகிந்த தொடர்பாக கூறும்போது,

 

‘ஜனாதிபதி மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட சிந்தனைகளை ஆழமாக அலசிப் பார்க்கும் பொழுது தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையின் அடிப்படைகளையோ அதன் மூலக் கோட்பாடுகளையோ அவர் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. கொள்கை ரீதியாக எமக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளி மிகப்பெரிது. எனினும் அவர் நடைமுறை அரசியலில் நம்பிக்கை கொண்ட யதார்த்தவாதி என்று கருதப்படுவதால் சமாதான வழிமுறையை எவ்விதம் கையாளப் போகிறார் என்பதையும் தமிழ் மக்களுக்கு எவ்விதம் நீதி வழங்கப் போகின்றார் என்பதையும் முதலில் நாம் அறிந்து கொள்வது அவசியம். ஆகவே ஜனாதிபதி ராஜபக்சவின் நகர்வுகளை அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிறிது காலம் நாம் பொறுத்திருந்து பார்ப்பதென முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

 

மகிந்தவுக்கு தலைவர் நீட்டிய நேசக்கரத்தை மகிந்த தவறாகப் பயன்படுத்தினார். ஆனால், தலைவர் அதைச் சரியாகவே பயன்படுத்தினார். இன்று தலைவரின் இராஜதந்திர நகர்வே வெற்றியளித்திருக்கிறது. இனிமேல் மகிந்தவின் இராஜதந்திரம் பலிக்கப்போவதில்லை. சர்வதேசம் ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் எடுத்து வைத்துள்ள அடியை நாம் எமக்கு ஏற்றது போன்று பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே எமது விடுதலைக்கான செயற்பாடாகும். இனிமேல் எமது விடுதலையைப் பெற்றுத்தரப்போகின்ற பெரும் சக்தி சர்வதேசமே ஆகும். சர்வதேசத்துடன் இணைந்திருந்து நாம் எமது சுதந்திர தமிழீழத்தை வென்றெடுப்போம்.

 

- தாயகத்தில் இருந்து வீரமணி 

நன்றி: ஈழமுரசு

 

http://www.sankathi24.com/news/36624/64//d,fullart.aspx

இந்த விடயம் மெத்த படித்த மேல்மட்ட சிறி லங்கா ஆதரவாளருக்கு விளங்கியும் விளங்காதது போல் நடிக்கிறார்கள்.

அப்போ 2009 ?

ஆயுத பலத்தால மூன்று தமிழ் ஈழம் எடுத்து சிங்களவனுக்கு தெரியாமல் ஒழிச்சு வச்சிருக்கினம் இப்ப ராஜதந்திர பலத்தால சும்மா வெளிநாட்டில் இருந்து ஒன்று எடுக்க போகினம் .

 

வீரமணி வில்லுப்பாட்டு படிக்க போனால் திறம் .

ஆயுத பலத்தால மூன்று தமிழ் ஈழம் எடுத்து சிங்களவனுக்கு தெரியாமல் ஒழிச்சு வச்சிருக்கினம் இப்ப ராஜதந்திர பலத்தால சும்மா வெளிநாட்டில் இருந்து ஒன்று எடுக்க போகினம் .

 

வீரமணி வில்லுப்பாட்டு படிக்க போனால் திறம் .

 

இதை வெற்றி  பெற்ற ஒருத்தர் சொன்னால் நல்லா இருக்கும்...   தோல்விக்கு பயந்து சரணாகதி அடைந்தவை சொல்லுறதுதான் கேவலமாக இருக்கு... 

அப்போ 2009 ?

அப்போ 1983 ?

ஆயுத பலத்தால மூன்று தமிழ் ஈழம் எடுத்து சிங்களவனுக்கு தெரியாமல் ஒழிச்சு வச்சிருக்கினம் இப்ப ராஜதந்திர பலத்தால சும்மா வெளிநாட்டில் இருந்து ஒன்று எடுக்க போகினம் .

வீரமணி வில்லுப்பாட்டு படிக்க போனால் திறம் .

அப்படியென்றால் உடனே ரோஜர்ஸ் சென்டரில ஒரு ராஜபக்சே வில்லுப்பாட்டு ஒண்டு போடலாமே?

புலம்பெயர் ஈழ தமிழருக்கு பயந்து குட்டி தீவில் இருந்து கொண்டு சவுண்ட் தான் உங்களுக்கு விடத்தெரியும்.

சிறி லங்கா ரப்பர் ஸ்டாம்புகளுக்கு நாலு வருடமா வெற்றி பார்டி முடியவில்லை.

நான் அறிய, இந்திய பாதுகாப்புக்கொள்கை, "சிங்களவனின் ராஜதந்திரம் என்றால் அது என்ன!" இரண்டும்தான் யாழில் பச்சை வாங்கும் பதிவுகளாக இருந்தவை. அவற்றை படித்துவிட்டு அவற்றை உடைக்க என்றுதான் யாழில் இணைந்தேன். அதை நான் அறிமுகத்தில் சொல்லிகொண்டுதான் உள்ளே புகுந்தேன். இதனால் இணையும் போதே பச்சைகளை எதிர்த்துக்கொண்டேதான் இணைந்தேன். எல்லா மட்டுக்களிடமும் எனது கருத்துக்களுக்கு எவரும்பச்சை குத்துவதை தடுக்கும் படி கேட்டேன். அதை செய்துதர வில்லை.  இதனால் பச்சை குத்து வாங்குவது மட்டும் என்று இருந்துவிடாமல் இருக்க நானும் பச்சை குத்த ஆரம்பித்தேன். ஆனால் என்றுமே அதனால் அள்ளுப்பட்டு போகாமல் என்னை நான் கவனமாக பார்த்துக்கொண்டேன்.

 

முதன் முதலாக ராஜகுரு என்ற உறவால் பதியப்பட்ட  யத்தீந்திராவின் இந்திய பாதுகாப்பு கொள்கை பற்றிய திரியில் நான் இந்திய பாதுகாப்பு கொள்கை பற்றிய  எனது ஆழ்மான கருத்துக்களை முன் வைக்க ஆரம்பித்தேன். கூட்டமைப்பின் தேர்தல் முடிவால் எதுவும் ஆகிவிடப்போவதில்லை, இந்திய பாதுகாப்பு கொள்கைத்தான் தீர்மானிக்கும் என்பது போல் அவரின் கட்டுரையின் சாரம். எனது கருத்துக்களுக்கு பதில் வரவில்லை. மாமியாருடன் இருந்த முரண்பாட்டால் அடிமையாக நடந்துகொள்ளும் சீக்கியரை பிரதமாக்கியதை கூட சொல்லியிருந்தேன். அந்த ராஜகுரு என்ற உறவு பின்னர் வருவதை நிறுத்திவிட்டார். 

 

கிடைத்த சந்தர்ப்பம்  எல்லாம் சிங்கள ராஜதந்திரத்தைப்பற்றி சொல்ல நான் மறந்ததில்லை. 

 

இந்த உண்மைகள் எதுவரை பரவின என்பதும் எனக்கு தெரியும். இவ்வளவு நாளும் நான் மட்டும் எழுதிவந்த கதிர்காமர் ராஜத்ந்திரத்தை பற்றி 3 ஆண்டுகளின் பின்னர் ஒருவர் எழுதியிருப்பதை பார்க்க ஆசையாக இருக்கிறது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஒரு இடத்தில் கதிர்காமரின் திறமையை பற்றி சொல்ல முயன்றதால் நான் அந்த விருந்து உபசார இடத்தை விட்டு நீங்க வேண்டி வந்தது. ஆனால் இன்னும் சில நாட்களில் அதை மறுத்து சொல்லபவர்கள் தான் அப்படி இடத்தை விட்டு நீங்க வேண்டி வரப்போகிறது என்பதை பார்க்க உண்மையான சந்தோசம் பிறக்கிறது..

 

நான் மலைகளாக நடிப்பவர்களை கண்டு அன்றிலிருந்து எனது கருத்துக்களை மாற்றியதில்லை. எனது அடுத்த படியான விழிப்பு எழுத்துக்களுக்கு நான் கேட்காமலே அத்திவாரம் போடப்பட்டிருக்கிறது.  பல உண்மைகள் வெளிவர இருக்கு. தோணி ஒன்றில் Container Cargo ஏற்ற முடியாது. அதை தாங்கும் உரமான கப்பல் வேண்டும். அது சரிவந்தால் தமிழ் மக்களின் பிரச்சணைகள் தீரும்வரைதமிழ் மக்களை முட்டாள்களாகும் எழுத்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தொடந்து வைப்பேன்.

 

இன்றைய இந்த கட்டுரையைப் பார்க்கும் போது வடலி வளர்த்து கள்ளுக்கு குடிக்கலாம் என்பது உணமை.

 

 

Edited by மல்லையூரான்

மல்லை நீங்கள் மேலே எழுதினதில் ஒன்றுமே விளங்கவில்லை.... நான் நினைக்கிறேன் நீங்கள் Masters/Phd முடிச்ச ஆள் போல இருக்கு..கனக்க எழுதுறீங்கள் (நிறைய ஆராய்ச்சி செஞ்சும் எழுதறீங்க)...ஆனால் நிறைய நேரம் நிறைய பேரால உங்கள (உங்கட பந்திகளை) கிரகிக்க முடியல்ல... என்ற படியால் நீங்க கடைசியில் "conclusion"  எழுதுறது என்னை மாதிரி ஆக்களுக்கு மிக்க உதவி...

 

இப்போ மேலே என்ன சொல்ல வந்தனீங்கள்...இந்த கட்டுரையை ஆதரித்து எழுத போறீங்களா..இல்லை அது பிழையான கருத்து என்கிறீர்களா? அல்லது உங்களது எண்ணம் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

சரியோ  தப்போ

தலைவரால் 

தன்னை  உள் வைத்து  உலகுக்கு பெட்டியடிக்கப்பட்டதே 

முள்ளிவாய்க்கால்.................

அதன் அளவு (அழிவு)எவ்வளவு  பெரிதோ

அதே அளவுக்கு பல  ஆயிரம் மடங்கு வலுவானது............

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை நீங்கள் மேலே எழுதினதில் ஒன்றுமே விளங்கவில்லை.... நான் நினைக்கிறேன் நீங்கள் Masters/Phd முடிச்ச ஆள் போல இருக்கு..கனக்க எழுதுறீங்கள் (நிறைய ஆராய்ச்சி செஞ்சும் எழுதறீங்க)...ஆனால் நிறைய நேரம் நிறைய பேரால உங்கள (உங்கட பந்திகளை) கிரகிக்க முடியல்ல... என்ற படியால் நீங்க கடைசியில் "conclusion" எழுதுறது என்னை மாதிரி ஆக்களுக்கு மிக்க உதவி...

இப்போ மேலே என்ன சொல்ல வந்தனீங்கள்...இந்த கட்டுரையை ஆதரித்து எழுத போறீங்களா..இல்லை அது பிழையான கருத்து என்கிறீர்களா? அல்லது உங்களது எண்ணம் என்ன ?

கதிர்காமரின் இராசதந்திரம்தான் சிங்களத்தை நகர்த்தியதாக பல வருடங்களின்முன்னரே சொன்னதாகவும், அதை பிறிதொரு சமயத்தில் யாரோ வழிமொழிந்தபோது மகிழ்ந்துபோனதாகவும் குறிப்பிடுகிறார் எழுத்தாளர்..

அதே பாணியில், புலிகளின் இராசதந்திரம் பற்றியும் வெளிவருவதற்குப் பல விடயங்கள் உள்ளனவாம்..! அவற்றை எழுதுவதற்கும் இங்கு அத்திவாரம் போடப்பட்டுள்ளது என்கிறார் மல்லைமாமுனிவர்..! :D

ஆயுத பலத்தால மூன்று தமிழ் ஈழம் எடுத்து சிங்களவனுக்கு தெரியாமல் ஒழிச்சு வச்சிருக்கினம் இப்ப ராஜதந்திர பலத்தால சும்மா வெளிநாட்டில் இருந்து ஒன்று எடுக்க போகினம் .

 

வீரமணி வில்லுப்பாட்டு படிக்க போனால் திறம் .

1378498_672942502730699_343935151_n.jpg

//அடடா... இதுவல்லவா லட்சியம்.... உயர்ந்த லட்சியம்... அப்படியே இருங்க.... நாடு வெளங்கும்....//

இதை வெற்றி  பெற்ற ஒருத்தர் சொன்னால் நல்லா இருக்கும்...   தோல்விக்கு பயந்து சரணாகதி அடைந்தவை சொல்லுறதுதான் கேவலமாக இருக்கு... 

அண்ணை நாங்கள் எப்ப வெள்ளை கொடி பிடித்தனாங்கள் .

விசுகரும் பெட்டிக்க  ஒருக்கா எட்டி பார்த்திருக்கலாம் தானே :icon_mrgreen: .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நாங்கள் எப்ப வெள்ளை கொடி பிடித்தனாங்கள் .

விசுகரும் பெட்டிக்க  ஒருக்கா எட்டி பார்த்திருக்கலாம் தானே :icon_mrgreen: .

 

 

நான் எங்கு  நின்றேன் என்று பெட்டி அடித்தவருக்கு  நன்கு தெரியும்....

நீங்க  அவரையே  கடிப்பவர்

நான் எந்த மாத்திரம்??

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நாங்கள் எப்ப வெள்ளை கொடி பிடித்தனாங்கள் .

விசுகரும் பெட்டிக்க  ஒருக்கா எட்டி பார்த்திருக்கலாம் தானே :icon_mrgreen: .

 

 

நாங்கள் முழு இலங்கையையும் பிடிச்சனாங்கள். ஏன் மாலைதீவை கூட பிடிச்சனாங்கள்.

பெட்டி டிசைன் பண்ணியது நுணாவா?

 

பெட்டி டிசைன் பண்ணியது நுணாவா?

அரசியல் பெட்டிக்குள் நாலு வருடமா அடி வாங்கினாலும் நாங்கள் எப்பவோ முடிந்த போரை காட்டி திசை திருப்ப முற்படுவது சிரிப்பை தருகிறது.

இது தான் சிலுக்கு சினிமா, சூதாட்ட கிரிக்கெட் ஆராய்ச்சி யாளரால் கணிக்கமுடியும்.

புலியை வென்றதற்கு கார்பார் எப்ப சால்வை போற்றுவது?

உங்கள் வெற்றி மேல் வெற்றி பெற்ற தலீவர் டொரொண்டோ வர பம்முவது ஏனோ?

கதிர்காமரின் இராசதந்திரம்தான் சிங்களத்தை நகர்த்தியதாக பல வருடங்களின்முன்னரே சொன்னதாகவும், அதை பிறிதொரு சமயத்தில் யாரோ வழிமொழிந்தபோது மகிழ்ந்துபோனதாகவும் குறிப்பிடுகிறார் எழுத்தாளர்..

அதே பாணியில், புலிகளின் இராசதந்திரம் பற்றியும் வெளிவருவதற்குப் பல விடயங்கள் உள்ளனவாம்..! அவற்றை எழுதுவதற்கும் இங்கு அத்திவாரம் போடப்பட்டுள்ளது என்கிறார் மல்லைமாமுனிவர்..! :D

 

மிக்க நன்றி இசை..இந்த கடைசி வசனம் மட்டும் தான் எனக்கு விளங்கியது.... :)

மிக்க நன்றி இசை..இந்த கடைசி வசனம் மட்டும் தான் எனக்கு விளங்கியது.... :)

இது வெல்லாம் இப்போ தேவை இல்லை. எந்த நேரம் எது முக்கியம் என்பதைக் கண்டு  கொள்வதுதான் தீர்க்க தரிசனம். அதுதான் absolute திற்மை. 

 

இன்று அவசியமானது மாவையின் அவுஸ்திரேலிய தமிழ் லீடருக்கான பேட்டி.  நான் இங்கே எழுத திரும்ப திரும்ப  காரணம் காட்டாமல் நீக்கப்பட்டுவிட்டது. அதை பற்றி வெளியே எழுதக் கிடைக்கும் இடத்தில் ஆதரித்தோ எதிர்தோ எழுத ஆரம்பியுங்கள். நானும் வெளியே வெட்டுவிழாத இடங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எழுதுவேன். அதுதான் இனி மேல் மிக முக்கிய விவாத பொருள். அதை முன்னால் கொண்டுவர வேண்டும். யாழ் களம் அதற்கு அடைத்து மூடப்பட்டிருப்பது ஏமாற்றமே.

Edited by மல்லையூரான்

அண்ணை நாங்கள் எப்ப வெள்ளை கொடி பிடித்தனாங்கள் .

விசுகரும் பெட்டிக்க  ஒருக்கா எட்டி பார்த்திருக்கலாம் தானே :icon_mrgreen: .

 

இந்தியாவிலை நிண்டு என்னத்தை நக்கினீங்கள் எண்டு எங்களுக்கு தெரியாததோ...?? அதுக்கு வெள்ளை கொடி வேறை பிடிக்க வேணுமோ...??

 

வெள்ளைக்கொடி பிடிச்சதிலை எல்லாரையும் போல எனக்கு பெருமை தான்...    போரிலை தோற்றவர்கள் மட்டுமே வெள்ளைக்கொடி பிடிக்கும் போது அதற்கான மரியாதையை கொடுக்க வேண்டும்  ஜெனீவா சாசனம் இருக்கிறது... 

 

போர் செய்தவர்கள் தோற்கும் போது அதற்கான மரியாதையோடு நடத்த பட வேண்டும் என்பது நாகரீங்கம் தெரிந்த எல்லாரும் கடைப்பிடிக்கும் விடயம்...  நகரீகமே தெரியாத உங்களை போண்றவர்களால் நக்கல் மட்டும் தான் அதைப்பற்றி அடிக்க முடியும்... 

 

இது உங்கட தகுதிக்கும் குணத்துக்கும் ஏற்ற செயலே

Edited by தயா

இது வெல்லாம் இப்போ தேவை இல்லை. எந்த நேரம் எது முக்கியம் என்பதைக் கண்டு  கொள்வதுதான் தீர்க்க தரிசனம். அதுதான் absolute திற்மை. 

 

இன்று அவசியமானது மாவையின் அவுஸ்திரேலிய தமிழ் லீடருக்கான பேட்டி.  நான் இங்கே எழுத திரும்ப திரும்ப  காரணம் காட்டாமல் நீக்கப்பட்டுவிட்டது. அதை பற்றி வெளியே எழுதக் கிடைக்கும் இடத்தில் ஆதரித்தோ எதிர்தோ எழுத ஆரம்பியுங்கள். நானும் வெளியே வெட்டுவிழாத இடங்களில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எழுதுவேன். அதுதான் இனி மேல் மிக முக்கிய விவாத பொருள். அதை முன்னால் கொண்டுவர வேண்டும். யாழ் களம் அதற்கு அடைத்து மூடப்பட்டிருப்பது ஏமாற்றமே.

 

மல்லை உங்களிடம் Blog இருக்கிறதா? இங்கு பதியும் முக்கியமனா விடயங்களை அதிலும் பதிந்து வைத்தால்..

இங்கே வெட்டினாலும் அங்கும் வாசிக்கலாம்...மற்றது உங்களது பதிவுகளை சேமிப்பதும் ஆக இருக்கும்....

 

மேலே கூறிய விடயத்தை உங்களது பார்வையில் எப்படி அலசுகிறீர்கள் ?

ஒரு நியாமான காலத்துக்குள் ஒரு நியாயமான தீர்வை எட்ட இது ஒன்றுதான் வழி.  இளைஞர்களாக A/L லில் இருந்து ஆயுத போராட்டம் பற்றி நிறைய விவாதித்திருக்கிறோம். தொடக்கம், முடிவை அன்று எதிர்வு காண முடியாவிடாலும் அது ஒரு தீர்க்க மான வழியாகப்பட்டது. இன்றைய இது அப்படி அடிமுடி தெரியாத தெரியாததல்ல. அதாவது உங்களிடம் $50 இருந்தால் சேலை வாங்கலாம். $500  இருந்தால் கட்டாயம் நல்ல பட்டு சேலை வாங்கலாம். கூட்டமைப்பில் பல கடசிகள் சேர்ந்து நல்ல வெற்றி ஈட்டினார்கள். ஆனால் நாம் முடிவில் பார்த்தது ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதாவாதது என்பது போல ஒரு மாகாணசபை. அதை நாம் தெரிந்திருக்கவில்லை அல்ல. ஆனால் கட்சிகளுக்குள் ஏற்பட்ட ஒற்றுமை எதையும் தரவில்லை . ஆனால் இது அப்படியல்ல. தமிழர்ஒருங்கிணைந்து ஒரு குரலோடு மேற்கு நாடுகளை உதவிக்கு அழைத்தால் உதவி நிச்சயம் என்றது புரிகிறது. கமருனின் வெற்றி பயணத்துக்கு பின்னால் ஒழிந்திருக்கும் தோல்வியை சந்தர்ப்பம் கண்டு ஈடு செய்ய வேண்டும். தமிழர் ஒரு குரலில் செயல்ப்பட வேண்டும்.

இதில் ஆயுத போராட்டம் மாதிரி தோற்றால் அழிவு, வென்றால் சுதந்திரம் என்ற நிலை இல்லை. சீலை ஒன்று வாங்கப்படும். அதில் $50 மட்டும்தான் தமிழருக்கு சேர்க்க முடியுமாயின் அது சாதர புடவையாக போய் முடிந்துவிடும். $500 சேர்க்க முடியுமாயின் விலாசமான சேலை வரும். எனவே எந்த குரலை எல்லோரும் எழுப்ப வேண்டும் என்பதை தீர்மானித்து எல்லோரும் சேர்ந்து ஒரு குரலில் எழுப்ப வேண்டும். கலியாணம் நடக்க போகுது. அப்பரிடம் இருக்கும் சீதனத்துக்கு ஏற்ற மாப்பிள்ளைத்தான் பொண்ணுக்கு வரப்போகுது. தமிழரின் ஒற்றுமைக்கு வடமாகாண சபை தேர்தல் அல்ல சோதனை. இதுதான் சோதனை. இதை அக்கறையீனமாக தமிழர் கோட்டைவிட்டால் இன்னொரு சந்தர்ப்பம் வருமா தெரியாது. 

 

மேற்கு நாடுகளுக்கு தேவை இந்து சமுத்திர பிராந்தியத்தில் தங்களின் செல்வாக்கு. அதை இந்தியா ஏற்படுத்தி கொடுப்பதா? இலங்கை ஏற்படுத்தி கொடுப்பதா, தமிழருக்கு அதை செய்யத் தெரியுமா என்றது தான் கேள்வி. தமிழர் பிரிந்த்து அடிபட்டால் அது இலங்கை அல்லது இந்தியா செய்வதாகத்தான் முடியும். அதை நாங்கள் ஏற்றகத்தான் வேண்டும். அந்த நேரத்தில் நமக்கு எலும்புத்துண்டு கிடைத்தாலும் சரி என்று ஒத்துக்கொள்ள வேண்டி வரும். வேண்டாம் என்று வீசி எறிய முடியாமல் போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

விலாசமான சேலைதான் நல்ல வடிவா இருக்கும்.. :D

விலாசமான சேலைதான் நல்ல வடிவா இருக்கும்.. :D

ஒற்றுமைதான் தேவையான காசு. அதை கண்டால்த்தான் யாபாரி சேலை தருவான். :icon_idea:  :D

Edited by மல்லையூரான்

தமிழர் ஒற்றுமையாகோனும் என்றால் எதிர்த்து கதைக்கிற ஆளை மண்டையில் போடோணும் அது தான் எங்கள் வரலாறு...

அரசர் காலத்திலிருந்து :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.